5 மே, 2010

அணு ஆயுத அச்சுறுத்தல் விடுக்கும்’ நாடுகளை ஐ.நா தண்டிக்க வேண்டும்

அணு பரவலாக்காமை ஒப்பந்த மீளாய்வு கூட்டத்தில் ஈரானிய ஜனாதிபத
அணு ஆயுத பாவனை வெறுப்புக்கும் வெட்கத்துக்கும் உரியது. அவ்வாறான பாவனையை மேற்கொள்ளப்போவதாக அச்சுறுத்தி வரும் அமெரிக்கா போன்ற நாடுகளை ஐக்கிய நாடுகள் அமைப்பு தண்டிக்க வேண்டும் என்று ஈரானிய ஜனாதிபதி மஹ்மூத் அஹமதி நஜாத் வலியுறுத்தினார்.

ஐக்கிய நாடுகள் சபையின் சம்மேளனக் கூட்டத்தில் உரையாற்றியபோதே ஈரானிய ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.

1970 ஆம் ஆண்டின் அணு ஆயுத பரவலாக்காமை ஒப்பந்தத்தில் கைச்சாத் திட்டுள்ள 189 நாடுகளின் ஒப்பந்த மீளாய்வு சம்மேளன கூட்டம் ஒரு மாத காலத்துக்கு ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெறுகிறது.


அணு ஆயுத தடை ஒப்பந்தம் மீதான மாநாடு ஐ.நா.வில் நடைபெற்றபோது ஈரான் ஜனாதிபதி அஹமதி ரஜாத் உரையாற்றுகின்றார்.

இந்த கூட்டத் தொடரின் ஆரம்ப கட்டத்தில் உரையாற்றிய போதே ஈரானிய ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார். அணு ஆயுதங்களை வைத்திருப்பது என்பது ஒன்றும் பெருமைக்குரிய விடய மல்ல. அவ்வாறான ஆயுதங்கள் சமாதான முறையிலான அணு வசதிகளுக்கு எதிராக பாவிக்கப்படும் என்ற அச்சுறுத்தலோ அல்லது அவ்வாறான தாக்குதலோ சர்வதேச சமாதானம் அல்லது பாதுகாப்பை மீறும் செயல் என கருதப்பட வேண்டும்.

அவ் வாறான தாக்குதலை மேற்கொள்ளும் நாடுகள் ஐக்கிய நாடுகள் அமைப்பின் துரித செயற்பாட்டின் விளைவுகளுக்கு முகம் கொடுக்க வேண்டும். அத்துடன் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள இதர நாடுகளினால் பகிஷ்கரிக்கப்பட வேண்டும் என்று ஈரானிய ஜனாதிபதி சாடினார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் வருடாந்த கூட்டங்களின் போது மேற்குலக நாடுகள் அடிக்கடி வெளிநடப்பு செல்வது ண்டு. ஈரானிய ஜனாதிபதியின் காரசாரமான உரையின் போதும் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் பல மேற்கு நாடுகள் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்திருந்தன.

இஸ்ரேல் அதன் அண்டைய நாடுகளை தாக்குவதாகவும் கைப்பற்றப் போவதாகவும் அச்சுறுத்தி வருகிறது. அமெரிக்கா மற்றும் அதன் தோழமை நாடு களின் நிபந்தனையற்ற ஆதரவு இஸ்ரேலுக்கு தொடர்ந்து கிடைத்து வருகிறது என்று ஈரானிய ஜனாதிபதி குற்றஞ் சாட்டை விடுக்கத் தொடங்கியதையடுத்தே மேற்கு லக தூதுக்குழுவினர் சபையிலிருந்து வெளிநடக்க ஆரம்பித்தனர்.

ஈரானிய ஜனாதிபதி அஹமதி நஜாத்தின் கூற்றை அமெரிக்க வெளிவிவகார செயலாளர் ஹிலரி கிளின்டன் நிராகரித்தார்.

எப்போதும் போலவே பொய்யான குற்றச்சாட்டுக்களையே அவர் இம்முறையும் முன்வைக்கிறார் என்று கூறிய ஹிலரி சகல நாடுகளும் ஒன்றிணைத்து ஈரானின் அணு ஆயுத திட்டத்தை கைவிடச் செய்ய வைப்பதற்கு முன்வரவேண்டும் என்று ஹிலரி கிளின்டன் வலியுறுத்தினார்.

இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல் ஆகிய நாடுகள் அணு பரவலாக்காமை ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவில்லை எனினும் இவை அணு ஆயுதங்களை வைத்துள்ளன. வடைகொரியா முதலில் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருந்தது. எனினும் 2003 இல் அதிலிருந்து விலகிக் கொண்டு 2006 இலும் 2009 இலும் அணு சோதனைகளை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

அரசியலமைப்புத் திருத்தமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும்




அரசியலமைப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப் படவுள்ளன என்ற செய்தி வெளியாகிய அதே காலத்தில் அரசியலமைப்புத் திருத்தத்துக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்கும் என்ற செய்தியும் வெளியாகியது. இச்செய்தி தொடர்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரை உத்தியோகபூர் வமாக எதுவும் அறிவிக்கவில்லை.

அரசியலமைப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் போது தேசிய இனப் பிரச்சினையின் தீர்வு தொடர்பாகவும் சில திருத்தங்கள் இடம் பெறலாம் என்ற பலமான எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் நிலவுகின்றது.

பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தத்திலும் பார்க்கக் கூடுதலான அதிகாரங்களைக் கொண்ட தீர்வொன்று நடைமுறைப் படுத்தப்படும் என்று ஜனாதிபதியும் அரசாங்கத்தின் ஏனைய முக்கியஸ்தர்கள் சிலரும் கூறியதன் பின்னணியில் இந்த எதிர்பார்ப்பு நிலவுவது இயல்பானதே.

எவ்வாறாயினும் இச்சந்தர்ப்பத்தில் தமிழ்த் தேசியக் கூட் டமைப்பு எடுக்கும் முடிவிலேயே அதன் எதிர்காலமும் தமிழ் மக்களின் எதிர்காலமும் தங்கியுள்ளன. இனப் பிரச்சினை தீர்வின்றித் தொடர்வதால் கூடுதலான பாதிப்புக்கு உள்ளாகின்றவர்கள் தமிழ் மக்களே.

எனவே அவர்கள் ஏதாவதொரு தீர்வை எதிர்பார்க்கின்றார்கள். தாங்கள் நம்பிக்கை வைக்கும் தலைவர்கள் தீர்வைப் பெற்றுத்தரத் தவறும் பட்சத்தில் அவர்கள் மீது மக்கள் நம்பிக்கையிழப்பதைத் தவிர்க்க முடியாது. கடந்த பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்கு வங்கியில் வீழ்ச்சி ஏற்பட்டதற்கு இதுவும் ஒரு பிரதான காரணம்.

ஒற்றையாட்சிக்குள் தீர்வை ஏற்க முடியாது என்பதும் முழுமையான அதிகாரப் பகிர்வே தேவை என்பதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளிப்படுத்தி வரும் நிலைப்பாடுகள். அரசாங்கத்தின் உத்தேச அரசி யலமைப்புத் திருத்தத்துக்கும் தங்கள் நிலைப் பாட்டுக்குமிடையே முரண்பாடு காணும் பட்சத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் எடுக் கப்போகும் முடிவு தமிழ் மக்களின் எதிர்காலத்தைப் பொறுத்தவரையில் முக்கியத்துவம் பெறுகின்றது.

கடந்த காலங்களில் பதவியிலுள்ள அரசாங்கங்கள் நடைமுறைப்படுத்த முன்வந்த தீர்வுகளை அதிகாரங்கள் போதாது எனக் கூறித் தமிழ்த் தலைமை நிராகரித்து வந் திருக்கின்றது. பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தத்தையும் பொதுசன ஐக்கிய முன்னணியின் அதிகாரப் பகிர்வுத் தீர்வுத் திட்டத்தையும் உதாரணமாகக் கூறலாம். இந்த நிராகரிப்பு தமிழ் மக்களுக்குப் பாதகமான விளைவையே தந்திருக்கின்றது.

