21 ஆகஸ்ட், 2010

தப்பிச் செல்ல முயன்ற கைதி சுடப்பட்டு மரணம்: போகம்பறையில் சம்பவம்


கண்டி போகம்பறை சிறைச்சாலையில் இன்று காலை கைதிகள் சிலர் தப்பிச் செல்ல முயற்சித்தபோது, சிறைக்காவலர்களால் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் மரணமடைந்துள்ளார்.

இத்தகவலை சிறைச்சாலை ஆணையாளர் மேஜர் ஜெனரல் வி.ஆர். டி சில்வா தெரிவித்துள்ளார்.

கைதிகள் சிறைச்சாலையின் இரண்டாவது மாடியின் கூரை மீதேறி தப்பிச் செல்ல முயன்றதாகவும், சிறைக்காவலர்கள் எச்சரித்தும் அவர்கள் அதனை அலட்சியப்படுத்தியதால் அவர்களை நோக்கிச் சுட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார் எனவும் கூறப்படுகிறது.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர் என சிறைச்சாலை ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

லெபனானிலிருந்து இலங்கைப் பெண்களை அழைத்துவர ஏற்பாடு

லெபனான் நாட்டில் நிர்க்கதி நிலைக்குள்ளான சுமார் நூறு இலங்கைப் பணிப்பெண்களை அழைத்துவர இலங்கை தூதுவராலயம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கடவுச்சீட்டு இன்மை உட்பட பல்வேறு காரணங்களுக்காக இவர்கள் தடுத்து வைக்கப்பட்டு நிர்க்கதி நிலைக்குள்ளாகி இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இன்று அல்லது நாளை இவர்கள் நாடு திரும்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

பயங்கரவாதிகள் பயணமா:அமெரிக்க விமானம் தாமதம்

சான்பிரான்சிஸ்கோ:கடத்தப்படும் அபாயம் ஏற்பட்ட தகவலால் அமெரிக்க விமானம் இரண்டு மணி நேரம் தாமதமாக புறப்பட்டது.அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ விமான நிலையத்திலிருந்து 163 பயணிகள் மற்றும் 11 விமான ஊழியர்களுடன் நியூயார்க் புறப்படுவதற்காக அமெரிக்க ஏர்லைன்ஸ் விமானம் தயாராக இருந்தது. இந்த விமானத்தின் பின்புற இருக்கையில் அமர்ந்திருந்த இரண்டு பேரின் நடவடிக்கைகள் சந்தேகத்துக்குரியதாக காணப்பட்டதால், ஓடுபாதையில் புறப்பட தயாராக இருந்த விமானம் ஓரம் கட்டப்பட்டு பயணிகள் அனைவரும், பஸ் மூலம் விமான நிலையத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

விமானத்தின் பின்புற இருக்கையில் இருந்த இரண்டு பயணிகளிடம் விசாரித்ததில், அவர்கள் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அவர்கள் உருவம் பயங்கரவாதிகள் போன்று தோற்றமளித்ததால் இந்த குழப்பம் ஏற்பட்டதாக விமான ஊழியர்கள் தெரிவித்தனர். இரண்டு மணி நேர தாமதத்துக்கு பின், விமானம் நியூயார்க் புறப்பட்டுச் சென்றது.
மேலும் இங்கே தொடர்க...

தலதா மாளிகை ரந்தோலி பெரஹரா இன்று ஆரம்பம்

ஸ்ரீ தலதா மாளிகை எசல பெரஹராவின் முக்கிய அம்சமான ரந்தோலி பெரஹரா ஊர்வலம் இன்று ஆரம்பமாகிறது.

வழமையான மக்கள் கூட்டத்தைவிட ரந்தோலி பெரஹராவுக்கு பல்லாயிரக்கணக்கானோர் வருகை ரந்தோலிப் பெரஹராவைக் காண இன்று கண்டிக்கு வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொலிஸார் பதவி இடைநிறுத்தம்

அதே வேளை, கண்டிப் பெரஹராவின் போது, பொதுமக்கள் மீது கடுமையாக நடந்து கொண்ட இரு பொலிஸாரின் பதவிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

சுமார் 6000 பொலிஸார் கண்டிப் பெரஹராவில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதற்காக வெளியிலிருந்து அநேக பொலிஸார் கண்டிக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

இவர்களில் இருவர் தமது கடமையைச் சரிவர நிறைவேற்றாது, பொதுமக்கள் மீது கடுமையாக நடந்து கொண்டதாகக் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை விசாரித்த மத்திய பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ன, களனி பொலிஸ் நிலையத்தில் சேவை புரியும் இருவரைப் பதவியிலிருந்து இடை நிறுத்தியுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கையில் மேலும் இரு இந்திய துணைத் தூதரகம்இலங்கையில் மேலும் இரு இந்திய துணைத் தூதரகம் அமையவுள்ளது. இந்த தூதரகங்கள் யாழ்ப்பாணம், அம்பனத்தோட்டம் ஆகிய நகரங்களில் அமையவுள்ளன.

