31 ஆகஸ்ட், 2009

புல்மோட்டை இடைத்தங்கல் முகாம் மக்கள் துயரங்களுக்கு மத்தியில்புல்மோட்டை முகாமுக்கு முன்னர் கொண்டுவரப்பட்ட மக்கள்
புல்மோட்டை முகாமுக்கு மக்கள் முன்னர் கொண்டுவரப்பட்ட காட்சி


இலங்கையின் வடக்கே யுத்த காலத்தில் இடம்பெயர்ந்து திருகோணமலை மாவட்டம் புல்மோட்டை இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருப்பவர்களைப் பார்வையிட தற்போது இராணுவத்தினரால் உறவினர்களுக்கு அனுமதியளிக்கப்பப்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

போர்க்காலத்தில் கடல் வழியாக புல்மோட்டையை வந்தடைந்த சுமார் 6000 பேர் இரண்டு நலன்பரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

கடந்த காலங்களில் இந்த நிலையங்களில் தங்கியிருப்பவர்களைப் பார்வையிட தங்களுக்கு அனுமதியளிக்கப்படவில்லை என்று கூறும் உறவினர்கள் தற்போது அனுமதியளிக்கப்படுவதாகத் தெரிவிக்கின்றனர்.

அங்கு சென்று தனது மகனைப் பார்வையிட்டு மட்டக்களப்பு திரும்பிய தாயொருவர் அந்த நிலையத்தில் தங்கியிருப்பவர்கள் பலவேறு சிரமங்களை எதிர் நோக்குவதை தன்னால் அறிய முடிந்ததாகக் கூறுகின்றார்.

வவுனியா இடைத்தங்கல் முகாம்கள் பற்றியே பலரும் ஆர்வம் காட்டுவதாக தனது கவலையை வெளிப்படுத்தியுள்ள அவர், புல்மோட்டை நலன்புரி நிலையம் தொடர்பாக எவரும் அக்கறை கொள்வதாக இல்லை என்றும் வருத்தம் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...
பாசிக்குடா சுற்றுலாத்துறை அபிவிருத்தி : உள்ளூர் மீனவர் விசனம்


இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையில் பிரபல்யம் பெற்றுள்ள பாசிக்குடா கடலோரப் பிரதேசத்தில் சுற்றுலாத் துறையை அபிவிருத்தி செய்ய மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளினால் தமக்கு தொழில் ரீதியாகப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் மீனவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

பல வருடங்களாக மீன் பிடித்தொழிலில் ஈடுபட்டு வந்த மீனவர்களை அந்த இடங்களிலிருந்து வெளியேறுமாறு தற்போது அதிகாரிகள் அறிவித்துள்ள நிலையிலேயே மீனவர்கள் இது தொடர்பான தமது கவலையை வெளியிட்டுள்ளனர்.

இதன் காரணமாக கல்குடா பகுதியைச் சேர்ந்த குடும்பங்களில் 99 சதவீதமான குடும்பங்கள் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக கல்குடா மீனவர் சங்கத் தலைவர் மயில்வாகனம் சுந்தரராஜா தெரிவித்தார்.

தங்களின் மீன் வாடிகள் அமைந்துள்ள காணி மற்றும் வள்ளங்கள் நிறுத்தப்பட்டுள்ள கடலோரப் பகுதி ஆகியன ஹோட்டல்கள் கட்டுவதற்கு அடையாளமிடப்பட்டு ஒப்பந்தக்காரர்களான முதலீட்டாளர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாகக் கூறும் அவர்,

"இது தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ள போதிலும் இது வரை சாதகமான பதில் எதுவும் கிட்டவில்லை" என்கிறார்

"பொருத்தமான மாற்று இடத்தை வழங்கினால் தொழில் ரீதியான பாதிப்பிலிருந்து தங்களால் விடுபட முடியும்"என சங்கச் செயலாளரான பெரியதம்பி நடராஜா சுட்டிக் காட்டுகின்றார்.

இப்பிரதேசத்திலுள்ள மீனவர்கள் 58 வள்ளங்களையும் தோணிகளையும் வைத்திருப்பதாகக் கூறும் அவர் எந்நேரத்திலும் தாங்கள் இங்கிருந்து வெளியேறலாம் அல்லது வெளியேற்றப்படலாம் என்ற நிலையிலேயே இருப்பதாகவும் தெரிவிக்கின்றார்.

"தற்போதைய இடத்திலிருந்து சற்றுத் தொலைவில், அதாவது கல்குடா இராணுவ முகாமை அண்மித்த பகுதியில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும் அப்பகுதி கற்பாறைகள் நிறைந்திருப்பதால் பொருத்தமற்ற இடமாகவே உள்ளது." என்றும் தெரிவித்துள்ளார் பெரியதம்பி நடராஜா.

"சுற்றுலாத்துறை அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்பதை மீனவர்கள் மறுக்கவில்லை.ஆனால் பொருத்தமான இடமொன்றை பெற்று இதனால் ஏற்படும் பாதிப்பிலிருந்து நாம் விடுபட வேண்டும் என்றுதான் மீனவர்கள் எதிர்பார்க்கின்றார்கள்" என்றார்மேலும் இங்கே தொடர்க...
ஆதரவற்ற சிறுவர் நலன் குறித்து மனித உரிமைக்குழு கலந்துரையாடல்வவுனியா மெனிக்பாம் முகாம்கள் சிலவற்றில் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள ஆதரவற்ற சிறுவர்களின் எதிர்கால நலன்கள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் 2 ஆம் திகதி புதன்கிழமை கலந்துரையாடவுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய பொறுப்பதிகாரி எம்.ஆர்.பிரியதர்சன தெரிவித்துள்ளார்.

மெனிக்பாம் இடைத்தங்கல் முகாம் தொகுதியைச் சேர்ந்த தர்மபுரம் முகாமில் 35 சிறுவர்களும், சுமதிபுரம் முகாமில் 26 சிறுவர்களும், வீரபுரம் முகாமில் 13 சிறுவர்களும் இருப்பதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய அலுவலகத்தினர் கண்டறிந்துள்ளனர்.

இவர்களின் முறையான பராமரிப்பு, இவர்களுக்கான சமூகப் பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம், எதிர்கால நன்மைகள் என்பன குறித்து சம்பந்தப்பட்ட முகாம்களின் பொறுப்பதிகாரிகள், மற்றும் அந்தந்த முகாம்களைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரிகள் ஆகியோருடன் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய அதிகாரிகள் கலந்துரையாடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

"இந்த முகாம்களில் சிறுவர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்ற போதிலும், அவர்களது பெற்றோர் - உற்றார்கள் இருக்கின்றார்களா என்பது குறித்த தகவல்கள் எதுவும் தெரியாது. இந்த நிலையில் சம்பந்தப்பட்ட சிறுவர்களை உரிய இடங்களில் வைத்துப் பராமரிப்பதற்கு இந்தக் கலந்துரையாடல் வழிசமைக்கும்" என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய இணைப்பதிகாரி பிரியதர்சன நம்பிக்கை வெளியிட்டுள்ளார்
மேலும் இங்கே தொடர்க...

பத்திரிகையாளர் திஸ்ஸநாயகத்துக்கு 20 வருட சிறை

http://www.bbc.co.uk/worldservice/images/2008/06/20080630132612tissa203.jpg

மூத்த பத்திரிகையாளர் ஜே.எஸ்.திஸ்ஸநாயகத்துக்கு கொழும்பு மேல்நீதிமன்றம் இன்று இருபது வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.

திஸ்ஸநாயகத்துக்கு எதிராக கொழும்பு மேல்நீதிமன்றத்தில் சட்டமா அதிபரினால் தொடரப்பட்டிருந்த வழக்கில் அவருக்கு எதிரான மூன்று குற்றச்சாட்டுக்களில் அவர் குற்றவாளியென மேல்நீதிமன்றம் தீர்மானித்தது.

