2 செப்டம்பர், 2009

02.09.2009 தாயகக்குரல். 17

நீண்டகாலமாக இலங்கையில் இனப்பிரச்சினையை தேசியப் பிரச்சினையாக எடுத்து அதற்கு அரசியல் தீர்வு காண்பது முதன்மையாக கருதப்பட்டது. ஆனால் யுத்தம் முடிந்த நிலையில் வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் தங்கியுள்ள மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்துவது முக்கிய மனிதாபிமானப் பிரச்சினையாகிவிட்டது. அனைத்து அரசியல் கட்சிகளும் இப்போது மீள்குடியேற்றம் பற்றியே பேசிவருகின்றன.

முகாம்களில் உள்ள மக்களை மீளக் குடியமர்த்துவதில் அரசு உதாசீனம் காட்டுவதாக குற்றம்சாட்டும்; எதிர்கட்சிகள் அதற்கு பல காரணங்களையும் தெரிவிக்கின்றன. இடம்பெயர்ந்துள்ள சுமார் மூன்று லட்சம் மக்களின் வாக்குகளை பெறுவதற்காக அந்த மக்களை முகாம்களிலே தங்கவைத்துள்ளதாக
குற்றம் சாட்டுகின்றன. மீள்குடியேற்றப் பிரச்சினை மனிதாபிமானப் பிரச்சினை என்பதை விட அதை அனைவரும் அரசியலாக்குவதாகவே தோன்றுகிறது.
அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் நடைபெறுமென எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதி தேர்தலை குறிவைத்துள்ள ஐக்கிய தேசியக் கட்சி; , மக்கள் விடுதலை முன்னணி ஆகியன மக்களை முகாம்களில் வைத்துக்கொண்டு தேர்தலை நடத்துவதை விரும்பவில்லை.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் புலிகள் எப்படி தமிழ் தேசியக் கூட்டமைப்பை வன்னி வாக்குகள் மூலம் வெற்றிபெறச் செய்தார்களோ அதே போல முகாம்களில் உள்ள மக்களின் வாக்குகளை அரசாங்கம் தமக்கு சாதகமாக்கிக்கொள்ளும் என்பது ஐக்கிய தேசியக் கட்சியின் அச்சமாகும். ஐக்கிய தேசியக் கட்சியை கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் ஓரளவேனும் காப்பாற்றியது தமிழ் வாக்குகள் என்பதால் இப்போதும் அதிகம் நம்பிக்கை வைத்துள்ளது தமிழ் வாக்குகளையே. தமிழ் வாக்குகள் தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைக்குமா என்பது வேறுவிடயம்.

பொதுவாக அரசாங்கம் திட்டமிட்டு மீள்குடியேற்றத்தை தாமதப் படுத்துவதாக எதிர்கட்சிகள் தெரிவிக்கின்ற அதே வேளை மீள்குடியேற்றம் தாமதப்படுவதற்குரிய பல காரணங்களை அரசாங்கம் கூறிவருகிறது.
எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை அரசுசார்பில் மறுத்துள்ள அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான அநுரபிரியதர்சன யாப்பா, முகாம்களில் உள்ள மக்களின் கவனத்தை தமது பக்கம் திருப்பவே எதிர்க்கட்சிகள் பல்வேறு முயற்சிகளை செய்து வருவதாகவும் இதற்காக பொய்யான குற்றச்சாட்டுகளை அடுக்கி வருவதாக தெரிவித்துள்ளதுடன் , வவுனியா முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள இடம் பெயர்ந்த மக்கள் மத்தியில் புலிகள் ஊடுருவியுள்ளதால் அந்த மக்கள் சுதந்திரமாக நடமாடவிடுவது குறித்து மிகவும் அவதானமாக இருக்கவேண்டியுள்ளது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இடம் பெயர்ந்த மக்களை அவர்களது சொந்த இடங்களில்; மீள்குடியமரச் செய்வதற்கு முன்னர் அங்கு புலிகளால் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகள் அகற்றப்படவேண்டும். அதற்காக மேலதிகமான கண்ணி வெடி அகற்றும் குழுவினரை அப்பணியில் ஈடுபடுத்தியுள்ளதாகவும் வடபகுதியில் கண்ணிவெடிகளை அகற்றும் பணி துரிதப்படுத்துவதற்காக அமெரிக்க அரசாங்கம் மேலும் ஆறுமில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்கியிருப்பதாகவும் அரசு தெரிவிக்கிறது.


