மனித பேரவலங்கள் இடம்பெற்ற 10 நாடுகளின் இலங்கையும்:எம்.எஸ்.எஃப்
உலகளவில் பல பகுதிகளில் இடம்பெற்ற மோதல்களின் போது மிகப்பெரிய மனித பேரவலங்கள் இடம்பெற்ற 10 நாடுகளின் பட்டியலை எல்லைகளற்ற மருத்துவர்களுக்கான அமைப்பு (எம்.எஸ்.எஃப்) என்னும் அமைப்பு வெளியிட்டுள்ளது.
இதில் இலங்கையையும் அது பட்டியலிட்டுள்ளது. பாகிஸ்தான்இ சோமாலியாஇ ஆப்கானிஸ்தான்இ ஏமன்இ கொங்கோ ஆகிய நாடுகளும் இடம்பெறுகின்றன.
மோதல்களின் போது பொதுமக்கள் அவர்களுக்கான உயிர் காப்பு உதவிகளை பெறுவதில் இருந்து தடுக்கப்படுவது அதிகரித்து வருவதாக பிரான்ஸை தளமாகக் கொண்டு செயற்படும் எம்.எஸ்.எஃப் என்னும் அந்த அமைப்பு கூறியிருக்கிறது.
விடுதலைப்புலிகளுக்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின் இறுதிக்கட்டப் போரின் போதுஇ ஆயிரக்கணக்கான மக்கள் உதவிகள் துண்டிக்கப்பட்டும்இ மட்டுப்படுத்தப்பட்ட மருத்துவ பராமரிப்புடனும் பெரும் அவதிக்கு உள்ளானதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
இலங்கையில் மோதல்கள் இடம்பெற்ற வேளையில் அந்தப் பகுதிக்கு செல்ல தாம் அனுமதிக்கப்பட வில்லை என்றும்இ மோதல் வலயத்ததுக்கு வெளியேயே தாம் பணிசெய்ய அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார் அந்த அமைப்பைச் சேர்ந்த வனசா வான் ஸ்கோர். அதனால் தாங்கள் பல சிரமங்களை எதிர்கொண்டதாகவும் அவர் கூறினார்.
நான் குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை:நீதிமன்றில் ராஜ் ராஜரட்னம்
தாம் எந்தவிதமான நிதி மோசடியிலும் ஈடுபடவில்லை என அமெரிக்கத் தமிழ் வர்த்தகர் ராஜ் ராஜரட்னம் அந்நாட்டு நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
கெலொன் ஹெட்ஜ் நிறுவனத்தின் ஸ்தாபகரான ராஜ் ராஜட்னம் தம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை எனக் குறிப்பிட்டுள்ளார்.
ராஜரட்னத்திற்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டதன் பின்னர் முதல் தடவையாக அவர் நீதிமன்றில் ஆஜராகினார்.'நான் குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை' என்ற ஒரே வசனத்தை மட்டுமே அவர் நீதிமன்றில் தெரிவித்திருந்தார்.
அமெரிக்க வராலாற்றில் பங்கு பரிவர்த்னையில் இடம்பெற்ற மிகப் பெரிய மோசடி நடவடிக்கை இதுவெனத் தெரிவிக்கப்படுகிறது.
ஐ.பி.எம்.இ இன்டல்இ மெகன்ஸீ போன்ற முக்கிய நிறுவனங்களின் பங்கு பரிவர்த்தனை நடவடிக்கையின் ஊடாக மோசடியான முறையில் ராஜ் ராஜரட்னம் உள்ளிட்ட சிலர் 20 மில்லியன் அமெரிக்க டொலர்களை லாபமாக ஈட்டியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
100 மில்லியன் ரூபா பிணைத் தொகை வழங்கினால் மட்டுமே விடுதலை செய்ய முடியும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள அதேவேளைஇ பிணைத் தொகையை குறைக்குமாறு ராஜ் ராஜரட்னம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் இடம்பெயர்ந்தோர் தடையின்றி வாக்களிக்க ஏற்பாடு
மோதல் காரணமாக இடம்பெயர்ந்த சுமார் ஒன்றரை இலட்சம் மக்களுக்கு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்காமல் போகுமென சில தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள் தெரிவித்துள்ள குற்றச்சாட்டை தேர்தல் திணைக்களம் நிராகரித்துள்ளது.