பயங்கரவாத தடுப்புச்சட்டம் கீழ் மற்றும் அவசரகால சட்டம் ஆகியவற்றின் விதிகளின் கீழ் சட்டமா அதிபரினால் திஸ்ஸநாயகத்துக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மாதாந்த சஞ்சிகை ஒன்றை அச்சிட்டு பிரசுரித்தமை, வெளியிட்டமை தொடர்பாக இனங்களுக்கிடையிலான உணர்வுகளை தூண்டி பொதுமக்கள் மத்தியில் கலவரம் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டதாக பத்திரிகையாளர் திஸ்ஸநாயகத்துக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

2006 ஆம் ஆண்டு ஜுன் மாதம் முதலாம் திகதிக்கும் 2007 ஆம் ஆண்டு ஜுன் மாதம் முதலாம் திகதிக்கும் உட்பட்ட காலப்பகுதியில் பிரஸ்தாப குற்றங்கள் புரிந்துள்ளதாக அவர் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அரச படைகள் கிழக்கு மாகாணத்தில் இனப்படுகொலையில் ஈடுபட்டிருப்பதாக கருத்து தெரிவித்து தனது சஞ்சிகையில் கட்டுரை வெளியிட்டமை மூலம் அரச படைகளுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

மேலும் இனங்களுக்கிடையிலான குரோதங்களை ஏற்படுத்த அதன்மூலம் திட்டமிட்டிருப்பதாகவும் அக்குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

முதலாவது, இரண்டாவது குற்றச்சாட்டுகளுக்கு தலா ஐந்து வருட சிறைத்தண்டனையும் மூன்றாவது குற்றச்சாட்டுக்கு பத்து வருட சிறைத்தண்டனையும் சேர்த்து 20 வருடகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

கடந்த வருடம் மார்ச் மாதம் 6 ஆம் திகதி திஸ்ஸநாயகம் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார். குறிப்பிட்ட மாதாந்த சஞ்சிகையை வெளியிட்ட அச்சக உரிமையாளர் என்.யசீகரன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட பின் அவர்களை பார்வையிட பொலிசுக்கு சென்றபோதே திஸ்ஸநாயகம் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டார்.

பலமாத காலமாக பொலிஸ் தலைமையகத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த திஸ்ஸநாயகம் பின்னர் கொழும்பு உயர்நீதிமன்ற தீர்ப்பொன்றை அடுத்து கடந்த மே மாதம் 16 ஆம் திகதி தொடக்கம் கொழும்பு சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இவரால் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரணசிங்க என்பவருக்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் சுயாதீனமாக வழங்கப்பட்டதென கொழும்பு மேல்நீதிமன்றம் ஏற்கனவே தீர்மானித்து அதனை அடிப்படையாக கொண்டு திஸ்ஸநாயக்துக்கு எதிரான வழக்கை விசாரணை செய்தது.

இதன்படி வழக்கு விசாரணை செய்த கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜேசுந்தர, திஸ்ஸநாயகத்தின் மூன்று குற்றச்சாட்டுகளுக்கும் 20 வருட கடுழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.

திஸ்ஸநாயகம் சார்பாக ஆஜரான சட்டத்தரணி அனில் டி சில்வா கருத்து தெரிவிக்கையில் திஸ்ஸநாயகம் ஒரு இனவாதி அல்லவென்றும் சிங்கள மக்களுக்கு ஆதரவான வகையில் பல்வேறு போராட்டங்களுக்கு அவர் தலைமை தாங்கியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

அரசியல் அமைப்பில் கருத்து வெளியிடும் சுதந்திரம் மட்டுமல்ல இன, மத ரீதியின்றியும் பாரபட்சமின்றியும் நியாயமானதொரு வழக்கு விசாரணைக்கு அதிகாரம் வழங்கியுள்ளபோதிலும் அவருக்கு எதிரான வழக்கில் இந்த நியாயம் வழங்கப்பட்டதா என்பது ஒரு கேள்விக்குறியான விடயம் என்றும் சட்டத்தரணி அனில் டி சில்வா நீதிமன்றத்தில் இன்று வெளிப்படையாக தெரிவித்தார்.

இவ்வழக்கின் தீர்ப்பை அவதானிக்க பெருந்திரளான பத்திரிகையாளர்கள் மற்றும் வெளிநாட்டு தூதரக உத்தியோகத்தர்கள் கொழும்பு மேல்நீதிமன்றத்துக்கு சமூகமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...
யாழில் சகல உள்ளுராட்சி சபைகளுக்கும் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை-


இவ்வருட இறுதிக்குள் யாழ்ப்பாணத்தின் சகல உள்ளுராட்சி சபைகளுக்கும் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயக கட்சி செயலாளரும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார். இந்தக் கோரிக்கையை ஜனாதிபதியிடம் முன்வைக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்டத்திலுள்ள 17சபைகளில், யாழ். மாநகரசபைக்கு தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. அடுத்துள்ள 03 நகரசபைகளான வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, சாவகச்சேரி என்பவற்றிற்கும் 13 பிரதேச சபைகளுக்கும் விரைவான ஒரு தேர்தலை நடத்துமாறு கேட்டுள்ளேன். ஏனெனில் அந்தமக்கள் தாங்களாகவே அந்த பிரதேசசபைகளை ஆளவேண்டுமென்று விரும்புகின்றனர். அதன் ஊடாகவே விரைவான அபிவிருத்தியை முன்னெடுக்கலாம் என்றும் அவர்கள் கோருகின்றனர். இது தொடர்பாக ஜனாதிபதியை சந்தித்து கோரிக்கை விடுக்கவுள்ளேன் என்று தெரிவித்துள்ளார். இதேவேளை யாழ்ப்பாணத்தில் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் 1998ம் ஆண்டு இறுதியாக நடைபெற்றது
மேலும் இங்கே தொடர்க...

சரணடைந்த - கைதான புலி

உறுப்பினர்களின்

புனர்வாழ்வுக்கென 200 கோடி ரூபா


சர்வதேச இடம்பெயர்ந்தோர்
அமைப்புடன் ஒப்பந்தம் செய்ய அரசாங்கம் தீர்மானம்


எல்.ரீ.ரீ.ஈ. அமைப்பிலிருந்து படையினரிடம் சரணடைந்த மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகளின்போது படையினரால் கைது செய்யப்பட்டவர்களது புனர்வாழ்வுக்காக சர்வதேச இடம்பெயர்ந்தோருக்கான அமைப்பினூடாக 150 கோடி ரூபா முதல் 200 கோடி ரூபா வரையிலான நிதியை பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதனடிப்படையில் நீதி மற்றும் நீதி மறுசீரமைப்பு அமைச்சும் சர்வதேச இடம்பெயர்ந்தோருக்கான அமைப்பும் இவ்வாரமளவில் கொழும்பில் ஒப்பந்தமொன்றை கைச்சாத்திடவுள்ளன.

புலி பயங்கரவாதிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் வடக்கு மற்றும் கிழக்கைச் சேர்ந்த மக்களுக்கு இயல்பு வாழ்க்கையைப் பெற்றுக்கொடுப்பதற்காக அரசாங்கம் முன்னெடுத்த முயற்சிகளுக்கு இதுபோன்று பல்வேறு வெளிநாட்டு உதவிகள் கிடைத்துள்ளன.

இந்த ஒப்பந்தத்தினடிப்படையில் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்காக இலங்கை அரசாங்கம் எதிர்பார்த்திருக்கும் நிதியை விரைவில் பெற்றுக்கொடுப்பதற்கு அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய ஐரோப்பா நாடுகளும் ஜப்பான், இந்தியா ஆகிய ஆசிய நாடுகளும் இணக்கம் தெரிவித்திருப்பதாக நீதி மற்றும் நீதி மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

எல். ரீ.ரீ.ஈ அமைப்பிலிருந்து படையினரிடம் சரணடைந்த அல்லது மனிதாபிமான நடவடிக்கைகளின்போது படையினரால் கைது செய்யப்பட்ட குழுவினருக்கு புனர்வாழ்வு அளிக்குமுகமாக கணனி மற்றும் தகவல் தொழில்நுட்பம் பற்றி கற்பித்தல், தளபாடம் தயாரித்தல், தச்சுத் தொழில் செய்தல், ஆடை உற்பத்தி செய்தல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்.

