20 ஜூலை, 2010

மீண்டும் கவுரவ கொலை: தலித் வாலிபரை மணந்ததால் மகளை கொன்ற தாய்

மீண்டும் கவுரவ கொலை:    தலித் வாலிபரை மணந்ததால்    மகளை கொன்ற  தாய்

வட மாநிலங்களில் காதலித்து திருமணம் செய்பவர்களை குடும்ப கவுரவத்மீண்டும் கவுரவ கொலை: தலித் வாலிபரை மணந்ததால் மகளை கொன்ற தாய்துக்காக கொலை செய்வது அதிகரித்து வருகிறது. இதை தடுக்க கடுமையான சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆனாலும் கவுரவ கொலைகள் தொடர்ந்து அதிகரித்தப்படி உள்ளது.

உத்தரபிரதேசம் மாநிலம் புலந்த்சார் என்ற இடத்தில் நேற்று ஒரு கவுரவ கொலை நடந்தது.

இந்த ஊரை சேர்ந்தவர் சங்கீதா நொய்டாவில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருடன் வேலை பார்த்து வந்தவர் ரவீந்தர்.

இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். சங்கீதா உயர் ஜாதியை சேர்ந்தவர். ரவீந்தர் தலித் வகுப்பைச் சேர்ந்தவர். இதனால் அவர்கள் காதலுக்கு சங்கீதா பெற்றோர் எதிர்ப்பு தெரி வித்து வந்தனர்.

இந்த நிலையில் இருவரும் வீட்டை விட்டு ஓடி கடந்த 11-ந்தேதி திருமணம் செய்து கொண்டனர்.

இதை அறிந்த சங்கீதா பெற்றோர் சங்கீதாவை சந்தித்து உங்களுக்கு முறைப் படி பெரிய அளவில் விழா நடத்தி திருமணம் செய்து வைக்கிறோம். எங்களுடன் வந்து விடு எனக்கூறி சங்கீதாவை அழைத்து சென்றனர்.

வீட்டிற்கு சென்றதும் சங்கீதாவை அடித்து உதைத்தனர். அவருடைய தாயாரும் மற்றும் 3 உறவினர்களும் சேர்ந்து சங்கீதா கழுத்தை நெரித்து கொன்றனர். பின்னர் உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்தனர்.

சங்கீதா தற்கொலை செய்து கொண்டதாக நாடக மாடினார்கள். ஆனால் போலீசார் இது கொலை என்பதை கண்டுபிடித்து 4 பேரையும் கைது செய்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

கருணாநிதி ஆலோசனைப்படி இலங்கை தமிழர் நிலை அறிய அதிகாரிகள் குழு நியமனம் மன்மோகன்சிங் உறுதி

கருணாநிதி ஆலோசனைப்படி    இலங்கை தமிழர் நிலை அறிய    அதிகாரிகள் குழு நியமனம்    மன்மோகன்சிங் உறுதி

இலங்கை தமிழர் நிலை அறிய முதல்-அமைச்சர் கருணாநிதி ஆலோசனைப் படி அதிகாரிகள் குழு நியமிக்கப்படும் என்று பிரதமர் மன்மோகன்சிங் உறுதி அளித்துள்ளார்.

மழைக்கால கூட்டத் தொடர் தொடங்க இருப்பதையொட்டி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கட்சிகள் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் ஆலோசனை நடத்தின.

