23 மார்ச், 2010

எதிர்க்கட்சி தலைவருக்கு .24.03.2010. இன்றுபிறந்தநாள்




எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்க இன்று தனது 61வது பிறந்த தினத் தைக் கொண்டாடு கிறார்,அவருக்கு புதியபாதையின் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துகள்
மேலும் இங்கே தொடர்க...

சகல குடும்பங்களுக்கும் ஒருவீடு, மின்சாரம் கிடைக்கும் வகையில் பொருளாதார மாற்றம் ஏற்படும்




மீரிகம கூட்டத்தில் பசில் ராஜபக்ஷ

அனைத்து குடும்பங்களுக்கும் ஒரு வீடு, மின்சாரம், வீதிகள், தொழில் ஆகியவை கிடைக்கும் வகையில் நாட்டில் பொருளாதார மாற்றம் ஏற் படும். ஆறு வருடங்கள் எதிர்வரும் ஆறு வருடங்களாகத்தான் இருக்கும் என்று ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஐ. ம. சு. முன்னணியின் கம்பஹா மாவட்ட தலைமை வேட்பாளருமான பசில் ராஜபக்ஷ கூறியுள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மீரிகம தேர்தல் தொகுதியின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்று முன்தினம் (22) மீரிகமயில் நடை பெற்றது. அதில் கலந்துகொண்டு விசேட உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:

எமது ஜனாதிபதியிடம் நான் காணும் விசேடத்துவம் யாருக்கும் முடியாது என்று கூறுவதை தான் செய்து முடிப்பதாகும். புலிகளை யுத்தத்தில் வெல்ல முடியாது என்று எங்கள் நாட்டில் மட்டுமன்றி உல கில் பிரபல நாடுகளின் தலைவர்கள் கூட கூறி வந்தனர்.

பிரச்சினையை தீர்க்க மாற்று வழி களை கண்டறியுமாறும் அவர்கள் ஆலோசனை வழங்கினர். அவற்றை எல்லாம் புறக்கணித்துவிட்டுத்தான் ஜனாதிபதி தனது தீர்வை அறிமுகப் படுத்தினார். அதில் வெற்றியும் பெற்றார்.

மற்றொரு சவால் 1977 இன் பின்னர் அறிமுகப்படுத்தப்பட்ட திற ந்த பொருளாதார முறையாகும். எங்கள் நாட்டில் உள்ள சிலரைப் போன்றே உலகிலுள்ள ஏனைய நாடுகளும் திறந்த பொருளாதார முறையில் இருந்து விடுபட்டு முன்செல்ல எந்த நாட்டுக்கும் முடி யாது என்று கூறிவந்தனர். அவை அனைத்தையும் முழுமையாக மாற்றி ஜனாதிபதி கடந்து சென்ற 5 வருடங்களில் தேசிய கைத்தொழிலை சக்தி மிக்கதாக மாற்றும் தேசிய பொருளாதார த்தை கட்டியெழுப்பி னார்.

ஜே. ஆர். ஜயவ ர்த்தனாவின் அரசியல மைப்பின் படி இந்த நாட்டில் எவருக்கும் 2/3 அதிகாரத்தை பெற முடியாது என்று அனைவரும் கூறுகின் றனர். எனினும் யாருக்கும் பெற முடியாது எனக் கூறும் 2/3 அதி காரத்தை இம்முறை இந்த நாட்டின் சரித்திரத்தில் முதல் முறையாக எமது ஜனாதிபதி பெற்றுக் கொள்வார். அந்த முறையை மாற்றுவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதால் அவ்வாறான அதிகாரம் கிடைக்கும் இறுதி சந்த ர்ப்பமும் இதுவாகத்தான் இருக்கும். 2/3 அதிகாரம் அல்ல 3/4 அதிகாரத்தைப் பெறவே ஜனாதிபதி முய ற்சி செய்கிறார்.

மஹிந்த சிந்தனை கொள்கைத் திட்டத்தை விட மஹிந்த சிந்தனை எதிர்கால நோக்கினை செயற்படுத் துவது கடினமான காரியமாகும். எனினும் எத்தகைய சிரமங்கள் வந் தாலும் மக்களுக்காக சேவை செய்வதற்காக அர்ப்பணிப்புடன், அக்கறையுடன் செயற்படும் நாட் கள், அதனை எப்படியும் நடை முறைப்படுத்துவோம். சக்தி மிக்க பாராளுமன்ற அதிகாரத்துடன் அரசை நியமிக்கும் பொறுப்பு மக்களுக்கே உள்ளது. அந்த பொறு ப்பை நீங்கள் செவ்வனே நிறைவேற்றுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு என்று பசில் ராஜபக்ஷ மேலும் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

வாக்களிப்பதற்கு விண்ணப்பிக்க தவறிய இடம்பெயர்ந்தோருக்கு விசேட கருமபீடம்






இடம்பெயர்ந்த வாக்காளர்க ளாக வாக்களிப்பதற்கு விண்ப்பிக் கத் தவறிய மற்றும் நிராகரிக்கப் பட்டவர்களுக்கென வவுனியாவில் விசேட கருமபீடங்கள் ஆரம்பிக்க ப்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட தெரிவத்தாட்சி அலுவல் திருமதி பீ.எம்.எஸ்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

2008ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்பட்டு வாக்களிப்பதற்கு தகுதி பெற்ற இடம்பெயர்ந்த வாக்காளர்களு க்கென விசேட வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இந்த வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்வதற்கு இலவச போக்குவரத்து வசதிகளும் செய்யப்பட்டு ள்ளன.

இடம்பெயர்ந்துள்ள வாக்காளர்களாக தம்மை பதிவு செய்து கொள்வதற்காக விண்ணப்பித்துள்ளவர்களுக்கு மட்டுமே இலவச போக்குவரத்து வசதியும் இவ்விசேட வாக்களிப்பு நிலையங்களிலும் வாக்களிக்கவும் வசதிகள் செய்து கொடுக்கப்படும்.எனினும், இடம்பெயர்ந்துள் ளவர்களுள் வாக்களிக்க தகுதி பெற்ற, விண்ணப்பிக்கத் தவறிய, அல்லது விண்ணப்பித்தும் நிராகரிக்கப்பட்டவர்களுக் கும், விசேட வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்லவும், இலவச போக்குவரத்து வசதிகளை செய்து கொடுக்கவும் என வன்னி மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் திருமதி பீ.எம்.எஸ். சார்ள்ஸ் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதன்படி வவுனியா மெனிக்பாம், நிவாரணக் கிராமங்களிலும் செட்டிக்குளம் நிவாரணக் கிராமங்களிலும் தனித்தனியே விசேட கரும பீடங்கள் திறக்கப்பட்டுள்ளன. அத்துடன் வவுனியா அரச அதிபர் அலுவலகத்திலும் விசேட கருமபீடம் திறக்கப்பட்டுள்ளது.