இதற்கான ஒப்பந்தத்தை இரு நாடுகளும் கொழும்பில் வெள்ளிக்கிழமை பரிமாறிக்கொண்டன. அதிபர் மகிந்த ராஜபட்ச கடந்த ஜூன் மாதம் இந்தியா வந்த போது அந்நாட்டில் மேலும் இரு துணைத் துதரகத்தை அமைப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டது. இதற்கு செயல்வடிவம் கொடுக்கும் விதத்தில் இப்போது ஒப்பந்தம் வடிவமைக்கப்பட்டு இரு நாடுகளும் பரிமாறிக் கொண்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தை கொழும்பில் இலங்கை வெளியுறவுச் செயலர் ஜெயசிங்கேயும், இந்திய தூதரக அதிகாரி அசோக் கே.கந்தாவும் பரிமாறிக் கொண்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

ஈராக்கிலிருந்து கடைசி அமெ. படைப்பிரிவும் வெளியேற்றம்

ஈராக்கிலிருந்து அமெரிக்க இராணுவத்தின் கடைசி தாக்குதல் படைப்பிரிவும் நேற்று வெளியேறியது.

ஈராக்கில், சதாம் உசேன் ஆட்சி அகற்றப்பட்டபின், அமெரிக்க படைகள் அங்கு குவிக்கப்பட்டன. அமெரிக்க இராணுவம் ஈராக்கிலிருந்து வெளியேற வேண்டும் என, பல்வேறு தரப்பிலும் இருந்து நெருக்கடி எழுந்தது.

இந்நிலையில், அமெரிக்க அதிபராக ஒபாமா பதவியேற்றபின், ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படைகள் அனைத்தும், 2010 ஆகஸ்ட் 31க்குள் முழுமையாக வாபஸ் பெறப்படும் என, அறிவித்தார். இதன்படி, ஈராக்கிலிருந்த அமெரிக்க படைகள் படிப்படியாக வெளியேறின.

அமெரிக்க இராணுவத்தின் நான்காவது ஸ்ட்ரைக்கர் பிரிகேட், இரண்டாவது இன்பன்ட்ரி டிவிஷன் ஆகிய கடைசி தாக்குதல் படைப் பிரிவுகள் நேற்று காலை வெளியேறின. குவைத் வழியாக இந்த படைப்பிரிவினர் நேற்று வெளியேறினர்.

தாங்கள் தற்போது நிம்மதி அடைந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். அமெரிக்க இராணுவத்தின் தாக்குதல் படைப் பிரிவினர் வெளியேறினாலும், வேறு சில பிரிவுகளைச் சேர்ந்த 50 ஆயிரம் வீரர்கள் அங்கு தொடர்ந்து தங்கியுள்ளனர்.

ஈராக் இராணுவத்துக்கு ஆலோசனை கூறுவதற்காகவும், அமெரிக்காவின் நலன் கருதியும் இந்த படைப் பிரிவினர் அடுத்தாண்டு இறுதி வரை அங்கு இருப்பர் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் வசம் ஆயுதங்கள் இருந்தாலும், சுய பாதுகாப்புக்காக மட்டுமே அவற்றை அவர்கள் பயன்படுத்துவர் என்று அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்க இராணுவம், ஈராக்கில் முகாமிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

கிளிநொச்சி மாவட்டம் இடம்பெயர்ந்தோர் காணிகளை வெளியார் கைப்பற்றும் நிலைமை கிடையாது - அரச அதிபர்

கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்த மக்களின் காணிகளை வெளியார் அடாத்தாகக் கைப்பற்றும் நிலைமை எதுவும் கிடையாதென மாவ ட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

காணி உரிமையுள்ள மக்கள் உண்மை யான உறுதிகளுடன் வருவார்களேயானால் அவர்கள் தமது சொந்தக் காணிகளில் குடியமர அனுமதிக்கப்படுவார்களென்றும் அதற்கு எந்தத் தடையும் இல்லையென்றும் அரசாங்க அதிபர் கூறினார்.

