10 பிப்ரவரி, 2011

விடுதலைப் புலிகள் ஆதரவாளர் என்ற சந்தேகத்தின் பேரில் ஐவர் கைதுவிடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மட்டக்களப்பைச் சேர்ந்த ஐவர் தம்புள்ளையில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தம்புள்ளை கண்டலம பிரதேச ஹோட்டல் ஒன்றில் தங்கி இருந்த போதே இவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

கைதின் போது இவர்களிடம் இருந்து விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் பாடல்கள், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த சில குழந்தைகளுடைய புகைப்படங்கள் மற்றும் வேறு சில ஆவணங்கள் அடங்கிய சீ.டீ என்பன கைப்பற்றப்பட்டதாக பொலீஸார் தெரிவித்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

மட்டக்களப்பு வவுணதீவு பாதை சீரமைப்புப் பணியில் புளொட் உறுப்பினர்கள்- படங்கள் இணைப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கடும்மழை காரணமாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்;லுதல், மக்களின் அத்தியாவசிய போக்குவரத்து, நோயாளர்களை ஏற்றி இறக்குதல், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வைத்தியர்களை அழைத்துச் சென்று வருதல், மருத்துவ உதவிகள் போன்ற பணிகளுக்கு நான்கு இயந்திரப் படகுகளைக் கொண்டு புளொட் உறுப்பினர்கள் உதவி வருகின்றனர். அத்துடன் பல்வேறு பகுதிகளின் நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு சமைத்த உணவினையும் வழங்கி வருகின்றனர். புளொட் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் திரு.சூட்டி, உதவி அமைப்பாளர் திரு.கேசவன் உட்பட 30ற்கும் மேற்பட்ட புளொட் உறுப்பினர்கள் கடந்த ஒருவாரமாக இப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கொக்கட்டிச்சோலை, நாவற்காடு, வவுணதீவு, கரவெட்டி, கன்னங்குடா, சேத்துக்குடா, புதூர், ஈச்சந்தீவு, குறிஞ்சாமுனை, காரையாக்கன்தீவு, கொத்தியாவளை ஆகிய பிரதேசங்களிலேயே புளொட் உறுப்பினர்கள் இப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மட்டக்களப்பு நகரையும் வவுணதீவு பிரதேசத்தையும் இணைக்கும் வலையிறவு பாலம் ஊடான வீதி கடும்மழை காரணமாக பழுதடைந்து காணப்படுவதால் இன்று அவ்வீதியினை சீர்ப்படுத்தும் பணிகளில் வவுணதீவு பிரதேச செயலகத்துடன் இணைந்து புளொட் உறுப்பினர்களும் ஈடுபட்டுள்ளனர். நேற்றையதினம் ஈச்சந்தீவு, நாவற்காடு, கரவெட்டி பிரதேசங்களில் தங்கியுள்ள மக்களுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட சமைத்த உணவுப் பொதிகளையும் புளொட் உறுப்பினர்கள் வழங்கியதுடன், நேற்று வவுணதீவு பிரதேசத்தில் இடம்பெயர்ந்த மக்களுக்கு குடிநீரையும் புளொட் உறுப்பினர்கள் வழங்கியுள்ளனர்.


மேலும் இங்கே தொடர்க...

ரஸ்யாவில் இளம் பெண்களின் இரத்தத்தைச் சுவைத்த மர்ம நபர் கைதுரஸ்யாவில் இளம் பெண்களின் கழுத்தின் பின்புறத்தினை கூரிய ஆயுதத்தினால் காயப்படுத்தி அவர்களின் இரத்தத்தை குடித்து வந்த மர்ம நபர் ஒருவரை அந்நாட்டுப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

உக்ரேன் நாட்டைச் சேர்ந்த 28 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நபர் 18 முதல் 28 வயது வரையிலான பெண்களின் கழுத்தின் பின் பகுதியினை கூரிய ஊசி, சவர அலகு போன்றவற்றால் காயப்படுத்தி வந்துள்ளார்.

