16 ஜனவரி, 2010

புதிய ஜனாதிபதியைத் தீர்மானிக்கப் போகும் சக்தியாக மலையக வாக்குகள்!


எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் இ.தொ.கா.இ மலையக மக்கள் முன்னணிஇ பெருந்தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் போன்ற மலையகத்தின் மக்கள் செல்வாக்குள்ள தொழிற்சங்க அரசியல் அமைப்புக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவிப்பதற்கு ஏற்கனவே முன்வந்துள்ளன.

இந்த நிலையில் இ.தொ.காவிலிருந்து சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் அந்த அமைப்பிலிருந்து விலகி ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவிப்பதற்கு முன்வந்துள்ளனர்.

அதேவேளைஇ மலையக மக்கள் முன்னணி தலைவர் பெ.சந்திரசேகரனின் மறைவைத் தொடர்ந்து அந்த அமைப்பின் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் மலையகத்தில் இதுவரை சூடுபிடிக்கவில்லை என்றே தெரிகிறது.

இவ்வாறானதொரு நிலையில்இ மலையகத் தமிழ் மக்களின் வாக்குகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிர்பார்த்த அளவில்கிடைக்குமா என்ற ஐயப்பாடே நிலவுகின்றது.

எதிரணியின் பொது வேட்பாளரான ஜெனரல் பொன்சேகாவுக்கு ஜனநாயக மக்கள் முன்னணிஇ தொழிலாளர் தேசிய முன்னணிஇ இலங்கைத்தொழிலாளர் ஐக்கிய முன்னணி போன்ற அமைப்புக்கள் ஆதரவு தெரிவிக்க முன்வந்துள்ளன. எனினும் மலையகத்தில் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் இன்னும் சூடுபிடிக்கவில்லை.

வடக்கு கிழக்கு மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம் மலையகத்தமிழ் மத்தியில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறானதொரு நிலையில் பெரும்பான்மை மக்களின் வாக்குப்பலம் இரண்டு பிரதான வேட்பாளர்களுக்கும் சமபலமாக இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதனால் எதிர்வரும் ஜனாதிபதியைத் தீர்மானிக்கப் போகின்ற சக்தியாக மலையகத் தமிழ்மக்களின் வாக்குகளும் உள்ளடக்கப்பட உள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...


இலங்கையின் வர்த்தகம் ஆசியா முழுவதும் பரவ வேண்டும் : அக்குறணையில் ஜனாதிபதிஇலங்கையின் வர்த்தக நடவடிக்கைகள் சார்க் நாடுகள் உட்பட முழு ஆசியாவுக்கும் பரவ வேண்டுமென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்ததார்.

அக்குறணையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்இ

"இலங்கை முஸ்லிம்கள் வியாபாரத் துறையில் ஈடுபட்டு வருபவர்கள். உங்களது இவ்வியாபாரம் சில இடங்களுக்கு மட்டுமல்லாது முழு ஆசியாவுக்கும் மற்றும் சார்க் நாடுகளுக்கும் வியாபிக்க வேண்டும் அதுவே எனது அடுத்த கட்ட நடவடிக்கையாகும்.

இலங்கை முஸ்லிம்களை சுற்றுலாத்துறையினர் எனக்கூறியவர்தான் இந்த சரத் பொன்சேக்கா.சுற்றுலா விசா முடிவநை;ததும் அவர்கள் திரும்பி விட வேண்டும்.அப்படியான ஒருவருக்கு வாக்களிக்கும் நிலையில் இலங்கை முஸ்லிம்கள் இல்லை.

நாட்டைப் பிரிக்கும் இரகசிய ஒப்பந்தத்ததை ஜனவரி 26ஆம் திகதி கிழித்தெறிய வேண்டும். காரணம்இ இந்த நாட்டைப் பிரிக்க குறுகிய நோக்கம் கொண்ட சிலர் திருட்டுத்தனமாக ஒப்பந்தம் செய்துள்ளனர். தியாகத்திற்கு மத்தியில் நாம் பெற்ற வெற்றியைத் தாரை வார்க்க மாட்டோம். நீங்களும் அதற்கு இடமளிக்கக் கூடாது.

வடபகுதி முஸ்லிம் மக்கள் நான்கு மணி நேர அவகாசத்துடன் விரட்டப்பட்டனர். 19 வருடமாகியும் யாரும் அது பற்றிக் கவலைப்படவில்லை. ஆனால் நாம் சும்மா பார்த்துக் கொண்டிருக்கவில்லை. இப்போது அவர்களை மீள்குடியேற்றம் செய்து வருகிறோம்.

