கொழும்பு நாரஹென்பிட்டி திம்பிரிகஸ்யாய வீதியிலுள்ள இரவு விடுதிப்பகுதியில் இன்று அதிகாலை 3மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். குறித்த பிரதேசத்தில் இரு குழுக்களிடையே இடம்பெற்ற மோதலின்போதே இந்த துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றதாக பொலீஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஸ்ட பிரதிப் பொலீஸ் மாஅதிபர் நிமால் மெதிவக்க தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் பொலீஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை நாரஹென்பிட்டிய பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர். குறித்த இருவரும் இரவு விடுதியிலிருந்து வெளியேறி மோட்டார் சைக்கிளில் புறப்படத் தயாரானபோது மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் இவர்கள்மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
7 நவம்பர், 2009
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சிரேஸ்ட உறுப்பினரும், கழகத்தின் பிரான்ஸ் கிளையின் அமைப்பாளருமான தோழர்.பிரபா அவர்கள், 30.10.2009 அன்று அகால மரணமானார் என்பதை ஆழ்ந்த துயரத்துடன் அறியத் தருகின்றோம். அன்னார் ராஐமனோகரன் பரமேஸ்வரி ஆகியோரின் புதல்வரும். யாழ்ப்பாணம் வடமராட்சி பொலிகண்டியை பிறப்பிடமாகவும், பிரான்ஸை வாழ்விடமாகவும் கொண்ட இராஜமனோகரன் பிரபாகரன் என்கிற இயற்பெயரைக் கொண்ட தோழர், நண்பர்களாலும், கழகத் தோழர்களாலும் பிரபா என அன்புடன் அழைக்கப்பட்டு வந்தார். தமிழ் மக்களுக்கான விடுதலைப் போராட்டத்தில் 84களில் தன்னை இணைத்துக் கொண்ட தோழர் பிரபா அவர்கள், கழகத்தில் பல்வேறு பயிற்சிகளையும் பெற்றதுடன், கழகம் முன்னெடுத்த மக்கள் பணிகளில் மிகவும் அர்ப்பணிப்புடன் களத்தில் 1987ம் ஆண்டு வரை செயலாற்றி வந்தார்.
ஒரு சிறந்த மக்கள் போராளியாகவும், அரசியல் செயற்பாட்டாளராகவும், மனிதாபிமானம் மிக்கவராகவும் பணியாற்றி வந்த தோழர் பிரபா, தமிழ் மக்களின் விடியலில் அதீத அக்கறை கொண்டிருந்தார். இந்திய - இலங்கை ஒப்பந்தத்தையடுத்து 1987ல் புலம்பெயர்ந்த தோழர் பிரபா, சுவிஸ் நாட்டில் புளொட் அமைப்பின் சுவிஸ் கிளை உறுப்பினராக செயற்பட்டு வந்தார். சுவிஸ் கிளையில் உறுப்பினராக செயற்பட்ட வேளைகளில் பல்வேறுபட்ட நெருக்குவாரங்கள், உயிர் அச்சுறுத்தல்கள், இடையூறுகளை எதிர்கொண்ட போதிலும் அவற்றை பொருட்படுத்தாது மனந்தளராது துணிச்சலுடன் கழக வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வந்தார்.
பின்பு பிரான்ஸ் நாட்டிற்குச் வந்து இங்கு வசித்து வந்த பிரபா, கழகத்தின் பிரான்ஸ் கிளையின் செயற்பாட்டுக்கான பொறுப்பினை ஏற்றுக் கொண்டு பிரான்ஸ் கிளையின் அமைப்பாளராக தனது இறுதி மூச்சுவரை செயற்பட்டு வந்தார். புலம்பெயர் நாடுகளில் வசித்து வரும் கழக அங்கத்தவர்களையும், ஆதரவாளர்களையும் ஒருங்கிணைக்கும் பாரிய பொறுப்பினை ஏற்று அதனை செவ்வனே செய்து வந்ததுடன், அண்மையில் போரின் காரணமாக இடம்பெயர்ந்த மக்களின் அவலங்களை வெளிக்கொணர்ந்து, புலம்பெயர் தமிழ் சமூகத்தின் மனசாட்சியை தட்டியெழுப்பி, இடம்பெயர்ந்த மக்களுக்கான உதவிகள் சென்றடைவதற்கான வேலைத் திட்டங்களிலும், அவர்களுக்கான உதவிகளைப் பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கைகளிலும் முனைப்புடன் ஈடுபட்டிருந்தார்.
