14 பிப்ரவரி, 2010

நிவாரணக் கிராமங்களிலுள்ள அனைவரும் பொதுத் தேர்தலுக்கு முன் மீள்குடியேற்றம்

2500 பேர் இவ்வாரத்தினுள் சொந்த இடம் அனுப்பிவைப்பு


பொதுத் தேர்தலுக்கு முன்பதாக வவுனியா நிவாரணக் கிராமங்களிலுள்ள அனைவரையும் மீளக்குடியமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் நேற்று தெரிவித்தார்.

மீளக்குடியமர்த்தப்படுவதற்காக வவுனியா நிவாரணக்கிராமங்களில் தற்போது சுமார் 70 ஆயிரத்துக்கும் குறைவானவர்களே இருக்கின்றனர். இவர்களை கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா வடக்கில் மீளக்குடியமர்த்துவதற்கான பணிகளை அந்தந்த மாவட்ட அரசாங்க அதிபர்களுடன் இணைந்து துரிதகெதியில் முன்னெடுத்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை இவ்வாரத்தினுள் மாத்திரம் 2500 பேர் மீளக் குடியமர்த்தப்பட விருப்பதாகவும் அரச அதிபர் கூறினார்.

மூன்று தினங்களுக்கு ஒரு முறை என்ற வகையில் நிவாரணக் கிராமங்களிலுள்ளவர்கள் தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்பட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் மெனிக் பாம் நிவாரணக் கிராமத்தில் தங்கியிருக்கும் 350 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரம் பேர் எதிர்வரும் 18 ஆம் திகதி நெடுங்கேணி பிரதேசத்தில் மீளக்குடியமர்த்தப்படவுள்ளனர்.

அதேவேளை 700 பேர் பச்சிளைப்பள்ளி, பளை நகரம், தில்லிவளை கிழக்கு மற்றும் மேற்கு, முள்ளியடி ஆகிய பகுதிகளிலும் மேலும் 230 குடும்பங்களைச் சேர்ந்த 800 பேர் குமரபுரம் மற்றும் உமங்களபுரம் ஆகிய பகுதிகளிலும் இவ் வாரத்துக்குள் மீள்குடியேற்றம் செய்யப்பட விருப்பதாகவும் அரச அதிபர் சுட்டிக்காட்டி னார்.

வவுனியாவில் நிவாரணக்கிராமங்களி லிருந்து வெளியேறி உறவினர்களுடன் தங்கியிருக்கும் 2,216 பேர் கடந்த சனிக்கிழமை பெரிய பரந்தன், திருநகர் வடக்கு மற்றும் மேற்கு, கரச்சி ஆகிய பகுதிகளில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டனர்.

வன்னியில் முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமான நடவடிக்கைகளின் இறுதிக் கட்டத்தின்போது அங்கிருந்து இடம்பெயர்ந்த 2 இலட்சத்து 35 ஆயிரம் பேர் வவுனியா நிவாரணக் கிராமங்களில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

இவ்வருடம் ஜனவரி 31 ஆம் திகதிக்கு முன்னதாக நிவாரணக் கிராமங்களிலுள்ள அனைவரையும் அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாட் பதியுதீனுக்கு பணிப்புரை விடுத்திருத்தார்.

மீள்குடியேற்ற நடவடிக்கை கள் துரிதப்படு த்தப்பட்டமைக்கு அமைய சுமார் ஒரு இலட்சத்து 75 ஆயிரம் பேர் ஏற்கனவே வடக்கின் பல்வேறு பகுதிகளிலும் அவர்க ளது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப் பட்டனர்.

அதனைத் தொடர்ந்து வடக்கில் மோதல் இடம்பெற்ற பகுதிகளில் கண்ணி வெடிகள் அகற்றும் பணிகள் தாமத மடைந்ததைத் தொடர்ந்து மீள்குடியேற்றம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது. இம்மாதம் 02 ஆம் திகதி முதல் மீள்குடியேற்றப் பணிகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.




அரச வைத்தியசாலைகள்:
98 வகை மருந்துகளை கொள்வனவு செய்ய
உயர்மட்டக் குழு இன்று இந்தியா பயணம்



அரசாங்க ஆஸ்பத்திகளுக்கென 98 வகையான மருந்துகளைக் கொள்வனவு செய்யவென உயர்மட்டக் குழுவொன்று இன்று 15 ஆம் திகதி இந்தியாவுக்குப் பயணமாகின்றது.

அரசாங்க மருந்தாக்கல் கூட்டுத்தாபனம், மருந்து பொருள் விநியோகப்பிரிவு, திறைசேரி என்பவற்றின் பிரதிநிதிகளும், பிரதம மருந்தாளரும் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

இன்று இந்தியாவுக்குப் பயணமாகின்ற இக்குழுவினர் அடுத்துவரும் பத்து நாட்களுக்குள் இந்த 98 வகையான மருந்துகளையும் இந்நாட்டிலுள்ள ஆஸ்பத்திரிகளுக்குக் கொண்டு வந்து சேர்க்க வேண்டிய பொறுப்பு இக்குழுவி னரிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத்துறை அமைச்சின் அதிகாரியொருவர் நேற்றுத் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவ்வதிகாரி மேலும் கூறுகையில், அரசாங்க ஆஸ்பத்திரிகளில் 98 வகையான மருந்துகள் அடுத்துவரும் இரண்டு, மூன்று மாதங்களுக்குத் தான் கையிருப்பில் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு தான் இந்த 98 வகையான மருந்துகளையும் உடனடியாகக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் ஆலோசனைக்கு அமைய இந்த மருந்துகளை உடனடியாகக் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த 98 வகையான மருந்துகளும் அடுத்துவரும் 6 மாதங்களுக்குத் தேவையான அளவு கொள்வனவு செய்யப்படவுள்ளது.

