1 ஜூலை, 2010

நிபுணர்குழு தொடர்பில் இலங்கை அதிருப்தி கொள்ளத் தேவையில்லையென ஐ.நா செயலர் தெரிவிப்பு
இலங்கை தொடர்பில் ஆலோசனை வழங்க தம்மால் அமைக்கப்பட்டுள்ள நிபுணர்குழு தொடர்பில் இலங்கை அதிருப்தி கொள்ளத் தேவையில்லையென ஐ.நா செயலர் பான்கீ மூன் நேற்றுத் தெரிவித்துள்ளார். ஐ.நா செயலரால் மூன்றுபேரைக் கொண்ட நிபுணர்குழு கடந்தவாரம் அமைக்கப்பட்டது. இந்தோனேசியாவின் முன்னாள் சட்டமா அதிபர் மர்சூக் ஏ தருஸ்மன் தலைமையில் இக்குழு அமைக்கப்பட்டது.


எனினும் இலங்கை இக்குழுவை நிராகரித்துள்ளது. அத்துடன் குறித்த மூன்று நிபுணர்களுக்கும் இலங்கை வருவதற்கு விசாவழங்க முடியாதென்றும் இலங்கை குறிப்பிட்டுள்ளது. இந்நிலையிலேயே நிபுணர்குழு தொடர்பில் இலங்கை அதிருப்தி கொள்ளத் தேவையில்லையென்று ஐ.நா செயலர் தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் தொடர்பில் தமது அர்ப்பணிப்பை வெளியிடுவதற்கு இலங்கைக்கு இதுவே சிறந்த தருணமென்றும், சர்வதேச மனிதாபிமான சட்டமீறல்கள் தொடர்பாக பொறுப்புக் கூறவேண்டிய அனைவரையும் சட்டத்தின்முன் நிறுத்த இலங்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஐ.நா பொதுச் செயலர் பான்கீ மூன் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

கே.பிக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்காதது பற்றி ஜெனரல் சரத் பொன்சேகா கேள்வி

கே.பி என்கிற குமரன் பத்மநாதன் ஒரு பயங்கரவாதியென்று ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கே.பி.க்கு எதிரான விசாரணைகளை முடக்கிவிட்டுள்ள அரசாங்கம் மாறாக அவரைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதெனவும் ஜெனரல் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

குமரன் பத்மநாதன் பல மாதங்களுக்கு முன்னர் கைதுசெய்யப்பட்டிருந்த போதிலும், ஏன் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் தவறியதென அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.


அரசாங்கம் குமரன் பத்மநாதனுடன் இணைந்து கொண்டு, யுத்தத்தில் உயிரிழந்த படையினரின் ஒழுக்கத்தை சீர்குலைக்கிறது. அரசாங்கமானது கே.பியை சிறையில் தடுத்துவைக்கத் தவறியிருப்பது வெட்கப்படத்தக்க விடயமாகும் எனவும் ஜெனரல் சரத் பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

4 பேரை கற்பழித்த 90 வயது முதியவர்

4 பேரை கற்பழித்த 90 வயது முதியவர்
தாய்லாந்து நாட்டில் உள்ள ஜியாங்மாங் நகரில் ஆஸ்திரேலியவை சேர்ந்த ஜோசப் கரூஸ் என்ற 90 வயது முதியவர் வசித்து வந்தார்.இவரது பக்கத்து வீட்டில் 7 வயதில் இருந்து 16 வயது வரை உள்ள 4 சகோதரிகள் இருந்தனர்.

அவர்களுக்கு ஆங்கில பாடம் சொல்லி கொடுப்ப தாக கூறி ஜோசப் கரூஸ் தனது வீட்டுக்கு அழைத்தார். வீட்டுக்கு வந்த அவர்களுக்கு விலை உயர்ந்த சாக்லேட் மற்றும் இனிப்புகளை கொடுத்து ஒருவர் மாறி ஒருவர் என4 பேரையும் கற்பழித்தார்.

இது நீண்ட நாட்களாக நடந்து வந்தது. அவர் கொடுக்கும் இனிப்பு பண்டங்களுக்கு ஆசைப்பட்டு 4 சகோதரிகளும் உடன் பட்டனர். அவர்களை ஆபாச படமும் எடுத்தார்.

