12 மார்ச், 2011

ஜப்பானில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்காலம் என அச்சம்ஜப்பானின் நேற்று ஏற்பட்ட சுனாமியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத்தாண்டலாம் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பலர் காணாமல் போயுள்ளதால் உயிழந்தவர்களின் எண்ணிக்கையை உறுதியாகக் கூறமுடியாமல் உள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

நேற்று அங்கு ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிச்டர் அளவுகளில் 9.0 என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக 50 முறைகள் இந்த அதிர்வுகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது

இவ்வதிர்வானது நியூசிலாந்தில் ஏற்பட்டதைவிட 8 ஆயிரம் மடங்கு சக்திவாய்ந்ததாக அளவிடப்பட்டுள்ளது.

ஜப்பானின் வடக்கு பகுதியில் உள்ள நெடுஞ்சாலையொன்று இச் சுனாமியில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

டோக்கியோ அருகில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திலும் தீ பிடித்தது.

அணுமின் நிலையங்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன. டோக்கியோவில் மாத்திரம் நாற்பது இலட்சம் பேரின் மின்னிணைப்புக்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை அதிவேக ரயில்கள் காணாமல் போயுள்ளதாகவும் 100 பிரயாணிகளை ஏற்றிச் சென்ற கப்பலொன்று சுனாமியில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

12.03.2011. வவுனியா வடக்கு நெடுங்கேணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல்கூட்டம்- வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேசத்தில் தமிழரசுக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவுகோரும் வகையில் நேற்றையதினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்று இடம்பெற்றது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம், சிவசக்தி ஆனந்தன், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், புளொட்டின் வன்னிப் பிராந்திய அமைப்பாளர் சிவநேசன் பவன், புளொட் மத்தியகுழு உறுப்பினரும், வவுனியா நகரசபை எதிர்க்கட்சித் தலைவருமான ஜி.ரி.லிங்கநாதன் மற்றும் ஊர்ப் பிரமுகர்கள், ஆசிரியர்கள், கிராமத் தலைவர்கள், வர்த்தக சங்கங்களின் தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டதுடன் பெருந்திரளான பொதுமக்களும் இதில் பங்கேற்றிருந்தனர். இங்கு உரையாற்றியவர்கள், தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு தமிழரசுக் கட்சிக்கு வாக்களித்து பெரும்பான்மை வாக்குகளால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியை உறுதிசெய்ய வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு சகலரும் ஓரணியில் திரண்டு வாக்களிக்க வேண்டும்- இரா.சம்பந்தன் அவர்கள் கோரிக்கை- தமிழர் பிரச்சினைக்கு ஏற்றுக் கொள்ளக்கூடியதும் நியாயமானதுமான அரசியல் தீர்வு காண்பதன்மூலமே வரலாற்று ரீதியான தங்களின் பாரம்பரிய வாழ்விடங்களில் தமிழ்பேசும் மக்கள் பாதுகாப்புடனும், கௌரவமாகவும் தங்களின் சட்டபூர்வமான அரசியல், சமூக, பொருளாதார மற்றும் கலாசார அபிலாசைகளை பூரணமாக பெற்று வாழ்வதை உறுதிப்படுத்த முடியும். இந்த இலட்சியத்தை அடைவதற்கு சகலரும் ஐக்கியப்பட்டு ஆதரவு வழங்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அரசியல் தீர்வானது வடக்கு கிழக்கு பகுதியில் வாழும் அனைத்து மக்களுக்கும் நீதி, நியாயமானதாக அமைவதற்கும் நாம் முயற்சி எடுப்போம். இதற்கான உறுதியினை கிழக்கில் வாழும் முஸ்லிம் மக்களுக்கும் நாம் வழங்குகின்றோம். எனவே மக்களின் இலட்சியத்தை அடைவதற்கு தேவையான நேர்மை மற்றும் பொது அர்ப்பணிப்புடன்கூடிய தார்மீக பலமற்ற எந்த அரசியல் கட்சிகளுக்கும் குழுக்களுக்கும் தமிழ் மக்கள் வாக்களிக்க கூடாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஓரணியில் திரண்டு வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி தேர்தலை முன்னிட்டு இரா.சம்பந்தன் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.