அதாவது எவற் றையெல்லாம் நிராகரித்தார்களோ அவற்றிலும் பார்க்கக் குறைவான தீர்வே நடைமுறைச் சாத்தியமானது என்ற நிலையைத் தோற்றுவித்திருக்கின்றது. இன்னொரு விதமாகக் கூறுவதானால், தலைவர்களின் தவறு மக்களின் விடுதலைப் போராட்டத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டது.

கடந்த காலத் தவறுகளைப் படிப்பினையாகக் கொண்டு தமிழ்த் தலைவர்கள் சரியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். சரியான அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும். பல தடவைகள் தினகரன் சுட்டிக்காட்டியது போல, எந்தத் தீர்வு சாத்தியமானதோ அதைப் பெற் றுக்கொண்டு எஞ்சிய அதிகாரங்களுக்காகத் தொடர்ந்து முயற்சிப்பதுதான் ஆக்கபூர்வமான அணுகுமுறை. தமிழ் மக்களைப் பேரழிவுக்குள் தள்ளாமலிருப்பதற்கும் முழுமையான அரசியல் தீர்வுக்கான நடைமுறையை முன்னெடுப்பதற்கும் இந்த அணுகுமுறையே பொருத்த மானது.

அரசியலமைப்புத் திருத்த விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட் டமைப்பு அரசியல் தீர்வு நடைமுறையை முன்னெடுக்கும் வகையில் செயற்பட வேண்டும் என்பதே பெரும்பாலான தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு.
மேலும் இங்கே தொடர்க...

மருந்து கொடுத்து விசாரிக்கத் தடை





மருந்து கொடுத்து உண்மையை வெளிக்கொணரும் வழிமுறை இந்தியாவில் கையாளப்பட்டுவருகிறது
இந்தியாவில் பொலிஸாரும் பிற விசாரணையாளர்களும் குற்ற சந்தேக நபர்களை விசாரிக்கும்போது "உண்மை வெளிக்கொணரும் மருந்துகள்" என்று கூறப்படும் மருந்துகளை அவர்களின் உடலில் பலவந்தமாக ஏற்றி விசாரிப்பதற்கு இந்திய உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இப்படியான இரசாயனங்களைப் பயன்படுத்துதல், மூளை செயற்பாட்டை கண்காணித்தல், உண்மை கண்டறியும் கருவியைப் பயன்படுத்துதல் போன்றவை தனி மனித சுதந்திரங்களை மீறுவதால் இவை சட்ட விரோதமானவை என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

விசாரணை அமைப்புக்களுக்கு இந்தத் தீர்ப்பு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

அதே நேரம், சம்பந்தப்பட்ட நபர் தானாக முன்வந்து அந்த சோதனைக்கு உட்படுத்திக் கொண்டால், அதன் மூலம் கிடைக்கும் தகவல்களை மேலதிக விசாரணைக்கு அதிகாரிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பல வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் சாதாரண முறையில் விசாரணை நடத்தும்போது, அவர்கள் உண்மையான தகவல்களைச் சொல்லாத நிலையில், மாற்று வழிமுறைகள் பயன்படுத்தப்படுகின்றன.

சர்ச்சைக்குரிய வழிமுறைகள்

* உடலில் மருந்தைச் செலுத்தி ஒருவரை தன்னிலை மறக்கச் செய்து உண்மைகளை வெளிக்கொணரும் முறை நார்கோ அனாலிஸிஸ் ஆகும்.
* விசாரிக்கப்படுபவரின் மூளைச் செயல்பாடுகளை அவதானித்து அவர் கூறும் விஷயங்களின் உண்மைத் தன்மையை நிர்ணயிப்பது பிரைன் மேப்பிங் ஆகும்.
* உடற்கூறு செயல்பாடுகளின் அடிப்படையில் ஒருவர் பேசுவது உண்மையா என்று கண்டறியும் முறை பாலிகிராஃப் ஆகும்.

நீதிமன்றம் தீர்ப்பு

இது போன்ற சோதனைகளுக்கு உட்படுமாறு எந்த ஒரு தனிநபரையும் வற்புறுத்த முடியாது. அவ்வாறு வற்புறத்துவது தனிநபரின் சுதந்திரத்தில் அத்துமீறி நுழைவதாகும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் தீர்ப்பளித்தது.

