18 ஏப்ரல், 2010

வடக்கில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ள மக்களுக்காக பிரித்தானியா நிதியுதவி






வடக்கில் இடம்பெயர்ந்த நிலையில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ள மக்களின் புனர்நிர்மாணப் பணிகளுக்கென பிரித்தானிய அரசாங்கம் 02 கோடிரூபா நிதியுதவியை வழங்கியுள்ளது. இதற்கு முன்னரும் பிரித்தானிய அரசினால் இலங்கைக்கு 25கோடி ரூபா நிதியுதவி அளிக்கப்பட்டிருப்பதாக இலங்கைக்கான பிரித்தானியத் தூதுவர் பீற்றர் ஹவுன்ஸ் தெரிவித்துள்ளார். நிதியுதவி தவிர மீள்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கான வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கென உபகரணங்களையும் பிரித்தானியா வழங்கவுள்ளதென்று பீற்றர் ஹவுன்ஸ் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

ஜெனரல் சரத்பொன்சேகா நாடாளுமன்றம் செல்ல பாதுகாப்பமைச்சின் அனுமதி அவசியமில்லையென ஜே.வி.பி தெரிவிப்பு





ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவர் ஜெனரல் சரத் பொன்சேகா எதிர்வரும் 22ம் திகதி நாடாளுமன்றத்திற்குச் செல்வதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்றுக் கொள்ளவேண்டிய அவசியமில்லை என ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை, ஜெனரல் சரத் பொன்சேகா நாடாளுமன்றத்திற்கான முதல் அமர்வில் கலந்துகொள்வதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்றுக்கொள்ளவேண்டும் என்று இராணுவப்பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க முன்னர் தெரிவித்திருந்தார். எனினும், தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க நாடாளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்டவர்களின் பெயர்ப் பட்டியலில் ஜெனரல் சரத்பென்சேகாவின் பெயரையும் வர்த்தமானியில் அறிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.
மேலும் இங்கே தொடர்க...

பலாலி விமான நிலையத்திலிருந்து திருச்சிக்கான விமான சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை-





யாழ். பலாலி விமான நிலையத்திலிருந்து திருச்சிக்கான விமான சேவைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே காந்தா உறுதியளித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கான உங்கள் நுழைவாயில் என்ற தொனிப்பொருளிலான சர்வதேச கண்காட்சி யாழ். மத்திய கல்லூரியில் இன்றுகாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பங்கேற்று உரையாற்றும்போதே அவர் மேற்குறித்த உறுதியினை அளித்துள்ளார். அத்துடன் இந்தியாவிற்கும் தலைமன்னாருக்குமிடையிலான கப்பல் போக்குவரத்தினை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இந்திய விசா விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளும் நிலையமொன்று எதிர்வரும் மேமாதம் 5ம் திகதி ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

வடபகுதி மக்களின் இந்தியப் பயணத்திற்கான விசா விண்ணப்பங்களை சேகரித்து கொழும்புக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கையையையும், கொழும்பிலிருந்து வரும் விசாக்களை வடபகுதியில் விநியோகிக்கும் நடவடிக்கையிலும் இந்த நிலையம் ஈடுபடும். மேலும் இலங்கைக்கு தொடர்ச்சியாக உதவிகளை வழங்குவதிலும் இந்தியா முன்நிற்கும் எனவும் அசோக் கே காந்தா மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

இங்கிலாந்தில் மாணவிகள் அறையில் காமிரா பொருத்திய ஆசிரியர்





இங்கிலாந்தில் உள்ள பிர்மிங்காம் நகரை சேர்ந்தவர் பால்வாங். இவர் பிர்மிங்காம் பல்கலைக்கழக கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிகிறார். இவரது வீட்டில் 6 மாணவிகள் வாடகைக்கு அறை எடுத்து தங்கியிருந்தனர்.

இந்த நிலையில் அவர்கள் தங்கியிருந்த அறையின் ஜன்னல் பகுதியில் பால்வாங் 2 ரகசிய காமிராக்களை மறைவாக பொருத்தியிருந்தார். இதை கண்டுபிடித்த மாணவிகள் போலீசில் புகார் செய்தனர். உடனே போலீசார் விரைந்து வந்து அவரை கைது செய்தனர்.

அவர் மீது பிர்மிங்காம் கிரவுன் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது அவர் தான் கெட்ட நோக்கத்தில் காமிராவை பொருத்தவில்லை. மாணவிகளின் நடவடிக்கையை கண்காணிக்கவே அவ்வாறு செய்தேன் என தெரிவித்தார்.

இருந்தாலும் அவரது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி ரோடரிக் ஹெண்டர்சன் குற்றம் சாட்டப்பட்ட பால்வாங் மீது செக்ஸ் குற்றம் பதிவு செய்ய உத்தரவிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

பாஸ்போர்ட் இல்லாமல் மெரீனாவில் சுற்றிய இலங்கை வாலிபர் கைது






சென்னை மாநகரில் இரவு நேரங்களில் சுற்றித்திரியும் குற்றவாளிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் நள்ளிரவு சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை இரவு முழுவதும் விடிய விடிய சோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதில் பழைய குற்றவாளிகள், பிடிவாரண்டு குற்றவாளிகள் சிக்கி வருகிறார்கள்.

நேற்று இரவும் சென்னை முழுவதும் போலீசார் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் மொத்தம் 400 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் பிடிவாரண்டு குற்றவாளிகள் 32 பேரும், பழைய குற்றவாளிகள் 26 பேரும், சந்தேக நபர்கள் 232 பேரும் அடங்குவர்.

மெரீனா கடற்கரையிலும் போலீசார் தீவிர சோதனை யில் ஈடுபட்டனர். சந்தேகத் துக்கிடமாக கடற்கரையில் தூங்கியவர்களையும் தட்டி எழுப்பி விசாரித்தனர். மெரீனா கடற்கரையில் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பகுதியில் தூங்கிய ஒரு வாலிபரை பிடித்து விசாரித் தனர். அப்போது இலங்கை தமிழில் அவர் பேசினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் மெரீனா போலீஸ் நிலையத்துக்கு அவரை அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது அந்த வாலிபர் தன்னுடைய பெயர் முகமது அன்சாரி என்றும், தனது சொந்த ஊர் இலங்கை பொத்தளம் என்றும் கூறினார். பாஸ்போர்ட் எதுவும் அவரிடம் இல்லை.

இதனால் அவர் மீதான சந்தேகம் தீவிரமானது. உடனடியாக உளவுப்பிரிவு போலீசாரும், கியூ பிரிவு போலீசாரும் விரைந்து சென்று விசாரித்தனர். முகமது அன்சாரியின் கைரேகைகளையும் போலீசார் பதிவு செய்துள்ளனர். மெரீனா போலீஸ் நிலையத்தில் வைத்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத் தப்பட்டு வருகிறது. அவர் விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவரா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சுற்றுலா விசாவில் நான் தமிழ்நாட்டுக்கு வந்தேன். 2 மாதங்களுக்கு முன்பு என்னுடைய பாஸ்போர்ட் தொலைந்து விட்டது. இதனால் எங்கு செல்வது என்று தெரியாமல் மெரீனா கடற்கரையிலேயே தங்கிவிட்டேன் என்று முகமது அன்சாரி கூறியுள்ளார்.

மீனவர்கள் கடலில் இருந்து பிடித்து வரும் மீன்களை படகில் இருந்து இறக்கும் வேலைகளை இவர் செய்து வந்துள்ளார். இவருடன் வேறு யாரும் வந்து இதுபோல தங்கியுள்ளார்களா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ராமேசுவரம் கடற்கரை யில் மர்ம படகு ஒன்று கரை ஒதுங்கியது. அதில் இருந்து 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் தப்பிச்சென்றார். அவர் யார் என்று தெரியவில்லை. விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவராக இருக்க லாம் என்ற சந்தேகத்தின் பேரில் அவரை பிடிப்பதற்காக போலீசார் தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டுள்ளனர்.

