22 செப்டம்பர், 2010

புதுக்குடியிருப்புப் படுகொலைகளின் 20ஆவது ஆண்டு நிறைவு

மட்டக்களப்பு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பில் 1990ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி 17 பொதுமக்கள், முஸ்லிம்களால் படுகொலை செய்யப்பட்ட 20ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு புதுக்குடியிருப்பு கடற்கரை வீதியிலுள்ள நினைவுத் தூபிக்கருகில் ஆசிரியர் வரதன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் புதுக்குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த மக்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

நிகழ்வில் பேசிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்தின்,

"இந்த நினைவுகூரும் நிகழ்வு பற்றி இனரீதியாக யாரும் பர்க்கக் கூடாது. மறக்க முடியாத, காலத்தால் அழியாத ஒரு நிகழ்வை நினைவுகூரும் போது அதன் அடிச்சுவடுகள், வரலாறுகள், அதன் பதிவுகள் புரட்டிப் பார்க்கப்படுகின்றன.

இம்மண்ணில் இந்த நிகழ்வு அனுஷ்டிக்கப்படுவதன் ஊடாக, இதே செப்டம்பர் மாதம் 1990 ஆம் ஆண்டு, கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற ஏனைய படுகொலைகளும் ஞாபகத்துக்கு வருகின்றன. அதுவும் மட்டக்களப்பு மாவட்டத்தின் கிழக்குப் பல்கலைக்கழகம், சத்துருக்கொண்டான் , புதுக்குடியிருப்பு ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட படுகொலைகள் வரலாற்றில் தடம் பதிந்துளளன.

புதுக்குடியிருப்பில் இந்நிகழ்வு அனுஷ்டிக்கப்படுவதன் ஊடாக ஏனைய இரு நிகழ்வுகளையும் நான் புரட்டிப்பார்க்கிறேன்.

அப்பாவித் தமிழ் மக்களின் படுகொலை என்பது காலத்தால் அழியாத, எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் மாறாத வடுவாகவே இருக்கும். இவை அனைத்தையும் ஞாபகப்படுத்துவதன் மூலம், எமது வரலாறுகளைப் புரட்டிப் பார்ப்பதன் மூலம் எதிர்காலத்தில் எமது நோக்கம் நிஜமாகும்" என்றார்.

வெளிநாடு சென்றிருந்த அரியநேத்திரன் நாடு திரும்பியதும் கலந்து கொண்ட முதலாவது நிகழ்வு இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

ஐ.நா. உலக உணவுத்திட்டம் வழங்கிய பொருட்களை விற்பனைக்காக எடுத்துச் சென்றவர்கள் கைது

மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேச செயலகப்பிரிவில் ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத்திட்டம் வழங்கிய அரிசி மற்றும் கோதுமை மா போன்ற மக்களுக்கு வழங்கிய உணவுப்பொருட்களை விற்பனைக்காக எடுத்துச்சென்ற கிரமசேவை உத்தியோகத்தர், பலநோக்கு கூட்டுறவுசங்க முகாமையாளர், சமாதான நீதிவான் ஆகியோர் இன்று காலை வெல்லாவெளி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

13ம் கொலணி, சங்கர்புரம் ஆகிய கிராமமக்களுக்கு வழங்கப்படவிருந்த உணவுப் பொருட்களே இவ்வாறு மோசடி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களால் கடத்தப்பட்ட 954 கிலோ கிராம் கோதுமை மா மற்றும் 700 கிலோ அரிசி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

ஒரு குடும்பத்திற்கு 7.5 கிலோ அரிசி மற்றும் கோதுமை வழங்க வேண்டிய நிலையில் 1 கிலோவையே வழங்கியுள்ளது தெரியவந்துள்ளது. வெல்லாவெளி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இது தொடர்பாக பக்கசார்பற்ற விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கிழக்கு பிரதி பொலிஸ் மா அதிபர் திலக் விஜயகுணவர்த்தன பொலிஸாரைப்பணித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

நாட்டில் உண்மையான சமாதானம் இன்னும் ஏற்படவில்லை: ஆயர் சுவாம்பிள்ளை


நமது நாட்டில் உண்மையான சமாதானம் இன்னும் ஏற்படவில்லையென மட்டக்களப்பு திருமலை மறை மாவட்ட ஆயர் கலாநிதி ஜோசப் கிங்ஸ்வி சுவாம்பிள்ளை தெரிவித்தார்.

உலக சமாதான தினத்தையொட்டி மட்டக்களப்பில் நேற்று நடைபெற்ற வைபவத்தில் உரையாற்றும் போதே ஆயர் மேற்கண்டவாறு கூறினார்.

எகெட் கரிட்டாஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் அதன் பணிப்பாளர் கலாநிதி அருட் தந்தை சிறிதரன் சில்வஸ்ட்டர் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் தொடர்ந்துரையாற்றிய ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை, யுத்தம் முடிவடைந்த போதிலும் உண்மையான சமாதானம் நமது நாட்டில் ஏற்படவில்லை.

சமாதானம் என்பது மிக முக்கியமானது இன்று உலக நாடுகளில் பல் வேறு நாடுகளில் யுத்தத்தினால் மனித குலம் அழிந்து கொண்டே இருக்கின்றது.

சமாதானம் அழிந்தால் ஒற்றுமை அழியும் ஒற்றுமை அழிந்தால் மனித குலம் அழியும் மனித நேயம் மதிக்கப்பட்டால் சகோதரத்துவமும் இன ஜக்கியமும் ஏற்படும். என அவர் இதன் போது தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்களின் சமாதான கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.
மேலும் இங்கே தொடர்க...