தமது சொந்தக் காணியை எவராவது அடாத்தாகக் கைப்பற்றியிருந்தால், பொலிஸ் மற்றும் நீதிமன்றத்தின் ஊடாக அவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க முடியுமென்றும் அவர் குறிப்பிட்டார்.

கிளிநொச்சிக்குத் தென் பகுதியிலிருந்து செல்லும் சிலர் மக்களின் காணிகளை அடாத்தாகக் கைப்பற்றிக் கொண்டிருப்பதாகக் கூறப்படுவதை நிராகரித்த அரச அதிபர் திருமதி கேதீஸ்வரன், அவ்வாறான தகவல்களோ முறைப்பாடுகளோ தமக்குக் கிடைக்கவில்லையென்றும் குறிப்பிட்டார்.

கடந்த சமாதான முன்னெடுப்பு காலத் தில் காணிகளை விற்றவர்கள், அதற்கான உரிமை மாற்றத்தைக் காணி உறுதிகளில் மேற்கொள்ளத் தவறியிருக்கிறார்கள். இதனால் சில சிக்கல்கள் ஏற்பட்டிருக் கின்றன. அவ்வாறு சிக்கல்களை எதிர் நோக்குபவர்கள் நீதிமன்றத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் அரச அதிபர் கூறினார்.

இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெயர்ந்தும் இன்னமும் மீளக்குடியமர முடியாமல் முகாமில் தங்கியுள்ளவர்கள் பற்றிய விபரங்களைத் திரட்டி வருவதாகக் குறிப்பிட்ட அரச அதிபர், அவர்கள் என்ன காரணத்தினால் மீளக்குடியமர முடியாதுள்ளார்கள் என்பதை ஆராய்ந்து வருவதாகவும் கூறினார்.

கண்ணி வெடிகள் அகற்றும் பணிகள் முழுமைப் படுத்தப்படாமையினாலும் பாதுகாப்புக் காரணங்களாலும் சில குடும்பங்கள் மீளக்குடியமர்வதில் தாமதம் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தவிரவும், கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேற்றத்தை முழுமைப்படுத்துவதற்குத் தொடர்ச்சியான நடவடிக்கைகள் இடம்பெறுவதாகக் குறிப்பிட்ட அரச அதிபர் தற்போது வெளி மாவட்டங்களில் தங்கியிருந்து மீளவும் வருபவர்கள் குடியமர்த்தப்பட்டு வருகின்றனர். நேற்றைய தினம் கரைச்சி பகுதியில் 70 குடும்பங்கள் மீளக் குடியேறியதாகவும் தெரிவித்தார். கிளிநொச்சியிலிருந்து இடம்பெயர்ந்து யாழ்ப்பாணம், திருகோணமலை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்குச் சென்றவர்கள் தற்போது சொந்த இடம் திரும்பி வருவதாகவும் அவர் சொன்னார்.
மேலும் இங்கே தொடர்க...

கிழக்கில் மீள்குடியேறியோர் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ரூ. 42.3 மில். ஒதுக்கீடு

கிழக்கில் மீளக் குடியமர்த்தப்பட்ட மக்களின் வீடுகளின் புனரமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்து வதற்கென 42.3 மில்லியன் ரூபாவை அரசாங்கம் வழங்குவதாக மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிரன் தெரிவித்தார்.

அமைச்சர் முரளி தரனின் ஆலோச னைக்கமைய கிழக்கு மாகாணத்தில் யுத் தத்தால் பாதிக்கப் பட்ட மக்களை மீளக்குடியமர்த்தும் திட்டத்துக்கு இணை யாக அந்த மக்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்குடனேயே இந்த 42.3 மில்லியன் ரூபாவை அரசு ஒதுக்கியுள்ளது.

யுத்தத்தால் பாதிக்கப்பட்டு சேதத்துக்குள் ளான 482 வீடுகளை மீண்டும் புதுப்பிப் பதற்காக 27.3 மில்லியன் ரூபாவும் குழாய்நீர் கிணறுகள், மற்றும் குடிநீர்க் கிணறுகளுக்கென 15 மில்லியன் ரூபாவும் வழங்கப்படவுள்ளது என்றும் கருணா அம்மான் தெரி வித்தார்.