இந்த நிலையில் 40 வயது மதிக்கத்தக்க முகமது அன்சாரி என்ற இலங்கை தமிழர் சென்னையில் சிக்கியுள்ளார். இலங்கையில் இருந்து படகில் ராமேசுவரத்துக்கு வந்து அங்கிருந்து தப்பிச் சென்றவர் இவரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை பார்லி வளாகத்தில் இன்று சிறப்பு பிரார்த்தனை

கொழும்பு:இலங்கையில் பார்லிமென்ட் தேர்தலுக்கு பின், புதிய கூட்டத்தொடர் துவங்கவுள்ளதை அடுத்து, பார்லிமென்ட் வளாகத்தில் புத்த துறவிகள் இன்று சிறப்பு பிரார்த்தனை நடத்தவுள்ளனர்.இலங்கையில் சமீபத்தில் பார்லிமென்ட் தேர்தல் நடந்தது. இதில், அதிபர் ராஜபக்ஷே கட்சி மீண்டும் வெற்றி பெற்று, ஆட்சியைப் பிடித்துள்ளது. புதிய உறுப்பினர்கள் பதவியேற்க வேண்டும் என்பதால், முதல் கூட்டத் தொடர் வரும் 22ம் தேதி துவங்கவுள்ளது.இதையொட்டி, பார்லிமென்ட் வளாகத்தில் இன்றிரவு, ஏராளமான புத்த துறவிகள் சிறப்பு பிரார்த்தனை நடத்தவுள்ளனர். இந்த பிரார்த்தனையில், பார்லிமென்ட் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள அனைவரும் பங்கேற்க வேண்டும் என, அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிபர் ராஜபக்ஷேவின் ஒப்புதலுடன், இந்த பிரார்த்தனை கூட்டம் நடக்கவுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

தமிழ் மக்கள் மத்தியில் புதிய சிந்தனை


யாழ்ப்பாண மாவட்டத்தின் தேர்தல் முடிவு மாவட்ட மக்க ளின் சிந்தனையில் புதிய திருப்பம் ஏற்பட்டிருப்பதை வெளி ப்படுத்துகின்றது. இதுவரை காலமும் தமிழ்த் தேசியவா தம் அங்கு மேலோங்கியிருந்தது. முதலாவது பாராளுமன்றத் தேர்த லிலிருந்து தொடர்ச்சியாக அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளே யாழ்ப்பாண மாவட்டத்தில் அளிக் கப்பட்ட மொத்த வாக்குகளில் கூடுதலானவற்றைப் பெற்று வந்தன. அதாவது மாவட்ட அரசியலில் இக்கட்சிகள் ஒவ்வொரு காலத்தில் ஏகபோகம் வகித்தன. கடந்த தேர்தலில் இந்த நிலைமை மாறி விட்டது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐந்து ஆச னங்களைப் பெற்றுள்ள போதிலும் முன்னைய பெறுபேறுகளுடன் ஒப்பிடுகையில் இது ஒரு பின்னடைவு என்றுதான் கூற வேண்டும். ஐந்து ஆசனங்களில் ஒன்று போனஸ் ஆசனம். அதை நீக்கிப் பார் த்தால், அளிக்கப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் தமிழ்த் தேசி யக் கூட்டமைப்புக்கு நான்கு ஆசனங்களும் அதை எதிர்த்துப் போட்டியிட்ட கட்சிகளுக்கு நான்கு ஆசனங்களும் கிடைத்திருப் பது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வெற்றிப் பெருமிதம் கொள்ளக் கூடியதல்ல.

யாழ்ப்பாண மாவட்டத்தில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் பெரு ம்பான்மையைத் தமிழ்த் தேசியவாதக் கட்சிகள் பெற்றுவந்த நிலை இந்தத் தேர்தலில் மாறிவிட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 65119 வாக்குகளையும் அதற்கு எதிராகப் போட்டியிட்ட கட்சிகளும் சுயேச்சைகளும் மொத்தமாக 83404 வாக்குகளையும் பெற்றுள்ளன. வாக்களித்த மக்களில் பெரும்பான்மையானோர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நிராகரித்து விட்டனர் என்பதே இதன் அர்த்தம்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் அரசாங்க தரப்பு வேட்பாளர்கள் முன் னைய தேர்தல்களிலும் பார்க்க இந்தத் தேர்தலில் கூடுதலான வாக் குகளைப் பெற்றிருப்பதும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைமை வேட்பாளர் டக்ளஸ் தேவானந்தா மாவட்டத்தில் மிகக் கூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றிருப்பதும் விசேடமாகக் கவ னத்தில் கொள்ளப்பட வேண்டியவை.

பொதுத் தேர்தலின் யாழ்ப்பாண மாவட்ட முடிவு புதிய அரசியல் பாதை பற்றிய சிந்தனை மக்களிடம் தோன்றியிருப்பதையே வெளி ப்படுத்துகின்றது. எதிர்ப்பு அரசியல் தமிழ் மக்களை அழிவுகளு க்கே இட்டுச் சென்றுள்ளது என்பதை உணர்ந்து இணக்க அரசியல் பாதைக்கு மக்கள் திரும்புகின்றார்கள் என்பதை இம்முடிவு புலப் படுத்துகின்றது.

மக்களிடம் ஏற்பட்டிருக்கும் மனமாற்றத்தைச் சரியான முறையில் கையாள வேண்டிய பொறுப்பு அரசாங்கத்தையும் அரசாங்கத்தின் சார்பில் தமிழ் மக்கள் மத்தியில் செயற்படும் தலைவர்களையும் சார்ந்தது.

தமிழ்த் தேசியவாதக் கட்சிகள் இனப் பிரச்சினையையே ஒவ்வொரு தேர் தலிலும் முக்கிய பிரச்சினையாக முன்வைத்தன. மக்களும் அப்பிர ச்சினையே பிரமாதமானது எனக் கருதியதால் அக்கட்சிகளுக்கு வாக்குகளை அள்ளிக் கொடுத்தார்கள். இந்தத் தடவை தமிழ்த் தேசி யக் கூட்டமைப்புக்குப் பெரும்பான்மையான வாக்குகள் கிடைக்காமை மக்கள் இனப் பிரச்சினையை மறந்துவிட்டார்கள் என்பதற்கான அறிகுறி எனக் கருதலாகாது. இனப் பிரச்சினையின் தீர்வுக்காக இதுவரையும் பின்பற்றிய வழி தவறானது என்பதை மக்கள் விள ங்கிக் கொண்டிருப்பதையே அது புலப்படுத்துகின்றது.

எனவே, இனப் பிரச்சினையின் தீர்வுக்காக நடைமுறைச் சாத்தியமான முயற்சிகளைத் தாமதமின்றி முன்னெடுப்பது தான் மக்களிடம் ஏற்ப ட்டுள்ள மனமாற்றத்தைச் சரியான முறையில் கையாள்வதாக அமையும்.
மேலும் இங்கே தொடர்க...

த.தே.கூட்டமைப்பு எம்.பீக்களுக்கு

பழையவர்களும் புதியவர்களுமாகப் பதின்மூன்று பேர் பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டிருக்கின்ஹர்கள். அடுத்த தேர்தலுக்கும் நீங்கள் மக்களிடம் வாக்குக் கேட்டுச் செல்ல வேண்டியவர்கள்.

அப்போதாவது பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற ரீதியில் உங்கள் சாதனைகளைப் பட்டியல் போட்டுக் காட்டும் வகையில் செயற்பட வேண்டுமென வாழ்த்துகிறேன். பட்டியல் போடுவதற்கான சாதனைகள் எதுவும் இதுவரை இருக்கவில்லை. இனிமேலாவது இருக்கத்தானே வேண்டும்.

உங்களுக்கு மக்களாணை கிடைத்திருப்பதாகச் சொல்கின்ஹர்கள். பதின்மூன்று பேர் தெரிவு செய்யப்பட்டதை மக்களாணை என்று கூறிப் பெருமைப்படலாமா என்பதைப் பின்னர் பார்ப்போம்.

ஒவ்வொரு தடவையும் கூடுதலான எண்ணிக்கையில் தெரிவு செய்யப்படும் போது மக்களாணை கிடைத்திருப்பதாக நீங்கள் கூறுவது வழக்கம். ஆனால் மக்களுக்கு அதனால் எந்தப் பலனும் ஏற்படவில்லை.

விசேடமாக, கடந்த பாராளுமன்றத்தில் 22 பேர் அங்கத்துவம் வகித்தீர்கள். அது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உச்ச கட்ட பிரதிநிதித்துவம். அந்தப் பிரதிநிதித்துவமும் தமிழ் மக்களுக்கு எந்த நன்மையையும் பெற்றுத் தரவில்லை.