இதேவேளை அரசாங்க ஆஸ்பத்திரிகளின் மருந்து பொருள் கையிருப்பு நிலைமையை அடிக்கடி கண்காணிப்பதற்கும் அதற்கு ஏற்ப மருந்து பொருட்களை கொள்வனவு செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளவுமென அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தில் விசேட பிரிவை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு ள்ளது என்றார்.


கிழக்கு மாகாண அமைச்சர் ஹிஸ்புல்லாவும் போட்டி
25இல் பதவியிலிருந்து இராஜினாமா


ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அபேட்சகராக எதிர்வரும் பொதுத் தேர்தலில் கிழக்கு மாகாண அமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா போட்டியிடு கின்றார். அதற்கமைய தனது கிழக்கு மாகாண அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்திருப்பதாக அவர் நேற்று தினகரனுக்கு கூறினார்.

வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்தினமான எதிர்வரும் 25ஆம் திகதி அமைச்சுப் பதவிக்கான இராஜினாமாக் கடிதத்தை அமைச்சர் ஹிஸ்புல்லா கையளிக்க தீர்மானித்துள்ளார்.

இதேவேளை அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் வெற்றிலைச் சின்னத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை எத்தனை பேர் போட்டியிடுவது என்பது குறித்து இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்ட மாகாண அமைச்சர் ஹிஸ்புல்லா, எதிர்வரும் 21ஆம் திகதி கட்சித் தலைவர் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் இல்லத்தில் நடைபெறவிருக்கும் உயர்மட்ட கூட்டத்தில், கட்சி சார்பில் கிழக்கு மாகாணத்தில் பொதுத் தேர்தலுக்காக போட்டியிடுபவர்கள் குறித்த இறுதித் தீர்மானம் எடுக்கப்படு மெனவும் தெரிவித்தார்

இடம்பெயர்ந்தோர் வாக்களிக்க விண்ணப்பிக்கும் காலம் புதன் முடிவு



இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கி இருப்பவர்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்ளிப்பதற்கு விண்ணப்பிப் பதற்கான காலம் நாளை மறுதினம் 17ம் திகதியுடன் முடிவடையவிருப்பதாக தேர்தல் செயலக அதிகாரியொருவர் நேற்றுத் தெரிவித்தார்.

பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக இடம்பெயர்ந்திருப்பவர்கள் தாம் தங்கியுள்ள கிராமசேவைகர் ஊடாக தங்களது விண்ணப்பப் படிவங்களைத் தேர்தல் செயலகத்திற்கு 17ம் திகதிக்கு முன்னர் கிடைக்கக் கூடிய வகையில் அனுப்பி வைக்க வேண்டும் எனவும் அவ்வதிகாரி குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில் :-

இடம்பெயர்ந்திருப்பவர்கள் பொது தேர்தலில் வாக்களிப்பதற்காக பொதுத் தேர்தல் சட்டப்படி தேர்தல் அறிவிக்கப்பட்ட தினம் முதல் ஒரு வார காலத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆகவே பொதுத் தேர்தலில் வாக்களிப் பதற்காக இடம்பெயர்ந்திருப்பவர்கள் நாளை மறுதினம் 17ம் திகதிக்கு முன்னர் தாங்கள் தங்கி இருக்கும் பிரதேச கிராம சேவகர் ஊடாக விண்ணப்பப் படிவங்களை அனுப்பி வைக்க வேண்டும் என்றும் கூறினார்.



தேர்தல் அசம்பாவிதங்களை தடுக்க
பொலிஸ் தேர்தல் புலனாய்வுப் பிரிவு


பொதுத் தேர்தல் காலத்தில் அசம்பாவிதங்கள் இடம்பெறுவதை தடுப்பதற்கு தேவையான சகல நடவடிக்கைகளையும் பொலிஸ் திணைக்களம் மேற்கொண்டுள்ளது.

இதற்கமைய பொலிஸ் தேர்தல் புலனாய்வுப் பிரிவு ஒன்று இம்முறை முதற்தடவையாக ஆரம்பித்துள்ளதாக தேர்தல் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ண தெரிவித்தார்.

நாடு முழுவதிலுமுள்ள 413 பொலிஸ் நிலையங்களிலும் 40 பொலிஸ் பிரிவுகளிலும் தேர்தல்கள் தொடர்பான தனியான கண்காணிப்பு பிரிவுகள் செயற்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

நாடு முழுவதிலும் பொலிஸார் தேர்தல் தொடர்பில் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்த அவர், பொலிஸ் தேர்தல் புலனாய்வுப் பிரிவின் மூலம் கண்காணிக்க ப்பட்டு அசம்பாவிதங்கள் நடைபெறுவதை முன்கூட்டியே தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க இப்பிரிவு இலகுவாக அமையும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

தபால் மூல வாக்களிப்பு:

16 முதல் 22 வரை விண்ணப்பம் ஏற்பு


பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்காக விண்ணப் பங்கள் நாளை 16ம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப் படவுள்ளன.

இதன் பிரகாரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் தபால் வாக்குப் பதிவுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் பணிகள் ஆரம் பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட உதவித் தேர்தர் ஆணையாளர் ரி. கிருஷ்ணானந்தலிங்கம் அறிவித்து ள்ளார்.