பின்னர் அவர்களின் இரத்தத்தை நக்கி சுவைத்ததன் பின்னர் கூட்டத்தினுள் சென்று மறைந்து விடுவதாக பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலுக்குள்ளான சுமார் 15 பெண்களும் எச்.ஐ.வி பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கைக்கு புதிய ரயில் பெட்டிகள்
இந்தியாவில் இருந்து 784 கோடி ரூபா பெறுமதியான அதி நவீன புகையிரத பெட்டிகளில் மூன்று பெட்டிகள் இன்று கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்தன.

இப் புகையிரம் பெட்டிகள் காலி-மாத்தறை அதிவேக புகையிரத சேவைக்கு பயன்படுத்தப்படவுள்ளன. மொத்தம் 20 தொகுதிகள் இந்தியாவில் இருந்து வரவுள்ளததாக போக்குவரத்துத் திணைக்களம் தெரிவிக்கிறது.
மேலும் இங்கே தொடர்க...

கப்பலினால் கனடா அரசுக்கு 25 மில்லியன் டொலர் செலவு

கடந்த ஆகஸ்ட் மாதம் பிரிட்டிஷ் கொலம்பிய கரைக்கு அகதிகளை கொண்டு வந்த கப்பலினால் கனடியர்களுக்கு 25 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவு ஏற்பட்டுள்ளது. இந்த கப்பலில் 492 இலங்கைத் தமிழ் அகதிகள் வந்திருந்தனர். இவர்கள் தமக்கு அகதி அந்தஸ்து வழங்க வேண்டுமெனக் கோருகின்றனர்.

இவர்களை விசாரிப்பதற்காக மாத்திரம் 908,000 அமெரிக்க டொலர் செலவானதாக கூறப்பட்டுள்ளது. இவர்களுக்கு சட்ட ஆலோசனைக்கு 2 மில்லியன் டொலர் செலவாகியது. சமஷ்டி அரசாங்கம் மருத்துவ கவனிப்புக்காக செலவு செய்தது. இவை முதலில் கூறிய 25 மில்லியனுள் அடங்காதவை.

கனேடிய மத்திய அரசு இவ்வாறு தொகையான அகதிகள் வருகையைத் தடுப்பதற்காக கொண்டு வரவுள்ள சட்டத்தை எதிர்க்கட்சிகள் மனிதாபிமானமற்றவையென்றும் அரசியலமைப்புக்கு முரணான தெனவும் கூறி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

நாட்டில் ஏப்ரல் மாதத்தின் பின்னர் பாரிய உணவுத்தட்டுப்பாடு ஏற்படும்


இலங்கையில் ஏப்ரல் மாதத்திற்கு பின்னர் பாரியளவு உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, அரசாங்கம் நாட்டு மக்களுக்கு பொய் உரைக்காது உண்மையான நிலைவரங்களை வெளியிட வேண்டும் என்று அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி கோரியுள்ளது.

வெள்ளப் பாதிப்பேற்பட்ட பிரதேசங்கள் உட்பட நாட்டின் சகல பிரதேசங்களிலும் மரவள்ளி மற்றும் வத்தாளை போன்ற கிழங்கு வகைகளை பயிரிட பொது மக்களை அரசாங்கம் உடனடியாக ஊக்குவிக்க வேண்டும். அப்போதுதான் ஏற்படப் போகும் ஆபத்துக்களில் இருந்து நாட்டைகாக்க முடியும் என்றும் அம் முன்னணி குறிப்பிட்டுள்ளது.