அழிவுகளையும் இழப்புகளையும் மாத்திரமே பெற்றுத் தந்தது. இழப்புகளுக்கும் அழிவுகளுக்கும் மேலதிகமாக இன்றுங்கூட அகதி வாழ்க்கை வாழ்பவர்களைக் காண முடிகின்றது. கூட்டமைப்புத் தலைமை எடுத்த தவறான முடிவின் விளைவுகள் இவை.

மீண்டும் அப்படியான அவலத்துக்குத் தமிழ் மக்கள் இட்டுச் செல்லப்படும் நிலை உருவாகுவதற்கு நீங்கள் உடந்தையாக இருக்க மாட்டீர்கள் என நம்புகின்றேன்.

மக்களாணை விடயத்துக்கு வருவோம். நீங்கள் போட்டியிட்ட மாவட்டங்களுள் யாழ்ப்பாணத்தைத் தவிர மற்றைய அனைத்தும் பல்லின மாவட்டங்கள். இந்த மாவட்டங்களில் தமிழ் மக்களின் சிந்தனையில் தமிழ்ப் பிரதிநிதிகளின் எண்ணிக்கையே முதலிடம் வகிக்கும்.

அதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மனதார விரும்பாதவர்களும் அதற்கு வாக்களிக்கும் சாத்தியம் உண்டு. இம்மாவட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியலிலும் பார்க்கத் தமிழ்ப் பிரதிநிதித்துவம் என்ற கருத்துருவம் முன்னுரிமை பெறுவது இயல்பானதே.

யாழ்ப்பாண மாவட்டத்தின் நிலை வித்தியாசமானது. அங்கே தமிழ் பிரதிநிதித்துவக் கருத்துருவம் அவசியமற்றது. ஏனென்றால் அது பல்லின மாவட்டமல்ல. யாழ்ப்பாணத்தில் உங்களுக்கு ஐந்து உறுப்பினர்கள் உள்ளனர்.

அதை மக்களாணை என்று நீங்கள் கூற முடியாது. ஐந்து ஆசனங்களில் ஒன்று போனஸ் ஆசனம். அதை நீக்கிப் பார்த்தால், வாக்குகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டவர்கள் நான்கு பேர் மாத்திரமே.

உங்களுக்கு எதிரான அணிகளிலும் நான்கு பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். உங்களுக்கும் மற்றைய கட்சிகளுக்கும் சமமான பிரதிநிதித்துவம். போனஸ் ஆசனத்தினால் நீங்கள் முன்னணியில் நிற்கின்ஹர்கள்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏழு இலட்சத்துக்கு மேற்பட்ட வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றனர். இவர்களில் ஒன்றரை இலட்சம் பேர் வரையிலேயே வாக்களித்திருக்கின்றார்கள். தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் அதன் முன்னோடிகளான தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி என்பனவும் நீண்ட காலமாக மாவட்ட அரசியலில் ஏகபோகம் செலுத்தியவை.

இந்த நிலையில் ஐந்து இலட்சம் பேர் வரை வாக்களிக்கவில்லை என்றால் இக்கட்சிகளின் அரசியல் தொடர்பான ஏமாற்றமே காரணம் என்று கூறலாமல்லவா!

யாழ்ப்பாண மாவட்டத்தில் உங்களுக்கு 65,119 வாக்குகள் கிடைத்தன. கூட்டமைப்புக்கு எதிராகப் போட்டியிட்ட கட்சிகளும் சுயேச்சைகளும் மொத்தம் 83,404 வாக்குகளைப் பெற்றன. தமிழர் விடுதலைக் கூட்டணியும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் முன்னைய தேர்தல்களில் அளிக்கப்பட்ட வாக்குகளில் அரைவாசிக்குக் கூடுதலாகவே பெற்றுவந்தன. மற்றைய கட்சிகளும் சுயேச்சைகளும் பெற்ற மொத்த வாக்குகள் இவ்விரு கட்சிகளும் பெற்ற வாக்குகளுக்குக் கிட்டவும் வர முடியவில்லை.

இந்தத் தேர்தலில் நிலைமை மாறிவிட்டது. நீங்கள் பெற்ற வாக்குகளிலும் பார்க்க 18,285 கூடுதலான வாக்குகளை உங்களை எதிர்த்துப் போட்டியிட்ட கட்சிகளும் சுயேச்சைகளும் பெற்றிருக்கின்றன.

இந்த நிலையில் மக்களாணை பற்றிய பேச்சு அர்த்தமற்றது. எவ்வாறாயினும் மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற முயற்சி செய்யுங்கள். இனப்பிரச்சினைக்குத் தீர்வு வேண்டும் என்பதே மக்களின் விருப்பம்.
மேலும் இங்கே தொடர்க...

அமெரிக்க - ஜப்பான் உறவுக்கு சோதனைக் காலம்

அமெரிக்காவுக்கும் அதன் பிரதான ஆசிய அணியான ஜப்பானுக்கும் இடையிலான அறுபத்தைந்து வருட பழமை வாய்ந்த உறவின் எதிர்காலம் பற்றிய சந்தேகங்கள் ஏற்படத் தொடங்கியுள்ளன. நாற்பது வருடங்களுக்கு மேலாகத் தொடர்ந்து ஆட்சி புரிந்த லிபரல் ஜனநாயகக் கட்சியைத் தோற்கடித்து ஜப்பான் ஜனநாயகக் கட்சி ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு கேள்விக்கு உள்ளாகின்றது.

இரண்டாவது உலக யுத்தத்தில் தோற்றுச் சரணடைந்த ஜப்பானை அமெரிக்கா மிக இலகுவில் தனது கட்டுப்பாட்டக்குள் கொண்டு வந்தது. ஆசியாவில் தனது செல்வாக்கை வலுப்படுத்தும் அமெரிக்காவின் திட்டத்தில் அன்று முதல் ஜப்பான் பிரதான தளமாக விளங்கியது.

ஜப்பானின் அரசியலமைப்பை அமைதி அரசியலமைப்பு (டஹஷடுக்டுஙூசி இச்டூஙூசிடுசிசீசிடுச்டூ) எனக் கூறுவர். இது இரண்டாவது உலக யுத்தத்துக்குப் பின் ஜப்பானுக்காக அமெரிக்க வரைந்த அரசியலமைப்பு. எப்போதும் ஜப்பான் தனது கட்டுப்பாட்டுக்குள் இருப்பதற்கு ஏற்ற வகையிலேயே அமெரிக்கா இந்த அரசியலமைப்பை வரைந்தது. ஜப்பானின் இராணுவம் யுத்தம் புரியும் இராணுவமாக அல்லாமல் சடங்காசார (இடீஙுடீஙிச்டூடுஹங்) இராணுவமாக இருக்க வேண்டும் என்பதை அரசியலமைப்பு வலியுறுத்தியது. இதனால், 2007ம் ஆண்டு வரை ஜப்பானில் பாதுகாப்பு அமைச்சு இருக்கவில்லை. ஜப்பானின் பாதுகாப்பு தொடர்பான தீர்மானங்களை அமெரிக்காவே எடுத்து வந்தது.

ஒக்கினாமா கடற்படைத் தளம்

அமெரிக்காவுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒப்பந்தம் 1951ம் ஆண்டு கைச்சாத்திடப்பட்டது. பின்னர் அது 1960ம் ஆண்டு திருத்தப்பட்ட போது, ஜப்பானில் உள்நாட்டுக் கலகங்களும் குழப்பங்களும் இடம்பெறும் பட்சத்தில் அமெரிக்கா தலையிடுவதற்கு இடமளிக்கும் சரத்து நீக்கப்பட்டதெனினும் மூல ஒப்பந்தத்தில் இடம்பெற்றிருந்த பல இரகசிய சரத்துகள் அவ்வாறே இருந்தன. அமெரிக்கக் கடற்படையின் அணு ஆயுதக் கப்பல்கள் ஜப்பானின் கடற்பரப்பில் நடமாடலாம் என்பதும் ஜப்பானிலுள்ள அமெரிக்கப் படைத்தளங்களுக்கான பராமரிப்புச் செலவை ஜப்பான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதும் இரகசிய சரத்துகளுள் அடங்குபவை.