யுத்தம் நடைபெற்ற இடங்களில் மக்களை மீளக் குடியமர்த்த கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட பின்னர் அந்த இடங்களில் மக்கள் குடியமர்த்தப்படலாம் என யூ.என்.எச்.சி.ஆர். அனுமதியளித்த பின்னரே அங்கு மக்களை மீளக் குடியமர்த்தமுடியும் என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவிக்கிறார்.
வன்னியில் புலிகளால் புதைக்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாக மீட்கும்வரை வன்னியில் மீள்குடியேற்றம் தாமதப்படலாம் என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

வன்னிக்கு வெளியே மன்னார், யாழ்ப்பாணம், திருகோணமலை ஆகிய இடங்களை நிரந்தர வசிப்பிடங்களாகக் கொண்டு முகாம்களில் தங்கியுள்ள மக்கள் அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதாக வவுனியா அரச அதிபர் தெரிவிக்கிறார். யாழ் குடாநாட்டைச் சேந்த மக்;கள் இவ்வாரம் தமது சொந்த இடங்களுக்கு செல்வார்கள் என யாழ் அரசாங்க அதிபர் தெரிவிக்கிறார். இப்போது முகாம்களில் உள்ள பெரும்பான்மையான மக்கள் வன்னி நிலப்பரப்பை சொந்த இடமாக கொண்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இடம் பெயர்ந்த மக்கள் தொடர்பில் அரசியல் ரீதியாக அணுகாமல் மனிதாபிமான ரீதியில் சிந்தித்து செயல்பட்டால் அரசு எதிர்பார்க்கும் நாட்களுக்கு முன்னதாகவே மக்களை மீளக்குடியமர்த்த முடியும் என்று ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கருஜயசூரியா தெரிவித்திருப்பது அனைவரின் கவனத்திற்கும் உரியN;த

இன்று வன்னி மக்களின் மீள்குடியேற்றம் பற்றி பேசும் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்காலத்திலும் யாழ் குடாநாட்டில் இடம் பெயர்ந்த மக்கள் ஐம்பது நலன்புரி நிலையங்களில் இருந்துள்ளனர். அவர்கள் தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் இவர்கள் எடுக்கவில்லை.

யாழ் குடாநாட்டில் 30 வீதமான பகுதியில் 13 இராணுவம்; உயர் பாதுகாப்பு வலையம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து 1990ம் ஆண்டுடன் இப்பகுதிகளில் இருந்து மக்கள் முற்றாக இடம் பெயர்ந்தனர். இவ்விதம் 24,175 குடும்பங்கள் இடம் பெயர்ந்து சிலர் தமது உறவினர்களுடனும் ஏனையோர் நலன்புரி நிலையங்களிலும் தங்கினர். இவர்கள் தமது சொந்த இடங்களுக்கு செல்லவோ அங்கு தமது தொழிலில் ஈடுபடவோ இதுவரை அனுமதிக்கப்படவில்லை. இங்கு 42ஆயிரம் ஏக்கர் பயிர் செய்கை நிலங்கள் பயன்படாமல் உள்ளன. செழிப்பான விவசாய நிலங்களை அதிகமாக கொண்ட வலிகாமம் வடக்கு பிரதேசம் பெரும்பாலும் உயர்பாதுகாப்பு வலையமாகவே உள்ளன.

இப்போதும் ஐக்கிய தேசியக் கட்சியோ,ஜே.வி.பி.யோ அந்த மக்களைப்பற்றி அக்கறை கொள்ளவில்லை. எனவேதான் எதிர்கட்சிகளைப் பொறுத்தவரை வன்னி மக்களின் மீள்குடியேற்றம் பற்றிய கரிசனை மனிதாபிமானத்தின் அடிப்படையில் ஏற்பட்டதல்ல. அது அரசியல் நோக்கம் கொண்டது என்று கூறுகிறோம்.
வவுனியா முகாம்களில் உள்ள வன்னி மக்களை அரசாங்கம் கண்ணிவெடி அகற்றும்வரை முகாம்களிலேயே வைத்திருக்காமல் அவர்களது உறவினர்களின் பொறுப்பில் வெளியேற அவர்களை அனுமதிக்கலாம்.