இரண்டு முஸ்லிம் பள்ளிகள் தொடர்பான விடயம் நீதி மன்றம் சென்றது. அன்று பிரதம நீதியரசராக இருந்தவர் முஸ்லிம் பள்ளிகளில் தொழுகைக்காக அழைக்கும் அதான் ஒலியை ஒலிபரப்பக் கூடாது என்று உத்தரவிட்டார். இதன் விளைவாக இரவு வேளைகளில் கோவில் மணி ஒலிப்பதில்லை. கிறிஸ்தவ தேவாலயங்களில் ஆராதனை இடம் பெறுவதில்லை. பௌத்த ஆலயங்களில் பிரித் ஒலிப்பதில்லை. முஸ்லிம் பள்ளிகளில் அதான் ஒலிப்பதில்லை.

சமய விடயங்களுக்கு நீதிமன்றத்தடை. இதைச் செய்தவர் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா. அடுத்த அரசில் அவர்தான் பிரதம மந்திரி என்று அவர் கூறுகிறார். சமய விவகாரங்களுக்கு நீதி மன்றத் தீர்ப்பு வழங்கிய அவர் கையில் ஆட்சியை ஒப்படைத்தால் நாட்டின் நிலைமை எப்படி இருக்கும்?

இது விடயமாக நான் நடவடிக்கை எடுத்தேன். இன்று கோவில் மணி ஒலிக்கிறது. முஸ்லிம் பள்ளகளில் அதான் ஒலிக்கிறது. ஒரு நாளைக்கு 5 முறை வானொலியிலும் ஒலிக்கிறது. ஆலயங்களில் ஆராதனை இடம் பெறுகிறது. பண்சலைகளில் பிரித் ஓதப்படுகிறது. இது நான் மேற்கொண்ட நடவடிக்கைகளாகும்" என்றார்.


ஆகக் குறைந்த காலத்தில் அதிகமான மக்களை கொன்று குவித்தவர் ஜனாதிபதி – விக்கிரமாகு குற்றச்சாட்டு

ஆகக் குறைந்த காலப்பகுதியில் கூடுதலான மக்களை கொன்றுகுவித்த ஒரே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என புதிய இடதுசாரிமுன்னணியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமானவிக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார். காலி பலப்பிட்டியில் இன்றுகாலை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறுதெரிவித்தார்.

ஏதிர்வரும் காலங்களில் பெருந்தோட்டத்துறைஇ துறைமுகம்இ பெற்றோல்உள்ளிட்ட விடங்களில் ஏற்படும் பொருளாதார பிரச்சினைகளைதீர்த்துக்கொள்ளும் நோக்கிலேயே ஜெனரல் சரத் பொன்சேகாவை இந்த நாட்டின்ஏகாதிபத்திய வாதிகள் தெரிந்துள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நடந்து முடிந்த யுத்தம் இந்தியாவின் வேண்டுகோளின் பேரிலேயே இடம்பெற்றதுஏன்பதை ஜனாதிபதி தாமாக ஒப்புக் கொண்டுள்ளார். ஆறுஆண்டுகளுக்குப்பின்னர் இடம்பெற வேண்டிய ஜனாதிபதி தேர்தலைமுன்கூட்டியே 4 வருடத்திற்குள் நடத்த வேண்டிய தேவை என்ன? இனவாதிகள்மூலம் தாம் கொண்ட வெற்றியை வைத்துக்கொண்டு மீண்டும் குடும்ப அட்சிசெய்ய வேண்டும் என்பதே அவரது நோக்கம்.

யுத்தத்தின் மூலம் விடுதலைப்புலிகளிடமிருந்து பெற்ற நிலங்கள் எங்கே? அதனை எல்லாம் இந்தியாவிற்கு தாரை வாத்துக் கொடுத்து விட்டார் மஹிந்தராஜபக்ஷ என தனதுரையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்


ஜெனரலுக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறி வந்த முசம்மில் எம்.பி. இடைநடுவில் வெளியேற்றம்தேசிய சு தந்திர முன்னணியின் உறுப்புரிமையில் இருந்து விலகிஎதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகாவிற்கு ஆதரவளிப்பதாக கூறி கொழும்புறோயல் கல்லூரி மாவத்தையில் அமைந்துள்ளஜெனரல் பொன்சேகாவின் உத்தியோகபூர்வஅலுவலகத்துக்கு வருகை தந்த பாராளுமன்றஉறுப்பினர் மொஹமட் முசம்மில் அலுவலகத்துக்குள் நுழைந்த சில நிமிடநேரத்துக்குள்ளேயே அங்கிருந்து வெளியேறினார்.

