23 பிப்ரவரி, 2010

மாணவியொருவரை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய
பாடசாலையொன்றின் அதிபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்


மாணவியொருவரை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் பதுளை மாவட்டம் பண்டாரவளைப் பிரதேச பாடசாலையொன்றின் அதிபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அந்தப் பாடசாலையில் பத்தாம் தரத்தில் கல்வி பயில்கின்ற மாணவியொருவரே பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலீசார் தெரிவித்துள்ளனர். இந்த மாணவி வைத்திய பரிசோதனைகளுக்காக தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த அதிபரால் இதற்கு முன்னர் 11ம் தரத்தைச் சேர்ந்த மாணவியொருவம் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. மயக்கமருந்தை ஊசிமூலம் இந்த இரண்டு சிறுமியர்களுக்கும் ஏற்றி குறித்த அதிபர் தமது வீட்டில் வைத்து துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியிருப்பதாக பொலீசார் குறிப்பிட்டுள்ளனர். 51வயதான குறித்த அதிபர் பண்டாரவளை நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.அனுராதபுரம் மாவட்டத்தில் விசேட தேர்தல் பாதுகாப்புத் திட்டமொன்று  

அனுராதபுரம் மாவட்டத்தில் விசேட தேர்தல் பாதுகாப்புத் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக மாவட்ட செயலர் எச்.எம்.கே.ஹேரத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலின்போது மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளைவிட இம்முறை கடுமையான பாதுகாப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார். தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பாக அனுராதபுரம் மாவட்ட செயலகத்தில் நேற்று விசேட கூட்டமொன்று நடைபெற்றபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். வாக்கெண்ணும் நிலைய பாதுகாப்பை உறுதி செய்யவென நுழைவாயில்களில் கண்காணிப்பு கமெரா பொருத்துவது குறித்து நேற்றைய கூட்டத்தின்போது ஆராயப்பட்டுள்ளது.

 

புளொட் அமைப்பும், ஈ.பி.ஆர்.எல்.எவ் (பத்மநாபா)அணியும் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் இணைந்து போட்டியிடத் தீர்மானித்திருக்கின்றன.


புளொட் அமைப்பும், ஈ.பி.ஆர்.எல்.எவ் (பத்மநாபா)அணியும் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் இணைந்து போட்டியிடத் தீர்மானித்திருக்கின்றன. யாழ்ப்பாணத்தில் ஈ.பி.ஆர்.எல்.எவ் (பத்மநாபா) அணியின் சின்னமாகிய மெழுகுவர்த்தியிலும், வவுனியாவில் புளொட் அமைப்பின் சின்னமான நங்கூரத்த்திலும் போட்டியிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வன்னியில் புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தலைமையிலும், யாழ்ப்பாணத்தில் ஈ.பி.ஆர்.எல்.எவ்(பத்மநாபா) கட்சியின் பொதுச்செயலாளர் தியாகராஜா சிறீதரன் தலைமையிலும் வேட்புமனுக்கள் நாளையதினம் தாக்கல் செய்யப்படவுள்ளன. அம்பாறை, திருமலை ஆகிய இரு மாவட்டங்களிலுள்ள தமிழ் மக்களின் வாக்குகளை பிரிப்பதனால் தமிழ்ப் பிரதிநிதித்துவமொன்று இல்லாமற் போகின்ற ஒருநிலையை உருவாக்கக் கூடாதென்பதில் மிகவும் அவதானமாகவே நடந்துகொள்ள வேண்டுமென்று கருதி அம்மாவட்டங்களில் போட்டியிடுவதைத் தவிர்த்துக்கொள்ள தீர்மானித்ததாக புளொட் தெரிவித்துள்ளது. இதேவேளையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுவது தொடர்பில் ஆலோசனை நடத்தி வருவதாகவும் புளொட் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.


இலங்கைக்கு செல்வதற்கு தமது நாட்டுப் பிரஜைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த பயண எச்சரிக்கையை சவூதி அரேபியா நீக்கியுள்ளது.

