19 டிசம்பர், 2009

வெளிநாட்டில் தஞ்சம் புகும் நடவடிக்கையில் இந்தோனேசியாவில் தடுக்கப்பட்டிருந்த இலங்கை அகதிகள்

இந்தோனேசிய வரைப்படம்
இந்தோனேசிய வரைப்படம்

ஆஸ்திரேலிய சுங்க இலாகா கப்பலில் கிட்டதட்ட ஒருமாத காலமாக தங்கியிருந்த 15 இலங்கை அகதிகள் இந்தோனேசியாவில் இருந்து வெளிநாடுகளில் தஞ்சம் புகும் வேலைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவுக்கு செல்லும் இவர்கள் அங்கிருந்து வேறு மூன்று நாடுகளுக்கு செல்வார்கள் என்று இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர்களுக்கு ஆஸ்திரேலியா மற்றும் கனடாவில் தஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்தோனேசியா அருகே சர்வதேச கடல் எல்லையில் இலங்கை அகதிகள் பயணித்த கப்பலில் சிக்கலில் மாட்டிய போது அவர்களை ஆஸ்திரேலிய கப்பல் மீட்டிருந்தது.

கப்பலில் இருந்த 78 பேரும் ஐ.நாவால் அகதிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.


மேலும் இங்கே தொடர்க...


குழந்தை உடம்பில் 42 தையல் ஊசி




Swine Flu

ரியோ டி ஜெனிரோ : பிரேசிலில் 2 வயது குழந்தையின் உடலில் 42 தையல் ஊசிகளை செலுத்திய கொடூர மனிதர் கைது செய்யப்பட்டார். குழந்தையின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இபோடிரமா என்ற நகரைச் சேர்ந்த பெண் மரியா டிசோசா. அவரது 2வது கணவர் ராபர்ட் மகால்ஹேஸ். மரியாவுக்கு முதல் கணவன் மூலம் 2 வயதில் குழந்தை உள்ளது. கடந்த சில நாட்கள் முன், கடும் வலியால் துடித்த குழந்தையை மருத்துவமனைக்கு தாய் தூக்கிச் சென்றார்.
ஸ்கேன் செய்து பார்த்ததில் குழந்தையின் உடலுக்குள் கழுத்து முதல் கால் வரை தையல் ஊசிகள் செலுத்தப்பட்டு இருந்தது தெரிந்தது. எக்ஸ்ரேவில் எண்ணியபோது மொத்தம் 42 ஊசிகள் தெரிந்தன. அவற்றில் 2 ஊசிகள், குழந்தையின் இதயம் அருகே அபாயகரமாக இருந்தன.
மற்றவை கழுத்து, அடிவயிறு, நுரையீரல்கள், கால்களுக்குள் இருந்தன. குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்து ஊசிகளை அகற்ற முதலில் டாக்டர்கள் திட்டமிட்டனர். ஆனால், அது குழந்தையின் உயிருக்கு ஆபத்து என்பதால் கைவிட்டனர். மாறாக வேறு மருத்துவ வழிகளை ஆராய்ந்து வருகின்றனர். மரியா தெரிவித்த சந்தேகத்தின் அடிப்படையில் ராபர்ட் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர், குழந்தை உடலில் ஊசிகளை செலுத்தியதை ஒப்புக் கொண்டார். இதற்கு பின்னணியில் மதரீதியான ஒரு பெண்ணும், சூனியக்கார பெண் ஒருவரும் உதவியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இங்கே தொடர்க...
அன்னை மரியைத் தாங்கும் அதிசய கரங்கள்! : ஆனைக்கோட்டையில் சம்பவம்
No Image



ஆனைக்கோட்டை வராளி கோவிலடி அருகிலுள்ள வீடு ஒன்றில், அன்னை மரியின் படத்திலிருந்து கைகள் தெரியும் அதிசயம் நடந்துள்ளது.

ஆனைக்கோட்டை வராளி கோவிலடி வீடு ஒன்றில் அன்னை மரியின் படம் வைத்து வழிபட்டு வந்தனர். நேற்றிரவு இந்தப் படத்தில் இரண்டு கரங்கள் மாதாவைத் தாங்கியபடி நிற்கும் அதிசயம் நிகழ்ந்துள்ளது.

இந்த அற்புதத்தைக் காண்பதற்காக பலர் அவ்வீட்டுக்குப் படையெடுத்து வருகின்றனர். இதற்கு முன்னரும் பருத்தித்துறையில் இரு இடங்களில் மாதாவின் படத்தில் அதிசயமாகக் கரங்கள் தெரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது



ஜனாதிபதி கண்டிக்கு விஜயம்



ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றைய தினம் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்த பின்னர் கண்டிக்கு விஜயம் செய்துள்ளார்.இதன் போது கண்டி தலதா மாளிகையில் 3000 மகாசங்க தேரர்கள் ஆசிர்வாதம் வழங்கினர்.

அதேவேளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கண்டி செல்வ விநாயகர் ஆலயம், மற்றும் மீராம் முஸ்லிம் பள்ளிவாசல் ஆகிய சமயத் தலங்களுக்கும் விஜயம் செய்தார்.