இதில் பிரதமர் மன்மோகன்சிங், மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம், தி.மு.க. சார்பில் டி.ஆர்.பாலு, தேசியவாத காங்கிரஸ் சார்பில் பிரபுல் பட்டேல், தேசிய மாநாட்டு கட்சி சார்பில் பரூக் அப்துல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தி.மு.க. சார்பில் பங்கேற்ற நாடாளுமன்ற கழக குழுத்தலைவர் டி.ஆர்.பாலு கூறியதாவது:-

இலங்கையில் இடம் பெயர்ந்து வாழும் தமிழர்களை உடனடியாக அவர்களது சொந்த இருப்பிடங்களில் குடியமர்த்தும் பணியை விரைவாக காலதாமதமின்றி நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல் இலங்கை ராணுவத்தால் தமிழக மீனவர்கள் துன் புறுத்தப்படுவதும், சுட்டுக்கொல்லப்படுவதும் தொடர்கிறது. இதைதடுத்திட பல முறை முதல்-அமைச்சர் கருணாநிதி வலியுறுத்தி வருகிறார். இதற்காக இந்திய அரசு எடுக்கும் நடவடிக்கையால் இலங்கை ராணுவம் தங்களது கொடுஞ் செயலை நிறுத்தவில்லை.

இதற்கு தீர்வு காண தமிழக மீனவர்களுக்கு இந்திய கடலோர காவல் படை பாதுகாப்பு அளிக்க வேண்டும். கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் பத்திரமாக வீடு திரும்பும் வரை அவர்களுக்கு உயிருக்கும் உடமைக்கும் உத்தரவாதம் ஏற்படும் நிலையை உருவாக்க வேண்டும்.

இலங்கை தமிழர்கள் மீள் குடியேற்றத்திற்காக அவர்களுக்கு வீடு கட்டித்தரவும் பல்வேறு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும் இந்திய அரசு மூலம் 500 கோடி ரூபாயும், இரண்டாவதாக 50 ஆயிரம் வீடுகள் கட்டித்தர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது. இந்திய அரசினால் வழங்கப்பட்ட இத்தொகை எந்த அளவுக்கு முறையாக செலவழிக்கப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ள முடியவில்லை.

இதற்காக முதல்- அமைச்சர் கருணாநிதி அண்மையில் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், இலங்கை அரசு தமிழர் பகுதிகளில் மேற்கொண்ட மறுவாழ்வுப் பணிகளையும், பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள உண்மையான நிலைமைகளையும் கண்டறியவும் இந்திய அரசு தூதரகம் மூலமாகவோ அல்லது சிறப்பு தூதரை அனுப்புவதன் மூலமாகவோ நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பதோடு, பாதிக்கப்பட்ட தமிழர்களின் மறுவாழ்வுக்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் அவர்கள் திருப்தி அடையும் வகையில் அமைய இன்னும் எத்தனை நாட்கள் தேவைப்படும் என்பதையும் அறிந்து வர வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் ஆலோசனை கூறியிருந்தார்.

முதல்-அமைச்சரின் இந்த ஆலோசனையை உடனடியாக செயல்படுத்த தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு இந்திய அரசின் சார்பில் மூத்த அதிகாரிகள் குழுவை நியமித்து இந்திய அரசு கொடுத்த நிதி இலங்கை தமிழர்களுக்கு முறையாக கிடைத்து அதன் பயனை முழுமையாக அவர்கள் அடைய வேண்டும்.

இலங்கையில் மழைக்காலம் தொடங்கி விட்ட நிலையில் அங்கே தமிழ் மக்கள் அல்லலூறாமல் தடுக்க உடனடியாக இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு டி.ஆர்.பாலு பேசினார்.

இதற்கு பிரதமர் மன் மோகன்சிங் அளித்த பதில் வருமாறு:-

இந்தியாவின் மூத்த அரசியல் தலைவரான தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதியின் கோரிக்கை நிச்சயமாக நிறைவேற்றப்படும்.