தாகிச்சி நிஷியாமா (பஹகூடுஷகீடு சடுஙூகீடுஞிஹஙிஹ) என்ற ஊடகவியலாளர் அமெரிக்காவுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்திலுள்ள நான்கு இரகசிய சரத்துகள் பற்றி 1971ம் ஆண்டு பத்திரிகையொன்றில் எழுதியதற்காக ஜப்பான் அரசாங்கம் அவருக்கு எதிராக வழக்குத் தொடுத்தது. அரச இரகசியங்களைப் பெறுவதும் வெளியிடுவதும் ஜப்பானில் பாரதூரமான கிரிமினல் குற்றங்கள்.

பொருளாதார வல்லரசாக வளர்ச்சியடைந்த ஜப்பான் பாதுகாப்பைப் பொறுத்த வரையில் முற்றுமுழுதாக அமெரிக்காவில் தங்கியிருப்பது நாட்டின் சுயாதீனத்துக்கும் இறைமைக்கும் இழுக்கு என்ற உணர்வு மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில், பாதுகாப்பு அமைச்சை உருவாக்கும் முடிவுக்கு லிபரல் ஜனநாயகக் கட்சி அரசாங்கம் வந்தது. அதற்கான சட்டம் 2006 டிசம்பர் 15ம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு 2007 ஜனவரி 9ந் திகதி பாதுகாப்பு அமைச்சு செயற்படத் தொடங்கியது. இந்த முடிவையிட்டு அமெரிக்கா அதிருப்தி அடைந்த போதிலும் ஜப்பானில் பதவியிலுள்ள கட்சியின் மீது கொண்டுள்ள நம்பிக்கை காரணமாக அதை வெளிப்படுத்தவில்லை.

பராக் ஒபாமா

2009 ஓகஸ்ட் 30ந் திகதி ஜப்பானில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. 1955ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக ஆட்சி புரிந்த லிபரல் ஜனநாயகக் கட்சியைத் தோற்கடித்து ஜப்பான் ஜனநாயகக் கட்சி ஆட்சிக்கு வந்தது. யுகியோ ஹதோயாமா (வசீகூடுச் ஏஹசிகீச்ஞிஹஙிஹ) பிரதமராகப் பதவியேற்றார். இவர் லிபரல் ஜனநாயகக் கட்சியின் ஸ்தாபகர்களில் ஒருவரான இசிரோ ஹதோயாமாவின் (ஐஷகீடுஙுச் ஏஹசிகீச்ஞிஹஙிஹ) பேரப்பிள்ளை. யுகியோ ஹதோயாமாவும் தனது அரசியல் வாழ்க்கையை லிபரல் ஜனநாயகக் கட்சியிலேயே ஆரம்பித்தவர்.

தேர்தல் பிரசாரத்தின் போது ஜப்பான் ஜனநாயகக் கட்சி அமெரிக்காவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தது. பதவிக்கு வந்ததும் ஜப்பானில் அமெரிக்கப் படைகளின் பிரசன்னத்தை முடிவுக்குக் கொண்டு வருவதாகவும் ஜப்பானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான சமத்துவமற்ற ஒப்பந்தங்களை ரத்துச் செய்வதாகவும் பிரசாரம் செய்தது. ஜப்பான் ஜனநாயகக் கட்சி தேர்தலில் வெற்றி பெறுவதற்கு இப்பிரசாரம் முக்கிய பங்கு வகித்தது. அமெரிக்கப் படைத்தளங்களை ஜப்பானிலிருந்து அகற்ற வேண்டும் என்பதில் பெரும்பாலான ஜப்பானியர்கள் உடன்பாடானவர்களாகவே உள்ளனர்.

ஜப்பான் ஜனநாயகக் கட்சியின் தேர்தல் பிரசாரமும் புதிய அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கை தொடர்பான நகர்வுகளும் அமெரிக்காவுக்குக் கசப்பான சமிக்ஞைகளாக இருந்தன.

ஐரோப்பிய யூனியனைப் போல, ஆசிய நாடுகளின் கூட்டமைப்பொன்றை உருவாக்கும் திட்டத்துடன் ஜப்பான் ஜனநாயகக் கட்சி அரசாங்கம் சில நகர்வுகளை மேற்கொண்டது. சீனாவுடனும் இந்தியாவுடனும் நெருக்கமான உறவை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்கப் படையினருக்கு சண்டை சாராத டூச்டூ ஷச்ஙிஸஹசி உதவிகளுக்காக இந்து சமுத்திரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஜப்பானின் கடற்படையைப் புதிய அரசாங்கம் திரும்ப அழைத்தது. அதைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தானுக்கு ஐந்து பில்லியன் டொலர் உதவித் திட்டமொன்றையும் அறிவித்தது.

யுகியோ ஹதோயாமா

புதிய அரசாங்கத்தின் மக்களாணை எவ்வாறாயினும், அமெரிக்காவுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தை ரத்துச் செய்வதும் அமெரிக்காவின் படைத்தளங்களை உடனடியாக அகற்றுவதும் ஹதோயாமா அரசாங்கத்துக்கு இலகுவான காரியமல்ல. ஒக்கினாமா தீவில் பூடென்மா (ஊசீசிடீடூஙிஹ) நகரிலுள்ள அமெரிக்க கடற்படைத் தளத்தை அகற்றுவதிலேயே அரசாங்கம் இப்போது கூடுதலான கவனம் செலுத்துகின்றது.

ஒக்கினாவா கடற்படைத் தளம் அமெரிக்காவைப் பொறுத்த வரையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஜப்பானிலுள்ள 53,000 அமெரிக்கப் படையினரில் 75 வீதத்தினர் ஒக்கினாவா தளத்திலேயே உள்ளனர். கிழக்கு ஆசியாவில் அமெரிக்க படைபலத்தின் கேந்திர ஸ்தானமாக ஒக்கினாவா தளம் விளங்குகின்றது.

ஒக்கினாவா தளத்தை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வந்த பின்னணியில், இத்தளத்தைத் தீவின் வட பகுதியிலுள்ள நாகோ (சஹகிச்) நகருக்கு மாற்றும்படி லிபரல் ஜனநாயகக் கட்சி அரசாங்கம் சில வருடங்களுக்கு முன் வேண்டுகோள் விடுத்தது. இந்த வேண்டுகோள் தொடர்பாக அமெரிக்கா இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஒக்கினாவா தளத்தை ஜப்பானிலிருந்து முழுமையாக அகற்ற வேண்டும் என்கின்றது ஜப்பான் ஜனநாயகக் கட்சி அரசாங்கம். அதற்கு அமெரிக்கா உடன்படுவதாக இல்லை. கிழக்கு ஆசிய பிராந்தியத்தின் பாதுகாப்புக்கு இத்தளம் அத்தியாவசியமானது எனக் கூறுகின்றது அமெரிக்கா. இரு தரப்பும் தங்கள் நிலைப்பாட்டில் பிடிவாதமாக நிற்கின்றன.

ஒக்கினாவா தளத்தை ஜப்பானுக்கு வெளியே அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையைத் தீவிரமாக வலியுறுத்தாவிட்டால் அரசாங்கத்திலிருந்து வெளியேறப் போவதாக ஜப்பான் ஜனநாயகக் கட்சியின் பிரதான கூட்டரசாங்க அணியான சமூக ஜனநாயகக் கட்சி அச்சுறுத்துகின்றது. இக்கட்சி அதன் ஆதரவை விலக்கிக் கொண்டால் ஜப்பான் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மையை இழந்துவிடும்.

இந்த நிலையில் ஒக்கினாவா தளம் ஜப்பானிலிருந்து அகற்றப்படுமா அல்லது அமெரிக்கா அதன் வழமையான பாணியில் ஜப்பான் ஜனநாயகக் கட்சி அரசாங்கத்தை வலுவிழக்கச் செய்யுமா என்ற கேள்வி எழுகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

யாழ். உறவுகளைத் தேடி... 4 மாதங்களுக்குள் 40 இலட்சம் பேர் யாழ். விஜயம்

நான்கு மாதகால இடைவெளிக்குள் சுமார் 40 இலட்சம் பேர் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு விஜயம் செய்துள்ளார்களென யாழ். மாவட்டத்திற்கான பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க தெரிவித்தார்.

சுண்ணாகம் மருதனாமடுவில் நேற்று தமிழ்- சிங்கள புத்தாண்டு விழா மிகவும் கோலாகலமாக நடந்தது.