இவருடைய திடீர் மறைவானது கழகத்திற்கும் அல்லல்ப்பட்டு நிற்கும் மக்களுக்கும் ஓர் பேரிழப்பாகும். அன்னாரின் இழப்பினால் துயருறும் குடும்பத்தினருக்கு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாம் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்ளுகின்ற அதேவேளை, அவர் விட்டுச் சென்ற மக்கள் பணியை தொடர்ந்து முன்னெடுப்போம் என உறுதிபூண்டு எமது இதய அஞ்சலிகளை சமர்ப்பிக்கின்றோம்.
பார்வைக்கு வைக்கும் இடம்: 12.11.2009 வியாழக்கிழமை அன்று காலை 11.00 - 11.30
Institut Médico Légal de Paris 2, Place Mazas, 75012 PARIS, Métro : Quai de la Râpée
தகனம் செய்யுமிடம் : 12.11.2009 வியாழக்கிழமை அன்று பிற்பகல் 14.10 - 15.10
Place Gambetta 71, rue des Rondetta, 75020 PARIS, Métro : Gambetta
தெடர்புகளிற்கு: சகோதரன்.. (0033) 06 66 28 96 03 (0033) 06 66 28 96 03 , தோழர்கள்.. (0033) 06 28 70 48 59 (0033) 06 28 70 48 59 // (0033) 06 50 27 24 72 (0033) 06 50 27 24 72
-ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)
உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்
தகவல்.. ஊடகப்பிரிவு -புளொட் பிரான்ஸ் கிளை
கிளிநொச்சி மாவட்டத்தின் நாச்சிக்குடா, முழங்காவில், ஜெயபுரம் வடக்கு, ஜெயபுரம் தெற்கு ஆகிய பிரதேசங்களில் இவர்கள் மீளக்குடியமர்த்தப்படுவர்.
கிளிநொச்சி மாவட்டத்தின் இடைத்தங்கல் முகாம்களில் இவர்கள் தங்க வைக்கப்பட்டு, கண்ணிவெடிகள் பற்றிய விழிப்புணர்வு அறிவூட்டப்பட்டப் பின்னர் இவர்கள் அவர்களது சொந்தக் காணிகளில் குடியேறுவதற்கு அனுமதிக்கப்படுவர் என்றும் கிளிநொச்சி மாவட்ட பதில் அரச அதிபர் திருமதி எமில்டா சுகுமார் தெரிவித்தார்.
விடுதலைப்புலிகள் நிலைகொண்டிருந்த பல இடங்களிலும் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட இடங்களிலேயே இடம்பெயர்ந்த மக்கள் மீள் குடியேற்றம் செய்யப்பட்டு வருவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
எனினும் மீள்குடியேறும் மக்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, அவர்களுக்குக் கண்ணிவெடி அபாயம் பற்றி அறிவூட்ட வேண்டியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொட்டும் மழையின் மத்தியிலும் திட்டமிட்டபடி கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
முன்னதாக நேற்று 6 ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் இலங்கை அகதிகள் 78 பேருடன் தரித்திருக்கும் இந்த கப்பல் தமது கடற்பரப்பில் இருந்து வெளியேற வேண்டும் என இந்தோனேஷியா உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் முறுகலைத் தீர்க்க இந்தோனேஷியாவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகின்றன.
இலங்கையிலிருந்து கடந்த மாத நடுப்பகுதியில் அவுஸ்திரேலியாவுக்குச் சென்ற இந்தக் கப்பல் அனர்த்தத்திற்கு உள்ளாகவிருந்த வேளையில் இந்தோனேஷிய கடற்பரப்பில் வைத்து அவுஸ்திரேலிய கடற்படையினர் காப்பாற்றினர்.
இதனையடுத்து இந்தக் கப்பலில் உள்ளோரை ஆஸி. பொறுப்பேற்பதா? அல்லது இந்தோனேஷியா பொறுப்பேற்பதா?- என்ற முறுகல் தொடர்ந்து வருகிறது.
இது அவுஸ்திரேலிய கடற்படையினரே காப்பாற்றினர் என்பதால் அதனை அவுஸ்திரேலியாவே பொறுப்பேற்க வேண்டும் என இந்தோனேஷியா கூறி வருகிறது.
எனினும் இந்தோனேஷிய கடற்பரப்பில் வைத்துக் காப்பாற்றப்பட்டமையால், இந்தோனேஷியாவை நோக்கிச் செல்லுமாறு இந்த கப்பலுக்கு அவுஸ்திரேலியா அண்மையில் உத்தரவிட்டது.