மேற்படி, கருமபீடங்களில் தாம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளவர் என்பதை யும் இடம்பெயர்ந்துள்ள வாக்காளர் என்பதை தெரிவித்து வாக்களித்துச் செல்ல வேண்டிய வாக்களிப்பு நிலையம் எது என்பதற்கான சான்றையும் பெற்றுக் கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.

மேலும் இங்கே தொடர்க...

பங்களாதேஷ் இராணுவ உயர் அதிகாரிகள் குழு இலங்கை வருகை





பங்களாதேஷ் இராணுவத்தின் எட்டு உயர் அதிகாரிகள் அடங்கிய குழு இலங்கை வந்துள்ளது. இந்த உயர் மட்டக் குழுவினர் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரியவை நேற்று முன்தினம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

இந்தச் சந்திப்பு கொழும்பிலுள்ள இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்றது. இரு இராணுவங்களுக்கும் இடையிலான இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

இலங்கை இராணுவம் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவந்துள்ள நிலையில் இரு நாடுகளும் அனுபவங்களை பகிர்ந்துகொள்வது தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.

பங்களாதேஷைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் முஹம்மட் இஹ்திஸாம் உல் ஹக் மற்றும் மேஜர் ஜெனரல் ஏ. கே. எம். சபருல்லாஹ் சித்தீக் ஆகியோர் வன்னி இராணுவ நடவடிக்கைகள் குறித்து விரிவாக கேட்டறிந்து கொண்டனர்.

இந்த சந்திப்பின் முடிவில் பங்களாதேஷ் இராணுவ குழுவினர் இலங்கை இராணுவத் தளபதிக்கு நினைவுச் சின்னம் வழங்கினர். இந்த சந்திப்பின்போது இலங்கைக்கான பங்களாதேஷ் உயர் ஸ்தானிகரும் கலந்துகொண்டார்.

இராணுவத் தளபதியுடனான சந்திப்பை அடுத்து இராணுவத் தலைமையகத்தின் நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்த எட்டு உயர் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் தியத்தலாவ இராணுவ அகடமி, யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகம், முல்லைத்தீவு மற்றும் வன்னி பகுதிகளுக்கும் விஜயம் செய்யவுள்ளனர்.

மேஜர் ஜெனரல் இஹ்திஸாம் உல் ஹக், மேஜர் ஜெனரல் ஏ. கே. எம். சபருல்லாஹ் சித்தீக், பிரிகேடி யர் ஜெனரல் ரித்வான் அல் மஹ் மூத், லெப்டினன்ட் கேர்ணல் முஹ ம்மத் அஸதுல்லாஹ் மின்ஹாசுல் அலம், லெப்டினன்ட் கேர்ணல் எம். தெளபீக்குல் ஹஸன் சித்தீக், மேஜர் ஏ. எஸ். எம். பஹவுத்தீன், மேஜர் எம். டி. நஸ்ருல் இஸ்லாம் கான் மற்றும் மேஜர் சகாவத் ஹொஸைன் செளத்ரி ஆகியோரே இலங்கை வந்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மூலம் 3.3 பில்லியன் டொலர் வருவாய்




மிகக்கூடிய அந்நிய செலாவணி

வெளிநாட்டு வேலைவாய்ப்புகளினால் கடந்த வருடம் 3.3 பில்லியன் அமெரிக்க டொலர் (33000 கோடி ரூபா) அந்நிய செலாவணியாக கிடைத்துள்ளது.

வெளிநாட்டில் வேலை செய்வோர் இலங்கைக்கு அனுப்பியுள்ள மிகவும் அதிகமான அந்நிய செலாவணி இதுவாகும். 2008ம் ஆண்டு வெளிநாடு களில் வேலை செய்பவர்கள் இலங்கைக்கு அனுப்பிய அந்நிய செலாவணி 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது.

தற்போது 18 இலட்சம் இலங்கையர்கள் வெளிநாடுகளில் வேலைபார்த்து வருவதாகவும், இவர்களில் அநேகமா னோர் மத்திய கிழக்கு நாடுகளில் வேலை செய்வதாகவும் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் செயலாளர் சுசில் எஸ் சிரிசேன தெரிவித்தார்.

வவுனியா மாவட்டத்தில் பணியகத்தின் பிராந்திய அலுவலகத்தையும் பயிற்சி நிலையத்தையும் திறந்து வைத்து பேசியபோதே அவர் இவ்வாறு கூறினார். பணியகம் இவ்வருடம் இதுவரை திறந்துள்ள 27வது இணை அலுவலகம் இதுவாகும். வவுனியா மேயர் என்.என்.கே.நாதன் இங்கு உரையாற்றுகையில், பிரதேசத்தில் உள்ள இளைஞர்களுக்கு சிறந்த வழி காட்டலுடன்னும் முறையான பயிற்சி யுடனும் வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொள்ள இது சிறந்த தருணமாக அமைகிறது என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

விசாரணையின்றி சிறைகளில் இருந்தோரில் 461 பேர் விடுதலை




மேலும் 200 பேரை விடுவிக்க நடவடிக்கை
நீண்டகாலமாக வழக்குகள் விசாரணைகள் எதுவுமின்றி சிறைகளில் தடுத்து வைக்கப்பட் டிருந்தவர்களுள் இதுவரை 461 பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாக நீதி, சட்ட மறுசீரமைப்பு முன்னாள் பிரதியமைச்சர் வி. புத்திரசிகாமணி தெரிவித்தார். சட்ட ரீதியாக மேற்கொள்ளப்பட்ட துரித விசா ரணைகளை அடுத்து இவர்கள் விடுவிக்கப் பட்டதாக அவர் கூறினார்.

விசாரணைகள் எதுவுமின்றி சிறைகளில் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள வர்களை விடு விப்பது தொடர்பில் பதினொரு சட்டத்தரணி களை விசேடமாக நியமித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. கைதிகளின் கோவைகள் தனித்தனியே ஆராயப்பட்டு கடந்த ஜனவரி மாதத்திலிருந்து கைதிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அவ்வாறு இதுவரை 461 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், 200 பேரின் கோவைகள் ஆராயப்பட்டு வருவதாகவும் இவர்களுள் வழக்குகள் பதிவு செய்ய அவசிய மில்லாதவர்கள் விடுவிக்கப்படுவார் களென்றும் முன்னாள் பிரதியமைச்சர் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கையின் உள்விவகாரங்களில் வெளியார் தலையிட இடமளியோம் பிரதமர்






இறைமையும், ஆட்புல ஒரு மைப்பாடும் மிக்க இலங்கையின் உள்விவகாரங்களில் வெளியார் எவரும் தலையிட இடமளியோம் என்று பிரதமர் ரத்னசிறி விக்கிரம நாயக்கா நாரம்மலவில் நேற்று முன்தினம் தெரிவித்தார்.