பத்தரமுல்லையில் அமைந்துள்ள தேசிய சுதந்திர முன்னணியின் அலுவலகத்தில் நேற்று பதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது. இங்கு உரையாற்றிய அக்கட்சியின் பேச்சாளரும் முன்னாள் அமைச்சருமான பியசிறி விஜேநயக கூறுகையில்,

முழு உலகமுமே காலநிலை மாற்றத்தினால் பல்வேறு வகையில் இயற் கை அனர்த்தங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றது. இந்த அனர்த்தங்களினால் பாரிய உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் என்று ஐ.நா. உள்ளிட்ட பல அமைப்புகள் எதிர்வு கூறியுள்ள இந்த நிலை இலங்கைக்கும் உள்ளது. இலங்கையில் ஏற்பட்ட அடை மழை, வெள்ளம் காரணமாக 50 சதவீதமான விவசாய நிலங்கள் முழு அளவில் அழிந்தும் ஏனைய உற்பத்திகள் பாதிக்கப்பட்டும் உள்ளன. எனவே களஞ்சியசாலைகளில் உள்ள இருப்புகள் தேசிய உணவுப் பற்றாக்குறையை தடுக்க போதுமானதல்ல. மீண்டும் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு உற்பத்திகளை பெறும்வரை மாற்று வழிகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்.

போலியான தரவுகளை வெளியிட்டு தேர்தல் நன்மைக்காக மக்களை காட்டிக் கொடுக்கமுடியாது. இன்று அரசாங்கத்திற்குள் பொருளாதார துரோகிகள் உள்ளனர். எனவே குறுகியகாலத்திற்குள் பயன்தரக் கூடிய மரவள்ளி மற்றும் வத்தாளை போன்ற கிழங்கு வகைகளை பயிரிட மக்களை வழி நடத்த வேண்டும் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

அமைச்சர் பீரிஸின் 13 வெளிநாட்டு பயணங்களுக்கு 65 இலட்சம் ரூபா செலவு

2010 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் திகதி வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸின் வெளிநாட்டுப் பயணங்களுக்காக 65 இலட்சம் (65,14,217) ரூபாவுக்கும் அதிகமான தொகை செல விடப்பட்டிருப்பதாக அரசாங்கம் நேற்று பாராளுமன்றத்தில் அறிவித்தது.

பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இதுவரையில் 13 தடவைகள் வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ள அரசாங்கம் அமைச்சருக்கான செலவாக 31,04162 ரூபாவும் அவருடன் சென்றவர்களுக்காக 34,10055 ரூபாவும் செலவாகியிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

பாராளுமன்றம் புதன் கிழமை பி.ப. 1.00 மணிக்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் கூடியது. இதன் போது வாய் மூல விடைக்கான கேள்வி நேரத்தில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் அமைச்சர் பேராசிரியர் பொறுப்பேற்றதில் இருந்து அவர் எத்தனை தடவைகள் வெளிநாட்டில் பயணங்களை மேற் கொண்டிருந்தார் என்றும் இதற்கான செலவு விபரங்கள் தொடர்பிலும் ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பி.யுமான ரவி கருணாநாயக்கவினால் எழுப்பப்பட்டிருந்த கேள்விகளுக்கு வெளிநாட்டு அமைச்சினால் சமர்ப்பிக்கப்பட்டிருந்த பதிலிலே மேற் கண்ட தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

நிபுணர் குழு நிச்சயம் இலங்கை செல்லும்

இலங்கைக்கு நிபுணர் குழு விஜயம் செய்யும் என ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்விக்கே அவர் இவ்வாறு பதில் அளித்துள்ளார்.

மேலும் தற்போதும் கூட நிபுணர் குழு இலங்கையில் தமது பணி தொடர்பிலான கலந்துரையாடல்களில் உள்ளதாகவும் எப்படியிருப்பினும் அவர்கள் இலங்கை செல்ல முயற்சிப்பார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

அனர்த்தங்களுக்கு முகம் கொடுக்க நீண்டகால வேலைத்திட்டம்;: ஜனாதிபதி பணிப்பு சுற்றாடல் பாதுகாப்பு சட்டங்களை கடுமையாக்க நடவடிக்கை


இயற்கை அனர்த்தங்களுக்கு முகம்கொடுப்பதற்கு ஏற்ற வகையிலான நீண்டகால வேலைத்திட்டத்தைத் தயாரிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