 

இலங்கைக்கு செல்வதற்கு தமது நாட்டுப் பிரஜைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த பயண எச்சரிக்கையை சவூதி அரேபியா நீக்கியுள்ளது. கடந்த 2008ம் ஆண்டு பெப்ரவரி மாதம்முதல் குறித்த பயண எச்சரிக்கையை சவூதிஅரேபிய அரசு விடுத்திருந்தது. இலங்கையின் பாதுகாப்பு சூழ்நிலையைக் கருத்திற் கொண்டே சவூதி அரசு இந்த பயண எச்சரிக்கையை விடுத்திருந்தது. ரியாத்துக்கான இலங்கைத் தூதரகம் நிலைமைகளை விளக்கியதன் விளைவாக தற்போது இந்த பயண எச்சரிக்கையை சவூதி அரசாங்கம் தளர்த்தியுள்ளது. பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அதிக எண்ணிக்கையிலான சவூதிஅரேபிய சுற்றுப்பயணிகளை எதிர்வரும் காலங்களில் எதிர்பார்க்கலாமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கொழும்பு வெலிக்கடை கல்பொத்தவீத நாவல பகுதியில் இன்றுகாலை இடம்பெற்ற இரட்டைக்கொலை


கொழும்பு வெலிக்கடை கல்பொத்தவீத நாவல பகுதியில் இன்றுகாலை இடம்பெற்ற இரட்டைக்கொலை சம்பவத்தின் சந்தேகநபரான உக்ரைன் பிரஜையும் அவரது மனைவியும் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து தப்பிச்செல்ல முயன்ற வேளையில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட சந்தேகநபரையும் அவரது மனைவியையும் வெலிக்கடை பொலீஸ் நிலையத்திற்கு அழைத்துவந்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலீஸ் ஊடகப்பேச்சாளர் பொலீஸ் அத்தியட்சகர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார். இன்று அதிகாலை 6.30க்கும் 7மணிக்குமிடையில் குறித்த பிரதேச வீடொன்றில் பணிப்பெண்ணாக இருந்த தாயும் 07 வயது மகனுமென இருவர் கூரிய ஆயுதமொன்றினால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவத்தில் மற்றொருவரும் காயமடைந்துள்ளார். சம்பவத்தில் காயமடைந்த விக்டோரியா கின் எனும் பெண் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். சம்பவம் தொடர்பாக வெலிக்கடைப் பொலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 
தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பது குறித்து இலங்கை அரசாங்கம் உடனடியாக கவனம் செலுத்த வேண்டுமென அமெரிக்கா


 
தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பது குறித்து இலங்கை அரசாங்கம் உடனடியாக கவனம் செலுத்த வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. ஊடகமொன்றுக்கு வழங்கிய பேட்டியில் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் பிரதிச் செயலாளர் றொபேர்ட் ஓபிளெக் இதனை வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக வடபகுதியில் வாழும் தமிழ் மக்களுக்கான அதிகாரப்பகிர்வு, தேசிய மீளிணக்கம் ஆகியவற்றை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதேவேளை இராணுவப் பொலீசாரினால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத்பொன்சேகாவை இலங்கை அரசாங்கம் கையாளும் விதம் குறித்தும் அமெரிக்கா அதிருப்தி கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஜெனரல் சரத்பொன்சேகாவின் கைது விடயத்தில் சட்ட ஒழுங்குகளைப் பின்பற்ற வேண்டுமெனவும் றொபேர்ட் ஓபிளக் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...
தமிழ் மக்களுக்கான போதிய சுயாட்சியே த.தே.கூவின் கொள்கை'இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்கள் தமது தாயக பிரதேசங்களில் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் போதிய சுயாட்சி பெற்று வாழ வேண்டும் என்பதே தொடர்ந்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கொள்கையாக இருக்கும் என்று அதன் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

ததேகூ தனது கொள்கைகளை கைவிட்டு விட்டது என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் குற்றஞ்சாட்டியமைக்கு பதிலளிக்கும் வகையிலேயே சம்பந்தர் இதனை தெரிவித்தார்.

அத்துடன் தாம் இந்தியாவுடன் மிகவும் நட்பு ரீதியாக செயற்பட விரும்புகின்ற போதிலும், இந்தியாவின் நிகழ்ச்சி நிரல்களுக்கு அமைவாக தாம் செயற்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களையும் அவர் மறுத்துள்ளார்.

சரத் பொன்சேகாவுக்கு விடுதலை மறுப்பு


சரத் பொன்சேகா

இராணுவத்தினால்
தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இலங்கையின் முன்னாள் தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்வதற்கான உத்தரவை வழங்க இலங்கை உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.

அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று சரத் பொன்சேகாவின் மனைவி சமர்ப்பித்த மனுவை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த சரத் பொன்சேகாவை, தொடர்ர்ந்து தடுத்து வைத்திருக்கின்ற இலங்கை அரசாங்கம், அவரை இராணுவ நீதிமன்றத்தின் முன்பாக நிறுத்த விளைகிறது.

ஆனால், தான் தற்போது இராணுவத்தில் இல்லாத சாதாரண பொதுமகன் என்பதால் தன்னை இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்தக் கூடாது என்று சரத் பொன்சேகா எதிர்த்து வருகிறார்.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் வடக்கிலும் வேட்பு மனுத் தாக்கல்தனது சகாக்களுடன் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான்
இலங்கையின் வடக்கே வன்னி மற்றும் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டங்களில் போட்டியிடுவதற்காக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சார்பில் இன்று வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன.

அந்தக் கட்சியின் செயலாளர் எட்வின் சில்வா கைலேஸ்வரராஜா தலைமையிலான 9 வேட்பாளர்கள் வன்னியிலும், அக்கட்சியின் முக்கியஸ்தராகிய கந்தையா அருமைலிங்கம் தலைமையிலான 12 வேட்பாளர்கள் யாழ்ப்பாணத்திலும் போட்டியிடுகின்றார்கள்.

வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக இன்று வவுனியாவுக்கு வருகை தந்திருந்த தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமாகிய சிவநேசதுரை சந்திரகாந்தன் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமது கட்சியை நாட்டின் பல பகுதிகளுக்கும் விரிவுபடுத்தும் நோக்கத்துடன் இந்தத் தேர்தலைப் பயன்படுத்தும் வகையிலேயே வடக்கு கிழக்கு மற்றும் பொலன்நறுவை ஆகிய இடங்களில் தேர்தலில் போட்டியிடப் போவதாகத் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிட்டு வெற்றியீட்டிய தாங்கள், இந்தப் பாராளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட்ட போதிலும் அரசாங்கத்துடன் இணைந்தே செயற்பட்டு வருவதாகவும், அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில் ஜனசெத்த பெரமுன என்ற தென்னிலங்கை அரசியல் கட்சியும் வன்னித் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்திருக்கின்றது. இன்று வரையில் 3 அரசியல் கட்சிகள் வன்னித் தேர்தல் மாவட்டத்தில் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது,
மேலும் இங்கே தொடர்க...

விண்வெளியில் புதிய சூரியன் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்புவிண்வெளியில் சூரிய குடும்பத்துக்கு அப்பால் பல்வேறு சூரியன்களும் அதன் துணை கிரகங்களும் உள்ளன. அவற்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து வருகின்றனர்.

தற்போது புதிதாக ஒரு சூரியனை கண்டு பிடித்துள்ளனர். இதற்கு பிடி+20 1790 பி என பெயரிட்டுள்ளனர். இது ஜுபிடர் கிரகத்தை விட 6 மடங்கு பெரியது.

இது சூரியனின் சுற்றுப்பாதையில் உள்ள மெர்குரி கிரகத்துக்கு மிக அருகில் உள்ளது. இது பூமியில் இருந்து 83 ஒளி ஆண்டுகள் (லைட் இயர்) தூரத்தில் உள்ளது. ஆனால் அளவில் சூரியனை விட சிறியது.

இந்த புதிய சூரியன் 3 1/2 கோடி ஆண்டு பழமையானது என்று கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு முன்பு புதிதாக கண்டுபிடித்த கிரகம் 10 கோடி ஆண்டு பழமை வாய்ந்தது என விஞ்ஞானிகள் தெரிவித்து இருந்தனர்.

இந்த புதிய சூரிய கிரகம் குறித்து மரிய குருஷ் கால்லெஷ் மற்றும் ஜான்பர்னஸ் தலைமையிலான சர்வதேச விண்வெளி விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.


சரத்
பொனேசாகா கைது:வழங்கு விசாரணை 26 ஆம் திகதி ஒத்திவைப்பு

ஜெனரல் சரத் பொன்சேகா கைது விவகாரம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை மனித உரிமை மீறல் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

வழக்கினை விசாரித்த நீதவான் ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்வதற்கு மறுத்துள்ள அதேவேளை அவரது நெருங்கிய உறவினர்கள் மற்றும் சட்டத்தரணிகளை சென்று பார்க்க அனுமதி வழங்கியுள்ளார்.

