23 டிசம்பர், 2009

ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடப் போவதில்லையென ஐரோப்பிய ஒன்றியம் தகவல்-


எந்த வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்தவார இறுதிக்குள் முடிவு செய்யவுள்ளது! // தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடுவது பற்றி ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானிக்கவில்லை!

ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டார்கள் என ஒன்றியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி பேர்ணாட் சவேஜ் தெரிவித்துள்ளார். நிதியொதுக்கீடு மற்றும் நேரப்பிரச்சினை காரணமாக ஜனாதிபதித் தேர்தலின்போது கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்வதில் சிக்கல்நிலை தோன்றியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ளுமாறு ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளிடம் தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க கோரிக்கை விடுத்திருந்தார். மேலும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின்போது தமது கண்காணிப்பாளர்களை கடமையில் ஈடுபடுத்த முடியுமென்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் ஜனவரி 26ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட இரு வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள் இணங்கியுள்ளதாக கூறப்படுகின்றது. 2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

ஜனவரி 26ல் நடைபெறவுள்ள தேர்தலுக்கான வாக்குச்சீட்டின் மாதிரி தேர்தல் திணைக்களத்தால் வெளியீடு-


இடம்பெயர்ந்த மக்களுக்கும் மற்றும் நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள மக்களுக்கும் தற்காலிக அடையாள அட்டை வழங்க நடவடிக்கை! // தேர்தல் காலத்தில் விசேட வீதிச் சோதனைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானம்!

ஜனவரிமாதம் 26ம் திகதி நடைபெறவிருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச்சீட்டின் மாதிரியை தேர்தல்கள் செயலகம் வெளியிட்டுள்ளது. வேட்பாளர்களின் பெயர்கள் சிங்கள மொழிமூல வரிசையின் பிரகாரமே இம்முறை அச்சடிக்கப்பட்டுள்ளது. இதன்பிரகாரம் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவின் பெயர் 22ம் இடத்திலும் எதிரணியின் பொதுவேட்பாளர் சரத்பொன்சேகாவின் பெயர் 9ம் இடத்திலும் இருக்கின்றது. ஜனாதிபதி தேர்தலில் 22பேர் போட்டியிடுவதனால் தேர்தலுக்கான வாக்குச்சீட்டு, வரலாற்றிலேயே மிகவும் நீளமானதாக அமைந்துள்ளது இவ்வாக்குச்சீட்டு 56 சென்ரிமீற்றர் நீளத்திலேயே இம்முறை அச்சடிக்கப்படவுள்ளது என்றும் திணைக்களம் அறிவித்துள்ளது.

சம்பள நிலுவைகளை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்-இலங்கை ஆசிரியர் சங்கம்-
அரசாங்கம் அளித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக ஆசிரியர்களின் சம்பள நிலுவைகளை வழங்குவதற்கு அரசாங்கம் தவறியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசெப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எனினும் டிசம்பர் மாதம் 31ம் திகதிக்கு பின்னர் சம்பள நிலுவைகளை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதேவேளை இந்த விடயம் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் எதிர்வரும் ஜனவரி மாத சம்பளத்துடன் நிலுவையை வழங்கவுள்ளதாகவும் கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

dsc080921

23.12.
புளொட் அமைப்பும் வவுனியா நகரசபையும் இணைந்து வவுனியாவில் பாரிய சிரமதானம்-


dsc080851


dsc080821dsc080831dsc080841dsc080851dsc080861dsc080871dsc080881dsc080891dsc080901dsc080911dsc080921dsc080931dsc080941dsc080951dsc080961dsc080981dsc080991dsc081001
வவுனியாவில் தீவிரமடைந்துள்ள டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்காக வவுனியா கோவில்குளத்தில் இன்று பாரிய சிரமதானம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆரம்ப வைபவத்தில் இரத்ததான நிகழ்வும் இடம்பெற்றுள்ளது. புளொட் அமைப்பினரும் வவுனியா நகரசபையினரும் இணைந்தே பொதுமக்களின் பங்களிப்புடன் இந்த சிரமதான பணிகளை முன்னெடுத்துள்ளனர். இதன் ஆரம்ப நிகழ்வு கோவில்குளம் உமாமகேஸ்வரன் ஞாபகார்த்த நூலகத்தில், வவுனியா நகரசபையின் முன்னாள் தலைவரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரும் புளொட் முக்கியஸ்தருமாகிய ஜி.ரீ.லிங்கநாதன் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிகழ்வுகளில் புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், வவுனியா நகரசபைத் தலைவர் எஸ்.என்.ஜி.நாதன், நகரசபையின் உபதலைவர் என்.எம்.ரதன், எஸ்.சுரேந்திரன். இ.சிவக்குமார், கே.பார்த்திபன்,

