ஹெரோயின் போதைப் பொருளை கடத்த பயன்படுத்திய வான் ஒன்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
ஹெரோயின் போதைப் பொருளை கடத்த பயன்படுத்திய வான் ஒன்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
புத்தளம், நித்தெனிய பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த வானையே பொலிஸார் கைப்பற்றியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்தார்.
கைப்பற்றப்பட்ட வானின் சாரதியை கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள கற்பிட்டி பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 18ம் திகதி முந்தல் பகுதியில் மீட்டெடுக்கப்பட்ட 30 கிலோ ஹெரோயின் போதைப் பொருள் இந்த வானில் கொண்டுச் செல்லப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையர்களுக்கு இஸ்ரேலில் அதிக தொழில் வாய்ப்பு
இலங்கையர்களுக்கு அதிக தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்கு இஸ்ரேல் இணக்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தும் நோக்கில் இஸ்ரேலில் இருந்து சிரேஷ்ட அதிகாரிகள் குழுவொன்று இலங்கை வரவுள்ளது.
இஸ்ரேலில் அதிக தொழில் வாய்ப்புகள் விவசாய துறையிலேயே இருப்பதாகவும் அத்துறையில் இலங்கையர்களுக்கு அதிக தொழில் வாய்ப்புகளை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சு கூறுகிறது.
மாவையுடன் கட்சி முக்கியஸ்தர்கள் வாக்குவாதம்
இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராசாவுக்கும் வவுனியா கட்சி முக்கியஸ்தர்களுக்கு மிடையில் நேற்று முன்தினரவு வவுனியாவில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வன்னி மாவட்ட வேட்பாளர் தெரிவு தொடர்பாக வவுனியா கட்சி உறுப்பினர்கள் மற்றும் மக்களுடைய கருத்துக்களை அறியாது கூட்டமைப்பு கொழும்பில் கூடி வேட்பாளர்களை தெரிவு செய்தமை ஏற்றுக் கொள்ள முடியாதது என்றும் கடும் ஆட்சேபம் வவுனியாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வன்னி மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்களில் முன்னாள் எம்.பி.க்கள் சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம் உள்ளிட்ட ஒன்பது பேரின் பெயர்கள் சிபார்சு செய்யப்பட்டி ருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர்களில் முன்னாள் மன்னார் மாவட்ட எம்.பி. எஸ். சூசை தாசனின் பெயரும் இடம்பெற்று ள்ளதாக கூட்டமைப்பு வட்டாரங் கள் தெரிவித்தன.
வடக்குக்கு கடந்த வாரம் 5,50,000 சுற்றுலா பயணிகள்
வட பகுதிக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கிட்டத்தட்ட 5 இலட்சத்து 50 ஆயிரம் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் கடந்த வாரம் ஏ9 வீதி ஊடாக யாழ்ப்பாணம் சென்றுள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
நாக விகாரையில் கடந்தவாரம் 2 இலட்சத்து 50 ஆயிரம் யாத்திரிகர்கள் வழிபாடுகளில் ஈடுபட்டதாகவும், இவர்களில் பெரும்பகுதியினர் தென் பகுதியைச் சேர்ந்த உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் என்றும் யாழ்ப்பாணத்துக்கும் அதனைச் சுற்றியுள்ள ஏனைய முக்கிய இடங்களுக்கும் இவர்கள் விஜயம் செய்துள்ளதாகவும் சுற்றுலாத்துறை அமைச்சர் அச்சல ஜாகொட தெரிவித்தார்.
மூன்று தசாப்தங்களாக வடக்கில் இடம்பெற்று வந்த மோதல்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள தையடுத்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கையை உலகத்தில் பாதுகாப்பான இடங்களில் ஒன்றாக கருதி இங்கு வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.
வட பகுதிக்கான நீர் விநியோகத்தை சீர்செய்ய ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய வசதிகளை சீர்செய்யும் நடவடிக்கைகள் படிப்படியே எடுக்கப்படுமென்றும் அமை ச்சர் மேலும் கூறினார்.

ஐ.ம.சு.கூ.வின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் அநுராதபுரத்தில்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் எதிர்வரும் 27ஆம் திகதி பிற்பகல் 4.00 மணிக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அநுராதபுரத்தில் நடைபெற உள்ளதாக ஐ.ம.சு. முன்ன ணி செயலாளர் அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த் தெரிவித்தார்.