அனோமா பொன்சேகாவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை மனித உரிமை மீறல் தொடர்பான இவ்வழங்க்கு தொடர்பான விசாரணைகள் இம்மாதம் 26 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் ஜெனரல் சரத் பொன்சேகாவின் பாரியார் அனோமா பொன்சேகா, ஐக்கிய தேசிய கட்சியின் உபதலைவர் கரு ஜயசூரிய,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன , மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி ஆகியோர் வருகை தந்திருந்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

பிரபாகரனின் மரணத்தை உறுதிப்படுத்த மேலும் ஆவணங்கள் தேவை:இந்தியா


தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உயிரிழப்பை உறுதிப்படுத்த மேலதிக ஆவணங்கள் தேவை என இந்தியா, இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ஹிந்துஸ்தான் ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்குத் தொடர்பான விசாரணைகளுக்காக இந்த ஆவணங்கள் தேவைப்படுவதாக மத்திய புலனாய்வுப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.

மரபணு பரிசோதனையின் மூலம் பிரபாகரனின் உயிரிழப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள ஆவணத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும், பிரபாகரனின் உயிரிழப்பு தொடர்பிலான இலங்கையின் ஆவணங்கள் இந்திய நீதிமன்றங்களில் சமர்ப்பிக்கப் போதுமானதாக அமையவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, பிரபாகரனின் மரணத்தை உறுதிப்படுத்திய ஆவணத்தினை இலங்கை வழங்கியுள்ளதாக சி.பி.ஐ. தமக்குத் தெரிவித்ததாக இந்திய உட்துறை அமைச்சர் இம்மாதம் தெரிவித்திருந்தார்.

எனினும் அவ் ஆவணங்கள் பிரபாகரனின் மரணத்தை உறுதிப்படுத்துவதற்கு போதுமானதாக இல்லாமையால் சி.பி.ஐ. இன் பல்தரப்பு ஒழுக்காற்று கண்காணிப்பு முகவர் மேலும் சில ஆவணங்களை அனுப்பி வைக்குமாறு இம்மாதம் இரண்டாவது வாரத்தில் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளதாக அச்செய்தியில் மேலும்பொதுத்தேர்தல் குறித்து வடமாகாண மஜ்லிஸுல் சூறா அமைப்பு ஆராய்வுஎதிர்வரும் பொதுத்தேர்தலில் எடுக்கப்பட வேண்டிய முடிவுகள் குறித்து ஆராயும் கூட்டமொன்று புத்தளத்தில் இடம்பெற்றுள்ளது.வடமாகாண மஜ்லிஸுல் சூறா அமைப்பின் தலைவர் மௌலவி எஸ்.எச்.எம்.ஏ.முபாறக் (றசாதி) தலைமையில் இக்கூட்டம் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக வட மாகாணத்திலிருந்து இருந்து 1990 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த முஸ்லிம்களது மீள்குடியேற்றம், இழந்த சொத்துக்களுக்கான நஷ்டஈடு, தொழில் வாய்ப்பு, மதவழிபாட்டுத் தலங்கள் புனரமைப்பு போன்ற அம்சங்களை நிறைவேற்றுவதில் முன்னுரிமையளிக்கும் அணியுடன்,தமது அமைப்பு எதிர்வரும் வாரங்களில் பேச்சுக்களை நடத்தவுள்ளது. மேற்படி கலந்துரையாடலின் போது இம்முடிவு எட்டப்பட்டதாக மஜ்லிஸுல் சூறா அமைப்பின் தேசிய அமைப்பாளர் மௌலவி அஜ்மல்.ஏ.காதர் தெரிவித்தார். "முஸ்லிம் விரோத சக்திகளின் கூட்டின் மூலம் சமூகத்துக்கு எந்தவித பலனும் கிட்டியதாக வரலாறுகள் இல்லை. எமது அமைப்பால் முன் வைக்கப்படும் கோரிக்கைகளுக்குக் கிடைக்கும் பதிலின் மூலம்,நாம் சார்ந்து நிற்கும் சமூகத்துக்குக் கிடைக்கும் நன்மையின் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படும்" என்றும் தேசிய அமைப்பாளர் மௌலவி அஜ்மல்.ஏ.காதர் மேலும் கூறினார்.
கூட்டமைப்பு முன்னாள் எம்.பி கனகரத்தினம் ஐ.ம.சு.முவில் தேர்தலில் போட்டிஎதிர்வரும் பொதுத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பட்டியலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் முல்லைத்தீவு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கனகரத்தினம் போட்டியிடவுள்ளார்.