தபால் வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் உள்ள தமது விபரங் களை அறிந்து கொள்வதற்கு வசதி யாக 2008ம் ஆண்டிற்கான அத் தாட்சிப்படுத்தப்பட்ட வாக்காளர் பட்டியல்கள் அரச அலுவலகங்களில் தற்போது பார்வைக்காக வைக்கப் பட்டுள்ளன.

தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை அத்தாட்சிப்படு த்தும் அலுவலர்களை நியமிக்கும் பணிகள் தற்போது மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.

பொலிஸ் மா அதிபர் - பொதுமக்கள்
சந்திப்பு தற்காலிகமாக நிறுத்தம்



பொது மக்கள் பிரதி வெள்ளிக்கிழமை தோறும் பொலிஸ் மா அதிபரை சந்திக் கும் நடைமுறை தற்காலிகமாக நிறுத்தப்ப ட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

பொதுத் தேர்தலுக்கான வேலைப்பளு காரணமாகவே பொது மக்கள் சந்திப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் பிரியஷாந்த் ஜயகொடி தெரிவித்தார்.

பொது மக்கள் பொலிஸ் மா அதிபரை நேரடியாக சந்திக்கும் நடைமுறை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 23ம் திகதி வெள்ளிக்கிழமை தொடக்கம் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

பொலிஸ் மா அதிபரை பொது மக்கள் நேரடியாக சந்திக்கு நடைமுறை நிறுத்தப்பட்டுள்ள இந்த இரண்டு மாதகாலத்திற்குள் அவசர தேவைக்கான உதவி பெற விரும்புபவர்கள் 0112-472592 என்ற பெக்ஸ் இலக்கத்தின் மூலம் தெளிவுபடுத்த முடியும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.


கனகசபை அரசியலிலிருந்து ஓய்வு



தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் த. கனகசபை அரசியலில் இருந்து முற்றாக ஓய்வு பெறவுள்ளதாகவும், தன்னை பாராளுமன்றத்திற்கு அனுப்புவதற்காக வாக்களித்த 57 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்களுக்கும், தனது பதவிக் காலத்தில் ஒத்துழைப்பு நல்கிய மக்களுக்கும், ஊடக நிறுவனங்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக அறிவித்துள்ளார்.

தான் அரசியலில் இருந்து முற்றாக ஓய்வுபெறவுள்ளதாக அறிவித்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் த. கனகசபை மேலும் தெரிவிக் கையில்:- தான் அரசியலில் இருந்து ஓய்வுபெறவுள் ளமை குறித்து தமிழ் தேசிய கூட்ட மைப்பின் தலைவர் இரா. சம்பந்த னுடன் கலந்துரையாடி மேற்கொண்ட முடிவின் பிரகாரம் இதனை அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.


பொதுத் தேர்தல்: தேர்தல் செயலகத்தில் நாளை கூட்டம்


பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் தொடர்பாக தேர்தல் செயலகத்தில் நாளை 16ம் திகதி முக்கிய கலந்துரையாடலொன்று நடைபெறவுள்ளது.

தேர்தல்கள் ஆணையாளர் தயான ந்த திஸாநாயக்கா தலைமையில் தேர்தல் செயலகக் கேட்போர் கூடத்தில் காலை 10.30 மணிக்கு இக்கலந்துரையாடல் நடைபெற விருக்கின்றது.

மாவட்ட மட்டத்தில் கடமையாற்றும் தெரிவத்தாட்சி அதிகாரிகள், பிரதி தேர்தல் ஆணையாளர்கள், சிரேஷ்ட உதவி தேர்தல் ஆணையாளர்கள், உதவி தேர்தல் ஆணையாளர்கள் போன் றோர் இக்கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டிருப்பதாக தேர்தல் செயலக அதிகாரியொருவர் கூறினார்


மருதமடுவில் கிளேமோர் மீட்பு

வவுனியா, மருதமடு பிரதேசத்தி லிருந்து எட்டு கிலோ எடையுள்ள அதிசக்திவாய்ந்த கிளேமோர் குண்டுகளை பாதுகாப்புப் படையி னர் மீட்டெடுத்துள்ளனர். இராணு வத்தின் பொறியியல் பிரிவினர் நடத்திய பாரிய தேடுதலின் போதே இந்த கிளேமோர் குண்டுகள் மீட்டெடுக்கப்பட்டது என்று இராணு வப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.


சத்துணவு நஞ்சாகிய விவகாரம்;

ஒப்பந்தக்காரருக்கு விளக்கமறியல்;சி உதவியாளருக்கு சரீரப்பிணை



சத்துணவு நஞ்சாகி பத்து வயது மாணவி பலியாகி 129 மாணவர்கள் சுகவீனமடையக் காரணமாகவிருந்த, நேற்று கைதான ஒப்பந்தக்காரரையும் உதவியாளராக செயல்பட்ட பெண்மணியையும் மாத்தளை மாஜிஸ்திரேட் நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்த போது ஒப்பந்தக்காரருக்கு இன்று வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதவான் உதவியாளரான பெண்மணியை ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் செல்ல அனுமதி வழங்கினார்.

அத்துடன், இறந்து பத்து வயது பாடசாலை மாணவியின் மரண சடங்குகளின் செலவீனங்களுக்கென ரூபா 50,000 வழங்கும்படியும் சந்தேக நபர்களுக்கு நீதவான் உத்தரவிட்டார். மேற்படி இருவரும் இன்று மாத்தளை நீதிமன்றில் மீண்டும் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.