ஐ. ம. சு. முன்னணி ஊடகவியலாளர் மாநாடு நேற்று மகாவலி நிலையத்தில் நடைபெற்றது.
இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது, வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைந்த மறுதினம் ஐ.ம.சு. முன்னணி சார்பாக போட்டியிடும் சகல வேட்பாளர்களும் அநுராதபுரத்தில் ஒன்று கூடி ஜனாதிபதி முன்னிலையில் வாக்குறுதி அளிக்க உள்ளனர்.
மத அனுஷ்டானங்களின் பின்னர் கூட்டம் நடைபெறும்.
த. தே. கூ. முன்னாள் எம்.பிக்கள் ஐ. ம. சு. முன்னணியில் போட்டி
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் ஐ. ம. சு. முன்னணியில் இணைந்து போட்டியிட உள்ளதாக அமைச்சர் டளஸ் அழஹப்பெரும தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் முன் னாள் எம்.பி. செல்வி தங்கேஸ்வ ரியும் வன்னி மாவட்டத்தில் முன் னாள் எம்.பிகளான சிவநாதன் கிஷோர், கனகரத்னம் ஆகியோரும் போட்டியிட உள்ளனர்.
தங்கேஷ்வரி வேட்பு மனுப்பத்திர த்தில் கையொப்பமி ட்டுள்ளதோடு ஏனையவர்கள் நேற்று (22) கையொ ப்பமிட ஏற்பாடாகியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளதாக சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து, தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்.
அந்த அமைப்பின் தலைவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என். சிறிகாந்தாவும், செயலாளராக தானும் செயற்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்திய அரசாங்கத்துக்கு ஆதரவாக செயற்படுவதாலேயே தாம் அதிலிருந்து விலகி புதிய அமைப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இடம் மறுக்கப்பட்டவர்கள் மற்றும் அதிருப்தியடைந்தவர்கள் இந்த அமைப்பில் சேரலாம் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றாக இந்த தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

.உச்சநீதிமன்றத்தில் இலங்கைத் தமிழர் உருத்திரகுமாரன் நாளை வாதம்
விடுதலைப்புலிகள் தொடர்பான வழக்கு ஒன்றில் நியூயோர்க் வாழ் இலங்கைத் தமிழரான விஸ்வநாதன் உருத்திரகுமாரன் அமெரிக்க நீதிமன்றத்தில் நாளை செவ்வாய்க்கிழமை வாதாடவுள்ளார். அமெரிக்க உச்ச நீதிமன்றில் தமிழ் சட்டவாளர் ஒருவர் வாதாடுவது வரலாற்றில் இதுவே முதல் தடவை.
அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தினால் தீவிரவாதிகள் எனப் பட்டியலிடப்பட்டிருக்கும் அமைப்புக்களுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்கப்படுவதைக் கட்டுப்படுத்தும் சட்டங்களுக்கு எதிராகவே அவர் வாதாடவுள்ளார்.
மனிதாபிமான உதவிகள் மற்றும் உதவி செய்வதற்கும் தீவிரவாத அமைப்புக்களுக்கு உதவுவதற்கும் இடையிலான வேறுபாடுகளை வரையறுக்கும்படி அவர் நீதிமன்றத்தில் வாதாடுவார்.
யார் தீவிரவாதிகள் என்பதை வரையறுப்பது கடினமானது என்பது பற்றியும், அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை உதவிகள் வழங்குவதையும் தீவிரவாதிகளுக்கோ தீவிரவாதத்திற்கோ ஆதரவளிப்பதையும் ஒன்றாகப் பார்க்க முடியாது என்பது பற்றியும் அவர் வாதாடவுள்ளார்.
தற்போதுள்ள நடைமுறைகளின்படி, ராஜாங்கத் திணைக்களத்தினால் வெளிநாட்டுத் தீவிரவாத அமைப்புக்கள் எனப் பட்டியலிடப்பட்டுள்ளவற்றுக்கு வழங்கப்படும் மனிதாபிமான உதவிகள் உள்ளிட்ட எந்தவொரு உதவியும் அமெரிக்க தேசப்பற்றுச் சட்டத்தின் கீழ் குற்றமாகும்.