இதன்போது தன்னை பொன்சேகா அணி விலை கொடுத்து வாங்கமுயற்சிப்பதாகவும் அதற்கு தன்னால் இணங்க முடியாது என்றும் உரத்துகத்தியவாறே அங்கிருந்து அவசர அவசரமாக வெளியேறினார். இந்த சம்பவம்மேற்படி அலுவலகத்தில் நடத்தப்பட்ட செய்தியாளர் மாநாட்டிற்கு செய்திசேகரிக்கச் சென்றிருந்த ஊடகவியலாளர்களுக்கும் அங்குகூடியிருந்தவர்களுக்கும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

எனினும்இ இந்த சம்பவத்தை மறுத்த முன்னாள் பிரதியமைச்சரும் ஜனாதிபதிவேட்பாளருமான மயோன் முஸ்தபாஇ தேசிய சுதந்திர முன்னணி பாராளுமன்றஉறுப்பினர் மொஹமட் முசம்மிலிடம் பணம் வழங்கப்படவோ அல்லது அதுகுறித்த பேச்சு எழுப்பப்படவோ இல்லை. மொத்தத்தில் அவர் ஜெனரல்பொன்சேகாவை சந்திக்கவும் இல்லை என்றார்.

இந்த சம்பவம் தொடர்பில் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில்எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த மயோன் முஸ்தபா மேலும்கூறுகையில்இ மொஹமட் முசம்மில் எம்.பி. ஜெனரல் சரத் பொன்சேகாவுக்குஆதரவளிப்பதாக தீர்மானித்திருப்பதாகவும் அதனை செய்தியாளர் மாநாட்டில்தெரிவிக்க இருப்பதாகவும் கூறி அவர் எனது வாகனத்தில் ஜெனரல்பொன்சேகாவின் அலுவலகத்திற்கு வருகை தந்தார். அவர் என்னுடன்வாகனத்தில் இருந்த சந்தர்ப்பத்தில் அவருக்கு தொலைபேசி அழைப்பொன்றுவந்தது. இதனையடுத்து அவர் நிலைத்தடுமாறினார். அத்துடன்இ அவரது கைஇகால்கள் நடுங்கின. இதனை அவதானித்த நான் என்ன நடைபெற்றது என்றுவினவினேன். அதற்கு அவர்இ நான் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்குஆதரவளிப்பதாக தீர்மானித்து இங்கு வந்த சந்தர்ப்பத்தில் எனது பெற்றோரைஅச்சுறுத்தும் வகையில் இனந்தெரியாத நபர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். எனக்கு உடல் நடுக்கம் இருக்கின்றது என்று பதறினார்.

இவ்விடயத்தை உடனே ஜெனரல் பொன்சேகா அலுவலகத்தில் இருந்த ரவிகருணாநாயக்க எம்.பி.யிடம் தெரிவித்தேன். அதேபோல்இ மொஹமட் முசம்மில்எம்.பி.யும் தனது பதற்ற நிலையைக் காட்டிக்கொண்டு என்னிடம் கூறியதையேஅவரிடமும் கூறினார். இதனையடுத்துஇ ஆறுதல் கூறிய ரவி கருணாநாயக்கஎம்.பி.இ மொஹமட் முசம்மில் எம்.பி.யைப் பார்த்து பதற்றப்பட வேண்டாம்என்றும் குறித்த சம்பவம் தொடர்பில் சடுதியான நடவடிக்கை எடுப்பதற்குமுயற்சிக்கிறேன் என்றும் கூறினார்.

இதனையும் பொறுத்துக் கொள்ளாத முசம்மில் எம்.பி. தொடர்ந்தும்பதற்றத்துடனேயே இருந்தார். மீண்டும் மீண்டும் கூறியதையே கூறிக் கொண்டுஇருந்தார். அத்துடன்இ தனது பாதுகாவலரையும் அலுவலகத்திற்குள் வருமாறுஅழைப்பு விடுத்தார். ஆனாலும் ஆயுத சகிதம் இருந்த அவரதுபாதுகாவலர்களுக்கு அலுவலகத்தின் மேல் மாடிக்கு செல்வதற்கு அனுமதிஅளிக்கப்படவில்லை. இதே சந்தர்ப்பத்தில் அவர் பதற்றத்துடன் கீழே இறங்கிஓடினார். அந்த சந்தர்ப்பத்தில் அவர் அங்கு என்ன கூறிவிட்டு ஓடிச் சென்றார்என்பது குறித்து எனக்கு தெரியாது என்றார்.

