31 டிசம்பர், 2010

புது வருட வாழ்த்துக்கள்

அனைத்து உள்ளங்களுக்கும் புதிய பாதையின் புது வருட வாழ்த்துக்கள் அனைவரும் கல்வி
செல்வம் வீரம் அனைத்தும் பெற்று சீரும் சிறப்புமாக வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டி எமது இனிய புது வருட வாழ்த்துக்கள்
மேலும் இங்கே தொடர்க...

ஏர்போர்ட் கழிவறையில் குழந்தை பெற்ற பெண் தொட்டியில் வீசி கொன்றுவிட்டதாக குற்றச்சாட்டு


துபாய் விமான நிலைய கழிவறையில் குழந்தை பெற்று, குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு தப்பிச் சென்ற பெண்ணை, அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர். துபாய் விமான நிலையத்தில் உள்ள கழிவறையை சுத்தம் செய்ய ஊழியர் ஒருவர் உள்ளே சென்றார். அங்கு இருந்த குப்பைத் தொட்டி அருகே ரத்தம் சிதறிக்கிடந்தது. குப்பைத் தொட்டி மீது, நிறைய காகிதங்கள் போடப்பட்டு மூடப்பட்டிருந்தது. சந்தேகமடைந்த ஊழியர் அந்த காகிதங்களை அகற்றி பார்த்தபோது, அதில், அப்போது தான் பிறந்த குழந்தை தொப்புள்கொடி சுற்றப்பட்ட நிலையில் கிடந்தது. அக்குழந்தையின் முகம் நீலம் பாரித்து, மூச்சு விடவே திணறிக்கொண்டிருந்தது. அந்த ஊழியர் உடனடியாக விமான நிலைய அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த அதிகாரிகள் குழந்தையை மீட்டு, விசாரணை மேற்கொண்டனர். அப்போது, விமான நிலைய கண்காணிப்பு கேமரா மூலம், அக்குழந்தையின் தாய் பற்றிய தகவல் கிடைத்தது. எத்தியோப்பியாவைச் சேர்ந்த அந்த பெண், விமானத்தில் புறப்பட்டு சென்றுவிட்டார். உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அந்த பெண் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடந்த விசாரணையில், திருமணம் ஆகாமலேயே தவறான உறவு மூலம், கர்ப்பமானதும், துபாய்க்கு வந்தபோது, எதிர்பாராத விதமாக கழிவறையில் அவருக்கு பிரசவம் நடந்ததும் தெரியவந்தது. பின்னர், அந்த குழந்தையை அவர் கழுத்தை திருகி, கொல்ல முயன்று பின்னர், அதனை குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு தப்ப முயன்றதும் தெரியவந்தது. இதுகுறித்து, போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஐக்கிய அரபு நாடுகளின் சட்டப்படி, தவறான உறவு மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது கிரிமினல் குற்றமாகும். எனவே, அந்த பெண்ணுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

ஒழுக்காற்று விசாரணை செலவினத்தை சம்பளத்திலிருந்து அறவிடத் திட்டம்


அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக நடத்தப்படும் ஒழுங்காற்று விசாரணைகளுக்கு ஏற்படும் செலவீனங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் சம்பளத்திலிருந்து அறவிடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக நடத்தப்படும் ஒழுக்காற்று நடவடிக்கைகளின் போது அதற்கு ஏற்படும் செலவீனங்களை இதுவரை அரசாங்கமே ஏற்றுக்கொண்டு வருகிறது.