சுற்றாடலின் பாதுகாப்பை தூரநோக்கில் கருத்தில் கொள்ளாது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளின் விளைவாகவே உலகம் இப்போது இயற்கை அனர்த்தங்க ளுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் குறிப்பிட்டார். நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ குழுவினருடன் அலரி மாளிகையில் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இக்கலந்துரையாடலின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மேலும் கூறுகையில், மலையகப் பிரதேசங்களிலுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் சட்ட ஏற்பாடுகளைச் சரியான முறையில் செயற்படுத்தாததன் விளைவாகவே மலையகப் பிரதேசங்களில் அடிக்கடி அனர்த்தங்கள் ஏற்படுகின்றன. அத்தோடு சட்டவிரோத கட்டடங்களும் சட்டப்படி அனுமதி பெறாத இடங்களில் பயிர்ச் செய்கையை மேற்கொள்ளும் நடவடிக்கையும் இங்கு இயற்கை அனர்த்தங்களை ஏற்படுத்துகின்றது.

அதனால் எதிர்காலத்தில் சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பான சட்டங்களைக் கடுமையாக செயற்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். இதனை செயற்படுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்க அதிகாரிகளுடையதாகும். தவறும் பட்சத்தில் ஏற்படுகின்ற சுற்றாடல் பிரச்சினைகளுக்கு அவர்கள் பொறுப்புக்கூற வேண்டியவர்களாகவே கருதப்படுவர்.

உலகம் முழுவதும் சுற்றாடலில் மாற்றம் ஏற்படுகின்றது. இதனைக் கருத்தில் கொண்டு இயற்கை அனர்த்தங்களைக் குறைப்பதற்காக உறுதியான, நீண்டகால தீர்வுத் திட்டம் தயாரிக்கப்படுவது அவசியம். இதற்காக விஞ்ஞானிகளினதும், பல்கலைக்கழகங்களினதும் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

பூமியால் உறிஞ்சிக்கொள்ள முடியாதளவுக்கு நீர் மட்டம் உயர்ந்திருப்பதால் தான் மண்சரிவுகள் ஏற்படக் காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. அதனால் விஞ்ஞான பூர்வமாக ஆய்வுகளை மேற்கொண்டு தேவையான தீர்வுகளைத் தயாரிக்க வேண்டும். அதேநேரம், தற்போதைய காலத்திற்குப் பொருத்தமான நீர்ப்பாசன திட்டத்தையும் ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.

நுவரெலிய மாவட்டத்தில் உடமாதுர, கும்பல்கம, தியனில்ல போன்ற பிரதேசங்களில் சுமார் 497 குடும்பங்கள் மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன. அவர்களுக்குத் துரிதமாக நிவாரணம் வழங்குமாறும் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீளக்குடி யேற்றப் பொருத்தமான இடங்களை இனம் காணுமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

இக்கூட்டத்தில் அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, ஆறுமுகன் தொண்டமான், சி.பி. ரட்நாயக்க உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.
மேலும் இங்கே தொடர்க...

தமிழ் பேசும் பொலிஸார் 2500 பேர் விரைவில் நியமனம்


பொலிஸ் சேவையில் மேலும் 2500 தமிழ், முஸ்லிம் இளைஞர், யுவதிகளை இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிஸ் மா அதிபர் கலாநிதி மஹிந்த பாலசூரிய தெரிவித்தார்.

ஏற்கனவே கொன்ஸ்டபிள் தரத்தில் 500 பேரை இணைத்துக் கொண்டுள்ளதுடன், புதிதாக உப பரிசோதகர்கள், பெண் பொலிஸ் பரிசோதகர்கள், பெண் கொன்ஸ்டபிள்கள் நியமிக்கப்படவுள்ளதாகவும், தற்போது அதற்கான நேர்முகத் தேர்வுகள் நடைபெற்று வருவதாகவும், பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.