ஜனாதிபதி - ஈரானிய அதிபர் நியூயோர்க்கில் நேற்றுச் சந்திப்பு



நியூயோர்க்கில் ஆரம்பமாகியுள்ள 65 ஆவது ஐக்கிய நாடுகளின் பொது அமர்வில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஈரானிய அதிபர் மொஹமூட் அஹ்மதினேஜாடை நேற்றுச் சந்தித்தார்.

இதன்போது, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாமல் ராஜபக்ஷ, ஸ்ரீரங்கா, ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க, டாக்டர் பாலித கோஹண ஆகியோரும் சமூகமளித்திருந்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

தாய்லாந்தில் திடீர் சுற்றிவளைப்பு : 13 இலங்கை அகதிகள் கைது

தாய்லாந்து லப்ராவ் என்ற இடத்தில், அந்நாட்டுக் குடிவரவுத் திணைக்கள அதிகாரிகள் நடத்திய சுற்றிவளைப்புத் தேடுதலின்போது 13 இலங்கை அகதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் விசா இன்றி அங்கு தங்கியிருந்தவர்கள் என்றும் தம்மை அகதிகளாக ஐக்கிய நாடுகள் அமைப்பில் பதிவு செய்திருந்தவர்கள் என்றும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.



நேற்றுக் காலை 11.30 மணியளவில் லப்ராவ் பிரதேசத்தைத் திடீரெனச் சுற்றி வளைத்த தாய்லாந்து குடிவரவு திணைக்கள அதிகாரிகள் இவர்களைக் கைதுசெய்து, அழைத்துச் சென்றுள்ளனர்.

இதுபற்றி தாய்லாந்து குடிவரவு திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கையில்,

"தாய்லாந்திலிருந்து குடியேற்றவாசிகளின் 2ஆவது கப்பல் புறப்படத் தயாராகவுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. அதிகமான அகதிகள் குறித்த கப்பலில் புறப்படவிருப்பதாகத் தகவல் கிடைத்தது.

குறித்த கப்பலில் செல்வதற்காக அதிகமானோர் தாய்லாந்தில் குடியேறி வருகின்றனர்.

எனவே இவ்வாறான சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்"என்றனர்.

இதன் காரணமாக, தம்மை ஐக்கிய நாடுகள் அமைப்பில் அகதிகளாகப் பதிவு செய்து, தாய்லாந்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் பெரும் பதற்றத்துடன் உள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

புலிகள் சார்பில் ஆஜராக வைகோவுக்கு நீதிமன்றம் அனுமதி மறுப்பு




தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான இந்தியாவின் தடையை எதிர்காலத்தில் நீடிக்கலாமா? இல்லையா என்பது குறித்து டில்லி மேல் நீதிமன்றம் விசேட விசாரணை நடத்தி வருகிறது.

புலிகள் சார்பில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அங்கு ஆஜராகி வாதாடுவதற்கு அனுமதி வழங்க மறுப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விசேட வழக்கு நேற்று டில்லி மேல்நீதிமன்ற நீதிபதி விக்ரம்ஜித் சென் முன்னிலையில் இடம்பெற்றது. இதன்போது ஆஜரான வைகோ இத்தடை நீடிக்கப்படக் கூடாது என்றவாறு தனது வாதங்களை முன்வைப்பதற்கு அனுமதி கோரினார்.

அவரது வாதங்களைச் செவிமடுத்த பின்பே நீதிமன்றம் தீர்ப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

ஆனால் மத்திய அரசின் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி எஸ். தணியாயன், இதற்கு ஆட்சேபனை தெரிவித்தார்.

புலிகள் இயக்கத்தை வைகோ சேராதவர் என்பதால் புலிகள் இயக்கத்தின் சார்பில் வாதாட அருகதையற்றவர் என்று அவர் தெரிவித்தார். இவரது ஆட்சேபனையை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.

புலிகள் இயக்கத்தின் சார்பில் வைகோ வாதாட முடியாது என்று தடை விதித்தது.

ஆயினும் சட்டத்தரணி ஒருவர் மூலமாக சமர்ப்பணங்களை வைகோ மன்றுக்கு சமர்ப்பிக்க முடியும் என்று தெரிவித்து நீதிபதி இவ்வழக்கை எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரைஒத்தி வைத்தார்.
மேலும் இங்கே தொடர்க...

புதையல் தோண்டிய வாகரை ஏ.எஸ்.பி கைது 7 கான்ஸ்டபிள்களும் 2 சிவிலியன்களும் உடந்தை

பொலன்னறுவை, புராதன சிறிபுர ரஜமகா விகாரையை அண்மித்த காட்டுப்பகுதியில் புதையல் தோண்டிய சந்தேகத்தின்பேரில் வாகரை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் உட்பட பத்துப் பேரை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் வாகரை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் உட்பட எட்டு பொலிஸாரும், இரண்டு சிவிலியன்களும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

மேற்படி காட்டுப் பகுதியில் இவர்கள் நேற்று முன்தினம் இரவு புதையல் தோண்டியதன் சந்தேகத்தின் பேரிலேயே கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். பிரதேச மக்கள் வழங்கிய இரகசியத் தகவலை அடுத்து மன்னம்பிட்டிய சோதனைச் சாவடியில் வைத்து கைது செய்யப்பட்ட இவர்களிடமிருந்த ஆயுதங்களையும் இவர்கள் பயன்படுத்திய வாகனத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது :-

சிறிபுர ரஜமகா விகாரையை அண்மித்த காட்டுப் பகுதியில் ஒரு குழுவினர் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததை அவதானித்த பிரதேசவாசிகள் சம்பந்தப்பட்டவர்களை மடக்கிப் பிடிக்கும் பொருட்டு விகாரையின் மணியை ஒலிக்கச் செய்துள்ளனர்.