இதேவேளைஇ நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஜனாதிபதிவேட்பாளர் மயோன் முஸ்தபாவுடன் முசம்மில் எம்.பி.யும் கலந்துகொள்வதாகவே கூறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்


புலிகளின் சர்வதேச தலைவர் எமில்காந்தனுடன் நாமல் ராஜபக்ஷவுக்கு உள்ள தொடர்பு என்ன?


"இளைஞர்களுக்கான நாளை'' அமைப்பின் தலைவர் நாமல் ராஜபக்ஷவுக்கும் விடுதலைப் புலிகளின் சர்வதேசத் தலைவர்களில் ஒருவரான எமில்காந்தனுக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன? இந்த அமைப்பிற்கு புலிகளின் சர்வதேச நிதி பயன்படுத்தப்படுகின்றதா? இக் கேள்விகளுக்கு ஜனாதிபதி அல்லது பிரதமர் 48 மணித்தியாலங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் தலைவரும் எம்.பி.யுமான மங்கள சமரவீர கோரிக்கை விடுத்தார்.

புலிகளின் கறுப்புப் பணம் இன்று இளைஞர்களுக்கான நாளை அமைப்பன் மூலம் வெள்ளைப் பணமாக மாறுகிறதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

கொழும்பிலுள்ள பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவின் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்öப்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்தபோதே மங்கள சமரவீர இவ்வாறு தெரிவித்தார். இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் பொது வேட்பாளரின் பேச்சாளரும் ஜே.வி.பி. எம்.பி.யுமான அநுர திஸாநாயக்காவும் கலந்து கொண்டார்.

இவ் ஊடகவியலாளர் மாநாட்டன் போது புலிகளின் சர்வதேச தலைவர்களில் ஒருவரான எமில் காந்தன் என்பவரோடு நாமல் ராஜபக்ஷ காணப்படும் புகைப்படமொன்றும் மங்கள சமரவீர எம்.பி.யினால் காண்பிக்கப்பட்டது.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த மங்கள சமரவீர எம்.பி. கூறியதாவது:

2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வடபகுதி தமிழ் மக்கள் வாக்களிப்பதை தடுப்பதற்காக விடுதலைப் புலிகளுக்கு பணம் வழங்கப்பட்டது. இதன்போது எமில் காந்தன்இ பஷில் ராஜபக்ஷஇ பி.பி. ஜயசுந்தரஇ ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.

அந்த இடத்தில் நான்இ ஸ்ரீபதி சூரிய ஆராய்ச்சி ஆகியோரும் சமுகமளித்திருந்தோம். அதன் பின்னர் எமில் காந்தன்இ பஷில் ராஜபக்ஷ எம்.பி.யோடு தொடர்ந்து உறவுகளை பேணி வந்தார். இவ்வாறு தொடர்ந்த உறவை இன்னும் அரசாங்கம் தொடர்கிறது.

இளைஞர்களுக்கான நாளை அமைப்பின் தலைவர் நாமல் வேலையில்லா ஒரு இளைஞர். இவ்வாறான ஒருவர் நாளைக்கு தொலைக்காட்சி விளம்பரத்திற்காக எவ்வாறு 280 இலட்சத்தை செலவு செய்கிறார்.

வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு இதுவரை இரண்டு மாத காலங்களில் விளம்பரங்களுக்காக பல கோடி ரூபாக்கள் செலவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறான இளைஞர்களுக்கான நாளை அமைப்பிற்கு புலிகளின் முக்கியஸ்தர் ஊடாக அவர்களது சர்வதேச முதலீடுகளிலிருந்து பணம் கிடைக்கின்றதா? இந்த அமைப்பின் பெயரில் இலங்கையில் இருக்கும் வங்கிக் கணக்குகளின் எண்ணிக்கை எவ்வளவு? வெளிநாடுகளிலுள்ள வங்கிக் கணக்குகள் எவ்வளவு? லண்டன்இ பொஸ்டன்இ டுபாய் நாடுகளில் நாமலுக்கு எத்தனை தனிப்பட்ட வங்கிக் கணக்குகள் இருக்கின்றன? சுவிட்சர்லாந்திலுள்ள வங்கியொன்றில் முதலீடு செய்யப்பட்டுள்ள பணத் தொகை எவ்வளவு? வெளிநாட்டு நாணயங்களில் எத்தனை கணக்குகள் இருக்கின்றன? அமைப்பிற்கும்இ தனிப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கும் எங்கிருந்து எப்படிஇ யார் மூலம் பணம் கிடைத்தது? இவை தொடர்பாக 48 மணித்தியாலங்களுக்குள் ஜனாதிபதி அல்லது பிரதமர் பகிரங்கமாக பதிலளிக்க வேண்டும்.