யாழ். மாவட்டத்திலுள்ள 99 கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த மக்களோடு சிங்கள மக்களும் பெருமளவில் இந்த விழாவில் கலந்து கொண்டனர். தமிழர்களின் பாரம்பரிய நிகழ்வுகளோடு ஆரம்பமான இந்த புத்தாண்டு விழாவில் விளையாட்டு க்களோடு கலை, கலாசார நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இங்கு கருத்துத் தெரிவித்த கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க;

கடந்த ஜனவரி மாதத்திலிருந்து நேற்று வரைக்கும் யாழ். குடா நாட்டிற்கு 40 இலட்சம் பேர் விஜயம் செய்துள்ளனர். வருகை தந்தோரில் இன்னும் இரண்டு இலட்சம் பேர் இங்கு தங்கியிருந்து யாழ். குடாவின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று பார்வையிடுகின்றனர். வருகின்ற மக்கள் ஹோட்டல்களிலும் உறவினர்கள் வீடுகளிலும் தங்கியுள்ளனர்.

யாழ். குடாநாட்டை பார்வையிடுவதற்காக மக்கள் திரண்டு வருகிறார்கள் என்பதைவிட, தங்களது உறவுகளைத் தேடிவருகிறார்கள் என்பதே உண்மை” என அவர் கூறினார்.

யாழ். குடா நாட்டு அபிவிருத்தி தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அவர், வடக்கு வசந்தம் திட்டத்தின் கீழ் பல்வேறு அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதேநேரம், பொது மக்களுக்கும் இராணுவத்திற்குமிடையில் நல்லெண் ணத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையிலேயே புத்தாண்டு விளையாட்டு விழாக்கள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன” என்றார்.

இதேநேரம், வடமராட்சி கிழக்கு பகுதியில் கண்ணி வெடிகள் அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எதிர்வரும், ஓகஸ்ட் மாதம் பூர்த்தியடை ந்துவிடும். அதன்பின்னர் அந்தப் பகுதிகளுக்குச் செல்ல மக்கள் அனுமதிக் கப்படுவர் எனக் குறிப்பிட்ட அவர், பாதுகாப்பு வலயங்களாகக் கருதப்படும் இடங்களும், சில முகாம்களும் அகற்றப்பட்டு விடுமெனவும் சுட்டிக்காட்டி னார்
மேலும் இங்கே தொடர்க...

கும்புறுபிட்டிய வாக்குகள் எண்ணும் பணி திருமலை மாவட்ட செயலகத்துக்கு மாற்றம்;புலிகளின் அச்சுறுத்தல் காரணமாம்


திருகோணமலை மாவட்டத்தின் கும்புறுப்பிட்டியவில் நாளை மறுதினம் நடைபெறவுள்ள மீள்வாக்குப் பதிவின் பின்னரான வாக்கு எண்ணும் பணிகள் திருகோணமலை மாவட்டச் செயலகத்துக்கு மாற்றப்பட்டுள்ளன. பொலிஸாரின் ஆலோசனைக்கு அமையவே இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கும்புறுப்பிட்டிய வாக்களிப்பு நிலையத்திலேயே வாக்குகளை எண்ணும் பணியினையும் மேற்கொள்வதென முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தாலும் புலிகளின் அச்சுறுத்தல் இந்தப் பிரதேசத்தில் இருக்கலாமென்ற காரணத்தால் பொலிஸாரின் ஆலோசனைக்கு அமையவே வாக்குகள் எண்ணும் பணியை திருமலை மாவட்ட செயலகத்துக்கு மாற்றுவதென முடிவெடுக்கப்பட்டதாக தேர்தல்கள் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதன்படி கும்புறுப்பிட்டிய வாக்குச் சாவடியில் வாக்களிப்பு மட்டுமே இடம்பெறவுள்ளது. தேர்தல் முடிவுகள் திருகோணமலை மாவட்ட செயலகத்திலிருந்தே அறிவிக்கப்படவுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

பதவிகளுக்காக மு.கா. சோரம் போகாது;தேசியபட்டியலில் இரு இடங்களை ஐ.தே.க.வழங்கியாக வேண்டும்:ஹக்கீம்

ஜனாதிபதியோ, ஆளும்தரப்பினரோ அரசாங்கத்தில் எம்மை இணைந்து கொள்ளுமாறு இதுவரை அழைப்பு விடுக்கவில்லை. இந்த நிலையில் எமது கட்சியை அரசுடன் சேருமாறு அழைக்கப்பட்டதாகக் கூறப்படும் செய்தியின் பின்னணியில் ஒரு சதிமுயற்சி இருப்பதாக நான் கருதுகிறேன்.

கண்டி மாவட்டத்தில் மீள்வாக்களிப்பு இடம்பெறவுள்ள நிலையில், அந்த மாவட்ட மக்கள் மத்தியில் எனது செல்வாக்கை இல்லாமல் செய்து என்னைப் பின்னடையச் செய்வதற்கு அல்லது தோல்வியடைய வைப்பதற்கானதொரு சூழ்ச்சியாகவே இதனைக் கருதுகிறேன்.

அத்துடன் பதிவிகளுக்காக எமது கட்சி ஒருபோதும் சோரம் போகவும்மாட்டாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் வீரகேசரி வாரவெளியீட்டுக்குத் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், எம்மை ஏளனப்படுத்தவும், மலினப்படுத் தவுமே இவ்வாறான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. ஐக்கிய தேசியக் கட்சி ஊடாக எமக்குக் கிடைக்கக் கூடிய இரண்டு தேசியல் பட்டியல் எம்.பிக்களை இல்லாமல் செய்து ஐக்கிய தேசியக் கட்சியை எம்முடன் முரண்பட வைக்கும் சதியும் இந்த விவகாரத்தில் அடங்கியுள்ளது.

கட்சிக்குள் பிளவை ஏற்படுத்த முயற்சி

இதுவரை வெளியிடப்பட்ட எமது தேர்தல் வெற்றியைப் பொறுத்துக் கொள்ளாதவர்கள் எமது கட்சிக்குள் பிளவுகளை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். நாளை மறுதினம் நடை பெறவுள்ள மீள்வாக்களிப்பில் ஐக்கிய தேசியக் கட்சியினர் எனக்கு வாக்களிக்காமல் செய்வதற் கான ஒரு முயற்சியாகவுமே இதனைப் பார்க்கிறேன்.

பதவிகளுக்காகச் சோரம் போகமாட்டாம்

நாங்கள் இந்த நாட்டில் ஒரு பலம்வாய்ந்த கட்சியாகவுள்ளோம். சிறுபான்மை மக்களுக் காகவே நாம் தொடர்ந்தும் குரல் கொடுத்து வருகிறோம். வெறும் பதவிகளுக்காகச் சோரம்போக மாட்டோம். எவரும் கண்ணி யமான முறையிலேயே எம்முடன் பேசவேண்டும். நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு சிறுபான்மைச் சமூகங்களையும் அணைத்துக் கொண்டே சகல நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதற்குமான நோக்கத்தில் ஜனாதிபதி சிறுபான்மைக் கட்சிகளுடன் பேசவேண்டுமென்றால் அதனை நாம் வரவேற்போம்.

இதனை விடுத்து அவர்களது தேவைகளுக்காக மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொள்ளும் நோக்கில் எம்மை இணைத்துக் கொண்டு கறிவேப்பிலையாகப் பயன்படுத்த லாமென அவர்கள் நினைத்துக் கொள்ளக் கூடாது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு பலம் வாய்ந்த கட்சி. அது தனது சுய கௌரவத்தை ஒருபோதும் இழக்கமாட்டாது.

அரசியல் உயர்பீடம் நாளை அவசரமாகக் கூடுகிறது

குறிப்பிட்ட விவகாரம் தொடர்பிலும் எமது கட்சியின் எதிர்காலச் செயற்பாடுகள் குறித்தும்“ எமது கட்சியின் அரசியல்பீடம் நாளை கண்டி யில் அவசரமாகக் கூடுகிறது. தேசியப்பட்டியல் விவகாரம் தொடர்பிலும் இங்கு ஆராயப்படவுள்ளது.

தேசியப்பட்டியலில் இருவருக்கு இடம் வழங்கவே வேண்டும்

ஐக்கிய தேசியக் கட்சியுடன் நாம் செய்து கொண்ட எழுத்து மூல ஒப்பந்தத்தின்படி எமக்கு இரண்டு தேசியப்பட்டியல் எம்பிக்கள் வழங்கப்படவேண்டும். இதில் மீண்டும் ஒரு பேச்சுவார்தைக்கு இடமில்லை. அவர்கள் தந்தேயாக வேண்டும்.