உடனடியாக அங்கு பிரதேச வாசிகள் ஒன்று கூடுவதை அறிந்த ஒன்பது பேரும் புதையல் தோண்டுவதற்குப் பயன்படுத்திய உபகரணங்களை அதே இடத்தில் கைவிட்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

இதனையடுத்து பிரதேச மக்கள் 119 என்ற பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு சம்பவம் தொடர்பான தகவலைத் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்கள் வழங்கிய தகவலை அடுத்து பொலன்னறுவை பிரதேசத்தை சுற்றிவளைத்த விசேட பொலிஸ் குழு வாகரை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் உட்பட எட்டு பொலிஸாரையும், இரண்டு சிவிலியன்களையும் மடக்கிப் பிடித்துள்ளது. இவர்கள் அனைவரும் நேற்று மாலை, பொலன்னறுவை மஜிஸ்ட்ரேட் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்ப ட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை களை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

ஜனாதிபதி மஹிந்தவின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு கட்டார் முழு ஆதரவு கட்டார் எமிர் கலிபா அல்தானி




இலங்கையில் சமாதானம் ஏற்பட்டுள்ளதையடுத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எடுத்துவரும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு கட்டார் பூரண ஆதரவு வழங்குமென கட்டாரின் எமிர் கலிபா அல்தானி கூறியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் 65ஆவது கூட்டத்தொடரில் பங்குபற்றுவதற்காக நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் கட்டாரின் எமிர் கலிபா அல்தானிக்கும் இடையே (இலங்கை நேரப்படி) செவ்வாய்க்கிழமை (21) காலை இடம்பெற்ற சந்திப்பின் போதே கட்டாரின் எமிர் கலிபா அல்தானி இவ்வாறு கூறினார்.

இலங்கையில் நீண்ட காலம் நிலவி வந்த பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்ததையிட்டு முதலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பாராட்டுத் தெரிவித்த கலிபா அல்தானி அது முழு உலகத்துக்கும் ஒரு முன்னுதாரணம் என்று குறிப்பிட்டார்.

கட்டார் அரசுக்கு சொந்தமான ழினிமி எரிவாயு நிர்மாண நடவடிக்கையை இலங்கையிலும் ஆரம்பிப்பதற்கு முழு ஆதரவும் தருவதென இந்த சந்திப்பின் போது தெரிவிக்கப்பட்டது. அத்துடன் இரு நாடுகளுக்கிடையில் சுற்றுலாத் துறையை ஊக்குவிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் கலிபா அல்தானி ஜனாதிபதியிடம் வாக்குறுதியளித்தார்.

கட்டாரில் உள்ள சுமார் 95 ஆயிரம் இலங்கையர்களின் நலன் தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கட்டார் எமிரிடம் கேட்டறிந்தார். அச்சமயம் கட்டாரில் உள்ள இலங்கை சிறுவர்களின் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்த அவர்களுக்காக பாடசாலையொன்றை அமைப்பதற்கு கலிபா அல்தானி இணக்கம் தெரிவித்தார்.

இலங்கையில் தற்போது நிலவும் சமாதான சூழலில் கட்டார் தொழிலதிபர்கள் இலங்கையில் முதலீடு செய்ய மிகவும் ஆர்வமுடன் இருப்பதாக குறிப்பிட்ட கலிபா அல்தானி அவர்களுக்கு எவ்வாறான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருமாறு ஜனாதிபதியுடன் கேட்டுக்கொண்டார்.

அத்துடன் இலங்கையை இஸ்லாமிய நாடுகள் அமைப்பின் கண்காணிப்பில் உள்ளடக்குவதற்கு நடவடிக்கை எடுப்பது உகந்தது என்று நம்புவதாகவும் அவ்வாறான ஒரு வாய்ப்பை இலங்கைக்கு பெற்றுத்தர தமது நாடு ஆவலுடன் இருப்பதாகவும் கலிபா அல்தானி குறிப்பிட்டார்.

இலங்கை வெளியுறவு அலுவலர்கள் அமைச்சர் ஜீ. எல். பீரிஸ், அமைச்சர்கள் நிமல் சிறிபால டி சில்வா, ஜோன் செனவிரட்ன, மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோரும் இச்சந்திப்பின் போது உடனிந்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

பசும்பாலில் இருந்து முதன்முறையாக ஐஸ்கிரீம்




கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய கால்நடை அபிவிருத்தி சபை முதற்தடவையாக பசும் பால் மூலமாக தயாரிக்கப்படுகின்ற ஐஸ்கிரீம் உற்பத்தி செய்யும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.

மைச்சர் ஆறுமுகம் தொண்டமான் நிக்கவரட்டியில் அமைக்கப்பட்டுள்ள ஐஸ்கிரீம் உற்பத்திக்கான (இயந்திரத்தை) தொழிற்சாலையை திறந்து வைத்தார். புதிய தொழிற் சாலையை திறந்து வைத்த கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் உரையாற்றுகையில் :-

சந்தையில் காணப்படுகின்ற ஐஸ் கிரீம்களை விடவும் மலிவான விலையில் இந்த வகையிலான ஐஸ் கிரீம்களை நுகர்வோருக்கு வழங்க முடியும். தேசிய பாற்பண்ணைகளின் அபிவிருத்தியினை அதிகரித்து, நமது வளங்களை பெருக்க வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டி வருகின்ற கால்நடை மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சர் தமது உற்பத்திகளை மேம்படுத்துவதன் மூலம் தேசிய உற்பத்திக்கு பங்களிப்புச் செய்கின்ற விவசாயிகளின் எதிர்பார்ப்புகளுக்கு ஆதரவளிக்க வேண்டும்.

