23 அக்டோபர், 2009

prabahran-dead

இலங்கையில், விடுதலைப் புலிகளுக்கும், அரசுக்கும் இடையேயான போரின்போது, அத்துமீறல்கள் போர்குற்றம் நடந்ததா என்பது குறித்து விசாரணை prabahran-deadநடத்துமாறு,


இலங்கையில், விடுதலைப் புலிகளுக்கும், அரசுக்கும் இடையேயான போரின்போது, அத்துமீறல்கள் போர்குற்றம் நடந்ததா என்பது குறித்து விசாரணை நடத்துமாறு, இலங்கை அரசுக்கு, அமெரிக்கா அறிக்கை அனுப்பியுள்ளது.அமெரிக்க பார்லி., உறுப்பினர்கள், இது குறித்து பிரச்னை கிளப்பியதாகவும், அதன் அடிப்படையில் இந்த அறிக்கை அனுப்பியுள்ளதாகவும் அமெரிக்கா கூறுகிறது.

அமெரிக்க வெளியுறவுத் துறை சார்பில் அனுப்பப்பட்டுள்ள அறிக்கையில் கேட்கப்பட்டுள்ள விவரங்கள்:

இந்த ஆண்டு துவக்கத்தில், இலங்கையில் நடந்த போரில், அப்பாவி மக்கள் வசித்த பகுதிகளில், இலங்கை ராணுவம் குண்டு வீசியதும், விடுதலைப் புலிகள் தரப்பில் குழந்தைகளை போரில் ஈடுபட வைத்ததும் கவலையளிக்கக் கூடிய விஷயங்கள்.
இது தொடர்பாக எங்களிடம் கொடுக்கப்பட்ட தனி நபர் புகார்கள் உண்மை தானா என சரிபார்க்க நாங்கள் விரும்பவில்லை என்றாலும், அவற்றுக்கு சரியான விளக்கம் தேவை என கருதுகிறோம்.

இலங்கையின் வடக்குப் பகுதியில் வாழ்ந்த மக்களை மீண்டும் அங்கே குடியமர்த்தும் பணியில் ஈடுபட்டிருப்பதாக இலங்கை அரசு கூறினாலும், அதை விட முக்கியமாக, குடியமர்த்தப்படுவோர் குறித்து தகுந்த ஆதாரங்கள் தேவை என்பதை திடமாக நம்புகிறோம்.

புலிகள் சரண் அடைய முன்வந்தபோது கொலை : இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே, போர் நடந்த விதம் எங்களுக்கு கவலை அளிப்பதாக உள்ளது. புலிகள் சரண் அடைய வருவதாக ஒப்பந்தம் ஏற்பட்ட நேரத்தில் வரவழைக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. "கடந்த 1983 முதல் 2009 வரையில், பல்வேறு கால கட்டங்களில், இலங்கையில் நடந்த சண்டையில், இது வரை, 80 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரையிலான அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர்' என்ற, ஐ.நா., தகவலும், அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.

ராஜபக்சே மறுப்பு : அமெரிக்கா அனுப்பியுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ள விஷயங்கள், ஆதாரம் அற்றவை என்றும், முரண்பாடானவை என்றும், இலங்கை அதிபர் ராஜபக்சே கருத்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்க தூதரகம் விளக்கம்: ஆனால், அமெரிக்க அறிக்கை, ஆதாரத்துடன் தயாரிக்கப்பட்டிருப்பதாக, இலங்கையில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகம் கருத்து தெரிவித்துள்ளது. "போர் நடந்தபோது, அதை கண்ணெதிரே பார்த்த மக்கள் தெரிவித்த தகவல்களும், போர் நடக்காத பகுதியில் வாழும் மக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் தான் அந்த அறிக்கை அமைந்துள்ளது' என, கூறியுள்ளது.

கடந்த 3 நாட்களுக்கு முன்னதாக இலங்கையில் போர் தொடர்பாக ஐ.நா., குற்றம் சாட்டியது. இந்நிலையில் அமெரிக்காவும் அறிக்கை கேட்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

மேலும் இங்கே தொடர்க...
வவுனியா மக்கள் போக்குவரத்துச்சாலை ஊழியர்கள் நேற்று முதல் வேலை நிறுத்தம்வவுனியாவில் உள்ள தனியார் பஸ்களுக்கும் வவுனியா மக்கள் போக்குவரத்துச் சாலையைச் சேர்ந்த பஸ்களுக்கும் ஒரே சேவை வழங்கப்பட்டுள்ளதை ஆட்சேபித்து நேற்று முதல் வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா செயலக அதிகாரிகள் தனியார் பஸ்களுக்கும், மக்கள் போக்குவரத்துச் சேவை நேரத்தையே கொடுத்திருப்பதனால், இரு தரப்பினருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

இந்தத் தகராறையடுத்து, வவுனியா மக்கள் போக்குவரத்துச் சாலை ஊழியர்களின் வடமாகாண ஜனநாயகத் தொழிலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.