இனிவரும் காலங்களில் அரசாங்க அதிகாரி ஒருவருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகள் நடைபெற்று அதில் அவர் குற்றவாளியாக அடையாளம் காணப்படும் பட்சத்தில் அவரின் சம்பளத்திலிருந்து 25 வீதத்தை அல்லது 30,000 ரூபாவை அறிவிடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருப்பதாக ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

நிர்வாகக் கட்டமைப்புக்கள் தொடர்பாக ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட உபகுழுவின் பரிந்துரைக்கு அமையவே இத்திட்டம் அமுல்படுத் தப்படவுள்ளது. 30 ஆயிரம் ரூபா அல்லது 25 வீதத்தில் எது குறைவானதோ அத்தொகை 24ற்கு மேற்படாத தவணைகளில் அறவிடப்படவுள்ளது. அது மாத்திரமன்றி இழைத்த குற்றத்துக்கான தண்டனையும் வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இதேவேளை, 2011ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் குறிப்பிடப் பட்டிருப்பதற்கு அமைய அனைத்து அரசாங்க ஊழியர்களுக்கும் எதிர்வரும் ஜுலை மாதத்திலிருந்து 600 ரூபா மாதாந்தம் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு வழங்கப்படவிருக்கின்றது.

இதேவேளை ஓய்வூதியம் பெறுபவர்களு க்கு மாதாந்தம் 300 ரூபா வாழ்வாதாரக் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

10 விமானங்களுடன் ஆரம்பித்து 60 வது ஆண்டை பூர்த்தி செய்யும் இலங்கை விமானப்படையிடம் 110 விமானங்கள்


பத்து விமானங்களுடன் தனது சேவையை ஆரம்பித்த இலங்கை விமானப்படை 60 வது ஆண்டை பூர்த்தி செய்யும் நிலையில் 110 விமானங்கள், ஹெலிகொப்டர்களுடன் வீரநடை போடுவதாக பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரியும், விமானப்படைத் தளபதியுமான எயார் சீப் மார்ஷல் ரொஷான் குணதிலக்க தெரிவித்தார்.

ஆரம்பத்தில் மொத்தமாகவே 1200 இராணுவ வீரர்கள் இருந்ததாக தெரிவித்த அவர் தற்பொழுது அதிகாரிகள் மாத்திரம் 1400 பேர் உள்ளதாக மேலும் தெரித்தார்.

இலங்கை விமானப் படையின் 60 வது ஆண்டு பூர்த்தி விழா எதிர்வரும் மார்ச் மாதம் 2 ஆம் திகதி கொண்டாடப்பட வுள்ளது. இது தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு கொழும்பிலுள்ள விமானப் படை தலைமையகத்தில் நேற்று இடம் பெற்றது.

மானப் படைத் தளபதி இங்கு மேலும் உரையாற்றுகையில்,

விமானப்படை கடந்த 60 ஆண்டு காலம் தாய்நாட்டிற்காகவும், மக்களுக்காகவும் பாரிய சேவைகளை வழங்கியுள்ளது. எந்த ஒரு நிலைமைக்கும் முகம் கொடுக்கும் வகையில் எல்லா நிலைமைகளிலும் தயாராகவே விமானப்படை செயற்பட்டு வந்தது.

பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையின் போதும், இயற்கை அனர்த்தங்களின் போதும் விமானப்படை கடந்த காலங்களில் பாரிய ஒத்துழைப்பையும், சேவைகளையும் வழங்கியுள்ளது. எமது இந்த செயற்பாடுகள் வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு ஊடகங்களின் பங்களிப்பும் மிக முக்கிய மானது. இதற் காக சகல ஊடகங்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.

இந்தியா உட்பட வெளிநாடுகளின் விமானப் படைகளும் 60 வது ஆண்டு நிறைவு விழாவில் பங்கு கொள்ளவுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் இங்கே தொடர்க...

நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியமளிக்க ஐ.நா. நிபுணர் குழுவுக்கு இலங்கைக்குள் அனுமதி

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம ளிப்பதற்கு ஐக்கிய நாடுகள் நிபுணர்கள் குழு இலங்கைக்குள் வர அனுமதிக்கப்படும் என ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல நேற்று தெரிவித்தார்.

அரசாகத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற் கண்டவாறு கூறினார்.