மேலும் இங்கே தொடர்க...

வெளிநாடுகளில் நாட்டுக்கு எதிராக பிரசாரம் செய்வோருக்கு மக்கள் பதிலடி கொடுப்பர்

உள்நாட்டில் அபிவிருத்தியை விரும்பாத ஐ.தே.க. வெளிநாடுகளில் புரளிகளை கிளப்பிவிடுகிறது ஜனாதிபதிநாட்டுக்கு எதிராக வெளிநாடுகளில் பிரசாரம் மேற்கொள்ளும் சதிகாரர்களுக்கு எதிர்வரும் 17ம் திகதி நாட்டு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பர் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

பேசுவதற்கு எதுவுமில்லாமல் மனித உரிமை பற்றி பேசும் இவர்கள், அமெரிக்க நீதிமன்றத்தில் எனக்கெதிராக வழக்குத் தொடரவும் 30 மில்லியன் அமெரிக்கன் டொலர்களை நட்டஈடாகக் கோரவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

நாட்டு மக்கள் மீது எமக்கு நம்பிக்கையுண்டு. அனைத்திலும் வெற்றிபெறுவோம். அந்த வெற்றியை எமது எதிர்கால பரம்பரைக்குக் கையளிப்போம் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் பதுளை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்கும் மாவட்டத் தேர்தல் மாநாடு நேற்று முன்தினம் பண்டாரவளை நகர மண்டபத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

அமைச்சர்கள் நிமல் சிறிபால டி சில்வா, டிலான் பெரேரா, லக்ஷ்மன் செனவிரத்ன, ஊவா மாகாண முதலமைச்சர் சடுந்திர ராஜபக்ஷ, மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். அங்கு ஜனாதிபதி மேலும் உரையாற்றுகையில்; இலங்கையில் சுதந்திரமாக வாழ முடியாதுள்ளது எனவும் மனித உரிமை மீறல்கள் கருத்துச் சுதந்திரமின்மை இங்கு நிலவுவதாகவும் குற்றம் சாட்டி அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடர எதிர்க்கட்சியினர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

உள்நாட்டில் மக்கள் நம்பிக்கையை இழந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சி வெளிநாடுகளில் பிரசாரம் செய்வதையே வேலையாகக்கொண்டுள்ளது. அவர்கள் கிராமங்கள் அபிவிருத்தியடைவதை விரும்பாதவர்கள் வெளிநாடுகளில் இருந்தே சகலதும் இறக்குமதி செய்யப்பட வேண்டுமென விரும்புபவர்கள்.

நாட்டு மக்கள் கடந்த தேர்தல்களிலும் எம்மை அமோக வெற்றிபெறச் செய்தனர். இம்முறையும் எமது வெற்றி உறுதியாகிவிட்டது. அதனைப் பொறுக்க முடியாதவர்களே பல்வேறு சூழ்ச்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இம்முறை தேர்தல் அரசாங்கத்தை அமைக்கவோ அரசாங்கத்தைக் கவிழ்க்கவோ நடத்தப்படும் தேர்தலல்ல. இது கிராமங்களை முன்னேற்றுவதற்காக கிராமங்களுக்காக வேலை செய்யும் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல். ஊவா மாகாணத்தைப் பொறுத்தவரை பல பாராளுமன்ற, மாகாண அமைச்சர்கள் உள்ளனர். இந்தப் பிரதேசங்களில் முழுமையான அபிவிருத்தியைப் பெற்றுக்கொள்ள மக்கள் தமது முழுமையான ஆதரவை வழங்க வேண்டியது அவசியம்.