4 சகோதரிகளும் வெளியே சென்று விளையாடு வதை விட ஜோசப் கரூஸ் வீட்டுக்கு செல்வதில் அதிக ஆர்வம் காட்டுவது பெற்றோர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இது பற்றி விசாரித்த போது கற்பழிப்பு விவகாரம் வெளியே தெரிந்தது இது பற்றி போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் அவரை கைது செய்தனர். அவர் வேறு சில பெண்களுடனும் உல்லாசமாக இருந்த ஆபாச படங்கள் வீட்டில் சிக்கின.

எனவே மேலும் பலரையும் அவர் கற்பழித்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

நிபுணர்கள் குழுவினால் மேற்கொள்ளும் விசாரணைகளுக்கு ஆதரவளிக்கப்படும் ருத்ரகுமாரன்

ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழுவினால் நடத்தப்படும் விசாரணைகளுக்கு பூரண ஆதரவளிக்கப்படும் என நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தின் ஆதரவாளர் ருத்ரகுமாரன் தெரிவித்துள்ளார்.

இந்த விசாரணைகளில் சாட்சியளிப்போரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஐக்கிய நாடுகள் அமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விசாரணைகள் தொடர்பிலான இறுதி அறிக்கையை வெளிப்படுத்த வேண்டும் எனவும், இதன் மூலம் வெளிப்படைத் தன்மையை உறுதிப்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மனித உரிமை மீறல்கள் மீளவும் இடம்பெறாமல் தடுப்பதற்கு சரியான முறையில் விசாரணை நடத்தி, அதற்கு உரிய தீர்வுகள் முன்வைக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழு விசாரணைகளுக்கு பூரண ஆதரவு அளிக்கப்படும் எனவும், சகல வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தக் குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான விசாரணைகளுக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு முதல்தர சாட்சியங்களை திரட்ட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.

மூன்று பேரைக் கொண்ட நிபுணர்கள் குழுவினால் நான்கு மாதங்களுக்கள் விசாரணைகளை நடத்தி முடிக்க முடியுமா என ருத்ரகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

விசாரணைக்கான காலப் பகுதியை மேலும் நீட்டிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

ஐதேக மறுசீரமைப்பு அறிக்கை இன்று ரணிலிடம் சமர்ப்பிப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பான இறுதி அறிக்கை இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.

மறுசீரமைப்புக்குழு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் இதனைக் கையளிக்கவுள்ளது.

அறிக்கை கையளிக்கப்பட்டதும், விசேட செயற்குழுக் கூட்டம் நடத்தப்படும் என்றும் இதன்போது மறுசீரமைப்பு யோசனைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்படும் எனவும் ஐதேக தெரிவித்துள்ளது.

யோசனைகளில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால், சீரமைக்கப்படும். அதன்பின்னர், அடுத்த மாதம் நடைபெறவுள்ள கட்சியின் சம்மேளனத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, யோசனைகள் நிறைவேற்றப்படும் என ஐக்கிய தேசியக் கட்சி மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

முந்தலில் மீட்கப்பட்ட சடலத்தை ஏற்க இந்தியத் தூதரகம் மறுப்பு

புத்தளம் முந்தல் கடல் பிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று மீட்கப்பட்ட இந்தியரின் சடலத்தை பொறுப்பேற்க இந்திய உயர்ஸ்தானிகரகம் மறுத்துள்ளது.

சடலம் நேற்று புத்தளத்தில் பிரேத பரிசோதனைக்குட்படுத்தப்பட்டது. தமக்குச் சடலத்தைப் பாதுகாக்கக் கூடிய வசதிகள் இல்லை என்பதால் அதனைப் பொறுப்பேற்க இந்திய அதிகாரிகள் மறுத்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இறந்தவரின் உறவினர் வரும் வரை, அவரது சடலத்தை வைத்தியசாலை சவச்சாலையில் வைத்திருப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

முந்தல் பொலிஸ் பிரிவில் தொடுவாவ பள்ளிவாசல் பாடு கடற் பிரதேச மீனவர்களே இது தொடர்பான தகவலைப் பொலிஸாருக்கு வழங்கியிருந்தனர்.

தங்கராசா செல்வராசு என்ற சென்னையை சேர்ந்த இளைஞர் வெள்ளவத்தையில் உள்ள பிக் பனானா என்ற ஹோட்டலில் பணியாற்றி வந்தவர். ஹோட்டல் உரிமையாளரான தமிழருக்கும் இவருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து இந்தியா செல்ல இளைஞர் முற்பட்டுள்ளார். அவ்வேளை, ஹோட்டல் உரிமையாளர் தமது நண்பரான கொழும்பு புலனாய்வு தலைமையக பொறுப்பதிகாரி சந்தன டி சில்வாவிடம் கூறி இளைஞரை கைதுசெய்யுமாறு கேட்டுள்ளார்.