மேலும் இங்கே தொடர்க...
மீள்குடியேற்றம் தாமதப்படுகின்றமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து திருவண்ணாமலையில் ஆர்ப்பாட்டம்-

வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களை மீள்குடியமர்த்தும் பணியில் தாமதம் ஏற்பட்டு வருகின்றமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழகம் திருவண்ணாமலையில் ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தினை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏற்பாடு செய்திருந்தது. இதன்போது இலங்கையில் இடம்பெயர்ந்துள்ள மக்கள் அனைவரும் தாமதமின்றி மீள்குடியமர்த்தப்பட வேண்டுமென கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இலங்கையில் நீண்டகாலமாக காணப்படுகின்ற இனப்பிரச்சினைக்கு சரியான அரசியல் தீர்வொன்று முன்வைக்கப்பட வேண்டுமென்றும் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.


மேலும் இங்கே தொடர்க...
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து சென்னையில் பாரிய ரயில் மறியல் போராட்டம்-

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து சென்னையில் எதிர்வரும் 2ம் திகதி பாரிய ரயில் மறியல் போராட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திராவிடர் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மறியல் போராட்டத்திற்கு அதன் தலைவர் வீரமணி தலைமை தாங்குவாரென்றும் கூறப்படுகின்றது. தமிழகம், விழுப்புரம் கள்ளக்குறிச்சியில் நேற்றையதினம் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே வீரமணி இதனைத் குறிப்பிட்டுள்ளார். இலங்கைத் தமிழர்களுக்கான உரிமைகள் வழங்கப்பட்டு அவர்கள் முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட வேண்டுமென்பதை வலியுறத்தியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் இங்கே தொடர்க...
லண்டனில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அமரர்.அமிர்தலிங்கம் அவர்களின் நினைவுப்பேருரை-

தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவரும், முன்னைநாள் எதிர்க்கட்சி தலைவருமான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் 82வது பிறந்ததின நினைவு பேருரை பிரித்தானியாவில் நாளையதினம் இடம்பெறவுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவ+ப் ஹக்கீம் அவர்கள் இந்நிகழ்வில் முக்கிய பேச்சாளராக பங்குகொண்டு சிறப்பிக்கவுள்ளார். இதில் அனைத்து ஜனநாயக விரும்பிகளையும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அமிர்தலிங்கம் நினைவு அறக்கட்டளை கோரியுள்ளது. அமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் 82வது பிறந்ததின நினைவுப் பேருரை நிகழ்வு நாளை ஆகஸ்ட் 31ம் திகதி மாலை 6:00மணியளவில் INDIAN YMCA, Fitzroy Square, London. W1P 6AQ என்னுமிடத்தில் இடம்பெறவுள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

30 ஆகஸ்ட், 2009

மேனிபாம் முகாம்
மேனிக்பாம் முகாம்

இடைத்தங்கல் முகாமில் இருந்து வெளியே செல்பவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக புகார்


இலங்கையின் வடக்கே வவுனியா மெனிக்பாம் பகுதியில் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்கள், ஒரு முகாமில் இருந்து அடுத்த முகாமுக்குச் செல்ல முடியாதவாறு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த பாதுகாப்புக்கு மத்தியிலும் அவ்வாறு செல்ல முற்படுபவர்கள் இராணுவத்தினரால் தாக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான ஒரு சம்பவம் ஞாயிற்றுகிழமை காலையில் இராமநாதன் இடைத்தங்கல் முகாமில் நடைபெற்றிருப்பதாகத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்தைத் தான் நேரில் கண்டதாகவும், தாங்கள் தங்க வைக்கப்பட்டுள்ள இடைத்தங்கல் முகாமில் தண்ணீருக்குப் பெரும் கஷ்டமான நிலை காணப்படுவதாகவும், கழிப்பறை வசதிகள் கூட போதிய அளவில் இல்லை என்று அந்த முகாமைச் சேர்ந்த ஒரு பெண்மணி தெரிவித்தார்.

இதற்கிடையில் முகாம் வாழ்க்கை மிகவும் மோசமானதாக இருப்பதாகவும், அங்குள்ள கூடாரங்களில் அளவுக்கு அதிகமானவர்களைத் தங்க வைக்கப்பட்டிருப்பதனால் இட நெருக்கடி ஏற்பட்டிருப்பதாக மற்றுமொருவர்

கூறினார்

மேலும் இங்கே தொடர்க...
வீடியோ காட்சிகள் தொடர்பில் இலங்கைமீது விசாரணை : எரிக் சொல்ஹெய்ம் -
அரசு மறுப்பு
லண்டனில்
இருந்து ஒளிபரப்பாகும் சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட, இலங்கை இராணுவத்தின் படுகொலை காட்சிகள் தொடர்பில் இலங்கை மீது போர்க் குற்ற விசாரணைகளை ஐ.நா. சபை முன்னெடுக்க வேண்டும் என்று நோர்வே சர்வதேச அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் வள அமைச்சரும், முன்னாள் சமாதான தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம் வலியுறுத்தியுள்ளார்.

நோர்வேக்கு இன்று விஜயம் செய்யவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் இது விடயம் தொடர்பாக வலியுறுத்தவுள்ளதாகவும் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,

"இறுதி ஆண்டுகளில் வகை தொகையின்றி மக்கள் கொல்லப்பட்டும் காணாமல் போயும் உள்ளனர். இந்தக் கொலைகள் மற்றும் காணாமல் போதல் சம்பவங்கள் மீது எந்தவிதமான சட்ட நடவடிக்கைகளோ, நீதி விசாரணைகளோ நடத்தப்படவில்லை.

இறுதிக்கட்ட போரின்போது வடக்கு பகுதி முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தது. எந்தவொரு உதவி நிறுவனமோ அன்றி சுயாதீன ஊடகவியலாளரோ அப்பகுதிக்கு அனுமதிக்கப்படவில்லை. இதனால் இலங்கை இராணுவத்திற்கு எதிராக எழுந்துள்ள போர்க்குற்றம் தொடர்பான குற்றச்சாட்டுக்களை உறுதி செய்ய முடியவில்லை.

எனினும் இந்தக் காணொளி போன்ற ஆதாரங்கள் இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணைகளுக்கான கோரிக்கையை வலுப்படுத்துகின்றன.

இலங்கை அரசுக்கு எதிரானவர்கள் வெள்ளை வேன் மூலம் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், தொண்டர் நிறுவனப் பணியாளர்கள் ஆகியோரே இவ்வாறான வெள்ளை வேன் கடத்தலுக்கு அதிகம் ஆளாகின்றனர்" என்றார்.

அரசாங்கம் கடும் எதிர்ப்பு

நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் வள அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம், இலங்கை இராணுவத்தினர் தமிழர்களை நிர்வாணமாக்கி சுட்டுப் படுகொலை செய்யும் வீடியோ காட்சிகள் தொடர்பில் வெளியிட்டுள்ள கருத்துக்களுக்கு அரசாங்கம் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.

நட்புறவு ரீதியான நோர்வே அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவரினால் இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் வேதனையளிப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக சொல்ஹெய்ம் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என சுட்டிக்காட்டப்படுகிறது.

கடந்த காலங்களில் ஒஸ்லோவில் நடைபெற்ற சமாதானப் பேச்சுவார்த்தைகளில் சொல்ஹெய்ம் மிக முக்கிய பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் சனல்-4 அலைவரிசை வெளியிட்ட சில காட்சிகள் தொடர்பில் நோர்வே வெளியிட்டுள்ள கருத்து ஏற்புடையதல்ல எனவும், உறுதிப்படுத்தப்படாத ஒரு வீடியோ காட்சியை அடிப்படையாகக் கொண்டு குற்றச்சாட்டுக்களைச் சுமத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் குறிப்பிடப்படுகிறது
மேலும் இங்கே தொடர்க...

அமிர்தலிங்கம் நினைவுப் பேருரை!