இம்முறை பொதுத் தேர்தலில் வன்னி மாவட்ட வேட்பாளர் பட்டியலில் பல புதிய உறுப்பினர்களும் உள்ளீர்க்கப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை 4 சுயேட்சைக் குழுக்கள் தமது கட்டுப்பணங்களைச் செலுத்தியுமுள்ளன

ஆப்கானிஸ்தானில்
ராணுவ விமானத்தாக்குதலில் 33 அப்பாவிகள் பலியானார்கள்
ஆப்கானிஸ்தானின் தெற்கு பகுதியில் தலீபான் தீவிரவாதிகள் என நினைத்து சில வாகனங்களில் பயணம் செய்த அப்பாவிகள் மீது விமானத்தாக்குதல் நடத்தப்பட்டதில் 33 பேர் பலியானார்கள்.

3 மினி பஸ்கள் மீது குண்டு வீச்சு

ஆப்கானிஸ்தானின் தெற்கு பகுதியில் தலீபான் தீவிரவாதிகள் வலுவான நிலையில் இருக்கிறார்கள். அவர்களை ஒடுக்குவதற்காக மர்ஜா என்ற பகுதியில் ராணுவம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதற்கிடையில் டாய்கண்டி மாநிலத்தில் குஜ்ரான் மாவட்டத்தில் 3 மினி பஸ்கள் வேகமாக விரைந்தன. இந்த வாகனங்களில் தீவிரவாதிகள் தான் பயணம் செய்கிறார்கள் என நினைத்த அமெரிக்க ராணுவம், அவர்கள் மீது விமான தாக்குதல் நடத்தியது. ராணுவ ஹெலிகாப்டர்கள் அந்த வாகனங்களின் மீது குண்டுகள் வீசப்பட்டன. இதில் அந்த வாகனங்களில் இருந்தவர்கள் பலியானார்கள்.

அப்பாவிகள்

இந்த தாக்குதலில் எத்தனை பேர் பலியானார்கள் என்ற விவரங்களை அமெரிக்க ராணுவம் வெளியிடவில்லை. இந்த தாக்குதல் பற்றி ஆப்கானிஸ்தான் அரசு விசாரணை நடத்தியது. அப்போது இந்த வாகனங்களில் பயணம் செய்தவர்கள் அனைவரும் அப்பாவிகள் என்பது தெரியவந்தது.

இதில் பலியான 33 பேரின் உடல்களை அதிகாரிகள் கைப்பற்றினார்கள். 12 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் காந்தகார் நகருக்கு பயணம் செய்த போது இந்த தாக்குதல் நடந்தது. பலியானவர்களில் 4 பேர் பெண்கள். ஒரு குழந்தையும் பலியானது. இந்த தகவல்களை உள்துறை அமைச்சரக செய்தி தொடர்பாளர் செமிரி பாஷாரி தெரிவித்தார்.

மன்னிப்பு கேட்டார்

மலைப்பாங்கான பிரதேசத்தின் பிரதான சாலையில் இந்த மினி பஸ்கள் சென்றது. இந்த பஸ்களில் மொத்தம் 42பேர் பயணம் செய்தனர். அவர்கள் அனைவரும் அப்பாவி பொதுமக்கள் ஆவார்கள். காயம் அடைந்தவர்கள் அனைவரும் அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர்.

அப்பாவிகள் பலியானதற்கு அமெரிக்க தலைமையிலான ராணுவத்தின் தளபதி ஜெனரல் ஸ்டான்லி மெக்கிரைஸ்டல், ஆப்கானிஸ்தான் அதிபர் கர்வியிடம் மன்னிப்பு கேட்டார். அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில், ஆப்கானிஸ்தான் மக்களை காப்பாற்றுவதற்காக தான் நாம் இங்கே வந்து இருக்கிறோம் என்று நான் படையினருக்கு கூறி இருக்கிறேன். தவறுதலாக அவர்கள் பலியானாலோ அல்லது காயம் அடைந்தாலோ அது நம் மீது உள்ள நம்பிக்கையை தகர்த்து விடும் எனறு கூறி இருக்கிறேன். இருந்தும் இப்போது தவறு நடந்து விட்டது. இதற்காக நான் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன் என்று அந்த அறிக்கையில் ஸ்டான்லி கூறி இருக்கிறார்.
ஜெனரல் சரத் கைது : அடிப்படை மனித உரிமைமீறல் மனு விசாரணை இன்று

ஜெனரல் சரத் பொன்சேகா கைது விவகாரம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை மனித உரிமை மீறல் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெற்ற முன்னாள் அதிகாரி ஒருவரை இராணுவச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளமை, அவரது அடிப்படை உரிமையை மீறும் வகையில் அமைந்துள்ளதென மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பதில் பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்க, நீதவான்களான பாலபட்டபெந்தி மற்றும் கே.ஸ்ரீபவன் ஆகியோரின் முன்னிலையில் மனு மீதான விசாரணைகள் நடத்தப்படவுள்ளது.