ஏனென்றால் இது நாட்டின் தேசிய பிரச்சினை. எனவேஇ வெறும் கூச்சல் போடுபவர்களின் பதில்கள் எமக்கு அவசியமில்லை. சர்வதேச நாடுகளிலுள்ள புலிகளின் கறுப்புப் பணம் இன்று இளைஞர்களுக்கான நாளை அமைப்பினூடாக வெள்ளைப் பணமாக்கப்படுகிறது.

கே.பி.யை சொகுசாக தடுத்து வைத்துக்கொண்டு புலிகளின் 600 வங்கிக் கணக்குகளின் விபரங்களை அறிந்து கொண்டு அப்பணத்தையும் அரசாங்கம் செலவழிக்கின்றது.

புலிகளின் தங்கத்திற்கு என்ன நடந்தது? வங்கியிலிருந்த நகைகளுக்கு என்ன நடந்தது? சர்வதேச ரீதியில் செயல்படும் புலிகளின் தலைவரான எமில் காந்தனின் கோட்டேயிலுள்ள வீடு ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய அரசுடைமையாக்கப்பட்டுள்ளது. எமில் காந்தன் எங்கே? நாமலுக்கு உள்ள தொடர்பு என்ன? விடுதலைப்புலிகளோடு இன்றும் அரசாங்கம் தொடர்புகளை பேண வருவதோடு அவர்களது பணத்தையும் பெற்றுக்கொண்டுள்ளது.

எமது படையினர் உயிர் கொடுத்து தேசத்தை மீட்டது. ஆனால்இ இவர்களோ புலிகளின் பணத்தில் சொகுசாக வாழ்கின்றனர். அதேவேளைஇ நாட்டை காத்த தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா மீது புலி முத்திரை குத்தி தேசத் துரோகி பட்டம் சூட்டுகின்றனர்.

புலிகளோடு தொடர்புகளை வைத்துக்கொண்டுஇ புலிப் பணத்தில் சொகுசாக வாழ்பவர்கள் தேசப்பற்றாளர்களா? தேசத்துரோகிகளா? என்பதை மக்கள் சிந்தித்தறிய வேண்டும்.

நாமல் ராஜபக்ஷ மற்றும் புலி உறுப்பினர் எமில் காந்தனுடனான புகைப்படம் ஜோடிக்கப்பட்டதல்ல. உண்மையானது. அதற்கான முழுப் பொறுப்பையும் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.

ஆயுதக் கொள்வனவு தொடர்பாக ஜெனரல் சரத் பொன்சேகா மீது அரசாங்கம் சேறு பூசுகிறது. அதற்காக 2004ஆம் ஆண்டில் தமிழ் நெட் இணையத்தள செய்தியை ஆதாரமாக காட்டுகிறது.

இவையெல்லாம் பொய்யான சேறு பூச்சுக்கள் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். தேசப்பற்றாளர்கள் யார்? தேசத்துரோகிகள் யார்? மக்கள் தீர்மானிக்க வேண்டும்புலிகளின் பணத்திற்கு என்ன நடந்தது?


- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுக்கு தவறான அர்த்தம் கற்பித்து தேசத்துரோகமென அரசாங்கம் முத்திரை குத்துகிறது. புலிகளின் சர்வதேச பொறுப்பாளர் கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதனை தம் வசம் வைத்துள்ள அரசாங்கம் புலிகளின் பணத்தினை என்ன செய்தது என்பதை பகிரங்கப்படுத்தவேண்டும் என்று ஜே.வி.பியின் பாராளுமன்றக் குழுவின் தலைவரும் ஜெனரல் பொன்சேகாவின் பேச்சாளருமான அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து கூறும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறுகையில் அரசாங்கம் இன்று தேசப்பற்றை வியாபாரமாக்கியுள்ளது. அரசாங்கத்தின் ஊழல் மோசடிகளை விமர்சித்து பிழைகளை சுட்டிக்காட்டினால் அவர்கள் தேசத்துரோகிகள். ஆனால் அரசாங்கத்தின் மோசடிகளுக்கு துணைபோனால் அவர்கள் தேசப்பற்றாளர்கள். தமிழர் கூட்டமைப்புடன் எந்தவொரு இரகசிய ஒப்பந்தத்தையும் ஜெனரல் சரத்பொன்சேகா செய்துகொள்ளவில்லை.