அரசாங்கம் முன்னர் அறிவித்தபடி நெடுங்கேணி உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் உள்ள மக்களை உடனடியாக மீள்குடியேற்றம் செய்யலாம். இப்படி ஓரளவுக்காவது முகாம்களில் உள்ள மக்கள் தொகையை குறைப்பதன்மூலம் மீதமாக முகாம்களில் உள்ள மக்களின் அத்தியவாசிய தேவைகளை பூர்த்தி செய்வது அரசுக்கும் இலகுவாக இருக்கும். யாழ்ப்பாணத்தில் இடம் பெயர்ந்தவர்கள் பலர் உறவினர்கள் வீடுகளிலும் வாடகை வீடுகளிலும் தங்கி நிவாரணம் பெற்று வாழ்வதால் இடம்பெயந்தோர் பிரச்சினை வன்னியளவுக்கு அங்கு எழவில்லை எனலாம். இது வன்னிக்கும் பொருந்தலாம்.

மேலும் இங்கே தொடர்க...
ஆந்திர மாநில முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி
ஆந்திர மாநில முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி

ஆந்திர முதல்வர் சென்ற ஹெலிகாப்டரைக் காணவில்லை


ஆந்திர மாநில முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி பயணம் செய்த ஹெலிகாப்டர், 7 மணி நேரத்துக்கு மேலாகியும் எங்கு சென்றது என்று கண்டுபிடிக்கப்படவில்லை. அதையடுத்து, ஆந்திர முதல்வர் எங்கு இருக்கிறார் என்பது குறித்தோ, அவரது பாதுகாப்பு குறித்தோ எந்தத் தகவலும் இல்லை.

ஆந்திராவின் கர்னூலில் இருந்து சித்தூருக்கு இன்று காலை ஹெலிகாப்டரில் சென்றார் ராஜசேகர ரெட்டி. சுமார் 9.35 மணிக்கு, அவரது ஹெலிகாப்டருனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

இதுவரை, முதல்வர் எங்கு இருக்கிறார் என்பது குறித்து கண்டுபிடிக்கப்படவில்லை என்று ஆந்திர அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் உள்பட ஏழு ஹெலிகாப்டர்கள் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டு்ள்ளன. அதுதவிர, ஆளில்லாத விமானமும் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடர்ந்த வனப்பகுதியாக இருப்பதாலும், மோசமான வானிலை காரணமாகவும் தேடுதல் பணி பாதிக்கப்பட்டிருப்பதாக ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.

முதல்வரைப் பற்றியும் அவரது ஹெலிகாப்டர் பற்றியும் தகவல் கிடைத்தால், கிராமப்புற அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள், அதை அரசுக்குத்த தெரிவிக்குமாறும் மாநில அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஆந்திர முதல்வரின் ஹெலிகாப்டர் வனப்பகுதியில் இறங்கியதால், அவர் அங்கிருந்து பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டு செல்லபப்படிருப்பதாகவும், அங்கு நக்ஸலைட்டுகள் ஆதிக்கம் அதிகமாக இருப்பதால், பாதுகாப்புக் காரணங்களுக்காக அந்தத் தகவல் ரகசியமாக வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், எந்தத் தகவலும் உறுதிப்படுத்தப்படவில்லை.
மேலும் இங்கே தொடர்க...
சிறுபான்மையினருக்கும் சென்று சேரக்கூடிய வகையில் அரசியல் இணக்கமொன்று ஏற்படுத்தப்பட வேண்டுமென ஐ.நா.செயலர் தெரிவிப்பு-

இலங்கையில் சிறுபான்மையினருக்கும் சென்று சேரக்கூடிய வகையில் அரசியல் இணக்கமொன்று ஏற்படுத்தப்பட வேண்டுமென ஐ.நா செயலர் பான்கீ மூன் தெரிவித்துள்ளார். அதேவேளை சர்வதேச சட்டங்களுக்கு மதி;ப்பளிக்க வேண்டுமென்றும் அவர் தெரிவித்துள்ளார். நோர்வேக்கு சென்றுள்ள பான்கீ மூன் நோர்வே பிரதமர் ஜோன் ஹோல்டன் பேர்க்கை சந்தித்த பின்னர் நடத்திய ஊடக மாநாட்டிலேயே இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இலங்கையில் யுத்தம் நிறைவுக்கு வந்துள்ளபோதிலும் அங்கு தமிழர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டுமென தாம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் வலியுறுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சமாதான ஏற்பாட்டாளர் என்ற வகையில் இலங்கையில் நோர்வேயின் பங்கு மதிக்கத்தக்கது என்றும் பான்கீ மூன் தெரிவித்துள்ளார்.