சந்தன டி சில்வாவின் உத்தரவின் பேரில் மதவாச்சியில் வைத்து இந்திய இளைஞர் கைதுசெய்யப்பட்டு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் வைத்து அவரிடம் பொலிஸாரால் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்தே அந்த இளைஞர் கொலை செய்யப்பட்டு சடலத்தை புத்தளத்தில் வீசுவதற்கு பொலிஸ் அதிகாரி சந்தனவும் ஹோட்டல் உரிமையாளரும் முயற்சித்துள்ளனர். இதன் போதே இவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

முன்னாள் பெண் போராளிகள் துன்புறுத்தல் பாலியல் சேஷ்டைகளுக்கு உள்ளாகின்றனர்-எஸ். ஸ்ரீதரன்

புனர்வாழ்வளிக்கப்பட்டு சுதந்திர வர்த்தக வலயத்திலுள்ள ஆடைத் தொழிற்சாலைகளில் வேலைக்கு அமர்த்தப்பட்டிருக்கும் முன்னாள் போராளி யுவதிகள் பாலியல் சேஷ்டைகளுக்கும் துன்புறுத்தல்களுக்கும் முகம் கொடுத்து வருகின்றனர் என்று கூட்டமைப்பு எம்.பி.யான எஸ். ஸ்ரீதரன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண் டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர் ந்து உரையாற்றுகையில்,

வரவு செலவுத் திட்டத்தின் மூலமாக மக்களின் வாழ்க்கையில், வாழ்வியல் மாற்றங்கள் ஏற்பட வேண்டும். இல்லாவிட்டால் அதில் எந்தவிதமான பலனும் கிடையாது. நாடளாவிய ரீதியில் ஆயிரத்திற்கு அதிகமான பட்டதாரிகள் வேலை வாய்ப்பின்றி இருக்கின்றனர். வரவு செலவுத் திட்டத்தில் பட்டதாரிகளுக்கென எந்த ஒதுக்கீடுகளும் செய்யப்படவில்லை. எனவே வேலை வாய்ப்பின்றி இருக்கும் பட்டதாரிகள் இளைஞர் யுவதிகளின் நலன்கருதி எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு தீர்மானிக்க வேண்டும்.

அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பினால் அரச ஊழியர்கள் பெரும் கஷ்டங்களை அனுபவிக்கின்றனர். அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்படவில்லை. எனவே விசேட பிரேரணையின் மூலமாவது அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்பட வேண்டும். வடக்கில் மீள்குடியேறிய அரச ஊழியர்களுக்கு சைக்கிளொன்றை வழங்குவதற்கு கூட வசதிகள் இல்லை. எனவே அவர்கள் சைக்கிள், வீடு போன்ற வசதிகளை ஏற்படுத்திக் கொள்வதற்கு கடனுதவி திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும்.

அரச துறையில் பல்வேறு முக்கிய பதவிகளில் 60 வயதிற்கும் மேற்பட்டவர்கள் இருப்பதனால் தகுதியான இளைஞர், யுவதிகள் போதிய வாய்ப்புகளின்றி பாதிக்கப்படுகின்றனர். எனவே 60 வயதிற்கு மேற்பட்டோர் அரச துறையில் பதவிகளை வகிப்பதை தவிர்க்கும் வகையில் சட்டமூலமொன்று கொண்டு வரப்பட வேண்டும். யுத்த காலத்தின் போது 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். அவர்களது நிலைமைகள் என்ன என தெரியாமல் பெற்றோர் கவலைப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இவர்களின் நிலைமை பற்றி தேடி கண்டறியப்பட வேண்டும்.