இதன் அடிப்படையிலேயே இந்தக் கப்பல் தற்போது இந்தோனேஷியக் கடற்பரப்பில் தரித்து நிற்கிறது.
இலங்கையில் அகதிகளை அவர்களது விருப்பத்தின் பேரில் மீளக் குடியமர்த்துவதற்கும் சட்ட ஆட்சியை பலப்படுத்துவதற்கும் பிரான்ஸின் உதவியை வழங்க இந்த தகவல்களும் யோசனைகளும் பயன்படும் என்று ஹுச்னர் தெரிவித்தார். வெளிநாட்டமைச்சர் ஹுச்னர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஆசியாவிலேயே மிக நீண்டகாலமாக இடம்பெற்று வந்த யுத்தம் முடிவடைந்து 6 மாதங்களின் பின்னர் இலங்கை மக்கள் இன்னமும் கொடிய யுத்தத்தின் விளைவுகளை அனுபவித்த வண்ணம் இருக்கின்றனர். பருவப்பெயர்ச்சி மழைகாலம் நெருங்கும் இவ்வேளையில், இடம்பெயர்ந்து முகாம்களில் வைக்கப்பட்டுள்ள மக்களை அவர்களது சொந்த வீடுகளில் குடியமர்த்தும் வேலைகளை துரிதப்படுத்துவது என்ற இலங்கை அதிகாரிகளின் தீர்மானத்தை நாம் வரவேற்கிறோம். பல்லாயிரக்கணக்கான மக்கள் இன்னமும் முகாம்களில் ஆயுதப் படைகளின் கட்டுப்பாட்டில் கைதிகளாக அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.
முகாம்களின் சுகாதார நிலைமை கவலையளிப்பதாக உள்ளது. மனிதநேய ஆர்வலர்கள் முகாம்களுக்கு விஜயம் செய்ய முடியாதிருக்கிறது. இதனால்தான் எமது மனித உரிமைகள் தூதுவர் பின்கொயிஸ் சிமரேயை இலங்கைக்கு சென்று அங்குள்ள நிலைமை பற்றிய தகவல்களை சேகரித்து வருமாறு கேட்டுள்ளேன். சொந்த வீடுகளுக்கு திரும்ப விரும்பும் சகல அகதிகளையும் மீளக் குடியமர்த்துவது என்ற இலங்கை அதிகாரிகளின் வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்றுவது அவசியம் என்று பிரெஞ்சு அமைச்சர் மேலும் வலியுறுத்தியுள்ளார். முகாம்கள் தற்போது நிரந்தரமாக அகற்றப்பட வேண்டும் என்றும் மனிதநேய அமைப்புக்கள் எதுவித கட்டுப்பாடும் இன்றி இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவியையும் பாதுகாப்பையும் அளிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
யுத்தத்தில் சம்பந்தப்பட்ட சகல தரப்பினரும் மேற்கொண்ட சர்வதேச மனிதநேய மீறல் சம்பவங்கள் குறித்து சுயாதீனமாகவும் பாரபட்சமின்றியும் விசாரணை செய்யப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், தேசிய நல்லிணக்கத்தை நிலைநாட்டுவதற்கான அரசியல் நடைமுறைகள் தினமும் இடம்பெறுவதை உறுதிப்படுத்தும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டுமென அவர் தெரிவித்தார். யுத்தம் முடிவடைந்து பல மாதங்களின் பின்னர், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சகல மக்களினதும் இழப்புக்களை ஈடுசெய்யம் வகையில் அவர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்றும் நாட்டில் நல்லிணக்கத்தையும் புனர்நிர்மாண பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் ஹுச்னர் கேட்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு .உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் மேலும் கூறுகையில், அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதை எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது. யுத்தம் முடிந்துள்ள நிலையில் பிரேரணையை நீடிப்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது.மக்கள் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் உள்ளூர், சர்வதேச சட்டதிட்டங்களுக்கு முரணாகவே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை உறவினர்களோ, ஊடகவியலாளர்களோ, அன்றேல் மக்கள் பிரதிநிதிகளோ பார்க்க இயலாது. அவர்களை பார்வையிடுவதற்கான அனுமதியும் வழங்கப்படுவதில்லை.இடம்பெயர்ந்து வாழ்பவர்களுடன் எந்த தொடர்பையும் ஏற்படுத்த முடியாத நிலைமையே இருக்கின்றது. இவை உள்நாட்டு, வெளிநாட்டு சட்ட திட்டங்களுக்கு முரணாகவே இருக்கின்றன. அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என அமெரிக்கா, இந்தியா உட்பட சர்வதேச சமூகம் கோரி நிற்கின்றது.