குற்றம் சாட்டப்பட்டவரையோ, குற்றத்தில் ஈடுபட்டதாக சந்தேகப்படுவோரையோ அல்லது சாட்சியம் அளிப்பவரையோ அதுபோன்ற சோதனைகளுக்கு வலுக்கட்டாயமாக உட்படுத்துவதை, அரசியல் சட்டப் பிரிவு 20 உட்பிரிவு மூன்றை மீறுவதாகும் என நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஒரு நபரின் சம்மதத்துடன் அந்த சோதனைகள் நடத்தப்பட்டாலும், அந்தத் தகவல்களை ஆதாரங்களாக ஏற்றுக்கொள்ள முடியாது என நீதிபதிகள் தெரிவிததுள்ளனர்.

உடற்கூறு அடி்படையில் உண்மை கண்டறியும் பாலிகிராஃப் சோதனையில் ஒரு நபரை ஈடுபடுத்தும்போது, தேசிய மனித உரிமை கமிஷன் அறிவித்துள்ள வழிகாட்டு முறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

ரஞ்சிதாவை விசாரிக்க உதவுமாறு நடிகர் சங்கத்திடம் கோரிக்கை



நித்தியானந்தாவுடன் பாலியல் புகாரில் சிக்கிய நடிகை ரஞ்சிதாவிடம் விசாரணை நடத்துவதற்குத் தமிழ்நாடு திரைப்பட நடிகர், நடிகைகள் சங்கத்தின் உதவியை நாடியுள்ளனர் கர்நாடக சிஐடி பொலிஸார்.

இது தொடர்பான வீடியோ காட்சி, தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பப்பட்டதையடுத்து, நித்தியானந்தாவும், ரஞ்சிதாவும் தலைமறைவானார்கள்.

நித்தியானந்தா மட்டும் இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். நித்தியானந்தா மீதான வழக்குகளுடன் சம்பந்தப்பட்டுள்ள ரஞ்சிதா மட்டும் இன்னமும் தலைமறைவாகவே உள்ளார்.

அவரைப் பிடித்து வாக்குமூலம் பெற சிஐடி பொலிஸார் முயன்று வருகின்றனர். ரஞ்சிதாவே பொலிஸாருடன் அண்மையில் தொடர்புகொண்டு, பெங்களூர் வருவதாகத் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் விசாரணைக்கு ஆஜராகுமாறு ரஞ்சிதாவுக்குப் பொலிஸார் அறிக்கை அனுப்பியுள்ளனர்.

ரஞ்சிதா இன்னமும் ஆஜராகாததால், அவரைத் தேடிக் கண்டுபிடித்து, விசாரணை நடத்துவதற்கு சென்னையில் உள்ள அவரின் வழக்கறிஞர் ஒருவரையும், தமிழ்நாடு திரைப்பட நடிகர், நடிகைகள் சங்க நிர்வாகிகளையும் சில நாட்களுக்கு முன் சந்தித்து உதவி கோரியுள்ளனர் சிஐடி பொலிஸார்.

அதற்கு அவர்களும், ரஞ்சிதா எங்கு இருக்கிறார் என்று அறிந்து, அவரைத் தொடர்பு கொண்டு விசாரணைக்கு அனுப்பி வைப்பதாக உறுதி அளித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

மஹரகமவில் சிரேஷ்ட ஊடகவியலாளர் மீது தாக்குதல்

'டெய்லி மிரர்' பத்திரிகையின் சிரேஷ்ட ஊடகவியலாளர் சந்துன் ஏ. ஜயசேகர இன்று காலை மஹரகமவில் வைத்துத் தாக்கப்பட்டுள்ளார்.

மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொண்ட வைபவம் தொடர்பாகச் செய்தி சேகரிக்கச் சென்றபோதே, பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் சிலர் இவரைத் தாக்கியதாக 'டெய்லி மிரர்' பத்திரிகை தெரிவித்துள்ளது.

மேற்படி வைபவ செய்தியைச் சேகரிப்பதற்கு, ஊடகத் துறைக்கான உத்தியோகபூர்வ அழைப்பிதழ் கிடைக்கப் பெற்றதையடுத்தே அவர் அங்கு சென்றதாகவும், கூறப்படுகிறது.