கண்டி ஆயர் டாக்டர் வியான பர்னாண்டோவிடமும் அங்குள்ள மற்றும் பல தேரர்களிடமும் நல்லாசி பெற்றார்


எதிரணி வேட்பாளர் மூலம் ஆட்சிபீடமேறி தனது கனவை நனவாக்க ரணில் முயற்சி- அமைச்சர் சுசில் பிரேமஜயந்த

No Image

மக்களின் ஆதரவினால் ஆட்சிக்கு வர முடியாத ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க எதிரணி வேட்பாளர் என்ற விடயம் ஊடாக ஆட்சிபீடமேறி தனது கனவை நனவாக்க முற்படுவதாகவே நாங்கள் உணர்கின்றோம். அதற்கு நாட்டு மக்கள் எதிர்வரும் ஜனவரி 26 ஆம் திகதி தக்க பதிலளிப்பார்கள் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும் கல்வி அமைச்சருமான சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார்.

இராணுவம் தொடர்பிலõன எதிரணி வேட்பாளரின் கூற்று மற்றும் ரணில் விக்ரமசிங்க இந்தியாவில் விடுத்துள்ள கோரிக்கை தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் நிலைப்பாடு என்னவென்று அறிவிக்கவேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் கூறியதாவது: வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்த புலித் தலைவர்களை கொலை செய்யுமாறு பாதுகாப்பு செயலாளர் உத்தரவிட்டதாக எதிரணி வேட்பாளர் சரத் பொன்சேகா கூறியதாக வார இறுதி பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. ஆனால், இந்த விடயம் தொடர்பில் இதுவரை எந்த மறுப்பும் தெரிவிக்கப்படவில்லை என குறித்த பத்திரிகையின் ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார். மேலும் சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பிலும் எதிரணி தரப்பு அறிவிக்கவில்லை.

இதேவேளை, இந்தியாவுக்கு சென்றிருந்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, இலங்கையில் இடம்பெர்ந்துள்ள தமிழ் மக்கள் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார். ஆனால், கடந்த 2005ஆம் ஆண்டு தேர்தல் மற்றும் அதற்கு முன்னரான தேர்தல்கள் எவ்வாறு நடைபெற்றன என ரணில் விக்கிரமசிங்கவுக்கு தெரியும். கடந்த தேர்தல்களில் வடக்கு மக்கள் எவ்வாறு வாக்களித்தார்கள் என்றும் அவருக்கு தெரியும். மேலும் அவர் கையெழுத்திட்ட போர்நிறுத்த உடன்படிக்கையினால் ஏற்பட்ட நிலைமையும் ஞாபகம் இருக்கும்.

எதிரணி வேட்பாளர் சரத் பொன்சேகாவின் கூற்று தொடர்பில் அரசாங்கம் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் ரணில் விக்கிரமசிங்க சென்னையில் தெரிவித்துள்ளார். அதாவது, சரத் பொன்சேகா தனது கூற்றை மறுத்துள்ள நிலையிலும் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு கோரிக்கை விடுவது ஏன்? இதுதான் பொது நோக்கமா? இந்த இரண்டு விடயங்கள் தொடர்பிலும் மக்கள் விடுதலை முன்னணியின் நிலைப்பாடு என்ன? இது தொடர்பில் அவர்கள் நாட்டு மக்களுக்கு அறிவிப்பர்கள் என்று எதிர்பார்க்கின்றோம்.

யுத்தம் நடைபெற்ற காலக்கட்டத்தில் சர்வதேச சக்திகள் மற்றும் உள்நாட்டின் சிலர் என பல சக்திகள் யுத்தத்தை நிறுத்த முயற்சித்தன. ஆனால், தற்போது அனைத்தும் முடிந்து விட்டன. எனவே, வேறு வழிகளில் பல முயற்சிகள் இடம்பெறுவதாக தெரிகின்றது.

இங்கு ஒரு விடயத்தை குறிப்பிடவேண்டும். அதாவது, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்க முடியாவிட்டால், தான் பதவியிலிருந்து விலகி விடுவதாக எதிரணி வேட்பாளர் தெரிவித்துள்ளார். மேலும், காபந்து அரசாங்கத்தில் ரணில் விக்கிரமசிங்கவே பிரதமர் என ஐக்கிய தேசியக் கட்சியினர் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், ஒருவேளை சரத் பொன்சேகா வெற்றி பெற்று பதவி விலக நேர்ந்தால் பிரதமராக இருக்கும் ரணில் விக்கிரமசிங்க ஆட்சி பீடம் ஏறிவிடுவார். அப்போது எவ்வாறாவது புலிகளின் புதிய சக்திகளுடனாவது அவர் பயணிப்பார். இவ்வாறானதொரு நிலைமை தேவையா என்பதை எதிர்வரும் ஜனவரி மாதம் 26ஆம் திகதி மக்கள் தீர்மானிக்க வேண்டும்.

