9 அக்டோபர், 2010

இளந்திரையன் மனைவி சாட்சியம்

இலங்கை ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஜனாதிபதி ஆணைக்குழு சனிக்கிழமை கிழக்கு மாகாணத்தில் தனது விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இதில் விடுதலைப் புலிகளின் முன்னாள் படைத் துறை பேச்சாளரான இளந்திரையன் அல்லது மார்ஷல் எனப்படும் இராசையா சிவரூபனின் மனைவி உட்பட விடுதலைப் புலி முக்கியஸ்தர்களின் மனைவிமார்களும் சாட்சியமளித்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட செயலக மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த இராசையா சிவரூபனின் மனைவி வனிதா சிவரூபன், 2009 ம் ஆண்டு மே மாதம் 17 ம் தேதி தனது கணவர் இராணுவத்தினரால் காயத்திற்கு சிகிச்சையளிக்க வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதாகக் கூறி அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அதன் பின்னர் தனது கணவனைப் பற்றிய தகவல்கள் இல்லை." என தெரிவித்தார்.இளந்திரையன் மனைவி

கணவன் இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டு சில நாட்களின் பின்பு முகாமில் தங்கியிருந்தபோது, அங்கு சி.ஐ.டி. என தம்மை அறிமுகப்படுத்தி வந்த இருவர் கணவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறி தங்களை அழைத்துச் செல்ல வந்த போதிலும் தாம் மறுத்து விட்டதாகவும் தெரிவித்தார் வனிதா சிவரூபன்.

தனது கணவன் எங்கோ ஓரிடத்தில் உயிருடன் இருப்பதாக தனது நம்பிக்கையை வெளியிட்டு தனது பிள்ளைகளுக்காக கணவனை கண்டு பிடித்து தருமாறு ஆணைக்குழுவிடம் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

மற்றுமொரு முன்னாள் விடுதலைப் புலி முக்கியஸ்தரான கிருஷ்ணபிள்ளை பிரபாகரனின் மனைவி பொபித்தா பிரபாகரன் சாட்சியமளிக்கையில், தமது குடும்பத்தினர் இடம்பெயர்ந்து வட்டுவான் என்னுமிடத்தில் ஏனைய பொது மக்களுடன் வந்த போது இராணுவத்தினர் விசாரணைக்கு எனக் கூறி பொது மக்கள் முன்னிலையில் கணவரை அழைத்துச் சென்றதாகவும் அதன் பின்னர் அவரைப் பற்றிய தகவல்களை தன்னால் அறிய முடியாமல் இருப்பதாகக் கூறினார்.ஆணைக்குழு விசாரணையின் போது சாட்சியமளிக்க சமூகமளித்திருந்த பொது மக்களில் அநேகமானோர் காணாமல் போன தமது கணவர் அல்லது பிள்ளைகள் பற்றிய தகவல்களைப் பெற்று தருவது தொடர்பாகவே வாய் மூலமும் எழுத்து மூலமும் தமது சாட்சியங்களை ஆணைக்குழு முன் வைத்தனர்.

கடந்த மாதம் இந்த ஆணைக்குழு வன்னியில் அமர்வு மேற்கொண்ட போது, ஆணைக்குழுவின் முன் வந்து சாட்சியமளித்த விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்த எழிலனின் மனைவி ஆனந்தி சசிதரன், தனது கணவர் மே 18 ஆம் தேதி இராணுவத்திடம் சரணடைந்ததாகவும், அதன் பிறகு அவரைக் காணவில்லை என்றும் கூறியிருந்தார்.

போரின் இறுதி கட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விடுதலைப் படையினரிடம் சரணடைந்ததாக இலங்கை அரசு கூறுகிறது. ஆனால் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலிகளின் பெயர் விபரங்களை வெளியிட இலங்கை அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.

இதன் காரணமாக சட்டத்துக்குப் புறம்பான கொலைகள் நடக்க சாத்தியமிருப்பதாக மனித உரிமை அமைப்புக்கள் கவலை வெளியிட்டு வருகின்றன.
மேலும் இங்கே தொடர்க...