மக்களை மீளக் குடியேற்றுவது அடிப்படை வசதிகளை மேற்கொள்வது ஜனநாயகத்தை நிலை நிறுத்துவது போன்ற பொதுவான விடயங்கள் தொடர்பில் இணக்கப்பாடு கண்டே தமிழர் கூட்டமைப்பு ஆதரவு வழங்கிவருகின்றது இதுதான் உண்மை.

கே.பியை கைது செய்த போது புலிகளுக்கு 600 வங்கிக் கணக்குகளும் 16 கப்பல்களும் இருப்பதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். அக் கப்பல்களில் ஒரு கப்பலே மக்களை ஏமாற்ற இங்கு கொண்டு வரப்பட்டது. ஏனைய கப்பல்களுக்கு என்ன நடந்தது?

600 வங்கிக் கணக்குகளுக்கு என்ன நடந்தது. கே.பி எங்கிருக்கிறார். போன்ற விடயங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. விடுதலைப் புலிகளின் பணத்தையே தேர்தல் பிரசாரங்களுக்கு அரசாங்கம் செலவு செய்கின்றது .

சர்வதேச புலி முக்கியஸ்தர் எமில்காந்தனுடன் ""இளைஞர்களுக்கான நாளை'' அமைப்பின் தலைவர் நாமல் ராஜபக்ஷவுக்கு உள்ள தொடர்பு என்ன? புலிகளின் தங்கத்தையும் பணத்தையும் பயன்படுத்தியே தேர்தல் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. எனவே மேற்குலக சதிகாரர்களுடன் அரசாங்கமே தொடர்பு வைத்துள்ளது. ஜெனரல் சரத்பொன்சேகாவின் கைகள் சுத்தமானவையா என்றார்
மேலும் இங்கே தொடர்க...

தாய்லாந்து பாங்கோக் நகரிலுள்ள ஸ்வொன் புளு என்னுமிடத்தில் அமைந்துள்ள தாய்லாந்துதாய்லாந்து பாங்கோக் நகரிலுள்ள ஸ்வொன் புளு என்னுமிடத்தில் அமைந்துள்ள தாய்லாந்து குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் ஐ.டீ.சி சிறையில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள யூ.என்.எச்.சீ.ஆர் இலங்கை அகதிகள் (ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தில் தம்மை அகதிகளாக பதிவு செய்து கொண்டுள்ள) எதிர்வரும் 18ம் திகதிமுதல் உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பிக்கவுள்ளனர். பல வருடங்களாக ஐ.டீ.சீ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இந்த ய+.என்.எச்.சீ.ஆர் அகதிகள் மேற்படி ஐ.சீ.சி சிறைச்சாலையிலிருந்து தங்களை விடுதலை செய்யும்படியும் அல்லது வேறொரு அகதிகள் முகாமிற்கு தங்களை மாற்றும்படியும் கோரி மேற்படி உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பிக்கவுள்ளனர். மேற்படி கைதிகள் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் என வௌ;வேறாகப் பிரிக்கப்பட்டு குற்றவியல் கைதிகள் போன்று சுமார் மூன்று வருடங்களுக்கும் மேலாக எவ்வித அடிப்படை வசதிகளுமற்ற வகையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் விடுதலைக்கான முன்னெடுப்புக்கள் எதுவுமின்றி இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதால் இவர்கள் தங்களை மிக விரைவில் விடுதலை செய்ய வேண்டும் அல்லது வேறொரு அகதி முகாமிற்கு மாற்றவேண்டும் என்றும் கோரியே மேற்படி உண்ணாவிரத்தை மேற்கொள்ளவுள்ளனர். இவர்களின் நிலைமைகள் மற்றும் விடுதலை தொடர்பிலும், இவர்கள் முன்னெடுக்கவிருக்கும் உண்ணாவிரதம் பற்றியும் மனித உரிமை நிறுவனம், தாய்லாந்திலுள்ள யூ.என்.எச்.சீ.ஆர் அலுவலகம், ஜெனீவா யூ.என்.எச்.சீ.ஆர் அலுவலகம். சிறுவர் பாதுகாப்புச் சபை போன்ற நிறுவனங்களுக்கு எழுத்து மூலமாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிவிக்கப்பட்டிருந்தும் இதுவரை எந்தவொரு மனித உரிமை நிறுவனமும் அவர்களைச் சென்று பார்வையிட்டு அவர்களின் பிரச்சினைகளை கேட்டறியாத நிலையில், இன்றையதினம் (15.01.2010) மாலை 5.00மணியளவில் தாய்லாந்திலுள்ள மனித உரிமைகள் நிறுவன அதிகாரிகள் சிறையிலுள்ள ஆண், பெண், சிறுவர்கள் என அகதிகள் அனைவரையும் சென்று பார்வையிட்டு அவர்கள் முன்னெடுக்கவுள்ள உண்ணாவிரதம் சம்பந்தமாக உரையாடியுள்ளனர். அவ்வாறு உரையாடியுள்ள போதிலும், உண்ணாவிரதத்தை கைவிடுவது பற்றியோ அல்லது உண்ணாவிரதத்தை ஆரம்பிக்க வேண்டாமென்றோ தெரிவிக்காத இவர்கள் உண்ணாவிரதத்திற்கான காரணங்களை நிவிர்த்திப்பது தொடர்பிலும் எந்தவித அறிவித்தலையோ கருத்துக்களையோ தெரிவிக்காது திரும்பிச் சென்றுள்ளனர். இவ்வாறான நிலைமையில் திட்டமிட்டபடி எதிர்வரும் 18.01.2010 அன்று உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்படுமென தாய்லாந்து சிறையிலுள்ள அகதிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