அத்துடன், ஐ.நா.வும் ஏகமனதாக கேட்டுக்கொண்டுள்ளது. முகாமில் இருக்கின்ற மக்கள் தங்களுடைய சொந்த தீ“ர்மானங்களை தாங்களே எடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும்.உறவினர்களுடன் சேர வேண்டுமா? நாண்பர்களுடன் சேர வேண்டுமா? என்பதை அவர்களே முடிவு எடுக்க வேண்டும். இடைத்தங்கல் முகாம்களில் இருந்து கொண்டே உடைந்த தமது வீடுகளை திருத்திக்கொண்டு செல்வதற்கான அனுமதியை வழங்கலாம். அவர்கள் அங்கு மீண்டும் தொழில் வாய்ப்புகளை ஆரம்பிக்கக்கூடும். அந்த உரிமை மக்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது. சாதாரண மக்கள் அனுபவிக்கும் உரிமை அந்த மக்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது.
இன்னும் சில மாதங்களுக்குள் அந்த மக்கள் தமது வாக்குரிமையை பயன்படுத்தக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது. வாக்குரிமையானது இறைமையின் ஓர் அங்கமாகும்.வவுனியாவிலுள்ள முகாம்களை விடவும் இடைத்தங்கல் முகாம்களின் நிலையானது மிகமோசமானது என்பதனால் மக்களை தடுத்து வைத்திருப்பது உகந்தது அல்ல. சாதாரண மக்கள் அனுபவிக்கும் உரிமைகளை அந்த மக்களும் அனுபவிக்க வேண்டும். மிருகங்களை போல தடுத்து வைக்கப்பட்டிருப்பதனை ஏற்கமுடியாது. இதுவே சர்வதேசத்தின் முறைப்பாடாக இருக்கின்றது.இடம்பெயர்ந்தவர்களுக்கு 5000 ரூபாவும் உணவுப் பண்டங்களும் பொருட்களும் வழங்கப்படுகின்றன. ஏனைய உதவிகள் வழங்கப்படுவதில்லை. கௌரவமாக வாழ்ந்தவர்கள் இன்று அகதிகளாக்கப்பட்டுள்ளனர். உழைக்கும் மார்க்கத்தை இழந்துவிட்டனர் என்பதானல் மார்க்கங்களை ஏற்படுத்தி கொடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். சர்வதேச தொண்டு நிறுவனங்களை சு“தந்திரமாக அப்பகுதிகளுக்கு செல்வதற்கு அனுமதியளிக்க வேண்டும். அவர்களின் உதவிகளையும் பெற்றுக்கொள்ள வேண்டும்.அவர்கள் செல்வதை தடுக்க வேண்டாம். இந்தியா உட்பட சர்வதேச நாடுகள் உதவிகளை வழங்கியுள்ளன. பல நாடுகள் வழங்குவதற்கு முன்வந்துள்ளன. இவர்கள் அரசாங்கத்திற்கு உதவுவதற்கு முன்வரவில்லை, மக்களுக்கே வழங்குவதற்கு முன்வந்துள்ளனர். கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களின் சில பகுதிகளில் எந்த வேலைகளும் ஆரம்பிக்கப்படவில்லை என்று அறிகின்றேன். அவற்றை செய்யாவிட்டால் உதவிகளே கிடைக்காமல் போகும். ஜனாதிபதி 50 வீதம் வாக்குகளைப்பெற்று ஆட்சியிலிருக்கின்றார். கூட்டமைப்பில் 22 உறுப்பினர்கள் இருக்கின்றோம். நாம் கூறுவதை அரசாங்கம் ஏற்றுக்கொள்வதில்லை.இங்கு நாகரிகமான ஆட்சியோ, நல்லாட்சியோ, ஜனநாயக ஆட்சியோ இடம்பெறவில்லை என்பதனாலும் யுத்தம் நிறைவடைந்து விட்டமையினாலும் அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதனை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.