ரஷியா புதிய ஏவுகணை சோதனை

.ரஷியாபுலாவாஎன்ற புதிய ஏவுகணை சோதனை நடத்தியது. இது கண்டம் விட்டு கண்டம் 150 கிலோ டன் அணுகுண்டுகளை தாங்கியபடி 8 ஆயிரம் கி.மீ. தூரம் பாய்ந்து சென்று தாக்கக் கூடியது. இந்த ஏவுகணை சோதனை காம்சாத்கா தீப கற்பத்தில் வைத்து நடத்தப்பட்டது.

ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷிய ராணுவம் இந்த ஆண்டு ஏற்கனவே 3 ஏவுகணைகள் சோதனை நடத்தியுள்ளது. அவற்றில் 2 நீர்மூழ்கி கப்பலை தாக்கக் கூடியதாகும். தற்போது வெற்றிகரமாக ஏவப்பட்ட புலாவா ஏவுகணை மேலும் பல பரிசோதனைகளுக்கு பிறகு ராணுவத்தில் சேர்க்கப்பட உள்ளது
மேலும் இங்கே தொடர்க...

தனக்காக மன்னிப்புக் கோர வேண்டாமென பொன்சேகா தெரிவிப்பு

ஜனநாயகத் தேசிய முன்னணித் தலைவர் சரத் பொன்சேகா தனது மனைவி, மக்களிடம் தனக்காக எவரிடமும் மன்னிப்பு கோர வேண்டாம் எனக் கூறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வெலிக்கடை சிறைச்சாலையில் சரத் பொன்சேகாவை நேற்று பார்வையிடச் சென்ற போது, தம்மிடம் இவ்வாறு சரத் பொன்சேகா கூறியதாக ஊடகங்களிடம் அனோமா தெரிவித்தார்.

எந்தத் தவறையும் தான் செய்யவில்லை என்றும், எவரும் தனக்காக மன்னிப்பு கோரத் தேவையில்லை என்றும் சரத் பொன்சேகா தம்மிடம் கூறியுள்ளதாக அனோமா மேலும் தெரிவித்தார்
மேலும் இங்கே தொடர்க...

ஆண்போல வேடமிட்டு செக்ஸ் மயக்கிய பெண்ணுக்கு 6 மாத சிறை


லண்டன்:ஆண் போல வேடமிட்டு, இளம் பெண்களை மயக்கி அவர்களுடன் செக்ஸ் வைத்துக்கொண்ட அமெரிக்க பெண்ணுக்கு ஆறு மாத சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தை சேர்ந்தவர் பேட்ரீசியா டை(31). இவர் ஆண் போல தன் முடியை மாற்றிக்கொண்டு இளம் வாலிபனை போல திரிந்து டீன்ஏஜ் பெண்களை கவர்ந்து வந்தார். டீன்ஏஜ் பெண்களிடம் செக்ஸ் உறவு வைத்து கொண்டார். ஆண் என்று நம்பி காதல் வலையில் விழுந்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஒரு இளம் பெண் இது குறித்து போலீசில் புகார் செய்தார்.

இந்த புகாரின் பேரில், கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட பேட்சீரியாவிடம் விசாரணை நடந்தது. உண்மையை ஒப்புக்கொண்டார் இந்த பெண். ஆறு மாத சிறை தண்டனை விதித்துள்ள ஓகையோ கோர்ட், இனி எந்த டீன்ஏஜ் பெண்களிடமும் பேட்ரீசியா தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது, என தீர்ப்பு வழங்கியுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்


இந்தோனேசியாவில்,வடக்கே உள்ள மொலுக்காஸ் தீவில், நேற்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து உடனடியாக தெரியவில்லை.இந்தோனேசியாவில் உள்ள மொலுக்காஸ் தீவில், நேற்று பகல் 12.43 மணி அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. டெர்னேட் என்ற நகரத்திற்கு அருகே வடகிழக்கு திசையில், பூமிக்கு அடியில் 110 கி.மீ., ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த தகவல் உடனடியாக தெரியவரவில்லை.
மேலும் இங்கே தொடர்க...