தனியார் பஸ்களுக்கு வேறு சேவை நேரமும், மக்கள் போக்குவரத்துச் சாலையைச் சேர்ந்த பஸ்களுக்கு வேறு சேவை நேரமும் இதுகால வரையிலும் வழங்கப்பட்டிருந்ததாகவும், மக்கள் போக்குவரத்து பஸ்களின் சேவை நேரத்திலேயே தனியார் பஸ்களும் சேவையில் ஈடுபடத்தக்கவாறு கடந்த 20 ஆம் திகதி முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மாற்றம் ரத்துச் செய்யப்பட வேண்டும் என்றும், போக்குவரத்து அமைச்சு, மக்கள் போக்குவரத்துச் சேவைக்கு வழங்கப்பட்ட நேர அட்டவணைக்கு அமைய தனியார் சேவை நேரம் மாற்றப்பட வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

இந்த வேலை நிறுத்தம் தொடர்பாக போக்குவரத்து பிரதி அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக வடமாகாண ஜனநாயகத் தொழிலாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

வியாழக்கிழமை நண்பகல் முதல் இடம்பெற்று வரும் இந்த வேலை நிறுத்தம் காரணமாக வவுனியா மாவட்டத்தின் மக்கள் போக்குவரத்துச் சாலையின் உள்ளூர் சேவைகள் உட்பட சகல சேவைகளும் ஸ்தம்பிதமடைந்துள்ளன. இதனால் பொதுமக்களும், அரச ஊழியர்கள், பாடசாலை மாணவர்கள் என பலதரப்பட்டவர்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது
மேலும் இங்கே தொடர்க...
ஆஸியில் தஞ்சம் கோரியோரில் பயங்கரவாதிகள் இல்லை : கெவின் ரொட்
படகில் சென்ற 32 இலங்கையர் அவுஸ்திரேலியாவில் கைது
கிறிஸ்மஸ் தீவுக்கருகில் 13கிலோ மீற்றர் தூரத்தில் படகில் சென்று கொண்டிருந்த 32 இலங்கை அகதிகளை அவுஸ்திரேலிய விமானப்படையினர் கண்டு பிடித்ததை அடுத்து அனைவரும் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு கிறிஸ்மஸ் தீவிலுள்ள தடுப்பு முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். பழைய மரப்படகு ஒன்றை தாங்களாகவே செலுத்திக் கொண்டு இலங்கையிலிருந்து புறப்பட்ட 32 பேரும் இலங்கை நேரப்படி நேற்று அதிகாலை 2.30 மணி அளவில் அவுஸ்திரேலிய கடற்பரப்பில் வைத்து அந்நாட்டு விமானப் படையினரால் கண்டு பிடிக்கப்பட்டனர். இந்த வருடம் அவுஸ்திரேலியா சென்று பிடிபட்ட 35ஆவது சட்டவிரோத படகு இதுவாகும்.

உயிர்காப்பு அங்கிகள் அணிவித்து இவர்கள் அனைவரையும் சுங்க அதிகாரிகள் கரைசேர்த்துள்ளார்கள்..

சுகாதார மற்றும் பாதுகாப்பு சோதனைகளுக்காக இவர்களை குடிவரவு தடுப்பு முகாமுக்கு பஸ்ஸில் அழைத்து சென்றபோது இவர்கள் வீதியில் சென்றவர்களை நோக்கி கைகளை அசைத்து சிரித்து மகிழ்ச்சி தெரிவித்தார்கள். இவர்களுடன் தற்போது மொத்தம் 1090 பேர் கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்


தஞ்சம் கோரி அவுஸ்திரேலியாவுக்குள் சட்டவிரோதமான முறையில் பிரவேசிப்போரில் பயங்கரவாதிகள் உள்ளடங்கவில்லை என அந்நாட்டு பிரதமர் கெவின் ரொட் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்துவதைப் போன்று சட்டவிரோத குடியேற்றக்காரர்களில் பயங்கரவாதிகள் எவரும் ஊடுறுவவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறு அடிப்படையற்ற வகையில் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் பெரும் அதிருப்தியை ஏற்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும், தற்போதைய ஆட்சியாளர்கள் எல்லைப் புற பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.

இதன் காரணமாகவே அதிக எண்ணிக்கையிலானோர் சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிப்பதாக அவை சுட்டிக்காட்டியுள்ளன.

சட்டவிரோத குடியேற்றவாசிகளை ஏற்றிய மேலும் இரண்டு படகுகளை அவுஸ்திரேலிய பாதுகாப்புத் தரப்பினர் கைப்பற்றியுள்ளனர். இந்தப் படகுகளில் 32 இலங்கையர்கள் இருப்பதாக சர்வதேச ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன
மேலும் இங்கே தொடர்க...
மனித உரிமை மீறல் தொடர்பான அறிக்கை நேரடி தகவல்களின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது -அமெரிக்கா அறிவிப்புயுத்தத்தின் போது மனித உரிமைகள் மீறப்பட்டமை தொடர்பில் அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தினால் காங்கிரஸுக்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை, யுத்த சூனிய வலயங்களிலும் யுத்தம் நடைபெற்ற பகுதிகளுக்கு அருகில் இருந்தவர்களும் தெரிவித்த நேரடித் தகவல்களின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது என்று இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கம் பொருத்தமானதும் நம்பகமானதுமான ஓர் உத்தியை இனம் கண்டு பொறுப்புடமையை கடைப்பிடிப்பதற்கான நடைமுறையை ஆரம்பிக்க வேண்டும் என்றும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அமெரிக்க தூதரகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெற்ற யுத்தத்தின் இறுதிக் கட்டத்தின் போது மனிதாபிமானத்திற்கு எதிராக சர்வதேச மனிதநேய சட்டங்களை மீறும் வகையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றச் செயல்கள் அல்லது சம்பவங்களை விளக்கி அமெரிக்க ராஜாங்க திணைக்களம் காங்கிரஸ் ஒதுக்கீட்டுக் குழுவிடம் அறிக்கை ஒன்றை கையளித்துள்ளது. காங்கிரஸ் கேட்டுக் கொண்டதற்கிணங்க ராஜாங்க திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கையின் ஒரு பிரதி கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