எஸ்குமாரசாமி மற்றும் புளொட்டின் வன்னிப்பிராந்திய அமைப்பாளர் பவன், புளொட் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான வை.பாலச்சந்திரன் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர். வவுனியாவில் இதுவரையில் 18பேர் டெங்கு நோய்க்குப் பலியாகியுள்ளதாகவும், 700ற்கும் மேற்பட்டவர்கள் இந்நோய் காரணமாக வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் வேகமாக ஆட்களைப் பலிகொண்டு வரும் இந்த ஆட்கொல்லி நோயைக் கட்டுப்படுத்தி உயிரிழப்புக்களைத் தடுத்து நிறுத்துவதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என இங்கு உரையாற்றிய அனைவரும் ஒருமுகமாக வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புளொட் தலைவர் த.சித்தார்த்தன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் மக்கள் மீள்குடியமர்த்தப்பட்ட மல்லாவிக்கு விஜயம்- புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தாhர்த்தன் உள்ளிட்ட புளொட் பிரதிநிதிகள் இன்று முல்லைத்தீவின் மல்லாவிப் பிரதேசத்திற்கு விஜயம் செய்து மீள்குடியமர்த்தப்பட்ட மக்களை சந்தித்து நிலைமைகளைக் கேட்டறிந்துள்ளனர். இவ்விஜயத்தில் புளொட் தலைவர் திரு.சித்தார்த்தனுடன், புளொட் அமைப்பின் வன்னிப் பிராந்திய அமைப்பாளர் பவன், புளொட்டின் முன்னைநாள் பாராளுமன்ற உறுப்பினர் வை.பாலச்சந்திரன் உள்ளிட்ட பிரதிநிதிகளும் சென்றிருந்தனர். இதன்போது புளொட் பிரதிநிதிகள், மல்லாவியில் மீள்குடியமர்த்தப்பட்ட மக்கள், வர்த்தகர்கள் மற்றும் விவசாயப் பிரதிநிதிகளை சந்தித்து நீண்டநேரம் கலந்துரையாடியதுடன்,

அவர்களுடைய குறைகளையும் கேட்டறிந்தனர். அவர்களுடைய குறைகளும், ஏனைய பகுதிகளில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்களுடைய குறைகளைப் போலவே போக்குவரத்து, வீட்டு வசதி, சுகாதாரம் போன்ற குறைபாடுகளாக இருக்கக் காணப்பட்டன. அத்துடன் தங்களுடைய விவசாய உபகரணங்கள், உழவு இயந்திரங்கள், உள்ளிட்ட வாகனங்கள் மற்றும் உடமைகள் யாவும் முல்லைத்தீவு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு கைவிடப்பட்ட நிலையில் இருப்பதாகவும், அவற்றை மீளவும் தங்களுக்குப் பெற்றுத் தருமாறும் அம்மக்கள் கேட்டுக் கொண்டனர். அத்துடன் தமது விவசாய நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கும், வர்த்தக நடவடிக்கைகளை மீளமைக்கவும், வியாபார ஸ்தாபனங்களை மீளக் கட்டுவதற்கும் உதவிகளைப் பெற்றுத்தருமாறும் கேட்டுக் கொண்டனர்.