அணிசேராக் கொள்கையென்ற இலங்கை அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கொள்கையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. வெளிநாட்டுக் கொள்கை தொடர்பில் அரசாங்கம் தெளிவான நிலைப்பாட்டில் உள்ளது. இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட மோதல்கள்

குறித்து விசாரிப்பதற்கே ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாய கம் பான்கீ மூனால் நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. அதற்கு இலங்கை அரசாங்கம் தனது எதிர்ப்பைத் தெரிவித்திருந்தது.

இறைமையுள்ள நாடென்ற வகை யில் இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட மோதல்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு எவருக்கும் அனுமதி வழங்கப்படாது.

இதன் அடிப்படையிலேயே ஐ.நா. நிபுணர்கள் குழு இலங் கைக்கு வந்து விசாரணைகளை நடத்த முடியாது என அரசாங்கம் அறிவித்திருந்தது.

ஆனால் தற்பொழுது நிலைமை மாறியுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் நியமிக் கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிப்பதற்கு ஐ.நா. நிபுணர்கள் குழு தனது விரு ப்பத்தைத் தெரிவித்துள்ளது.

இந்த ஆணைக்குழுவின் முன்னி லையில் யாரும் சாட்சியமளிக்க முடியும் என்பதன் அடிப்படையில் ஐ.நா. நிபுணர்கள் குழுவும் இலங் கைக்கு வந்து ஆணைக்குழு முன் சாட்சி யமளிக்க விரும்பினால் அதற்கு அரசாங்கம் வீசா அனுமதி வழங்கும். உத்தியோகபூர்வமாக அனுமதி கோர ப்பட்டால் அதற்கு நிபுணர்கள் குழு வுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கும்.

ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு முன்னி லையில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் பலர் சாட்சியமளித்து ள்ளனர். அரசாங்கம் ஜனநாயகத் துக்கு வழிவகுத்துள்ளது என்பதை இது எடுத்துக்காட்டுகிறது. இதன் அடிப்படையில் ஐ.நா. நிபுணர்களும் சாட்சியமளிக்க முடியும் என்றும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல குறிப்பிட்டார்.

அதேநேரம், உள்ளூராட்சி சபை கள் சிலவற்றில் முன்வைக்கப்பட்ட வரவு - செலவுத் திட்டங்கள் எதிர்க் கட்சிகளால் தோற்கடிக்கப்பட்டமை குறித்துக் கருத்துத் தெரிவித்த அமை ச்சர், நாட்டில் ஜனநாயகம் கடைப் பிடிக்கப்படுகிறது என்பதை இச் சம்பவம் எடுத்துக் காட்டுவதாகவும் இவ்வாறான சம்பவங்கள் கூறும் செய்தியை கட்சியின் தலைமைப் பீடம் கவனத்தில் எடுக்கும் என்றும் கூறினார்.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் 22 கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. இக்கட்சிக ளின் பிரதிநிதிகள் கூறும் கருத்துக்கள் கட்சிகளுக்கிடையில் தீர்த்துக்கொள் ளப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

வலிகாமம் பிரதி கல்விப்பணிப்பாளர், ஆலயகுரு கொலைகள்: அரசு மீது அபகீர்த்தி ஏற்படுத்த முயற்சி


உரிமைகளுக்கான வலையமைப்பின் அறிக்கையை முற்றாக நிராகரிக்கிறது அரசாங்கம்

தனது கருத்தை வெளிப்படுத்தியமை காரணமாக யாழ். வலிகாமம் கல்விப் பணிப்பாளர் சுட்டுக்கொலை என்ற தலைப்பில் உரிமைகளுக்கான வலைய மைப்பு (னிலீசிசூச்ஙுகூடுடூகி ஜீச்ஙு ஞிடுகிகீசிஙூ) என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை முற் றிலும் தவறானது என்று அரசாங்க தக வல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாய கம் ஆரியரட்ன அத்துகல தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அறிக்கையொ ன்றை விடுத்துள்ளார். அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது யாழ்ப் பாணத்தில் உள்ள வலிகாமம் வலயத்தின் பிரதி கல்விப் பணிப்பாளர் இனந் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டமை தொடர்பாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. எனினும் அந்த அறிக்கையில் விடுக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை.

