10 ஜனவரி, 2010

அமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளைக்கு புளொட் தலைவர் த.சித்தார்த்தன் உள்ளிட்ட புளொட் முக்கியஸ்தர்கள் அஞ்சலி-


புலிகளின் தலைவர் பிரபாகரனின் தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் பூதவுடல் வல்வெட்டித்துறையில் இன்றுகாலை 10.30அளவில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் அவருடைய மகளுடைய இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு இறுதிக் கிரியைகள் நடைபெற்றன. புளொட் தலைவர் திரு.த.சித்தார்த்தன், புளொட் அமைப்பின் வன்னிப் பிராந்திய அமைப்பாளர் பவன் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் அன்னாருக்கு அஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்வுகளின்போது இந்தியப் பாராளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவனும் இரங்கல் உரையினை நிகழ்த்தினார். அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், பத்மினி சிதம்பரநாதன், எஸ்.கஜேந்திரன் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வுகளில் பங்கேற்றிருந்தனர். இறுதி நிகழ்வுகளைத் தொடர்ந்து இன்று பிற்பகல் 3.00 மணியளவில் அமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

மேலும் இங்கே தொடர்க...

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் உயிர் நீத்தவர்களின் 36ம் ஆண்டு நினைவுதினம்

1974ம் ஆண்டு தைமாதம் 10ம் திகதி யாழ்.முற்றவெளி பகுதியில் அமைந்துள்ள வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த 04வது உலக தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாளன்று 09 ஒன்பது தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்ட 36ம் ஆண்டு நினைவுதினம் இன்றாகும். 36வது நினைவு தினமாகிய இன்று இத்துயர சம்பவம் நினைவு கூரப்பட்டுள்ளது.

யாழ் முற்றவெளியிலுள்ள நினைவுத்தூபியில் இம்முறை மிகவும் அமைதியான முறையில் இத்தினைத்தை நினைவுகூர வேண்டிய நிலையிருந்தது. யாழ். துரையப்பா அரங்கில் ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்து மிகப்பெரிய தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்று நடந்து கொண்டிருந்ததன் காரணமாக அப்பகுதிகள் மிகவும் பாதுகாப்புக்கு உட்படுத்தப்பட்டிருந்தபடியால் மிகவும் அமைதியான முறையில் புளொட் முக்கியஸ்தர்கள் மற்றும் உறுப்பினர்களால் 36வது ஆண்டு நினைவுதினம் அனுஸ்டிக்கப்பட்டது.
மேலும் இங்கே தொடர்க...

மகேஸ்வரன் ஞாபகார்த்த மண்டபம் நல்லூரில் திறப்பு

கொழும்பில் கடந்த 2008 ஆம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரனின் நினைவாக ஞாபகார்த்த மண்டபம் ஒன்று நல்லூர் வடக்கு வீதியில் இன்று காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இந்த மண்டபத்தினை திறந்துவைத்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் உபதலைவர் கரு ஜயசூரியஇ அமரர் மகேஸ்வரனின் மனைவிஇ பிள்ளைகள் உட்பட மேலும் பல அரசியல் பிரமுகர்கள் இந் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

புளொட் சித்தார்த்தனுக்கு ஜனாதிபதி வழங்கிய உத்தரவாதத்திற்கு அமைய புலிகளால் பலாத்காரமாக பிடிக்கப்பட்டோர் 715பேர் நேற்றையதினம் விடுதலை

கடந்தவாரம் ஜனாதிபதிக்கும் புளொட் தூதுக்குழுவினருக்குமிடையே இடம்பெற்ற சந்திப்பின்போது புலிகளால் பலாத்காரமாக பிடிக்கப்பட்ட மற்றும் சிறுவர்களை அவர்களது பெற்றோரிடம் கையளிக்கப்பட வேண்டும் என்று கோரியிருந்தனர். தற்போது புனர்வாழ்வு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறார்களை அவர்களது பெற்றோர்களிடம் இணைந்து வாழவைப்பதே சிறந்த புனர்வாழ்வாகும் என்று புளொட் சித்தார்த்தன் தெரிவித்திருந்தார்.

முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சிறார்களை அவர்களது பெற்றோர்களிடம் இணைந்து வாழ வைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதாகவும் அவை உடனடியாக மேற்கொள்வதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கப்படும் என்று உறுதியழித்தமைக்கு அமைய நேற்றையதினம் புலிகளால் பலாத்காரமாக பிடிக்கப்பட்டோர் மற்றும் சிறுவார்கள் 715பேர் நேற்றையதினம் பெற்றோரிடம் கையளிக்கப்பட்டனர்.

புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் 715 பேரையும் ஜனாதிபதியே நேரடியாக பங்குகொண்டு பெற்றோரிடம் கையளித்திருந்தார். வவுனியா செட்டிக்குளம் மெனிக்பாம் வலயம் 2 இல் நடைபெற்ற வைபவத்தின் போதே மேற்படி 715 பேரும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர். புலிகள் இயக்கத்திலிருந்து படையினரிடம் சரணடைந்தவர்களை பெற்றோர் பொறுப் பேற்றுக் கொண்டனர்.

சரணடைந்தவர்களுள் 15 பேரை ஜனாதிபதியே அவர்களது பெற்றோரிடம் கையளித்தார். ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ, அமைச்சர்களான மிலிந்த மொர கொட உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

மேலும் இங்கே தொடர்க...

இனப்பற்றுள்ள எந்தத் தமிழனும் பொன்சேகாவை ஆதரிக்கமாட்டான்-சிவாஜிலிங்கம்

இனப்பற்றுள்ள எந்தத் தமிழனும் எதிர்க்கட்சி வேட்பாளர் சரத் பொன்சேகாவை ஆதரிக்கமாட்டார்கள். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களைத் தவறாக வழிநடத்துவதாகக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி வேட்பாளருமான எம். கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
தமிழர்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணக்கூடிய எந்தத் திட்டமும் இராணுவத் தளபதியிடம் இல்லை. இறுதிவரை யுத்தம் நடத்திய ஓர் இராணுவத் தளபதியைத் தமிழ்க் கூட்டமைப்பு ஆதரிப்பது துர்ப்பாக் கியம் என்றும் தேசிய தொலைக்காட்சி யொன்றுக்கு வழங்கிய பேட்டியில் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் ஓர் இராணுவ அதிகாரி அரசாங்க அதிபராக இருந்தபோது, வடமாகாணத்துக்கு ஓர் இராணுவத் தளபதியை நியமித்த போது எதிர்ப்பு தெரிவித்த சம்பந்தன், நாட்டின் தலைவராகும் ஜனாதிபதி தேர்தலுக்கு முகம்கொடுக்கும் ஓர் இராணுவத் தளபதிக்கு ஆதரவு தெரிவிக்க முன்வந்தமை மக்களைத் தவறாக வழிநடத்தும் முடிவாகும். தமிழர் பிரதேசங்களில் அபிவிருத்திகள் நடப்பதை மறுக்க முடியாது. இந்தத் தேர்தலில் ‘தமிழ் மக்களின் சுயத்தை வெளிப்படுத்தவே தனித்துப் போட்டியிடு கிறேன்’ என்றும் சிவாஜிலிங்கம் மேலும் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...