25 ஆகஸ்ட், 2009

கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் குற்றவியல் நீதிமன்றங்கள் நிறுவ நடவடிக்கை-




கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் குற்றவியல் நீதிமன்றங்கள் நிறுவப்படவிருப்பதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த மாவட்டங்களில் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கு முன்னதாக இந்த குற்றவியல் நீதிமன்றங்களை நிறுவுவதற்கு நீதியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் மேல்நீதிமன்றம் ஒன்றும், நீதவான் நீதிமன்றம் ஒன்றும் நிறுவப்படவுள்ளதுடன், முல்லைத்தீவில் நீதவான் நீதிமன்றமொன்றும் நிறுவப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் வழக்கு விசாரணைகள் வவுனியா மாவட்ட நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.


மேலும் இங்கே தொடர்க...

யுத்தத்திலிருந்து தப்பிப்பிழைத்தோர் மழையிலிருந்து தப்புவதற்கு போராட்டம் நடத்த வேண்டிய நிலைமை-புளொட் சித்தார்த்தன்!


யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் தப்பிப்பிழைத்த தமிழ்ப் பொதுமக்கள் இப்போது கடும் மழையால் உயிர்வாழ்வதற்கு மற்றொரு போராட்டத்தை நடத்தவேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். சுமார் 3 இலட்சம் இடம்பெயர்ந்த மக்கள் அரசாங்கத்தினால் நலன்புரி கிராமங்கள் என்று அழைக்கப்படும் இடங்களில் தங்கியுள்ளனர். இவர்களை சுயாதீன பத்திரிகையாளர்கள் சந்திப்பதற்கு இன்னமும் அனுமதி வழங்கப்படவில்லை.

“இதுவொரு மனிதாபிமானமற்ற விடயம் நரகத்தில் வாழ்வது போன்றது’ என்று தமிழ் அரசியல்வாதியான தர்மலிங்கம் சித்தார்த்தன் கூறியுள்ளார். முகாம்களில் அண்மையில் ஏற்பட்ட பெரும் மழையால் கூடாரங்களில் வெள்ளம் ஏற்பட்டது குறித்தே சித்தார்த்தன் இந்தக் கருத்தைத் தெரிவித்திருக்கிறார். கடும் மழை பெய்யும் பருவ காலம் அக்டோபரில் ஆரம்பமாகும். இதனால் நிலைமைகள் மேலும் மோசமடையும் நிலைமை காணப்படுகிறது. முகாம்களைவிட்டு மக்கள் வெளியேறுவதற்கான சந்தர்ப்பத்தை அரசாங்கம் வழங்குவது அவசியமென்று சித்தார்த்தன் கூறியுள்ளார்.

இடம்பெயர்ந்த மக்களின் நிலைமை தொடர்பாக அமெரிக்கா கவலை தெரிவித்திருக்கிறது. கடந்த மேயில் முடிவடைந்த யுத்தத்தில் 7 ஆயிரம் பொதுமக்கள் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என்று ஐ.நா. கூறியுள்ளது. பருவ கால மழை ஆரம்பிக்கப்படவுள்ளதால் முகாம்களில் மோசமான நிலை ஏற்படுமென்றும் மனித உரிமைகள் அமைப்புகள் பல கவலை தெரிவித்துள்ளன. புதிய நோய்கள் பரவும் அறிகுறிகள் முகாம்களில் காணப்படுவதாக நியூயோர்க்கைத் தளமாகக் கொண்டியங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் உட்பட பல்வேறு அமைப்புகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

இதேவேளைஇ பாரிய சுகாதாரம் சம்பந்தமான பிரச்சினைகள் முகாம்களில் இல்லையென்றும் முகாம்களில் இயங்கும் சகல சுகாதார நிறுவனங்களும் வழமையான பணியை மேற்கொண்டிருப்பதாகவும் மனித உரிமைகள் விவகாரம் தொடர்பான அமைச்சர் மகிந்த சமர சிங்க தெரிவித்திருந்தார்.

மேலும் இங்கே தொடர்க...
வந்தாறுமூலை பல்கலைக்கழக பகுதியிலிருந்து குண்டுகள் மீட்பு-

மட்டக்களப்பு, வந்தாறுமூலையிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பின் புறத்திலிருந்து கண்டெடுக்கப்பட்ட மூன்று கைக்குண்டுகள் நேற்று படையினரால் வெடிக்கவைத்து செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளன. இக்குண்டுகள் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டிருக்கலாமென படையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இக்குண்டுகள் பொலித்தீன் பையொன்றினுள் போடப்பட்டு புதைக்கப்பட்டிருந்தன. சுற்றாடல் துப்புரவு செய்வதில் ஈடுபட்டிருந்த பல்கலைக்கழக ஊழியர்கள் இதுகுறித்து அறிவித்ததைத் தொடர்ந்தே குண்டுகள் மீட்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளன.

மேலும் இங்கே தொடர்க...
இந்திய, பிரித்தானிய கடற்படையினர் சிறிய போர்ப்படகுகளை இயக்குவதற்கான பயிற்சிகளை வழங்குமாறு இலங்கையிடம் கோரிக்கை-



இந்தியா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளின் கடற்படையினர் சிறிய போர்ப் படகுகளை இயக்குவதற்கான பயிற்சிகளை வழங்குமாறு இலங்கையிடம் கோரியுள்ளதாக த எக்ஸ்பிரஸ் பஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. புலிகளுக்கு எதிரான நான்காம் கட்ட போரின்போது இலங்கைக் கடற்படையினர் வெற்றிகரமாக போர்ப் படகுகளைப் பயன்படுத்தியமையை அடுத்தே இந்தக் கோரிக்கைகள் எழுத்திருப்பதாக இலங்கை கடற்படை அதிகாரியைச் சுட்டிக்காட்டி அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது. இலங்கையில் அமெரிக்காவின் கடற்படைக் குழுவொன்று சிறிய போர்ப் படகுகளை பயன்படுத்தும் பயிற்சியினை கிழக்குப்புறப் பகுதியில் மேற்கொண்டு வருவதாக அவ்ஊடகம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை இதற்கு முன்னர் பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகளுக்கு ஆறு வாரகால குறுங்கால இராணுவப் பயிற்சிகளை வழங்குவதற்கு இலங்கை இணக்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
மேலும் இங்கே தொடர்க...

தமிழகபொலிசாரிடம் இலங்கை அரசு கோரிக்கை


தமிழகத்தில் கடந்த ஜூலையில் கைதுசெய்யப்பட்ட மூன்று இளைஞர்களை தம்மிடம் ஒப்படைக்குமாறு இந்திய கடலோரக் காவல்படையிடம் அரசாங்கம் கோரியுள்ளது. இராமேஸ்வரம் பகுதியில் கடந்த ஜூலைமாதம் 31ம்திகதி குறித்த மூன்று இளைஞர்களும் கைதுசெய்யப்பட்டு தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் மூவரும் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு கொலை, கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற அடிப்படையில் அவர்களை தம்மிடம் ஒப்படைக்குமாறு இலங்கைப் பொலீசார் கோரியிருப்பதாக இந்திய கடலோரக் காவல்படையினர் கூறியுள்ளனர். அவர்களை இலங்கைக்கு ஒப்படைப்பது தொடர்பில் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் இங்கே தொடர்க...