இதன்போது கருத்துரைத்த புளொட் தலைவர் சித்தார்த்தன் உள்ளிட்ட பிரதிநிதிகள், இங்கிருக்கின்ற சிரமங்கள் மற்றும் குறைபாடுகள் தொடர்பாக அரசாங்க உயர்மட்டத்தினருக்கு எடுத்துக் கூறி, மிக விரைவில் இவற்றுக்கான தீர்வினைப் பெற்றுத்தர முயற்சிப்பதாக உறுதியளித்துள்ளனர். இதேவேளை மக்கள் மீள்குடியமர்த்தப்பட்ட மல்லாவி பகுதியில் சிறுசிறு வர்த்தக நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கான ஆரம்பத்தினைக் காணக்கூடியதாக இருந்ததாக புளொட் தலைவர் உள்ளிட்ட பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...
திருச்செந்தூர்: திமுக வெற்றி

திருச்செந்தூர்இ டிச.23: திருச்செந்தூர் சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலி்ல் பதிவான வாக்குகளை எண்ணும்பணி இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்றது.

அனிதாராதாகிருஷ்ணன் ( தி.மு.க)இ அம்மன் நாராயணன் ( அ.தி.மு.க)இ கோமதி்கணேசன் ( தே.மு.தி.க.இ) உள்ளிட்டோர் களத்தில் இருந்தனர்.

இறுதிச் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் 46இ861 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

14-வது மற்றும் இறுதிச் சுற்று

அனிதாராதாகிருஷ்ணன் (தி.மு.க) - 75223

அம்மன் நாராயணன் ( அ.தி.மு.க) - 28362

கோமதி்கணேசன் ( தே.மு.தி.க.) - 4186வந்தவாசி: திமுக வெற்றி
செய்யார், டிச. 23: வந்தவாசி சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலி்ல் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்றது.

வந்தவாசி தொகுதியில் பதிவான வாக்குகள் அனைத்தும் செய்யார் அரசு கலைக் கல்லூரியில் எண்ணப்பட்டன.

கமலக்கண்ணன் ( தி.மு.க), முனுசாமி ( அ.தி.மு.க.),

ஜனார்த்தனம் ( தே.மு.தி.க.) உள்ளிட்டோர் களத்தில் இருந்தனர்.

இறுதிச் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்திருக்கும் நிலையில் திமுக வேட்பாளர் கமலக்கண்ணன் 38,017 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

16-வது மற்றும் இறுதிச் சுற்று

கமலக்கண்ணன் ( தி.மு.க): 78,827

முனுசாமி ( அ.தி.மு.க.): 40,210

ஜனார்த்தனம் ( தே.மு.தி.க.): 7,068


மேலும் இங்கே தொடர்க...
ஊடகவியலாளர் திஸ்ஸநாயகத்திற்கு பிணை வழங்க சட்டமா அதிபர் இணக்கம்-மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவிப்பு

No Image


கொழும்பு மேல்நீதிமன்றத்தினால் 20 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஊடகவியலõளர் ஜே.எஸ். திஸ்ஸநாயகத்திற்கு பிணை வழங்க ஆட்சேபனை எதுவுமில்லை என்று சட்டமா அதிபர்இ மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

தமக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை எதிர்த்து திஸ்ஸநாயகம் மேன்முறை யீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்ததை அடுத்துஇ தம்மைப் பிணையில் செல்ல அனுமதிக்குமாறு அவர் மனுத்தாக்கல் செய்துள்ளார். ஜே.எஸ். திஸ்ஸநாயகம் 2006ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதலாம் திகதிக்கும்இ 2007ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதலாம் திகதிக்கும் இடையே இன நல்லுறøவச் சீர்குலைக்கும் வகையில் வட. கிழக்கு மாதாந்த சஞ்சிகையை எழுதிஇ அச்சிட்டு விநியோகித்தார் என்றும்இ இது பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தண்டனைக்கு உரிய குற்றமாகும் என்றும் அவருக்கு எதிராக மூன்று குற்றச்சாட்டுக்கள் சுமத்தி தொடரப்பட்ட வழக்கில் அவர் குற்றவாளியாகக் காணப்பட்டார்..