தமிழர் விடுதலை கூட்டணியின் செயலதிபரும் முன்னைநாள் எதிர்கட்சி தலைவருமான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் 82வது பிறந்ததின நினைவு பேருரை பிரித்தானியாவில் இடம்பெறுகின்றது. முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவ+ப் ஹக்கீம் அவர்கள் முக்கிய பேச்சாளராக கலந்து கொண்டு சிறப்பிக்கின்றார். இதில் அனைத்து ஜனநாயக விரும்பிகளையும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அமிர்தலிங்கம் நினைவு அறக்கட்டளை கோரியுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...
இளைஞர், யுவதிகளுக்கு வர்த்தக சித்திர வடிவமைப்புப் பயிற்சி : வ.மா. கிராம அபி. திணைக்களம் ஏற்பாடு
வடமாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களம் வவுனியாவில் உள்ள இளைஞர் யுவதிகளுக்கு வடக்கின் வசந்தம் திட்டத்தின்கீழ் 18 லட்ச ரூபா செலவில் வர்த்தக சித்திரம் மற்றும் வடிவமைப்புத் துறையில் பயிற்சியளித்து வருகின்றது.

அரச திணைக்களத்தினால் இலங்கையில் முதன்முறையாக இந்தப் பயிற்சி நெறி வவுனியாவிலேயே ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக இதன் ஆரம்ப வைபவத்தில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய வடமாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜே.ஜே.சி.பெலிசியன் தெரிவித்தார்.

வவுனியா மாவட்ட மகளிர் அபிவிருத்தி நிலையத்தில் நடத்தப்படுகின்ற இந்தப் பயிற்சி நெறிக்கு 25 இளைஞர் யுவதிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

கணினி அறிவு, வர்ணமிடல் முறைகள், அலங்காரப் பொருள் ஆக்கம், ஸ்கிரீன் பிரிண்டிங், றப்பர் சீல் தயாரித்தல், விளம்பரப் பலகைகள், பதாதைகள் செய்தல், பிளாஸ்டிக் அடையாள அட்டைகள் செய்தல், மெடல்கள், கேடயங்கள் செய்தல், என்கிறேவிங், எச்சிங், எம்போசிங், முலாமிடல், மக் பிரிண்ட், பொயிலிங் மற்றும் தச்சுவேலை, வெல்டிங், வயரிங், எம்புறோடிங், டிஜிட்டல் போன்ற விடயங்களில் அடிப்படை அறிவுக்கான பயிற்சி என்பன இதில் பாடங்களாக உள்ளடக்கப்பட்டிருப்பதாக இதன் பொறுப்பாசிரியர் எஸ்.எஸ்.ஜசோதரன் தெரிவித்துள்ளார்.

இந்தப் பயிற்சி நெறி ஆறு மாதங்களுக்கு நடைபெறும் என்றும் பயிற்சியின் முடிவில் மாணவர்களுக்குச் சான்றிதழ் ஒன்று வழங்கப்படும் என்றும், வடமாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் பெலிசியன் தெரிவித்துள்ளார்.

மேற்கத்தைய நாடுகளில் மேற்கொள்ளப்படுகின்ற வழிமுறைகளைப் பின்பற்றியதாக விசேட முறையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் பயிற்சி நெறி ஆறுமாதங்களுக்கு முழுநேர வகுப்பாக நடத்தப்படும் என்றும், பயிற்சியின் முடிவில் மாணவர்கள் 15க்கும் மேற்பட்ட துறைசார்ந்த சுயதொழில் வாய்ப்புகளுக்கான திறமையையும், அறிவையும் பெற்றிருப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் வவுனியா மாவட்ட அதிகாரியான அ.அருற்வேள்செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்தப் பயிற்சி நெறியின் ஆரம்ப வைபவத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு வவுனியா உதவி மாவட்டச் செயலாளர் எஸ்.வசந்தகுமார் கருத்துரை வழங்கினார்.

அவர், "இளைஞர் யுவதிகளுக்கு சுயதொழில் வாய்ப்பினை ஏற்படுத்தித் தருவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள இந்தப் பயிற்சி நெறியின் மூலம் மாணவர்கள் சிறந்த பலன்களைப் பெற்று வாழ்க்கையில் முன்னெற முடியும் என்பதில் சந்தேகமில்லை" எனத் தெரிவித்தார்.

இந்த வைபவத்தில் கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் வீ.குமாரசிங்கமும் கலந்து கொண்டு உரையாற்றினார்.
மேலும் இங்கே தொடர்க...
தம்பிலுவிலில் நேற்றிரவு இளம் குடும்பஸ்தர் மீது துப்பாக்கிச் சூடு


அம்பாறை மாவட்டம் தம்பிலுவிலில் நேற்றிரவு இளம் குடும்பஸ்தர் ஒருவர் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

யோகநாதன் சுரேஸ்குமார்(31வயது) என்ற இந்நபர் தனது வீட்டிலிருந்த வேளை இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.

இது தொடர்பாக அக்கரைப்பற்று பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற போதிலும், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களோ, இதற்கானபின்னணியோ இதுவரை கண்டறியப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது
மேலும் இங்கே தொடர்க...
வடக்கு முகாம்களிலிருந்து இதுவரை 10 ஆயிரம் பேர் தப்பிச் சென்றுள்ளனர் :

ஆய்வில் மதிப்பீடு
வட பகுதி அகதி முகாம்களிலிருந்து சுமார் 10,000 பேர் தப்பிச் சென்றுள்ளதாக அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வு மதிப்பீடுகள் சுட்டிக்காட்டுகின்றன.

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திணைக்களம் நடத்திய ஆய்வின் மூலம் இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

குறிப்பிடக் கூடிய தொகையில் அகதிகள் முகாம்களிலிருந்து சட்டவிரோதமான முறையில் வெளியேறியுள்ளனர் என வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பீ.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்த ஆய்வு மதிப்பீட்டின் புள்ளி விபரத் தகவல்கள் பாதுகாப்புத் தரப்பினருக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஆய்வில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"வட பகுதி அகதி முகாம்களிலிருந்து பத்தாயிரம் பேர் வரையில் தப்பிச் சென்றிருக்கலாம். இந்த எண்ணிக்கை மேலும் உயர்வடையக் கூடும்.

மருத்துவ சிகிச்சைகளுக்காக வெளியேறிச் சென்றவர்கள் பலர் மீண்டும் அகதி முகாம்களுக்குத் திரும்பவில்லை. அகதி முகாம்களில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ள உத்தியோகத்தர்களுக்கு லஞ்சம் வழங்கிப் பலர் தப்பிச் சென்றுள்ளனர்.

அகதி முகாம்களுக்கு நிவாரணப் பொருட்களை விநியோகம் செய்ய வரும் வாகனங்களின் மூலமாகவும் சிலர் தப்பிச் சென்றுள்ளனர். அகதி முகாமிலிருந்து தப்பிச் செல்வதற்காக சிலர் லட்சக் கணக்கான ரூபா பணத்தை வழங்கியுள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன." இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா அரசாங்க அதிபர் திணைக்களம் மேற்கொண்ட மேற்படி ஆய்வுகளின் இறுதி அறிக்கை பாதுகாப்பு தரப்பினரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...
தமிழர்களின் பிரச்சினையை தீர்ப்பதில் பிரித்தானியா அக்கறை கொண்டுள்ளது-

ஜனாதிபதியிடம் லியம்
பொக்ஸ் தெரிவிப்பு
-

தமிழ் மக்களின் அபிலாஷைகள்நிறைவேற்றப்பட்டு அவர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டுமென்பதில் பிரித்தானிய அரசு மிகுந்த அக்கறையுடன் செயற்படுவதாகவும் இது தொடர்பில் தான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வுடன் நேற்று முன்தினம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் இலங்கை வந்துள்ள பிரிட்டிஷ் கன்ஸர்வேட்டிவ் கட்சி பாராளுமன்ற உறுப்பினரும் நிழல் வெளிவிவகார அமைச்சருமான லியம் பொக்ஸ் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா சம்பந்தனை நேற்றுக் கொழும்பில் சந்தித்து பேசிய போதே லியம் பொக்ஸ் இதனைத் தெரிவித்தார்.