நீண்ட காலமாக பாலுற்பத்தி துறையில் நிலவி வருகின்ற பிரச்சினைகளுக்கு துரித தீர்வுகள் தேவைப்படுவதாகவும் நாட்டின் தேவைக்கேற்ப தேசிய பாலுற்பத்தியினை அதிகரிக்க வேண்டிய தேவை உள்ளதாகவும் குறிப்பிட்ட அமைச்சர், இந்த பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதற்கு தீர்க்கமான முடிவுகள் அவசியம்.

தேசிய மட்டத்தில் மட்டுமன்றி சிறு உற்பத்தியாளர்களையும் ஊக்குவிக்கின்ற நோக்கில் பல்வேறு வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நவசக்தி திட்டத்தின் கீழ் அண்மையில் கொட்டகலையில் 151 பேருக்கு பசுக்கள் வழங்கப்பட்டன.
மேலும் இங்கே தொடர்க...

மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண செயலணி அமைக்க தீர்மானம்






மீன்பிடித்துறையுடன் தொடர்புடைய சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் வகையில் செயலணி ஒன்றை அமைக்கத் தீர்மானித்துள்ளதாக கடற்றொழில் மீன்பிடித்துறை அமைச்சு தெரிவித்தது.

இதனூடாக மீன்பிடித்துறை சார்ந்த பிரச்சி னைகளுக்கு தீர்வுகாணவும், தடைசெய்ய ப்பட்ட உபகரணங்களைக் கொண்டு மீன்பிடிப்பவர்களை கைது செய்வதற்காகவும் பதிவு செய்யாமல் மீன்பிடிப்பதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இது தொடர்பாக அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்னவுக்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்குமிடையில் பேச்சு இடம்பெற்றுள்ளது. இச்சமயமே செயலணி அமைப்பது குறித்து தீர்மானிக்கப்பட்டதாக மீன்பிடி அமைச்சின் அதிகாரியொருவர் கூறினார்.

இந்த செயலணிக்கு மீன்பிடி அமைச்சு, கடற்படை, கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம், மற்றும் பல நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளதாக அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். தடை செய்யப்பட்ட உப கரணங்களை பயன்படுத்தி மீன்பிடிப்போரை கைது செய்யவும் அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளவும் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

சமுக, பொருளாதார இலக்குகளுக்கு முன்னுரிமை கொடுத்தே அபிவிருத்தி உலக புலமை சொத்து சங்க நிகழ்வில் அமைச்சர் றிஸாட்

இலங்கையில் கடந்த மூன்று தசாப்த காலமாக மறுக்கப்பட்டு வந்த சமாதானம் இப்போது மீண்டும் புதுவேகத்துடன் உதயமாகின்றது. இப்போது நாம் புனரமைப்பு, மற்றும் நல்லிணக்கம் என்பன வற்றை நோக்கி வேகமாக நகர்ந்து வருகின்றோம். நீண்டகால சமூக பொருளா தார இலக்குகளுக்கு முன்னுரிமையளித்தே நாம் எமது அபிவிருத்தித் திட்டங்களை வடிவமைத்து வருகின்றோம் என்று கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் றிஸாட் பதியுதீன் கூறினார்.

ஜெனீவாவில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை (20) ஆரம்பமான உலக புலமைச் சொத்து சங்கத்தின் 48வது உயர் மட்டத்தொடர் கூட்டத்தில் பங்கேற்று உரை நிகழ்த்தும் போதே அமைச்சர் றிஸாட் பதியுதீன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்:-

இலங்கை பல தசாப்தகால இன்னல்களுக்கு மத்தியிலும் கடந்த ஐந்து வருடங்களாக சராசரியாக 5 வீத பொருளாதார வளர்ச்சியைப் பேணி வருகின்றது. 2010 இன் இரண்டாம் காலாண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 8.5 வீதமாகப் பதிவாகியுள்ளது. 2002 ஆம் ஆண்டுக்குப் பின் அதி உயர் பொருளாதார வளர்ச்சியாக இது பதிவாகியுள்ளது.

உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட பொருளாதாரப் பின்னடைவையும் மீறி இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். எமது அபிவிருத்தி தொடர்பான முன்னுரிமைகள் மூலோபாய அணுகுமுறைகள் என்பன மஹிந்த சிந்தனை எதிர்கால வேலைத்திட்டங்களோடு இரண்டறக் கலந்தவையாகக் காணப்படுகின்றன.

எமது ஜனாதிபதி முன்வைத்துள்ள தேசத்தைக் கடடியெழுப்பும் வேலைத் திட்டமே மஹிந்த சிந்தனை எனக் குறிப்பிடப்படுகின்றது. இலங்கையை ஒரு அறிவு பூர்வமான மையமாக உருவாக்குவது உட்பட்ட பல்வேறு மூலோபாயத் திட்டங்களை இது கொண்டுள்ளது. இதேபோல் வர்த்தகம், விமானப் போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து சக்தி வளம் என்பனவற்றுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பின்னணியில் இன்றைய இந்த உயர் மட்டக் கூட்டத் தொடரின் தொனிப் பொருள் புத்தாக்கம், வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி என்பனவற்றில் புலமைச் சொத்தின் பங்கும் உறுப்பு நாடுகளின் அனுபவமும் என்ற தலைப்பு எனக்கும் எனது தூதுக்குழுவினருக்கும் உற்சாகமூடுவதாக அமைந்துள்ளது. எமது மக்களுக்கு சிறந்த எதிர்காலம் ஒன்றை ஏற்படுத்திக் கொடுப்பதே இங்குள்ள அனைத்து உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளினதும் எண்ணமாக இருக்கும் என்றே நான் கருதுகின்றேன்.