விஸ்வநாதன் உருத்திரகுமாரன் தான் வரலாற்றில் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் முன் தோன்றவுள்ள முதல் ஈழத் தமிழ் சட்டவாளர் என்று மனித உரிமைகள் ஆணையக செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றமே அமெரிக்காவில் உள்ள அதி உயர் நீதி நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
கனேடிய 'உதயன்' பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல்
கனடாவிலிருந்து வெளிவரும் உதயன் பத்திரிகை அலுவலகம் மீது இனந்தெரியாத குழுவொன்று தாக்குதல் நடத்தியுள்ளதாக த ரொரண்டோ ஸ்ரார் இணையத்தளம் செய்திவெளியிட்டுள்ளது.
தாக்குதலுக்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னர் பத்திரிகையின் தலைமை ஆசிரியருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்ததாக இலங்கை- கனடா வணிக பேரவை மற்றும் கனேடிய தமிழர் ஒன்றியத்தின் தலைவர் குல செல்லத்துரை தெரிவித்துள்ளார்..
இந்தத் தாக்குதல் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
இலங்கை மி கனேடிய வர்த்தகப் பேரவையின் தலைவர் செல்லத்துரை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நடத்திய சந்திப்பு குறித்த செய்திகள் அப்பத்திரிகையின் முதற் பக்கத்தில் வெளியானதைத் தொடர்ந்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை வெற்றிகரமாக அமையப் பெற்றுள்ளதென செல்லத்துரை குறிப்பிட்டுள்ளார்.
அமைதியான முறையில் வாழ்வதற்காகவே கனடாவிற்கு வந்ததாகவும், தமது கருத்துக்களை சுதந்திரமாக வெளியிட முடியாத நிலை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொதுத் தேர்தலில் சரத் பொன்சேகா கொழும்பில் போட்டி
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஜெனரல் சரத் பொன்சேகா கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாக அவரது பாரியார் அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார்.
மேலதிக விபரங்கள் விரைவில்...
மேலதிக விபரங்கள் விரைவில்...
சிறுவர் குற்றச்செயல்களை விசாரிக்கப் புதிய நீதிமன்றம்
சிறுவர் குற்றச் செயல்கள் சம்பந்தமாக விசாரிப்பதற்காக தனியான நீதிமன்றம் ஒன்றை கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் அமைக்க நீதிமைச்சு தீர்மானித்துள்ளது.
சிறுவர்களின் குற்றச் செயல்கள் குறித்து இதுவரை பொதுவான நீதிமன்றத்திலேயே விசாரணைகள் நடத்தப்பட்டன். 16வயதுக்கு உட்பட்டவர்களின் குற்றச் செயல்கள் இனிமேல் புதிய நீதிமன்றத்தில் விசாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிறார் குற்றச் செயல்கள் தொடர்பாகவும் சிறுவர்களை தடுத்து வைத்தல் சம்பந்தமாகவும் ஆராயவென அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் நீதியசர் ஷிரானி பண்டாரநாயக்கவின் ஆலோசனையின் பேரில் இந்தப் புதிய நீதிமன்றம் அமைக்கப்படவுள்ளது
சமரச பேச்சுவார்த்தைக்கு வாருங்கள்
ஆப்கானிஸ்தான் அதிபரின் அழைப்பை தலீபான்கள் ஏற்க மறுப்பு
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலைமையிலான ராணுவத்தை எதிர்த்து போராடி வரும் தலீபான்களை சமரச பேச்சுவார்த்தை நடத்த வாருங்கள் என்று ஆப்கானிஸ்தான் அதிபர் கர்சாய் விடுத்த அழைப்பை ஏற்க தலீபான்கள் மறுத்து விட்டனர்.
ராணுவ நடவடிக்கை
ஆப்கானிஸ்தான் ஹெல்மாண்டு மாநிலத்தில் தான் தலீபான்கள் வலுவாக இருக்கிறார்கள். இந்த மாநிலத்தில் உள்ள மர்ஜா என்ற பகுதியில் அமெரிக்கா தலைமையிலான ராணுவ வீரர்கள் தலீபான்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.
மர்ஜாவில் உள்ள தலீபான்களின் தலைமையகத்தை அமெரிக்கா தலைமையிலான ராணுவம் கைப்பற்றியது. அங்கிருந்த ஆயுதங்களையும், தலீபான்களின் அடையாள அட்டைகளையும் ராணுவம் கைப்பற்றியது.