பிரித்தானிய மாணவ விசாக்களுக்கு விண்ணப்பிப்பதற்கு புதிய நடைமுறைகள்- பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் அறிவிப்பு
No Image

பிரித்தானியாவில் கல்வி கற்பதற்கான மாணவ விசா விண்ணப்பங்களை கொழும்பிலுள்ள விசா விண்ணப்ப நிலையத்தில் சமர்ப்பிக்க விரும்புபவர்கள், எதிர்வரும் 21ஆம் திகதியிலிருந்து முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டுமென பிரித்தானிய எல்லை முகவர் நிலையம் அறிவிப்புச் செய்துள்ளது. இது தொடர்பான ஊடக அறிக்கை நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது:

மாணவ விசா விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கு தம்மை பதிவு செய்ய விரும்புபவர்கள் தமது கோரிக்கையை முன்வைக்க திங்கள் முதல் வெள்ளி வரையான நாட்களில் காலை 8.00 மணிக்கும் பிற்பகல் 3.00 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில்ukstudent colombo@vifshelpline.com என்ற இணையத்தள முகவரியோடு தொடர்பு கொள்ள கோரப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த முன்பதிவு தொடர்பான மேலதிக விபரங்களை www.vfusuklk.com என்ற இணையத்தள முகவரியில் பெற்றுக்கொள்ள முடியும். அதேசமயம், வலிதான விசா ஏற்பு கடிதம் ஒன்று இருப்பவர்கள் மட்டுமே மேற்படி விசாவுக்கான விண்ணப்பங்களை இலத்திரனியல் அஞ்சல் மூலமாக அனுப்ப கோரப்பட்டுள்ளது.

அத்துடன், ஒருவர் விண்ணப்பமொன்றுக்கான கோரிக்கையை முன்வைக்கும் போது, அவரது முழுப்பெயர், கடவுச்சீட்டு இலக்கம், தொடர்பு இலக்கம் என்பவற்றை சமர்ப்பிப்பது அவசியமாகும்.

மேலும் தனது விசா விண்ணப்பத்தை சமர்ப்பிக்க விண்ணப்ப நிலையத்துக்கு சமுகமளிக்கவுள்ள விண்ணப்பதாரியின் பெயரிலேயே பதிவு மேற்கொள்ளப்பட வேண்டும். ஒரு தடவை வழங்கப்பட்ட விண்ணப்ப விபரங்களை மாற்றவோ, விண்ணப்பதாரிக்கு பதிலாக பிறிதொருவர் விசா விண்ணப்ப நிலையத்துக்கு ஆஜராகவோ முடியாது.

ஒருவர் ஒரு பதிவுக்காக ஒரு தடவை மட்டும் கோர முடியும். (பல தடவைகள் பதிவுக்கு கோருவதானது பதிவைப் பெற முடியாது போவதற்கு வழிவகுப்பதாக அமையும்)

விசா விண்ணப்ப நிலையத்திற்கு விஜயம் செய்வதன் மூலமோ அந்நிலையத்துடன் தொலைபேசியில் தொடர்பு கொள்வதன் மூலமோ ஒருவர் தம்மை பதிவு செய்து கொள்ள முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவர் முன்பதிவுக்கான கோரிக்கையை முன்வைக்கும் போது அதற்கான பதில் 3 வேலைநாட்களுக்குள் அவரை வந்தடையும். அவருக்கு முதலாவது சாத்தியமான பதிவு ஒதுக்கீடு செய்யப்படும்.

மேலும், மாணவ விசா விண்ணப்பங்கள் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டிருப்பதும் விண்ணப்பதாரி பதிவின் பிரகாரம் விசா விண்ணப்ப நிலையத்துக்கு சமுகமளிப்பதற்கு முன்னர் அனைத்து ஆவணங்களும் இணைக்கப்பட்டிருப்பதும் அவசியமாகும்.

பூர்த்தி செய்யப்பட்ட விசா விண்ணப்பப்படிவம், கடவுச் சீட்டு, விசா கட்டணம், ஏனைய தேவையான ஆவணங்கள் மற்றும் விண்ணப்பத்தை உறுதிப்படுத்தும் இலத்திரனியல் அஞ்சல் பிரதியொன்று என்பனவற்றை விண்ணப்பதாரி வைத்திருந்தால் மட்டுமே அவருக்கு விசா விண்ணப்ப நிலையத்துக்குள் பிரவேசிக்க அனுமதி வழங்கப்படும்.

இந்த ஒழுங்கு முறைகளானது விசா சேவையை மேம்படுத்தவும், அனைத்து வாடிக்கையாளர்களுக்காகவும் காத்திருக்கும் நேரத்தை குறைக்கவுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



பிரபாகரனின் மகளது சடலம் கண்டெடுக்கப்படவில்லை -இராணுவப் பேச்சாளர் கூறுகிறார்

No Image

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகளது சடலத்தை தாங்கள் கண்டெடுக்கவில்லை என்று தெரிவித்துள்ள இராணுவம், துப்பாக்கி சூட்டுக் காயங்களுடன் வடபகுதியில் கண்டெடுக்கப்பட்டதெனக் கூறி பெண் ஒருவரின் சடலத்தின் படம் ஒன்றை பிரபாகரனின் மகள் துவாரகாவினுடையதென சில இணையத் தளங்களில் காண்பிக்கப்படுவது பற்றிய உண்மைத் தன்மை பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாதென கூறியுள்ளது.