யுத்தத்தில் ஈடுபட்ட இரு தரப்பினரும் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் சம்பவங்கள் பற்றி முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை வட்டாரங்கள் பரவலாக தெரிவித்த விபரங்கள் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன. அறிக்கை, எந்தவிதமான சட்ட அல்லது அர்த்தபூர்வ முடிவுக்கும் வரவில்லை. அரசாங்கம் பிரகடனம் செய்த யுத்த சூனிய வலயங்களிலும் யுத்தம் நடைபெற்ற இடத்திற்கு அருகாமையிலும் இருந்தவர்கள் நேரடியாகத் தெரிவித்த தகவல்களை அடிப்படையாக வைத்தே இந்த அறிக்கையில் பெரும்பாலான சம்பவங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

விடுதலைப் புலிகள் அடங்கலாக பயங்கரவாத குழுவினர்கள் போன்ற அரசாங்கம் அல்லாத செயற்பாட்டாளர்களின் ஆயுத தாக்குதலிலிருந்து தன்னை பாதுகாக்க ஒரு அரசாங்கத்திற்குரிய இயல்பான உரிமையை அமெரிக்கா அங்கீகரிக்கின்றது. ஆயுத போராட்டங்களின் போது அரசாங்க மற்றும் அரசாங்கங்கள் அல்லாத செயற்பாட்டாளர்கள் சிவிலியன்களை பாதுகாப்பதற்கான கடப்பாடு உட்பட அவர்களது சர்வதேச சட்ட கடப்பாடுகளை மதித்து நடந்து கொள்ள வேண்டுமென அமெரிக்கா எதிர்பார்க்கிறது. தேசிய நல்லிணக்கத்தின் ஒரு அத்தியாவசியமான அம்சமே பொறுப்புடைமை ஆகும். இலங்கை அரசாங்கம் பொருத்தமானதும் நம்பகமானதுமான ஓர் உத்தியை இனம்கண்டு பொறுப்புடைமையை கடைப்பிடிப்பதற்கான நடைமுறையை ஆரம்பிக்க வேண்டும்
மேலும் இங்கே தொடர்க...
அமெரிக்க வர்த்தகர் ராஜ் ராஜரட்னத்திற்கு எதிராக அமெரிக்க நீதிமன்றில் வழக்குத் தாக்கல்விடுதலைப் புலிகளின் தாக்குதல்களினால் பாதிக்கப்பட்ட நபர்கள், பிரபல அமெரிக்க வர்த்தகர் ராஜ் ராஜரட்னத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி உதவிகளை வழங்கியதன் மூலம் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ராஜரட்னம் ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாக தெரிவித்து அமெரிக்க நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் நியூ ஜேர்ஸி மாவட்ட நீதிமன்றில் சுமார் 30 பேரைக் கொண்ட குழுவினரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல்களிலிருந்து தப்பித்தவர்கள் என தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட குழுவினரே இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர். 2001ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரையில் ராஜ் ராஜரட்னத்தின் குடும்பத்தார் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்கு 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை உதவியாக வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, ராஜ் ராஜரட்னம் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் எவ்வித தொடர்பையும் பேணவில்லை என அவரது சட்டத்தரணி நீதிமன்றில் அறிவித்துள்ளார்.

வர்த்தக மோசடி தொடர்பில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களும் ஏற்றுக்கொள்ளக் கூடியவை அல்ல என சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.

2007ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கொழும்புப் புறநகர்ப் பகுதியொன்றில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் தமது கணவர் உயிரிழந்ததாக கருணாமுனிகே கிறிசாந்தி என்பவர் நியூ ஜேர்ஸி நீதிமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்
மேலும் இங்கே தொடர்க...
ஒரு மாத காலத்தில் இடம்பெயர்ந்த மக்கள் ஒரு லட்சம் பேரை மீளக்குடியமர்த்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை


ஒரு மாத காலத்தில் இடம்பெயர்ந்துள்ள மக்களில் ஒரு லட்சம் பேரை அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக நகர அபிவிருத்தி அமைச்சர் ரோகண குமார திசாநாயக்க தெரிவி்த்திருக்கின்றார்.

விடுதலைப்புலிகளிடமிருந்து மீட்கப்பட்டுள்ள முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆயிரம் பேரை மீள்குடியமர்த்தும் நடவடிக்கையில் கலந்து கொண்டபோதே, நகர அபிவிருத்தி அமைச்சர் ரோகண குமார திசாநாயக்க இதனைத் தெரிவித்திருக்கின்றார்.