இதேவேளை, சத்துணவு நஞ்சாகியமை தொடர்பான ஆரம்ப கட்ட விசாரணைகள் மத்திய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சாந்தி சமரசிங்க தலைமையில் இன்று ஆரம்பமாகின்றது.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களுள் நேற்று பகல் வேளை வரையும் 30 மாணவர்களை தவிர அனைத்து மாணவர்களும் வீட்டுக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

மேலும் இங்கே தொடர்க...
பொன்சேகா விடுதலையா? அதிபர் ராஜபக்ஷே பதில்



பொறுத்தவரை,சட்டத்திற்குஅப்பாற்பட்டவர்கள்யாரும்இல்லை.பொன்சேகாவின் நிலை குறித்து யாரும் கவலைப்பட வேண்டியது இல்லை,'' என இலங்கை அதிபர் ராஜபக்ஷே கூறியுள்ளார்.இலங்கை அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே, அதிபர் ராஜபக்ஷேயை சந்தித்து பேசினார். அப்போது, ராணுவ முன்னாள் தளபதி சரத் பொன்சேகாவை உடனடியாக விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதற்கு அதிபர் ராஜபக்ஷே பதில் அளித்த போது, ""இலங்கையை பொறுத்தவரை சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் யாரும் இல்லை. கைது செய்யப்பட்டுள்ள பொன்சேகாவின் நிலை குறித்து யாரும் கவலைப்பட வேண்டியது இல்லை. அவரது கைது நடவடிக்கைகளில், உரிய சட்ட விதிமுறைகள் பின்பற்றப்படும். தற்போது, அவர் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடந்து வருகிறது. குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை எனில், அவர் விடுதலை செய்யப்படுவார். பொன்சேகாவின் கைதுக்கு அரசியல் பின்னணி காரணமல்ல,'' என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

தேர்தல் கூட்டுக்களை அமைப்பதிலும் வேட்பாளர்களைத் தெரிவதிலும் அரசியல் கட்சிகள் தீவிரம்



வேட்பாளர் நியமனப்பத்திரங்களைத் தாக்கல் செய்வதற்கு இன்னும் ஐந்து நாட்களே எஞ்சியுள்ள நிலையில், தேர்தல் கூட்டுக்களை அமைப்பதிலும் வேட்பாளர்களைத் தெரிவதிலும் அரசியல் கட்சிகள் இறுதிக்கட்ட பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு ஆசனங்களை ஒதுக்கிக் கொடுப்பதிலேயே இறுக்கமான நிலை காணப்படுவதாக அரசியல் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட் பாளர்களைத் தெரிவு செய்வதற்கான நேர்முகத் தேர்வுகளை ஏற்கனவே நடத்தி முடித்துள்ளன. அவற்றின் விபரங்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குக் கையளிக்கப்பட்டுள்ளதுடன், சில மாவட்டங்களின் விபரங்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை (14) அல்லது நாளை திங்கட்கிழமை கையளிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் கூட்டுக் கட்சிகள் பெரும்பாலும் அரசாங்கத் தரப்புடன் இணைந்தே போட்டியி டலாமென நம்பப்படுகிறது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, இலங்கை சமசமாஜக் கட்சி, தேசிய சுதந்திர முன்னணி, ஜாதிக ஹெல உறுமய உள்ளிட்ட கட்சிகள் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

எனினும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, மலையக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் தனித்துக் களமிறங்குவதாகத் தெரிவித்துள்ள போதிலும், இன்னமும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக ஆளுந்தரப்பு முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார். அதே போல், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்), பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆகிய கட்சிகள் இன்ன மும் ஆலோசனை நடத்தி வருகின்றன.

இதேவேளை, கூட்டணிக் கட்சிக ளுக்கு ஆசனங்களை ஒதுக்குவது தொடர்பான இறுதித் தீர்மானத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே மேற்கொள்வாரென்று வேட்பாளர் தெரிவுக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான மேல் மாகாண ஆளுநர் எஸ். அலவி மௌலானா தெரிவித்தார்.இது குறித்து அரசியல் கட்சிகளு டன் கலந்தாலோசனைகள் இடம் பெற்று வருவதாக ஆளுநர் குறிப்பிட்டார்




கோடன் வைஸின் குற்றச்சாட்டை இலங்கை மறுப்பு





இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரின் போது 40 ஆயிரம் பொதுமக்கள் வரை கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் கொழும்புக்கான பேச்சாளர் கோடன் வைஸ் வெளியிட்ட தகவலை, இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளது.

தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஸ்மன் ஹுலுகல்ல, இந்த தகவல் முற்றுலும் பொய்யானது என குறிப்பிட்டுள்ளார். கோடன் வைஸ், ஏபிசி செய்திச்சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே தமது தகவலை நம்பத்தகுந்த தரப்புக்களை கோடிட்டு வெளியிட்டிருந்தார்.

இதனை இலங்கை அரசாங்கம் சர்வதேசத்தை பிழையான வழியில் இட்டுசெல்லும் செய்தி எனக்கூறிவருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனை மறுத்துள்ள லக்ஸ்மன் ஹுலுகல்ல, இவ்வளவு தொகையான பொதுமக்கள் கொல்லப்பட்டமைக்கான வாய்ப்புகள் இருக்கவில்லை என்றும் தமிழீழ விடுதலைப்புலிகள் எவ்வாறு பொதுமக்களை சித்திரவதை செய்தார்கள் என்பதை தாம் ஊடகவியலாளர்களுக்கு காட்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வெளியுறவுத்துறை அமைச்சர் ரோஹித்த போகல்லாகமையும் கோடன் வைஸின் தகவலை மறுத்துள்ளார்.கோடன் வெய்ஸ்சும் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களில் ஒருவராக இந்தக்கருத்தை வெளியிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவுஸ்திரேலிய பிரஜையான கோடன் வெய்ஸ் 14 ஆண்டுகளுக்கு பின்னர், தமது ஐக்கிய நாடுகள் சபையின் பதவியை ராஜினாமா செய்து வீடு சென்ற பின்னர் முதல் தடவையாக இலங்கை தொடர்பாக சுதந்திரமான தமது தகவலை வெளியிட்டுள்ளார்.