உலக புலமைச்சொத்து அமைப்பின் உறுப்பினர்கள் என்ற வகையிலும் பாரிய மனித குலம் என்ற குடும்பத்தின் உறுப்பினர்கள் என்ற வகையிலும் எமது அனுபவம், ஆக்கபூர்வமான கண்டுபிடிப்புக்கள், பூலோக ரீதியான நன்மைகளுக்கும், மனித குலப் போட்டிகளுக்கும் தூண்டுதலாக இருக்கின்றன என்பதேயாகும். இந்த வகையில் புத்தாக்கக் கண்டுபிடிப்புக்களும் புலமைச் சொத்துக்களும் சமூக, பொருளாதார அபிவிருத்திகளை மேம்படுத்தக் கூடியவையாகும்.

தேசத்தைக் கட்டியெழுப்பும் எமது துரித செயற்பாடுகள், ஆசியாவில் இலங்கையை ஒரு அறிவு மையமாகக் கட்டியெழுப்பல் என்பனவற்றைப் பொறுத்தமட்டில் சிறந்த முறையில் ஒழுங்கமைக்கப்பட்ட தேசிய ரீதியாக பலப்படுத்தப்பட்ட ஆக்கபூர்வமான ஒரு சூழல் ஒழுங்கு முறையைக் கட்டியெழுப்ப வேண்டியது எமது தேவையாக உள்ளது. இது தொடர்பாக நாம் ஏற்கனவே பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். இந்த விடயத்தில் உலக புலமைச் சொத்து சங்கத்தின் ஆதாரவையும் ஒத்துழைப் பையும் நாம் எதிர்பார்த்துள்ளோம்.
மேலும் இங்கே தொடர்க...

தடை செய்யப்பட்ட மீன்பிடிப் படகுகளை மீனவர்களிடம் மீள ஒப்படைக்க நடவடிக்கை






பாதுகாப்புக் காரணங்களுக்காக தடை செய்யப்பட்ட வடக்கு கிழக்கு மீனவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 40 குதிரை வலுவுடைய 141 மீன்பிடிப் படகுகளையும் மீனவர்களிடம் மீள ஒப்படக்க உள்ளதாக கடற்றொழில் நீரியல் வள அமைச்சு நேற்று தெரிவித்தது.

பாதுகாப்பு அமைச்சின் கட்டுப்பாட்டில் உள்ள மேற்படி மீன்பிடிப்படகுகளை மீன்பிடி அமைச்சுக்கு ஒப்படைக்க பாதுகாப்பு அமைச்சு இணக்கம் தெரிவித்துள்ளது.

அவை மீள வழங்கப்பட்டதும் விசேட குழுவொன்றினூடாக படகுகள் மீனவர்களிடம் கையளிக்கப்பட உள்ளன. இது தொடர்பாக அமைச்சர் ராஜித சேனாரத்ன பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து பேச்சு நடத்தினார்.

பாதுகாப்புக் காரணங்களுக்காக கடந்த காலங்களில் 40 குதிரை வலுவுள்ள மீன் பிடிப் படகுகளுக்கு அரசாங்கம் தடை விதித்திருந்தது.
மேலும் இங்கே தொடர்க...

2010ம் ஆண்டில் உலக அளவில் வலிமையான நாடுகள் பட்டியலில் இந்தியா 3வது இடம் பிடித்துள்ளதாக அமெரிக்க ஆய்வு தெரிவிக்கிறது.


2010ம் ஆண்டில் உலக அளவில் வலிமையான நாடுகள் பட்டியலில் இந்தியா 3வது இடம் பிடித்துள்ளதாக அமெரிக்க ஆய்வு தெரிவிக்கிறது. இந்த பட்டியலில் அமெரிக்கா முதலிடம் பிடித்துள்ளது. நேஷனல் இன்டெலிஜென்ஸ் கவுன்சில் (என்ஐசி) மற்றும் ஐரோப்பிய யூனியன் பாதுகாப்பு கல்வி கழகம் (இயுஐஎஸ்எஸ்), ஆளுமை, பாதுகாப்பு, பொருளாதாரம், சுயசார்பு, வளர்ச்சி ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு ஆய்வு செய்தது. அதன்படி உலகின் வலிமையான நாடுகளை பட்டியலிட்டுள்ளது. மேலும் நடப்பு 2010ம் ஆண்டு, வரும் 2025ம் ஆண்டு வாக்கில் உலக நாடுகளின் நிலை குறித்தும் தகவல் வெளியிட்டுள்ளது.