இந்த விடயத்தில் அந்தக் கட்சி எம்மை கௌரவிக்க வேண்டும். ஐக்கிய தேசிய முன்னணியில் இடம்பெற்றுள்ள இரண்டாவது பலமான கட்சி நாம் என்பதனையும் அவர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும். இந்த நல்லுறவைப் பேணவேண்டுமாயின் அவர்கள் எமக்கு வழங்கிய வாக்குறுதியைச் சரியாக நிறைவேற்றவேண்டும்.

இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் நாம் பேசியுள்ளோம். மீண்டும் பேச்சுவார்தை நடத்துவோமென அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், அவ்வாறானதொரு பேச்சுவார்த் தைக்கு இடமில்லை. அவர்கள் கூறியபடி இரண்டு ஆசனங்களைத் தந்தேயாக வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

தீர்வு என்று வரும்போது அனைவருடனும் பேசவேண்டும்:டியூ

தமிழ் மக்களின் பிரச்சினை என்பது ஒரு தேசியப் பிரச்சினை. தமிழ் மக்களின் பிரச்சினை என்பதால் தமிழ்க் கட்சிகளுடன் கட்டாயம் பேசப்படவே வேண்டும். ஆனால், தீர்வு என்று வரும்போது அனைத்துக் கட்சிகளுடனும் பேசித்தான் தீர்வு காண வேண்டும்.

தமிழ் மக்கள் ஆதரிக்கும் கட்சிகளுடன் என்று மட்டுமல்லாமல் தமிழ் மக்களை ஆதரிக்கும் கட்சிகளுடனும் பேசப்பட வேண்டும். அந்த வகையில் எமது கட்சியையும் சேர்த்துக் கொள்ளலாம்.

எமது கட்சிப் பிரதிநிதிகள் தமிழ்பேசும் மக்களால் தெரிவு செய்யப்படாத பிரதிநிதிகளாக இருக்கலாம். ஆனால், தேசியப் பிரச்சினை என்று வரும்போது அனைவருடனும் பேசப்பட வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான டியூ குணசேகர கேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமிழ் மக்கள் ஆதரித்துள்ளனர் என்பதற்காக அவர்கள்தான் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என்று கூற முடியாது. நாங்கள் இந்த நாட்டிலுள்ள அனைத்து மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறோம்.

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியான நாம் இன,மத,பிரதேச வேறுபாடுகள் கடந்த நிலையிலேயே செயலாற்றுகிறோம்.

ஆகவே, தமிழ் மக்களின் பிரச்சினை விடயத்தில் அனைத்துக் கட்சிகளுடனும் பேசியே ஆக வேண்டும். இதனையே மீண்டும் வலியுறுத்துகிறேன் என்றும் அவர் தெரிவித்துடன் புலிகளோ பிரபாகரனோ பிரச்சினைகளை உருவாக்க வில்லை.

பிரச்சினைகள்தான் புலிகளையும் பிரபாகரனையும் உருவாக்கின. பிரச்சினை ஒன்று இருந்ததால்தான் இவ்வாறான அமைப்புகள் உருவாகின என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

கூட்டமைப்புடன் பேசி தீர்வுகாண அரசு முன்வர வேண்டும்-சுரேஷ்

வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் தமது தலைமை என்பது தமிழ் தேசியக்கூட்டமைப்பு என்பதை மிகவும் தெளிவாக கூறியுள்ளார்கள். அம்பாறை, மட்டக்களப்பு, திருமலை, வன்னி போன்ற இடங்களில் கூட்டமைப்பைத் தவிர வேறு தமிழ் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படவில்லை.

யாழ்ப்பாணத்திலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களே பெரும்பான்மையாக தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள். இந்த அடிப்படையில் தமிழ் மக்கள் தமது தலைமை சக்தியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பையே தெரிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினையை நியாயபூர்வமாக தீர்க்க விரும்பும் எவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்புடனேயே பேசவேண்டும். இதனை வடக்குகிழக்கு தமிழ் மக்கள் மிகத் தெளிவாகக் கூறியுள்ளார்கள். என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள சுரேஷ் பிரேமச்சந்திரன் கேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கியுள்ள செவ்வியில் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்றவர் களும் தமிழ் உறுப்பினர்களும் தமது கருத்து வேறுபாடுகளை தமிழினத்தின் நன்மை கருதி மறந்து ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென்றும் கேட்டுக் கொண்ட அவர், மேலும் தெரிவிக்கையில், தொடர்ந்தும் நாம் பிரிந்திருப்போமானால் தமிழினம் மென் மேலும் சிதறுண்டு போவதற்கே வழிவகுக்கும் என்று தெரிவித்த அவர், ஒற்றுமை பற்றி அனைத்துத் தரப்பினரும் சிந்திக்க வேண்டிய நிலையில் உள்ளோம் என்றும் அவர் கூறினார்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டமைப்பை தமிழ் மக்களின் சார்பில் தேர்தல் விஞ்ஞாபனம் ஒன்றை முன்வைத் திருந்தது. அந்த விஞ்ஞாபனத்துக்கு தமிழ் மக்கள் தமது அங்கீகாரத்தைத் தேர்தல் முடி வுகள் மூலம் வழங்கியுள்ளனர். இதனை அரசாங்கம் புரிந்து, உணர்ந்து கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி தமிழர் விவகாரத்துக்குத் தீர்வுகாண முன்வரவேண்டுமென்றும் வேண்டு கோள்விடுத்தார்.
மேலும் இங்கே தொடர்க...

ஐஸ்லாந்தின் எரிமலை வெடித்தமையால் ஐரோப்பிய நாடுகளுக்கான வானூர்தி சேவைகள் இரத்து-





ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணிக்கவுள்ள இலங்கையர்கள் அவர்கள் பயணிக்கவுள்ள வானூர்திகள் குறித்து அந்தந்த வானூர்தி நிறுவனங்களுடன் தொடர்புகொண்டு விசாரித்து அறிந்ததன் பின்னர் வானூர்தி நிலையத்திற்கு வருமாறு கோரப்பட்டுள்ளனர். இந்தக் கோரிக்கையை கட்டுநாயக்க சர்வதேச வானூர்தி நிலைய பிரதான பணிப்பாளர் எச்.எஸ்.ஹெட்டியாராய்ச்சி விடுத்துள்ளார். ஐஸ்லாந்தின் எரிமலை வெடித்தமையையடுத்து ஏற்பட்ட புகைமூட்டம் காரணமாக உலகெங்கிலும் சுமார் 17,000 வானூர்தி சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளுக்கான வானூர்திகள் சேவையில் ஈடுபடுமா இல்லையா என்பது குறித்து தீர்மானிக்க முடியாதிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. எனவே தாம் செல்லவுள்ள வானூர்தியின் முகவர் அல்லது உரிமை நிறுவனத்துடன் தொடர்புகொண்டு விசாரித்ததன் பின்னரே பயணிகள் வானூர்தி நிலையத்திற்கு வருமாறு பயணிகள் கோரப்பட்டுள்ளனர். இதனால் வானூர்தி நிலையத்தில் ஏற்படும் நெரிசலைத் தவிர்க்க முடியுமென வானூர்தி நிலைய பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை இதுவரையில் இலங்கையிலிருந்து ஆரம்பிக்கவிருந்த ஐரோப்பிய நாடுகளுக்கான ஆறு வானூர்தி சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

தமிழ்பேசும் மக்களுக்கு நியாயம் கிடைக்கும் பட்சத்தில் அரசிற்கான மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்திற்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு

தமிழ்பேசும் மக்களுக்கு நியாயம் கிடைக்கும் பட்சத்தில் அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்திற்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பொதுச்செயலர் நிசாம் காரியப்பர் கருத்துரைக்கையில், அரசியல் யாப்பில் திருத்தம் செய்து தமிழ்பேசும் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வைத் தருவதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறுவதற்காக அரசாங்கம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஆதரவைக் கோரும் பட்சத்தில் அதனை ஏற்றுக் கொள்வதற்கும் அதனைப்பற்றி கட்சியின் உயர்பீடம் கலந்தாலோசித்து தீர்மானம் எடுப்பதற்கும் தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...