இடம்பெயர்ந்த மக்களுக்கு தாம் மீள்குடியேற்றப்பட்ட இடங்களிலும் வவுனியா நலன்புரி முகாம்களில் உள்ள மக்களுக்கு வவுனியாவிலும் வாக்களிப்பதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் ஏ. கருணாநிதி தெரிவித்தார்.
இடம்பெயர்ந்து வவுனியா நலன்புரி முகாம்களில் உள்ள மக்களில் அதிகமானவர் களின் பெயர்கள் 2008 வாக்காளர் இடாப்பில் பதியப்பட்டுள்ளதெனவும் அவர்களுக்கு எதிர்வரும் தேர்தலில் வாக்களிப்பதற்கான சகல ஒழுங்குகளையும் தேர்தல் திணைக்களம் முன்னெடுத்துள்ளதாகவும் வவுனியா தேர்தல் திணைக்களம் தெரிவித்தது.
இடம்பெயர்ந்த மக்களில் 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் கிராம சேவகர்களினூடாகப் பதியப்பட்டுள்ளதோடு இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி ஆணையாளர் குறிப்பிட்டார்.
கிளிநொச்சி மற்றும் யாழ். மாவட்ட வாக்காளர்கள் தேர்தலில் விண்ணப்பிப்பதற்காக (இன்று) 24 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 12 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் விண்ணப்பித்துள்ளதோடு மேலும் பலர் இறுதி நேரத்தில் விண்ணப்பிக்கத் தயாராக உள்ளதாகவும் அறிவிக்கப்படுகின்றது. இவர்களுக்கு வவுனியாவில் வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.
நலன்புரி முகாம்களில் உள்ள முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்ட மக்களுக்கு நேரடியாக வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் கருணாநிதி கூறினார்.
தேசிய அடையாள அட்டை மற்றும் தற்காலிக அடையாள அட்டை என்பன வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புலிகள் இயக்கம் இளைஞர்இ யுவதிகளை கட்டாயப்படுத்தி படையில் சேர்த்ததாலும் தமிழ் மக்களை நெருக்கடிக்கு உள்ளாக்கிய தாலும் பெரும்பாலான வன்னி மக்களுக்கு தமது அடையாள அட்டைகள்இ ஆவணங்கள் மற்றும் பெறுமதியான சொத்துக்களை இழக்க நேரிட்டது. இறுதிக்கட்ட யுத்தத்தின் போது வன்னி மக்கள் தமது சகல உடைமைகளையும் கைவிட்டு புலிகளிடம் இருந்து தப்பி ஓடி வந்தது தெரிந்ததே.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வடக்குஇ கிழக்கு மாகாணங்களை முழுமையாக மீட்டதையடுத்து வடக்குஇ கிழக்கு மாகாண மக்களுக்கு சுதந்திரமாக வாக்களிக்க முதற்தடவையாக சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
ஏற்றுமதி முதலீட்டு அபிவிருத்தி அமைச்சர் ஜீ.எல்.பீரீஸ் யாழ்ப்பாணம் விஜயம்
ஏற்றுமதி முதலீட்டு அபிவிருத்தி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டு வந்தார்.நேற்றுக் காலை யாழ்ப்பாணத்திற்க்கு வந்த அமைச்சரை சமூகசேவைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பலாலி விமான நிலையத்தில் வைத்து வரவேற்றார்.
