10 ஜனவரி, 2011

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் உயிர் நீத்தவர்களின் 37ம்ஆண்டு


ஆண்டு தைமாதம் 10ம்திகதி யாழ். முற்றவெளி பகுதியில் அமைந்துள்ள வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த 04வது உலக தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாளன்று ஒன்பது தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட 37ம்ஆண்டு நினைவுதினம் இன்றாகும். 37வது ஆண்டு நினைவு தினம் இன்று சீரற்ற காலநிலை காரணமாக மிகவும் எளிமையான முறையில் நினைவு கூரப்பட்டுள்ளது. யாழ் முற்றவெளியில் அமைந்துள்ள நினைவுத்தூபியில் இன்றையதினம் முற்பகல் புளொட் உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
மட்டக்களப்பில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகளில் புளொட் உறுப்பினர்கள்- மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கடும்மழை காரணமாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு படகுகளில் கொண்டுசெல்லும் பணியினை புளொட் உறுப்பினர்கள் மேற்கொண்டு வருகின்றனர். புளொட் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் திரு.சூட்டி, உதவி அமைப்பாளர் திரு.கேசவன் உட்பட 20ற்கும் மேற்பட்ட புளொட் உறுப்பினர்கள் நேற்றும் இன்றும் நான்கு இயந்திரப்படகுகளைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர். கொக்கட்டிச்சோலை, நாவற்காடு, வவுணதீவு, கரவெட்டி, கன்னங்குடா, சேத்துக்குடா, புதூர், ஈச்சந்தீவு, காரையாக்கன்தீவு ஆகிய பிரதேசங்களிலேயே புளொட் உறுப்பினர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதேவேளை வெள்ளத்தினால் இடம்பெயர்ந்து கல்லடி பாலர் பாடசாலையில் தங்கியிருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட மக்களுக்கு சமைத்த உணவினையும் நேற்று புளொட் அமைப்பினர் வழங்கியுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கையர் ஒன்பது பேர் சைபிரசில் கைது

சைபிரசில் வசிக்கும் இலங்கையர்கள் சிலருக்கும் வெளிநாட்டவர் சிலருக்குமிடையே இடம்பெற்ற மோதல் ஒன்றை அடுத்து இலங்கையர்கள் ஒன்பது பேர் அந்நாட்டுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையர்கள் சிலருக்கும், வெளிநாட்டவர்கள் 20 பேருக்குமிடையே இடம்பெற்ற இம் மோதலில் மூவர் காயமடைந்துள்ளனர். இதனையடுத்து 9 இலங்கையர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தூதுவராலய செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் இங்கே தொடர்க...

கணனிக்குள் கஞ்சா: இளைஞர்கள் ஐவர் கைது
கணனி ஒன்றில் மறைத்து வைத்துக் பாடசாலை மாணவர்களுக்கு போதைப் பொருள் விற்பனை செய்த ஐந்து இளைஞர்கள் கட்டுகஸ்தோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டுகஸ்தோட்டை நகரில் இளைஞர் ஒருவரும் அவருடைய நண்பர்கள் சிலரும் சேர்ந்து தனது வீட்டுக் கணனியின் உட்பகுதியில் கஞ்சாவை மறைத்து வைத்து நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களுக்கு விற்பணை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள் கைது செய்யப்பட்ட போது கணனிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 30 கஞ்சா பக்கட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன் ஒரு பக்கட் 250 ரூபா வீதம் விற்பனை செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கண்டி பிரதான நீதவான் முன் ஆஜர் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

குடாநாட்டு குற்றச் செயல்களை நிறுத்த உடன் நடவடிக்கை: பொலிஸ் மா அதிபர்


குடாநாட்டு குற்றச் செயல்களை நிறுத்த உடன் நடவடிக்கை: பொலிஸ் மா அதிபர்
யாழ்ப்பாணத்தில் அண்மைக் காலமாக இடம்பெற்று வரும் கொலை, கொள்ளை மற்றும் ஆட்கடத்தல் ஆகிய குற்றச் செயல்களை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்ட பொலிஸ் மா அதிபர் நேற்று யாழ் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற பொது மக்கள் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

வீடுகளின் மேல் கற்பாறை வீழ்ந்ததில் 7 பேர் பலி: கண்டியில் சம்பவம், மீட்பு பணியில் இராணுவத்தினர்

கண்டி அனிவத்த பிரதேசத்தில் அமைந்துள்ள தமிழ் மக்கள் வாழும் வீட்டுத் தொகுதி ஒன்றின் மீது கற்பாறை ஒன்று விழுந்ததன் காரணமாக இதுவரை ஏழு பேர் உயிரிழந்துள்ளதுடன் மற்றும் 10 பேர் கடும் காயங்களுக்குள்ளாகி கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ள இச் சம்பவத்தில் அனிவத்த பிரதேசத்தில் வசித்த ஐந்து தமிழ் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

சம்பவத்தில் காயமடைந்த 10 பேரும் 2 சடலங்களும் வெளியெடுக்கப் பட்டுள்ளன. ஏனையவர்களை மீட்கும் பணயில் இலங்கை இராணுவத்தினரும் பொலிஸாரும் ஈடுபட்டுள்ளனர்.

உயிரிழந்த மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். எஸ்.செல்லம்மா (68), பிரதீப் ராஜ் (49), மற்றும் கண்டி சில்வெஸ்தர் கல்லூரியில் 4 ஆம் வகுப்பில் கல்வி பயிலும் மாணவன் வினோத் ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கற்பாறைக்குள் சிக்குண்டுள்ள ஏனைய ஐந்து பேரை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினர் வெடி மருந்துகளை பயன்படுத்தி கற்பாறையை தகர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கண்டி பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் மேலதிக விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் மாநாட்டின் கிளை அலுவலகங்கள் அமைக்கப்பட வேண்டும்: அஷ்ரப் சிஹாப்தீன்

தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் மாநாட்டின் கிளை அலுவலகங்கள் அமைக்கப்பட வேண்டும் என மாநாட்டின் செயலாளர் அஷ்ரப் சிஹாப்தீன் சற்றுமுன் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு நடத்த வேண்டும். மேலும் மாநாட்டின் தலைமையகம் இலங்கையில் இயங்குவதோடு தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் கிளை அலுவலகங்கள் அமைக்கப்பட வேண்டும்.

எழுத்தாளர்களின் நலன் கருதியும் மாநாட்டுக்காகவும் நிதியம் உருவாக்குதல், சர்வதேச தமிழ் எழுத்தாளர்களின் ஆக்கங்களை வெளிக்கொண்டுவர பதிப்பகம் ஒன்றை அமைத்தல் முதலானவற்றை செயற்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...