உள்ளூர், வெளியூர் அழுத்தங் களை முழுமையாக இல்லாமல் செய்வதற்காக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும் பிரதமர் கூறினார். பொதுத் தேர்தலின் நிமித்தம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மாவட்ட மட்டத்தில் நடாத்தும் பிரதான பிரசாரக் கூட்டம் குருநாகல், தம்பதெனிய யு. பி. விஜயகோன் விளையாட்டரங்கில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இக்கூட்டத்தில் பிரதமர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் நாம் செயல்வீரர்கள். இலக்கை நோக்கி நாட்டு மக்களை அழைத்துச் செல்பவர்கள். கோழியை நரியிடம் கொடுக்கும் வேலை எம்மிடம் கிடையாது. நாட்டின் விமோசனத்தையும், சுபீட்சத்தையும் கருத்தில் கொண்டு திட்டங்களை வகுத்துச் செயற்பட்டுக் கொண்டிருப்பவர்கள்.

அந்த வகையில் எதிர்வரும் 8ம் திகதி நடைபெறும் தேர்தல் நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கக் கூடியதாக இருக்கும். எமது துரித அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் தொழில் நுட்பத்துடன் இணைக்கப்பட வேண்டும். நாட்டின் துரித அபிவிருத்தியே எமது இலக்கு. இதற்காக வலுவான பாராளுமன்றத்தை அமைக்கவே மூன்றிலிரண்டு பெரும்பான்மையை மக்களிடம் கேட்டிருக்கின்றோம்.

இதனூடாக அரசியல் யாப்பை மாற்றி ஜனநாயக நெறிமுறையை மேலும் வலுப்படுத்துவதற்கு எதிர்பார்க்கின்றோம். இந்த அரசியல் யாப்பில் உள்ளடக்கப்பட்டிருக்கும் தேர்தல் முறை நாட்டுக்கு உகந்ததல்ல. இம்முறைமை மக்களின் பிரதிநிதிகளுக்கும், மக்களுக்குமிடையிலான நெருக்கமான உறவை குறைத்துள்ளது.

இத்தேர்தல் முறையிலுள்ள விருப்பு வாக்கு முறை காரணமாக ஒரே கட்சிக்குள்ளேயே சண்டைகளும், சச்சரவுகளும், குத்துவெட்டுக்களும் இடம்பெறுகின்றன. இவை நாட்டின் துரித அபிவிருத்திக்குப் பெரும் தடையாக உள்ளன. அதனால் தொகுதிவாரி தேர்தல் முறையை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கு எதிர்பார்க்கின்றோம்.

இதேநேரம் எமக்கு எதிராக உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் சூழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. எமது உள்விவகாரங்களில் பங் கி மூன் தலையிடுகிறார். இதற்கு எமது ஆட்களே வழி செய்துள்ளனர். ஆனால் இறைமையும் ஆட்புல ஒருமைப்பாடும் மிக்க இந்நாட்டின் உள்விவகாரங்களில் வெளியார் எவரும் தலையிட முடியாது. அதற்கு நாம் இடமளியோம்.

ஆகவே, நாட்டு மக்கள் எதிர்வரும் 8ம் திகதி ஐ. ம. சு. முன்னணியை மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் வெற்றிபெறச் செய்து எம் மீது அழுத்தம் செய்பவர்களுக்கு நல்ல பாடம் புகட்ட வேண்டும்.
மேலும் இங்கே தொடர்க...

வாக்குச் சாவடிகளாக அலுவலகங்கள்; தபால்மூல வாக்களிப்புக்கு ஏற்பாடு

நாளையும் மறுதினமும் வாக்களிப்பு; வாக்குச் சீட்டை காண்பிப்பது குற்றம்
பொதுத் தேர்தலுக்காக நாளை ஆரம்பமாகும் தபால் மூல வாக்களிப்பு வாக்குச் சாவடியொன்றில் இடம்பெறும் வாக்களிப்புப் போலவே இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதென தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.

வாக்களிப்பு நடைபெறும் சகல அரச அலுவலகங்களும் நாளை 25 ஆம் திகதியும், 26 ஆம் திகதியும் தேர்தல் வாக்குச் சாவடிகள் போன்று இயங்கும் என தேர்தல்கள் செயலகம் தெரிவித்தது.

அத்துடன், தெரிவத்தாட்சி அலுவலராக செயற்படும் திணைக்களத் தலைவர் மற்றும் அவரது செயலணியினர், வாக்களிக்க தகுதிபெற்றவர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்களைத் தவிர வேறு எந்த உத்தியோகத்தருக்கும் வாக்களிப்பு நிலையத்தினுள் இருக்க அனுமதி இல்லை.

எனினும் தேர்தல் கண்காணிப்புகளில் ஈடுபடும் பெப்ரல் அமைப்பின் பிரதிநிதி ஒருவர், தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான மத்திய நிலையத்தின் (சீ. எம். ஈ. வீ) பிரதிநிதி ஒருவர் மற்றும் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சி, சுயேச்சைக் குழு சார்பில் தலா இருவருக்குமே வாக்களிப்பு நிலையத்தில் கண்காணிப்புக்காக அனுமதி வழங்கப்படும். தேர்தல் கண்காணிப்பில் தெரிவத்தாட்சி அலுவலரால் பெயர் குறிப்பிடும் நபர் ஒருவருக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வாக்குச் சாவடிகளாக இயங்கும் அரச அலுவலகத்தினுள் வேட்பாளர் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு நேரங்களில் வந்து செல்வதற்கும் அனுமதி வழங்கப்படும். வேறு எந்த அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகளுக்கோ, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கோ, தொழிற்சங்க பிரதிநிதிக ளுக்கோ வாக்களிப்பு நிலையங்களுக்குள் செல்வதற்கு அனுமதி கிடையாது.

தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க இது தொடர்பாக தபால் மூல வாக்குப் பதிவுகள் நடைபெறும் அரச திணைக்களங்களுக்கு அறிவுறுத்தல்களை விடுத்துள்ளார்.

வாக்கெடுப்பு நிலையங்களாக செயற்படும் இடத்திற்கு வெளியேயோ, அல்லது உள்ளேயோ அரசியல் கட்சியின், சுயேச்சைக் குழுவின் பெனர்கள், கட்அவுட்டுகள் போஸ்டர்கள், கொடிகள் என எந்தவிதமான பிரசார நடவடிக்கைகளும் இருக்கக் கூடாது. காட்சிக்கு வைத்திருக்கவும் அனுமதி இல்லை.