அரச கரும மொழிகள் ஆணைக்குழுவால் மும்மொழிகளிலும் வெளியி டப்பட்டுள்ள பொலிஸாருக் கான உரையாடல்கள் அடங் கிய கைநூலை பொலிஸ் திணைக்களத்திற்கு உத்தியோகபூர்வமாகக் கையளிக்கும் வைபவத்தில் கலந்து கொண்டு பொலிஸ் மா அதிபர் இதனைத் தெரிவித்தார்.

தேசிய மொழிகள், சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் தலைமையில் கொழும்பு தொழில்வாண்மை யாளர்களின் அமைப்பின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அமைச்சின் செயலாளர் திருமதி மல்காந்தி விக்கிரமசிங்க, அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் தலைவர் என். செல்வகுமாரன், முன்னாள் தலைவர் ராஜா கொல்லுரே, கனேடிய உயர் ஸ்தானிகர் புறூஸ் லெவி, பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ண ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கனேடிய அரசின்- சீடா நிறுவனத்தின் அனுசரணையில் பொலிஸாருக்கான உரையாடல் நூல் மூன்று மொழிகளிலும் அச்சிடப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக பொலிஸ் திணைக் களத்திற்கென 65 ஆயிரம் பிரதிகள் அச்சிடப்பட்டுள்ளதுடன் அவற்றை பொலிஸ் நிலையங்களுக்குப் பெற்றுக் கொடுப்பதற்கான வைபவத்தை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (11) பொலிஸ் தலைமையகத்தில் ஏற்பாடு செய்வதாகவும் இங்கு அறிவித்த பொலிஸ் மா அதிபர், பொலிஸாருக்கு ஆங்கில மொழி பயிற்சி நெறியொன்றை எதிர்வரும் மார்ச் மாதம் 15 ம் திகதிக்கு முன்னர் ஆரம்பிக்கவுள்ள தாகவும் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

யாழ், கிளிநொச்சி மாவட்டங்கள்: ரூ. 17,880 மில்லியனில் பாரிய குடிநீர்த்திட்டம் ஆசிய அபி. வங்கியுடன் ஒப்பந்தம் கைச்சாத்து

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களுக்கான குடிநீர்த்திட்டங்க ளை மேற்கொள்வதற்காக 17,880 மில்லியன் ரூபா செலவில் பாரிய செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வுள்ளன.

இத்திட்டத்திற்கென ஆசிய அபிவிருத்தி வங்கி 9,810 மில்லியன் ரூபா நிதியுதவியை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளதுடன் இதற்கான உடன்படிக்கையொன்று செவ்வாயன்று கைச்சாத்திடப்பட்டது.

அரசாங்கத்தின் சார்பில் நிதியமைச்சின் செயலாளர் பி.பி. ஜயசுந்தரவும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் சார்பில் அந்த வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் கலாநிதி ரிச்சர்ட் டபிள்யூ. சொக்ஸ் ஆகியோரும் இவ் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர். இத்திட்டத்தின் மூலம் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் 60,000 குடிநீர் குழாய் இணைப்புக்கள் வழங்கப்படவுள்ளதுடன் இதன் மூலம் 3000,000 பேர் நன்மையடை யவுள்ளனர். அதேவேளை யாழ். மாநகர சபைக்குட்பட்ட பிரதேசத்தில் 20,000 வீடுகளைச் சேர்ந்த 80,000 பேர் நன்மைய டையும் வகையில் விசேட திட்டமொன்றும் நடைமுறைப்படுத்தப்பட வுள்ளது.