தமிழ் மக்களின் தனித்துவம் பேணப்பட்டு அவர்களது உரிமைகள் அனைத்தும் வழங்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். வவுனியா முகாம்களிலுள்ள மக்கள் தமது சொந்த இடங்களில் துரிதமாக மீள் குடியேற்றப்படுவதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் செய்ய வேண்டும். இதற்குத் தேவையான முழு ஒத்துழைப்பையும் பிரிட்டிஷ் அரசின் மூலம் செய்து தர தாம் தயாராக இருப்பதாக ஜனாதிபதியிடம் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கைத் தமிழ் மக்கள் தொடர்பில் அவர்களது அபிலாஷைகள் நிறைவேற்றப்படுவது குறித்தும் தமது கன்சவேட்டி கட்சி எப்போதும் அக்கறையுடன் செயற்படுவதாகத் தெரிவித்த லியம் பொக்ஸ், தமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் இந்தப் பணிகளை சிறப்பாகச் செய்து முடிக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருமென கூறினார். தமிழ் மக்களின் இன்றைய அச்சம் தொடர்பாகவும் வவுனியா அகதி முகாம்களிலுள்ள தமிழ் மக்களை விடுவித்து அவர்களை சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தி கௌரவமாக வாழக் கூடிய ஒரு சூழ்நிலை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை இரா. சம்பந்தன் இந்தச் சந்திப்பின் போது வலியுறுத்தியிருந்தார்
மேலும் இங்கே தொடர்க...

வவுனியா அரச அதிபர் இந்தியா, சீனா பயணம்
வவுனியா அரசாங்கஅதிபர்பீ.எம்.எஸ்.சார்ள்ஸ் இந் தியா, சீனா ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்கிறார்.

புதுடில்லியில் நடைபெ றவுள்ள பயிற்சிப் பட்ட றையில்கலந்துகொள்வத ற்காக வவுனியா அரச அதிபர் திருமதிபீ. எம்.எஸ். சார்ள்ஸ்இன்று புதுடில்லி செல்கிறார்.

தெற்காசிய பிராந்திய தரத்திலான அனர்த்த நிவாரண முகாமைத்துவம் பற்றியபயிற்சிப் பட்டறையில் கலந்து கொள்வதற்காகவே அவர் புதுடில்லி செல்கிறார்.

புதுடில்லி சென்று திரும்பும் அவர், 6ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரைசீனாவில் நடைபெறவுள்ள மாநா டொன்றிலும் கலந்துகொள்ளவுள்ளார். சீனமகளிர் அமை ப்பு ஏற்பாடு செய்துள்ள இம் மாநாட்டிற்காகவே அவர் சீனாசெல்லவுள்ளார்

மேலும் இங்கே தொடர்க...
தென் மாகாணசபைத் தேர்தலுடன் தொடர்புடைய முதலாவது வன்முறைச்சம்பவம்-

தென் மாகாணசபைத் தேர்தலுடன் தொடர்புடைய முதலாவது வன்முறைச் சம்பவம் நேற்றுமாலையில் அம்பாந்தோட்டையின் திஸ்ஸமகாறாமைப் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இந்தவகையில் நேற்றுமாலை 6.45மணியளவில் ஐ.தே.கட்சி ஆதரவாளர்களுக்கும், ஜே.வி.பியின் ஆதரவாளர்களுக்குமிடையில் மோதல் இடம்பெற்றுள்ளது. தென் மாகாணசபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்த நிலையிலேயே மேற்படி மோதல் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பிலான விசாரணைகளை திஸ்ஸமகாறாமைப் பொலீசார் மேற்கொண்டுள்ளனர். இதேவேளை தென் மாகாணசபைத் தேர்தலுக்காக கடந்த 21ம் ஆரம்பிக்கப்பட்ட வேட்புமனுத் தாக்கல் நடவடிக்கைகள் இன்றுநண்பகல் 12மணியுடன் நிறைவடைந்துள்ளன. இத்தேர்தலுக்காக 18அரசியல் கட்சிகள் மற்றும் 13சுயேட்சைக்குழுக்கள் தமது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளன.

மேலும் இங்கே தொடர்க...
இந்தியாவுடன் இணைந்து இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றப் பணிகளை இலங்கை மேற்கொள்ளுமென புதிய உயர்ஸ்தானிகர்
தெரிவித்துள்ளார்இந்திய அரசுடன் இணைந்து இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றப்பணிகளை அரசாங்கம் மேற்கொள்ளுமென புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கையின் இந்திய உயர்ஸ்தானிகர் ரொமேஸ் ஜயசிங்க தெரிவித்துள்ளார். மக்களை மீளக்குடியமர்த்துவதற்காக அரசாங்கம் தற்போது துரிதகதியில் நிலக்கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளை மேற்கொண்டு வருகின்றது. இரு நாடுகளுக்குமிடையில் முன்பு இருந்த சிறந்த உறவுகள் பேணப்பட்டுள்ள நிலையில் இந்தியாவின் ஒத்துழைப்புடன் இலங்கை அரசாங்கத்தின் இலக்குகளை அடையக் கூடியதாகவிருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இங்கே தொடர்க...
அங்குலானைப் பகுதியிலிருந்து அதிசக்தி வாய்ந்த கிளைமோர்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது


கொழும்பு புறநகரான இரத்மலானையின் அங்குலானைப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் அதி சக்திவாய்ந்த இரு கிளைமோர் குண்டுகள் நேற்றுமாலை மீட்கப்பட்டுள்ளன. கிளைமோர்களை விசேட புலனாய்வுப் பிரிவினரே மீட்டுள்ளதாகவும், இது தொடர்பிலான விசாரணைகளை விசேட புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருவதாகவும் பொலீஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலீஸ் மாஅதிபர் நிமால் மெதிவக்க தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள புலிச் சந்தேகநபர் ஒருவர் வழங்கிய தகவலுக்கமையவே இவை மீட்கப்பட்டதாக கூறப்படுகின்றது
மேலும் இங்கே தொடர்க...

29 ஆகஸ்ட், 2009


கருணாநிதி இலங்கை தமிழர் விடயத்தில் கவலை
கருணாநிதி கவலை , சென்னையில் சனிக்கிழமை காலை செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் கருணாநிதி, இலங்கையில் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் போதுமானதாக இல்லாத நிலையில், அந்தப் பிரச்சினையில் தீவிர கவனம் செலு்த்துமாறு பிரதமர் மற்றும் வெளியுறவு அமைச்சர் ஆகியோரிடம் மீண்டும் வலியுறுத்தப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

மேலும் இங்கே தொடர்க...
பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்க இடமளிக்கக் கூடாது : கோத்தபாய
முறியடிப்பட்ட பயங்கரவாதத்தை மீண்டும் தலைதூக்குவதற்கு இடமளிக்கக் கூடாதென பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.

'ரீ 623 சயு ரல' என பெயரிடப்பட்ட ரோந்துக் கப்பல் ஒன்றை நேற்று உத்தியோகபூர்வமாக கடற்படையினரிடம் கோத்தபாய ராஜபக்ஷ கையளித்தார்.

திருகோணமலை, கடற்படைத் தளத்தில் இடம்பெற்ற இது தொடர்பான நிகழ்வில், கடற்படை அதிகாரிகள் மத்தியில் பாதுகாப்புச் செயலாளர் உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார்.பயிற்றப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் நாட்டினுள் ஊடுருவுதல், மற்றும் ஆயுத கடத்தல் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் பணிகளைக் கடற்படையினர் முனைப்புடன் ஈடுபட வேண்டியதன் அவசியம் குறித்தும் அவர் அங்கு வலியுறுத்தினார்.
மேலும் இங்கே தொடர்க...