புலிகளுக்கு ஆதரவாக செயற்படும் பிரிவினைவாத சக்திகள் குறித்து புதிய பாராளுமன்றம் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டுமென பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சர்வதேச சமூகத்தின் ஒரு தொகுதியினர் புலிகளுக்கு மீண்டும் உயிர்கொடுக்க முயற்சிப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு சட்டமா அதிபர் திணைக்களம் அரசாங்கத்திற்கு கூடுதல் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். புலி சார்பானவர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் பிரச்சார நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதே அரசின் பிரதான இலக்காகும். பிரிவினைவாதத்தை தூண்டும் சகல சக்திகளையும் இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அரசியல் மற்றும் ஏனைய விளைவுகளைக் கருத்திற் கொள்ளாது இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சகல தரப்பினருக்கு எதிராகவும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் எந்தவொரு தரப்பும் பிரிவினைவாத கொள்கைகளை முன்னெடுக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். கடந்தகால அரசுகள் கடுமையான நடவடிக்கைளை எடுத்திருந்தால் புலிகளின் போராட்டம் 30ஆண்டுகளுக்கு நீடித்திருக்காது. புலிகளுக்கு ஆதரவான சில புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் அரசுக்கெதிரான பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றன. எனவே பல்வேறு வழிகளில் காணப்படும் பிரிவினைவாத சக்திகளை இல்லாதொழிக்க புதிய அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

மும்பை தாக்குதல் விசாரணை: ஒரு வாரத்துக்கு ஒத்திவைத்தது பாகிஸ்தான் நீதிமன்றம்

மும்பை தாக்குதலை விசாரித்து வரும் ராவல்பிண்டி பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றம், வழக்கு விசாரணையை ஒரு வாரத்துக்கு ஒத்திவைத்தது.

நீதிபதி மாலிக் முகமது அக்ரம் விடுப்பில் சென்றுள்ளதால் வழக்கு விசாரணை ஒரு வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை மீண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தொடங்கும்.

வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டதற்கு நீதிபதி விடுப்பில் சென்றுள்ளதே காரணம்.

அவர் என்ன காரணத்திற்காக விடுப்பில் சென்றுள்ளார் என்பது குறித்து தெரியவில்லை என்று குற்றவாளிகள் தரப்பிலான வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

பாகிஸ்தானில் மும்பை தாக்குதல் வழக்கில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு தலைவர் ஜகியூர் ரஹ்மான் லக்வி உள்பட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவர்களிடம் ராவல்பிண்டி பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது.

பாதுகாப்பு நலன் கருதி குற்றவாளிகள் அடைக்கப்பட்டுள்ள அதிலா சிறைக்குள்ளேயே விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் இங்கே தொடர்க...

ஐஸ்லாந்து எரிமலை சீற்றம்: விமான நிறுவனங்களுக்கு ரூ. 4,227 கோடி நஷ்டம்




:

மெல்போர்ன், ஏப்.17: ஐஸ்லாந்தின் தெற்குப் பகுதியில் உள்ள எரிமலை சீற்றத்தால் வெளியேறும்சாம்பல் காரணமாக விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் விமான நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டம் 100 கோடி டாலரை (ரூ.4,227 கோடி) தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

எரிமலை சாம்பல் வெளியேற்றம் காரணமாக பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் 12-க்கும் அதிகமான விமான நிலையங்கள் முற்றிலுமாக மூடப்பட்டுள்ளன. மேலும் மூன்று நாள்களுக்கு இந்நிலை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவுக்கு இயக்கப்படும் பெரும்பாலான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் விமான நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு 100 கோடி டாலரைத் தாண்டும் என இத்துறையைச் சார்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

விமான சேவை ரத்து செய்யப்பட்டதால் சுமார் 60 லட்சம் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலோர் ஐரோப்பியநாடுகளில் உள்ள விமான நிலையங்களில் பரிதவிக்கின்றனர். டெல்டா ஏர்லைன்ஸ் இன்கார்ப்பரேஷன், பிரிட்டிஷ் ஏர்வேஸ், குவாண்டாஸ் ஏர்வேஸ் ஆகிய நிறுவனங்கள் விமான சேவையை ரத்து செய்த நிறுவனங்களில் குறிப்பிடத்தக்கவை.

ஐஸ்லாந்தில் உள்ள எரிமலையிலிருந்து வெளியாகும் சாம்பல்5,500 அடி உயரம் வரை மேலே எழும்பியதால் வான் வெளியில் இது பரவியுள்ளது. இதனால் விமானங்கள் இப்பகுதியில் பறக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. பிரிட்டன் வான்பரப்பு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1 மணி வரை மூடப்படுவதாக அந்நாடு அறிவித்துள்ளது.

ஜெர்மனியில் பிராங்பர்ட் உள்பட 7 விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. குவாண்டாஸ் நிறுவனம் தனது 4 விமான சேவைகளை ரத்து செய்துள்ளது. இதேபோல சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் 8 விமானங்களை ரத்து செய்துள்ளது. ஏர் சீனா லிமிடெட், நிப்பான் ஏர்வேஸ் நிறுவனம் உள்ளிட்டவையும் சேவையை ரத்து செய்துள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

ஈரான் பிரச்னைக்கு பொருளாதாரத் தடை தீர்வல்ல: "பிரிக்' கருத்து



ஈரான் மீது புதிதாக பொருளாதார தடை விதிப்பது பிரச்னைக்குத் தீர்வாக அமையாது. இதை தூதரக நடவடிக்கைகள் மூலம்தான் தீர்க்க முடியும் என்றுபிரேஸில், ரஷியா, இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் தெரிவித்துள்ளன.

பிரேஸில் தலைநகர் பிரெஸிலியாவில் நடைபெற்ற இரண்டாவது "பிரிக்' நாடுகளின் கூட்டத்தில் இந்த கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புக் கவுன்சிலில் ஈரான் மீது தடை விதிக்கலாம் என்ற தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட உள்ளது. இந்நிலையில் "பிரிக்' நாடுகளின் கூட்டமைப்பில் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஈரான் விவகாரம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங், ரஷிய அதிபர் டிமித்ரி மெத்வதேவ், சீன அதிபர் ஹூ ஜிண்டாவோ, பிரேஸில் அதிபர் லூயி டி சில்வா ஆகியோரிடம் இந்த விஷயம் குறித்து விவாதித்தார். இந்த விஷயத்தில் நான்கு நாடுகளின் தலைவர்களின்கருத்துகளும் ஒரே மாதிரியாக இருந்தது.

அனைத்துத் தலைவர்களுமே, பொருளாதார தடை மட்டுமே இப்பிரச்னைக்குத் தீர்வாக அமையாது என்று தெரிவித்தனர். இத்தகைய பொருளாதார தடை விதிப்பால் அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்படுவர். அதேசமயம் வசதி படைத்தவர்கள் மத்தியில் இந்த தடைவிதிப்பு எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

வெளிப்படையான, அதேசமயம் திறந்த மனதுடன் பேச்சு நடத்தப்பட வேண்டும் என்று வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா கருத்து தெரிவித்துள்ளார்.

ஈரான் மீது தடை விதிப்பது தொடர்பாக இந்தியா தனது நிலைப்பாட்டை ஏற்கெனவே தெரிவித்து விட்டதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். அணுசக்தியை ஆக்கபூர்வ பணிகளுக்கு ஈரான் பயன்படுத்துவதற்கு முழு உரிமை உள்ளது என்று மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது.

அணு சக்தியை ஆக்கபூர்வ பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்துவதாக ஈரான் தெரிவித்து வருகிறது. ஆனால் உலக நாடுகளோ, அணுகுண்டு தயாரிப்புக்குத்தான் இதை ஈரான் பயன்படுத்துகிறது என சந்தேகிக்கின்றன. பொருளாதார தடை விதிப்பதன் மூலம் அந்நாடு அணுகுண்டு தயாரிப்பதை தடுத்து நிறுத்த முடியும் என உலக நாடுகள் கருதுகின்றன.

ஆனால் புதிய பொருளாதார தடை விதிப்பை இந்தியா ஆதரிக்காது என்று அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம் பிரதமர் மன்மோகன் சிங் தெளிவாகக் கூறிவிட்டார். புதிதாக விதிக்கப்படும் தடையில், நிதி புழக்கம் கட்டுப்படுத்தப்படுமே தவிர, பொருள்கள் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட மாட்டாது என்றே தோன்றுகிறது.