இந்த வழக்கு விசாரணைகளைக் கண்காணிப்பதற்கு மனித உரிமை கண்காணிப்பாளர்களும் இன்று உச்ச நீதிமன்றுக்குப் பிரசன்னமாகவுள்ளனர்.

ஜெனரல் சரத் பொன்சேகாவை பிணை அடிப்படையில் விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய, பாதுகாப்புச் செயலாளர், சட்ட மா அதிபர் உள்ளிட்ட சிலர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானில்
மேலும் ஒரு தலீபான் தளபதி பிடிபட்டார்


பாகிஸ்தான் நாட்டில் கராச்சி நகரில் பதுங்கி இருந்த தலீபான் இயக்கத்தின் நம்பர் 2 தலைவரான முல்லா ஒமர் பராதர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். பாகிஸ்தான் உளவு துறையான ஐ.எஸ்.ஐ.யுடன் சேர்ந்து அமெரிக்க சி.ஐ.ஏ உளவுதுறை கூட்டாக நடத்திய சோதனையில் அவர் பிடிபட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் தலீபான் இயக்கத்தின் மேலும் ஒரு தளபதி பதுங்கி இருந்த இடம் பற்றிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து அவர் பிடிபட்டார். அவர் பெயர் மவுல்வி கபீர் என்பது ஆகும்.

இவர் தலீபான் ஆட்சிக்காலத்தில் நங்காகர் மாநிலத்தின் கவர்னராக இருந்தவர். இவர் அமெரிக்காவால் தேடப்பட்டு வரும் 10 தலீபான் தலைவர்களில் ஒருவர் ஆவார்.

இவர் வடமேற்கு எல்லைப்புற மாநிலத்தில் உள்ள நவ்ஷெரா மாவட்டத்தில் பதுங்கி இருந்தபோது கைது செய்யப்பட்டார்.

இவர் தவிர மேலும் 2 தலீபான் தலைவர்களும் கைதானார்கள். முல்லா சலாம், முல்லா முகமது ஆகிய 2 பேரையும் பாகிஸ்தான் ராணுவம் கைது செய்தது. இவர்களில் சலாம் ஆப்கானிஸ்தானில் உள்ள குண்டூஸ் மாநிலத்தை சேர்ந்தவர். முகமது பக்லான் மாநிலத்தை சேர்ந்தவர். இவர்களும் முக்கியமான தலீபான் தீவிரவாதிகளாக கருதப்படுகிறார்கள்.

பொது தேர்தலில் 22 பொதுக் கூட்டங்களில் ஜனாதிபதி பங்கேற்பார்எதிர்வரும் ஏப்ரல் மாதம் 08 ஆம் திகதி நடைபெற உள்ள பொது தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 22 பொதுக் கூட்டங்களில் பங்கேற்க உள்ளார்.

ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்கும் முகமாக ஜனாதிபதி இக் கூட்டங்களில் பங்கேற்க உள்ளார்தமிழ் மக்களை இந்தியா பழிவாங்க .தே.கூ. துணைபோனது : சிவாஜி-ஸ்ரீகாந்தா

தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா ஆகியோருக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் வலுத்துவருகின்றன.

இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுகளை சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா ஆகியோர் முன்வைத்தனர்.

தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்ற பெயரில் திங்கட்கிழமை கொழும்பு நிப்பொன் ஹோட்டலில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று நடைபெற்றது.

தமிழ் மக்களைக் கொலை செய்ய துணைபோன இந்தியாவுக்கு உடந்தையாகவும் சோனியா காங்கிரஸ் அரசாங்கத்தின் விருப்பத்திற்கேற்பவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இயங்கியதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஊடகவியலாளர் மாநாட்டின்போது குற்றம் சாட்டினார்.