அறிக்கையின்படி பிரதி கல்விப் பணிப்பாளர் மார்க்கண்டு சிவலிங்கம், கடந்த 26ஆம் திகதி 2004இல் இடம்பெற்ற சுனாமியை நினைவுபடுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்ட தேசிய பாதுகாப்பு தின நிகழ்வில் தேசிய கீதம் சிங்களத்தில் பாடப்பட வேண்டுமென்று கூறிய சுற்று நிருபத்தை பகிரங்கமாக விமர்சித்தமை காரணமாகவே சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற குற்றச்சாட்டு விடுக்கப்பட்டுள்ளது.

அவ்வாறான எந்தவொரு சுற்றுநிருபமும் எந்தவொரு அரசாங்க அதிகார மையத்தினாலும் விடுக்கப்படவில்லை. எனவே அவ்வாறான சுற்று நிருபத்தை உயிரிழந்தவர் விமர்சித்ததாகக் கூறப்படும் சம்பவம் இடம்பெற்றிருக்க முடியாது.

குறிப்பிட்ட அமைப்பின் அறிக்கையின்படி மேற்படி கொலை சம்பவம் கடந்த 28ஆம் திகதி நடைபெற்றதாக தமிழ் இணைய தளமொன்றில் செய்தி வெளியிடப்பட்டுள்ள போதும் இவ்வமைப்பு கூறுவது போல் பிறக்குற்றச்சாட்டுகள் இடம்பெற்றில்லை. இதேவேளை சங்கானை முருகமூர்த்தி கோவிலின் பிரதான குருக்கள் நித்தியானந்த சர்மா கடந்த 15ஆம் திகதி கொல்லப்பட்டதன் பின்னணியில் அரசியல் நோக்கம் இருப்பதாக குறித்த வலையமைப்பு அந்த அறிக்கையில் கூறியுள்ளது. இதுவும் அடிப்படையற்றது. இதனையும் நிராகரிக்க வேண்டியுள்ளது.

கடந்த 26ஆம் திகதி இடம்பெற்ற பிரதி கல்விப் பணிப்பாளர் மார்க்கண்டு சிவலிங்கத்தின் கொலை தொடர்பான பொலிஸ் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

அதேவேளை சங்கானை முருகமூர்த்தி கோயிலின் பிரதான குருக்க ளின் கொலை தொடர்பாக பொலிஸார் சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

மேற்படி இரு கொலை சம்பவங்கள் தொடர்பான பொலிஸ் விசாரணைகளில் தலையீடு செய்யும் ஒரு முயற்சியாகவே இந்த வலையமைப்பின் அறிக்கை தென்படுகிறது. மேற்படி துர்ப்பாக்கிய சம்பவங்களுக்கு தேவயற்ற அரசியல் சாயம் பூசும் வகையிலும் இதன் மூலம் அரசாங்கத்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையிலும் அந்த முயற்சி அமைகிறது.

மேற்படி அமைப்பின் செயற்பாட்டு குழுவில் ஊடகவியலாளர் உள்ளிட்ட பல இலங்கையர்கள் உள்ளனர்.

இவர்கள் தற்போது சுயமான விருப்பத்தின் பேரில் மேற்கத்திய நாடுகளில் தாய்நாட்டை விட்டு வெளியேறியோர் என்று தம்மை கூறிக் கொண்டு வருபவர்களாவர். இலங்கையின் ஊடக மற்றும் மனித உரிமைக்காக வெளியில் இருந்து செயற்படும் வலையமைப்பு என்று இவர்கள் தம்மைக் குறிப்பிடுகின்றனர். மேற்படி அமைப்பு விடுக்கும் தவறான தகவல் மூலம் இலங்கையில் ஊடக மற்றும் மனித உரிமைகளுக்கான காரணங்களை கொச்சைப்படுத்த முடியாது என்றும் அந்த அறிக்கையில் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