நாம் 30 வருட கால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்து நாட்டை அபிவிருத்தியில் கட்டியெழுப்ப சகல நடவடிக்கையையும் மேற்கொண்டுள்ளோம்.

மேல் மாகாணத்திற்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டிருந்த அபிவிருத்தியை கிராமங்களுக்கும் முன்னெடுத்துச் செல்வதே அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாகும்.

அதற்கு சகலரதும் பூரண ஒத்துழைப்பு அவசியம். கடந்த 2005 ஜனாதிபதித் தேர்தலின் போது அரிசி ஒரு கிலோ நூற்று இருபது ரூபாய்க்கு விற்கப்பட்டது. தற்போது போதியளவு அரிசி எமக்கு உள்ளது.

அரசாங்கம் விவசாயிகளுக்காக பாரிய சலுகைகளை வழங்கி வருகிறது. யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் பணம் எங்கே எனக் கேட்பவர்களுக்கு அரசாங்கம் வழங்கும் நிவாரணங்கள் கண்களுக்குத் தெரிவதில்லை. நாம் கடந்த ஆட்சியாளர்களைப் போன்று வெளிநாட்டு உற்பத்திகளில் நம்பிக்கை வைக்கவில்லை.

உள்ளூர் உற்பத்திகளில் நம்பிக்கை வைத்து அதனை மேம்படுத்தும் திட்டங்களை முன்னெடுத்து வருகிறோம். மக்களுக்குச் சேவை செய்வதில் அரசாங்கம் ஒருபோதும் பின்னிற்பதில்லை. மஹிந்த சிந்தனை திட்டத்தை நிறைவேற்றியுள்ள நாம் மஹிந்த சிந்தனை எதிர்காலத்திட்டத்தை ஆரம்பித்துள்ளோம். அதற்கு சகலரினதும் பூரண ஒத்துழைப்பு அவசியம்.

அரசாங்கத்தின் செயற்பாடுகளை வெற்றிகரமாக முன்னெடுக்க எதிர்வரும் 17ம் திகதி வெற்றிலை சின்னத்துக்கு வாக்களித்து பூரண ஆதரவு வழங்க வேண்டுமெனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

புலிகளின் முகாம்கள் தமிழகத்தில் இல்லை: இந்தியாவின் அறிவிப்புக்கு இலங்கை அரசு வரவேற்பு


இந்தியாவில் எல். ரீ. ரீ. ஈ. முகாம்கள் கிடையாது என இந்திய அரசாங்கம் அறிவித்திருப்பதை இலங்கை அரசாங்கம் வரவேற்றுள்ளது. இந்தியாவில் புலிகள் தலைதூக்க முயல்வதாக புலனாய்வுப் பிரிவுகள் ஏற்கனவே கூறியிருந்த நிலையில், தற்பொழுது அங்கு புலி முகாம்கள் கிடையாது என மறுத்திருப்பது குறித்து மகிழ்ச்சி அடைவதாக அமைச்சர் டளஸ் அழகப்பெரும கூறினார்.

ஐ. ம. சு. மு. ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று மகாவலி நிலையத்தில் நடைபெற்றது.

இந்தியாவில் புலிகளின் மூன்று முகாம்கள் இருப்பதாக பிரதமர் தி. மு. ஜயரத்ன பாராளுமன்றத்தில் கூறியிருந்தார். ஆனால் இதனை இந்தியா மறுத்திருப்பது குறித்து ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர்,

மேற்படி விவகாரம் தொடர்பில் பிரதமர் ஜயரட்ன தனது கருத்தை வெளியிட்டுள்ளார். இந்தியாவில் புலி முகாம்கள் கிடையாது என இந்தியா மறுத்திருப்பது முக்கிய விடயமாகும். ஏனென்றால், இதற்கு முன் புலிகளின் முகாம்கள் இந்தியாவில் இருந்தன.