கல்குடா, வாகரை வடக்கு மற்றும் வாகரை மத்தி போன்ற பகுதிகளில் வீடுகளை புனரமைக்கும் திட்டத்துக்கும் போரதீவுபற்று, மண்முனை தென்மேற்கு, மண்முணை மேற்கு, ஏறாவூர்பற்று, கோரளைப்பற்று தெற்கு போன்ற பகுதிகளில் கிணறுகள், குழாய்க்கிணறுகள் திட்டத்துக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின் ஊடாக மேற்குறிப்பிடப் பட்ட பகுதிகளில் நீண்ட காலமாக நிலவி வந்த குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் எனவும் பிரதி அமைச்சர் கருணா அம்மான் தெரிவித்தார். இதே போன்று கிழக்கில் ஏனைய பகுதிகளிலும் நிலவும் குடிநீர்ப் பிரச்சினைக்கும் இவ் வாறான திட்டம் விரைவில் நடைமுறைப் படுத்தப்படும் என்றும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

பாதுகாப்பற்ற ரயில்வே கடவைகளில் 66 விபத்துகள்
நாடு பூராவும் பாதுகாப்புக் கடவைகள் அற்ற 569 ரயில்வே கடவைகளும் மூங் கில் தண்டுப் படலைகளுடனான 147 புகை யிரத கடவைகளும் காணப்படுகின்றன. பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகள் காரணமாக 2009 ஆம் ஆண்டில் 66 விபத் துகள் நிகழ்ந்துள்ளன என போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம கூறினார்.

2009 இல் பாதுகாப்பற்ற ரயில்வே கடவைகளில் இடம் பெற்ற விபத்துக்களில் 20 பேர் கொல்லப்பட்டனர்.

பாதுகாப்பான புகையிரதக் கடவை வழிகளை அமைப்பதற்கான பல திட்ட ங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. புகை யிரதக் கடவைகளில் மின்சார மணிகள் அல்லது தன்னியக்க தடைகள் அமைக் கப்பட்டு வருகின்றன. பிரதான ரயில் பாதை யில் 11 உம் வடக்கு பாதை யில் 7 உம் கரையோரப் பாதையில் 16 உம் புத்தளப் பாதையில் 17 உம் களனிவலி பாதையில் 11 உம் அமைக்கப்படுகின்றன.

வட பகுதியில் தலைமன்னாருக்கான பாதையை மீளமைக்கும் திட்டம், மாத்தறை-பெலியத்த ரயில் பாதை திட்டம் என்பவற்றின் போதும் பாதுகாப்பு கடவை களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் இங்கே தொடர்க...

ரூ. 7 கோடி 54 இலட்சத்து 78,000: குறை நிரப்பு சபையில் சமர்ப்பிப்பு

7 கோடி 54 இலட்சத்து 78, 037 ரூபா வுக்கான குறை நிரப்புப் பிரேரணை யொன்றை ஆளும் கட்சி பிரதம கொரடா அமைச்சர் தினேஷ் குணவர்தன நேற்று சபையில் சமர்ப்பித்தார். இதில் அமைச்சர்கள், சுங்கம் என்பவற்றுக்கு வாகனங்களை கொள்வனவு செய்வதற்காக மாத்திரம் 6 கோடி 8 இலட்சத்து 9900 ரூபா ஒதுக் கப்பட்டுள்ளது.

தபால் தொலைத் தொடர்பு அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சருக்கு 3 வாகனங் களையும், பெருந்தோட்டக் கைத்தொழில் பிரதி அமைச்சர், உள்ளூராட்சி மாகாண சபைகள் பிரதி அமைச்சர், கால்நடை வளர்ப்பு அமைச்சர், சமூக சேவைகள் அமைச்சர், பெற்றோலிய தொழிற்துறை பிரதி அமைச்சர், சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார பிரதி அமைச்சர், ஆகியோருக்கு தலா ஒரு வாகனத்தை கொள்வனவு செய்வதற்காகவும் இந்த ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நிதி திட்டமிடல் அமைச்சின் ஆலோச னைக் குழுக் கூட்டத்துக்கு சமர்ப்பிக்கும் வகையில் இந்த தகவல்கள் பாராளுமன் றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. இந்த குறைநிரப்பு ஒதுக்கீட்டுக்கு ஜே.வி.பி. எம்.பி. அநுரகுமார திசாநாயக்க எதிர்ப்புத் தெரிவித்தார். இதனை விவாதத்துக்குட்படுத்த முடியாது என்று கூறிய அமைச்சர் தினேஷ் குணவர்தன தேவையானால் இது குறி த்து விவாதமொன்றை கோர முடியும் என்று தெரிவித்தார். கட்சித் தலைவர் கூட்டத்தில் இது குறித்து முடிவெடுக்க முடியும் என சபாநாயகர் அறிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