இடம்பெயர்ந்த மக்களில் சுமார் 42 ஆயிரம் பேரை உடனடியாக மீள்குடியமர்த்துவதற்கான ஆரம்ப வைபவங்கள் வியாழனன்று வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் இடம்பெற்றன.

இந்த வைபவங்களில் 4950 பேர் அவர்களின் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்படுவதற்காக மனிக்பாம் முகாம்களில் இருந்து வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்
மேலும் இங்கே தொடர்க...
21.10.2009 தாயகக்குரல் 24

யுத்தத்தால் இடம் பெயர்ந்து வவுனியா நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள தமிழ் மக்கள் இலங்கை அரசியலில் முக்கியத்துவம் பெற்றிருப்பது போலவே தமிழக அரசியல் அரங்கிலும் முக்கியத்துவம் பெற்றுள்ளனர். இந்த மக்கள் தொடர்பான பிரச்சினைகள் மனிதாபிமான அடிப்படையில் முக்கியத்துவம் பெற்றுள்ளது என்பதை விட இலங்கையிலோ அல்லது தமிழ் நாட்டிலோ இவர்களை அரசியல் கட்சிகள் தமது அரசியல் நலனுக்கு துரும்புச் சீட்டாக முக்கியத்துவப்படுத்துகின்றன என்பதுதான் உண்மை.
வடக்கு கிழக்கில் உள்ள நிவாரணக் கிராமங்களை பார்வையிட்டு அங்குள்ள நிலைமைகளை ஆராயவென அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்தியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு வடக்கில் இடம் பெயர்ந்த மக்களை பார்வையிட்டு சென்றனர். இவர்கள் விஜயம் குறித்து இலங்கையிலும் தமிழ் நாட்டிலும் உள்ள எதிர்கட்சிகள் விமர்சித்துள்ளன. இவர்கள் விஜயம் தொடர்பான சர்ச்சைகள் தமிழ் நாட்டில் இன்னமும் ஓய்ந்தபாடில்லை.
இந்திய பாராளுமன்றக் குழுவில் இடம்பெற்ற திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் நிவாரணக் கிராமங்கள் பற்றி திருப்தி தெரிவித்திருந்தனர். ஆனால் இந்த குழுவில் இடம்பெற்றிருந்த விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் பங்குபற்றிய தொல் திருமாவளவன் இங்கு அடக்கி வாசித்தவர் தமிழ் நாட்டில் சென்று நிவாரணக் கிராமங்கள் பற்றி கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளார். இவர் புலிகளின் ஆதரவாளன் என்பது யாவரும் அறிந்ததே.
நிவாரணக் கிராமங்கள் குறித்து தமிழகத்தில் வைக்கப்படும்; குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை என்று தி.மு.க.வைச் சேர்ந்த அமைச்சர் அழகிரி தெரிவித்துள்ளார். முகாம்களில் பாடசாலைகள் நடக்கின்றன. மாணவர்கள் சிறந்த முறையில் கல்வி கற்கிறார்கள். .பாடசாலை செல்லாத இளைஞர் யுவதிகள் தொழில் கல்வி கற்கிறார்கள். முகாம்களில் வெளியாருடன் தொடர்புகொள்ள தொலைபேசி வசதிகள், தேவையான பொருட்களை வாங்க நியாயவிலைக் கடைகள் போன்ற வசதிகள் இருந்தாலும் அங்குள்ள மக்கள் தமது சொந்த இடங்களுக்கு செல்வதையே விரும்புகிறார்கள் எனவும் அமைச்சர் அழகிரி தெரிவிததிருந்தார்.
நாடு திரும்புமுன் தனியார் தொலைக்காட்சியில் பேட்டியளித்த திருமாவளவன், நிவாரணக் கிராமங்களை வதை முகாம்கள் என்றே அடிக்கடி குறிப்பிட்டிருந்தார். இலங்கை தமிழ் மக்களின் பிரச்சினைக்கு இந்தியாவை நம்பியிருக்காமல் தமிழ் கட்சிகள் அனைவரும் ஒன்றிணைந்து ஜனநாயக வழியில் போராடவேண்டும் எனவும் அந்தப் பேட்டியில் அவர் தெரிவித்திருந்தார்.
தமிழ் நாட்டைச் சேர்ந்த பாராளுமன்ற குழுவின் அறிக்கை கருணாநிதியின் அனுமதியுடன் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு அவ்வறிக்கை தொடர்பாக ஆராய்ந்துள்ளது. தொடர்ந்து அறிக்கை தொடர்பாக தமிழ்நாடு முதல் அமைச்சருடன் மத்திய உள்துறை அமைச்சரும் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினருமான ப.சிதம்பரம் கலந்துரையாடியுள்ளார்.