சிறுபான்மையினருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அரசியல் யாப்பு; தேர்தல் முறையில் மாற்றம்-லக்ஷ்மன் யாப்பா

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றதும் சிறுபான்மையினருக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் அவர்களை பாராளுமன்றத்துக்கு உள்ணுர்க்கும் வகையில் அரசியல் யாப்பிலும் தேர்தல் முறையிலும் மாற்றங்களை கொண்டுவர ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.
ஜனாதிபதியின் இத்தீர்மானத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற எதிர்க்கட்சியி னருக்கு அழைப்பு விடுப்பதாக தகவல் தொடர்பாடல் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா நேற்று தெரிவித்தார்.
தகவல் தொடர்பாடல் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்றுக்காலை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஜனவரி 26 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் பெரும்பான்மை மக்களின் ஆதரவுடன் ஜனாதிபதி வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது.
ஜனாதிபதி ஆட்சிக்கு வந்ததும் நடைமுறையில் இருந்து வரும் அரசியல் யாப்பில் நாட்டுக்கு பொருந்தக்கூடிய வகையில் மேலும் பல திருத்தங்கள் முன்னெடுக்கப்படும். இதனடிப்படையில் பாராளுமன்ற முறையிலும் தேர்தல் முறையிலும் மாற்றங்கள் கொண்டுவரப்படும். சிறுபான்மையினருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், அவர்கள் விகிதாசார முறையடிப் படையில் பாராளுமன்றத்தில் உள்ணுர்க்கப் படுவார்கள்.
இதேவேளை மக்கள் சபை, கிராம சபை ஆகியன ஸ்தா பிக்கப்படுவதன் மூலம் கிராமங்கள் தோறும் அபிவிருத்தி செய்யப்படும். மேலும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற முடியாத தொழிற்சங்கப் பிரதி நிதிகள் மற்றும் கல்வி மான்களை உள்ளடக்கிய செனற் சபை யொன்றை ஸ்தாபிப்பது குறித்தும் ஜனாதி பதி தனது விஞ்ஞாபனத்தில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய அரசியல் முறையினை நடைமுறைப்படுத்துவதன் மூலம் ஊழல், வன்முறைகளற்ற நாட்டைக் கட்டியெழுப்ப முடியுமென்பது ஜனாதிபதியின் நம்பிக்கை.
அரசியல் யாப்பில் மேற்குறிப்பிட்ட மாற்றங்களை கொண்டு வருவது தொடர் பில் எதிர்க்கட்சியினருடன் கலந்தாலோசித்து சில தீர்மானங்களை பெற்றுக் கொள்ள எமது கட்சி தயாராகவுள்ளது. எனவே எதிரணியினர் இதில் பங்குபற்றுமாறு நாம் அவர்களுக்கு அழைப்பு விடுக்கிறோம்.
எதிரணியினர் இதற்கு இணங்காவிடின், அரசியல் யாப்பில் திருத்தம் செய்யப்பட வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி அதனை அமுலுக்குக் கொண்டு வருவோமெனவும் அமைச்சர் கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நிறை வேற்று ஜனாதிபதி முறையினை இல்லாமல் செய்யப்போவதாக கூறிக் கொண்டே சரத் பொன்சேகா ஜனாதிபதி வேட்பாளராக தேர்தல் களத்தில் இறங்கினார். அன்று ஒரு மேடையில், தான் பதவிக்கு வந்தால் நாட்டின் கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட பல அதிகாரங்களை தான் பெற்றுக்கொள்ளவிருப்பதாக கூறியுள்ளார். தானே தனது கருத்துக்களுடன் முரண்படுகின்றார். அவர் சொல்வதை வைத்துப் பார்த்தால் அமைச்சர்களே தேவைப்படாது போல் தெரிகிறது.
ஜனாதிபதி பதவிக்கு பொன் சேகா தெரிவாகிவிடுவாரோ என்று சிறிதும் அச்சப்படத் தேவையில்லை. அவரால் ஒருபோதும் ஜனாதிபதியாகிவிட முடியாதென்பது நிச்சயம். நாட்டில் சிறுபான்மையினர் எந்த வகையிலும் பாதிப்புக்குள்ளாகாத வகையில் விகிதாசார முறையடிப்படையில் அவர்கள் பாராளுமன்றத் துக்கு தெரிவு செய்யப்பட வேண்டுமென்பதே ஜனாதிபதியின் பிரதான குறிக்கோளாகுமே தவிர சுய ஆட்சி முறையில் ஸதாபிப்பது அல்ல.
பயங்கரவாதிகளை அழிப்பதற்காக 26 ஆயிரம் படையினர் உயிரிழந்ததுடன் 37 ஆயிரம் பேர் வரையில் தமது கை, கால்களை இழந்துள்ளனர். தேர்தல் என்றதும் இவர்களை மறந்துவிட்டு யாருக்கும் சுயாட்சி பெற்றுக் கொடுப்பது ஜனாதிபதியின் நோக்கமல்ல.
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இந்த தேர்தலை சாதகமாகப் பயன்படுத்தி எதிர்க்கட்சியினருடன் சுய ஆட்சியை பெற்றுக்கொள்வதற்கான இரகசிய ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டிருப்பதனை ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் வேளை கூடவிருந்த கூட்டமைப்பிக் எம். பி. ஒருவரே வானொலி ஊடகவியலாளருடன் உரையாடுகையில் ஊர்ஜிதம் செய்துள்ளார்.
அது தொடர்பான தகவல்கள் எமக்கு கிடைக்கப் பெற்றுள்ளன. தேர்தலைத் தொடர்ந்துஇ உரிய ஒலிப்பதிவு ஆவணங்களைக் கொண்டு நாம் எதிர்க்கட்சியினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளோம்.
ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் சிறுபான்மையினருக்கான அனைத்து உரிமைகளும் சுதந்திரங்களும் பெற்றுக்கொடுக்கப்படுவது உறுதி. இருப்பினும் அவரது ஆட்சியின் கீழ் சுயஆட்சி முறைக்கு மாத்திரம் ஒருபோதும் இடமளிக்கப்படாது.
நாட்டு மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாகவி ருந்த பயங்கரவாதம் ஜனாதிபதியின் ஆட் சியின் கீழ் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டு விட்டது. இனி நாட்டுக்கும் மக்களுக்கும் தேவைப்படுவது அபிவிருத்தியே. மஹிந்த சிந்தனையின் இரண்டாம் பாகத்தினூடாக ஐந்து பாரிய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதன் மூலம் மூன்றாம் உலக நாடாகிய இலங்கையை முதலாம் உலக நாடாக மாற்றுவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். இனி வரும் காலங்களில் புதியதொரு அபிவிருத்தி யுகத்தை இலங்கையில் காண முடியுமெனவும் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா மேலும் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