தோட்ட தொழிலாளர் சம்பள உயர்வு: கூட்டு ஒப்பந்தத்தை புதுப்பிக்கும் பேச்சை நேர காலத்துடன் ஆரம்பிக்கத் தீர்மானம்மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பதற்கான பேச்சுவார்த்தையை இம்முறை நேரகாலத்துடன் ஆரம்பிக்க மலையகத் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

இது தொடர்பில் தொழிற்சங்க மட்டத்திலான பேச்சுவார்த்தைகளை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் - பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் தினகரனுக்குத் தெரிவித்தார்.

இதற்கு முன்பு உடன்படிக்கையைப் புதுப்பித்தபோது அது காலாவதியாகி சில மாதங்கள் கடந்த பின் னரே பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டது. எனவே, இம்முறை அவ்வாறான நிலையைத் தவிர்ப்பதற்காக நேர காலத்துடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க ஆலோசித்து வருவதாகப் பிரதியமைச்சர் கூறினார்.

முதலாளிமார் சம்மேளனத்துடனான இரண்டு வருட கூட்டு ஒப்பந்தம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் காலாவதியாகிறது. எனினும், உடன்படிக்கை முடிவுற்றுப் புதிய மாதத்திலிருந்து தொழிலாளர்களுக்குச் சம்பள உயர்வு கிடைக்கும் வகையில் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படுமென்று அவர் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்: பாரிய எரிபொருள் கொள்ளை அம்பலம்: 17 பேர் கைது


இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாப னத்திலிருந்து விநியோகிக்கப்படும் எரி பொருட்களை பல்வேறு வழிமுறைகளில் சட்ட விரோதமாக பெற்று சேகரித்து வைத்துள்ள இடங்கள் சுற்றிவளைக்கப்பட்டு கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சின் செயலர் மற்றும் பொலிஸ் மாஅதிபரின் நேரடி உத்தர வுக்கமைய விசேட அதிரடிப் படையினரும் புலனாய்வுத் துறையினரும் மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்புகள் மூலம் இவை கைப்பற்றப்பட்டன.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத் தாபனத்தில் உற்பத்தி செய்யப்படும் பல்வேறு விதமான எரிபொருள் மற்றும் எண்ணெய் வகைகளை திருடி நிலத்துக்கு அடியில் குதங்களை அமைத்து சேகரித்து வந்துள்ளனர். இவர்கள் தரக்குறைவான எண்ணெய் வகைகளை கலவை செய்து இலங்கை முழுவதும் விநியோகித்து வந்துள்ளமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடவத்த, சிரிமெட்டியாகார, தெஹிலவத்த, அத்துருகிரிய போன்ற பகுதிகளில் இவ் வாறான சட்டவிரோத எரிபொருள், எண்ணெய் களஞ்சிய சாலைகள் சுற்றி வளைக்கப்பட்டுள்ளன.

சில பகுதிகளில் நிலத்துக்கு அடியில் வைக்கப்பட்டிருந்த எண்ணெய்க் குதங்களும், சில இடங்களில் வெளியே பாரிய எண்ணெய்க் குதங்களும் கண்டுபிடிக் கப்பட்டன. நீண்ட காலமாக செய்து வந்த பாரிய எரிபொருள், எண்ணெய் மோசடி என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி எண்ணெய்க் குதங்கள் கைப் பற்றிய இடத்தில் தரக் குறைவான எண் ணெய் வகைகளை கலப்படம் செய்ததற்கான சான்றுகள் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் சொலிக்கினம் (களு தெல்) மற்றும் டீசல் உட்பட பெருந்தொகையான எரிபொருட்களும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜே. பி. பி. பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. குற்றப்புலனாய்வுப் பிரிவினரும், குற்றத் தடுப்பு பிரிவினரும் மேலதிக விசாரணை களை மேற்கொண்டு வருகின்றனர்
மேலும் இங்கே தொடர்க...