இந்திய அரசு இலங்கைத் தமிழர்களின் மறு வாழ்விற்காக வழங்கப்பட்ட நிதி முறையாக செலவிடப்படுகிறதா என்பதை அறிந்திட அதிகாரிகள் குழுவை நியமித்து முறைப்படி அனுமதி பெற்று இலங்கைக்கு அனுப்பி வைத்திட நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு பிரதமர் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

ரொபர்ட் ஓ பிளேக் நாளை இலங்கை வருகை

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி செயலர் ரொபர்ட் ஓ பிளேக் நாளை இலங்கை வரவுள்ளதாக அந்நாட்டு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அவரது இலங்கை விஜயத்தின் போது அரச தரப்பினர், எதிர்க்கட்சிகள்,சமூக அமைப்பினர், ஆகியோரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

புகலிடக் கோரிக்கைக்கான தகைமையை நிரூபிக்கத் தவறுவோர் திருப்பி அனுப்பப்படுவர்

இலங்கையின் நிலைமையில் முன்னேற்றம் காணப்படுவதால் குறைந்த எண்ணிக்கையானோருக்கே அவுஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்து வழங்கப்படும் சாத்தியம் காணப்படுகிறது.

புகலிட கோரிக்கைக்கான தகைமையை நிரூபிக்க தவறுவோர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

இது குறித்து அவுஸ்ரேலிய தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில்;

இலங்கையிலிருந்து கிடைக்கும் தகவல்களின் அடிப்படையிலும் இலங்கையில் நிலைமை முன்னேற்றமடைந்து வருகிறது என்று அகதிகளுக்கான ஐக்கியநாடுகள் நிறுவனத்தின் அகதிகள் தொடர்பான வழிகாட்டு நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாலும் அவுஸ்திரேலிய அரசாங்கம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இலங்கை அகதிகளின் விண்ணப்பங்களை இப்பொழுது நுணுக்கமாக பரிசீலனை செய்ய ஆரம்பித்துள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு பயணிக்கும் நோக்கத்தை கொண்டுள்ள இலங்கையர்களுக்கு அந்நாட்டின் பிரதம மந்திரி ஜுலியா கிலார்ட் விடுத்துள்ள எச்சரிக்கையில்: மக்களை சட்டவிரோதமாக கடத்திச் செல்லும் முகவர்களுக்கு பணத்தை கொடுத்து உயிராபத்தை எதிர்நோக்கி இவ்வளவு தூரத்தையும் கடந்து நீங்கள் அவுஸ்திரேலியாவில் வந்து இறங்கியதும் அநேகமாக நீங்கள் சொந்த நாட்டுக்கே திருப்பி அனுப்பப்டும் நிலைமையை எதிர்கொள்ளலாம்.

இலங்கை தொடர்பாக ஐக்கியநாடுகள் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அகதிகள் தொடர்பான திருத்தியமைக்கப்பட்ட வழிகாட்டு நூலை மேற்கோள் காட்டிய பிரதமர் கிலார்ட் அகதிகள் ஏற்பு விகிதம் வீழ்ச்சியடையலாம் என்று கூறினார். இலங்கையிலிருந்து வருவோர் அனைவரும் அகதிகள் என்று கட்டுமேனியாக தீர்மானிப்பதற்கு பதிலாக சகல விண்ணப்பங்களையும் தனித்தனியாக பரிசீலனை செய்ய வேண்டுமென ஐக்கிய நாடுகள் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளதை பிரதமர் கிலார்ட் சுட்டிக் காட்டியுள்ளார்.

பிராந்தியத்திலுள்ள சக நாடுகளுடன் நெருக்கமாக பணியாற்றுவதன் மூலம் மக்களை சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கைகளுக்கு முடிவுகட்டுவதென அவுஸ்திரேலிய அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