வாக்களிப்பு நிலையத்தினுள் அபேட்சகரின் அல்லது அபேட்சகர்களின் புகைப்படம் வைக்கப்பட்டிருக்குமானால் அவை நீக்கப்பட வேண்டும். அல்லது மறைக்கப்பட வேண்டும்.

வாக்களிப்பு நடைபெறும் இடத்திற்கு செலியூலர் தொலைபேசிகள், ஆயுதங்கள், கமராக்கள், கொண்டு செல்வதும் தடைசெய்யப்பட்டுள்ளது. வாக்களிப்பு நடைபெறுவதை புகைப்படம் எடுப்பதும் தடைசெய்யப்பட்டுள்ளது.

வாக்காளர் தனது வாக்கை மிக இரகசியமாக பதிவு செய்வதற்கான வசதிகளும் வாக்குச் சாவடியில் செய்துகொடுக்கப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணையாளர் சகல தெரிவத்தாட்சி அலுவலர்களாக செயற்படும் திணைக்கள தலைவர்களுக்கும் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

வாக்காளர் தமது வாக்குப் பதிவை செய்த பின்னர் கவனமாக மடித்து தெரிவத்தாட்சி அலுவலர் முன்னிலையில் பிகிபீ என்ற உறையினுள் இடவேண்டும். பிகிபீ உறையை சீல் செய்து அதனை அதற்குரிய ஆவணத்துடன் பிதிபீ உறையினுள் இட்டு அன்றைய தினமே காப்புறுதி செய்யப்பட்ட தபாலில் தேர்தல் ஆணையாளருக்கு கிடைக்கும் விதத்தில் தபால் திணைக்களத்திடம் தெரிவத்தாட்சி அலுவலர் ஒப்படைக்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையாளர் தனது அறிவுறுத்தலில் தெரிவித்துள்ளார்.

வாக்குச் சீட்டை காண்பிப்பது குற்றம்

பதிவு செய்த வாக்குச் சீட்டை வாக்காளர் பிறருக்கு காண்பிப்பதோ, காண்பிக்கும்படி கூறுவதோ பாரதூரமான தவறு என்றும் தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

அடையாள அட்டைகள்

வாக்கெடுப்பு நிலையத்தில் வாக்காளரின் ஆளடையாளத்தை உறுதிப்படுத்துதல் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்தப் பாராளுமன்றத் தேர்தலின்போது கீழ்க்காணும் அடையாள அட்டைகளுள் எந்தவொரு அடையாள அட்டையையேனும் வாக்கெடுப்பு நிலைய அலுவலர்களுக்கு சமர்ப்பித்தல் வேண்டும். அந்த அடையாள அட்டைகளுள் ஒன்றேனும் வாக்காளர்களிடம் இல்லாவிட்டால் அல்லது கைவசமிருக்கும் அடையாள அட்டை தெளிவில்லாது இருக்குமாயின் மாவட்டத் தேர்தல்கள் அலுவலகத்தினால் விநியோகிக்கப்படும் தற்காலிக அடையாள அட்டையொன்றை உடனடியாக பெற்றுக்கொள்ளல் வேண்டும். வேறு எந்தவிதமான அடையாள அட்டையோ ஆவணமொன்றோ வாக்கெடுப்பு நிலையத்தில் ஆளடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது எனத் தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க அறிவித்துள்ளார்.

ஆட்கள் பதிவுத் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட தேசிய ஆளடையாள அட்டை.

செல்லுபடியான வெளிநாட்டு கடவுச்சீட்டு செல்லுபடியான சாரதி அனுமதிப்பத்திரம் அரச சேவை ஓய்வூதிய அடையாள அட்டை முதியோர் அடையாள அட்டை ஆட்கள் பதிவுத் திணைக்களத்தினால் வணக்கத்துக்குரியவர்களுக்காக வழங்கப்பட்ட அடையாள அட்டை சனாதிபதித் தேர்தலுக்காக தேர்தல்கள் திணைக்களத்தினாலும் ஆட்கள் பதிவுத் திணைக்களத்தினாலும் வழங்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டை தேர்தல்கள் திணைக்களத்தினால் இந்த பாராளுமன்றம் தேர்தலுக்காக விநியோகிக்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டை கடந்த மாகாண சபைத் தேர்தல்களுக்காக தேர்தல்கள் திணைக்களத்தினால் விநியோகிக்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டை (கிழக்கு மாகாணத்தின் மாகாண சபைத் தேர்தல் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தின் உள்ளூர் அதிகார சபைத் தேர்தலுக்காக 2008 ஆம் ஆண்டில் விநியோகிக்கப்பட்டுள்ள தற்காலிக அடையாள அட்டைகள் இந்தத் தேர்தலுக்காக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது)

தேர்தல்கள் திணைக்களத்தினால் இந்த பாராளுமன்றத் தேர்தலுக்காக விநியோகிக்கப்படும் தற்காலிக அடையாள விண்ணப்பப் பத்திரங்கள் ஏற்றுற்கொள்ளப்படும் இறுதி நாள் 2010.03.30ஆம் திகதியுடன் முடிவடையும்.பிரிவின் கிராம அலுவலரினால் அல்லது தோட்டங்களாயின் தோட்டக் கண்காணிப்பாளர்களினால் தற்காலிக அடையாள அட்டைகள் விநியோகிக்கப்படும்.

எனவே தற்காலிக அடையாள அட்டை தேவைப்படுபவர்கள் உடனடியாக உரிய பிரிவின் கிராம அலுவலரை அல்லது தோட்டக் கண்காணிப்பாளரை சந்தித்து தற்காலிக அடையாள அட்டையொன்றை பெற்றுக்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. தற்காலிக அடையாள அட்டையொன்றைப் பெற்றுக்கொள்வதற்காக 1 ட கீ 1 அங்குல அளவுடைய வர்ண அல்லது கறுப்பு - வெள்ளை புகைப்படங்கள் இரண்டை எடுத்துச் செல்வது கட்டாயமாகும். வேறு எந்தவிதமான கொடுப்பனவுகளும் செலுத்த வேண்டிய அவசியமில்லை என்றும் தேர்தல்கள் ஆணையாளர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