இதேபோல் 12 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர். இன்னும் பலர் அரசியல் கைதிகளாக சிறைச்சாலைகளில் வாடுகின்றனர். இலங்கை ஒரு ஜனநாயக நாடு என்ற வகையில் இவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும். புனர்வாழ்வளிக்கப்பட்டதாக இருந்த முன்னாள் போராளிகளாக இருந்த தமிழ் யுவதிகள் சுதந்திர வர்த்தக வலயத்திலுள்ள ஆடைத் தொழிற்சாலைகளில் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். இங்கு இந்த யுவதிகள் பல்வேறு சிக்கல்களுக்கு முகம் கொடுத்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு சிங்களமும் தெரியாது. அதுமட்டுமன்றி இந்த யுவதிகள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு சேஷ்டைகளுக்கும் ஆளாகின்றனர். புனர்வாழ்வு என்பதை விட அவர்களை அவர்களது குடும்பத்துடன் இணைப்பதே அவர்களின் மாறுதலுக்கு பேருதவியாக இருக்கும். எனவே இவ்விடயத்தில் அனைவரும் ஒரு தாய் பிள்ளை என்ற வகையில் சிந்தித்து செயற்பட வேண்டும் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

‘ஊடகங்கள் தொடர்பில் எதிர்க்கட்சி சிறப்புரிமை முன்வைப்பது முறையல்ல’


ஊடகங்களில் எதனை வெளியிட வேண்டுமென்பதை ஊடக நிறுவ னங்களே தீர்மானிக்க முடியும். அதனை எதிர்க் கட்சியினர் பாரா ளுமன்றத்தில் சிறப்புரிமை பிரச்சி னையாக முன்வைப்பது முறைய ல்ல என அமைச்சர் விமல் வீரவன்ச நேற்றுப் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் ஐக்கிய தேசியக் கட்சியினர் மேற்கொண்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு ஊடகங்கள் முன்னுரிமையளிக்க வில்லையென ஐ.தே.க. எம்.பி. தயாசிறி ஜயசேகர நேற்றுச் சபையில் குறிப்பிட்டதுடன் அதனை ஒரு சிறப்புரிமை பிரச்சினையாகவும் முன்வைத்தார்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த போதே அமைச்சர் விமல் வீரவன்ச இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், பத்திரி கையோ இலத்திரணியல் ஊடகங்க ளோ பாராளுமன்றத்தில் ஒருவர் ஆற்றும் உரையை குறைத்தோ கூட்டியோ அல்லது தேவை யானதை மட்டுமோ வெளியிட முடியும். அது தொடர்பில் அந்தந்த நிறுவனங்களே தீர்மானிக்க வேண்டும்.
மேலும் இங்கே தொடர்க...

உக்ரேன்- இலங்கை இருதரப்பு பேச்சு; மூன்று ஒப்பந்தங்களும் கைச்சாத்து இருநாட்டு தலைவர்களும் உத்தியோகபூர்வ சந்திப்பு


உக்ரேன் ஜனாதிபதி விக்டர் யனுகோவி ச்சின் விசேட அழைப்பின் பேரில் உத்தியோகபூர்வ வி

ஜயம் மேற்கொண்டு உக்ரேன் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் உக்ரேன் ஜனாதிபதி விக்டர் யனுகோவிச்சுக்கும் இடையில் உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று (30) காலை இடம்பெற்றது.

உக்ரேன் நிர்வாகத் தலைமையகத்தில் சுமார் ஒரு மணி நேரம் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையில் இரு நாடுகளுக்கிடையிலும் சமூக, பொருளாதார மற்றும் கலாசார துறைகளை மேம்படுத்துவது தொடர்பான பல விடயங்கள் பற்றி விரிவாக பேசப்பட்டன.

இரு நாடுகளுக்கிடையிலும் வர்த்தக துறையை அபிவிருத்தி செய்யும் நோக்கில் ஒருங்கிணைந்த வர்த்தக ஆணைக் குழுவொன்றை அமைப்பது தொடர்பாக இங்கு அவதானம் செலுத்தப்பட்டது.

இரு நாடுகளுக்கிடையிலும் சுற்றுலா துறையை அபிவிருத்தி செய்வதற்காக ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்துக்கும் உக்ரேன் விமான சேவைநிறுவனத்துக்கும் இடையிலான ஒத்துழைப்புடன் விமான சேவைகளை ஆரம்பிப்பது தொடர்பாகவும் இரு தலைவர்களும் அவதானம் செலுத்தினர்.

இலங்கையிலிருந்து உக்ரேன் இறக்குமதி செய்யும் தேயிலை, மற்றும் பீங்கான் பொருட்களுக்காக அதிக வசதிகளை வழங்குவது தொடர்பாகவும் உக்ரேன் இலங்கைக்கு ஏற்றுமதிசெய்யும் யூரியா உரம் மற்றும் உருக்கு கம்பிகளின் அளவை அதிகரிப்பது தொடர்பாகவும் அவதானம் செலுத்தப்பட்டது.