மே மாதம் கண்டெடுக்கப்பட்ட பெண் சடலங்களில் எதுவும் துவாரகாவினுடையது என்று அடையாளம் காணப்படவில்லை என்றும் இணையத்தளங்களில் காண்பிக்கப்படுவதை ஒத்த சடலம் எதையும்கூட இராணுவம் அவற்றினுள் காணவில்லை என்றும் இராணு பேச்சாளர் பிரிகேடியர் நாணயக்கார தெரிவித்தார்.

இணையத்தளங்களில் துவாரகாவினுடையது எனக் காண்பிக்கப்படும் சடலம் வெறும் நிலத்தில் உள்ளாடையுடன் இறந்து கிடக்க காணப்படும் ஒரு பெண்ணின் சடலமாகும். துவாரகா உயிருடன் இருந்தபோது சல்வார் கமீஸ் அணிந்தபடி எடுக்கப்பட்ட மற்றுமொரு படம் சடலத்தின் படத்திற்கு அருகில் காண்பிக்கப்படுகிறது. இரண்டு படங்களுக்கும் நெருங்கிய ஒற்றுமை இருப்பதாக தெரிகின்ற போதிலும் இரண்டும் ஒருவருடையது என்று உறுதிப்படுத்தப்படவில்லை.



மலையகச் சிறார்களுக்காக எழுதப்படும் மரண சாசனங்கள்!


No Image

எமது நாட்டின் முதுகெலும்பை நிமிர்த்த தமது முதுகெலும்பை வளைத்துக் கொண்டவர்கள் மலையகத் தொழிலாளர்கள். தேயிலையின் பசளை தொழிலாளியின் வியர்வை எனும் கூற்று அவர்களின் உழைப்புக்கு நல்லதொரு சான்றாகும்.

இந்த நிலையிலும் தமது பிள்ளைகள் வாழ்வில் உயர வேண்டும் என்ற உறுதியான போக்கு அவர்களை இடைவிடாது உழைக்க வைத்துக்கொண்டிருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் அதற்கு தடையாகக் காணப்படுவது அவர்களின் வறுமை. தமது பிள்ளைகளின் படிப்பை இடையில் நிறுத்தி வறுமை எனும் கொடிய அரக்கனுக்கு அவர்களைப் பலியிடும் நிலை மலையகத்தில் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன.

மலையகச் சிறுவர்கள் வீட்டு வேலைக்கு அமர்த்தப்படுவது நிறுத்தப்படவேண்டும், தமது பிள்ளைகள் வீட்டு வேலைக்கு அமர்த்தப்படுவதை பெற்றோர் நிறுத்த வேண்டும் என்ற பல கோஷங்கள் விழிப்புணர்வுடன் எழுப்பப்பட்ட போதிலும் இது சாத்தியமாகாத ஒரு விடயமாகவே தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

இவ்வாறான செயற்பாடுகளினால் குடைசாயும் மலையகச் சிறுவர்களின் எண்ணிக்கை, சமுதாயம் சார்ந்தவர்களை விழிப்புணர்வூட்டியதாகவும் தெரியவில்லை.

ஜீவா, சுமதி ஆகியோரின் துயரமான சம்பவங்களின் ஈரம் எமது நெஞ்சில் ஆறாத நிலையில், இப்பொழுது மற்றுமொரு 15 வயது சிறுமி குமுதினியின் துயரமிக்க சம்பவம் எம்மை மேலும் சிந்திக்க வைத்துள்ளது.

தெல்தோட்ட லூல்கந்துர தோட்டத்தைச் சேர்ந்த ராமையா, மாரியாயி ஆகியோரின் அன்பு மகள் சிறுமி குமுதினி. இவர் கடந்த டிசம்பர் 12 ஆம் திகதி மர்மமான முறையில் மரணமானார்.

தெல்தோட்ட மத்திய கல்லூரியில் 8 ஆம் தரத்தில் படித்துவிட்டுத் தனது குடும்ப வறுமை நிலை காரணமாக, அடிமை சேவகம் செய்ய புறப்பட்ட தனக்கு இவ்வாறான செயல் நிகழும் என அவள் அறிந்திருக்கவில்லை.

தரகர்களின் தவறான செயல்கள்

மலையகப் பகுதிகளில் இவ்வாறு வேலைக்கமர்த்துவதற்குச் சிறுவர்களை அவ்வப்பகுதியிலிருந்து அழைத்துச் செல்லும் தரகர்களின் செயற்பாடுகளை முற்றாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது இன்றைய காலகட்டத்தில் அவசியமானதொன்று.. தரகர் ஒருவர் மூலம் ஹேவாஹெட்ட முல்லேரிய தோட்ட அதிகாரியின் வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்ட நாளிலிருந்தே குமுதினியின் அவலநிலை தொடர ஆரம்பித்துவிட்டது.

தனது மகள் தூக்கிட்டுக் கொண்டாள் என்ற அதிர்ச்சியான செய்தியைக் கடந்த 10 ஆம் திகதி, ஒரு மர்மமான குரலே ராமையாவுக்குத் தெரியப்படுத்தியது. அந்தச் செய்தி அவளது பெற்றோரின் நெஞ்சை பிளக்கச் செய்தது.