இது தொடர்பாக எந்தவொரு பகிரங்க விவாதத்திற்கும் தான் தயாராக இருப்பதாக அவர் அறிவித்தார்.

புஇந்த யுத்தத்தை ஆரம்பித்தது இந்தியா தான் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவே சொல்லியிருந்தார்.

உங்களுக்குத் தெரியும், மாவில் ஆறு பிரச்சினையிலிருந்துதான் இது தொடங்கியது.

அந்த நேரத்தில் அதாவது 2006ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தூதுக்குழு இந்தியாவுக்குச் சென்றது. எனினும் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்க முடியவில்லை. அதே ஆண்டு டிசம்பர் மாதம் கூட்டமைப்பின் தூதுக்கழு இந்தியப் பிரதமரை சந்தித்தது.

அதன் பின்னர் கிட்டத்தட்ட 28 மாதங்களாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தூதுக்குழு இந்தியாவுக்கு காலடி எடுத்து வைக்கவில்லை. 2007 ஆம் ஆண்டு கிட்டத்தட்ட 15 இற்கும் அதிகமான வெளி நாடுகளுக்குச் சென்று யுத்தத்தை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்த மூவரும் (இரா.சம்பந்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், மாவை சேனாதிராஜா) இந்தியாவுக்கு செல்லாததன் காரணம் என்ன?

அவர்களின் குடும்பத்தினர் இந்தியாவில் தான் வசிக்கிறார்கள். இந்தியாவுக்கு சென்றபோதும் மறந்தும் புதுடில்லிக்கு செல்லாததற்கான காரணம் என்ன?

எங்களால் இந்தியாவுக்கு சென்று அங்குள்ள முக்கிய பிரதிநிதிகளைச் சந்திக்க முடியுமாக இருந்தால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஏன் அந்த முயற்சியை எடுக்கவில்லை?

இதிலிருந்து இந்திய அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே இவர்கள் செயற்படுகிறார்கள் என்பது புலனாகிறது.

அதுவரை இந்திய அரசாங்கத்திடம் எதுவும் கோராதவர்கள் 2009 ஆண்டு ஏப்ரல் மாதம் சந்திப்புக்கான கோரிக்கை விடுத்தார்கள். அதற்காக எமது உறுப்பினாகள் 14 பேர் கூடினார்கள். இவர்களில் 13 பேர் அங்கு போகக் கூடாது என எதிர்த்தார்கள்.

இரா.சம்பந்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் புதுடில்லிக்குச் சென்றனர்.

நான் லண்டனிலிருந்து அவசரமாக வந்து, இந்தியா துரோகமிழைக்கிறது, செல்ல வேண்டாம் எனச் சொன்னேன்.

இந்த வேண்டுகோள் எனக்கூடாக விடுதலைப் புலிகளால் இவர்களுக்கு விடுக்கப்பட்டது.

புலிகளால் நேரடியாகவும் கூட அவர்களுக்குச் செய்தி அனுப்பப்பட்டது.

ஆனால் அதனையும் மீறிச் சென்றார்கள் என்றால் அதற்கான காரணத்தை நீங்களே தீர்மானித்துக் கொள்ளங்கள்.

இந்திய பொதுத் தேர்தலிலே தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை வெற்றிபெறச் செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட ஏமாற்று முயற்சிகளிலே தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பகடைக்காயாகப் பாவிக்கப்பட்டது.

இவர்களும் அதில் விரும்பி கலந்து கொண்டார்கள் என்பதுதான் எங்களுடைய பகிரங்க குற்றச்சாட்டு. இதைப்பற்றி வேண்டிய நேரத்தில் வாதாடவும் தயாராகவுள்ளோம்" என்றார் சிவாஜிலிங்கம்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீகாந்தா உரையாற்றுகையில்,

"சோனியா அரசுக்கு விசுவாசமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றக் குழு இருக்க வேண்டும் என இந்தியா விரும்புகிறது.

கிளர்ச்சியாளர்கள், தட்டிக்கேட்பவர்கள், இந்தியாவின் துரோகத்தைப் பற்றி கடந்த காலத்தில் பேசியவாகள் இருக்கக் கூடாது என்பதில் சோனியா காங்கிரஸ் அரசாங்கம் தீர்மானமாக இருக்கிறது" என்றார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போது புதிய இடதுசாரி முன்னணித் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன பார்வையாளராக வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...
கூட்டணி
குறித்து பொன்சேகா நிலை என்ன?