யாழ்ப்பாணம் வந்த அமைச்சருடனான குழுவினர் யாழ்ப்பாண அரச செயலகத்தில் விவசாயிகள் மற்றும் வர்த்தகர்களுடன் சந்திப்பு ஒன்றினை நடத்தினார். அமைச்சர் குழுவினருடன் இச்சந்திப்பில் யாழ்ப்பாண மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ரூபினி வரதலிங்கம்இ சமூகசேவைகள்இ சமூகநலத்துறை அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தாஇ கமநல சேவைகள் திணைக்கள உதவி ஆணையாளர் பற்றிக் நிறைஞ்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பழங்கள் மரக்கறிகளை அறுவடைக்குப்பின் எவ்வாறு பாதுகாப்பது தொடர்பான ஆலோசனைகள்
அமைச்சர் குழுவினருடன் வருகைதந்த முதலீட்டு அபிவிருத்தி சபையின் நிர்வாக உத்தியோகத்தர் இந்திரகீர்த்தி விவசாயிகளுக்கு பழவகைள் மரக்கறிகள் என்பனவற்றை அறுவடைக்குப் பின் பழுதடையாமல் பாதுகாத்து எவ்வாறு சந்தைப்படுத்தலாம்இ அவற்றிற்கான வழிமுறைகள் என்பன தொடர்பாக விவசாயிகளுக்கு விளக்கங்கள் அளிக்கப்பட்டன.
அத்துடன் விவசாயிகளுக்கு பழவகைள் குறிப்பாக மாம்பழங்களை பாதுகாத்து விற்பனைக்குக் கொண்டு செல்லக் கூடிய பிளாஸ்ரிக் பெட்டிகளும் வழங்கப்பட்டன. இவற்றினை முதலீட்டு அமைச்சர்இ சமூகசேவைகள் சமூகநலத்துறை அமைச்சர் ஆகியோர் வழங்கினர்.
படிப்படியான முன்னேற்றத்திற்கான உறுதி மொழி வழங்கப்பட்டது.
முதலீட்டு ஏற்றுமதி அபிவிருத்தி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் உரையாற்றும் போதுஇ "யாழ்ப்பாணம்இ கடந்த 30 ஆண்டு காலமாக யுத்தம் எனும் பிடிக்குள் இருந்து பல வசதிகள் வாய்ப்புக்கள் மற்றும் வளங்களை இழந்துள்ளது. இவற்றினை பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கைகளை உடனே செய்ய முடியாது படிப்படியாகச் செய்ய வேண்டும்.
யுத்தம் முடிவடைந்த பின்னரும் பாதுகாப்பு நடைமுறைகள் இன்னமும் தளர்த்தப்படாமைக்கு காரணம் நடைபெற்று முடிந்த யுத்தம் நீண்ட காலம் நடைபெற்றது என்பதினாலாகும். பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாகத் தளர்த்துமிடத்து பாரிய விளைவுகள் ஏற்படலாம். ஆதனை காலப் போக்கில் சீர் செய்வோம்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியது போல யாழ்ப்பாணத்தைப் பொறுத்த வரையில் முதல் தேவையாக மீளக்குடியேற்றம் உள்ளது. அதனை விரைந்து நிறைவேற்ற வேண்டும். அதன் பின்னர் அம்மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற வேண்டும். அவர்களுக்கு உள்நாட்டு வளங்களைப் பயன்படுத்தி வாழ்வாதாரத்தை மேற்கொள்ளக் கூடிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க முடியும்.
பல கம்பனிகள் தமது தொழிற்சாலைகளை யாழ்ப்பாணத்தில் நிறுவ ஆர்வமாகவுள்ளன. அவற்றில் யாழ். மாவட்ட மக்களுக்கு தொழில் வாய்ப்பினைப் பெற்றுத் தரமுடியும். மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுமிடத்து அவர்களிடம் இருந்து வெளிநாட்டு ஏற்றுமதிக்கான நடவடிக்கைகளைப் பெற முடியும்.
யாழ்ப்பாணத்தின் பல பொருட்கள் இன்று வெளியிடங்களில் விரும்பப்படுவனவாக இருக்கின்றன. யாழ்ப்பாணத்தின் மாம்பழம்இ வாழைப்பழம்இ வெங்காயம்இ திராட்சை போன்றன வெளியிடங்களில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன.
யாழ்ப்பாணத்தின் கடல் வளம் நீண்ட காலமாக சரியாகப் பயன்படுத்தப்படாமல் இருக்கின்றது. கடல் வளத்தைச் சரியாகப் பயன்படுத்தும் இடத்து உள்நாட்டிலும்இ வெளிநாட்டிலும் சிறந்த சந்தை வாய்ப்பினைப் பெற்றுக்கொள்ள முடியும்.