மேற்படி திட்டங்களுக்கான முழுமையான முதலீடு 17,880 மில்லியன் ரூபாவாகும். இதில் 9,810 மில்லியன் ரூபாவை ஆசிய அபிவிருத்தி வங்கியும் 5,232 மில்லியன் ரூபாவை பிரான்ஸ் அபிவிருத்தி நிறுவனமும் வழங்கவுள்ளன. அத்துடன் விவசாயத்துறை அபிவிருத்திக்காக சர்வதேச நிதியம் 2,180 மில்லியன் ரூபாவை வழங்கவும் இணக்கம் தெரிவித்துள்ளது. இத்திட்டங்களுக்கென இலங்கை அரசாங்கம் 26.4 அமெரிக்கன் டொலரைச் செலவிடவுள்ளதாக நிதி திட்டமிடல் அமைச்சு தெரிவித்தது.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்க ளுக்கான குடிநீர் விநியோகத்தை மேம்படுத் தல் யாழ். மாநகர சபைக்குட்பட்ட பிரதேச மக்களின் குடிநீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு காணல் யாழ்ப்பாணம் நீர் முகாமைத்துவ செயற்திட்டங்களைப் பலப்படுத்தல் இதற்கான நீரைப்பெற்றுகொள்வதற்காக இரணைமடு குளத்தை புனரமைத்தல் மற் றும் அப்பகுதி விவசாயிகளின் நீர்ப்பாசனத் தேவையை நிவர்த்தி செய்தல் ஆகியன இச் செயற்திட்டத்தின் எதிர்கால நோக்கமாகும். 2017 ஆம் ஆண்டு பெப் ரவரி 14 ஆம் திகதி இத்திட்டங்கள் முழுமையாக நிறைவு செய்யப்படவுள்ளதாக வும் நிதியமைச்சு தெரிவித்தது.
மேலும் இங்கே தொடர்க...

விலை நிர்ணயத்தை மீறும் வர்த்தகர்கள் கைது செய்யப்படுவர
நாடு, சிவப்பரிசி, வெள்ளை அரிசிகளை ஒரு கிலோ 60 ரூபாவிற்கும் சம்பா 70 ரூபாவிற்கும் அதிகமாக விற்பனை செய்யப்படும் வர்த்தகர்களை கைது செய்வதற்கு நாடெங்கிலும் அரசாங்கத்தினால் வேலைத் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டு ள்ளது.

அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிகமாக விற்பனை செய்யும் வர்த்தகர்களை கைது செய்வதற்கு தீர்மானித்திருப்பதாக கூட்டுறவு மற்றும் வர்த்தக நுகர்வோர் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னண்டோ நேற்றுத் தெரிவித்தார்.

வர்த்தகர்கள் அரிசியின் விலையை வேண்டுமென்றே அதிகரித்து விற்பனை செய்வதாக அமைச் சுக்கு கிடைத்த தகவலின் அடிப் படையிலேயே இத்தீர்மானத்தை எடுத்ததாக அமைச்சர் தெரிவித்தார்.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் மக்கள் பல்வேறு துன்பங்களை எதிர்நோக்கி வருகின்ற வேளையில், வேண்டுமென்றே இவ்வாறு அரிசியின் விலையை அதிகரிப்புச் செய்து விற்பனை செய்யும் வர்த்தக எதிராக அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

மன்னாரில் பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை


மன்னாரில் நுகர்வோர்களுக்கான அத்தியாவசிய பொருட்களுக்கு எவ்வித தட்டுப்பாடுகளும் இல்லை என்று கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் மன்னார் மதவாச்சி பாதையின் போக்குவரத்து மடு பகுதியில் துண்டிக்கப்பட்டுள்ளதால், மன்னாருக்கான வெளிமாவட்ட போக்குவரத்துகள் துண்டிக்கப்பட்டிருந்தன.

பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் வீதி அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள் எடுத்துக் கொண்ட முயற்சியின் பலனாக மடு பரப்புக்கடந்தான், ஆண்டாங்குளம் ஊடான உயிலங்குளம் ஊடாக உள்ள சிறிய பாதையொன்று அவசர போக்கு வரத்துக்காக திறந்து விடப்பட்டது.