அபிவிருத்தி தேவைகளை இனங்கண்டு முன்னுரிமை அளிக்க வேண்டும் ஜனாதிபதி

விரைவில் அபிவிருத்தி அடைய வேண்டிய துறைகள் அல்லது அவ்வாறான இடங்களை சரியாக இனங்கண்டு அந்த செயற்திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து செயற்பட வேண்டியது கட்டாயமானது எனவும், அவற்றிற்குத் தேவையான போதிய நிதி ஏற்பாடுகளை உரிய காலத்திலே பெற்றுக்கொடுப்பதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

மாத்தறை புதிய நகரத்திட்டம் தொடர்பாக நேற்று (30) காலை அலரி மாளிகையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மேற்கண்டவாறு கூறினார்.

மாத்தறை நகரை அண்டிய சகல துறைகளினதும் அபிவிருத்திப் பணிகள் தொடர்பாக இதன்போது நீண்டநேரம் ஆராயப்பட்டது.

இதன் பிரகாரம் மாத்தறை புதிய மருத்துவமனை கட்டடத் தொகுதியின் நிர்மாணம், வீதிகளை விஸ்தரித்தல் மற்றும் புனரமைத்தல், நகர அலங்காரம், கழிவகற்றல் முறைமை என்பன தொடர்பாக இதன்போது ஆராயப்பட்டன. இந்தத் திட்டத்தின்கீழ் மேலும் புதிய கடற்கரை பூங்கா, சிறுவர்பூங்கா என்பன அமைப்பது தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது.

இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள்; புராதன பெறுமதிகள் பாதுகாக்கப்படும் வகையில் அபிவிருத்திச் செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் எமது வரலாற்றுச் சிறப்புமிக்க பெறுமதிகளையும் கலாசாரத்தையும் பாதுகாக்க முடியுமென சுட்டிக்காட்டினார்.

மகா சங்கத்தினர், அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, டலஸ் அலஹப்பெரும, சந்திரசிறி கஜதீர ஆகியோரும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட மேலும் பல அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

அரச நிறுவனங்களின் பெயர் மாற்றம்; ‘சிலோன்’ என்பதற்கு பதிலாக இனிமேல் ‘ஸ்ரீலங்கா’ என்ற பதம்

‘சிலோன்’ எனப் பெயர் கொண்டிருக்கும் அனைத்து அரசாங்கத் திணைக்களத்தின் பெயர்களையும் ‘ஸ்ரீலங்கா’ என மாற்றியமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதுவரை காலமும் ‘சிலோன்’ என அழைக்கப்பட்ட அனைத்து அரசாங்க நிறுவனங்களும் இனிமேல் ‘ஸ்ரீலங்கா’ என மாற்றப்படவிருப்பதுடன், இதற்கு அவசியமான சட்ட நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சுக்கு அறிவுறுத்தல் வழங்கியிருப்பதாக நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கூறினார்.

உதாரணமாக இத்திட்டத்துக்கு அமைய ‘பாங்க் ஒவ் சிலோன்’ ‘பாங்க் ஒவ் ஸ்ரீலங்கா’, ‘சிலோன் எலக்ட்டிசிட்டி போர்ட்’ ‘சிறிலங்கா எலக்ட்டிசிட்டி போர்ட்’ என்றும் மாற்றியமைக்கப்படவுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மேலும் இங்கே தொடர்க...

நகரப் பகுதிகளில் கட்டடங்களை அமைப்பதற்கான வரி நீக்கம்

வெளிநாட்டு முதலீடுகள் இலங்கைக்கு வருவதை ஊக்குவிக்கும் வகையில் கட்டுமானப் பணிக்கென நகர அபிவிருத்தி அதிகார சபையால் அறவிடப்பட்டுவந்த ஒரு வீத வரியை நீக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த மாநாட்டிலேயே ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல இத்தகவலைத் தெரிவித்தார்.