ஒரு வீட்டில் வேலை செய்துவந்தவள் இறுதியில் தூக்கிட்டுக் கொள்ளும் அளவுக்கு என்ன நடந்திருக்கும்?

மனித நேயமற்ற சிலரின் செயற்பாட்டால், அந்தப் பிஞ்சு மனதின் கனவுகளும் ஆசைகளும் ஒரு நொடியில் சிதைந்துபோயின. இவ்வாறாக பலி கொள்ளப்படும் உயிர்கள் இன்னும் எத்தனை... எத்தனை...?

பெருந்தோட்ட மக்களின் பொருளாதார நிலையே இவை போன்ற சம்பவங்களுக்கு அடிப்படைக் காரணியாக அமைகின்றது. வறுமைச் சூழல் அவர்களைச் சூழ்ந்து கொண்ட போதிலும் வளமான வாய்ப்புகளும் சந்தர்ப்பங்களும் ஏற்படாமலில்லை. மலையக சமூகம் ஏன் அதை நாடிச் சென்று பெற்றுக் கொள்ள முயலவில்லை? இதனாலேயே மலையக சிறுமிகள் மட்டுமன்றி முதியவர்கள், நடுத்தரவயதினர் கூட வேலைக்கு அமர்த்தப்பட வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படுகின்றது.

கொத்தடிமைகள் அல்லர் மலையகச் சிறுவர்கள் கொத்தடிமைகளாகவே என்றும் இருக்க பிறந்தவர்கள் அல்லர். அவர்களுக்கென ஓர் எதிர்காலம் நிச்சயமாக உள்ளது என்பதை இந்தச் சமூகம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

இதற்குப் பெற்றோர்கள் மட்டுமல்ல, சமூகம் சார்ந்த விடயங்களும் கூட காரணமாக அமைகின்றன என்பதை மறுப்பதற்கில்லை. இது தொடர்பாக ஊடகங்கள் வாயிலாகவும் அரச சார்பற்ற அமைப்புக்களூடாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகின்றன. என்றாலும் பெற்றோரின் அசமந்தத்தால் அது செயலிழந்து போகின்றது.

இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறும் வேளை, அவை தொடர்பாக முழுமையான விசாரணைகளைப் பாரபட்சமின்றி நடத்த வேண்டிய கடப்பாடு பாதுகாப்பு தரப்பினருக்கே உள்ளது.

குமுதினியைப் போன்று கறுகிப் போய்விடாது, மலையக சிறுவர்களின் வாழ்வை மீட்டுத் தர கல்வியாளர்கள், பாதுகாப்புத் துறையினர் ஆகியோருடன் பாதுகாப்புச் சட்டங்களும் உறுதுணை புரிய வேண்டும்.

எதிர்காலத்தில் இது நிழல் ஆகுமா? அல்லது நிஜமாகுமா?

மேலும் இங்கே தொடர்க...

ஜனாதிபதி மஹிந்தவை மீண்டும் தெரிவுசெய்ய நாட்டு மக்கள் பேரார்வத்துடன் காத்திருக்கின்றனர்

அலரி மாளிகை நிகழ்வில் நியாஸ் மெளலவி

ஹிஜ்ரி 1431 முஹர்ரம் பிறை பிறக்கின்ற இம் மங்களகரமான வேளையில் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை இரண்டாம் முறையாக ஜனாதிபதியாகத் தெரிவு செய்வதற்கு இந்நாட்டு மக்கள் அனைவரும் பேரார்வத்துடன் காத்திருக்கின்றனர்.

நேற்று முன்தினம் காலை அலரி மாளிகையில் நடைபெற்ற சமய நிகழ்ச்சியின் போது உரைநிகழ்த்திய கொழும்பு இஹ்ஸானியா அரபுக் கல்லூரியின் பணிப்பாளரும், ஜனாதிபதியின் இஸ்லாமிய விவகார ஒருங்கமைப்பாள ருமான மெளலவி நியாஸ் முஹம்மத் உரையாற்றும் போது கூறினார்.

ஜனாதிபதி வேட்புமனு தாக்கல்செய்ய முன்பு ஜனாதிபதிக்கு ஆசீர்வாதம் வேண்டி இடம்பெற்ற சர்வசமய வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். பெளத்த மகாசங்க தேரர்கள், இந்து, கத்தோலிக்க மதகுருமார்கள், முஸ்லிம் சமயத் தலைவர்கள் தத்தமது மதங்களின் பிரகாரம் ஜனாதிபதியை ஆசீர்வதித்து தேர்தல் செயலகத்துக்கு வழியனுப்பி வைத்தனர்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய நியாஸ் மெளலவி :- இடம் – வலம், நிறுத்து - காலைப் பின் எடுத்து வை – என்ற இராணுவ விதிமுறைகளை மீறி, வடக்கு - தெற்கு, அபிவிருத்தி காண் என்று ஜனாதிபதி இப்பொழுது உரத்த குரலில் கூறிவருகின்றார். வடக்கு கிழக்கு என்ற வன்செயல் சூறாவளிகளை அடக்கி ஒடுக்கிவிட்டு அனைத்து மக்களையும் மகிழ்ச்சிக் கடலில் நீராட்டுவதற்கு ஜனாதிபதி நான்கு வருட தனது பதவிக் காலத்தினுள் செய்துவிட்டார். எனவே, மேலும் அவருக்கு 6 வருடங்களை நாட்டை அரசாள சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுப்பது ஒவ்வொரு பிரஜையினதும் தலையாய கடமையாகும். அவருக்குச் செலுத்தக்கூடிய நன்றிக் கடனுமாகும்.