ஐ.நா செயலர் நியமிக்கவுள்ள நிபுணர்கள் குழுவுக்கு சீனா ரஷ்யா ஆகியன எதிர்ப்பு-




இலங்கையில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் யுத்தகுற்றங்களை ஆராய ஐ.நா செயலர் பான்கீ மூன் நியமிக்க உத்தேசித்துள்ள நிபுணர்கள் அடங்கிய குழுவுக்கு சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. இந்த இரு நாடுகளும் ஐ.நாவின் பாதுகாப்புச் சபையில் அங்கம் வகிக்கின்றன. பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் கடுமையான அழுத்தங்கள் காரணமாக ஐ.நா செயலர் அமைக்கவுள்ள இக்குழு தொடர்பில் இலங்கைக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக ரஷ்ய பிரதமர் விளடீமீர் புட்டின் மற்றும் சீன தலைவர்கள் தெரிவித்துள்ளதாக அரச உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன. பான்-கீ-மூன் குறித்த நிபுணர்கள் குழுவை அமைத்து அதன் அறிக்கையை பாதுகாப்புச் சபையில் சமர்ப்பித்தால், சீனாவும் ரஷ்யாவும் தமது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அதனை தடுக்குமெனவும் கூறப்படுகிறது. அதேவேளை ஐ.நா செயலரின் இந்த செயற்பாடு குறித்து அணிசேரா நாடுகளின் தலைமை பொறுப்பை வகிக்கும் எகிப்து ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்கும் தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

ஓமந்தைச் சோதனைச் சாவடியில் ஆயுதங்களுடன் மூவர் கைது


Top global news update
வவுனியா ஓமந்தைச் சோதனைச் சாவடியில் சட்டவிரோத ஆயுதங்களுடன் சந்தேகநபர்கள் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்றுமாலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலீஸ் ஊடகப்பேச்சாளர் பொலீஸ் அத்தியட்சகர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார். ஓமந்தைச் சோதனைச் சாவடியில் வைத்து சந்தேகத்திற்கிடமான லொறியொன்றினைச் சோதனையிட்டபோது இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். குறித்த லொறியிலிருந்து கைத்துப்பாக்கி ஒன்றுடன் ரவைகள் சிலவும் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன்போது கைதுசெய்யப்பட்ட குறித்த நபர்களிடம் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலீஸ் அத்தியட்சகர் பிரசாந்த ஜயக்கொடி மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

வீட்டினுள் சிறுத்தை புலி: பொள்ளாச்சியில்






பொள்ளாச்சி : பொள்ளாச்சி திருநீலகண்டர் வீதியில் உள்ள ஒரு வீட்டினுள் சிறுத்தை புலி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வீட்டினுள் இருக்கும் சிறுத்தை புலி எவ்வாறு வந்திருக்கும் என்று போலீசாரும் வனத்துறையினரும் பெரும் ஆச்சரியத்திற்கு ஆளாகி உள்ளனர். இந்த சிறுத்தை புலி ஆனைமலை புலிகள் காப்பகத்திலிருந்து தப்பி வந்திருக்கலாம் என்றும், மேலும் மயக்க ஊசி போட்டு சிறுத்தையை பிடிக்கவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். வீட்டினுள் இருக்கும் சிறுத்தை புலியை பார்க்க மக்கள் கூட்டம் அலைமோதுவதால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது
மேலும் இங்கே தொடர்க...

முன்ஜாமீன் கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள நித்யானந்தா







பெங்களூர்செக்ஸ் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ள சாமியார் நித்யானந்தா முன் ஜாமீன் கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தார். தியான பீடத்தின் முன்னாள் ஊழியரும் சிஷ்யருமான நித்ய தர்மானந்தா லெனின் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் நித்யானந்தா மீது தமிழக போலீசார்வழக்குப் பதிவு செய்துள்ளனர். தமிழக போலீசார் நித்யானந்தாவுக்கு எதிரான வழக்கை கர்நாடகத்துக்கு மாற்றும்போது முதல் தகவல் அறிக்கை உள்பட ஆவணங்கள் தமிழில் இருந்தன. அதை கன்னடத்துக்கு மொழிபெயர்ப்பு செய்யும் பணி தற்போது முடிவடைந்துள்ள நிலையில் நித்யானந்தாவுக்கு எதிராக புகார் கொடுத்த லெனினை விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்கிடையே குருசரன் என்பவரும் போலீசில் நித்யானந்தா மீது புகார் கொடுத்துள்ளார். இதுநாள் வரை நித்யானந்தா தலைமறைவாகவே இருந்த நிலையில் அவ்வப்போது வீடியோ காட்சிகளில் தோன்றி தன் தரப்பு நியாயத்தை தெரிவித்து வந்துள்ளார். ஆனால் போலீசிடம் விளக்கம் அளிக்கவோ அல்லது அல்லது பொதுவான பத்திரிகையாளர் சந்திப்பையோ நித்யானந்தா தவிர்த்து வந்துள்ளார். இந்நிலையில் நித்யானந்தா தான் போலீசாரால் கைது செய்யப்படுவதை தவிர்க்க தனது வழக்கறிஞர் மூலம் முன்ஜாமீன் கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இம்மனு இன்று விசாரணைக்கு வரும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

அப்பாவின் காரை கிளப்பி 5 கி.மீ. ஓட்டிய பொடியன்

Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update

லண்டன் இங்கிலாந்தில் அப்பாவின் காரை கிளப்பி 5 கி.மீ. ஓட்டிச் சென்றான் 5 வயது பொடியன். சில விபத்துகளை ஏற்படுத்தி சுவரில் மோதி நின்றது கார்.
இங்கிலாந்தின் டாங்மேர் என்ற இடத்தில் அப்பாவின் மிட்சுபிஷி ஷோகன் சொகுசு காரை யாருக்கும் தெரியாமல் கிளப்பினான் 5 வயது பொடியன். ஷெட்டில் இருந்து வெளியே வந்து நெடுஞ்சாலையை நோக்கி பறந்தது கார். அதை கவனித்தவர்கள் டிரைவர் இல்லாமல் கார் ஓடுவதாக நினைத்தனர். சிலருக்கு பொடியனின் தலை மட்டும் தெரிந்தது.
உடனடியாக போலீசுக்கு சிலர் தகவல் கொடுத்தனர். அதே நேரம் தனது 5 வயது மகனையும் காரையும் காணவில்லை என பொடியனின் தந்தை போலீஸிடம் புகார் தெரிவித்தார்.
உடனே போலீஸ் வேன்இ ஆம்புலன்ஸ் ஆகியவை பொடியனின் காருக்குப் பின்னால் விரைந்தன. அதற்குள் 3 கார்களில் மோதிய பொடியன்இ ஒரு பைக் ஓட்டுநரையும் இடித்து தள்ளி விட்டு பயணத்தைத் தொடர்ந்தான். ஆனால்இ குறைந்த வேகத்தில் கார் சென்றதால் யாருக்கு காயம் ஏற்படவில்லை.
5 கி.மீ.க்கு மேல் சவாரி செய்த சிறுவன்இ கடைசியில் கார் கட்டுப்பாட்டை இழந்து சுவரில் இடித்து நின்றது. அக்கம்பக்கத்தினர் ஓடிச் சென்று கதவைத் திறந்தனர். 5 வயது பொடியன் அழுதபடி டிரைவர் சீட்டில் உட்கார்ந்திருந்ததைக் கண்டு அதிர்ந்தனர்.
உடனடியாக அவனை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். அவனுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என்று டாக்டர்கள் சான்றளித்த பிறகுஇ பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டான்.
சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறுகையில்இ ‘‘பாதசாரிகளும்இ வாகன ஓட்டிகளும் அதிர்ஷ்டவசமாக தப்பினர். குறைந்த வேகத்தில் கார் சென்றதால் விபத்துகளில் பொடியனுக்கும் காயம் ஏற்படவில்லை’’ என்றார்.
இதுகுறித்து சிறுவனின் தந்தையை எச்சரித்த போலீசார்இ விசாரணையைத் தொடர்கின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

