22 அக்டோபர், 2009

புளொட் முக்கியஸ்தர் ஜி.ரி.லிங்கநாதன் யாழ் விஜயம்
புளொட்
முக்கியஸ்தரும் வவுனியா நகரசபை எதிர்கட்சி தலைவருமான ஜி.ரி.லிங்கநாதன் தலைமையிலான வவுனியா நகரசபை உறுப்பினர்கள் யாழ் மாவட்டத்துக்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ளனர். வடமாகாண உள்ளுராட்சி திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சியில் கலந்து கொண்ட ஜி.ரி. லிங்கநாதன் குழுவினர். உலக தமிழராய்ச்சி மகாநாட்டில் கொல்லப்பட்டவர்களது
நினைவாலயத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி கொண்டதுடன். தமிழர் விடுதலை கூட்டணியின் உடுவில் தொகுதி பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் தலைவர் த.சித்தார்த்தன் அவர்களது வாலசல்தலத்திற்கு சென்று அமர் தர்மலிங்கம் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தி கொண்டதுடன், திருமதி. தர்மலிங்கம் அவர்களுடன் கலந்துரையாடினர். அதன் பின்னர் யாழ் ஆஸ்பத்திரி வீதியில் அமைந்துள்ள புளொட்
அலுவலகத்திற்கு திரும்பிய குழுவினர். கட்சி அலுவலகத்தில் தமது ஆதரவாளர்கள் உறுப்பினர்களுடன் கலந்தாலோசனையில் ஈடுபட்டதுடன். முன்னெடுக்கப்பட வேண்டிய திட்டங்கள் தமது எதிர்கால அரசியல் நிலைப்பாடு குறித்தும் ஆதரவாளர்களுக்கு விளக்கமளித்தனர்.
மேலும் இங்கே தொடர்க...