சரத் பொன்சேகாவை விடுவிக்கக் கோரி புத்தளத்திலும் ஆர்ப்பாட்


கைது செய்யப்பட்டு தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு கோரி புத்தளம் நகரத்தில் ஜக்கிய தேசிய கட்சி,ஜே.வி.பி,ஸ்ரீ லங்கா முச்லிம் காங்கிரஸ் என்பன கூட்டாக புத்தளத்தில் பேரணியொன்றை நடத்தியுள்ளன.

புத்தளம் நகரத்தின் பிரபல ஆளும் கட்சி பிரமுகர் கே.ஏ.பாயிஸ் தலைமையில் வந்த மற்றுமொரு குழுவினர் பேரணியினை குழுப்புவதற்கு எடுக்கப்பட்ட முயற்சி தோல்வி கண்டுள்ள நிலையில்,ஐக்கிய தேசிய முன்னணி தமது பேரணியின் உரிய நேரத்திற்கு இப்பேரணியை முடிவுக்குக்கொண்டு வந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இரு குழுக்களுக்கிடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.முன்னாள் ஐ.தே.கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்க பண்டார,ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட டாக்டர் இலியாஸ் உட்பட பலரும் இதில் கலந்து கொண்டனர்




அதே அதிகாரத்தின் மூலம் பொன்சேகாவை விடுவிக்க வேண்டும்-மகாநாயக்க தேரர்கள் கூட்டாகக்



பிக்குகளை கொலை செய்து, தலதா மாளிகை மீது குண்டு தாக்குதல் நடத்திய புலி உறுப்பினர்களுக்கு அரசாங்கம் பதவிகளை வழங்கியது போல தனது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி, கைதுசெய்யப்பட்டுள்ள ஜெனரல் சரத் பொன்சேகாவை சகல குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கேட்டுள்ளனர்.

அஸ்கிரிய, மல்வத்தை, அமரபுர, ராமாஞ்ய ஆகிய பௌத்த பீடங்களைச் சேர்ந்த மகா நாயக்கதேரர்கள் கடிதம் மூலம் இந்த கோரிக் கையை விடுத்துள்ளனர். ஆத்திரத்தை ஆத் திரத்தால் தீர்க்க முடியாது என புத்த பகவான் போதித்துள்ளதை பின்பற்றி, பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க நடவடிக்கை எடுத்த முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுடன் காணப்படும் கோபதாபங்களை கைவிடுங்கள்.

பயங்கரவாத யுத்தம் நடைபெற்ற காலத்தில் பௌத்த பிக்குகளை கொலை செய்து, தலதா மாளிகை, ஸ்ரீமஹாபோதி உள்ளிட்ட விகாரை களை அழித்து, நாட்டை இரண்டாக பிரிப்ப தற்காக பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டு, இராணுவத்தினர் உள்ளிட்ட பொதுமக்களின் உயிர்களைப் பலிகொண்டு பயங்கரமான பயங்கரவாதிகளாக கருதப்பட்ட வர்களை அரசாங்கத்துடன் இணைத்து கொண்டு, பதவிகளை வழங்கி பாதுகாப்பு வழங்க முடிந்தது போல், நாட்டின் ஐக்கியம், இறையாண்மை மற்றும் மக்களின் உயிர்களை பாதுகாப்பதற்காக உயிரை பணயம் வைத்து பிறந்த நாட்டுக்காக அளப்பரிய சேவையாற்றிய சரத் பொன்சேகா உள்ளிட்டோரை ஜனாதிபதி தனது அதிகாரத்தை பயன்படுத்தியேனும் சகல குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவித்து, அவர்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்




வெற்றிலைக்கேணி மாதா கோயில், படையினரின் முகாமாக மாற்றப்பட்டது கண்டு யாழ். ஆயர் அதிர்ச்சி



யில் அமைந்துள்ள வரலாற்றுப் புகழ்மிக்க ஆலயமான கப்பல் ஏந்திய மாதா கோவில் படையினரின் முகாமாக மாற்றப்பட்டுள்ளதாக யாழ். ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் தெரிவித்துள்ளார்.

அண்மையில் வன்னி மற்றும் வடமராட்சி ஆகிய பிரதேசங்களுக்கு விஜயம் மேற்கொண்ட ஆயர், வடமராட்சி கிழக்கில் உள்ள வெற்றிலைக்கேணியில் அமைந்துள்ள வரலாற்றுப் புகழ்மிக்க கப்பல் ஏந்திய மாதா கோவில் இராணுவ முகாமாக மாற்றப்பட்டுள்ளதை கண்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளார்.

தேவாலயம் மிகப்பெரும் இராணுவ முகாமாக மாற்றப்பட்டுள்ள விவகாரத்தை ஊடகங்க ளுக்கோ அல்லது வேறு அமைப்புக்களுக்கோ தெரிவிக்க வேண்டாம் என இராணுவம் ஆயருக்கு உத்தரவிட்டுள்ளது.