கொழும்பு:இலங்கை பார்லிமென்ட் தேர்தலில் எதிர்க்கட்சிகள் என்ன நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என்பதை சரத் பொன்சேகா தெரிவிக்க வேண்டும்' என, முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.


கடந்த ஜனவரி மாதம் நடந்த இலங்கை அதிபர் தேர்தலில், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையில் ஜே.வி.பி., தமிழ் தேசிய கூட்டணி, இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஒரே அணியில் போட்டியிட்டன. இக்கூட்டணி சார்பில் முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா போட்டியிட்டார். இந்த தேர்தலில் பொன்சேகா தோல்வி அடைந்தார்.


தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், பார்லிமென்ட் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த தேர்தலில், எதிர்க்கட்சி கூட்டணி இடையே பிளவு ஏற்பட்டுள்ளது. ஜே.வி.பி.,யும், இலங்கை முஸ்லிம் காங்கிரசும் தனித்தனியாக போட்டியிட முடிவு செய்துள்ளன. இருந்தாலும், அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே அணியில் போட்டியிடுவதற்கான சூழ்நிலையை உருவாக்க, ஐக்கிய தேசிய கட்சி முயற்சி மேற்கொண்டுள்ளது.


இதுகுறித்து அக்கட்சியின் பொதுச் செயலர் திசா அத்தநாயகா கூறியதாவது:பார்லிமென்ட் தேர்தலிலும் எதிர்க்கட்சிகள் ஒரே அணியில் போட்டியிடலாமா என்பது குறித்து சரத் பொன்சேகாவிடம், அவர் கைது செய்யப்படுவதற்கு முன் பேசினோம். இது தொடர்பாக ஆலோசிக்க வேண்டியிருப்பதாகவும், அதற்கு சிறிது கால அவகாசம் தேவை என்றும் பொன்சேகா கூறினார். அவர் கைது செய்யப்பட்டதற்கு பின், அவரது வக்கீல் மூலமாக, இந்த தகவலை மீண்டும் அவரிடம் தெரிவித்தோம்.


இதுவரை அவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.எனவே, பார்லிமென்ட் தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒரே கூட்டணியில் போட்டியிடுவது குறித்து, பொன்சேகா விரைவில் தனது முடிவை தெரிவிக்க வேண்டும். தேர்தலில் போட்டியிட அவருக்கு விருப்பம் உள்ளதா என்பதையும் அவர் கூற வேண்டும்.இவ்வாறு திசா அத்தநாயகா கூறினார்.


இதற்கிடையே, இலங்கை எதிர்க்கட்சி எம்.பி.,யும்., மனித உரிமை ஆர்வலருமான ஜெயலத் ஜெயவர்த்தனே, ஐ.நா., மனித உரிமை பிரிவின் உயரதிகாரி நவநீதம் பிள்ளைக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், தனக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பை இலங்கை அரசு வாபஸ் பெற்றுள்ளதாகவும், அந்த பாதுகாப்பை தொடர்ந்து அளிக்க, அரசை வலியுறுத்தும்படியும் கேட்டுக் கொண்டுள்ளார்.

சிறிய அமைச்சரவை ராஜபக்ஷே முடிவுகொழும்பு:"விரைவில் நடக்கவுள்ள பார்லிமென்ட் தேர்தலில் எங்கள் கட்சி வெற்றி பெற்றால், மிகச் சிறிய எண்ணிக்கையிலான அமைச்சர்கள் மட்டுமே பதவியேற்பர்' என, இலங்கை அதிபர் ராஜபக்ஷே கூறியுள்ளார்.இலங்கை அதிபர் ராஜபக்ஷே கூறியுள்ளதாவது: வரும் ஏப்ரல் 8ல் பார்லிமென்ட் தேர்தல் நடக்கவுள்ளது. இதில், எங்கள் கட்சி மீண்டும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.


அவ்வாறு வெற்றி பெற்றால், தற்போது உள்ளது போல் பெரிய அளவிலான அமைச்சரவை அமையாது. மிகச் சிறிய எண்ணிக்கையிலான அமைச்சர்கள் மட்டுமே பதவியேற்பர்.அனைத்து தரப்பு மக்களையும் ஒருங்கிணைக்கும் நடவடிக்கையில், எனது தலைமையிலான அரசு தொடர்ந்து செயலாற்றும்.இவ்வாறு ராஜபக்ஷே கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...