26 நவம்பர், 2010

2011 ஆம் ஆண்டில் பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகும் மாணவர்களுக்கு மடி கணனிகள் வழங்க நடவடிக்கை

2011 ஆம் ஆண்டில் பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகும் சகல மாணவர்களுக்கும் மடி கணனிகள் வழங்கப் படவுள்ளன.

2011 இல் பல்கலைக் கழகம் செல்லும் மாணர்களுக்கு வழங்குவதற்கென சுமார் 25000 மடி கணனிகளைக் கொள்வனவு செய்ய இரண்டு பில்லியன் ரூபா தொகையை அரசு ஒதுக்கியுள்ளது.

எதிர்காலத்தில் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் கணனி மயப்படுத்தடவுள்ளதால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப் படவுள்ளது.

மத்திய மாகாணத்தில் சில பாடசாலை மாணவர்கள் அனைவருக்கும் இவ்வாறான மடிகணனிகள் வழங்கப் பட்டுள்ளன. அண்மையில் சீகிரியாவில் ஒரு கனிஷ்ட பாடசாலையைச் சேர்ந்த 270 மாணவர்களுக்கும் மடி கணனிகள் முதலமைச்சரால் வழங்கப்பட்டன.
மேலும் இங்கே தொடர்க...

புலிகளின் சித்திரவதை முகாமில் இருந்து 26 பேரின் எச்சங்கள் மீட்பு

விடுதலைப் புலிகளின் சித்திரவதை முகாம் எனக் கூறப் படும் ‘விக்டர் பேஸ்’ இல் இருந்து 26 பேரின் எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவற்றில் 16 இனம் காணப் பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு வல்லிபுரம் காட்டில் ‘விக்டர் பேஸ்’ என்ற முகாமை அண்மித்துத் தோண்டப்பட்ட இரு மனித புதைகுழிகளில் இருந்து பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 26 பேர் கொலை செய்யப்பட்டு புகைக்கப் பட்டதற்கான ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப் படுகிறது.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் மேற்படி பகுதிகள் இருந்த காலத்தில் புலிகளால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இராணுவம் மற்றும் கடற்படையைச் சேர்ந்த 26 பேரை கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் திகதி சுட்டுக் கொன்று அச்சடலங்களை புதைத்ததாகக் கருதப் படும் இடத்தில் தோண்டிய போது மேற்படி எச்சங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இவற்றுள் 16 சடலங்களை இனம் கண்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

கொழும்பில் குப்பையை சேகரிப்பதற்கு நாளொன்றுக்கு 2171,303 ரூபா செலவு: அரசாங்கம் தகவல்

கொழும்பு மாநகர சபையில் கழிவுப் பொருட்களை சேகரிப்பதற்கு நாளொன்றுக்கு 21 இலட்சத்து 71 ஆயிரத்து 303 ரூபா செலவாகின்றது என அரசாங்கம் தெரிவித்தது. பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை ரவி கருணாநாயக்க எம்.பி. கொழும்பு மாநகர சபையில் கழிவுப் பொருட்களை அகற்றுவது தொடர்பில் கேட்டிருந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே உள்ளூராட்சி மாகாண சபைகள் பிரதி அமைச்சர் மேற்கண்ட தகவலைத் தெரிவித்தார்.

பிரதி அமைச்சர் இந்திக்க பண்டக்ஷிர தொடர்ந்து பதிலளிக்கையில்,கொழும்பு மாநகர சபையினக்ஷில் நாளொன்றுக்கு 700 மெற்றிக் தொன் கழிவுப்பொருட்கள் சேகரிக்கப்படுகின்றன. அதற்கென நாளொன்றுக்கு 21 இலட்சத்து 71 ஆயிரத்து 303 ரூபக்ஷி 16 சதம் செலவாகின்றது. குப்பைகளை சேகரிப்பதற்காக வீடுகளிலிருந்து கட்டணம் அறவிடப்படமட்டாது என்பதுடன் வர்த்தக நிறுவனங்களிடமிருந்து மாத்திரமே ஒருவரி அறவிடப்படுகின்றது.