வன்னிப் பகுதிக்கு சென்ற ஆயர் அங்கு உள்ள பெருமளவான தேவாலயங்கள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். வெற்றிலைக்கேணி மாதா ஆலயம், மிகப் பெரும் இராணுவத் தளமாக மாற்றப்பட்டுள் ளதுடன், அதனை சுற்றி வேலிகளும், காவல் நிலைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

தேவாயலமும் சேதமடைந்துள்ளது. பெரு மளவான மக்கள் வழிபடும் இந்த தேவால யத்தை இராணுவம் முகாமாக பயன்படுத்தி வருவதால் மக்களின் மத உணர்வுகளை அது புறம்தள்ளியுள்ளதாக அவை மேலும் தெரிவித்துள்ளன. இதனிடையே வடமராட்சி கிழக்கு கட்டைக் காட்டு பகுதியிலும் பெருமளவான ஆலயங் கள் சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.




மட்டு. மேயர் சிவகீதாவை பதவியிலிருந்து நீக்குமாறு வேண்டுகோள்




மாநகரசபை மேயர் சிவகீதா பிரபாகரனை மேயர் பதவியிலிருந்நு உடனடியாக நீக்க வேண்டுமென தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பு, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பில் வீரகேசரி வார வெளி யீட்டுக்குக் கருத்துத் தெரிவித்த இந்த அமைப் பின் ஊடகப் பேச்சாளர் அஸாத் மௌலானா மேலும் கூறுகையில்,இறுதியாக நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி சபைத் தேர்தலில் எமது அமைப்பு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப் புடன் ஏற்படுத்திக் கொண்ட புரிந்துணர்வின் அடிப்படையிலேயே குறிப்பிட்ட தேர்தலில் எமது வேட்பாளர்களையும் நிறுத்தியது.

எமது கட்சியின் மூலம் நிறுத்தப்பட்ட வேட்பாளரான சிவகீதா பிரபாகரன் வெற்றி பெற்றதையடுத்தே அவரை மட்டக்களப்பு மாவட்ட மேயராக நியமிக்க வேண்டுமென நாம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உயர் பீடத்தைக் கேட்டிருந்தோம். அதற்கமை வாகவே அவருக்கு மேயர் பதவியும் வழங்கப் பட்டது. ஆனால், அவர் அண்மையில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரித்தார். இதற்கு முன்னர் கூட எமது கட்சியின் ஆலோசனைகளைப் பெறாத நிலையிலேயே சில முடிவுகளையும் மேற்கொண்டிருந்தார்.

இந்த நிலையில் இவரை எமது கட்சியில் தொடர்ந்தும் வைத்திருப்பதில் அர்த்தம் இல்லை. இந்த விடயத்தில் எமது கட்சிக்கு தார் மிகப் பொறுப்புள்ளது. அதனை நிறைவேற் றவும் வேண்டியுள்ளது. இதன் முதல்கட்டமாக மட்டக்களப்பு மாநகர மேயர் பதவியிலிருந்து இவரை நீக்க வேண்டியுள்ளது. இது தொடர்பாக நாம் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிடம் எமது நியாயங்களை எடுத்துக் கூறியுள்ளதுடன் அவரை உடன டியாக மேயர் பதவியிலிருந்து நீக்குமாறும் கேட்டுள்ளோம்.

இதுதவிர, மட்டக்களப்பு மாநகரசபையால் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேர ணையொன்றும் கொண்டு வரப்பட்டு அதிலும் கூட அவருக்கு எதிராக பெரும்பாலானோர் வாக்களித்துள்ளனர்'' என்றார்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர் களில் ஒருவரும் அமைச்சருமான விநாயக மூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) இது தொடர்பாக வீரகேசரி வாரவெளியீட்டுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,

""உறுதியற்ற கொள்கையினையும் தனது மனச்சாட்சிக்கே மாறான அரசியல் விடயங்க ளிலும் ஈடுபடும் சிவகீதா பிரபாகரனை எவ்வாறு எமது கட்சியின் வேட்பாளராக நாடாளுமன்றத் தேர்தலில் நிறுத்துவது? கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வையையும் அவரது அரசாங்கத்தையும் பகிரங்க மேடைகளில் அவர் எவ்வாறு விமர் சித்தாரென்பது எமக்குத் தெரியும். இப்ப டிப்பட்ட ஒருவரை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளராக நிறுத்துமாறு நாம் யாரிடம் போய்க் கூறமுடியும். அது எங் களுக்கே ஒரு வெட்கம் கெட்ட செயலாக அமையலாம்.

இவரின் அண்மைக்கால அரசியல் போக் குகள் எமது ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப் தியைத் தோற்றுவித்துள்ளது. நாங்கள் இது தொடர்பில் விரைவில் கூடி ஆராயவுள்ளோம். மட்டக்களப்பு மாநகரசபை மேயர் சிவகீதா பிரபாகரன் வீரகேசரி வாரவெளியீட்டுக்கு இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், தான் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப் பின் அங்கத்தவர். அந்தக் கட்சியினால்தான் எனது விவகாரங்களைக் கையாள முடியும். என்னை மேயர் பதவியிலிருந்து நீங்குமாறோ அல்லது நான் நீக்கப்பட்டுள்ளதாகவோ கூட் டமைப்பின் செயலாளரான சுசில்பிரேம்ஜயந் தவிடமிருந்து எவ்வித அறிவித்தலும் எனக்குக் கிடைக் கவில்லை. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிடுவதா இல்லையா என்று நானே தீர்மானிக்காத நிலையில் என்னைத் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து தவிர்த்துக் கொள்வது பற்றி மற்றவர்கள் ஆலோசிப்பதில் எவ்வித பயனுமில்லையென்று'' அவர் குறிப்பிட்டார்



