மனிதாபிமான யுத்த நடவடிக்கையின்போது பாலியல் துஸ்பிரயோகங்களை படைவீரர்கள் ஒரு ஆயுதமாக கொண்டிருந்ததாக அமெரிக்க இராஜாங்கச் செயலர் கிலாரி கிளிண்டன் முன்வைத்துள்ள குற்றச்சாட்டை பாதுகாப்புப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல இன்று மறுத்துள்ளார். கிலாரி கிளிண்டனின் இந்தக் குற்றச்சாட்டானது அடிப்படையற்றது. இறுதிக்கால யுத்தக்காலமான மூன்றரை வருடத்தில் படையினரால் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான நடவடிக்கையின்போது இவ்வாறான வழிமுறைகள் படையினரால் கைகொள்ளப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்தக் காலப்பகுதியில் படையினர்மீது இதுகுறித்த குற்றச்சாட்டுக்கள் எந்தவொரு அமைப்பினராலும், சர்வதேச நிறுவனங்களாலும் முன்வைக்கப்படவில்லையென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில் பொறுப்பு வாய்ந்த பதவியில் இருக்கும் கிலாரி கிளிண்டனின் இக்கருத்து ஏற்றுக்கொள்ள முடியாததொன்று என்றும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல மேலும் குறிப்பிட்டுள்ளார்.
2 அக்டோபர், 2009
நேற்றிரவு பிரம்படித்தீவு - கின்னையடி ஆற்றில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் உயிரிழந்தவர் பூலாக்காட்டைச் சேர்ந்த 19 வயதான நடராஜா வில்வன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த ஆற்றில் காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரையே படகு சேவை நடைபெற்று வருகின்றது. தற்போது கின்னையடி விஷ்னு ஆலயத்தின் வருடாந்த உற்சவம் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் பூலாக்காடடைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் நீந்தி ஆற்றைக் கடந்து ஆலய உற்சவத்திற்கு சென்றதாகவும்,இருவர் மறு கரையை அடைந்த போதிலும் மூன்றாவது நபர் பற்றிய தகவல் இல்லாத நிலையில் இன்று காலை தேடிய போதே அந் நபர் சடலமாக கண்டு பிடிக்கப்பட்டதாக பொலிஸ் தகவல்கள் மூலம் அறிய முடிகின்றது
தென் மாநிலங்களுக்கான இலங்கை துணைத் தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி, சென்னையில் நேற்று அளித்த பேட்டியில் இது குறித்துத் தெரிவிக்கையில்,
"தமிழ்நாடு மீனவர் சங்கப் பிரதிநிதிகள் கடந்த மாதம் 9ஆம் திகதி என்னைச் சந்தித்த போது, "இலங்கை கடற்பகுதிக்குள் தடைகளை மீறி உட்புகும் இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவதில்லை; கைது செய்வதுமில்லை" என்று தெரிவித்துள்ளனர்.
இலங்கை மீனவர்கள் இந்திய கடற்பரப்பில் நுழையும் போது இந்திய அதிகாரிகள் அவர்களை கைது செய்து, சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கின்றனர். தமிழகம், ஆந்திரா, அந்தமான் நிகோபரில் உள்ள சிறைகளில், 160 இலங்கை மீனவர்கள் தற்போதும் அடைக்கப் பட்டுள்ளனர்.
மீனவர்கள் மீது யார் தாக்குதல் நடத்துகின்றனர் என்பதை, பத்திரிகையாளர்கள் தான் ஆய்வு செய்து உண்மையைக் கண்டறிய வேண்டும். இந்திய இராணுவத்தை, கடற்படையைத் தாண்டி இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்த முடியுமா?
தமிழக அரசும், தமிழக எம்.பி.,க்களும் தாக்குதலைக் கண்டித்து பிரதமரிடம் மனு அளித்துள்ளனர். அதுபற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை." என்றார்.
தொடர்ந்து நிருபர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள்:
இலங்கைத் தமிழர் முகாம்களை பார்வையிட ஏன் தடை விதிக்கப்படுகிறது?