அழைப்பு
அதோடு பாகிஸ்தானில் பதுங்கி இருந்த தலீபான் இயக்கத்தின் நம்பர்2 தலைவரான முல்லா அப்துல் கனி பராதர் பிடிபட்டார். இப்படி தலீபான் இயக்கம் சரிவை சந்தித்து வரும் நிலையில், அந்த இயக்கத்தினரை அமைதி பாதைக்கு திரும்பும்படியும், பேச்சுவார்த்தை நடத்த வரும்படியும் ஆப்கானிஸ்தான் அதிபர் கர்சாய் கேட்டுக்கொண்டார்.
அவர் இந்த அழைப்பை நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் பேசியபோது விடுத்தார். அவரது அழைப்பை ஏற்க தலீபான்கள் மறுத்து விட்டனர். வெளிநாட்டு ராணுவம் முதலில் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறட்டும் என்று குறிப்பிட்டனர்.
பொம்மை
தலீபான் செய்தி தொடர்பாளர் கோரி முகமது ïசுப் கூறுகையில், கர்சாய் ஒரு பொம்மை. அவரால் அரசாங்கத்தின் பிரதிநிதியாக இருந்து பேசமுடியாது. அவர் ஊழலில் மூழ்கி விட்டார். அவரை சுற்றிலும் இருப்பவர்கள் போரை காரணம் காட்டி பணம் சம்பாதித்த பணக்காரர்கள் தான் இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டார்.
அமெரிக்கா தலைமையிலான 15 ஆயிரம் ராணுவ வீரர்கள் போர் விமானங்கள் ஆதரவுடன் மர்ஜா பகுதியில் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு எங்களது போராளிகள் கடும் எதிர்ப்பை காட்டி வருகிறார்கள். எங்கள் எதிர்ப்பு இரவு பகல் என்று 24 மணி நேரமும் தளர்வு இல்லாமல் தொடர்ந்து வருகிறது என்று ïசுப் தெரிவித்தார்.
இதற்கிடையில் மர்ஜா பகுதியில் ராணுவ நடவடிக்கைக்கு தலைமை தாங்கி நடத்தி வரும் ராணுவ தளபதி கூறுகையில், இன்னும் 30 நாட்களில் இந்த பகுதியில் இருந்து தலீபான்களை விரட்டி அடித்து விடுவோம் என்று தெரிவித்தார்.
ரூ.3 கோடி கேட்டு கடத்தப்பட்ட 3 சீக்கியர்கள் தலை துண்டித்து கொலை
பாகிஸ்தானில் தலீபான் தீவிரவாதிகள் அட்டூழியம்
பாகிஸ்தானில் தலீபான் தீவிரவாதிகள் அட்டூழியம்
ரூ.3 கோடி கேட்டு கடத்தப்பட்ட சீக்கியர்களில் 3 பேரை தலீபான் தீவிரவாதிகள் தலையை துண்டித்து கொலை செய்தனர். இந்த அட்டூழியத்தை செய்த அவர்கள், மேலும் சில சீக்கியர்களை இன்னமும் பணய கைதிகளாக வைத்து சித்ரவதை செய்து வருகிறார்கள்.
சீக்கியர்களை கடத்திய தீவிரவாதிகள்
பாகிஸ்தான் நாட்டில், மலைவாசிகள் வசிக்கும் கிபெர் என்ற பகுதியைச் சேர்ந்த பாரா என்ற இடத்தில் இருந்து சில சீக்கியர்களை தலீபான் தீவிரவாதிகள் 35 நாட்களுக்கு முன்னர் கடத்திச் சென்றனர். அந்தப் பகுதியில் வசிக்கும் சீக்கியர்கள் சிறுபான்மையினர் ஆவர். இந்தப் பகுதி பாகிஸ்தான் அரசின் கடுப்பாட்டில் இல்லை. முழுக்க, முழுக்க தலீபான்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகிறது.
6 சீக்கியர்கள் கடத்தப்பட்டதாக ஒரு தகவலும், 4 பேர் கடத்தப்பட்டதாக இன்னொரு தகவலும் தெரிவித்தன.
ரூ.3 கோடி வேண்டும்
எத்தனை பேர் கடத்தப்பட்டனர் என்பதில் குழப்பம் இருந்தாலும், கடத்தப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டுமானால் ரூ.3 கோடி பணய தொகை கொடுக்க வேண்டும் என்று தலீபான்கள் கேட்டு மிரட்டல் விடுத்து இருந்தனர். அதற்காக காலக் கெடுவும் விதித்து இருந்தனர்.