மேற்படி சஞ்சிகையை நடத்துவதற்கு நிதி சேகரித்தமைஇ இதன் மூலம் பயங்கரவாத்தை ஊக்குவித்தமை போன்ற அவசரகாலப் பிரமாணங்களின் கீழ்இ தண்டனைக்குரிய குற்றச்செயல்களைப் புரிந்த குற்றவாளியாகவும் அவர் இனம் காணப்பட்டார். 2008ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட தமது நண்பர் யசிகரனையும் அவரது மனைவியையும் பார்ப்பதற்காக மறுதினம் திஸ்ஸநாயகம் பயங்கரவாத விசாரணைப்பிரிவுக்குச் சென்றபோது கைதுசெய்யப்பட்டார்
அவுஸ்திரேலிய அகதி அந்தஸ்து கோருவோரில் புலி உறுப்பினர்களும் உள்ளனர்:இலங்கை


No Image


அவுஸ்திரேலியாவிற்கு அகதி அந்தஸ்து கோரி சட்டவிரோதமாகச் சென்ற இலங்கையர்களுள் 3 விடுதலை புலி உறுப்பினர்களும் அடங்குவதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்தோனேஷிய துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள் அவுஸ்திரேலிய அகதி அந்தஸ்து கோரும் ஏனைய 255 பேரினது அகத் அந்தஸ்து கோரிக்கையிலும் இது பாதிப்பை ஏற்படுத்துமென எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெகார்த்தாவிலுள்ள இலங்கைக்கான தூதரக அதிகாரிகள் இவர்களை அடையாளம் கண்டுள்ளதாக அவுஸ்திரேலியாவிற்கான இலங்கை தூதுவர் சேனக வல்கம்பாய 'த அவுஸ்திரேலியன்' இற்கு தெரிவித்துள்ளார்.விடுதலை புலிகள் தொடர்பாக கிடைத்த புகைப்படங்களின் அடைப்படையில் இவ் முன்னாள் போராளிகள் இனங்காணப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

எனினும் இலங்கை அரசாங்கம் விடுத்துள்ள இவ்வறிப்பை அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மறுத்துள்ளதுடன்இ அவுஸ்திரேலியா விடுதலை புலிகள் குறித்து விழிப்புணர்வுடன் இருப்பதாக அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் 'த அவுஸ்திரேலியன்' இற்கு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதுஜனவரி மாதம் 26 ஆம் திகதி நடைபெறவிருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச்சீட்டின் மாதிரியை தேர்தல்கள் செயலகம் வெளியிட்டுள்ளது.

No Image

வேட்பாளர்களின் பெயர்கள் சிங்கள மொழிமூல வரிசையின் பிரகாரமே இம்முறை அச்சடிக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவின் பெயர் 22 ஆம் இடத்திலும் எதிரணியின் பொது வேட்பாளர் சரத்பொன்சேகாவின் பெயர் 9 ஆம் இடத்திலும் இருக்கின்றது.

ஜனாதிபதி தேர்தலில் 22 பேர் போட்டியிடுவதனால் தேர்தலுக்கான வாக்குச்சீட்டுஇ வரலாற்றிலேயே மிகவும் நீளமானதாக அமைந்துள்ளது இவ் வாக்குச்சீட்டு 56 சென்ரிமீற்றர் நீளத்திலேயே இம்முறை அச்சடிக்கப்படவுள்ளது என்றும் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...
ஐ.நா விளக்கம் கோரிய விவகாரம்:
அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் தேசிய முக்கியத்துவமான பிரச்சினை

‘சண்டே

லீடர்’ பத்திரிகையில் வெளியான செய்தியை அடிப்படையாகக்

கொண்டு ஐ.நா. விளக்கம் கோரியிருப்பதை நாட்டுப் பிரச்சினையாக அனைவரும் ஒன்றுபட்டு எதிர்கொள்ள வே

ண்டுமென பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க வேண்டுகோள் விடுத்தார்.

‘இதனையொரு அரசியல் பிரச்சினையாகப் பார்க்காமல் தேசியப் பிரச்சினையாகப் பார்க்க வேண்டும்’ எனவும் அவர் தெரிவித்தார்.

பிரதமர் அலுவலகத்தில் நேற்று மாலை விசேட செய்தியாளர் மாநாடு நடந்தது. பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்க தலைமையில் நடைபெற்ற இந்தச் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பாஇ ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் கணேகல ஆகியோர் கலந்துகொண்டனர்.