எதிர்வரும் 10 ஆண்டுகளில் இலங்கைக்கு வரும் வெளிநாட்டு முதலீடுகளை 40 வீதத்தால் அதிகரிக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. இதற்கு ஏதுவாக வீடுகள் நீங்கலாக ஏனைய கட்டுமானப் பணிகளுக்கு விதிக்கப்பட்ட ஒரு வீத வரி நீக்கப்படவிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இதன்மூலம் தனியார் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இத்திட்டத் துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கி யிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

கிழக்கில் எங்கும் வெள்ளக் காடு: மூன்று இலட்சம் மக்கள் பாதிப்பு

அடைமழையினால் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிதம்: வீடுகள், வயல்கள், வீதிகள் வெள்ளத்தில்

கிழக்கு மாகாணத்தில் பல தினங்களாக தொடர்ச்சியாகப் பெய்து வரும் பலத்த மழை காரணமாக பெருமளவான பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் சுமார் மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் பார்க்கும் இடங்களெல்லாம் வெள்ளக்காடாகவே காட்சியளிக்கின்றன.

பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் வீடுவாசல்களை இழந்து பொது இடங்களில் தஞ்சமடைந்துள்ளன. மக்கள் குடியிருப்புகள், வீதிகள், வயல் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பல இடங்களில் வீதிப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மழை இனிமேலும் தொடருமானால் வெள்ள நிலைமை மேலும் மோசமடையுமென அஞ்சப்படுகிறது.

நேற்று முன்தினம் பகல் 12 மணி வரை மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 35847 ஆகும். இவர்கள் 81068 குடும்பங்களைச் சேர்ந்தவர்களாவர்.

இந்த பாதிப்புத்தொகை நேற்று மாலை மேலும் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்பட்டது.

இருபதுக்கு மேற்பட்ட நலன்புரி நிலையங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

1704 குடும்பங்களைச் சேர்ந்த 6408 பேர் நலன்புரி நிலையங்களிலும், 10829 குடும்பங்களைச் சேர்ந்த 41702 பேர் நண்பர்கள், உறவினர் கள் வீடுகளிலும் தங்கியுள்ளனர். மட் டக்களப்பு மாவட்டத்தின் அனைத் துக் குளங்களும் நிரம்பி வழிவதால் குளங்களை அண்டிய பிரதேசங்கள் வாவிக்கரையோரங்களை அண்மித்த கிராமங்களும் வெள்ளத்தில் மூழ்கியு ள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமை நாயகம் தெரிவித்தார்.

வெள்ளத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தின் நிலைமை அபாயகர மாகவுள்ளதாகவும் அரசாங்க அதிபர் கூறினார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல கிராமங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அக் கிராமங்க ளுக்கான போக்குவரத்தை நடத்த கடற் படையினரின் உத வியை நாடியுள்ளதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

நலன்புரி நிலையங்களில் தங்கியு ள்ளவர்களுக்கான சமைத்த உணவு வழங்கப்பட்டு வருவதுடன் சகல பிரதேச செயலாளர்கள், கிராம உத்தியோகத்தர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதில் ஈடுபட்டு வருவதாகவும், அரச சார்பற்ற நிறுவ னங்களும், இவர்களுக்கு உதவி வருவதாகவும் அரசாங்க அதிபர் மேலும் கூறினார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிர தான நீர்ப்பாசனக் குளங்களான உன்னிச்சைக் குளத்தின் வான் கதவுகள், நவகிரி, உறுகாமம், வாக னேரி போன்ற குளங்களின் வான் கதவுகளும், நேற்றுக்காலை திறந்து விடப்பட்டதாக பிராந்திய நீர்ப் பாசன பணிப்பாளர் எஸ். மோகன் ராஜ் தெரிவித்தார்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் சென்று பார்வையிட்டார்.

நேற்று முன்தினம் காலை முதல் நேற்று காலை வரை 145.6 மில்லி மீற்றர் மழை மட்டக்களப்பு மாவ ட்டத்தில் பெய்துள்ளதாக மட்டக்க ளப்பு வானிலை அவதான நிலை யம் தெரிவித்தது.