சூரியனின் ஒளி பூமியை குளிர்விக்கிறது: ஆய்வில் தகவல்


லண்டன்: காலநிலை மாற்ற்த்தின் பின்னணியில் புவிவெப்பமடைந்து வந்தாலும் அதிகரித்து வரும் சூரியனின் வெப்ப ஒளிக்கற்றைகள், செயல்பாடுகளால் உண்மையில் பூமி குளிர்ச்சி அடைய செய்வதாக புதிய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.வளர்ந்து வரும் நாடுகளில் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கரியமில வாயுவினால் நாளுக்கு நாள் புவி வெப்பம் அடைந்து வருகிறது. சூரியனுக்கும்,பருநிலை மாற்றத்திற்கு உள்ள தெ?டர்பு குறித்துகடந்த 2004-முதல் 2007 ஆண்டு வரை ஆராய்ச்சி மேற்கொண்டதில்,புவி வெப்பமடைதலுக்கு அதி கரித்து வரும் மனிதனின் செயல்பாடுகள் காரணம் என தெரியவந்துள்ளது. கடந்த 11 ஆண்டுகளில் சூரியனின் வெப்ப வெப்ப ஒளிக்கற்றைகளின் சுழற்சியினால் பனி மலைகள் உருகி வருகின்றன. நதிகள் வறண்டு போயும் உள்ளதாக இயற்கை மாற்றம் குறித்த ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் லண்டனைச் சேர்ந்தஜோன்னா ஹெயாக் இம்பீரியல் கல்லூரி வெளியிட்டு ஆய்வறிக்கையில், அதிகரித்து வரும் சூரிய வெப்ப ஒளிக்கற்றகைள் உண்மையில் பூமி குளிர்ச்சியாகிறது என இதனை கடந்த மூன்று ஆண்டுகளில் மேற்கொண்ட ஆராய்ச்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த ஆராய்ச்சி முடிவினை தெளிவாக உறுதிப்படுத்த முடி யாது. எனினும் மேலும் தீவிர ஆராய்ச்சி மேற்கெ?ண்டு வருவதாகவும் இதற்கு நீண்ட நாட்கள் தேவைப் படும் என வும் டெலிகிராப் பத்திரிகையில் செய்திவெளியிடப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

நடிக‌ர் எ‌ஸ்.எ‌ஸ்.ச‌ந்‌திர‌ன் மரண‌ம்


அ.இ.அ.‌தி.மு.க. கொ‌ள்ளை பர‌ப்பு துணை செயல‌ர் நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரு‌க்கு வயது 69.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள இடும்பாவனம் என்ற கிராமத்தில் நடைபெ‌ற்ற பொதுக்கூட்ட‌த்‌தி‌ல் பே‌சி‌‌வி‌ட்டு நடிக‌ர் எஸ்.எஸ்.சந்திரன், நே‌ற்‌றிரவு 12 மணிக்கு மன்னார்குடியில் உள்ள விடுதியில் தங்கினார்.

நள்ளிரவு 1 மணி அளவில், எஸ்.எஸ்.சந்திரனின் உதவியாளர், மாத்திரை கொடுப்பதற்காக அவரை எழுப்பியுள்ளார். அப்போது அசைவற்று இருந்த எஸ்.எஸ்.சந்திரனை கண்டு அதிர்ச்சி அடைந்த உதவியாளர், கட்சி நிர்வாகிகளுக்கு தெரிவித்துள்ளார். உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் எஸ்.எஸ்.சந்திரனை அனுமதித்துள்ளனர்.

அங்கு எஸ்.எஸ்.சந்திரனை பரிசோதத்த மருத்துவர்கள், ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். எஸ்.எஸ்.சந்திரன் உடல் செ‌ன்னை கொண்டுவர ஏ‌ற்பாடு செ‌ய்ய‌ப்ப‌ட்ட‌ள்ளது.

செ‌ன்னை‌யி‌ல் அவரது ‌வீ‌ட்டி‌ல் பொதும‌க்க‌ள் அ‌ஞ்ச‌லி‌க்காக வை‌க்க‌ப்படு‌கிறது.

மா‌நில‌ங்களவை உறு‌ப்‌‌பினராக இரு‌ந்த எ‌ஸ்.எ‌ஸ்.ச‌ந்‌திர‌ன் 100‌‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட பட‌ங்‌க‌ளி‌ல் நடி‌த்து‌ள்ளா‌ர்.
மேலும் இங்கே தொடர்க...