எம்.ரி.வி மீது தாக்குதல் மேற்கொண்டவர்களைக் கைது செய்யப் பணிப்பு

எம்.ரி.வி மீது தாக்குதல் மேற்கொண்டவர்களைக் கைது செய்ய கொழும்பு கோட்டை நீதிமன்றம் பொலிஸாருக்கு இன்று உத்தரவிட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 22 ஆம் திகதியன்று கொழும்பு, பிரேபுரூக் பிளேஸில் அமைந்துள்ள எம்.ரி.வி தலைமையத்துக்குள் புகுந்த கும்பல் அவ்வலுவலகத்தைத் தாக்கிச் சேதப்படுத்தியது. இச்சம்பவத்துடன் தொடர்பான 16 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று கொழும்பு கோட்டை நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இதன்போது சம்பவத்தின் சந்தேகநபர்கள் என சிரச தொலைக்காட்சி நிறுவனம் தந்துள்ள பட்டியலிலுள்ள 14 பேர் எங்கே இருக்கிறார்கள் என்ற விசாரணை இன்னமும் நடந்து வருவதாக பொலிஸார் நீதிபதிக்குத் தெரிவித்தனர்.

இதற்குப் பதிலளித்த நீதிபதி, குறித்த தாக்குதல் சம்பவத்தைப் படம்பிடித்த புகைப்படக்காரர்களிடம் வாக்குமூலம் பெற்று அதன் உதவியுடன் சந்தேகநபர்களை உடனே கைது செய்யும்படி பொலிஸாருக்கு உத்தரவிட்டார். இத்தாக்குதல் சம்பவத்தின் சான்றுகளாக உள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் நீதிபதி பார்வையிட்டார்.

நீதிமன்ற விசாரணைக்கு இன்று சமூகமளிக்கத் தவறிய 12ஆம், மற்றும் 14ஆம் சந்தேகநபர்களைக் கைது செய்யும் படியும் நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

ணில் விக்கிரமசிங்க இன்று இரவு இந்தியா விஜயம்

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று இரவு இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்திய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பினை ஏற்று, விஜயம் செய்யும் ஐ.தே.க தலைவர் ரணில் இந்திய பிரதமர் மன் மோகன் சிங் மற்றும் சிரேஷ்ட அரசியல் தலைவர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

இந்நிலையில் இந்தியா செல்லும் ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க இம் மாத இறுதியில் நாடு திரும்ப உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

நீல் பூனே வெளிநாட்டமைச்சர் ஜி.எல்.பீரிஸை நாளை சந்திப்பார்

ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூனுடன் கலந்துரையாடுவதற்காக அமெரிக்கா சென்றிருந்த இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதி நீல் பூனே இன்றைய தினம் இலங்கை வர உள்ளார்.

இலங்கை திரும்பியதும் இவர் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸை சந்தித்துக் கலந்துரையாட இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சந்திப்பு அனேகமாக நாளைய தினம் இடம்பெறலாம் எனவும், இதனிடையே நீல் பூனே ஐ.நா செயலாளர் நாயகத்தின் பிரத்தியேக கடிதம் ஒன்றையும் எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

மஹிந்த சிந்தனையா? ஹெகலிய ரம்புக்வெலவின் சிந்தனையா? அரியநேத்திரன் கேள்வி

இந்த நாட்டின் செயற்பாடுகள் மஹிந்த சிந்தனையின் அடிப்படையிலா அல்லது ஹெகலிய ரம்புக்வெலவின் சிந்தனையின் அடிப்படையிலா தற்போது நடைமுறைபடுத்தப்படுகிறது என்ற சந்தேகம் ஏற்படுகின்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கேள்வி எழுப்புகிறார்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தாந்தாமலை பிரதேசத்தில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பின் போது அவர் தொடர்ந்து பேசுகையில் வடக்கு கிழக்கு மகாணங்களில் உயர் பாதுகாப்பு வலயங்கள் படிப்படியாக குறைக்கப்படுமென்றும் அங்கிருந்து இராணுவங்கள் மீளழைக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்வை தோற்றுவிப்பதாக ஜனாதிபதி அவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை சந்தித்த போது எங்களிடம் கூறினார்.