5 தடவைகள் பின்லேடனை, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் சந்திக்க ஏற்பாடு செய்தேன்

5 தடவைகள்பின்லேடனை, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் சந்திக்க ஏற்பாடு செய்தேன்பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரி தகவல்சர்வதேச பயங்கரவாதி பின்லேடனை பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் 5 முறை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்தேன். அப்போது அவர் வளர்ச்சிப்பணிகளுக்காக ரூ.50 கோடி தரும்படி கேட்டார் என்று பாகிஸ்தானின் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ.யின் முன்னாள் அதிகாரி காலித் காஜா தெரிவித்தார்.

உறவு இருப்பதை மறுத்த பாகிஸ்தான்

பாகிஸ்தானின் உளவுத்துறைக்கும் தடை செய்யப்பட்ட அல்கொய்தா இயக்கத்துக்கும் உறவு இருக்கிறது என்று சொல்லப்பட்ட போது எல்லாம் அதை பாகிஸ்தான் மறுத்து வந்தது. ஆனால் அப்படி உறவு இருப்பதை ஐ.எஸ்.ஐ. இயக்கத்தின் முன்னாள் அதிகாரி ஒருவரது பேட்டியே உறுதிப்படுத்தி உள்ளது. அந்த அதிகாரியின் பெயர் காலித் காஜா.

இவர் ஒரு தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில் பின்லேடனை சந்திக்க ஏற்பாடு செய்யும்படி முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் என்னை கேட்டுக்கொண்டார். அதன்படி அவரை சந்திக்க 5 முறை ஏற்பாடு செய்தேன் என்றும் 3 முறை இந்த சந்திப்புகள் சவுதி அரேபியாவில் நடந்தன என்றும் அவர் கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது:-

ரூ.50 கோடி கேட்டார்

உலகம் முழுவதும் உள்ள பல்வேறு இஸ்லாமிய இயக்கத்தலைவர்களை நவாஸ் ஷெரீப் சந்தித்தார். பின்லேடனையும் அவர் சந்தித்தார். 5 முறைகள் அவர்கள் சந்தித்தார்கள். ஒரு முறை சந்தித்த போது வளர்ச்சிப்பணிகளுக்கு 50கோடி ரூபாய் பணம் வேண்டும் என்று நவாஸ் ஷெரீப் கேட்டார். அந்த அளவுக்கு பணம் பின்லேடன் கொடுக்கவில்லை. மிகக்குறைந்த தொகையை அவர் கொடுத்தார்.

சவுதி அரச குடும்பத்தினரையும் சந்திக்க வேண்டும் என்று நவாஸ் ஷெரீப் விரும்பினார். அதற்கும் ஏற்பாடு செய்து கொடுத்தேன்.

பெனாசிரை தூக்கி எறிவதற்காக

பிரதமர் பதவியில் இருந்து பெனாசிரை தூக்கி எறிவதற்காக பஞ்சாப் மாநில முதல் மந்திரியிடம் கொடுக்கும்படி என்னிடம் பின்லேடன் பணம் கொடுத்தார். அந்த பணத்தை அப்போது பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப்பிடம் நான் கொடுத்தேன். பெனாசிரை பிரதமர் பதவியில் இருந்து நீக்கவேண்டும் என்பதற்காக இந்த பணம் கொடுக்கப்படுவதாக நான் அப்போது அவரிடம் தெரிவித்தேன்.

நான் பின்லேடனுடன் நெருக்கமான தொடர்பு வைத்து இருந்தேன். எனக்கு கட்டாய ஓய்வு கொடுக்கப்பட்டதால் நான் பாகிஸ்தானை விட்டு 1987-ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் சென்றேன். பின்லேடன் இயக்கத்தினருடன் சேர்ந்து ரஷிய ராணுவத்தை எதிர்த்து யுத்தம் செய்தேன்.

இவ்வாறு காலித் காஜா தெரிவித்தா
மேலும் இங்கே தொடர்க...

ராஜபட்சவின் ஆட்சியை அகற்ற வேண்டும்: தேசிய புத்த பிக்கு முன்னணி




இலங்கையில் அதிபர் ராஜபட்சவின் ஆட்சி நாட்டுக்கு ஒவ்வாத போலியான அரசாங்கம், இதை அகற்ற பொதுமக்கள் தயாராக வேண்டும் என்று தேசிய புத்த பிக்கு முன்னணியின் தலைவர் தம்பர அமில தேரர் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொழும்பு நூலகத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார் என்று இலங்கை தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

"போருக்குப் பின்னர் மக்களின் பல்வேறு பிரச்னைகள் தீர்க்குமாறு அரசை வலியுறுத்தினோம். எனினும், ஆளுங்கட்சி தமது அரசியல் எதிர்காலத்தைப் பலப்படுத்கிக்கொள்ளவே நடவடிக்கை எடுத்தது. இலங்கையின் தேசிய பிரச்னைகள் குறித்து சிந்திக்கவில்லை.

சரத் பொன்சேகா கைது போன்ற ஜனநாயக விரோத செயல்பாடுகளை அரசு மேற்கொண்டது. அதிபரை கொலை செய்யவும் ஆட்சியைக் கைப்பற்றவும் பொன்சேகா திட்டமிட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. ஆனால், தற்போது வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அவர் மீது ராணுவ நீதிமன்றத்தில் விசாரணை நடத்துகின்றனர்.

பொன்சேகா வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள் தாமாகவே விலகிக் கொள்கின்றனர். ஊடகங்கள் சுதந்திரமாக செயல்பட முடியாத நிலை உள்ளது.

ராஜபட்சவின் ஆட்சி நம் நாட்டுக்கு ஒவ்வாத ஆட்சியாகும். எனவே, இதை அகற்ற பொதுமக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். இலங்கையின் கௌரவத்தை பாதுகாப்பது அனைத்து இன மக்களின் கடமையாகும்.''