தற்போது உலகின் வலிமையான நாடுகளில் அமெரிக்கா 12 சதவீதத்துடன் முதலிடம் பிடித்துள்ளது. இதை தொடர்ந்து சீனா 12 சதவீதம், ஐரோப்பிய யூனியன் 16 சதவீதம், இந்தியா 8 சதவீதம், ஜப்பான், ரஷ்யா, பிரேசில் 5 சதவீதத்துடன் அடுத்தடுத்த இடத்தில் உள்ளன. வரும் 2025ம் ஆண்டு வாக்கில் அமெரிக்கா 18 சதவீதத்துடன் முதலிடத்தில் இருக்கும். சீனா 16 சதவீதம், ஐரோப்பிய யூனியன் 14 சதவீதம், இந்தியா 10 சதவீதத்துடன் அடுத்த இடங்களை பிடிக்கும்.
மேலும் இங்கே தொடர்க...

தாய்லாந்தில் சுற்றிவளைப்பு கர்ப்பணித் தாய், நான்கு குழந்தைகள் உட்பட 13இலங்கை அகதிகள் கைது..!

தாய்லாந்து லப்ராவ் என்ற இடத்தில் தாய்லாந்து குடிவரவு திணைக்கள அதிகாரிகள் நடத்திய சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கையின்போது விசா இன்றி அங்கு தங்கியிருந்த தம்மை அகதிகளாக ஐக்கிய நாடுகள் அமைப்பில் பதிவு செய்திருந்த 13இலங்கை அகதிகள் கைதுசெய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட அகதிகளுள் நான்கு குழந்தைகளும், ஒரு கர்ப்பணித் தாயும் உள்ளடங்கியுள்ளனர். இவர்கள் மூன்று குடும்பங்களைச் சேர்ந்தவர்களாவர். இன்றுகாலை 11.30அளவில் குறித்த பிரதேசத்தினை திடீரென சுற்றிவளைத்த தாய்லாந்து குடிவரவு திணைக்கள அதிகாரிகள் இவர்களைக் கைதுசெய்து கொண்டு சென்றுள்ளனர். இதுபற்றி தாய்லாந்து குடிவரவு திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கையில், தாய்லாந்திலிருந்து குடியேற்றவாசிகளின் 2வது கப்பல் புறப்படத் தயாராகவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதென்றும், அதிகமான அகதிகள் குறித்த கப்பலில் புறப்படவிருப்பதாகவும் தெரிவித்ததுடன், குறித்த கப்பலில் செல்வதற்காக அதிகமானோர் தாய்லாந்தில் குடியேறி வருவதாகவும் தெரிவித்துள்ளனர். அத்துடன் இவ்வாறான சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுமென்றும் குடிவரவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக தாய்லாந்தில் தங்கியுள்ள தம்மை ஐக்கிய நாடுகள் அமைப்பில் அகதிகளாக பதிவு செய்து கொண்டுள்ள இலங்கை அகதிகள் பெரும் பதற்றத்துடன் உள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

பாகிஸ்தானுடன் எல்லா விஷயங்கள் குறித்தும் இந்தியா பேசத் தயார்: நிருபமா ராவ் பேட்டி





பாஸ்டன் : "காஷ்மீர் பிரச்னை உட்பட, அனைத்துப் பிரச்னைகள் குறித்தும் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா தயாராக இருக்கிறது. ஆனால், இருதரப்பு உறவுகளையும் சீர்படுத்தும் விதத்தில், பயங்கரவாத ஒழிப்பில் போதுமான நடவடிக்கைகளை பாகிஸ்தான் எடுக்க வேண்டும்' என, இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் தெரிவித்துள்ளார்.

நியூயார்க்கில் நடக்க உள்ள ஐ.நா., பொதுச் சபையின் ஆண்டுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள நிருபமா ராவ், அங்கு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:காஷ்மீர் பிரச்னை, பாகிஸ்தானுடனான இந்தியாவின் உறவோடு சம்பந்தப்பட்டிருக்கும் நிலையில், அப்பிரச்னை உட்பட அனைத்துப் பிரச்னைகள் குறித்தும் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா தயாராக இருக்கிறது என, மிகத் தெளிவாக, நம்பிக்கையுடன், வெளிப்படையாக கூறுகிறேன்.பயங்கரவாதிகள் இந்திய எல்லைக்கு அப்பால், பாதுகாப்பான இடங்களில் இருந்து கொண்டு, தொடர்ந்து இந்தியாவை எதிர்ப்பதற்கு ஆட்களைத் தேர்ந்தெடுத்துப் பயிற்சி அளித்து, தாக்குதல் நடத்த சதித்திட்டமும் தீட்டி வருகின்றனர். இதனால் பாகிஸ்தானுடனான இந்திய உறவு ஒரு சிக்கலான நிலையில் இருக்கிறது.
"ஒரு பெரிய தேசம், தன் அண்டை நாடுகளுடன் எப்போதும் மோதிக் கொண்டிருந்தால் அது பலவீனமடையும்' என்று, சாணக்கியர் கூறிய கருத்தும் எங்களுக்கு தெரியும்.

தன் அண்டை நாடுகளுடன் பொருளாதார ரீதியில் இணக்கமான சூழல் உருவாக்கப்பட வேண்டும் என, இந்தியா விரும்புகிறது. பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தையில் இந்தியா தொடர்ந்து ஈடுபடும். அதற்காக நெருடலான விஷயம் தவிர மற்றவைகளைப் பேச விரும்புகிறோம் என்று அர்த்தமல்ல.ஜம்மு - காஷ்மீர் பிரச்னை உட்பட, எல்லா விஷயங்களையும் நாங்கள் பேசத் தயாராக இருக்கிறோம். அமைதியான சூழலில் இப்பகுதியின் பொருளாதாரம் மேம்பட வேண்டும் என்பது விருப்பம்.மும்பைத் தாக்குதல் வழக்கு தொடர்பாக, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குரேஷியுடன் தொடர்ந்து தகவல் பரிமாற்றம் இருக்கிறது. மும்பைத் தாக்குதல் வழக்கு மிகவும் மெதுவாகத்தான் சென்று கொண்டிருக்கிறது.ஆப்கனில், பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும்; அங்கு அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்பட வேண்டும் என்ற அமெரிக்காவின் முயற்சிகளுக்கு இந்தியா ஆதரவாக உள்ளது.இவ்வாறு நிருபமா ராவ் தெரிவித்தார்.