கனடாவில் புதியபாதை சுந்தரம் நினைவு தினம்

புதியபாதை ஆசிரியர்
சதாசிவம் சிவசண்முகமூர்த்தி(சுந்தரம்)
யாழ்-சுழிபுரம்

புதியபாதை ஆசிரியரும் விடுதலையின் பெயரால் படுகொலை செய்யப்பட்ட முதலாவது பத்திரிகையாளருமான சதாசிவம் சிவசண்முகமூர்த்தி அவர்களின் 28வது நினைவு தினம் எதிர்வரும் ஜனவரி 2ம் திகதியாகும் இதனை முன்னிட்டு, ஜனவரி 16ம் திகதி கனடா ரொறன்ரோ நகரில் இடம்பெறவுள்ளது.
“புதியபாதை சுந்தரம் 28வது நினைவு தினம்”
இடம்: 2401 டெனிசன் வீதி, மார்க்கம், ஒன்ராறியோ, கனடா
காலம்: ஜனவரி 16ம் திகதி சனிக்கிழமை 2010ஆண்டு
நேரம்: மாலை 4:00 மணி
ஊடகத்துறையை காப்போம்! உண்மையை எடுத்து கூறுவோம்!
மேலதிக தொடர்புகட்கு: 416-613 2771
-புதியபாதை ஏற்பாட்டுகுழு
மேலும் இங்கே தொடர்க...