அமைச்சர் ப.சிதம்பரம் தமிழக பாராளுமன்றக் குழுவின் இலங்கை விஜயம் குறித்து பத்திரிகையாளரின் கேள்விக்கு பதிலளிக்கையில் இலங்கை அரசாங்கம் அகதிகள் தொடர்பாக எடுத்த நடவடிக்கைகள் குறித்து அந்தக் குழு பட்டியல்படுத்தியுள்ளதாகவும் இலங்கை அரசு அதன் வாக்குறுதிகளை நிறைவேற்ற எவ்வாறு அதற்கு உதவுவது என்று ஆராய்ந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், இடம் பெயர்ந்த தமிழ் மக்களின் நலனுக்கு 500 கோடி இந்திய ரூபா நிதியினை இந்தியா வழங்கத் தயாராக உள்ளதாகவும் இந்த நிதி தொடர்பான திட்ட அறிக்கையை இலங்கை சமர்ப்பித்த பின்னரே இந்த நிதியுதவி வழங்குவது குறித்து சிந்திக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
தமிழக பாராளுமன்றக் குழுவின் இலங்கை விஜயம் குறித்த தமிழக எதிர்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பதிலளித்த தமிழக முதல்வர் கருணாநிதி, தமிழக பாராளுமன்றக் குழுவின் இலங்கை விஜயத்தின் பின்னர் இலங்கை அரசு மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்தியுள்ளதாகவும் முதல் கட்டமாக 15 நாட்களில் 58 ஆயிரம் பேர் முகாம்களில் இருந்து அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர் எனவும் தெரிவித்திருந்தார்.
அதேவேளை கடந்த வியாழக்கிழமையில் இருந்து நிவாரணக் கிராமங்களில் உள்ள வெளி மாவட்டத்தைச் சேர்ந்த 50ஆயிரம்பேரை அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பும் வேலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள தமிழ் மக்களைப் பார்வையிட வந்த இந்திய பாராளுமன்றக் குழு எமது நாட்டின் நிலைமையைப் புரிந்து கொண்டு இலங்கைக்கான உதவிகளை மேலும் அதிகரிக்க வழிவகுத்துள்ளனர் எனவும் இந்தியா வழங்கவுள்ள 500கோடி நிதியுதவிக்குமான திட்டங்களை அறிவிக்கும்படி இந்தியா இலங்கையிடம் கேட்டுள்ளதாகவும் ஊடகத்துறை அமைச்சர் லஷ்மன் யாப்பா தெரிவித்துள்ளார்.
இந்தியா கேட்டதன்படி இந்திய அரசாங்கம் வழங்கவுள்ள 500 கோடி இந்திய ரூபாவும் மடுவிலிருந்து தலைமன்னார், மற்றும் ஓமந்தையிலிருந்து பளைக்கிடையிலான புகையிரதப் பாதைகளை புனரமைக்கவும், புகையிரதப் பெட்டிகளை கொள்வனவு செய்யவும், துரையப்பா விளையாட்டரங்கை புனரமைக்கவும், யாழப்பாணத்தில் கலாச்சார நிலையம் அமைக்கவும் பயன்படுத்தப்படும் எனவும் இதற்கான திட்ட அறிக்கையை விரைவில் இந்தியாவுக்கு சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அமைச்சர் யாப்பா தெரிவித்துள்ளார்.
சிறைகளில் எவ்வித விசாரணையுமின்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சுமார் 600 தமிழ் கைதிகள் தொடர்பாக துரிதவிசாரணை நடத்தவென விசேட நீதிமன்றம் ஒன்றை அமைக்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதே நேரம் சட்டமா திணைக்களத்தின் ஆலோசனைக்கேற்ப 10 சட்டதரணிகளை நியமித்து தமிழ் கைதிகளின் வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்தவுள்ளதாகவும் நீதி, சட்டமறுசீரமைப்பு பிரதியமைச்சர் வி. புத்திரசிகாமணி தெரிவித்துள்ளார். தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் தங்களை விடுவிக்கக்கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியதும் இங்கு குறிப்பிட வேண்டும்.
இந்திய பாராளுமன்றக் குழுவின் இலங்கை விஜயம் எதிர்கட்சிகள் கூறுவதுபோல் பயனற்றது என கூறமுடியாது. அவர்களால் பெரிதாக சாதிக்கமுடியாவிட்டாலும் இலங்கை அரசின் செயல்பாட்டை கொஞ்சம் முடுக்கிவிட்டுள்ளது என்பதை ஏற்கத்தான் வேண்டும்.
மன்னார் மீள்குடியேற்ற நிகழ்வில் புளொட் தலைவர் த.சித்தார்த்தன் பங்கேற்பு-