சீனாவுடன் எல்லை பிரச்னை : இந்திய - சீன எல்லைப் பிரச்னை குறித்து நிருபமா கூறியதாவது:எல்லையைப் பொறுத்தவரை இருநாடுகளுக்கும் பெரிய அளவில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. இப்பிரச்னையில் குறுகிய காலத்தில் எடுக்கப்படும் மிக எளிய முடிவுகள் தீர்வாகாது. இருதரப்பு உறவுகளுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் முக்கியத் தடையாக இப்பிரச்னை மாறுவதை இரண்டு நாடுகளுமே அனுமதிக்காது. எல்லையில் தொடர்ந்து அமைதி நிலவுகிறது. இருதரப்பு உறவையும் போட்டியாக மட்டுமே பார்க்காமல், பதட்டமில்லாத அமைதியான முறையிலும் உள்ளது என்றும் பார்க்க வேண்டும்.சீனாவுடனான இந்திய உறவு, நடைமுறைக்குரியதாக இருக்குமே தவிர, ஒத்துப்போகாத முறையில் இருக்காது. ஆதிக்கம் செலுத்துவதில் போட்டி அல்லது பொருளாதாரத் தேவைக்கான வளங்களைத் தேடுவதில் போட்டி என இந்த உறவு இருக்குமா என்று மிகைப்படுத்த வேண்டியதில்லை.
மேலும் இங்கே தொடர்க...

நியூயோர்க்கிற்கு சென்ற ஜனாதிபதி தலைமையிலான குழுவிற்கு 14 கோடி ரூபா செலவு: ஐ.தே.க

ஐக்கிய நாடுகள் சபையின் 65 ஆவது உச்சி மாநாட்டுக்கு சென்றுள்ள ஜனாதிபதி தலைமையிலான குழுவிற்கு 14 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி சுட்டி காட்டியுள்ளது.

இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அத்தநாயக்க, ஐக்கிய நாடுகள் சபை உச்சி மாநாட்டில் கலந்துக் கொள்ளவதற்கு ஒரு நாட்டை பொறுத்தவரை நான்கு பேர் பங்கு பற்றுவது போதுமானது. ஆனால் தற்போது நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக் கூட்டத்தில் பங்கு கொள்ள 130 பேர் சென்றுள்ளனர். இவர்களுக்கான செலவு 14 கோடி ரூபா ஆகும்.

நாட்டில் தற்போது பொருட்கள் விலை அதிகரிக்கப் படுகின்றது. இந்நிலையில் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்வதால் நாட்டில் மக்களே பெரும் துன்பங்களை எதிர்கொள்கின்றனர் என மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

பா.ஜ.க கூட்டணி கட்சிகள் விரைவில் இலங்கை பயணம்

இலங்கை தமிழர்களின் உண்மை நிலையை கண்டறிய, பா.ஜனதா கூட்டணி கட்சிகள் அடங்கிய குழு, விரைவில் இலங்கை செல்கிறது.

இலங்கையில் போர் முடிவடைந்து ஓர் ஆண்டுக்கு மேலாக ஆகியும் இலங்கை தமிழர்களுக்கு அளிக்கப்பட்ட உதவிகள் சரியாக சென்றடைகிறதா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இன்னும் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேலான தமிழர்கள் அரசு முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், அரசு முகாம்களில் இருந்து அவர்களது சொந்த இடங்களுக்காக அழைத்து செல்லப்பட்டவர்கள், வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. மத்திய மற்றும் தமிழக அரசால் வழங்கப்பட்ட நிவாரண உதவிகள், பாதிக்கப்பட்ட மக்களை சென்று அடைந்ததா என்பது கேள்விக்குறியாக உள்ளது. எனவே, இலங்கையில் தமிழர்களின் உண்மைநிலையை கண்டறிய, அனைத்துக் கட்சி தலைவர்களை கொண்ட குழு ஒன்றை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என பா.ஜனதா மற்றும் இடதுசாரிகள் சார்பாக பாராளுமன்றத்தில் வலியுறுத்தப்பட்டது. ஆனால், மத்திய அரசு அதை நிராகரித்து விட்டது.

தற்போது, காஷ்மீரில் நடைபெற்று வரும் நிகழ்வுகளை கண்டறிய, மத்திய அரசு அனைத்து கட்சி குழு ஒன்றையும், அந்தக் குழுவுடன் பத்திரிகையாளர்களையும் அனுப்பி வைத்துள்ளது. அதேபோல, பா.ஜனதா தலைமையில் விரைவில் ஒரு குழு, இலங்கைக்கு சென்று அங்குள்ள உண்மை நிலவரத்தை ஆராய்ந்து, மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்க இருப்பதாக பா.ஜனதா வட்டாரங்களில் இருந்து தெரிய வருகிறது. பா.ஜனதா தலைமையிலான இக்குழுவில் ஐக்கிய ஜனதாதளம், அகாலிதளம், சிவசேனா மற்றும் சில தமிழக கட்சிகளும் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேசிய அளவில் ஆரம்பத்திலிருந்தே இலங்கைப் போரில் இலங்கை அரசை கடுமையாக சாடி வந்தது பாஜக மட்டுமே. அப்பாவித் தமிழர்களை இலங்கைப் படையினர் கொடூரமாக கொன்று குவித்து வருவதை நாடாளுமன்றத்தில் சுஷ்மா சுவராஜ் மிகக் கடுமையாக சாடிப் பேசினார். தேசிய அளவில் ஈழத் தமிழர்களுக்காக ஒரே குரலில் தனது கருத்தை ஒலித்து வரும் கட்சியும் பாஜக மட்டுமே.