இவ்வாறு தேசிய புத்த பிக்கு முன்னணியின் தலைவர் தம்பர அமில தேரர் கூறியதாக அந்த இணையதளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டு கொலை; பணம் கொள்ளை






ஆந்திரமாநிலம் ஐதராபாத்தில் உள்ள தில் குஷ்நகரை சேர்ந்தவர் பிரசாந்த் கோய்னாகா (28). கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இவர் அமெரிக்கா சென்றார்.

அங்கு கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள கன்னிவால் இண்டர் நேஷனல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்து வந்தார். கடந்த 3 நாட்களுக்கு முன்புதான் இவர் ஒகிலாமா நகரில் உள்ள ஒரு கடையில் பகுதி நேர ஊழியராக வேலைக்கு சேர்ந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு 7.15 மணியளவில் அங்கு வாடிக்கையாளர் போன்று 2 மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள் கடையில் இந்த பணத்தை கொள்ளையடித்தனர்.

இதைபார்த்த பிரசாந்த் அவர்களை தடுக்க முயற்சி செய்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் பிரசாந்தை துப்பாக்கியால் சுட்டனர். குண்டு பாய்ந்து அவர் அதே இடத்தில் உயிரிழந்தார். இதற்கிடையே பணத்தை கொள்ளையடித்து விட்டு மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

இச்சம்பவம் குறித்து ஒகிலாமா நகர போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, பிரசாந்த் கொலை செய்யப்பட்ட விவரம் ஐதராபாத்தில் உள்ள அவரது பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடல் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை ஒகிலாமா போலீசாரும், இந்திய தூதரகமும் செய்து வருகிறது. இந்த தகவலை வட அமெரிக்க தெலுங்கு அசோசியேஷன் துணை தலைவர் பிரசாத் தொடகுரா தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

நல்லூர் பருத்தித்துறை வீதியிலுள்ள திலீபன் நினைவுத் தூபி உடைத்து அழிக்கப்பட்டுள்ளது.





நல்லூர் பருத்தித்துறை வீதியிலுள்ள திலீபன் நினைவுத் தூபி உடைத்து அழிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் செயற்பட்ட காலத்தில் விடுதலைக்காக உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த திலீபன் ஞாபகார்த்தமாக நல்லூர் மேற்குப் பக்க வீதியில் தூபி ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.

இத்தூபி யுத்த காலத்தில் ஓரளவு சேதமாக்கப்பட்டே காணப்பட்டது. இந்நிலையில் ஏ – 9 பாதை திறக்கப்பட்டதும் தென்னிலங்கை வியாபாரிகள் இவ்விடத்தில் தமது விற்பனை நிலையங்களை உருவாக்கினர்.

தற்போது திடீர் என நினைவு தூபி முற்றாக அழிக்கப்பட்டு கற்கள் மட்டுமே எஞ்சிய நிலையில் காணப்படுகின்றது.தூபி இருந்த அடையாளமே இல்லாத நிலையில் இவ்விடம் ஆக்கப்பட்டுள்ளது.







மேலும் இங்கே தொடர்க...

வடக்கு-கிழக்கை இணைக்கக் கோரும் கூட்டமைப்பின் விஞ்ஞாபனம் குறித்து எதிர்க்கட்சிகளின் மௌனம் ஏன்?


:

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மீண்டும் இணைக்கப்படவேண்டும் என்ற விடயம் உள்ளிட்ட நாட்டின் தேசிய ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் எதிர்க்கட்சிகள் மௌனம் சாதிப்பது ஏன்? என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும் போக்குவரத்து அமைச்சருமான டலஸ் அழகப்பெரும கேள்வியெழுப்பினார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது எதிரணி வேட்பாளருக்கும் தமிழ்க் கூட்டமைப்புக்கும் இடையில் ரகசிய உடன்படிக்கை இருப்பதாக நாங்கள் கூறினோம். அந்த விடயத்தை தற்போது மீண்டும் நாங்கள் நினைவூட்டுகின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை காலை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் கூறுகையில்,

"தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் அண்மையில் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ளனர். அதன் உள்ளடக்கங்களை பார்க்கும்போது எங்களுக்கு கவலையாக இருக்கின்றது. வடக்கு கிழக்கு மாகாணங்கள் மீண்டும் இணைக்கப்படவேண்டும் என்ற விடயம் உள்ளிட்ட நாட்டின் தேசிய ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் தமிழ்க் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் அமைந்துள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆகியன இணைந்தே பொது எதிரணி கூட்டணியாக செயற்பட்டன.

இந்நிலையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் குறித்த தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு ஏன் இன்னும் தெரிவிக்கப்படவில்லை? குறைந்தபட்சம் நிறையாகவோ அல்லது குறையாகவோ விமர்சனம் ஒன்றை முன்வைத்திருக்கலாம் அல்லவா? ஆனால் இன்றுவரை மௌனம் சாதிக்கப்படுகின்றது.

கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது எதிரணி வேட்பாளருக்கும் தமிழ்க்கூட்டமைப்புக்கும் இடையில் ரகசிய உடன்படிக்கை இருப்பதாக நாங்கள் கூறினோம். அதனை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நிராகரிக்கவில்லை.

எனினும் ஐக்கிய தேசிய கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியும் அதனை கடுமையாக மறுத்திருந்தன. அந்த இரகசிய உடன்படிக்கையில் வடக்கு கிழக்கு பிரிப்பு விடயம் காணப்பட்டதாக நாங்கள் கூறினோம்.

இந்நிலையில் அந்த விடயத்தை தற்போது மீண்டும் நாங்கள் நினைவூட்டுகின்றோம் . காரணம் நாங்கள் அன்று கூறிய விடயங்கள் இன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. நாங்கள் அன்று கூறிய விடயத்தை தமிழ்க் கூட்டமைப்பு இன்று நிரூபித்துள்ளது.

எமது நாட்டின் தேசிய ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் குறித்து ஏன் எதிர்க்கட்சிகள் மௌனம் சாதிக்கின்றன என்ற கேள்வியை நாங்கள் எழுப்புகின்றோம்" என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

புளொட் வேட்பாளர்களின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள்-






பொதுத் தேர்தலில் நங்கூரம் சின்னத்தில் வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) வேட்பாளர்களான புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் தலைமையிலான பிரதிநிதிகள் வன்னிப் பிரதேசத்தில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். புளொட் தலைவர்.திரு.த.சித்தார்த்தன், புளொட் வன்னிப் பிராந்திய அமைப்பாளர் க.சிவநேசன் (பவன்), புளொட் முக்கியஸ்தரும் முன்னார் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினருமான வை.பாலச்சந்;திரன், புளொட் வேட்பாளர் திருவருட்செல்வன், புளொட் முக்கியஸ்தரும் வவுனியா நகரசபை எதிர்க்கட்சித் தலைவருமான ஜி.ரி.லிங்கநாதன், புளொட் முக்கியஸ்தர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மேற்படி தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மூன்று நாட்களாக புளொட் வேட்பாளர்கள் வவுனியா புதிய சின்னக்குளம் பூம்புகார், ஊர்மிளா கோட்டம், கூமாங்குளம் உள்ளிட்ட பிரதேசங்களில் மக்களைச் சென்று சந்தித்து வருவதுடன், பொதுக்கூட்டங்களையும் நடத்தி வருகின்றனர். இவை தொடர்பிலான நிழற்படங்கள் இங்கு தரப்படுகின்றன.
