அமைச்சர் விமல் வீரவன்ச கூறியதாவது,

இந்தியாவில் புலிகள் இருப்பதாக இந்தியா கூறியிருந்தது பிரதமரை கொல்ல அவை பயிற்சி செய்து வருவதாகவும் புலனாய்வுப் பிரிவு கூறியது. அங்கு புலிகளின் முகாம் இல்லாத போதும் புலிகள் உள்ளனர் என்றார்
மேலும் இங்கே தொடர்க...

அரசியலமைப்புக்கான 18வது திருத்தம்: சுதந்திர ஆணைக் குழுக்களை அரசு விரைவில் செயற்படுத்தும்


சுதந்திர ஆணைக் குழுக்களை அரசாங்கம் விரைவில் செயற்படுத்தும் என அமைச்சர் டளஸ் அழகப்பெரும கூறினார். 18 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்ட பின் ஆணைக் குழுக்களை செயற்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது குறித்து அவர் கவலை தெரிவித்தார். ஐ. ம. சு. முன் னணி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்றது. ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் மேலும் கூறியதாவது,

சுயாதீன ஆணைக் குழுக்களை செயற் படுத்தும் தேவை இருந்ததாலே அரசாங்கம் 18ஆவது திருத்தத்தை விரைவாக அமுல்படுத்தியது. எனவே, ஆணைக்குழுக் களை செயற்படுத்தாதிருக்கும் தேவை அரசுக்கு இல்லை. இதில் இருந்து அர சாங்கம் ஒதுங்காது. குறுகிய காலத்தில் செயற்படுத்துவோம். தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்கவின் கீழ் நடைபெறும் இறுதித் தேர்தல் இதுவாகும்.
மேலும் இங்கே தொடர்க...

'முகாம்' வார்த்தையே விவாதத்திற்குரியது: விமல் வீரவன்ச


இந்தியாவின் தமிழகத்தில் புலிகளின் பயிற்சி முகாம்கள் தொடர்பில் பிரதமர் டி.எம். ஜயரட்ண தெரிவித்த விடயத்தில் முகாம் என்ற வார்த்தையே விவாதத்துக்குரியது.

மாறாக புலிகள் இந்தியாவில் செயற்படுவதாகவும் அவர்களினால் இந்திய தலைவர்களுக்கு ஆபத்து என்றும் அண்மையில் இந்திய புலனாய்வு தகவல்களே தெரிவித்திருந்தன என்று விமல் வீரவன்ச தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள இலங்கை மனறக் கல்லூரியில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

முதலில் குறித்த கேள்விக்கு அமைச்சர் டலஸ் அழகப்பெரும பதிலளித்தார். அதன் பின்னர் அமைச்சர் வீரவன்ச பதிலளித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

தமிழ் மக்களின் இலட்சியத்தை அடைவதற்கு அனைவரும் ஒன்றுபட்டு வாக்களிக்க வேண்டும்: சம்பந்தன்

தமிழர் பிரச்சினைக்கு ஏற்றுக் கொள்ளக் கூடியதும் நியாயமானதுமான அரசியல் தீர்வு காண்பதன் மூலமே வரலாற்று ரீதியான தங்களின் பாரம்பரிய வாழ்விடங்களில் தமிழ் பேசும் மக்கள் பாதுகாப்புடனும் கௌரவமாகவும் தங்களின் சட்டபூர்வமான அரசியல், சமூக, பொருளாதாரமற்றும் கலாசார அபிலாஷைகளை பூரணமாகப் பெற்று வாழ்வதை உறுதிப்படுத்த முடியும்.

இந்த இலட்சியத்தை அடைவதற்கு சகலரும் ஐக்கியப்பட்டு ஆதரவு வழங்கவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எம்.பி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு மாயைக்கட்சி – கிழக்கு முதலமைச்சர்


தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்கின்ற கட்சி மாயைக் கட்சி என தெரிவித்துள்ள கிழக்கு மாகாணமுதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், அவர்களுக்கு வாக்களித்து எதுவித பலனும் கிடைக்காத பட்சத்தில், மக்கள் தற்போது தெளிவாக மாற்றுச் சிநதனையாளர்களாக மாறியிருக்கின்றார்கள் என தெரிவித்துள்ளார்.