குப்பைகளை சேகரிப்பதற்கென மூன்று தனியார் நிறுவனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் மேல் மாகாணத்தில் கழிவுப் பொருட்களை சேகரிப்பதற்கும் அகற்றுவதற்கும் தேசிய திட்டம் ஒன்று அமுல்படுத்தப்படும். இதேவேளை ஸ்ரீ ஜயவர்த்தனபுர மாநகர சபையினால் குப்பைகளை சேகரிப்பதற்கு நாளொன்றுக்கு 3 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாவும் மகரகம நகர சபையினால் நாளொன்றுக்கு ஒரு இலட்சத்து 15 ஆயிரத்து 594 ரூபாவும் மொறட்டுவை மாநகர சபை 29 ஆயிரத்து 239 ரூபாவையும் தெஹிவளை கல்கிசை மாநகர சபை 6 இலட்சத்து 4 ஆயிரத்து 81 ரூபாவையும் செலவிடுகின்றது என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

இந்திய வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா வருகை கூட்டு ஆணைக்குழு அமர்விலும் பங்கேற்பார்

இலங்கை மற்றும் இந்திய நாடுகளுக்கிடையிலான கூட்டு ஆணைக்குழுவின் அமர்வு இன்று வெள்ளிக்கிழமை வெளிவிவகார அமைச்சின் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கூட்டணைக்குழுவின் அமர்வில் கலந்து கொள்ளவுள்ளனர்.

இன்று காலை 11 மணியளவில் நடைபெறவுள்ள இரு நாடுகளுக்கிடையிலான கூட்டு ஆணைக்குழுவின் அமர்வில் பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்றைய தினம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட எஸ், எம். கிருஷ்ணா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பிரதமர் டி.எம். ஜயரட்ண ஆகியோரை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.

மேலும் எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் ஆகியோரையும் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.

மேலும் அம்பாந்தோட்டை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்திய இராஜதந்திர பிரதிநிதி அலுவலகங்களையும் இந்திய வெளிவிவகார அமைச்சர் திறந்து வைக்கவுள்ளக்ஷிர். நாளை யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்திய இராஜதந்திர பிரதிநிதி அலுவலகத்தை திறந்துவைக்கும் நிகழ்வில் பங்கேற்கும் கிருஷ்ணா தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் அங்கு சந்திக்கவுள்ளார்.

50 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் இந்திய வீட்டுத்திட்டத்தையும் ஆரம்பித்து வைக்கவுள்ள எஸ்.எம். கிருஷ்ணா மதவாச்சியில் வடக்கு ரயில்வே வேலைத்திட்டத்தையும் ஆரம்பித்துவைப்பார் என்று வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

இலங்கையின் உயர்மட்டத்தினருடனான சந்திப்புக்களின்போது வடக்கு கிழக்கு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் அரசியல் தீர்வு விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

பெருந்தோட்டத்துறையில் பல்லாயிரம் ஏக்கர் தரிசு நிலங்களை இளைஞர்களுக்கு பகிர்ந்தளிக்கும் திட்டம்



பெருந்தோட்டத்துறையில் தரிசாகக் கைவிடப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காணிகளைச் சுவீகரித்து இளைஞர்களுக்குப் பகிர்ந்தளிக்கும் பாரிய திட்டமொன்றை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளதாக அரசாங்கத்தின் பிரதம கொறடா - அமைச்சர் தினேஷ் குணவர்தன நேற்று (25) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதன் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகளுக்குத் தொழில்வாய்ப்பும் பொருளாதாரத் தன்னிறைவும் ஏற்படுமென்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

வரவு - செலவுத் திட்டத்தின் மூன்றாம் நாள் விவாதத்தில் கலந்து கொண்டு அமைச்சர் உரையாற்றினார்.

“வரவு - செலவுத் திட்டத்திலுள்ள ஒரு விடயத்தை வைத்துக்கொண்டு அல்லது அரசியல் காரணத்திற்காக இந்தத் திட்டத்தினை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எதிர்க்கக்கூடாது. வடக்கு, கிழக்கு மக்களுக்குப் பல நன்மைகளைக் கொண்டுள்ள இந்த வரவு - செலவுத் திட்டத்தை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆதரிக்க வேண்டும். வடக்கு, கிழக்கு மக்களுக்கு இந்த வரவு - செலவுத் திட்டத்தில் வழங்கப்பட்டுள்ள சலுகைகளைப் போன்று வேறு எந்த வரவு செலவுத் திட்டத்திலும் முன்வைக்கப் படவில்லை.

யாழ். குடாநாட்டுக்கு நீர்விநியோகத் திட்டத்திற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. மேலும் பல அபிவிருத்தித் திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

வறுமை இலங்கையில் மட்டும் இல்லை. உலகின் பல நாடுகளில் தாண்டவமாடுகிறது.

ஆனால் அரசாங்கம் கிராமிய மட்டத்திலிருந்து வறுமையை ஒழிக்க நடவடிக்கை எடுக்கின்றது. கிராமங்களில் வறுமை ஒழிந்தால் முதலாளிமார் பாதிக்கப்படுவர். அதனால்தான் முதலாளித்துவ வாதிகள் இதனை எதிர்க்கின்றனர்.