கட்டுகஸ்தோட்டைப் பகுதியில் தற்கொலை அதிகரிப்பு: பொலிஸார்
கட்டுகஸ்தோட்டைப் பகுதியில் தற்கொலை செய்து கொள்வோர் எண்ணிக்கை இவ்வருடம் அதிகரித்துள்ளது.

கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவில் இவ்வருடம் முதல் ஒன்பது மாதங்களில் மட்டும் தற்கொலை செய்து கொண்டுள்ளவர்களின் எண்ணிக்கை 22 எனக் கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவர்களுள் 17 ஆண்களும் 5 பெண்களும் அடங்குவர்.

தற்கொலை செய்து கொண்டவர்களுள் பெரும்பாலானோர் இளம் வயதுடையவர்கள் எனவும், அவர்கள் மிகச் சிறிய பிரச்சினைகளுக்காகவே தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.பீ. தியகெலினாவல தெரிவித்தார்
மேலும் இங்கே தொடர்க...

நேட்டோவுக்கு எரிபொருள் ஏற்றிச் சென்ற 27 வாகனங்கள் மீது தாக்குதல்

நேட்டோ படைகளுக்கு எரிபொருள் ஏற்றிச்சென்ற மேலும் 27 எண்ணெய்த் தாங்கி வாகனங்கள் பாகிஸ்தானில் வைத்து ஆயுததாரிகளால் அழிக்கப்பட்டுள்ளன.

நேற்று வெள்ளிக்கிழமை மாலை ஆயுததாரிகள், இவ்வாகனங்கள் மீது துப்பாகிச்சூடு நடத்தியதால் அவை தீப்பற்றி எரியத் தொடங்கியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அக்டோபர் மாத ஆரம்பத்திலிருந்து நேட்டோ படைகளின் விநியோக வாகனங்களின் மீது மேற்கொள்ளப்பட்ட 5 ஆவது தாக்குதல் சம்பவம் இதுவாகும்.

இச்சம்பவத்திற்கு பிறகு தாக்குதலை மேற்கொண்ட ஆயுததாரிகளைத்தேடி பாரிய தேடுதல் நடவடிக்கையொன்று இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம் நவம்பர் 18இல் திறப்பு

அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம் எதிர்வரும் நவம்பர் மாதம் 18 ஆம் திறக்கப்பட உள்ளதாக இலங்கை துறைமுக அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகார சபை பணிப்பாளர் பிரசன்ன களுத்தரகே தெரிவித்துள்ளார்.

துறைமுகத்தைக் கடலுடன் இணைப்பதற்காக கொழும்பு - கதிர்காம பழைய வீதியின் சுற்றுப்புற பகுதிகள் தோண்டப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

ஒரே கட்டண அறவீட்டில் கொழும்பில் விசேட பஸ் சேவை 12 கி.மீ. சுற்று வட்டத்தில் பயணம் செய்ய ரூ. 10


ஒரே அளவு கட்டண அளவீட்டுடன் கொழும்பு கோட்டையிலிருந்து புறப்பட்டு 12 கிலோ மீற்றர் சுற்று வட்டத்தில் பயணிக்கும் புதிய பஸ் சேவையொன்று நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கொழும்பு கோட்டையிலிருந்து புறப்ப டும் பஸ் புறக்கோட்டை, மருதானை, பொரளை, நாரஹென்பிட்டிய, கிருளபனை, ஹெவ்லொக் டவுன், டவுன்ஹோல் ஊடாக மீண்டும் கொழும்பு கோட்டையை வந்தடையும். பயணி ஒருவர் எந்த பஸ் தரிப்பு நிலையத்தில் ஏறி எந்த பஸ் தரிப்பு நிலையத்தில் இறங்கினாலும் 10 ரூபா மட்டுமே அறவிடப்படும்.

கொழும்பு கோட்டையிலிருந்து புறப்படும் பஸ் வண்டி மீண்டும் அதே இடத்தை 30 நிமிடங்களில் வந்தடையும். மூன்று பஸ் வண்டிகள் சேவையிலீடு படுத்தப்படும். காலை 6 மணிக்கு சேவை ஆரம்பமாவதுடன், இரவு 7.30 மணி வரை சேவை நடத்தப்படும்.