ர்க் குற்றம் குறித்து சுயாதீன சர்வதேச விசாரணை வேண்டும்-.நா மீண்டும் வலியுறுத்தல்



இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்து சுயாதீனமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐ.நா. மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளில் மனித உரிமைகள் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுவரும் செயற்பாட்டாளர்களுக்கான ஐந்தாவது மாநாடு அயர்லாந்தின் தலைநகர் டப்ளினில் நடந்தது. அந்த மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய நவநீதம்பிள்ளை இலங்கை விவகாரம் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பி.பி.சி. வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இது தொடர்பான இலங்கையின் விசாரணைகள் இதுவரை நடைமுறைக்கு வரவில்லை என தமது அலுவலகம் தெளிவாக உணர்ந்துள்ளதாகவும் நவநீதம்பிள்ளை கூறியுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐ.நா. செயலா ளர் நாயகம் பான் கீ மூனுக்கு அளித்த வாக்குறு தியை நிறைவேற்றச் செய்வதில் பான் கீ மூன் தீவிரமாக இருப்பதாகவும் நவநீதம்பிள்ளை தெரிவித்தார்.:

இவ்விவகாரம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்கவை தான் ஜெனீவாவில் சந்தித்துப் பேசியதாகவும் அவர் தெரிவித்தார். அனைவரும் தேர்தல் முடியும்வரை காத்தி ருந்ததைப்போல் தென்படுகிறது. ஆகவே அவருக்கு நான் மீண்டும் அதை வலியுறுத் தினேன் எனவும் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.:

இலங்கையில் யுத்தத்தின் பின்னரான உரிமை மீறல்கள் குறித்து மட்டுமல்லாது தேர்தலுக்குப் பின்னரான உரிமை மீறல்கள் குறித்தும் இலங்கையின் மனித உரிமைகள்விவகார அமைச்சர் தனது அரசாங்கத்துடன் பேச வேண்டும் என அவர் கூறியுள்ளார். இலங்கையில் நடைபெற்றதாக கூறப்படும் போர் குற்றச்சாட்டுகள் விவகாரம் ஐ.நா. சபை யின் மனித உரிமைகள் அவையில் முறையாக கையாளப்பட்ட விதம் குறித்து தமது அதிருப்தியையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். :

போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து சர்வதேச விசாரணைக்குதாம் அனுமதிக்கப்போவ தில்லை என இலங்கை கூறுகிறது.இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ அத்தகைய விசார ணைக்கு அனுமதிக்கப்போவதில்லை எனவும் அத்தகைய விசாரணைகளுக்கான அவசியம் இல்லை எனவும் அவர் கூறினார். எனினும் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தாம் சர்வதேச விசாரணையின்போது சாட்சியமளிக்கப் போவ தாக கூறியிருந்தார்





ரணிலின் தீர்மானம் குறித்து சிறுபான்மை கட்சிகள் அதிருப்தி




நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி யானைச் சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பில் அவசரப்பட்டு முடிவுகளை எடுக்க வேண்டாமென சில சிறுபான்மையினக் கட்சிகளின் தலைவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் விடுத்த வேண்டுகோளை அவர் நிராகரிக்கும் வகையில் நடந்து கொண்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு நடந்து கொண்டமை ஏமாற்றத்தை யும் அதிர்ச்சியையும் இக்கட்சித் தலைமைகளுக்கு ஏற்படுத்தியுள்ளதாக நம்பகரமான செய்திகள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோருக்குமிடையில் நாடாளு மன்றத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையின் போது பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன. அனைவரும் ஒள்றிணைந்து போட்டியிடுவது குறித்தும் இங்கு விரிவாகப் பேசப்பட்டது. இது தொடர்பில்பு ஐக்கிய தேசிய முன்னணிக்குள் ஓர் இணக்கப்பாட்டைக் காணும் வரைக்கும் ஐக்கிய தேசியக் கட்சி யானைச் சின்னத்தில் போட்டி யிடுவது குறித்து தீர்மானமெதனையும் எடுக்க வேண்டாமென மனோ கணேசனும் ரவூப் ஹக்கீமும் ரணில் விக்கிரமசிங்கவைக் கேட்டிருந்தனர்.

இதற்கு உடனடியாகவே ரணில் விக்கிரம சிங்க இணக்கம் தெரிவித்திருந்த நிலையில் அதே தினம் மாலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற் குழுவைக் கூட்டி எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆராய்ந்துள்ளார். அத்துடன் யானைச் சின்னத் திலேயே போட்டியிடுவதாகவும் அந்தக் கட்சி அன்றைய தினமே அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பானது குறிப்பிட்ட தமிழ் பேசும் கட் சித் தலைவர்களுக்குப் பலத்த ஏமாற்றத்தைத் தந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ரணில் திடீர் சந்திப்பு

இது இவ்வாறிருக்க வெள்ளிக்கிழமை இரவும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் மனோ கணேசன், ரவூப் ஹக்கீம் ஆகியோருக் குமிடை யில் மீண்டும் பேச்சுவார்த்தை நடந்து கொண்டி ருக்கும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களும் அங்கு வருகை தந்துள் ளனர். இந்தச் சந்திப்பின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் சில விடயங் கள் முன்வைக்கப்பட்டதாக நம்பகமான வட்டா ரங்கள் தெரிவித்தன.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஜனநாயக மக்கள் முன்ன ணியும் போட்டியிடக் கூடாதென்றும் அதற்குப் பதிலாக கொழும்பு மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடுவதிலிருந்து தவிர்த்து கொள்ளுமென்றும் அங்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தாம் தமது கட்சி உயர்பீடத்துடன் பேசியே தீர்வு காணமுடியுமென ரணில் விக்கிரமசிங்க தெரி வித்துள்ளளார். இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பு சார்பில் இரா. சம்பந்தன், மாவை சேனாதிராசா,சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மனோகணேசன் கருத்து