அரசாங்கம் முன்னெடுக்கும் அபிவிருத்தி நடவடிக்கைகளால்தான் மஹியங்கனையில் உள்ள வேடுவ இனத் தலைவரும் கைபேசியில் உரையாடுகின்றார்” என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

வெள்ளம், மண்சரிவு பாதிப்பு: உடனடி நிவாரணத்துக்கு ரூ. 225 மில்லியன் ஒதுக்கீடு


வெள்ளம், மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கவென 225 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்றுத் தெரிவித்தார்.

வெள்ளம், மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் மாவட்ட செயலாளர்களுக்கு இந்நிதி அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக வும் அவர் கூறினார். குருநாகல், புத்தளம், கொழும்பு, மாத்தளை, கம்பஹா, ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களின் மாவட்ட செயலகங்களுக்கு அனுப்பி வைக்கப் பட்டிருக்கும் இந்நிதி மூலம் பாதிக் கப்பட்டுள்ள மக்களுக்கு சமைத்த உணவு மற்றும் உலர் உணவு நிவாரணம் பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை வெள்ளம், மண் சரிவு காரணமாக பாதிக்கப்பட் டுள்ள வீடுகளுக்கு நஷ்டஈடும் வழங் கப்படும். இது குறித்து மதிப்பீடு களை மேற்கொள்ளுமாறு அதிகாரி களுக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

கடந்த சில தினங்களாகப் பெய்த மழை, மற்றும் மண்சரிவு காரண மாக 3768 குடும்பங்களைச் சேர்ந்த 16 ஆயிரத்து 681 பேர் பாதிக்க ப்பட்டுள்ளனர். அத்தோடு 62 வீடுகள் முழுமையாகவும், 239 வீடு கள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

சாமிமலையில் பாடசாலை மாணவர்கள் 19 பேர் வைரஸ் காய்ச்சலால் பாதிப்பு



சாமிமலை சொக்கன் பாரதி தமிழ் வித்தி யாலய மாணவர்கள் 19 பேர் திடீரென ஒருவகை வைரஸ் காய்ச்சல் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாணவர்கள் உடனடியாக டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு வைரஸ் காய்ச்சல் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலைக்கு விஜயம் செய்த மத்திய மாகாண கல்வி அமைச்சர் சிவராஜா அனுஷியா அங்குள்ள சுகாதார நிலைமைகள் குறித்து ஆய்வு நடத்தினார்.

வைரஸ் காய்ச்சல் பரவுவதை கட்டுப்படுத்தும் வகை யில் மேற்படி பாடசாலைக்கு நேற்றைய தினத்தையும் இன்றைய தினத்தையும் விடுமுறை நாளாக அறிவிக்குமாறும் உத்தரவிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

ஜனநாயக காவலன் என கூறும் நாடுகள் பயங்கரவாதத்திற்கு துணைபோகின்றன



அரசாங்கம் முன்னெடுக்கும் அபிவிருத்தி இலக்கை வெற்றிகொள்வதில் சிறுபான்மை மக்களும் பூரண பங்களிப்பு வழங்கவேண்டுமென தகவல் ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரி வித்தார்.

பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு விட்டதென நாம் ஓய்ந்துவிட முடியாது. சர்வதேச நாடுகளில் அதன் செயற்பாடுகள் துடிப்புடன் இடம்பெறுகின்றன. ஜனநாயகத்தின் காவலர்கள் என்று கூறப்படும் நாடுகளே அதற்கு ஒத்துழைப்பை வழங்குகின்றன எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

தகவல் ஊடகத்துறை அமைச்சராக மீண்டும் பதவியேற்றுள்ள அமைச்சர் ரம்புக்வெல்ல நேற்று தமது அமைச்சில் தமது கடமையைப் பொறுப்பேற்ற பின் ஊடக அமைச்சு, மற்றும் தகவல் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் மத்தியில் உரையாற்றினார். இதன் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

புலிகளின் முக்கியஸ்தரான ருத்ரகுமாரைப் பிரதமராகக் கொண்ட நாடுகடந்த அரசாங்கம் அண்மையில் அமைக்கப்பட்டது. இதற்கு அமெரிக்கா போன்ற நாடுகள் ஒத்துழைப்பை வழங்கியுள்ளன. அதேபோன்று விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளராகவிருந்த தமிழ்ச் செல்வனுக்கு பிரான்ஸில் சிலை வைக்கப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழாவில் அந்நாட்டின் பிராந்திய ஆளுநர் ஒருவரே பிரதம அதிதியாகக் கலந்துகொண்டுள்ளார்.

அரசாங்கம் எத்தகைய தீர்மானங்களை எடுத்த போதும் அதனை சில மணித்தியாலங்களுக்குள் மாற்றவேண்டிய நிர்ப்பந்தத்தை எங்கோ பதுங்கு குழிக்குள் இருந்த ஒரு தனி மனிதன் ஏற்படுத்திய யுகம் ஒன்றை மறந்துவிட முடியாது.