இலங்கை போக்குவரத்து சபையின் இலச்சினையுடன் மஞ்சள் நிறமும் சிவப்பு நிறமும் கலந்த வர்ணத்தையுடை யதாக பஸ் வண்டிகள் தயார்படுத்தப்பட் டுள்ளன. நாரஹேன்பிட்டிய இ. போ. ச. தலைமையலுவலகத்திலிருந்து பொரளை வரை அமைச்சர் குமார வெல்கம பஸ் சேவையை ஆரம்பிக்குமுகமாக பஸ்ஸை செலுத்தினார்.
மேலும் இங்கே தொடர்க...

நாட்டில் 28,720 வேலையற்ற பட்டதாரிகள் இருப்பதாக கணிப்பீடு


தொழில் அமைச்சு மேற்கொண்ட ஆய்வின் படி 2010 ஆம் ஆண்டாகும் போது 28,720 வேலையற்ற பட்டதாரிகள் இருப்பதாக கணிப்பிடப்பட்டுள்ளது. இவர்களுக்கு தொழில் வழங்குவதற்கு தனியார்துறையுடன் இணைந்து வேலைத் திட்டமொன்றை ஆரம்பித்துள்ளதாக ஆளும் கட்சி பிரதம கொரடா அமைச்சர் தினேஷ் குணவர்தன கூறினார்.

வாய் மூல விடைக்காக தொழில் அமைச்சரிடம் வினவப்பட்டிருந்த கேள்விக்கான பதிலை அமைச்சர் சபையில் சமர்ப்பித்தார்.

2010 ஆம் ஆண்டாகும் போது இலங்கையில் உள்ள வேலையற்ற பட்டதாரிகள் குறித்தும் அவர்களுக்கு தொழில் வழங்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஐ. தே. க. எம். பி. தயாசிரி ஜயசேகர கேள்வி எழுப்பியிருந்தார்.
மேலும் இங்கே தொடர்க...

ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட எம்.பி.

ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட எம்.பி. ரவி கருணாநாயக்கவின் தனிநபர் பிரேரணை நேற்று சபையில் விவாதத்திற்கு எடுக்கப்பட்ட போதிலும் கோரமில்லாததால் பாராளுமன்றம் எதிர்வரும் 19 ஆம் திகதி வரையும் ஒத்திவைக்கப்பட்டது.

பாராளுமன்றம் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நேற்று பிற்பகல் கூடியது. சபை அமர்வின் வழமையான தொடக்க நிகழ்வை தொடர்ந்து எம்.பி ரவி கருணாநாயக்க தமது தனிநபர் பிரேரணை மீது உரையாற்றத் தொடங்கினார்.

இச்சமயம் ஐ.ம.சு. முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் ஒழுங்குப் பிரச்சினை எழுப்பி ரவி கருணாநாயக்க எம்.பி. ஏற்கனவே இப்படியான ஒரு பிரேரணையை முன்வைத்திருக்கின்றார். ஆனால் இந்நாட்டின் அரசியல் யாப்பின்படி ஜனாதிபதியின் அதிகாரங்கள், பதவிகள் குறித்து விவாதிக்க முடியாது. அதற்கு பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளிலும் இடமில்லை என்றார்.

சபாநாயகர்:- எம்.பி. ரவி கருணாநாயக்க முன்பு வைத்திருந்த தனிநபர் பிரேரணையில் சில திருத்தங்கள் செய்த பின்னரே விவாதத்திற்கு எடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றார்.

இதன் பின்னர் இப்பிரேரணையை வழி மொழிந்து எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றினார். இச்சமயம் அவர் சரத் பொன்சேகாவுக்கு எதிராக வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு குறித்து சிறப்புரிமை பிரச்சினை எழுப்பினார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் சபையில் உரையாற்றினார். இவ்விவகாரம் தொடர்பாக பிரதமர் டி.எம். ஜயரட்ணவும் சபையில் உரையாற்றினார்.