இந்த விடயம் குறித்து ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் கருத்துத் தெரிவிக்கையில் வடக்கு, கிழக்கு மாகாணத்தில் யாழ்,வன்னி,மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் தமது கட்சி வேட்பானர்களை நிறுத்தவே தீர்மானித்துள்ளது. இந்த மாகாணங்களைச் சேர்ந்த எமது ஆதரவாளர்களும் நாம் இங்கு போட்டியிட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளனர். இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவ்வாறானதொரு வேண்டுகோளை விடுத்துள்ளதாக அறிய முடிகிறது. கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களைவிட்டுக் கொடுப்பதில் எமக்குப் பிரச்சினையில்லை. ஆனால் ஏனைய மாவட்டங்கள் தொடர்பில் நாம் எமது கட்சியுடன் கலந்தாலோசித்தே முடிவெடுக்க வேண்டியுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மையினக் கட்சிகளான நாம் அனைவரும் எவ்வாறு ஒன்றி ணைந்து எமது ஒற்றுமையைக் காட்டினோமோ அதனையே நாம் பொதுத் தேர்தலிலும் கடைப்பிடிக்க விரும்புகிறோம். தங்களுக்குள் முரண்பாடுகள் ஏற்படாத வகையில் சில விட்டுக்கொடுப்புடன் நாம் பிரச்சினைகளைப் பேசித் தீர்க்கவே விரும்புகிறோம். எது எப்படியிருப்பினும் கிழக்கு மாகாணத்தின் திரு கோணமலை, அம்பாறை ஆகிய மாவட் டங்களில் நாம் நிச்சயமாகப் போட்டியிட மாட்டோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சுரேஷ் பிரேமச்சந்திரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளு மன்ற முன்னாள் உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந் திரன் இது தொடர்பில் வீரகேசரி வாரவெளி யீட்டுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், ரணில் விக்கிரமசிங்கவை எமது கட்சி சந்தித்தது உண்மையே. சமகால அரசியல் நிலைமைகளை ஆராய்வது தொடர்பிலே எமக்கிடையிலான சந்திப்பு இடம்பெற்றது. எதிர்வரும் நாடாளு மன்றத் தேர்தல் தொடர்பில் நாம் மனோ கணேசனுடனும் ரவூப் ஹக்கீமுடனும் பேச்சுவார்த்தை நடத்தவே உள்ளோம். நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் நாம் தனித்துவமாகவே போட்டியிடவுள்ளோம். இது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கி ரஸுடனும் ஜனநாயக மக்கள் முன்னணி யுடனும் ஓர் இணக்கப்பாடு காண்பதனையும் நாம் விரும்புகிறோம்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எமது கட்சியின் ஊடாகப் போட்டியிடுவதற்காக நாங்கள் எதிர்பார்த்ததனையும் விட அதிக ளவில் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. பழைய முகங்கள் மட்டுமல்ல புதிய முகங்கள் புத்தி ஜீவிகள் எனப் பலரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாகப் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர். எமக்குக் கிடைத்த விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்து வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் பணிகள் அடுத்தவாரம் இடம் பெறுமெனவும் அவர் தெரிவித்தார்.

முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹஸன் அலி கருத்துத் தெரிவிக்கையில் கடந்த ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மையினக் கட்சிகள் காட்டிய அதே ஐக்கியம் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் தொடர வேண்டு மென்பதே எமது கட்சியின் விருப்பம். அத் துடன் நாம் பெற்ற அந்த வெற்றி தொடர்ந்தும் கட்டிக்காக்கப்பட வேண்டும். இந்த அடிப்படையிலேயே நாம்பு பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம். மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலத் துடன் தாம் வெற்றி பெறுவோமென ஆளுந் தரப்பினர் இப்போதிருந்தே கூறிவருகின்றனர். இவ்வாறான அவர்களது எதிர்பார்ப்பை தோல் வியடைச் செய்யும் சக்தியாக நாம் மாறவேண் டும். அதற்காக நாம் அனைவரும் ஒன்றி ணைந்து செயற்படவேண்டும்.

மேலும், எமது கட்சி இந்தத் தேர்தலை எவ்வாறு முகம்கொள்வது என்பது குறித்தும் வேட்பாளர்கள் தெரிவு தொடர்பிலும் இவ் வாரம் கூடி ஆராயவுள்ளது. என்றார். இது இவ்வாறிருக்க ஐக்கிய தேசியக் கட்சி கடந்த ஜனாதிபதித் தேர்தலில் காட்டிய ஐக்கி யத்தையும் கண்ட உடன்பாட்டினையும் எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காட்டுவதில் அக்கறை செலுத்துவதாகத் தெரியவில்லை யென்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குற்றஞ் சாட்டியுள்ளதாக நம்பகமான செய்திகள் தெரிவிக்கின்றன. ஐக்கிய தேசியக் கட்சி தமிழ்பேசும் சிறு பான்மையின மக்களின் வாக்குகளை தமது கட் சிக்குப் பெற்றுக் கொள்வதில் காட்டும் ஆர்வத் தையும் அக்கறையையும் சிறுபான்மையினக் கட்சிகளின் ஊடாக வேட்பாளர்களை நிறுத்து வதில் காட்டவில்லையென்றும் அந்தக் கட்சி குற்றம் சாட்டியுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது
மேலும் இங்கே தொடர்க...