ஊடக அடையாள அட்டையைக் காண்பித்தும் உள்ளே சென்று செய்தி சேகரிக்கக் குறித்த ஊடகவியலாளருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும், பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் சிலர் அவரை தகாத வார்த்தைளால் ஏசியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலுக்கு இலக்கான ஊடகவியலாளர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக 'டெய்லி மிரர்' தெரிவிக்கின்றது.
மேலும் இங்கே தொடர்க...

விடுவிக்கப்பட்ட சிறார்களுக்கு மட்டக்களப்பில் புனர்வாழ்வுத் திட்டம்

மட்டக்களப்பில் ஆயுதக்குழுவில் இருந்து விடுவிக்கப்பட்ட சிறார்களுக்கு நீதியமைச்சில் புனர்வாழ்வு திட்டம் நடைபெறுகின்றது.

ஆயுதக் குழுக்களில் இருந்து விடுவிக்கப்பட்ட சிறார்களுக்கு புனர்வாழ்வளிக்கும் திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் நீதியமைச்சின் ஏற்பாட்டில் தற்போது அமுல்ப்படுத்தப்பட்டு வருகின்றது.

நீதியமைச்சு ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியமான யுனிசெப் நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்துக்கமைய இந்த புனர்வாழ்வு திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.

இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே 33 சிறார்கள் விடுவிக்கப்பட்டு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வருகின்றது. இச்சிறார்களுக்கு விசேட தொழிற்பயிற்சி வழங்கப்பட்டு வருவதுடன் பயிற்சியினைப் பூர்த்தி செய்தவர்களுக்குத் தொழில் உபகரணங்கள், சர்வதேச தொழிலாளர்கள் அமைப்பின் உதவியில் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட ஊடகப்பிரிவு தெரிவிக்கின்றது.

இந்தச் சிறுவர் போராளிகளின் புனர்வாழ்வுத் திட்டத்தின் முன்னேற்றங்கள் பற்றி ஆராயும் விசேட கூட்டமொன்று இன்று மட்டகளப்பு மாவட்டச் செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது
மேலும் இங்கே தொடர்க...

கடற்படைத் தலைமையகத்தில் சரத் பொன்சேகா இன்று உண்ணாவிரதம்!



இன்றைய நாடாளுமன்ற அமர்வுகளில் பங்குபற்ற அனுமதி அளிக்காததைக் கண்டித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஜெனரல் சரத் பொன்சேகா,கடற்படைத் தலைமையகத்தில் உண்ணாவிரதம் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜனநாயக தேசிய முன்னணியின் ஊடகப்பிரிவு எமது வீரகேசரி இணையத்தளத்திற்கு இதனை உறுதி செய்துள்ளது.

சரத் பொன்சேகா மீதான குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யவென அமைக்கப்பட்டுள்ள இரண்டாவது இராணுவ நீதிமன்றம் இன்று நண்பகல் மீண்டும் கூடவுள்ளது.

கடற்படைத் தலைமையகத்தில் நேற்று பிற்பகலில் இடம்பெற்ற இரண்டாவது இராணுவ நீதிமன்ற விசாரணைக்கு ஜெனரல் சரத் பொன்சேகா சமூகமளித்திருக்கவில்லை. அவருக்குப் பதிலாக அவருடைய சட்டத்தரணிகள் இரண்டாவது நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.

நேற்றைய நாடாளுமன்ற அமர்வுகளில் முழுமையாகப் பங்குகொள்ள தனக்கு அனுமதி வழங்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் ஜெனரல் சரத் பொன்சேகா சபாநாயகரிடம் கேட்டுக் கொண்டார்.

இதற்கமைய சரத் பொன்சேகா, அமர்வுகள் முடியும் வரை நாடாளுமன்றத்தில் இருக்கலாமென சபாநாயகர் அனுமதி வழங்கியிருந்தார்.
மேலும் இங்கே தொடர்க...