‘சண்டே லீடர்’ பத்திரிகைக்கு பொன்சேகா வழங்கிய பேட்டி தொடர்பாக ஐ.நா. விளக்கம் கோரியுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு விளக்கிய அவர் மேலும் கூறியதாவது;

ஐ.நா. சபை டிசம்பர் 18ம் திகதி இலங்கை அரசாங்கத்திற்கு கடிதமொன்றை எழுதியுள்ளது. மே 17ம் திகதி யுத்தம் முடிவுற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில்இ வெள்ளைக்கொடியுடன் வந்த புலி உறுப்பினர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும்இ இதில் மூன்று புலி முக்கியஸ் தர்களின் பெயர்களினதும் அவர்களது குடும்பங்கள் தொடர்பாகவும் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது. அவ்வாறான சம்பவங்கள் நடந்திருந்தால் பூரண விளக்கம் தருமாறு ஐ.நா. கோரியுள்ளது என பிரதமர் தெரிவித்தார்.

‘இவ்வாறான சம்பவமொன்று நடக்காத நிலையில் விளக்கமளிக்குமாறு ஐ.நா. கேட்டிருக்கிறது. இதனை எந்த வகையிலும் ஏற்க முடியாது’ என பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்க சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பாக தனிநபர் எவரையும் நான் குறை கூறவில்லையெனத் தெரிவித்த பிரதமர்இ முன்னாள் அதிகாரியான பொன்சேகாஇ சண்டே லீடர் பத்திரிகைக்கு வழங் கிய பேட்டியை அடிப் படையாகக் கொண்டே இந்த விளக்கம் கோரப்பட்டுள்ளது என்றார்.

“யார் இதனைக் கூறியிருந்தாலும் ஒரு தனிநபர் பிரச்சினையாக இதனைக் கருத முடியாது. நாடு என்ற ரீதியிலேயே நாம் இதனை எதிர்கொள்ள வேண்டி யிருக்கிறது. நடக்காத ஒரு பிரச்சினைக்கு நாம் எந்த வகையில் விளக்கம் கொடுக்க முடியுமெனவும் பிரதமர் கேள்வி எழுப்பினார். “சர்வதேச அழுத்தங்கள்” வந்த வண்ணமே இருக்கின்றன. அவை ஒவ்வொரு வடிவத்தில் வருகின்றன.

இந்தப் பிரச்சினைக்கு முகம்கொடுப்பதற்கு நாம் அனைவரும் ஒன்று பட்டுச் செயற்பட வேண்டும். நாடு என்ற ரீதியில் இதனை நாம் எதிர்கொள்ள வேண்டும் என பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்க வேண்டுகோள் விடுத்தார்.


இராணுவத்தினர் மீதான குற்றச்சாட்டைஅரசாங்கம் முற்றாக நிராகரிப்பு

ஐ. நா. அதிகாரிகளுடன் ஜனாதிபதி பேச்சு நடத்துவார்


எந்தவொரு இராணுவ அதிகாரியையும் யுத்தக் குற்றச்செயல் விசாரணைகளுக்;கு ஆஜர்ப்படுத்தப் போவதில்லை -அரசாங்கம் தெரிவிப்பு! // ஐக்கிய தேசியக் கட்சி காரியாலயம் தீக்கரை!

இராணுவத்தினர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை அரசாங்கம் முற்றாக நிராகரிப்ப துடன் சரத் பொன்சேகாவின் கூற்றை அடிப்படையாகக் கொண்ட ஐ. நா. சபையின் அறிக்கை தொடர்பில் அரசாங்கம் ராஜதந்திர ரீதியில் செயற்படவுள்ளதாகவும் அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

இது விடயத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது நேரடி அவதானத்தைச் செலுத்தியுள்ளதுடன் ஐ. நா. அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளாரெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் மாநாடு நேற்று கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நடைபெற்றது. அமைச்சர் ஜீ. எல். பீரிஸ்இ பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ஆகியோரும் கலந்து கொண்ட இம் மாநாட்டில் அமைச்சர் டளஸ் அழகப் பெரும மேலும் தெரிவித்ததாவது:-

இவ்விவகாரத்தை எவரும் தேர்தலோடு சம்பந்தப்படுத்தக் கூடாது. இது தாய் நாட்டையும் தாய் நாட்டை மீட்க அர்ப்பணிப்புடன் செயற்பட்ட இராணுவத்தினரையும் களங்கப்படுத் தும் விடயமாகும். பயங்கரவாதத்தை வெற்றி கொண்டு முழு உலகத்தின் பாராட்டுக்கும் உரித்தான எமது படையினர் மீது சுமத்தப்பட்டுள்ள இக் குற்றச்சாட்டுக்கு எதிராக நாட்டு மக்கள் தமிழ்இ சிங்களம்இ முஸ்லிம் என்றில்லாமல் இணைந்து செயற்பட வேண்டியது அவசியம்.