சித்தார்த்தன்

புளொட் தலைவர் சித்தார்த்தன்

மன்னாரின் மாந்தைப் பகுதியில் மீள்குடியேற்றப் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இன்று முதற்கட்டமாக அங்கு 1300பேர் குடியேற்றப்பட்டுள்ளனர். இந்த இரண்டு, மூன்று தினங்களுக்குள் 12ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 41,685 மக்கள் வன்னியின் மன்னாரிலும், கிளிநொச்சி, முல்லைத்தீவு துணுக்காய் உள்ளிட்ட பகுதிகளிலும் மீள்குடியேற்றப்படுகின்றனர். இதற்கான ஆரம்பவிழா வடக்கின் வசந்தம் திட்டத்தின் தலைவரும், ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகருமான பசில் ராஜபக்ச எம்.பி தலைமையில் இன்றுமுற்பகல் மாந்தையில் இடம்பெற்றது. இதில் மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாத் பதியுதீன், அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான், பிரதியமைச்சர் ஜெகதீஸ்வரன், புளொட் தலைவர் த.சித்தார்த்தன், தமிழ்க்கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சி.கிஷோர், முன்னைநாள் ரி.யூ.எல்.எவ் பாராளுமன்ற உறுப்பினர் சூசைதாசன், இராணுவத்தளபதி லெப்.ஜெனரல் ஜகத் ஜயசூரிய, சிரேஸ்ட பொலீஸ் அத்தியட்சகர் ஜெகத் பாலசூரிய ஆகியோரும், அரசாங்க அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர். இந்த மீள்குடியேற்ற ஆரம்ப நிகழ்வில் புளொட் தலைவர் திரு.த.சித்தார்த்தன் அவர்கள் உரையாற்றுகையில், இந்த மக்களை மீளக்குடியேற்ற வேண்டுமென்பதை நீண்ட காலமாக நாம் வலியுறுத்தி வந்துள்ளோம். இப்போது இந்தக் குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது எமக்கும் இம்மக்களுக்கும் மிகவும் மகிழ்ச்சிகரமான ஒரு விடயமாகும். இம்மக்கள் தொடர்ந்து இடம்பெயர்ந்து கொண்டே இருந்த நிலையில் இறுதியாக இடம்பெயர்ந்த இம்மக்கள் செட்டிகுளம் நலன்புரி நிலையங்களைச் சேர்ந்துள்ளனர். இவ்வாறு வந்துசேர்ந்த மக்கள் எப்போது மீள்குடியேற்றப்படுவார்கள் என பலரும் கேள்விக்குறிகளை எழுப்பிக் கொண்டே இருந்தனர். இந்நிலையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள், இந்தக் குடியேற்றங்களை சிறந்தமுறையில் ஆரம்பித்திருப்பதை நாம் பெரிதும் வரவேற்கிறோம். இம்மக்களை மீண்டும் அமைதியாக தங்களுடைய சொந்தக் கால்களில் வாழவைப்பதற்கு நாங்களும் எமது முழுமையான முயற்சிகளை எடுப்பதுடன், அர்ப்பணிப்புடனான பங்களிப்பினையும் செலுத்துவோம் என்று கூறியுள்ளார். இந்நிலையில் 2,583குடும்பங்களைச் சேர்ந்த 8,643பேர் வவுனியாவிலும், 2,644குடும்பங்களைச் சேர்ந்த 6,631பேர் மன்னாரிலும், 4,415குடும்பங்களைச் சேர்ந்த 16,394பேர் முல்லைத்தீவிலும், 2,453குடும்பங்களைச் சேர்ந்த 10,017பேர் கிளிநொச்சியிலும் இந்த இரண்டு, மூன்று தினங்களில் மீள்குடியமர்த்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழர் மறுவாழ்வுக்கான நிதியை இலங்கை அரசுக்கு வழங்கக் கூடாது : திருமாவளவன்
மறுவாழ்வுக்காக இலங்கை அரசுக்கு இந்திய அரசு நிதி உதவி வழங்கக்கூடாது. நேரடியாகத் தமிழ் மக்களுக்கு உதவுவதே நல்லது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

ராஜபக்ஷவை சர்வதேச போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்பதையும், மனித உரிமை மீறலில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதற்காக இலங்கை அரசின் மீது உலக நாடுகள் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக சென்னை மெமோரியல் அரங்கம் முன் இன்று காலை (22. 10. 09) பத்து மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின் போது இலங்கை அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தின் முடிவில் பேசிய தொல். திருமாவளவன்,

"நாங்கள் இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் வலியுறுத்தும் கோரிக்கைகளே எங்கள் கட்சியின் நிலைப்பாடு. இதற்கும் சமீபத்திய இலங்கைக்கு பயணம் செய்த இந்திய நாடாளுமன்ற குழு சமர்பித்த அறிக்கைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை.

நாடாளுமன்ற அறிக்கையில் கூறுப்பட்டது அனைத்தும் உண்மையே. நாடாளுமன்ற குழுவின் பயணத்தைத் தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கையாக இந்த கோரிக்கைகளை விடுதலை சிறுததைகள் கட்சி முன்வைக்கிறது.

அதே தருணத்தில் நான் இலங்கைக்குச் சென்று, எம்முடைய தொப்புள் கொடி உறவுகளைச் சந்தித்து, ஆறுதல் கூறியபோது, அங்குள்ளவர்கள் ஒருமித்த குரலில் தெரிவித்த கருத்து என்னவெனில், தம்மைத் தமது சொந்த இடத்திலேயே மீள குடியமர்த்தவேண்டும் என்பதே.

எங்களுடைய பயணத்தின் போது இது குறித்து ராஜபக்ஷவிடம் பேசினோம். அதன் விளைவாக இதுவரை 58,000 தமிழர்கள் தங்களின் இருப்பிடத்திற்கு மீள குடியமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.

அதே தருணத்தில் இந்திய அரசுக்கு ஒரு கோரிக்கையை முன் வைக்கிறோம். எக்காரணத்தை முன்னிட்டும், ஈழத்தமிழர்களின் மறுவாழ்வுக்கென்று கூறி, இலங்கை அரசுக்கு நிதி உதவி அளிக்கக்கூடாது.