இதேவேளை, 10 ஆயிரம் பேர் முதல் 15ஆயிரம் பேர்வரை விசேட தடுப்பு முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் எங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியாமல் உறவினர்கள் தவிக்கின்றன. எனவே, விசேட தடுப்பு முகாம்களில் இருப்பவர்கள் தொடர்பான விபரங்களை அரசாங்கம் வெளியிட வேண்டும். அவ்வாறு செய்யாவிடின் அது அரசாங்கம் செய்யும் பாரிய குற்றமாகும்
. அமெரிக்க அறிக்கை குறித்து ஆராய ஐவர்கொண்ட நிபுணர்கள் குழு ஜனாதிபதியினால் நியமனம் - மஹிந்த சமரசிங்க | |
இராஜாங்க திணைக்களத்தினால் அண்மையில் வெளியிடப்பட்ட இலங்கை தொடர்பான அறிக்கை குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐவர் கொண்ட நிபுணர்கள் குழு ஒன்றை நியமித்துள்ளார். இந்த குழு எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் தனது ஆய்வு அறிக்கையை ஜனாதிபதியிடம் ஒப்படைக்கவேண்டும் என்று காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை பகல் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் மேற்கண்ட விடயங்களை குறிப்பிட்டார். அமைச்சர் அதில் மேலும் கூறியதாவது இலங்கையில் யுத்தக் குற்றம் இடம்பெற்றுள்ளதுபோன்றதொரு தொனியில் அண்மையில் அமெரிக்க ராஜாங்க திணைக்கத்திளத்தினால் முக்கிய அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அந்த அறிக்கை அமெரிக்க காங்கிரஸுக்கும் சமர்ப்பிக்கப்பட்டது. இது இலங்கையை பொறுத்தவரை பாரிய சவாலாக அமைந்தது. எனவே அதனை நாங்கள் நிராகரிப்பதுடன் நின்றுவிடாமல் இது தொடர்பில் ஆராய நிபுணர்கள் குழு ஒன்றை நியமிக்க ஜனாதிபதி தீர்மானித்தார். அந்த வகையில் ஐவர் கொண்ட நிபுணர்கள் குழு இன்று முதல் (நேற்று) நியமிக்கப்பட்டுள்ளது. அதன் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி டி.எஸ். விஜேசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். ஏனைய உறுப்பினர்களாக சட்டத்தரணி நிஹால் ஜயமான்ன முன்னாள் சட்டமா அதிபர் சி.ஆர்.சி. சில்வா சட்டத்தரணி திருமதி மனோ ராமநாதன் மற்றும் ஜெசீமா இஸ்மாயில் ஆகியோர் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் தனது ஆய்வு அறிக்கையை ஜனாதிபதிக்கு ஒப்படைக்கவேண்டும் என்று காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசாங்கத்தின் அனைத்து அமைச்சுக்கள் திணைக்களங்கள் உள்ளிட்ட அலுவலகங்கள் மற்றும் பொலிஸார் முப்படையினர் இந்த நிபுணர்கள் குழுவுக்கு ஒத்துழைப்பும் ஆதரவும் வழங்கவேண்டும். அமெரிக்காவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை குறித்து ஆராய்வதுடன் குற்றச்சாட்டுக்களின் தன்மை குறித்து ஆய்வு செய்வதுமே இவர்களின் பணியாகும். நாங்கள் நிபுணர்கள் குழு தொடர்பான அறிவிப்பை செய்ததும் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் அதனை வரவேற்றார். மேலும் பல சர்வதேச அமைப்புக்கள் இதனை வரவேற்றுள்ளன. நாங்கள் எமது அர்ப்பணிப்பை செயற்பாட்டு ரீதியாக வெளியிட்டுள்ளோம். இதேவேளை ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் நிதியமைச்சருமான கே.என். சொக்சி அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் பாராட்டி பாராளுமன்றத்தில் பேசியுள்ளார். உண்மையில் முதலில் நான் இதனை கண்டு ஆச்சரியமடைந்தேன். அவரின் கூற்றை அரசாங்கம் வரவேற்கின்றது. அவர் ஒரு அங்கீகரிக்கப்பட்ட திறமையுள்ள கதாபாத்திரமாக திகழ்கின்றார். நான் அரசியலுக்கு வந்த புதிதில் எனக்கு அதிகமான ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கியிருந்தார் |
இடைக்கால கணக்கறிக்கை சமர்ப்பித்தது நியாயமானது
நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதில் அவசரம் கூடாது
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்க வேண்டும் என்பதில் அவசரம் காட்டக் கூடாது. அந்த பதவிக்கான அதிகாரங்களை மீள் பரிசீலனை செய்து தேவையேற்படும் இடங்களில் மாற்றங்களை மேற்கொள்வதே உசிதமானது ஆனால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை தொடரவேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே. என். சொக்ஸி நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் கூறினார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற இடைக்கால கணக்கறிக்கை விவாதத்தில் பேசியபோதே அவர் இவ்வாறு கூறினார். இடைக்கால கணக்கறிக்கையை சமர்ப்பித்தமை ஜனநாயகமானதும் முறையானதுமான ஒரு நடவடிக்கையாகும் என்று குறிப்பிட்ட சொக்ஸி, இவ்வாறு இடைக்கால கணக்கறிக்கையை சமர்ப்பித்ததன்மூலம் அடுத்த பொதுத் தேர்தலில் தெரிவாகும் புதிய அரசாங்கம் தனது நிதித் திட்டங்களை சுயமாகவே மேற்கொள்ள வசதி கிடைக்கும் என்றும் கூறினார்.