கல்வித்துறையில் யாழ்.மாவட்டம் புகழ்பெற்றது. அதனை சுற்றுலாத்துறையிலும் சிறந்த நகரமாக மாற்றவேண்டும். இலங்கையின் சுற்றுலாத்துறை 50 வீத வளர்ச்சியைத் தற்போது கண்டுள்ளது.
அதனை யாழ்.மாவட்டத்திலும் முன்னேற்றினால் யாழ்.மாவட்ட மக்களை அந்நியச் செலவாணியைச் சம்பாதிக்க வைக்க முடியும் இதற்கான ஏற்பாடுகளை தேர்தலின் பின் மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் மேற்கொள்ளும்" என்று தெரிவித்தார்.
புலி முக்கியஸ்தர்களின் கொலைக்குற்றச்சாட்டு அரசாங்கம் இரு முகங்களை காட்டுகிறது-அனுர குமார திஸ்ஸாநாயக்க
வெளிநாட்டுக்கு ஒரு முகத்தைக் காட்டும் அரசாங்கம்இ உள்நாட்டில் மற்றொரு முகத்தைக் காட்டுகின்றது. இறுதிக் கட்ட யுத்தத்தில் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் எவரும் கொல்லப்படவில்லை என்றும் ஜெனரல் சரத் பொன்சேகாவும் இத்தகைய சம்பவங்களுக்குப் பொறுப்பாளியல்ல எனவும் ஐ.நா.வுக்கு அறிவித்துள்ள அரசாங்கம்இ ஜெனரல் சரத் பொன்சேகா படையினரைக் காட்டிக்கொடுத்து விட்டதாக உள்நாட்டில் பிரசாரம் செய்கின்றது என்று ஜே.வி.பி.யின் பாராளுமன்றக் குழுத் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
அரசாங்கம் இரண்டு முகங்களைக் காட்டி ஏமாற்ற முனைகின்றது. இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார். கொழும்பு7இல் அமைந்துள்ள பொது வேட்பாளர் ஜெனரல் பொன்சேகாவின் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்..
இங்கு அவர் மேலும் கூறியதாவதுஇ .
நீதி விசாரணையற்ற கொலைகள் அல்லது தன்னிச்சையான மரண தண்டனைகள் தொடர்பான ஐ.நா.வின் விசேட பிரதிநிதி பிலிப் அல்ஸ்ரன் யுத்தத்தில் இறுதிக் கட்டத்தில் புலிகளின் முக்கியஸ்தர்கள் கொல்லப்பட்டது தொடர்பாக வெளியான கருத்துகள் தொடர்பில் அரசாங்கத்திடம் விளக்கம் கோரி கடிதமொன்றை அனுப்பி வைத்திருந்தார். இதற்கு மனித உரிமைகள் தொடர்பான அமைச்சர் மஹிந்த சமரசிங்கவின் செயலாளர் ரஜீவ விஜேசிங்க பதில் கடிதம் அனுப்பி வைத்துள்ளார். அக்கடிதத்தில் ஐ.நா.வின் விசேட பிரதிநிதி அனுப்பி வைத்துள்ள கடிதத்தை வாபஸ் பெற வேண்டுமென்றும் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் குற்றச்சாட்டை நிராகரிப்பதாக தெரிவித்துள்ளார். .
இதனை விட தேர்தல்கள் நெருங்கும் போது இவ்வாறான குற்றச்சாட்டுகள் மேலும் அதிகரிக்கலாம். இறுதிக் கட்ட யுத்தத்தில் எவரும் கொல்லப்படவில்லை. ஜெனரல் பொன்சேகாவும் இதற்கு பொறுப்பாளியல்ல என்றும் அவர் பதில் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். சர்வதேசத்திற்கு இவ்வாறான முகத்தைக் காட்டும் அரசாங்கம் உள்நாட்டில் ஜெனரல் பொன்சேகாவை படையினரைக் காட்டிக் கொடுப்பவராகவும் தேசத் துரோகியாகவும் சித்தரிக்கின்றது. இது தான் அரசாங்கத்தின் இரண்டு பக்கங்களாகும். இந்த உண்மையை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அரசியலுக்காக பொன்சேகா மீது சேறு பூசப்படுகின்றது. மேற்கத்திய நாடுகளின் கைப்பொம்மை என்றும் சதிகாரர் என்றும் அரசாங்கம் அவரை வர்ணிக்கின்றது. ஆனால்இ வெளிநாடுகளுக்கு வேறு விதமான பதில்களை அரசாங்கம் வழங்குகின்றது..