இலங்கையில், குறிப்பாக இந்நாட்டு முஸ்லிம்கள் 80% அவருக்கு தமது வாக்குகளை அளிக்கக் காத்திருக்கின்றனர். இது நிச்சயம் - இன்ஷா அல்லாஹ்! என்றார் அவர். நபி (ஸல்) அவர்களுடைய பொன்மொழிகளை புத்த பிரானின் போதனைகளுடன் ஒப்பிட்டுக் காட்டி உரைநிகழ்த்தியது அனைத்து சமயத் தலைவர்களையும் கவர்ந்தது. புனித மக்காவிலிருந்து கொண்டுவரப்பட்ட விசேட ‘அத்தர்’ பெட்டியொன்றை ஜனா திபதிக்கு அன்பளிப்புச் செய்த அவர், இறுதித் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மணம் பூசுவதில் மிக்க விருப்பம் கொண்டி ருந்தார்கள் என்பதையும் சுட்டிக்காட்டினார். வெளியே செல்லும்போது ஜனாதிபதி மணம் பூசி செல்லவேண்டிய முக்கியத்துவத்தை அவர் மேலும் விபரித்துக் கூறினார்.

இந்த சமய வைபவத்தில் சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட பிக்குமார் கலந்து கொண்டனர். அமைச்சர் ஆர்.எம்.k.பி. இரத்நாயக்க, அமைச்சர் சுசில் பிரேமஜயந்த், ஆளுநர் அலவி மெளலானா, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, ஜனாதிபதியின் ஆலோசகர் ஏ.எச்.எம். அஸ்வர் ஆகியோரும் இச்சமய வைபவத்தில் கலந்துகொண்டனர்.



ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தேசிய காங்கிரஸ் நிபந்தனையற்ற ஆதரவு

அமைச்சர் அதாஉல்லா தலைமையிலான செய்தியாளர் மாநாட்டில் அறிவிப்பு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நிபந்தனையற்ற ஆதரவுகளை வழங்க தேசிய காங்கிரஸ் தீர்மானித்துள்ளதாக அதன் தலைவரும், நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சருமான ஏ. எல். எம். அதாஉல்லா தெரிவித்தார்.

பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு, வடக்கு, கிழக்கில் சகல இன மக்களும் ஒற்றுமையுடன் வாழவேண்டும் என்ற சிறுபான்மையினரின் அபிலாஷைகளை ஏற்கனவே நிறைவேற்றித் தந்த ஜனாதிபதிக்கு நன்றி தெரிவுக்கும் முகமாகவே இந்த தீர்மானத்தை எடுத்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையே இந்த நாட்டு சிறுபான்மை மக்களுக்கு மிகவும் பாதுகாப்பானது என்று திட்டவட்டமாக கூறுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

தேர்தலின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தேசிய காங்கிரஸ் வழங்கவுள்ள ஆதரவு தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு கொழும்பு கலதாரி ஹோட்டலில் நடைபெற்றது.

தேசிய காங்கிரஸின் சிரேஷ்ட பிரதித் தலைவர் டாக்டர் ஏ. உதுமாலெவ்வை, பிரதித் தலைவர் ஐ. ஏ. ஹமீத், பிரதிப் பொதுச் செயலாளர் எம். எச். ஏ. சமத், தேசிய அமைப்பாளரும், கிழக்கு மாகாண அமைச்சருமான எம். எஸ். உதுமாலெவ்வை, கிழக்கு மாகாண சபை தலைவர் பாயிஸ், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான அமீர், துல்ஷான் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்ட இந்த செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் மேலும் உரையாற்றுகையில்,

சகல இன மக்களும் சந்தோஷமாக வாழ வேண்டும், மீண்டும் சமாதானத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற பிரதான நோக்குடனே தேசிய காங்கிரஸ் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வடக்கிலிருந்து கிழக்கை பிரித்து தரும்படியும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஒற்றுமையுடனும், சமாதானத்துடனும் வாழக்கூடிய சூழலை ஏற்படுத்தித்தர வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக இருந்த போது கோரிக்கை விடுத்தோம். அது இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

30 வருடங்களுக்கு பிறகு ஜனாதிபதியின் தலைமையில் சுதந்திரக் காற்றை சுவாசிக்க நல்லதொரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. எமக்கு கிடைத்துள்ள சுதந்திரத்தை நாங்கள் மீண்டும் இழக்க தயாராக இல்லை. வடக்கு, கிழக்கில் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்த சில அரசியல் கட்சிகள் முயற்சிக்கின்றன. இதற்கு ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லை.