இதேவேளை அம்பாறை மாவட் டத்தில் மழை சற்றுத் தணித்திருந்த போதிலும் நேற்று முன்தினம் முதல் அடைமழை பொழிகிறது. இம் மாவட்டத்திலும் பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

தாழ் நிலப் பிரதேச மக்கள் மேட்டு நிலப் பிரதேசங்களை நோக்கி இடம்பெயர்ந்து வருவ துடன் தமது உறவினர்களில் வீடுக ளில் தஞ்சமடைந்து வருகின்றனர்.

கல்முனை தமிழ் பிரிவு சாய்ந் தமருது, கல்முனை முஸ்லிம் பிரிவு, காரைதீவு, நிந்தவூர், அட்டாளைச் சேனை பிரதேச செயலாளர் பிரிவு கள் அடைமழை காரணமாக வெகு வாக பாதிக்கப்பட்டுள்ளன. பல பாடசாலைகளும் மழை வெள்ளத் தினால் சூழப்பட்டுள்ளன. தொடர்ச் சியாக மழை பெய்யுமானால் திங்கட்கிழமை முதலாம் தவணை நடவடிக்கைகளுக்காக பாடசாலை களை திறக்க முடியாத சூழ்நிலை ஏற்படும் என அதிபர்கள் தெரிவிக் கின்றனர்.

தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக சம்மாந்துறை பிரதேசத்தில் உள்ள சொறிக்கல் முனை கிராமத்தைச் சேர்ந்த மயான வீதியில் உள்ள இரு வீடுகள் இடி ந்து விழுந்துள்ளன. எனினும் உயி ரிழப்புக்கள் எதுவும் ஏற்படவில்லை.

வயல் நிலங்கள் யாவும் வெள்ள க்காடாக காட்சியளிக்கின்றன. குட லைப் பருவத்தில் உள்ள வயல் நிலங்களில் மழை வெள்ளம் தேங்கி நிற்பதனால் பெரும் சேதம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

திருமலையில் போக்குவரத்து துண்டிப்பு

அடைமழை காரணமாக திருகோ ணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேசத்திற்கான கிண்ணியா ஊடான போக்குவரத்தும், திருகோணமலை ஊடான கடற் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டதனால் மக்கள் பிரயாணம் செய்ய முடியாத நிலை யில் உள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய காத்தான்குடி, பாலமுனை, பூநொச்சி முனை, கல்லடி போன்ற பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி யுள்ளன.

பல்லாயிரக்கணக்கான மக்கள் தமது இருப்பிடங்களை விட்டும் வெளியேறி பாடசாலைகளிலும் பள்ளிவாயல்களிலும் உறவினர்களின் வீடுகளிலும் தஞ்சமடைந்துள்ளனர். பாடசாலைகள் வெள்ளத்தில் மூழ் கிக் கிடக்கின்றன.

அம்பாறை மாவட்டத்தில் இன் னும் சில வாரங்களில் அறுவடை க்காக காத்திருந்த பல்லாயிரக்கணக் கான ஏக்கரில் செய்கை பண்ணப் பட்ட வேளாண்மைப் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

அக்கரைப்பற்று, அட்டாளைச் சேனை, நிந்தவூர், காரைதீவு, சாய் ந்தமருது, கல்முனைக்குடி, கல் முனை, மருதமுனை நற்பிட்டி முனை, உகனை போன்ற பிரதேசங் களில் உள்ள பல நூற்றுக்கணக்கான மக்களின் குடியிருப்புகள் வெள்ள நீரினால் சூழப்பட்டுள்ளன.

பிரதான வீதிகள் மற்றும் கிராம ப்புற வீதிகள் பல நீரில் மூழ்கியு ள்ளதால் போக்குவரத்துக்கள் ஸ்தம் பிதம் அடைந்துள்ளன.