மேலும் இங்கே தொடர்க...
இடம்பெயர்ந்துள்ள மக்களில் 30ஆயிரம் குடும்பங்களை மீளக் குடியமர்த்துவதற்கு ஏற்பாடுகள்-

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் இருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களில் 30ஆயிரம் குடும்பங்களை மீளக் குடியமர்த்துவதற்கான உட்கட்டமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அந்த மாவட்டங்களின் நிர்வாகப் பணிளுக்குப் பொறுப்பாகவுள்ள அரசஅதிபர் திருமதி எமில்டா சுகுமார் தெரிவித்துள்ளார். இந்த இரு மாவட்டங்களிலும் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு, பாதுகாப்பான பகுதிகள் என இராணுவத்தினரால் அறிவிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் உட்கட்டமைப்பு வேலைகள் நடைபெற்று வருவதாகவும், இப்பணிகள் நிறைவுபெற்றதும், 30ஆயிரம் குடும்பங்களைக் குடியேற்றமுடியும் எனவும் அரசஅதிபர் குறிப்பிட்டுள்ளார் முல்லைத்தீவு மாவட்டத்தில் பாண்டியன்குளம், துணுக்காய், மாந்தை கிழக்கு, ஒட்டுசுட்டான் ஆகிய பிரதேசங்களில் உட்கட்டமைப்பு வேலைகள் நடைபெற்று வருவதாகவும், கிளிநொச்சி நகரின் வைத்தியசாலை, கிளிநொச்சி அரசசெயலகம் ஆகியவற்றில் திருத்தவேலைகள் நடைபெறுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

மேலும் இங்கே தொடர்க...
புலிகள் தோற்கடிக்கப்பட்டாலும் அவர்களின் நோக்கத்தை நிறைவேற்ற சிலர் முனைப்புக் காட்டுவதாக தூதுவர் ஜாலிய விக்கிரமசூரிய தெரிவிப்பு-


புலிகள் இயக்கம் இராணுவரீதியாக தோற்கடிக்கப்பட்டாலும் அவர்களின் நோக்கத்தை நிறைவேற்றுவதிலும், அவர்களுக்காக நிதி சேகரிப்பதிலும் சிலர் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் ஜாலிய விக்கிரமசூரிய தெரிவித்துள்ளார். ஆசிய நிபுணர்கள் மத்தியில் கருத்துரைக்கையிலேயே ஜாலிய விக்கிரமசூரிய இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் இறுதியான சமாதானம் அரசியல் தீர்வின் மூலமே ஏற்படும். வெளிநாடுகளிலுள்ள புலிகளின் ஆதரவாளர்கள் சமாதானத்தைத் தோற்கடிக்க முனைகின்றனர். இந்நிலையில் தமிழர்கள் தாங்களும் இலங்கையின் முக்கியமானவர்கள், தங்களது குரலுக்கும் மதிப்பளிக்கப்பட வேண்டுமென்ற அவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவகையில் அவர்களுக்கு உரிய தீர்வொன்றை வழங்கப்படும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...
அரசியல் கைதிகளாக தற்சமயம் 631பேர் மாத்திரமே தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிப்பு-


இலங்கையில் அரசியல் கைதிகளாக தற்சமயம் 631பேர் மாத்திரமே தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சு இன்று தெரிவித்துள்ளது. இவர்கள் தொடர்பான வழக்குகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் அதனை விரைவுபடுத்துவதற்கும் தற்போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. மரணதண்டனை தொடர்பில் அமைச்சு தெரிவிக்கையில், இலங்கையில் தற்சமயம் 251மரணதண்டனைக் கைதிகள் இருப்பதாகவும், இவர்களது தண்டனை குறித்து இதுவரையிலும் எதுவித இறுதித் தீர்மானங்களும் ஏற்படவில்லையென்றும் குறிப்பிட்டுள்ளது. எனினும் சமூக மட்டத்திலிருந்து குற்றங்களைக் கட்டுப்படுத்தும் வேலைத்திட்டங்களை அமைச்சு மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சு கூறியுள்ளது.


மேலும் இங்கே தொடர்க...