வரவு-செலவு திட்டமொன்றை சம ர்ப்பித்து புதிய அரசாங்கமொன்றுக்கு கட்டுப்பாடுகளை ஏற்படுத்துவது சரி யானதல்ல என்று கருதுவதாக அவர் மேலும் கூறினார்.
அரசாங்கமொன்று ஒவ்வொரு வருடத்தின் இறுதியிலும் அடுத்த வருடம் முழுவதுக்குமான நிதி ஆலோசனைகளை சமர்ப்பிப்பது சாதாரண நடைமுறையாகும். இது தான் வரவு-செலவு திட்டமாகும் என்றும் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் சொக்ஸி கூறினார்.
500 ச. கி. மீற்றரில் 1.5 மில். கண்ணிவெடிகள்; 40 ச. கி. மீற்றர் படையினரால் சுத்திகரிப்பு
யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா பகுதிகளில் சுமார் 500 சதுர கிலோ மீற்றர் பகுதிகளில் 1.5 மில்லியன் மிதிவெடிகள், நிலக்கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 40 சதுர கிலோ மீற்றர் பகுதியில் மிதிவெடிகளை படையினர் அகற்றியுள்ளனர் என பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்கா நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பது தொடர்பான பிரேரணையை சபையில் சமர்ப்பித்து பேசும் பேதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சபாநாயகர் வி. ஜே. மு. லொக்குபண்டார தலைமையில் நேற்று பிற்பகல் 2.00 மணியளவில் அவசரகாலச் சட்டம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப் பட்டது.
பிரதமர் தொடர்ந்தும் உரையாற் றுகையில் :- எந்தவொரு நாட்டிலும் ஆளும் கட்சி வெற்றிகளை பெற்றுக் கொள்ளும் போது எதிர்க்கட்சிக்கு பொறாமை ஏற்படுவதுண்டு. இங்கும் அரசியல் ரீதியான பொறாமையே ஏற்பட்டுள்ளது. எனினும் இன்று நாம் எமது நாட்டின் முன்னேற்றத்தையும், நாட்டை கட்டியெழுப்புவது போன்ற சவால்களுக்கே முகம்கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.
ஒரு வீட்டின் முன்னேற்றம் ஏற்பட வேண்டுமாயின் வீட்டிலுள்ளவர்கள் மத்தியில் ஒற்றுமை நிலவ வேண்டும். அப்போதுதான் தத்தமது தேவைகளை ஒழுங்காக நிறைவேற்றிக்கொள்ள முடியும். முதலில் இதனை நாம் நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.
வடக்கிலுள்ள மக்கள் இன்று அதனை புரிந்துகொண்டுள்ளார்கள்.
நிவாரணக் கிராமங்களிலுள்ள மக்களின் உண்மை நிலையை சர்வதேசத்துக்கு எடுத்துக்கூறியும் இருக்கிறோம். அதற்கு நாம் பின்னிற்கவில்லை.
வெளி உலகு தெரியாமல் ஆயுதம் ஏந்தி போராடிய சிறுவர், சிறுமியர்கள் இன்று பாடப் புத்தகங்களை ஏந்திய வாறு பாடசாலைக்கு செல்கின்றனர். எதிர்காலம் சிறப்பானதாக இருக்கும் என்பதற்கு இது எடுத்துக்காட்டாக திகழவில்லையா?
வடக்கின் மீள்குடியேற்றம், கல்வி நடவடிக்கைகள் என்பவற்றுக்கு இன்று தடையாக இருப்பது பயங்கரவாதிகளால் புதைக்கப்பட்ட மரணப் பொறிகளே.