இன்றும் நாட்டில் பயங்கரவாதத்தை ஒழித்துவிட்ட போதும் புலிகள் அரசாங்கம் அமைத்து தம்மை நிலை நிறுத்திக்கொள்ள முயலும் நடவடிக்கைகள் சர்வதேச மட்டத்தில் இடம்பெறுகின்றன. அதனை சில சர்வதேச நாடுகள் அங்கீகரித்து ஏற்றுக்கொண்டுள்ள நிலையையும் காணமுடிகிறது.

இந்நிலையில் தனித்துவமும் இறைமையும் உள்ள நாடு என்ற வகையில் நாம் பெற்ற சுதந்திரத்தையும் உரிமையையும் இலங்கையர் என்ற அடையாளத்தையும் பாதுகாப்பதில் நாம் முன்னிற்க வேண்டும். அதற்கு ஊடகத் தகவல் துறை அமைச்சின் பங்களிப்பு மிக விசாலமானது என்பதை உணர்ந்து செயற்படவேண்டும.

காலையில் கடமைக்குச் செல்லும் போதும் அன்றாட செயற்பாடுகளின்போதும் எமது பாதுகாப்புக்கு உத்தரவில்லாத யுகத்தை மாற்றி வாழ்க்கைக்கும் எதிர்காலத்திற்கும் நம்பிக்கையூட்டுகின்ற நிலையை நாட்டில் ஏற்படுத்தித தந்தவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே.

இன்று இலங்கையில் மட்டுமன்றி உலகெங்கிலும் எமது கீர்த்தி விளங்கும் காலம். நாம் இலங்கையர் என்று பெருமையுடன் பறைசாற்றுகின்ற காலம். இத்தகைய சுதந்திரமான நாட்டில் வாழும் நாம் ஜனாதிபதியின் ஆசியாவின் உன்னத நாடு என்ற நோக்கை நிறைவேற்றுவது மட்டுமன்றி உலகின் முன்னணி நாடாக இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு முழுமையான பங்களிப்பினை வழங்க வேண்டும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

சிரேஷ்ட அமைச்சர்கள் நியமனம்: அரசியலமைப்புக்கு முரணானதல்ல அமைச்சர் சுசில்

சிரேஷ்ட அமைச்சர்கள் நியமனம் அரசியலமைப்புக்கு எந்த வகையிலும் முரணானது அல்லவென்று அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் நேற்று (25) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். எதிரணி உறுப் பினர்களின் குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானதென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர்தான் நிதியமைச்சராக இருக்க வேண்டுமென்ற நியதி கிடையாதென்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

வரவு - செலவுத்திட்டத்தின் மூன்றாம் நாள் விவாதத்தில் கலந்து கொண்டு அமைச்சர் உரையாற்றுகையில் இந்த விளக்கங்களைத் தெரிவித்தார். ஜனாதிபதி விரும்பிய பொறுப்புகளைத் தம் வசம் வைத்துக் கொள்ளவும், வேண்டியவர்களை நியமிக்கவும் அதிகாரம் உண்டு.

நிதிய மைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி வரவு - செலவுத் திட்டத்தை முன்வைத்திருக் கிறார். அதனால் அவர் பாராளுமன்றத்தில் இருக்க மாட்டார் என்று கூற முடியாது. அரசியலமைப்பின் 18ஆவது திருத் தத்தின்படி மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை ஜனாதிபதி பாராளு மன்றத்திற்கு வருவார். அவருக்கென ஓர் ஆசனமும் பாராளுமன்றத்தில் ஒதுக் கப்பட்டுள்ளது.

இந்நிலையில் எதிரணியினரின் கூற்றை முற்றாக நிராகரிக்கிறேன் என்று அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் குறிப் பிட்டார்.

“வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்து அது பற்றிய விவாதம் முடி வடையும் வரை நிதியமைச்சர் பாராளுமன்றத்தில் இருக்க வேண்டும். இங்கே ஜனாதிபதி நிதியமைச்சராக இருப்பதால் அது சாத்தியமில்லை.

பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதிதான் இருக்க வேண்டும் என்றோ, நிதியமைச்சராக ஜனாதிபதி இருக்கக் கூடாது என்றோ அரசியலமைப்பில் குறிப்பிடப்படவில்லை” என்று கூறிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. சுமந்திரன், எவ்வாறெனினும் நிதி யமைச்சராக பாராளுமன்ற உறுப்பினர் பொறுப்பு வகிப்பதுதான் சிறப்பு என் றார். இதற்குப் பின் உரையாற்றிய அமைச்சர் பிரேம்ஜயந்த் இக்கூற்றை நிராகரித்தார்.
மேலும் இங்கே தொடர்க...