ஐ.தே.க., முஸ்லிம் காங்கிரஸ் போன்ற கட்சி தேர்தலுக்காக அரசியல் நடத்துபவர்கள். தேர்தல் காலங்களில் மாத்திரம் வடக்கு, கிழக்கு பிரதேசத்திற்கு வந்து மக்களை குழப்புபவர்களை இன்று மக்களே விரட்டி அடித்துள்ளனர். ஜனாதிபதி நாட்டின் மீதும், மக்களின் மீதும் அன்பு வைத்துள்ள ஒரே ஒரு தலைவர். எனவே சிலரது பொய்யான வாக்குறுதிகளை நம்பி முஸ்லிம் மக்கள் மீண்டும் ஒரு போதும் தவறிழைக்கப் போவதில்லை.

கடந்த தேர்தலின் போது 75 ஆயிரம் வாக்குகளை ஜனாதிபதிக்காக நாங்கள் பெற்றுக்கொடுத்தோம். இம்முறை ஒரு இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளை ஜனாதிபதியின் வெற்றிக்காக பெற்றுக்கொடுக்கவுள்ளோம்.

வடக்கு, கிழக்கில் தமிழ், முஸ்லிம் மக்களை பிரிக்கின்ற வரலாற்றுக்கு ஜனாதிபதி தலைமையில் நாங்கள் தற்பொழுது முற்றுப்புள்ளி வைத்துள்ளோம். தமிழ் மக்களுக்குத் தேவையானதை முஸ்லிம் மக்களிடமிருந்தும், முஸ்லிம் மக்களுக்குத் தேவையானதை தமிழ் மக்களிடமிருந்தும் பேசிப் பெற்றுக்கொள்ளும் சூழலை நாங்கள் கிழக்கில் தற்பொழுது ஏற்படுத்தியுள்ளோம்.

வடக்கு, கிழக்கில் சுதந்திரத்தை பெற்றுக்கொடுத்தமைக்காக ஜனாதிபதிக்கு நன்றி சொல்ல நாங்கள் கடமைப்பட்டுள் ளோம். யுத்தத்தை முன்னெடுப்பவர்கள் படைவீரர்கள்தான். ஆனால் அதற்கான தீர்மானத்தையும் அவர்களுக்கு அந்த யுத்தத்தில் வெற்றிகொள்ள தேவையான வசதிகளையும் பெற்றுக்கொடுப்பது அரசியல் தலைமைத்துவம்.

சமாதான ஒப்பந்தம் என்ற போர்வையில் அன்றைய தலைமைத்துவம் தோட்டாக்களை எடுத்துக் கொண்டு துப்பாக்கிகளை கொடுத்தது. அதனால் பயங்கரவாதத்தை தோற்கடிக்க முடியாமல் போனது. தற்பொழுது தோட்டாக்களுடன் துப்பாக்கியை கொடுத்ததன் மூலமே பயங்கரவாதத்தை முற்றாக இல்லாதொழிக்க முடிந்தது. இதற்கு சரியான சந்தர்ப்பத்தில் உரிய தீர்மான த்தை எடுக்கும் அரசியல் தலைமைத்துவம் அவசியம். பயங்கரவாதத்தை இல்லாதொழி த்து நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தியமை க்காக தமிழ், முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நாங்கள் வெற்றிபெறச் செய்ய முன்வந்துள்ளதால் சிங்கள மக்களும் முன்வர வேண்டும் என்றும் அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.


நீதி, நேர்மையான தேர்தல் நடத்த பொலிஸ் விசேட திட்டம்

வாக்குச்சாவடிகளுக்கு தலா 2 பொலிஸ்

ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்குச்சாவடிகளில் முறைகேடுகள், குழப்பங்கள் நடைபெறாதவாறு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதற்கு பொலிஸ் திணைக்களம் திட்டமிட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களத்தின் சிரேஷ்ட ஊடக பேச்சாளர் (சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்) நிமல் மெதி வக்க தெரிவித்தார்.

நீதியும், நேர்மையுமான ஒரு தேர்தலை நடத்துவதற்கும் அமைதி யான முறையில் மக்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்வதற்கும் ஏது வாக வாக்குச் சாவடிகள் அனைத் திலும் பலத்த பாதுகாப்பு ஏற் பாடுகள் செய்யப்படவுள்ளதாகவும் இதற்கான திட்டமொன்று தயாரி க்கப்பட்டுவருவதாகவும் அவர் தெரி வித்தார்.

ஒவ்வொரு வாக்குச்சாவ டிக்கும் தலா இரண்டு பொலிஸ் உத்தி யோகத்தர்கள் வீதம் கடமையிலீடு படுத்தப்படுவார்கள். 5 வாக்குச் சாவடிகளை உள்ளடக்கியதாக நட மாடும் பொலிஸ் ரோந்து சேவை யும் ஏற்பாடு செய்யப்படவுள்ளது.

இலங்கையிலுள்ள 432 பொலிஸ் நிலையங்களுக்கும் தலா ஒரு குழு வீதம் கலகம் அடக்கும் பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்படவும் உள்ள தென பிரதி பொலிஸ் மா அதிபர் நிமல் மெதிவக்க தெரிவித்தார்.