இது சரத் பொன்சேகா வெற்றி பெறுவதற்கான போராட்டமல்லஇ படையினரையும் நாட்டையும் அபகீர்த்திக்குள்ளாக்கவே பொன்சேகா ஜனாதி பதி வேட்பாளராக வந்துள்ளார் என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். (ஸ)

தமிழ்க் கைதிகளின் விடுதலை; முக்கிய அறிவிப்பு அடுத்தவாரம்

ஒரே தடவையில் தீர்க்கும் நடவடிக்கை


வழக்குகள் எதுவுமின்றி நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் கைதிகளின் விடுதலை தொடர்பில் அடுத்த வாரம் தீர்மானகரமான முடிவொன்று எட்டப்படவுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரைக்கமைய இது தொடர்பில் நேற்றைய தினம் நீதித்துறை அதிகாரிகள் மட்டத்தில் முக்கிய கலந்துரையாடலொன்று நடத்தப்பட்டுள்ளது.

இந்தக் கலந்துரையா டலின் பெறுபேறாக கைதிகளின் விடுதலை தொடர்பில் அடுத்த வாரம் முக்கிய அறிவிப்பொன்று வெளியாகவுள்ளது.

தமிழ்க் கைதிகளின் விடுதலைக்குத் துரித நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி யின் சிரேஷ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷவிடம்இ மலையகத் தமிழ்க் கட்சிகள் கடந்த வாரம் ஹட்டனில் வைத்து வேண்டுகோள் விடுத்திருந்தன. இந்தப் பின்னணியில்இ நேற்றைய தினம் முக்கிய கலந்துரையாடல் நடத்தப்பட்டதாக நீதிஇ சட்ட மறுசீரமைப்பு பிரதியமைச்சர் வீ. புத்திரசிகாமணி தெரிவித்தார்.

அனைத்துக் கைதிகளின் பிரச்சினைக ளையும் ஒரே தடவையில் தீர்த்துவைக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டு வருவதாக பிரதியமைச்சர் கூறினார். வழக்குகள் எதுவுமின்றி சிறைகளில் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகள் தம்மை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி பலமுறை உண்ணாவிரதப் போராட்டங்களை மேற்கொண்டனர்.

அதேநேரம்இ தமது விடுதலைக்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு மகஜர்களை அனுப்பிவைத்திருந்தனர். இதன் விளைவாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அறிவுறுத்தலுக்கு அமையஇ கைதிகளின் விடுதலை தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள நீதிசட்ட மறுசீரமைப்பு அமைச்சு ஏற்பாடுகளை மேற்கொண்டது.

இதற்கிணங்கஇ கைதிகள் கோவைகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கவென பத்துச் சட்டத்தரணிகளைக் கொண்ட விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டது. இதன்படி வழக்குத் தொடர்வதற்கு அவசியமில்லாதவர்களை விடுதலை செய்யவும் ஏனையவர்களுக்கு வழக்குத் தொடரவும் ஒழுங்குகள் மேற்கொள்ள ப்படுமென அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும்இ தற்போது அனைத்துக் கைதிகள் தொடர்பிலும் ஒரே தடவையில் நடவடிக்கை எடுப்பது பற்றிக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கு ஏதுவாகவே நேற்றைய தினம் முக்கிய கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது. பெரும்பாலும் அடுத்தவாரமளவில் கைதிகளின் விடுதலை குறித்து சாதகமான அறிவிப்பு வெளியாகவு ள்ளது. வழக்குகள் எதுவுமின்றி பல்வேறு சிறைகளில் சுமார் 600 தமிழ்க் கைதிகள் பல வருடங்களாகத் தடுத்து வைக்கப்ப ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...