நேற்றுடன் இந்த காலக்கெடு முடிந்தது. இதைத் தொடர்ந்து முதல் கட்டமாக 3 சீக்கியர்களை அவர்கள் பிடித்து வைத்து இருந்த, படி என்ற இடத்தில் இருந்து வேறொரு இடத்துக்கு கடத்தினார்கள்.
3 பேர் கொலை
அவர்களை கொடூரமான முறையில் தலையை துண்டித்து படுகொலை செய்தனர். பின்னர் அவர்களின் தலைகளை பெஷாவரில் உள்ள குருத்வாராவில் போட்டு விட்டுச் சென்றனர்.
கொலை செய்யப்பட்ட 3 பேரில் ஒருவர் பெயர் ஜஸ்பால் சிங். இன்னொருவர் பெயர் மகல் சிங். மூன்றாவது சீக்கியரின் பெயர் தெரிய வில்லை.
மீதி சீக்கியர்களை அவர்கள் தொடர்ந்து பணய கைதிகளை வைத்து சித்ரவதை செய்து வருவதாக கூறப்படுகிறது.
இலங்கை முன்னாள் ராணுவ தளபதி பொன்சேகா மருமகனின் வெளிநாட்டு வங்கி கணக்குகள் எவ்வளவு? சர்வதேச போலீஸ் உதவியுடன் இலங்கை அரசு விசாரிக்கிறது
இலங்கை முன்னாள் ராணுவ தளபதி பொன்சேகா மருமகனின் வெளிநாட்டு வங்கி கணக்குகளில் எவ்வளவு பணம் இருக்கிறது? என்று சர்வதேச போலீஸ் உதவியுடன், இலங்கை அரசு விசாரணை நடத்துகிறது.
பொன்சேகாவின் மருமகன்
இலங்கை ராணுவ தளபதியாக இருந்து விடுதலைப்புலிகளுடன் போர் நடத்தி வெற்றி கண்டவர், பொன்சேகா. ராணுவ தளபதி பதவியில் இருந்து விலகிய அவர் அதிபர் தேர்தலில் போட்டியிட்டு, தோல்வியை தழுவினார். பின்னர் அவர் மீது அதிபர் ராஜபக்சே, பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி கைது செய்தார். தற்போது பொன்சேகா, ராணுவ கோர்ட்டு விசாரணையை எதிர்நோக்கி ஜெயிலில் இருக்கிறார்.
பொன்சேகாவின் மருமகன் தனுனா திலக ரத்னே. இவர் ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலைகளை அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் நடத்தி வருகிறார். இலங்கை ராணுவத்துக்கு தேவையான தளவாடங்கள், மற்றும் போர் கருவிகளை சப்ளை செய்வதற்காக இலங்கை அரசு டெண்டர் கோரிய போது, அதிக பட்ச தொகைக்கு தனுனா திலக ரத்னே கேட்டார்.
ஊழல்?
என்றாலும் அவருக்குதான் அந்த டெண்டர் வழங்கப்பட்டது. இந்த டெண்டர் பல கோடி மதிப்பு உள்ளது. இதில் பொன்சேகா ஊழல் செய்திருப்பதாக, அதிபர் ராஜபக்சே இப்போது குற்றம் சாட்டி இருக்கிறார்.
இதைத்தொடர்ந்து, பொன்சேகாவின் மருமகனை, இலங்கை அரசு தேடி வருகிறது. அவரை கைது செய்யவும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில், அவரது வெளிநாட்டு வங்கி கணக்குகள் பற்றிய விவரத்தை அறியவும், இலங்கை அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக சர்வதேச போலீசின் உதவியை இலங்கை அரசு நாடி இருக்கிறது.
தாயார் கைது
இந்த நிலையில், தனுனா திலக ரத்னேயின் தாயார் அசோகா திலகரத்னே, கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடப்பட்டார். அவரிடம் இருந்து, ஏராளமான வெளிநாட்டு பணத்தை, சி.ஐ.டி. போலீசார் கைப்பற்றினார்கள். அவரது வங்கி கணக்கு பற்றியும் விசாரணை நடந்து வருகிறது.