பள்ளிவாசல் பாங் ஒசையை தடை செய்யப்போவதில்லை - இலங்கை ஜனாதிபதி

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

இலங்கையில் தமிழர் என்றும் சிங்களவர்கள் என்றும் முஸ்லிம்கள் என்றும் இனவாத அரசியல் என்பது இனிமேல் உகந்தது அல்ல என இலங்கை ஜ்னாதிபதி மகிந்த ராஜபக்ஷ் அக்கரைப்பட்டில் முஸ்லிம்கள் மத்தியில் உரையாற்றிய போது தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டம் அக்கரைப்பட்டில் நடைபெற்ற தேசிய காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனை தெரிவித்த அவர், இந்நாட்டில் சிறுபான்மை மக்கள் என்று ஒருவரும் கிடையாது என்றும், மக்கள் அனைவரும் இந்த நாட்டை நேசிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

முப்பது வருடங்கள் நாட்டை பீடித்து இருந்த பயங்கரவாதத்திற்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். முஸ்லிம்கள் பள்ளிவாசலில் ஒலிக்கும் பாங் ஒசையை தான் தடை செய்ய போவதாக எதிரிகள் மேற்கொண்டு வரும் பிரச்சாரத்தை நம்ப வேண்டாம் என்றும் கேட்டு கொண்ட அவர், முஸ்லிம்கள் தன் மீது தொடர்ந்தும் நம்பிக்கை வைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும் இங்கே தொடர்க...
வடக்கில் முன்னர் வாழ்ந்த மக்களே குடி ஏற்ரபடுவார் ; சிங்களவர் தமிழர் என்று இல்லை : ஊடகத்துறை
அமைச்சர்
வடக்கில் மீட்கப்பட்ட பிரதேசங்களில் புதிதாக சிங்கள மக்களைக் குடியேற்றும் எந்த திட்டமும் அரசாங்கத்துக்கு இல்லை. முன்னர் அங்கு வாழ்ந்த மக்கள் சகல வசதிகளுடனும் மீள்குடியேற்றப்படுவார்கள்" என ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன வெள்ளியன்று தெரிவித்தார்.

கடந்த வியாழக்கிழமை ஸ்ரீ.ல.சு.க. மக்கள் பிரிவு தலைவர் மங்கள சமரவீர தெரிவித்திருந்த கருத்து ஒன்றுக்கு விளக்கமளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர பொறாமை மற்றும் வைராக்கியம் காரணமாகவே இவ்வாறான கூற்றுக்களை வெளியிட்டு வருகின்றார். அவர் தெரிவித்துள்ள தகவல்களை அரசாங்கம் முற்றுமுழுதாக நிராகரிக்கின்றது.

வடக்கில் மீட்கப்பட்ட பிரதேசங்களில் புதிதாக சிங்கள மக்களைக் குடியேற்றும் எந்த திட்டமும் அரசாங்கத்துக்கு இல்லை. முன்னர் அங்கு வாழ்ந்த மக்கள் சகல வசதிகளுடனும் மீள்குடியேற்றப்படுவார்கள்.

உண்மையில் அதுதானே செய்யவேண்டிய வேலை? அப்பிரதேசங்களில் புதைக்கப்பட்டுள்ள நிலக்கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் மக்கள் மீள்குடியேற்றப்படுவார்கள்.

மாறாக பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர கூறுவது போன்று புதிய குடியேற்றங்களை மேற்கொள்ளும் எந்த திட்டங்களும் எமக்கு இல்லை என்பதனை திட்டவட்டமாக கூறுகின்றேன். அதேபோன்று வன்னி மக்களுக்கு சொந்தமான நிலப்பரப்புக்களை அபகரிக்கும் எந்தவிதமான எண்ணமும் இல்லை என்பதனையும் தெரிவிக்கின்றேன்" என்றார்.

மீள் குடியேற்றம் குறித்து மங்கள சமரவீர...

வியாழனன்று நடைபெற்ற ஊடகவையலாளர் மாநாட்டில் ஸ்ரீ.ல.சு.கட்சி மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர கருத்துத் தெரிவிக்கையில்,

"மன்னார் பகுதியில் அமைந்துள்ள புதுக்குடியிருப்புப் பகுதியில் இதுவரையிலும் ஏனைய பகுதிகளில் இருந்து அழைத்து வரப்பட்ட 50 சிங்கள குடும்பங்கள் மீள் குடியேற்றப்படவுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

இது விடயம் உண்மையா எனத் தெரியவில்லை. இது தொடர்பில் நாம் அரசிடமே வினா எழுப்புகின்றோம். மேலும் இப்பகுதிக்கான மீள்குடியேற்றத்தில் 15 சிங்கள குடும்பங்கள், 15 தமிழ் குடும்பங்கள், 15 முஸ்லிம் குடும்பங்கள் மீள்குடியேற்ற உள்ளதாகவும் மேலும் அங்கு இராணுவ காவலரண்கள் அமைக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் இடம்பெற்ற சூழ்ச்சி போன்றதே" என்று குறிப்பிட்டிருந்தார்
வடக்கில் மீட்கப்பட்ட பிரதேசங்களில் புதிதாக சிங்கள மக்களைக் குடியேற்றும் எந்த திட்டமும் அரசாங்கத்துக்கு இல்லை. முன்னர் அங்கு வாழ்ந்த மக்கள் சகல வசதிகளுடனும் மீள்குடியேற்றப்படுவார்கள்" என ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன வெள்ளியன்று தெரிவித்தார்.

கடந்த வியாழக்கிழமை ஸ்ரீ.ல.சு.க. மக்கள் பிரிவு தலைவர் மங்கள சமரவீர தெரிவித்திருந்த கருத்து ஒன்றுக்கு விளக்கமளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர பொறாமை மற்றும் வைராக்கியம் காரணமாகவே இவ்வாறான கூற்றுக்களை வெளியிட்டு வருகின்றார். அவர் தெரிவித்துள்ள தகவல்களை அரசாங்கம் முற்றுமுழுதாக நிராகரிக்கின்றது.

வடக்கில் மீட்கப்பட்ட பிரதேசங்களில் புதிதாக சிங்கள மக்களைக் குடியேற்றும் எந்த திட்டமும் அரசாங்கத்துக்கு இல்லை. முன்னர் அங்கு வாழ்ந்த மக்கள் சகல வசதிகளுடனும் மீள்குடியேற்றப்படுவார்கள்.

உண்மையில் அதுதானே செய்யவேண்டிய வேலை? அப்பிரதேசங்களில் புதைக்கப்பட்டுள்ள நிலக்கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் மக்கள் மீள்குடியேற்றப்படுவார்கள்.

மாறாக பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர கூறுவது போன்று புதிய குடியேற்றங்களை மேற்கொள்ளும் எந்த திட்டங்களும் எமக்கு இல்லை என்பதனை திட்டவட்டமாக கூறுகின்றேன். அதேபோன்று வன்னி மக்களுக்கு சொந்தமான நிலப்பரப்புக்களை அபகரிக்கும் எந்தவிதமான எண்ணமும் இல்லை என்பதனையும் தெரிவிக்கின்றேன்" என்றார்.

மீள் குடியேற்றம் குறித்து மங்கள சமரவீர...

வியாழனன்று நடைபெற்ற ஊடகவையலாளர் மாநாட்டில் ஸ்ரீ.ல.சு.கட்சி மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர கருத்துத் தெரிவிக்கையில்,

"மன்னார் பகுதியில் அமைந்துள்ள புதுக்குடியிருப்புப் பகுதியில் இதுவரையிலும் ஏனைய பகுதிகளில் இருந்து அழைத்து வரப்பட்ட 50 சிங்கள குடும்பங்கள் மீள் குடியேற்றப்படவுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

இது விடயம் உண்மையா எனத் தெரியவில்லை. இது தொடர்பில் நாம் அரசிடமே வினா எழுப்புகின்றோம். மேலும் இப்பகுதிக்கான மீள்குடியேற்றத்தில் 15 சிங்கள குடும்பங்கள், 15 தமிழ் குடும்பங்கள், 15 முஸ்லிம் குடும்பங்கள் மீள்குடியேற்ற உள்ளதாகவும் மேலும் அங்கு இராணுவ காவலரண்கள் அமைக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் இடம்பெற்ற சூழ்ச்சி போன்றதே" என்று குறிப்பிட்டிருந்தார்
மேலும் இங்கே தொடர்க...
இராணுவ வெற்றியிலிருந்து சமாதானத்தை கொண்டு வருவது நாட்டு தலைவர்களின் கடமை-
இந்திய ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல்


மகத்தான இராணுவ வெற்றிகள் சமாதானத்தைக்கொண்டு வரவில்லை என்பதை வரலாறுகள் காண்பித்து நிற்கின்றன என இந்திய இராணுவத்தின் துணைத் தளபதியாக முன்னர் பதவி வகித்தவரும் தற்போது சென்னையைத் தளமாகக் கொண்ட பாதுகாப்பு ஆய்வுகளுக்கான நிலையத்தின் தலைவராக திகழ்பவருமான ஓய்வுபெற்ற இராணுவ லெப்டினன்ட் ஜெனரல் வீ.ஆர். ராகவன் தெரிவித்தார்.