ஈரான் மீது பொருளாதார தடை விதிப்பது தொடர்பான அறிக்கையை ஐக்கியநாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சில் கொண்டு வந்தது. இது தொடர்பான அறிக்கை தற்போது சுற்றுக்கு விடப்பட்டுள்ளது. பாதுகாப்புக் கவுன்சிலில் உள்ள 5 நிரந்தரஉறுப்பு
மேலும் இங்கே தொடர்க...

பெங்களூர் கிரிக்கெட் மைதானம் அருகே 2 இடங்களில் குண்டுவெடிப்பு






குண்டு வெடித்ததில் சேதமடைந்த பெங்களூர் சின்னச்சாமி கிரிக்கெட் மைதானசுற்றுச்சுவர்.
பெங்களூர், ஏப்.17: ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்ற பெங்களூர் சின்னச்சாமி கிரிக்கெட் மைதானத்தின் சுற்றுச்சுவர் மற்றும் மைதானத்தை அடுத்த போலீஸ் வயர்லெஸ் தலைமை அலுவலகம் அருகே சனிக்கிழமை வைக்கப்பட்டிருந்த 2 குண்டுகள் வெடித்ததில் போலீஸ்காரர்கள் உள்பட 15 பேர் காயமடைந்தனர்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் பெங்களூர் சின்னச்சாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. சனிக்கிழமை பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கும் மும்பை இந்தியன் அணிக்குமிடையே போட்டி நடைபெறவிருந்தது. போட்டி மாலை 4 மணிக்கு துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி கிரிக்கெட் மைதானத்தின் அனைத்து வாசல் வழியாகவும் ரசிகர்கள் பிற்பகல் 2 மணி முதலே மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். போலீஸக்ஷ்ரும், தனியார் பாதுகாப்பு வீரர்களும் இப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் அனில் கும்ப்ளே சர்க்கிள் மற்றும் 12-வது கேட் வழியாக செல்ல ஏராளமான ரசிகர்கள் கூடியிருந்தனர். அவர்களது டிக்கெட்டை பரிசோதித்து அவர்களை போலீஸக்ஷ்ர் உள்ளே அனுப்பிக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் பிற்பகல் 3.15 மணி அளவில் 12-வது கேட் பகுதியில் திடீரென பயங்கர சப்தத்துடன் வெடிகுண்டு வெடித்து சிதறியது. இதனால் ரசிகர்களும், பாதுகாப்புக்கு நின்ற போலீஸக்ஷ்ரும் கூச்சலிட்டபடி சிதறி ஓடினர்.

குண்டுவெடிப்பு சத்தம் கேட்டதும் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. கிரிக்கெட் மைதானத்துக்கு உள்ளேயும் வெளியேயும் நின்றிருந்த போலீஸக்ஷ்ர் உடனடியாக சப்தம் கேட்ட பகுதிக்கு ஓடிவந்தனர். இதற்குள் மற்றொரு பகுதியில் குண்டு வெடித்தது. அந்த குண்டு அனில் கும்ப்ளே சர்க்கிள் அருகேயுள்ள கிரிக்கெட் மைதானத்தை ஒட்டியுள்ள போலீஸ் வயர்லெஸ் பிரிவு தலைமை அலுவலகம் அருகே செடிகளுக்கு இடையில் வெடித்து சிதறியது.

கேட் அருகே வெடித்த குண்டால் பலர் காயமடைந்து வலியால் துடித்துக் கொண்டிருந்தனர். உடனடியாக தயாராக இருந்த தீயணைப்புப் படை வீரர்களும், போலீஸக்ஷ்ரும் அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அனைவரும் மல்லையா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் செக்யூரிட்டி காவலர் ஒருவரும், போலீஸ்காரர் ஒருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

இந்த குண்டு கிரிக்கெட் மைதானத்துக்கு வெளியே உள்ள சுவற்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இந்த குண்டு வெடித்ததால் சுவர் வெடித்து நாலாபுறமும் சிதறியது. சம்பவ இடத்துக்கு துப்பறியும் போலீஸ் நாய் கொண்டுவரப்பட்டது. தடய அறிவியல் நிபுணர்களும் அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர்.

வெடித்த குண்டு அதிக சக்தி இல்லாத குண்டாக இருந்ததால் பெரிய அளவில் சேதம் ஏதும் ஏற்படவில்லை. அதுபோல் போலீஸ் வயர்லெஸ் பிரிவு அருகே வெடித்த குண்டால் யாரும் காயம் அடையவில்லை.

இச்சம்பவத்தால் கிரிக்கெட் போட்டி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. குண்டு வெடித்தபோது கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் டிரஸ்சிங் அறையில் இருந்தனர். குண்டு வெடித்ததில் கிரிக்கெட் மைதானத்தின் சுவர் பலத்த சேதமடைந்தது.

குண்டுகள் வெடிப்பால் கிரிக்கெட் மைதானம் முழுவதும் பெரும் பரபரபப்பு ஏற்பட்டது. போலீஸக்ஷ்ர் தலையிட்டு அனைவரையும் அமைதிப்படுத்தினர்.

வெடிக்காத குண்டு கண்டெடுப்பு

8-வது கேட்டில் வெடிக்காத குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு செயல் இழக்கச் செய்யப்பட்டது. மைதானத்தின் நாலாபுறமும் வேறு குண்டுகள் வைக்கப்பட்டுள்ளனவா என்று சோதனை நடத்த போலீஸக்ஷ்ர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் மைதானத்தைச் சுற்றி சோதனை நடத்தியபோது 8-வது கேட் அருகே வெடிகுண்டு போன்ற பொருள் கிடப்பதை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து அதை செயல் இழக்கச் செய்யும் முயற்சியில் போலீஸக்ஷ்ர் ஈடுபட்டனர். அந்த பகுதியில் கிடந்த பார்சலை மெதுவாக எடுத்து அதை செயல் இழக்கச் செய்தனர்.

8-வது கேட்டில் கண்டெடுக்கப்பட்டது டைமர் டிவைஸ் என்று தெரியவந்தது. மேலும் குண்டு வெடித்த 12-வது கேட் அருகே கிடந்த வயர்கள், நட்டு மற்றும் போல்டுகளை ராணுவ வீரர்கள் கண்டெடுத்தனர். அனில் கும்ப்ளே சர்க்கிள் பகுதியில் இருந்தும் வயர்கள், டைமர் கண்டெடுக்கப்பட்டது. இதனால் மைதானத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வெடிகுண்டு வைக்க திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து நகர காவல் துறை ஆணையர் சங்கர் பிதரியிடம் கேட்டபோது அவர் கூறியது: 8-வது கேட்டில் மீட்கப்பட்ட பொருள் வெடிகுண்டா என்று இன்னும் உறுதி செய்யப்படவில்லை. போலீஸக்ஷ்ர் சரியாக செயல்படாததால் இந்தச் சம்பவம்
மேலும் இங்கே தொடர்க...

இந்தியாவுக்குள் தீவிரவாதிகள் ஊடுருவ பாக். உளவுத்துறை உதவி; ஐ.நா. விசாரணைக்குழு குற்றச்சாட்டு




பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் படுகொலை குறித்து ஹெரால்டோ முனோஷ் தலைமையிலான ஐ.நா, குழு விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில், பாகிஸ்தானின் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ. லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்துக்கொண்டு தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறது. அந்த தீவிரவாதிகள் காஷ்மீர் உள்ளிட்ட பல பகுதிகள் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ உதவி வருகிறது.

கடந்த 1996-ம் ஆண்டு ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்ற பாகிஸ்தானின் ராணுவம் உதவி செய்தது. அதுபோன்ற நடவடிக்கையை தான் கடந்த 1989 முதல் இந்தியாவிலும் கடைபிடித்து வருகிறது.

அதன் அடிப்படையில் தான் 1989-ம் ஆண்டில் இருந்து காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு அவை உதவி செய்து வருகிறது. அது இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவற்றில் லஷ்கர்- இ-தொய்பா ஈடுபட்டுள்ளது. இந்த தீவிரவாத இயக்கம் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.வுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

மேற்கண்ட தகவல்கள் ஐ.நா. விசாரணை குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...