அதிகார துஷ்பிரயோகம் செய்தவர் என்பதை பொன்சேகா ஏற்க வேண்டும்


வைராக்கிய அரசியலையும் கைவிடக் கோரிக்கை



சரத் பொன்சேகா இராணுவத் தளபதியாக பதவி வகித்த போது அதிகாரத்தைப் பயன்படுத்தி அரச நிதியைத் தவறாகக் கையாண்ட தாலேயே அவர் இன்று சிறைக் கைதியாகியுள்ளார் என மஹிந்தானந்த அலுத்கமகே எம்.பி. பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று அவசரகால சட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், தமதுரையில் மேலும் தெரிவிக்கையில்:

சரத் பொன்சேகா தாம் அரசியல் சிறைக்கைதி என தன்னை வர்ணிப்பதை விடுத்து அவர் இராணுவத் தளபதி அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்தவர் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அத்துடன் வைராக்கிய அரசியலைக் கைவிடவேண்டும்.
மேலும் இங்கே தொடர்க...

கிராம மட்ட அபிவிருத்தியை முன்னெடுக்காவிடின் மீண்டுமொரு புரட்சி ஏற்படுவதை தவிர்க்க முடியாது


அவசரகால சட்டத்தில் அதிகம் பாதிக்கப்பட்டது இளைஞர், யுவதிகளே - நாமல்



நாட்டிற்காக, நாட்டின் ஒருமைப்பாட்டிற்காக குரல் கொடுக்கக் கூடிய இளைஞர் சமுதாயம் ஒன்றை உருவாக்க வேண்டும். எதிர்கால சந்ததியினருக்கு அவசரகாலச் சட்டம் அற்ற நாட்டை உருவாக்குவோம் என அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது கன்னி உரையில் தெரிவித்தார்.

அவசர காலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பது தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே நாமல் ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நேற்று பாராளுமன்றம் கூடியது. பிரதமர் டி. எம். ஜயரட்ன அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்கான பிரேரணையை சபையில் சமர்ப்பித்துப் பேசினார். இதனைத் தொடர்ந்து நாமல் ராஜபக்ஷ எம். பி. உரையாற்றினார்.

அவர் தொடர்ந்தும் உரையாற் றுகையில் :- அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கிறேன். எனினும் பயங்கரவாதம் முழுமையாக அணைந்துவிடவில்லை. இன்னும் நீறுபூத்த நெருப்பாக எரிந்துகொண்டு தான் உள்ளது. எனவே அவசரகாலச் சட்டம் படிப்படியாக அகற்றப்பட வேண்டும்.

அவசரகாலச் சட்டம் இறுதியாக 2005ஆம் ஆண்டுகளில் அமைச்சர் லஷ்மன் கதிர்காமரின் படுகொலையுடன் தான் அமுலுக்கு வந்தது. என்னுடைய வயதையும் விட கூடுதல் வயது இந்த அவசரகாலச் சட்டத்துக்கு உள்ளது.

வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட நாடு முழுவதுமுள்ள என்னைப் போன்ற சகோதர, சகோதரிகள் அனைவரும் அவசரகாலச் சட்டத்தினுள் தான் வாழ்ந்தார்கள்.

இளைஞர், யுவதிகள் தான் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். இந்த அவசரகாலச் சட்டத்தை நீக்க வேண்டியதன் நேரம் நெருங்கியுள்ளது- எனினும் உடனடியாக செய்ய முடியாது.

பயங்கரவாதம் தோன்றியதற்கான அடிப்படை என்ன என்பது பற்றி பார்ப்போமானால் முன்னேற்றமடையாத கஷ்டப் பிரதேசம் தான் பயங்கரவாதிகளின் பிறப்பிடமாக இருந்துள்ளது.

குறிப்பாக திசேகுவேராவும் இவ்வாறான கருத்தைத்தான் கூறியிருந்தார். பின்தங்கிய, கஷ்டப் பிரதேசத்திலிருந்து தான் புரட்சிகள் ஆரம்பமாகியுள்ளன.

இதனையே பிரபாகரனும் தெரிவித்திருந்தார். பின்தங்கிய கஷ்டப் பிரதேசத்திலிருந்து வரும் இளைஞர்கள், யுவதிகளே தனது அமைப்பில் தங்கி இருப்பவர்கள் என்றும், வசதியாக நகர்ப்புறத்தில் வாழ்பவர்கள் தங்குவதில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.