காரணம் அவை யாவும் முறையாக ஈழத்தமிழர்களுக்குச் சென்றடைவதில்லை என்பதை கண்கூடாக நான் கண்டிருக்கிறேன். எனவே நேரடியாகத் தமிழ் மக்களுக்கு உதவுவதே நல்லது. தற்போது அறிவித்துள்ள 500 கோடி ரூபா நிதி உதவியை விடுதலை சிறுத்தை கட்சி வரவேற்கவில்லை" என்றார்.
புளொட் முக்கியஸ்தர் ஜி.ரி.லிங்கநாதன் யாழ் விஜயம்
வடமாகாண உள்ளுராட்சி மாநாடு யாழ். மத்திய கல்லூரியிலும், யாழ். வீரசிங்கம் மண்டபத்திலும் கடந்த 18ம் மற்றும் 19ம் திகதிகளில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்பதற்கென புளொட் முக்கியஸ்தரும் முன்னாள் வவுனியா நகரபிதாவும், வவுனியா நகரசபையின் எதிர்க்கட்சித் தலைவருமான விசுபாரதி எனும் ஜி.ரி.லிங்கநாதன், தமிழ்க்கூட்டமைப்பின் வவுனியா நகரபிதா எஸ்.என்.ஜி நாதன், புளொட் வவுனியா நகரசபை உறுப்பினர் எஸ்.குமாரசாமி, தமிழ்க்கூட்டமைப்பு வவுனியா நகரசபை உறுப்பினர் சுரேந்திரன், நகரசபையின் செயலர் ஜெயராஜ் உள்ளிட்ட குழுவினர் இரண்டுநாள் விஜயத்தினை மேற்கொண்டு யாழ்ப்பாணம் சென்றிருந்தனர். இதன்போது வடமாகாண உள்ளுராட்சி திணைக்களத்தினால் யாழ். மத்திய கல்லூரியில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கண்காட்சி நிகழ்விலும் இவர்கள் பங்கேற்றிருந்தனர். இதனைத் தொடர்ந்து புளொட் முக்கியஸ்தரும் வவுனியா நகரசபை எதிர்க்கட்சித் தலைவருமான ஜி.ரி.லிங்கநாதன், புளொட் வவுனியா நகரசபை உறுப்பினர் எஸ்.குமாரசாமி, தமிழ்க்கூட்டமைப்பின் வவுனியா நகரசபை உறுப்பினர் சுரேந்திரன் ஆகியோர் வடமாகாண ஆளுநர் மேஜர்ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரைச் சந்தித்து கலந்துரையாடினர். பின்னர் ஜி.ரி.லிங்கநாதன், எஸ்.குமாரசாமி ஆகியோர் அரசஅதிபர் கே.கணேஸ் அவர்களை சந்தித்தனர். மற்றும் இவர்கள் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுத்தூபிக்கும், மானிப்பாய் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், புளொட் தலைவர் திரு.சித்தார்த்தன் அவர்களின் தந்தையுமான தர்மலிங்கம் அவர்களின் நினைவாலயத்திற்கும் சென்றதுடன், தர்மலிங்கம் அவர்களின் துணைவியாரையும் சந்தித்துள்ளனர். அத்துடன் வணக்க ஸ்தலங்களுக்கும், யாழ்.பொது நூலகத்திற்கும் இவர்கள் விஜயம் செய்துள்ளனர்

plote-visukumar-jaffna-0531plote-visukumar-jaffna-0621plote-visukumar-jaffna-0731plote-visukumar-jaffna-0741plote-visukumar-jaffna-0871plote-visukumar-jaffna-0921

plote-visukumar-jaffna-0951plote-visukumar-jaffna-0971plote-visukumar-jaffna-1011plote-visukumar-jaffna-1041plote-visukumar-jaffna-1111plote-visukumar-jaffna-1141plote-visukumar-jaffna-1161

plote-visukumar-jaffna-1201plote-visukumar-jaffna-1221plote-visukumar-jaffna-1241plote-visukumar-jaffna-1301plote-visukumar-jaffna-1321plote-visukumar-jaffna-1581plote-visukumar-jaffna-1591plote-visukumar-jaffna-1661plote-visukumar-jaffna-1701plote-visukumar-jaffna-1711plote-visukumar-jaffna-1871plote-visukumar-jaffna-1881plote-visukumar-jaffna-1901plote-visukumar-jaffna-1921plote-visukumar-jaffna-1931plote-visukumar-jaffna-2301plote-visukumar-jaffna-2321plote-visukumar-jaffna-2471plote-visukumar-jaffna-2501plote-visukumar-jaffna-2571plote-visukumar-jaffna-2581plote-visukumar-jaffna-2621ஜனாதிபதி இன்று காலை வியட்நாம் விஜயம்
மஹிந்த ராஜபக்ஷ
இன்று 4100.தமிழ் மக்கள் கிளிநொச்சி முல்லை தீவு மாவட்டங்களில்குடி அமர்த்தப்படவுள்ளனர் கன்னிவெடி அகற்றப்பட்ட இடங்களில் இதே போன்று
அனைத்து மக்களும் அவர்களது சொந்த இடங்களுக்கு விரைவாக அனுப்பப் பட்டு அவர்கள்கை நிம்மதியாக வாழ வைத்து ஒரு அரசியல் தீர்வையும் மேற்கொண்டால் நிச்சயம் அடுத்த ஜனாதிபதி திரு மஹிந்த ராஜபக்ஷதான்
இன்று காலை உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு வியட்நாம் சென்றுள்ளார். அந்நாட்டு அரசின் அழைப்பை ஏற்று அவர் அங்கு விஜயம் செய்திருப்பதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லவும் ஜனாதிபதியுடன் வியட்நாம் சென்றுள்ளார்.