அண்மையில் கிளிநொச்சியில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் பின்பும் இவ்வாறான கருத்தை வெளியிட்டார். ஆனால் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல உயர் பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்படமாட்டாது என்றும் அங்கு மீளவும் இராணுவம் குவிக்கப்படும் என்றும் தனியார் காணிகள் இராணுவ முகாம்களுக்காக தொடர்ந்து பயன்படுத்தப்படும் என்று கூறியுள்ளார்.

தமிழ் மக்களை தொடர்ந்தும் அச்ச சூழ் நிலையில் வைத்துக் கொள்வதை அவர் விரும்புவதாகவே நான் பார்க்கின்றேன். யுத்தம் முடிவடைந்து ஒரு வருடம் கடந்துவிட்டது இங்கு அமைதியான சூழ் நிலை உள்ளதாக கூறும் அரசாங்கம் ஏன் இன்னும் இராணுவ மயமாக்கலுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றது. இவரின் கருத்துக்கள் தமிழ் மக்கள் மத்தியில் மேலும் அச்சத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளன.

யப்பான், கொரியா போன்ற நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவங்களை வாபஸ் பெற வேண்டும் என்று மக்கள் எதிர்ப்பு தெரிவித்த போதும் அவர்கள் இராணுவத்தை மீளப் பெறவில்லை என்று அமெரிக்காவை ஹெகலிய உதாரணம் காட்டியுள்ளார். அப்படி என்றால் அவரிடம் நாங்கள் ஒன்றை சொல்கின்றோம் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயத்தில் பல்லின மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய அரசியல் தீர்வைப் கொடுக்க சுவிஸ், கனடா போன்ற நாடுகளில் உள்ள அரசியல் முறையை பின்பற்ற அமைச்சர் ரம்புக்வெல இந்த நாடுகளை முன்னுதாரணமாக கொள்ளவேண்டும் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

ஊடகவியலாளர் மேம்பாட்டுக்காக அதிகாரசபை அமைக்கத் திட்டம்




உதவும் வகையில் ஊடக அபிவிருத்தி அதிகார சபை ஒன்றை அமைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக வெகுசன ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வல்ல தெரிவித்தார்.

கண்டி மாவட்ட ஊடகவியலாளர்களுக் கான கருத்தரங்கொன்றை கண்டி சுவிஸ் ஹோட்டலில் ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அமைச்சர் தொடர்ந்து கூறுகையில் :ஊடகவியலாளர்களின் தொழில்சார் தன்மை மற்றும் அது சார்ந்த துறையில் மேம்பாட்டையும் ஏனைய தொழில் துறையினருக்குக் கிடைக்கின்ற தொழில் அங்கீகாரத்தை ஊடகவிய லாளர்களுக்கும் ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும் எனக் குறிப்பிட்டார்.

இந்த அதிகார சபை ஊடாக ஊடகங்களை கட்டுப்படுத்தாது அதற்குப் பதிலாக ஊடகவியலா ளர்களின் மேம்பாட்டுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படும் என மேலும் தெரிவித்தார்.

இலங்கை ஊடகவியலாளர்களுக்கென அரசாங்கம் வழிகாட்டல் ஒன்றை அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. ஊடகவியலாளர்களின் தொழில்சார் விழுமியங்களை மேம்படுத்தும் வகையிலேயே இதனை அறிமுகப் படுத்த உள்ளோம்.

பயங்கரவாதத்துக்கு முற்றுப் புள்ளி வைத்த நாம் இன்று நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்கிறோம். ஆகவே நாட்டின் அபிவிருத்திக்கு ஊடகத் துறையின் பங்களிப்பும் அவசியம். இதனையொட்டி ஊடகத்துறை வளர்ச்சிக்காக அதிகார சபை ஒன்றினை அமைக்க ஆலோசித்து வருகிறோம்’

ஊடகத்துறை தொடர்பாக எதிர்கால வேலைத்திட்டம் ஒன்றினை அமைக்க வேண்டும். கலந்துரையாடல்கள் மூலம் இந்த நாட்டின் எதிர்காலம் எப்படி அமைய வேண்டும் என திட்டமிடப்பட வேண்டும். ஊடகவியலாளர்களுக்கு கடன் கொடுத்து கடனாளிகளாக்காமல் அவர்க ளுக்கு தேவையான முதலீடுகளை பெற் றுக் கொடுத்து பொருளாதார ரீதியாக பலம் மிக்கவர்களாக மாற்றப்பட வேண்டும்.