இவ்வாறு சரத் பொன்சேகா விவகாரம் தொடர்பாக ஆளும் கட்சி எதிர்க் கட்சி எம்.பிக்கள் சபையில் விவாதத்திற்கு எடுக்கப்பட்ட தனிநபர் பிரேரணைக்கு அப்பால் வாதப் பிரதிவாதங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கையில் பிரதியமைச்சர் விஜித் விஜய முனி சொய்ஸா சபையில் கோரமில்லை என்று சபாநாயகரின் கவனத்திற்குக் கொண்டு வந்தார். அச்சமயம் ஐ.ம.சு.மு.யின் காலி மாவட்ட எம்.பி. சந்திம வீரக்கொடி உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது பிற்பகல் நேரம் 2.40 மணியாகும்.

இதனைத் தொடர்ந்து சாபாநாயகரின் பணிப்பின் பேரில் கோரம் மணி ஒலிக்கப்பட்டது.

சரியாக பிற்பகல் 2.45 மணியளவில் சபாநாயகர் சபையில் 18 உறுப்பினர்களே அமர்ந்திருப்பதால் சபை நடவடிக்கையைக் கொண்டு செல்லுவதற்கு போதிய கோரமில்லை எனக்குறிப்பிட்டு சபையை எதிர்வரும் 19 ஆம் திகதி வரையும் ஒத்திவைத்தார்.

ரவி கருணாநாயக்க எம்.பியின் ஜனாதிபதி, பிரதமர் பதவி வகிப்போர் அமைச்சரவைப் பதவிகளை வகிப்பது தொடர்பான தனிநபர் பிரேரணையே நேற்று சபையில் விவாதத்திற்கு எடுக்கப்பட்டிருந்தது.
மேலும் இங்கே தொடர்க...

கே. கே. எஸ். ரயில் பாதைக்கான வேலைகள் இந்த மாதம் ஆரம்பம் இந்திய உயர் ஸ்தானிகர் யாழ்ப்பாணத்தில் அறிவிப்பு


யாழ்ப்பாணம் காங்கேசன்துறை புகையிரதப் பாதைக்கான வேலைகள் இந்த மாதம் ஆரம்பமாகும் என இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் காந்த் கூறினார்.

யாழ். மாநகர சபையில் இலங்கை - இந்திய நட்புறவுச் சங்கத்தால் வழங்கப்பட்ட பஸ் வண்டிகளின் திறப்புகளை யாழ். நகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா, யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் என். சண்முகலிங்கன், வேம்படி மகளிர் கல்லூரி அதிபர் திருமதி பொன்னம்பலம், யாழ்.

மத்திய கல்லூரி பழைய மாணவர் கு. பற்குணராஜா ஆகியோரிடம் இந்தியத் தூதுவர் அசோக்காந்த் நேற்று வெள்ளிக் கிழமை கையளித்தார். அசோக்காந்த் மேலும் பேசும்போது கூறியதாவது:- மக்க ளின் போக்குவரத்துச் சேவைகளை முன் னெடுக்கக் கூடியதான உதவிகளை இந் தப் பிரதேசத்திற்கு வழங்க இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது.

மன் னார், மடு, தலைமன்னார் பகுதிகளுக்கான புகையிரத வீதிகளையும் எமது அரசு அமை த்துக் கொடுக்கவுள்ளது. இலங்கை - இந்திய நட்புறவின் சின்ன மாக இங்கே பல்வேறு உதவித் திட்டங் களை நடைமுறைப் படுத்தவுள்ளோம். மீள் குடியமர்ந்த மக்க ளின் வாழ்வாதார உதவியாக அவர்களுக்கான வீடுகளைக் கட்டிக் கொடுக்கவும் இந்திய அரசு உதவி வருகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

இராணுவ நீதிமன்ற தீர்ப்பு சட்டபூர்வமானது: பொன்சேகா விவகாரம்; ஜனாதிபதியிடம் மன்னிப்பு கோரினால் தீர்ந்துவிடும்


சரத் பொன்சேகாவுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் சட்டபூர்வமானதாகும். சிவில் சட்டத்தை மீறியது தொடர்பில் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தண்டனையை மாற்ற சபாநாயகருக்கு அதிகாரம் கிடையாதென பிரதமர் டி.எம். ஜயரட்ன நேற்று (8) சபையில் தெரிவித்தார்.