இந்த நிலையில் தற்போது தேசிய அளவில் ஒரு குழுவை இலங்கைக்கு அனுப்பி வைத்து உண்மையைக் கண்டறிய அது திட்டமிட்டுள்ளது. இதில், பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள அகாலிதளம், ஐக்கிய ஜனதாதளம், சிவசேனா ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் இடம் பெறவுள்ளனர். மேலும், தமிழகத்தைச் சேர்ந்த கட்சிகள் சிலவும் கூட இடம்பெறும் எனத் தெரிகிறது. அதிமுகவும் கூட இடம்பெறக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் குழுவுக்கு மத்திய அரசு விரைவில் அனுமதி தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர் இக்குழு இலங்கை செல்லலாம்.
மேலும் இங்கே தொடர்க...

ஐ.தே.க ஆதரவாளர்களிடம் இருந்த நெற்களஞ்சிய சாலைகளை மீளப்பெற அரசு நடவடிக்கை


ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் இருக்கும் போது 2002-2004 காலப் பகுதியில் தமது ஆதரவாளர்களுக்கு கையளித்த நெற்களஞ்சிய சாலைகளை மீளப்பெற அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

நாட்டிலுள்ள விலை மதிக்க முடியாத பல நெற்களஞ்சிய சாலைகள் இவ்வாறு கையளிக்கப் பட்டுள்ளன. இது ஒருவகையில் சட்டவிரோத அபகரிப்பாக மட்டுமல்லாது தேசிய விரயமாகவும் உள்ளது. ஏனெனில் ஒரு புறம் நெற்களஞ்சியமின்மை காரணமாக நெல் பழுதடைவது தேசிய விரயத்தை ஏற்படுத்துகிறது.

மருபுறம் இக்களஞ்சியங்களது மொத்தப் பெறுமதி பத்தாயிரம் கோடி ரூபாய்க்கு மேலாகும். எனவே இன்னும் ஒரு வாரகாலத்தில் அவற்றை மீள ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை அகதிகளிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்தவர் கைது

அவுஸ்திரேலியாவுக்கு அழைத்து செல்வதாக இலங்கை அகதிகளிடம் பணம் மோசடி செய்த நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்தனர். அவர் பஸ்சில் அழைத்து வந்த 36 அகதிகளையும் மடக்கிப் பிடித்தனர்.

சென்னையில் இருந்து 37 இலங்கை அகதிகள் பஸ்சில் திருச்சி வருவதாகவும் பின் அவர்கள் கள்ளத்தனமாக அவுஸ்திரேலியாவுகக்கு செல்ல இருப்பதாகவும் திருச்சி கியூ பிரிவு பொலிஸாருக்கு இரகசிய தகவல் வந்தது.

குறித்த இடத்துக்கு சென்ற பொலிஸார் அந்த வழியாக வந்த ஓர் பஸ்சில் 37 பேர் இருந்தனர். விசாரணையில், அவர்கள் தமிழகத்தில் சென்னை, மண்டபம், வேலூர் உள்ளிட்ட பல்வேறு அகதி முகாம்களில் இருப்பவர்கள், முகாம்களில் இல்லாதவர்கள் என்றும் அவர்களை கள்ளப் படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்ல இருப்பதாகவும் இதற்கு அதே பஸ்சில் வந்த இலங்கை வாலிபர் ஒருவர் ஏற்பாடு செய்ததும் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து அந்த வாலிபரிடம் பொலிஸார் துருவி துருவி விசாரணை நடத்தினர். அவர் இலங்கை நீர்கொழும்பு பெரிய முள்ளு, புனித அந்தோனியார் மாவட்டத்தை சேர்ந்த சுதர்சன் (வயது 26) என்று தெரியவந்தது.

இலங்கையில் இருந்து கடந்த 8 ஆம் திகதி போலி பாஸ்போர்ட்டில் சென்னை வந்த சுதர்சன் பல்லாவரம் பொழிச்சலூர் ஆஞ்சநேயர் கோவில் தெருவில் உள்ள தனது காதலியின் வீட்டில் தங்கி இருந்தார். மோசடி செய்யும் நோக்கத்தில் பிழைப்புக்காக அவுஸ்திரேலியா செல்ல விருப்பம் உள்ளவர்களை தேடினார்.

இலங்கையில் இருந்து தமிழகம் வந்து அகதி முகாம்களில் தங்கி உள்ளவர்கள், வெளியில் தங்கி இருப்பவர்களுக்கு வலைவீசி 36 பேரை திரட்டினார். அவர்களிடம் இருந்து பல லட்சம் ரூபாய் பெற்றுள்ளார். இந்த விவரங்கள் அனைத்தும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளன.

இதைத்தொடர்ந்து பொலிஸார் அவரை கைது செய்தனர். அகதிகள் அந்தந்த முகாம்களுக்கும் வெளியில் வசித்தவர்கள் அவரவர் வசிப்பிடத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும் இங்கே தொடர்க...