அத்துடன் இலங்கையில் எண்ணெய் அகழ்வு பற்றி ஆராய உக்ரேனிடம் இருந்து தொழில்நுட்ப உதவியை பெற்றுக்கொள்ளவும் இரு நாடுகளுக்கிடையிலும் கல்வி பரிமாற்ற திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் இரு நாடுகளினதும் தலைவர்களும் இணக்கம் தெரிவித்தனர். இந்நிலையில் சுற்றுலா, கடற்படை, போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு துறையை மேம்படுத்தும் மூன்று உடன்படிக்கைகளை இலங்கையும் உக்ரேனும் நேற்று (30) செய்துகொண் டன.

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் உக்ரேன் ஜனாதிபதி விக்டர் யனுகோவிச் முன்னிலையில் இந்த உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன.

சுற்றுலா தொடர்பான உடன்படிக்கையில் இலங்கையின் சார்பாக ரஷ்யாவுக்கான இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்கவும், உக்ரேனின் சார்பில் உக்ரேனிய கலாசார மற்றும் சுற்றுலா அமைச்சர் மிக்கேய்ல் குயின்யக்கும் கைச்சாத்திட்டனர்.

யுத்த நடவடிக்கைகள் மற்றும் தொழில்நுட்ப விவகாரங்கள் தொடர்பான உடன்படிக்கையில் இலங்கையின் சார்பாக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவும் உக்ரேனின் சார்பில் பாதுகாப்பு அமைச்சர் மிக்கைலோ யெஸெலும் கைச்சாத்திட்டனர். பாதுகாப்பு தொடர்பான உடன்படிக்கையில் இலங்கையின் சார்பாக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவும், உக்ரேனின் சார்பில் பாது காப்பு சேவைகளின் பிரதி தலைவர் பொரோ ட்கோவும் கைச்சாத்திட்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

வடக்கில் ஏற்படுத்தியுள்ள சமாதான சூழ்நிலையை குழப்ப சிலர் முயற்சி சபையில் அமைச்சர் பசில் தெரிவிப்பு தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு நன்றி தெரிவிப்பு


அரசாங்கம் வடபகுதியில் ஏற்படுத்தியுள்ள சமாதான சூழ்நிலையை தெற்கில் படுதோல்வி அடைந்துள்ள சில அரசியல் கட்சிகள் குழப்புவதற்கு முயற்சி செய்வதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார்.

இப்பொழுது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொறுப்புணர்வுடன் செயற்படுவதுடன் அரசாங்கத்தின் மீள்குடியேற்ற வேலைத் திட்டங்களில் இணைந்து செயற்பட முன்வந்திருப்பதையிட்டு அவர்களுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேனெனவும் அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் 2010ம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசி ப்பு மீதான விவாதத்தை அரசாங்கத் தரப்பில் ஆரம் பித்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் :

சர்வதேச நாணய நிதியம் மஹிந்த சிந்தனை வேலைத் திட்டத்தை முழுமையாக ஏற்றுக் கொண்டு தான் 2.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியுதவியை வழங்குகின்றது. அவர்கள் எமக்கு எந்த நிபந்தனையும் விதிக்காமல் தான் நிதியுதவி வழங்குகின்றார்கள்.

உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், ஆகிய அபிவிருத்தி வங்கி போன்ற சர்வதேச நிதி நிறுவனங்களில் நாம் நிதியுதவி பெறுகின்றோம். நாம் அந்த நிறுவனங்களில் உறுப்புரிமையைப் பெற்றிருப்பவர்கள் என்ற அடிப்படையில் தான் நிதியுதவிகளைப் பெற்றுக்கொள்ளு கின்றோம். நாம் இந்நிதி நிறுவனங்களி டமிருந்து நிதியுதவியைப் பெற்றுக் கொள்ளுவதற்காக எந்த அரச நிறுவன த்தையும், சொத்தையும் தனியார் மயப்படுத்த மாட்டோம். நாட்டு மக்களுக்கு வழங்குகின்ற நிவாரணங்களை யும், மானியங்களையும் குறைக்க மாட்டோம்.

அரச துறையில் ஆட்குறைப்பு செய்ய மாட்டோம் போன்றவற்றை அந்நிறுவனங்களுக்கு தெளிவாகக் கூறி வைத்துள்ளோம். நாம் ஐரோப்பிய ஒன்றியத்திடமும் நிதியுதவி கேட்போம். அதற்காக நாட்டின் இறைமையையும், சுயாதிபத்தியத்தையும், தனித்துவத்தையும் ஒருபோதும் காட்டிக் கொடுக்க முடியாது. இவ்விடயத்தில் ஜனாதிபதி தெளிவான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றார்.