சரத் பொன்சேகா விடயத்தில் தவறான வழிகளைப் பின்பற்றாது ஜனாதிபதியிடம் மன்னிப்புக் கோரினால் இந்தப் பிரச்சினை இலகுவாக தீர்ந்துவிடும் எனவும் அவர் கூறினார்.

ரவி கருணாநாயக்க எம்.பி முன்வைத்த தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை முன் வைத்தார். இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த பிரதமர் மேலும் கூறியதாவது; இராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்பு சட்டபூர்வமானதாகும். பாராளுமன்றத்தினுள் மேற்கொள்ளப்படும்

நடவடிக்கைகள் தொடர்பிலே சபாநாயகருக்கு அதிகாரம் உள்ளது. சாதாரண குடிமகனுக்குள்ள சட்டமே எம்.பி. தொடர்பில் உள்ளது. குற்றவியல் சட்டத்தை மீறும் எம்.பி ஒருவரை பாராளுமன்றத்தைத் தவிர வேறு எங்கு வைத்தும் கைது செய்ய முடியும். அவரை பாராளுமன்றத்திற்கு அனுப்பாதிருக்கவும் சட்டத்தில் இடமுண்டு. அந்த எம்.பி.யை பாராளுமன்றத்திற்கு அழைக்க சபாநாயகருக்கு அதிகாரம் கிடையாது.

மக்களின் கவனத்தை திருப்பவே ஐ.தே.க.வும் ஜே.வி.பியும் இந்த விடயத்தை முன்னெடுப்பதாக தெரிகிறது. ஜனாதிபதியிடம் மன்னிப்புக் கோருவதை விடுத்து தேங்காய் உடைப்பதால் எதுவித பயனும் ஏற்படாது.

பாராளுமன்றத்தில் ஒரு நிமிடம் உரையாற்றுவதற்கு பொதுமக்களின் பெருமளவு பணம் செலவாகிறது. ஒரு வசனத்தில் சாதிக்கக் கூடிய விடயத்தை ஏன் பெரிது படுத்துகிஹர்கள்.

மன்னிப்புக்கோரும்படி எதிர்க்கட்சித் தலைவருக்கு பொன்சேகாவின் மனைவியை கேட்க முடியும்.
மேலும் இங்கே தொடர்க...

ஐந்து இலட்சத்து 44 ஆயிரம் பேர் இதுவரை மீளக்குடியமர்வு மீட்கப்பட்ட நகைகள் மீள்குடியேற்றத்தின் பின் உரியவரிடம் ஒப்படைப்பு


யுத்தம் காரணமாக உள்ளக இடம்பெயர்வுக்கு உள்ளானவர்களில் 5,44,494 பேர் இதுவரை மீள்குடி யேற்றப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுயதொழில், மீன்பிடி, விவசாயம் மற்றும் அன்றாட கூலி வேலை செய்வதினூடாக தமது ஜீவனோபாயத்தை மேற்கொள்வதாக பிரதி மீள்குடியேற்ற அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ரவி கருணாநாயக்க எம்.பி வாய்மூல விடைக்கான கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், தற்பொழுது 1,65,755 பேர் முகாம்களில் உள்ளனர். மீள்குடியேற்றப்படும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 25 ஆயிரம் ரூபா உதவி வழங்கப்படுகிறது.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது கண்டெடுக்கப்பட்ட தங்க ஆபரணங்கள் மக்கள் மீள்குடியேற்றப்பட்ட பின் அப்பிரதேசங்களில் ஆரம்பிக்கப்படும் மக்கள் வங்கிக்கிளைகள் ஊடாக மீள வழங்கப்படும்.

வவுனியா மெனிக்பாம் முகாமில் மீள்குடியேற்றுவதற்காக 8228 குடும்பங் களைச் சேர்ந்த 24,280 பேர் எஞ்சியுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் 22,264 குடும்பங்களைச் சேர்ந்த 64,924 பேரும், அநுராதபுரத்தில் 4273 பேரும், குருநாகலில் 730 பேரும், பாணந்துறையில் 1405 பேரும், புத்தளத்தில் 67,428 பேரும் மீள்குடியேற்றப்பட வேண்டியுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...