தொழிலாளர்கள் வருமானம் இழப்பு

மீனவர்கள் மற்றும் ஏனைய தொழிலாளர்கள் தொழிலுக்குச் செல்லவில்லை. இதனால் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். -கிஞ்ஞி வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு உலருணவு அடங்கிய நிவாரணப் பொதிகளை உடனடி யாக வழங்க மீள்குடியேற்ற அமை ச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

வெள்ளப் பிரதேசங்களுக்குச் சென்ற பிரதியமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன் கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற விசேட கூட்டத்தில் இதனைத் தெரிவித்தார்.

மின்னல் தாக்கி பெண் காயம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மின்னல் தாக்கத்திற்கு ஒரு பெண் பலியாகி உள்ளதுடன் பலர் காயத்துக்குள்ளாகியுள்ளனர்.

திருப்பெருந்துறையைச் சேர்ந்த திருமதி நேசத்துறை வயது 50 என்ற பெண்மணியே பலியாகியுள்ளார்.

மட்டக்களப்பு, காத்தான்குடி, ஆரையம்பதி, சிகரம், நாவற்குடா, கல்லடி, பூநொச்சிமுனை, முகத்து வாரம், செங்கலடி, களுவாஞ்சிகுடி, குருக்கள் மடம், வாழைச்சேனை, ஏறாவூர், சித்தாண்டி ஆகிய பகுதிகள் யாவும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2 இலட்சத்து 50 ஆயிரத்திற்கு மேற் பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு ள்ளதா கவும் சுமார் ஐயாயிரத்திற்கு மேற் பட்டோர் இடம்பெயர்ந்து ள்ளதாகவும் மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.

ஏறாவூர் நகர பிரதேசம் முழுமையாக நீரில் மூழ்கியுள்ளது.

போக்குவரத்துச் சிரமங்கள் எதிர்நோக்கப்படுகின்றன.

வாகரை, கிரான், வாழைச்சேனை, ஓட்டமாவடி, ஏறாவூர்ப் பற்று, ஏறாவூர் நகர் காத்தான்குடி மற்றும் வவுணதீவு போன்ற பிரதேச செயலகப் பிரிவுகளிலும் நூற்றுக்கண க்கான கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

கம்பளை வீதிகளின் அபிவிருத்திக்காக 225 மில்லியன் ரூபா ஒதுக்கீடு


கண்டி மாவட்டத்தின் கம்பளை தொகுதியிலுள்ள வீதிகளை அபிவிருத்தி செய்யவென 225 மில்லியன் ரூபா நிதியொதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிரதமர் டி. எம். ஜயரட்னவும், சுற்றாடல்துறை பிரதியமைச்சர் ஏ. ஆர். எம். அப்துல் காதரும் இணைந்து கம்பளை தொகுதியிலுள்ள வீதிகளின் நிலைமைகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்றனர். இதனையடுத்தே இந்நிதியொதுக்கீடு மேற்கொள் ளப்பட்டுள்ளது.

இந்நிதியொதுக்கீடு தொடர்பாக பிரதியமைச்சர் ஏ.ஆர். எம். அப்துல் காதர் கூறுகையில், கம்பளைத் தொகுதியிலுள்ள கண்டி வீதியையும், அம்பகமுவ வீதியையும் அபிவிருத்தி செய்யவென 150 மில்லியன் ரூபாவும், கம்பளைத் தொகுதியிலுள்ள உள் வீதிகளை அபிவிருத்தி செய்யவென 75 மில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கம்பளைத் தொகுதியிலுள்ள வீதிகள் நீண்ட காலமாக புனரமைப்பு செய் யப்படவில்லை. இதனால் மக்கள் பல அசெளகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகிறார்கள். இது விடயமாக பிரதமர் டி. எம். ஜயரட்னவும், தாமும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் கவனத்தி ற்குக் கொண்டு சென்றோம். அதனைய டுத்தே ஜனாதிபதி அவர்கள் இந்நிதியொது க்கீட்டை மேற்கொண்டார் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...