கஷ்டப் பிரதேசம், என்ற சொல்லுக்கு இடமில்லாமல் கிராம மட்டத்தில் அபிவிருத்தி முன்னெடுக்கப்படல் வேண்டும். எமக்கு கிடைத்த சுதந்திரத்தை சரியான முறையில் பயன்படுத்துவதுடன் இந்நாட்டின் இளம் சமுதாயத்திற்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும்.

கிராம மட்டத்தில் அபிவிருத்தியை முன்னெடுக்காவிடின் மீண்டும் ஒரு புரட்சி, அல்லது கெரில்லா அமைப்பு உருவாவதை தடுத்துவிட முடியாது என்றும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். 1948ம் ஆண்டு லக்ஷ்மன் ராஜபக்ஷவையும், 1970 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும், 2010 ஆம் ஆண்டு தன்னையும் மிகவும் குறைந்த இளம் வயதில் பாராளுமன்றத்துக்கு அனுப்புவதற்காக வாக்களித்த அம்பாந்தோட்டை மக்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக நாமல் ராஜபக்ஷ தனது கன்னிப் பேச்சை ஆரம்பிக்கும் போதே தெரிவித்தார்.

அம்பாந்தோட்டையில் உட்கட்டமைப்பு வசதிகள் ஒழுங்காக இல்லை. வீதிகள் அனைத்தும் குண்டும் குழியுமாக இருக்கிறது என 1954 ஆம் ஆண்டு டி. ஏ. ராஜபக்ஷ இந்த சபையில் தெரிவித்திருந்தார்.

1970 ஆம் ஆண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இவ்வாறான கூற்றை இந்தச் சபையில் தெரிவித் திருந்தார். கிராம அபிவிருத்தி, உட் கட்டமைப்பு வசதிகளை மேம்படு த்த வேண்டும் என்ற தேவை அன்றே உணரப்பட்டது என்றும் நாமல் ராஜபக்ஷ எம்.பி. தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

சர்வதேச ரீதியில் பலமடையும் பயங்கரவாத வலையமைப்பை முறியடிப்பதே முக்கிய பணி


அவசரகால சட்டத்தை சமர்ப்பித்து பிரதமர் உரை



சரணடைந்த அடையாளம் காணப்பட்ட 1300 பயங்கரவாதிகளில் 300 பேர் மேலதிக விசாரணைகளின் பின்னர் பூஸா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டாலும் சர்வதேச மட்டத்தில் தலைதூக்கி வரும் பயங்கரவாத வலையமைப்பு முறியடிக்கப்படுதல் இன்றைய முக்கிய தேவையாக இருக்கிறது என பிரதமர் டி.எம். ஜயரட்ன தெரிவித்தார்.

அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதகாலத்துக்கு நீடிப்பது தொடர்பான பிரேரணையை சபையில் சமர்ப்பித்துப் பேசும்போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார். சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் பாராளுமன்றம் நேற்று கூடியது. பிரதமர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

இலங்கையில் இன்று பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டாலும் சர்வதேச ரீதியில் பலமடைந்து வருவது தெரிகிறது. நிதி சேகரிப்பு போன்றன அதிகரித்து வருவதையும் உணரக்கூடியதாக உள்ளது.

புலிகள் இன்று மூன்று பிரிவுகளாக சர்வதேச மட்டத்தில் இயங்குகிறார்கள். ருத்ரகுமாரன் தலைமையில் சுவிஸில் அமைப்புகளை உருவாக்கவும், இலங்கையில் சில அரசியல்வாதிகளுக்கு ஆதரவு வழங்கியும் பிரான்ஸிலும் சில நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள் இவ்வாறு செயற்படுவது இலங்கையில் ஈழம் ஒன்றை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு செயற்படுகின்றனர். இந்த புலிகளின் சர்வதேச வலையமைப்பை முறியடிப்பதே எமது அடுத்தகட்டமாக இருக்கிறது.

அரசாங்கத்திடம் சரணடைந்த சுமார் 10,350 புலிகளுக்கு புனர்வாழ்வு அளிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. புனர்வாழ்வளிக்கப்பட்டு வரும் இவர்கள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது 2400 பேரளவில் விடுவிக்கப்பட்டும் உள்ளனர்.