"தமிழர் முகாம் ஒன்றும் மிருகக் காட்சி சாலை அல்ல. முகாம் குறித்து, புலம் பெயர்ந்தவர்கள் சொல்லும் கதைகள் உண்மையல்ல. பத்திரிகையாளர்கள் விரும்பினால், ஏற்பாடு செய்கிறோம். உங்கள் பாதுகாப்பு, சுதந்திரம் எப்படி முக்கியமோ அது போல எங்களது பாதுகாப்பும் முக்கியம். பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தல் இன்னும் முழுமையாக விலகவில்லை."
கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்க இந்திய மீனவர்களுக்கு உரிமை உள்ளதா?
"இரு நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தப்படி, கச்சத்தீவு இலங்கையின் ஒருங்கிணைந்த பகுதி."
இந்திய மீனவர்கள் அங்கு மீன் பிடிக்க அனுமதிப்பீர்களா?
"உங்கள் நாட்டு அரசிடம் கேளுங்கள்."
இவர்கள் பிரதமர் கெவின் ரூட் அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர் பலவந்தமாக திருப்பியனுப்பப்பட்டு அடைக்கலம் கோரியோர் என அவுஸ்திரேலிய செய்திதாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இவர்கள் நேற்றிரவு கிறிஸ்துமஸ் தீவில் இருந்து பேர்த் நகருக்கு அழைத்துவரப்படவிருந்தார்கள்.குறித்த ஒன்பது பேரும் கடந்த நவம்பர் மாதம் அவுஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமாக பிரவேசித்தன் பின்னர் கிறிஸ்துமஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள்.
இவர்கள் 12 பேர் அடங்கிய குழுவினருடன் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசித்தனர்.எனினும் இவர்களில் இருவர் சுயமாகவே இலங்கைக்கு திரும்பினர்.
இந்தநிலையில் நாடு கடத்தப்படவுள்ள 9 பேரின் உயிருக்கும் இலங்கையில் ஆபத்து எதுவும் ஏற்பட போவதில்லையென அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் கிரிஸ் இவான்ஸ் தெரிவித்துள்ளார்.
இவர்கள் அகதிகள் இல்லையென்றும் வேலைவாய்ப்பினை பெற்று கொள்வதற்காகவே அவுஸ்திரேலியாவிற்குள் வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் அடைக்கலம் கோரியோரின் சட்டத்தரணியான இயன் ரின்டவுல் தகவல் தெரிவிக்கையில் தாம் நாடு திரும்பினால் தமது உயிருக்கு ஆபத்து ஏற்படுமென ஒன்பது பேரில் உள்ளடங்கியுள்ள சரத் தென்னக்கோன் என்பவர் அச்சம் வெளியிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இந்த 9 பேரும் தாம் நாடு கடத்தப்படுவதற்கு எதிராக மனு தாக்கல் செய்த போதும் அது நிராகரிக்கப்பட்டது.
புலிகளுக்கு ஆயுத விநியோகத்தில் ஈடுபட்டார் என்று குற்றஞ்சாட்டப்பட்டு சிங்கப்பூர் மறுமலர்ச்சி கட்சியின் முன்னாள் உறுப்பினரான பால்ராஜ் நாயுடு சிங்கப்பூரில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது. இவர் கடந்தவாரம் அவரது வீட்டில்வைத்து கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக கூறப்படுகின்றது. இவர் அமெரிக்காவில் தொடரப்பட்டுள்ள இரண்டு வழக்குகள் தொடர்பில் தேடப்படும் ஒருவராக இருந்து வருகிறார். அதேநேரம் இலங்கையின் புலனாய்வு பிரிவினரும் இவர் புலிகளுக்காக ஆயுதங்களை விநியோகத்தார் என்ற தகவலை வெளியிட்டுள்ளனர். கைதான இவர் நேற்றுமுன்தினம் நீதிமன்றில் ஆஜராக்கப்பட்டுள்ளார். இருப்பினும், எதிர்வரும் 05ம் திகதிவரையும் வழக்கு விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின்பேரில் இவர் அமெரிக்கா மற்றும் பிரித்தானிய பொலிஸாரால் தேடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். அவரைத் தங்களிடம் கையளிக்க வேண்டுமென்று அமெரிக்க அரசு சிங்கப்பூரிடம் கோரியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் கேபியுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்தவர் என்றும் தகவல்கள் கூறுகின்றன.