இராணுவத்தினர் ஈட்டியுள்ள மகத்தான வெற்றியிலிருந்து நீண்ட காலமாக நாடி நிற்கின்ற சமாதானத்தை கொண்டு வருவது நாட்டுத் தலைவர்களதும் பிரஜைகளதும் வகிபாகமாகும் எனவும் அவர் சுட்டிக் காட்டினார். கொழும்பில் நேற்று ஆரம்பமான, "யுத்தத்தில் வெற்றியீட்டியதிலிருந்து சமாதானத்தை வெற்றி கொள்வது; இலங்கைச் சமூகத்தை யுத்தத்திற்குப் பின்னர் மீளக் கட்டியெழுப்புதல்' என்ற தொனிப் பொருளிலான இருநாள் கருத்தரங்கில் கலந்து கொண்டு ஆரம்ப உரையை ஆற்றியபோதே அவர் இந்தக் கருத்துகளை தெரிவித்தார்.

இந்தக் கருத்தரங்கினை உபாயக் கற்கைகளுக்கான பிராந்திய நிலையம் மற்றும் பாதுகாப்பு ஆய்வுகளுக்கான நிலையம் என்பன இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க பிரதம அதிதியாக இந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்டார். இலங்கை மற்றும் இந்தியாவைச் சேர்ந்த இராணுவ ஆய்வாளர்கள், கல்விமான்கள் பலரும் இதில் கலந்து கொண்டுள்ளனர். ஓய்வு பெற்ற இராணுவ லெப்டினன்ட் ஜெனரல் வீ.ஆர். ராகவன் இலங்கையின் இராணுவ வெற்றி குறித்து கருத்து வெளியிடுகையில், ஆயுத மோதல்களின் நிறைவானது மனிதப் பாதுகாப்பை உறுதி செய்யும் நீண்ட பயணத்தினை ஆரம்பித்து வைத்துள்ளது. இராணுவ வெற்றியினால் நாடு பாதுகாப்பாக இருப்பதாக உணரலாம். உங்கள் நாட்டின் எல்லைகள் பாதுகாக்கப்பட்டிருப்பதாக உணரலாம். உங்களது பிரஜைகளும் பாதுகாப்பாக இருப்பது இன்றியமையாதது. புகழ்பெற்ற இராணுவ சிந்தனையாளரான கார்ல் வொன் க்ளோஸ்விற் ""யுத்தத்தின் நோக்கம் என்னவாக இருக்க வேண்டும்'' என்பது குறித்து கருத்து வெளியிட்டிருக்கின்றார்.

மோதல்களின் நோக்கம் வெற்றி எனக் கூறுவோமானால் அது குறுகிய பார்வை கொண்ட ஒரு கூற்றாகவே அமைந்து விடும். மாறாக யுத்தங்களதும் மோதல்களதும் நோக்கமானது வெறுமனே வெற்றியை மாத்திரமின்றி சமாதானத்தைக் கொண்டு வருவதாக இருக்க வேண்டும் என்றே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு எம் மத்தியில் பல உதாரணங்கள் உள்ளன. மத்திய கிழக்கில் அரபு, இஸ்ரேல் மற்றும் பல உதாரணங்கள் உள்ளன. அங்கெல்லாம் சிறப்பான இராணுவ வெற்றிகள் ஈட்டப்பட்டன.

ஆனால், அவை சமாதானத்தைக் கொண்டு வரவில்லை. சிறப்பான இராணுவ நடவடிக்கையில் வெற்றியீட்டியதன் மூலமாக வரலாற்றில் இலங்கை நாடு வரலாற்றுமுக்கியத்துவமிக்க உச்சத் தருணத்தில் உள்ளது. இலங்கை இராணுவத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து இந்தியாவில் இருந்து நாம் மிகுந்த வியப்புணர்வுடன் அவதானித்து வந்தோம். 20 வருட காலப் பகுதியில் இராணுவத்தினர் எப்படியான நிலையில் இருந்து இன்றுள்ள நிலைக்கு வந்துள்ளனர். எப்போதுமே போராடுவதற்கு தயாரான குணாம்சம் கொண்ட இளமையான நவீனகரமான இராணுவமாக மோதலில் வெற்றி பெற வேண்டும் என்ற வேட்கை கொண்ட இராணுவமாக அவர்கள் மாற்றம் பெற்றுள்ளனர். ஆயுதப் படையினர் சிறப்பான பணியைச் செய்து முடித்துள்ளனர். அந்த வெற்றியிலிருந்து நாம் அனைவருமே நீண்ட காலமாக நாடி நிற்கின்ற சமாதானத்தை கொண்டு வருவது நாட்டுத் தலைவர்களதும் பிரஜைகளதும் தற்போதைய வகிபாகமாக இருக்க வேண்டும். அதனை எவ்வாறு நாம் சாதிக்கப் போகின்றோம் என்பது எமக்கு முன்பாகவுள்ள கேள்வியாகவுள்ளது.

உச்சக் கட்டப் பாதுகாப்பு என்பது மக்களின் பாதுகாப்பே

உச்சக் கட்டப் பாதுகாப்பு என்பது நாட்டின் பிரஜைகளது பாதுகாப்பே! தற்போது இந்தியாவிலும்கூட தேர்லலொன்றுக்கு முன்பாக பல்வேறு கருத்துக் கணிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன. அப்படியாக கருத்துக் கணிப்புகளை நடத்துபவர்களிடம் மக்களுக்கு மிகுந்த கரிசனைக்குரிய விடயங்கள் யாது? அவர்கள் உள்ளடக்கும் பத்து விடயங்களில் ஒன்றாக தேசியப் பாதுகாப்பு என்கிற விடயத்தையும் உள்ளடக்கும் படியாக நாம் கேட்டிருந்தோம். அப்படியாக கருத்துக் கணி ப்புகள் மேற்கொள்ளப்பட்ட ஒவ்வொரு தடவையிலும் இந்தியப் பிரஜைகள் தமது கரிசனைக்குரிய விடயங்களடங்கிய பட்டியலில் தேசியப் பாதுகாப்பு என்பதை மிகவும் கடைசி நிலையிலேயே குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கு அவர்கள் தேசிய பாதுகாப்பு தொடர்பாக அக்கறை கொண்டிருக்கவில் லை என்பது அர்த்தமாகாது. அவர்கள் தேசிய பாதுகாப்பு தொடர்பில் அக்கறை கொண்டிருக்கின்றனர். ஆனால், இந்தியா பலமிக்கதாகவுள்ளது. எமது நாட்டை யாரும் ஆக்கிரமிக்க முடியாது. எமது நாட்டின் பாகங்களை நாம் இழக்கப் போவதில்லை. எம்மிடம் மிகச் சிறந்த ஆயுதப் படையினர் உள்ளனர் என்பது தொடர்பில் இந்தியப் பிரஜைகள் மிகவும் நம்பிக்கை கொண்டுள்ளனர். அவர்களுக்கு பாதுகாப்பு என்பது இராணுவ பலமல்ல.