மேலும் இங்கே தொடர்க...

புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தலைமையிலான பிரதிநிதிகள் சுதந்திரபுரம் மக்களுடன் சந்திப்பு-



வன்னி மாவட்டத்தில் நங்கூரம் சின்னத்தில் போட்டியிடும் புளொட் வேட்பாளர்களான புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன், புளொட்டின் வன்னிப் பிராந்திய அமைப்பாளர் கந்தையா சிவநேசன் (பவன்) மற்றும் புளொட் முக்கியஸ்தரும் வவுனியா நகரசபையின் எதிர்க்கட்சித் தலைவருமான ஜி.ரி.லிங்கநாதன் ஆகியோர் இன்றுமுற்பகல் வவுனியா சுதந்திரபுரம் கிராமத்திற்கு விஜயம் செய்து அப்பகுதி மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். இதன்போது தமது கட்சியின் வேலைத்திட்டங்கள் தொடர்பிலும், இப்பணிகளை துரிதமாக முன்னெடுத்துச் செல்வதற்காக ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி வேட்பாளர்களுக்கு எதிர்வரும் பொதுத்தேர்தலின்போது மக்கள் ஆதரவினை வழங்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து இன்றுமாலை வவுனியா வைரவப்புளியங்குளத்தில் அமைந்துள்ள புளொட் காரியாலயத்தில் பொதுமக்கள் சந்திப்பொன்றும் இடம்பெற்றது. இதன்போது கட்சியின் நிலைப்பாடு தொடர்பிலும், எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் மற்றும் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம், அவர்களின் அத்தியாவசிய பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முன்னெடுக்கப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் புளொட் தலைவர் உள்ளிட்ட வேட்பாளர்கள் விளக்கமளித்ததுடன், தமது பணிகளைத் தொடர்வதற்கு நங்கூரம் சின்னத்தில் போட்டியிடும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் வேட்பாளர்களுக்கு ஆதரவினை வழங்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

உலக மக்கள் தொகை நாள்




ஜுலை 11. 1987 ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகை ஐந்து பில்லியனைத் தாண்டியது
புபொருளாதார நெருக்கடிக்கு ஈடுகொடுத்தல், பெண்களுக்காக நிதியீடு செய்வது ஏன் என்பது மிகச் சிறந்த தெரிவுபூ என்பது 2009 ஆம் ஆண்டிற்கான தொனிப் பொருளென ஐ.நா. மக்கள்தொகை நிதியம்ஸி மசஊடஅ அறிவித்துள்ளது.

அந்நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் தோரயா அகமது ஒபெய்ம் உலக மக்கள் தொகை நாள் தொடர்பாக விடுத்துள்ள செய்தியில், பிஇன்று அபிவிருத்தியடைந்து வரும் உலக நாடுகளில் கர்ப்பம் மற்றும் பிரசவம் தொடர்பான சிக்கல்களே பெண்களைப் பிரதானமாகக் கொன்று வருகின்றன. மேலும் தாய்மார் இறப்பு வீதமே உலகில் மிகப் பெரிய அளவில் ஆரோக்கிய நியாயமின்மையாக விளங்குகின்றது என்று குறிப்பிட்டார்.

உலக மக்கள் தொகை அதிகரிப்பு

உலக மக்கள் தொகை வளர்ச்சியானது கி.பி. 1650 ஆம் ஆண்டிற்குப் பின்னர்தான் விரைவாக வளதரத் தொடங்கியது. 1840 இல் 100 கோடி மக்கள் தொகையாகவும், 1927 இல் 200 கோடி மக்கள் தொகையாகவும் வளர்ச்சியடைந்திருந்தது. எனினும் 1960 இல் 300 கோடி மக்கள் தொகையினை 39 ஆண்டுகளிலேயே எட்டியிருந்ததுடன், 1999 ஆம் ஆண்டில் 600 கோடி மக்கள் தொகையினை அடைந்திருந்ததாக குடித்தொகை மதிப்பீட்டுப் பணியகத்தின் அறிக்கை தெரிவித்திருக்கின்றது.

மக்கள் தொகை வளர்ச்சி வீதமானது ஆண்டுதோறும் 1.31 வீதத்தால் அதிகரித்து வருகின்றது. ஒவ்வொரு செக்கனுக்கும் 2.582 வீதமாகவும், ஒரு நாளுக்கு 223,098 தொகையாகவும், ஒரு வருடத்திற்கு 81,430,910 தொகையாகவும் அதிகரித்துச் செல்கின்றது. ஆபிரிக்க நாடுகள் சிலவற்றில் தற்போதைய வளர்ச்சியானது 13 வீதத்திலிருந்து,

அடுத்த 300 ஆண்டுகளில் 24 வீதமாக அதிகரிக்கின்ற பொழுதிலும், ஐரோப்பாவில் 12 வீதத்திலிருந்து 7 வீதமாகக் குறையுமென எதிர்வு கூறப்படுகின்றது. குடித்தொகை அதிகரிப்பை எதிர்கொள்ளும் நாடுகளாக இந்தியா, சீனா, நைஜீரியா, பாகிஸ்தான், கொங்கோ, எத்தியோப்பியா, வங்காள தேசம் போன்ற நாடுகள் இனங் காணப்பட்டுள்ளதாக ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் பெருக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகள்

மக்கள் தொகைப் பெருக்கத்தினால் உணவு, நீர், சூழல் மாசடைதல், சமூகச் சீர்கேடுகள், சுகாதாரப் பிரச்சினைகள், செயற்கைக் கருநகரங்கள், உருவாகின்றமை, வேலையின்மை, போக்குவரத்து நெரிசல், நிலப்பற்றாக்குறை, நிலைத்து நிற்கும் அபிவிருத்தி தொடர்பான பிரச்சினைகள் போன்றன முக்கிய பிரச்சினைகளாக இனங்காணப்பட்டுள்ளன. இவற்றுடன் இன்று ஒட்டுமொத்தமாக தலையெடுத்துள்ள பொருளாதார நெருக்கடியினையும் கூறலாம்.
மேலும் இங்கே தொடர்க...