ஊடகத்துறையில் நவீன தொழில்நுட்ப முறைகளை அறிமுகம் செய்யவுள்ளோம் எனவும் தெரிவித்தார்.

யுத்தத்துக்குப் பின்னரான சர்வதேச சவால்கள் மற்றும் மக்கள் சபை கருத் திட்டத்தின் ஊடாக மக்களை வலுப்பெறச் செய்தல் ஆகிய தொனிப் பொருளில் கருத் தரங்கில் விரிவுரைகள் நடைபெறவுள்ளன. வெகுசன ஊடக அமைச்சும் அரச தகவல் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள அரச கொள்கைகள் தொடர்பாக ஊடகவியலாளர்களை அறிவுறுத்தும் கருத்தரங்கு நேற்று கண்டியில் ஆரம்பமானது.

இன்றைய நிகழ்வில் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் பீ. பி. கனேகல மற்றும் அரச தகவல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ஆரியரத்ன அத்துகல உட்பட பலர் கலந்துகொள்வர்.
மேலும் இங்கே தொடர்க...

ஹுருளு வனாந்தரத்தில் பாரிய தீ; 2500 ஏக்கர் நாசம்




ஹபரண ஹுருளு வனாந்தரப் பகுதியில் நேற்று ஏற்பட்ட திடீர் தீயினால் சுமார் 2,500 ஏக்கர் காடு சாம்பலாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது திட்டமிட்ட காடு எரிப்பாக இருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது.

இந்தப் பிரதேசத்தில் ஏற்பட்ட தீயை அணைப்பதற்காக சீகிரியாவிலுள்ள விமானப்படையினரின் உதவி பெறப் பட்டது.

இதனையடுத்து விமானப்படையின் இரண்டு ஹெலிகொப்டர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.

என்றாலும், நேற்று இரவு வரை தீ முழுமையான கட்டுப்பாட்டிற்குள் வரவில்லையென வன பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். விமானப்படையினருக்கு உதவியாக பொலிஸாரும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

வடக்கு, கிழக்கின் அபிவிருத்திக்கு அனைத்து நாடுகளும் ஒத்துழைக்க வேண்டும் ஆசிய வலய வறுமை ஒழிப்பு மாநாட்டில் பிரதமர்

வடக்கு, கிழக்கு அபிவிருத்தித் திட் டங்களை வெற்றிகரமாக முன்னெ டுப்பதற்கு அனைத்து நாடுகளும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென பிரதமர் டி. எம். ஜயரத்ன ஆகிய வலய வறுமை ஒழிப்பு மாநாட்டில் தெரிவித் துள்ளார்.

சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள பிரதமர் டி. எம். ஜயரத்ன சீன குமீமின் நகரில் நடைபெறும் ஆசிய வலய வறுமை ஒழிப்புக்கான மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார்.

இதன் போது மேலும் தெரிவித்த பிரதமர், இலங்கையில் வறுமை ஒழிப்புக் கான வலுவான வேலைத் திட்டங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வருகிறது. அத்துடன் யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதையடுத்து அரசாங்கம் வடக்கிலும் கிழக்கிலும் துரித அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இதற்கு அனைத்து நாடுகளும் ஒத்து ழைப்பு வழங்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

ஆசிய வலய வறுமை ஒழிப்பு மாநாட் டிற்கு ஆசிய வலய நாடுகளின் அனைத்து தலைவர்கள் மற்றும் உயர் மட்டப் பிரதி நிதிகளும் வருகை தந்திருந்தனர்.

சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத் தினை மேற்கொண்டிருந்த பிரதமர் டி. எம். ஜயரத்னவை ரூமிமின் விமான நிலை யத்தில் சீனாவின் துணைப் பிரதமர் ஹைலியான்கியூ வரவேற்றுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

மோசடிகளுக்கு உதவும் சமாதான நீதவான்கள் கைதாவர்

போலி ஆவணங்கள் தயாரிக்கும் சட்ட விரோத செயற்பாடுகளில் தொடர்புபட்டுள்ள சமாதான நீதவான்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்க உள்ளதாக நீதி அமைச்சு கூறியது. இதற்காக விசேட குழுவொன்றை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சு உயரதிகாரி ஒருவர் கூறினார்.

போலியான ஆவணங்களை தயாரிக்க சில சமாதான நீதவான்கள் உதவி வருவதாகவும் இத்தகையோரை கைது செய்யவும் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவும் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சமாதான நீதவான் முத்திரையை பயன்படுத்தி மோசடிகளுக்கு உதவுவதாகவும் அதனைப் பயன்படுத்தி பணம் சம்பாதிப் பதாகவும் பொது மக்கள் முறையிட்டுள்ளனர். இத்தகைய சமாதான நீதவான்களின் பதவி இரத்து செய்யப்படும் எனவும் அறிவிக்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

ஆதரவின்றி தவிக்கிறோம்: பின்லேடன் மகன்





ஈரானில் தங்களது குடும்பத்தைச் சேர்ந்த 20 பேரும் எவ்வித ஆதரவுமின்றி தவிப்பதாக சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடனின் மகன் ஒமர் பின்லேடன் தெரிவித்துள்ளார்.
ஒமர் பின்லேடன் அல்-அரேபியா தொலைக்காட்சிக்கு திங்கள்கிழமை அளித்த பேட்டியில் இதைத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியது: கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் எங்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் ஈரான் அரசால் கைது செய்யப்பட்டோம். அன்று முதல் நிம்மதியான வாழ்க்கையே இல்லை. தொடர்ந்து துன்பத்தையே அனுபவித்து வருகிறோம்.
நாங்கள் எனது தந்தையின் பிறந்த மண்ணான செüதி அரேபியாவுக்கு செல்ல விரும்புகிறோம். எங்களை ஏற்றுக்கொள்ள அந்நாட்டு அரசும் தயாராகவுள்ளது. ஆனால் எங்களுக்கு அடைக்கலம் கொடுக்க செüதி அரசு எங்களைப் பற்றிய உரிய ஆவணங்களை ஈரானிடம் கேட்கின்றது. ஆனால் ஈரானோ இதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறது.
ஈரானில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள எனது சகோதரர் சில தினங்களுக்கு முன்பு போனில் பேசினார். அப்போது தான் அங்கு நரக வாழ்க்கை வாழ்வதாகவும், தன்னை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறும் கோரினார்.
இப்படி கஷ்டங்களை அனுபவித்து வரும் எங்களது குடும்பத்துக்கென்று உதவுவதற்கு யாருமில்லை. ஈரானில் நாங்கள் ஆதரவின்றி தவிக்கிறோம் என்று ஒமர் பின்லேடன் தெரிவித்தார்.
2001, செப்டம்பர் 11-ல் அமெரிக்காவின் உலக வர்த்தக மையம் அல்-காய்தா தீவிரவாதிகளால் தாக்கப்பட்டதை அடுத்து ஒசாமா பின்லேடன் குடும்பத்தார் ஆப்கானிஸ்தானில் இருந்து ஈரானில் தஞ்சம் புகுந்தனர். ஆனால் ஈரானில் தஞ்சம் புகுந்த அவர்களை அந்நாட்டு அரசு கைது செய்தது.
மேலும் இங்கே தொடர்க...