அப்படியானால் யார் தேசத் துரோகிகள் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும். உண்மையில் வெளிநாடுகளுக்கு ஒரு முகத்தையும் உள்நாட்டில் வேறொரு முகத்தையும் காட்டும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கமே நாட்டைக் காட்டிக் கொடுக்கின்றது..
குரோத அரசியல்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை நாமே பதவியில் அமர்த்தினோம். அவரோடு எமக்கு தனிப்பட்ட ரீதியில் குரோதம் கிடையாது. ஆனால்இ தனியொரு மனிதனும் அவரது குடும்பமும் நாட்டில் சர்வாதிகார ஆட்சியை நடத்துவதை அனுமதிக்க முடியாது. அதனை மாற்றி நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கே முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றோம். .
தேர்தல் ஆணையாளர்.
பொது வேட்பாளர் ஜெனரல் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை குறைக்க வேண்டாமென தேர்தல்கள் ஆணையாளர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால்இ இவையெதனையும் அரசாங்கம் பொருட்படுத்துவதில்லை. ஜெனரலின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. அவரது ஆதரவாளர்கள்இ காரியாலயத்தில் கடமையாற்றுவோரின் வீடுகளுக்குச் சென்று அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுகின்றன..
காரியாலயத்தில் சேவையாற்றிய ஒருவர் கடத்தப்பட்டுள்ளார். இதுவரையில் அவருக்கு என்ன நடந்தது எனத் தெரியாதுள்ளது. .
மங்கள சமரவீர எம்.பி..
அரசாங்கத்தின் அடக்குமுறைஇ சர்வாதிகாரம்இ மனித உரிமை மீறல் போன்ற செயற்பாடுகளின் காரணமாகவே நாட்டின் கௌரவம் பாதிக்கப்பட்டதோடு எம்மவர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதற்கும் விசா வழங்குவதற்கும் மறுக்கப்பட்டது. இதனை மறைக்க அரசாங்கத்தின் அனைத்து பாவங்களையும் ஜெனரல் பொன்சேகா மீது சுமத்தி சேறு பூசுகின்றனர். இடம்பெயர்ந்த மக்களை அடிமைகளாக அடைத்து வைத்தமையும் இதற்குக் காரணமாக அமைந்தது என்று இங்கு கருத்து தெரிவித்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர தெரிவித்தார்..
கடந்த மாதம் மட்டும் அலரி மாளிகையில் விருந்து வழங்குவதற்கு 1 கோடியே 30 இலட்சம் ரூபா செலவாகியுள்ளது. ஆனõல்இ அங்கு பரிமாறப்பட்ட மதுபான வகைகள் தொடர்பிலான ரசீது கிடைக்கவில்லை. கிடைத்ததும் தொகையை வெளியிடுகிறேன்..
அண்மையில் அநுராதபுரத்தில் நடந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் கூட்டத்தில் தன்னை விவசாயி என அடையாளப்படுத்திக் கொண்டவர் 3 இலட்சம் ரூபாவை வழங்கினார். இவர் உண்மையில் விவசாயி அல்ல. மதுபானசாலை உரிமையாளராவார்..
மதுவுக்கு முற்றுப்புள்ளி என்கிறது அரசாங்கம். ஆனால்இ மதுபானச் சாலை உரிமையாளர்களின் பணத்தில் சுகபோகங்களை அரசாங்கம் அனுபவிக்கின்றது. மகிந்த சிந்தனையில் உறுதியளிக்கப்பட்ட எதுவுமே நிறைவேற்றப்படவில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...