இதனால், மன்னார் பகுதியில் அத்தியாவசிய பொருட்களின் தற்போதைய கையிருப்பு குறித்து கண்டறிய அமைச்சர் ரிசாத் பதியுதீன், மன்னார் சதொச விற்பனை நிலையத்துக்கு விஜயம் செய்து அங்குள்ள நிலையினை கேட்டறிந்து கொண்டார். தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் பால் மா உட்பட பொருட்களின் தரத் தையும் அமைச்சர் ரிசார்ட் பதியுதீன் பார்வையிட்டுள்ளார்.

அமைச்சருடன் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக், வடக்கு மாகாண ஆளுநரின் பிராந்திய ஆணையார் எஸ். எல். டீன். உட்பட பலரும் சமுகமளித்திருந்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

வெங்காயம், கிழங்கு, பருப்பு விலைகள் வீழ்ச்சி


இறக்குமதி செய்யப்படும் உருளைக் கிழங்கின் விலை 20 ரூபா வரையில் குறைந்துள்ளதாக புறக்கோட்டை வர்த்தக சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

தற்போது வெங்காயம் ஒரு கிலோ 50 ரூபாவிற்கும், பருப்பு 130 ரூபாவிற்கும் கிழங்கு 35 ரூபாவிற்கும் விற்பனை செய்ய ப்படுவதாக அச்சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் சம்பா 70 ரூபாவிற்கும் அரிசி விலையில் மாற்றங்கள் ஏற்படவில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

உருளைக்கிழங்கு, வெங்காயம், பருப்பு ஆகியவற்றின் விலைகள் என்றும் மில்லாதவாறு குறைந்துள்ளதாக அச்சங்கம் மேலும் தெரிவித்தது.
மேலும் இங்கே தொடர்க...

மட்டக்களப்பு வவுணதீவு பாதை சீரமைப்புப் பணியில் புளொட் உறுப்பினர்கள்-மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கடும்மழை காரணமாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்;லுதல், மக்களின் அத்தியாவசிய போக்குவரத்து, நோயாளர்களை ஏற்றி இறக்குதல், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வைத்தியர்களை அழைத்துச் சென்று வருதல், மருத்துவ உதவிகள் போன்ற பணிகளுக்கு நான்கு இயந்திரப் படகுகளைக் கொண்டு புளொட் உறுப்பினர்கள் உதவி வருகின்றனர். அத்துடன் பல்வேறு பகுதிகளின் நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு சமைத்த உணவினையும் வழங்கி வருகின்றனர். புளொட் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் திரு.சூட்டி, உதவி அமைப்பாளர் திரு.கேசவன் உட்பட 30ற்கும் மேற்பட்ட புளொட் உறுப்பினர்கள் கடந்த ஒருவாரமாக இப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கொக்கட்டிச்சோலை, நாவற்காடு, வவுணதீவு, கரவெட்டி, கன்னங்குடா, சேத்துக்குடா, புதூர், ஈச்சந்தீவு, குறிஞ்சாமுனை, காரையாக்கன்தீவு, கொத்தியாவளை ஆகிய பிரதேசங்களிலேயே புளொட் உறுப்பினர்கள் இப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மட்டக்களப்பு நகரையும் வவுணதீவு பிரதேசத்தையும் இணைக்கும் வலையிறவு பாலம் ஊடான வீதி கடும்மழை காரணமாக பழுதடைந்து காணப்படுவதால் இன்று அவ்வீதியினை சீர்ப்படுத்தும் பணிகளில் வவுணதீவு பிரதேச செயலகத்துடன் இணைந்து புளொட் உறுப்பினர்களும் ஈடுபட்டுள்ளனர். நேற்றையதினம் ஈச்சந்தீவு, நாவற்காடு, கரவெட்டி பிரதேசங்களில் தங்கியுள்ள மக்களுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட சமைத்த உணவுப் பொதிகளையும் புளொட் உறுப்பினர்கள் வழங்கியதுடன், நேற்று வவுணதீவு பிரதேசத்தில் இடம்பெயர்ந்த மக்களுக்கு குடிநீரையும் புளொட் உறுப்பினர்கள் வழங்கியுள்ளனர்.


மேலும் இங்கே தொடர்க...