அவசரகாலச் சட்டம் இல்லாத ஒரு யுகத்தையே அனைவரும் விரும்புகின்றோம். எனினும் அடிப்படை உரிமைகளை மதிக்கக்கூடிய தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத திருத்தங்களூடான அவசரகாலச் சட்டத்தை இங்கு சமர்ப்பிக்கிறேன் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

ஊரடங்கு சட்டம் வீதிச் சோதனை பொலிஸ் பதிவு வீடுகளில் தேடுதல் அவசரகால சட்டத்தின் 38 விதிகள் முற்றாக நீக்கம்


அவசரகால சட்டத்தில் மக்களின் நாளாந்த வாழ்வுடன் சம்பந்தப்பட்டிருந்த 38 ஒழுங்கு விதிகள் நேற்றுடன் முற்றாக நீக்கப்பட்டுள்ளன. பயங்கரவாதம் முழுமையாக ஒழிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த ஒழுங்கு விதிகளை நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றார்.

பல வருடங்களாக நடைமுறையில் இருந்து வந்த இந்த ஒழுங்கு விதிகள் நீக்கப்படுவ தால் நாட்டு மக்கள் பாரிய நன்மை பெற்றுக்கொள்ளு வார்கள் என்று பிரதமர் டி. எம். ஜயரட்ன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் இந் நடவடிக்கையை சகல மக்களும் வரவேற்றுள்ளனர். அவர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரி விக்கின்றனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இந்நடவடிக்கையின் கீழ் அவசரகாலச் சட்டத்தில் நீக்கப்பட்டுள்ள ஒழுங்கு விதிகளில் பின்வருவன பிரதானமானவை.

ஊரடங்குச் சட்டம், வீடுகளில் குடியிருப்பவர்கள் பொலிஸில் பதிவு செய்யும் நடைமுறை, தனியார் கட்டடங்க ளிலும் வீடுகளிலும் தேடுதல் நடத்துதல், வீதிப் போக்குவரத்து ஒழுங்குகளில் வீதித் தடைச் சோதனை உட்பட படையி னரின் பங்களிப்பு. அச்சிடுதல், விநியோகி த்தல், அவசரகாலச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவருவது தொடர்பாக சபையில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவிக்கையில் :- அவசரகால சட்டத்தைத் தொடர்ந்தும் நடை முறையில் வைத்திருப்பது அரசாங்கத்தின் நோக்கமல்ல. என்றாலும் அதனை உடன டியாக முழுமையாக நீக்க முடியாது.

அவசரகால சட்டத்தில் தேவையான சில ஒழுங்கு விதிகள் மட்டுமே இனிமேல் நடைமுறைப்படுத்தப் படும். தற்போதைய சூழ்நிலையில் அவசியமில்லை யெனக் கருதப்பட்ட சகல ஒழுங்கு விதிகளும் நீக்கப்பட்டுள் ளன. அவசரகால சட்டத்தைத் தொடர்ந்தும் நடைமுறையில் வைத்திருக்க முடியாது. எனினும் அதனை உடனடியாக முழுமையாக நீக்கவும் முடியாது. சில ஒழுங்கு விதிகள் நடைமுறைப்படுத்த வேண்டிய தேவையுள்ளது.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் 14வது ஒழுங்கு விதிகளின் கீழ் சில நடைமுறைகள் உள்ளன. பொலிஸ் பாதுகாப்பு நடைமுறையின் கீழ் வீட்டு உரிமையாளர்கள் குடும்பத்தினரின் பட்டியலை பொலிஸில் சமர்ப்பிக்க வேண்டியது அவசியமில்லை. கடந்த அச்சுறுத்தலான காலங்களில் இதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது. இன்று அது அவசியமில்லை. இதனால் இந்த ஏற்பாடுகள் அவசரகால சட்டத்திலிரு ந்து நீக்கப்படுகிறது. இதுபோன்ற பல சரத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

நாட்டில் சுற்றுலாத்துறை முன்னேற்றம் கண்டு வருகின்றன. தென்னாபிரிக்க மீளிணக்கக் குழு போன்றதாக மீளிணக்க ஆணைக்குழு இங்கு நியமிக்கப்பட்டு, கடந்த கால அச்சங்கள் நீக்கப்பட வேண்டும் என்பதில் நாம் கவனம் கொண்டுள்ளோம்.
மேலும் இங்கே தொடர்க...