அத்துடன் தேர்தல் சட்டங்களுக்கு அமைவாக பொலிஸாரின் பாதுகா ப்புடன் கட்டவுட்டுகள், பேனர்கள், போஸ்டர்கள் அகற்றும் வேலைகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டுவி ட்டதாகவும் அவர் தெரிவித்தார்.


கருத்துக்கணிப்பில் மக்கள் ஆதரவு ஜனாதிபதி மஹிந்தவுக்கே

No Image

ஜனாதிபதித் தேர்தலில் அதிகப்படியான வாக்குகளைப் பெற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே வெற்றியீட்டுவார் என கருத்துக்கணிப்புகள் காட்டுவதாக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர் டலஸ், கடந்த தேர்தல்களின் போது மிகக் குறைந்த வீதத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வாக்குகளைப் பெற்ற 9 மாவட்டங்களை தெரிவு செய்து 5200 பேர் மத்தியில் நடத்திய கருத்துக் கணிப்புக்களில் 3254 பேர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே வாக்களிப்பதாக தெரிவித்துள்ளனர். இது 62.2 வீதமானோர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவை தெரிவிப்பதாக காட்டுகிறது.

1292 பேர் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்குவதாகவும் இது 24.8 வீதமாக காட்டுகிறது. 654 பேர் இன்னும் தெளிவான முடிவை எடுக்காத நிலையில் இருப்பதாகவும் கருத்துக் கணிப்பு காட்டுகிறது என்றும் அமைச்சர் டலஸ் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு இரண்டு கருத்துக் கணிப்புகளை நடத்துகிறது. அதில் முதலாவது கருத்துக் கணிப்பின் முடிவு எமக்கு இப்போது கிடைத்துள்ளது.

இதன்படியே இந்த முடிவுகள் எமக்கு கிடைத்துள்ளன என்றும் அமைச்சர் டலஸ் குறிப்பிட்டார்.

எமது முதலாவது பிரசாரக் கூட்டம் ஜனாதிபதியின் தலைமையில் அநுராதபுரம் புனித பூமியில் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. வடக்கு, கிழக்கு உட்பட அனைத்து பகுதிகளிலும் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் டலஸ் குறிப்பிட்டார். வேட்பு மனுத்தாக்கலின்போது ஜனாதிபதி வேட்பாளர்களுள் ஒருவரான சரத் கோன்கஹகே, சரத் பொன்சேகா தொடர்பாக தெரிவித்த ஆட்சேபனை விடயம் நீதித்துறையில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகா அமெரிக்க பிரஜை என்ற ஆட்சேபனையை சரத் கோன்கஹகே முன்வைத்தார். ஆணையாளரினால் அவ் ஆட்சேபனை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. என்றாலும் நீதிமன்றத்தினூடாக விடயத்தைக் கொண்டுவர முடியும் என ஆணையாளர் தெரிவித்தார். அதனை கோன்கஹகே நீதிமன்றம் கொண்டு செல்வாரா இல்லையா என்பது எமக்குத் தேவையில்லை. அது கோன்கஹ கேயின் வேலை. எனினும் வேட்பாளர் சரத் பொன்சேகா அமெரிக்க பிரஜை என்று கூறியது நாங்களல்ல. சரத் பொன்சேகாவின் தற்போதைய ஊடகப் பேச்சாளராக இருப்பவர்தான். அன்றும் ஒருமுறை இந்தக் குற்றச்சாட்டையும் முன்வைத்திரு க்கிறார். அதனால்தான் இதனை ஒரு பாரதூரமான விடயமாக எண்ணவேண்டி யிருக்கிறது.

இந்த விடயம் உண்மையானால் அமெரிக்க பிரஜை ஒருவர் எமது நாட்டுக்கு தலைமைப் பதவியை ஏற்பதை மக்கள் விரும்புவார்களா? என்றும் அமைச்சர் டலஸ் கேள்வி எழுப்பினார்.

அதே நபர் சரத் பொன்சேகாவை மட்டுமல்ல உங்களையும் அமெரிக்க பிரஜை என்று கூறியிருந்தாரே என செய் தியாளர் ஒருவர் கேட்டபோது, அடுத்த செய்தியாளர் மாநாட்டில் எனது கடவுச் சீட்டை கொண்டுவந்து உங்களுக்கு காட் டுகிறேன் என அமைச்சர் டலஸ் தெரிவித்தார்.

சரத் பொன்சேகா யுத்த நடவடிக்கைகளில் சிறப்பாக செயலாற்றியவர் என்பது உண்மைதான். ஆனால் மக்கள் இன்று யுத்த மனோநிலையை மறந்து சுதந்திரமாக சமாதானத்துடன் அன்பாக, நேசத்துடன், நாட்டின் அபிவிருத்தியுடன் வாழவே விரும்புகிறார்கள். யுத்தம் பற்றி பேசவே மக்கள் விரும்பவில்லை.

எனவே யுத்த மனோ நிலையற்ற அபிவிருத்தியை மட்டுமே இலக்காகக் கொண்டு செயற்படுகின்ற தலைமையையே மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்றும் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.


மேலும் இங்கே தொடர்க...