இரு நாட்டின் சமூக, பொருளாதார விடயங்கள் தொடர்பான ஒப்பந்தங்கள் இவ்விஜயத்தின் போது கைச்சாத்திடப்படவுள்ளன என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது
வவுனியாவிலிருந்து 2000இற்கும் மேற்பட்டோர் யாழ். அனுப்பி வைப்பு

வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியாவிலுள்ள இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் நேற்று யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்கள்.

யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில், யாழ். அரசாங்க அதிபர் தலைமையில் இது தொடர்பான நிகழ்வு ஒன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் வைத்து, இவ்வாறு அழைத்து வரப்பட்டவர்களுக்கு, மீள் குடியேற்ற கொடுப்பனவாக ஐயாயிரம் ரூபாவை சமூக சேவைகள், சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கினார்.

வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் இருந்து யாழ்ப்பாணம்,கோப்பாய், நல்லூர் பிரதேச செயலகங்களைச் சோந்தவர்கள் இரண்டாவது நாளாகவும் யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அதேவேளை, வவுனியாவில் விடுவிக்கப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருநூற்று நாற்பத்து நாலு பேர் ஜ.ஒ.இ.எம் நிறுவனத்தின் உதவியுடன் தனியார் பஸ்களில் தெல்லிப்பளை துர்க்கையம்மன் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு வேண்டிய உணவு மற்றும் வசதிகளை தெல்லிப்பளை துர்க்கையம்மன் ஆலய நிர்வாகம் வழங்கியது. இவர்களுக்கான பதிவுகள் மேற்கொண்ட பின்னர் இன்று காலையில் தமது வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முல்லைத்தீவில் மீள்குடியேற்றம் நாளை ஆரம்பம்:முதற்கட்டமாக 1000பேர் குடியமர்வு


முல்லைத்தீவு மாவட்டத்தில் முதன் முறையாக இன்று 22 ஆம் திகதி மீள்குடியேற்ற நடவடிக்கைகள் வைபவரீதியாக ஆரம்பிக்கப்படுவதாக அம்மாவட்ட அரச அதிபர் திருமதி எமில்டா சுகுமார் தெரிவித்தார்.

சுமார் 300 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரம் பேர் முதற் கட்டமாக முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேசத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள்.

அனிஞ்சியன்குளம் அரசினர் பாடசாலை, மல்லாவி மத்திய கல்லூரி, பாலிநகர் மகாவித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் இவர்கள் தங்க வைக்கப்பட்டு படிப்படியாக அவர்களது வீடுகளில் மீளக் குடியமர்த்தப்படுவார்கள் எனவும் முல்லைத்தீவு அரச அதிபர் தெரிவித்தார்.

மீள்குடியேற்ற நடவடிக்கைகள் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

"மீளக்குடியமரும் மக்களுக்கான அடிப்படை வசதிகள் அனைத்தும் அங்கு செய்யப்பட்டுள்ளன. குடிநீர், மின்சார விநியோகம், வீதிப் போக்குவரத்து ஆகியன ஏற்கனவே செய்யப்பட்டுள்ளன. பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் தமது கிராமங்களில் உள்ள வீடுகளுக்குச் சென்று அவற்றைத் துப்புரவு செய்து, தேவையானால் தற்காலிகத் தகரக் கொட்டில் அமைத்து படிப்படியாக மீளக்குடியமர்வார்கள்.

இம்மக்கள் பலரது வீடுகள் சேதமடையாமல் இருக்கின்றன. பல வீடுகள் கூரைகள் மாத்திரம் சேதமடைந்துள்ளன. இவற்றை அவர்கள் படிப்படியாகத் திருத்தி அமைத்துக் குடியேறுவார்கள். இந்தப்பகுதியில் மக்கள் இல்லாத காரணத்தினால் அங்கு பற்றைகள் வளர்ந்துள்ளன. அவற்றைத் துப்பரவு செய்வதில் அவர்கள் முதலில் ஈடுபடுவார்கள்.

இவர்களுக்கு ஆரம்பத்தில் சமைத்த உணவு வழங்குவதற்கும், வேண்டிய ஏனைய அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இன்று ஆரம்பமாகும் நடவடிக்கையின் மூலம் 4450 குடும்பங்கள் மீளக்குடியமர்த்தப்படுவார்கள். இது ஒரு மாதத்திற்குத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். மக்கள் படிப்படியாகக் கட்டம் கட்டமாக அந்த மாவட்டத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.

அதேபோன்று, கிளிநொச்சி மாவட்டத்தின் 2500 குடும்பங்களைச் சேர்ந்த 10,000 பேர் மீளக்குடியமர்த்தப்படவுள்ளார்கள். 30 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, பூனகரி, ஜெயபுரம் ஆகிய பிரதேசங்களில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன" என்றார்
மேலும் இங்கே தொடர்க...