நாவிதன்வெளி பிரதேசத்தில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நேற்றுஇடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

“இவ்வளவு காலமும் தமிழ் கட்சி என்றால் வடக்கினை முழுமையாகக் கொண்டமைந்த தமிழ் தேசி கூட்டமைப்பு மாத்திரம் தான் கிழக்கு தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று வந்தார்கள்.

ஆனால் தற்போது கிழக்கு பிரிக்கப்பட்ட பின்னர் கிழக்கிற்கான தனியான ஓர் அரசியல் அலகு ஏற்படுத்தப்பட்டு அதற்கான வழிவகைகளும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதன் வெளிப்பாடுதான் இன்றைய ஆட்சியில் உள்ள கிழக்கு மாகாண சபையாகும். இவ்வளவு காலமும் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்கின்ற மாயைக் கட்சிக்கு வாக்களித்து எதுவித பலனும் கிடைக்காத பட்சத்தில், மக்கள் தற்போது தெளிவாக மாற்றுச் சிநதனையாளர்களாக மாறியிருக்கின்றார்கள்.

கிழக்கு மாகாணத்திற்கான தனியான அரசியல் எற்படுத்தப்பட்டபோது ஏன் நாம் இன்னும் வடக்கின் தலைமைகளின் கீழ் செயற்படுகின்ற அத்தோடு இவ்வளவு காலமும் எதுவுமே எமது மக்களுக்குச் செய்யாத கட்சியினை ஆதரிக்க வேண்டும் என மக்கள் சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள்.

இம்முறை நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலிலே தங்களது முழமையான ஆதரவினை கிழக்கில் உதயமான தமிழ் மக்கள் விடுலைப் புலிகள் கட்சிக்கே வழங்குவதென பலரும் முன்வந்த வண்ணம் இருக்கின்றார்கள்.

கல்விமான்கள் புத்திஜீவிகள், சமூகப் பற்றாளர்கள் தனவந்தர்கள் பல்கலைக் கழக சமூகம் மற்றும் இளைஞர் குழாம் அதமாத்திரமன்றி பொது அமைப்புக்கள் ஆலய பரிபாலன சபையினர்கள் எனப் பலரும் இம் முறை த.ம.வி.புலிகள் கட்சியினை ஆதரி;ப்பதாக உறுதி பூண்டுள்ளார்கள்" எனத் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

இந்நாட்டின் இராணுவ, அரச அதிகாரிகள் வெளிநாட்டவரால் விசாரிக்கப்படுவதற்கு ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்: ஜனாதிபதி

எமது நாட்டின் இராணுவ மற்றும் அரச அதிகாரிகள் வெளிநாட்டவரினால் விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுவதை ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்.

எந்தவொரு விசாரணை நடவடிக்கைகளும் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினாலேயே இடம்பெற வேண்டும்.

அத்துடன் நாட்டையும் அதன் இறைமையையும் பாதுகாப்பதற்கு கடமைப்பட்டிருக்கின்றேன்.

அதனை காட்டிக் கொடுப்பதற்கு நான் தயாரில்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்தார்.

நாட்டு மக்களுடனான ஜனாதிபதியின் நேரடி சந்திப்பு நிகழ்வு நேற்றிரவு இடம்பெற்றது. இதன்போது வவுனியா, பசறை, யாப்பஹூவ, கட்டான, உடநுவர, பொலன்னறுவை உள்ளிட்ட பல பிரதேசங்களைச் சேர்ந்த பொது மக்கள் செய்மதி தொழிநுட்ப வசதியினூடாக ஜனாதிபதியிடம் நேரடியாக தமது பிரச்சினைகளை தெரிவித்து கேள்விகளையும் எழுப்பினர்.

அவர் இதற்கான பதில்களை அளித்தார். இதன்போது கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...