ஆனால், ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியிலிருந்த போது சர்வதேச நிதி நிறுவனங்களில் நிதியுதவி பெற்ற போது நிபந்தனைகளுக்கு உட்பட்டுதான் பெற்றனர். 1980 களில் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 60 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனுதவியைப் பெற்றுக் கொள்ளுவதற்காக ஐ. தே. க. ஆட்சியாளர்கள் ஹோட்டல் துறை, யுனைட்டட் மோட்டர்ஸ் உட்பட பல அரச நிறுவனங்களைத் தனியார் மயப்படுத்தினார்கள்.

1990ம் ஆண்டில் ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 30 மில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடனாகப் பெற்றுக்கொள்ளவென பசளை மானியத்தை நிறுத்தினார்கள். எஞ்சி இருந்த அரச நிறுவனங்களையும் தனியார் மயப்படுத்திட இணங்கினார்கள். அவ்வாறு நாம் ஒருபோதும் செயற்பட்டது கிடையாது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் மக்களின் விருப்பப்படி செயற்படுகின்றது. அதன் காரணத்தினால் தான் எல்லாத் தேர்தல்களிலும் ஜனாதிபதி தலைமையிலான ஐ. ம. சு. மு. அமோக வெற்றிபெற்று வருகின்றது. ஐ. தே. க. மக்களிடமிருந்து தூரமாகி வருகின்றது.

மூன்று தசாப்த காலப் பயங்கரவாதத்தை ஒழித்து நாடுபூராகவும் தேசியக் கொடி பறக்கக்கூடிய சூழலை ஏற்படுத்தியுள்ளோம்.
மேலும் இங்கே தொடர்க...

தனுனவின் சொத்துக்கள் அரசுடமை
இராணுவத்துக்கு உபகரணங்கள் கொள்வனவு செய்த ‘ஹைகோர்ப்’ கேள்விப்பத்திர நிதி மோசடி வழக்கில் இரண்டாவது சந்தேக நபரான ஓய்வுபெற்ற ஜெனரல் சரத் பொன்சேகாவின் மருமகனான தனுன திலகரட்னவுக்கு சொந்தமான இரண்டு வங்கிகளில் ஏழு கணக்குகளில் உள்ள 15 மில்லியன் ரூபாவுக்கு மேற்பட்ட பணத்தையும் 1251 அமெரிக்க டொலர்களையும் அரசுடைமையாக்குமாறு கொழும்பு கோட்டை மாஜிஸ்திரேட் நீதவான் லங்கா ஜயரட்ன றேற்று (30) உத்தர விட்டார்.

தனுன திலகரட்ன நேற்றுக்காலை 9 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதையடுத்தே, கொழும்பு கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார்.

தனுன திலகரட்னவை இந்த மாதம் 30 ஆம் திகதி காலை 9 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கோரி துண்டுப்பிரசுரங்களை ஒட்டுமாறு குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

சந்தேக நபரான தனுன திலகரட்னவுக்கு இலங்கை வங்கியின் பிரதான கிளையில் நிலையான வைப்பு கணக்குகள் நான்கும், ஹொங்கொங் அன்ட் ஷாங்ஹாய் வங்கியில் சேமிப்பு கணக்கில் 15 இலட்சத்து ஏழாயிரத்து 410 ரூபா பணமும் 1251 அமெரிக்க டொலர்களும் உள்ளன.

இந்த கணக்குகளில் உள்ள பணத்தை சந்தேக நபருக்கோ அல்லது அவரது சார்பில் வரும் வேறு எவருக்கோ கையளிக்கக் கூடாது என சம்பந்தப்பட்ட இரு வங்கிகளினதும் நிர்வாகிகளுக்கு மாஜிஸ்திரேட் நீதவான் உத்தரவிட்டார்.

அத்துடன் நீதிமன்றத்தில் ஆஜராகு மாறு பலமுறை அறிவிக்கப்பட்ட போதிலும் அவ்வாறு அவர் ஆஜராக தவறியதனால் தனுன திலகரட்னவை கைது செய்யுமாறு மாஜிஸ்திரேட் நீதவான் மீண்டும் நேற்று உத்தரவு பிறப்பித்தார்.

இதேவேளை தனுன திலகரட்னவுக்கு சொந்தமாக ஏனைய சொத்துக்கள் உள்ளனவா என்பது தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...