அவர்களைப் பொறுத்தவரையில் பாதுகாப்பு என்பது சட்டம், ஒழுங்கு, ஊழல், மோசடியற்ற தன்மை, கல்வி, சுகாதாரம் அவர்களது சிறார்களின் எதிர்காலம், தொழில் வாய்ப்பு என்பவையே பாதுகாப்பு. அவை இல்லையென்றால் தாம் பாதுகாப்பாக இல்லை என்பதே அவர்களது உணர்வாகவுள்ளது. அது உங்களைப் பொறுத்தவரையிலும் பொருந்தக் கூடிய உண்மையாகும். என்னைப் பொறுத்த வரையும் உண்மையாகும். அதனால் தான் சமாதானம் என்பதன் அர்த்தம் என்ன என்பதை நாம் பார்க்க வேண்டும். இலங்கையில் இந்த மகத்தான வரலாற்று முக்கியத்துவமிக்க இராணுவ வெற்றியைத் தொடர்ந்து நாங்கள் எப்படிப் பயணிக்கப் போகின்றோம் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
மேலும் இங்கே தொடர்க...
கே.பி.யை விசாரிப்பதற்கு இந்திய மத்திய புலனாய்வுக் குழு அடுத்த மாதம் கொழும்பு வரும்
இந்த மாத ஆரம்பத்தில் கைதுசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனை தங்களிடம் ஒப்படைக்குமாறு இலங்கை அரசைக் கோரும் நாடுகடத்தல் கோரிக்கை ஒன்றை விடுப்பதென இந்தியா தீர்மானித்துள்ளது.

1991ஆம் வருட ராஜீவ் காந்தி படுகொலையின் பின்னணியில் உள்ள பாரிய சதித்திட்டம் குறித்து அவரை விசாரிப்பதற்காக இந்திய மத்திய புலனாய்வுக் குழு ஒன்று அடுத்த மாதத்தில் கொழும்புக்கு விஜயம் செய்ய இருக்கிறது.

மத்திய புலன்விசாரணை பணியகத்தின் கீழ் இயங்கும் பல் ஒழுக்காற்று கண்காணிப்பு பிரிவு கே.பி.யின் விசாரணை குறித்து கவனம் செலுத்தி அவர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதை உறுதிப்படுத்துவதற்காக ராஜீவ் கொலை தொடர்பான விசாரணைகளுக்கு மேலும் ஒரு வருடகால நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.

ராஜீவ் கொலை விசாரணைக் காலம் கடந்த மே மாதம் 31ஆம் திகதியுடன் முடிவடைந்ததை அடுத்து, விசாரணை நீடிப்புக்கான கோரிக்கை இதுவரை பரிசீலனையில் இருந்துள்ளது.

எனினும் ஆகஸ்ட் மாதம் 7ஆம் திகதி கே.பி. கைது செய்யப்பட்ட பின்னர் மேற்படி விசாரணைக் காலத்திற்கு நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்தியப் புலனாய்வு அதிகாரிகள் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் கே.பி.யை இலங்கை அதிகாரிகள் விசாரணை செய்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது
மேலும் இங்கே தொடர்க...

'தமிழ் மக்கள் தேசிய நீரோட்டத்தில் இணைவதற்கான அரசியல் தீர்வு திட்டம் அவசியம்' - லியாம் பொக்ஸிடம் கோரிக்கை

லியாம் பொக்ஸ்"
லியாம் பொக்ஸ்

இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த பிரித்தானிய கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பி்னர் லியாம் பொக்ஸ் அவர்களிடம் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தமிழ் மக்கள் தேசிய நீரோட்டத்தில் கலந்து செயற்படத்தக்க வகையிலான ஓர் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

போரினால் இடம்பெயர்ந்துள்ள சுமார் 3 லட்சம் மக்களையும் உடனடியாக அவர்களுடைய சொந்த இடங்களில் மீள்குடியேற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கத்தைத் தூண்ட வேண்டும் என்றும் யாழ் மாவட்டத்தி்ன் நல்லெண்ணத்திற்கும் சமாதானத்திற்குமான மக்கள் குழுவினர் வேண்டுகோள் விடுத்திருக்கின்றார்கள்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த லியாம் பொக்ஸ், நல்லை ஆதீன முதல்வர் மற்றும் யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆகியோர் உள்ளடங்கிய நல்லெண்ணத்திற்கும் சமாதானத்திற்குமான மக்கள் குழுவினரையும், யாழ் அரசாங்க அதிபர் கே.கணேஸையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

மேலும் இங்கே தொடர்க...

"தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான விசாரணை நடவடிக்கைகளை துரிதப்படுத்துங்கள்" -இலங்கை உயர்நீதிமன்றம் உத்தரவு


பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாக விரைவாக உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு இலங்கை உயர் நீதிமன்றம் சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டிருக்கிறது.

தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிரான விசாரணைகளை துரிதமாக முடிவுக்குக் கொண்டுவந்து, அவர்களுக்கு எதிராக சாட்சிகள் இருப்பின், வழக்குத்தொடரவோ அல்லது சாட்சிகள் இல்லாதபட்சத்தில் அவர்களை விடுதலை செய்யவோ ஒரு அவசர வேலைத்திட்டத்தை நீதியமைச்சின் செயலாளருடன் சேர்ந்து தயாரிக்குமாறும் சட்டமா அதிபருக்கான உத்தரவில் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்ணாண்டோபுள்ளோவின் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டு கடந்த ஒன்றரை வருடமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரான நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த ஜே. ஏ. பிரான்ஸிஸ் என்பவரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு இன்று எடுத்துக்கொண்ட போதே நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.

பல நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்கள் பயங்கரவாத சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பல வருடங்களாக விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டிருப்பது நீதியற்ற செயல் என்று பிரதம நீதியரசர் அசோக என். டி . சில்வா தெரிவித்திருக்கிறார்.

இதன் காரணமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் அடிப்படை உரிமை மீறல்கள் குறித்த வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும் அது நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு பாதிப்பாக அமைகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் இங்கே தொடர்க...

28 ஆகஸ்ட், 2009


இலங்கை அகதி முகாம்களில் அனாதையாக சுற்றும் 1064 சிறுவர்- சிறுமிகள்: தாய்- தந்தை கதி தெரியவில்லை
Colombo வியாழக்கிழமை, ஆகஸ்ட் 27,இலங்கையில் போர் நடந்து கொண்டிருந்த போது வெளியேறிய 2 லட்சத்து 80 ஆயிரம் தமிழர்கள் வன்னி பகுதியில் பல்வேறு அகதி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர்.

போர் முடிந்து 3 மாதங்கள் ஆகிவிட்ட நிலையிலும் அவர்களை இன்னும் சொந்த ஊருக்கு அனுப்பவில்லை. எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் இந்த மக்கள் நரக வேதனையை அனுபவித்து வருகின்றனர்.

தினமும் சிங்கள ராணுவத்தினர் முகாமுக்குள் புகுந்து அங்கு இளைஞர்களையும், இளம் பெண்களையும் விடுதலைப்புலிகள் என்று கூறி அழைத்து செல்கின்றனர். அவர்கள் அதன் பிறகு திரும்பியதே இல்லை. அவர்கள் கதி என்ன ஆகிறது? என்று தெரியவில்லை. அவர்கள் சித்ரவதை செய்து கொல்லப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இந்த முகாம்களில் 1064 சிறுவர்- சிறுமிகள் அனாதையாக சுற்றித்திரிகிறார்கள். அவர்களுடைய தாய்- தந்தை உறவினர்கள் கதி என்ன ஆனது என்று தெரிய வில்லை. பெற்றோர்களை தேடி பரிதாபமாக அலைகிறார்கள்.

இவர்களுடைய பெற்றோர்கள் போரில் கொல்லப்பட்டு இருக்கலாம் அல்லது ஏதாவது முகாம்களில் இருக்கலாம் என கருதப்படுகிறது. அகதி முகாம்களுக்குள் இதுவரை சர்வதேச குழுக்கள் செல்ல அனுமதிக்கவில்லை. எனவே அங்கு நடக்கும் கொடுமைகள் வெளியே தெரியாமலேயே இருக்கிறது
மேலும் இங்கே தொடர்க...

27 ஆகஸ்ட், 2009

வடக்கில் உள்ளுராட்சி சபைகளை புனர்நிர்மாணம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம்-

வடக்கில் உள்ளுராட்சி சபைகளை புனர்நிர்மாணம் செய்வதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அநுர பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பின்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். இதற்கு மாங்குளம் தெரிவுசெய்யப்பட்டு அதற்கென 900மில்லியன் ரூபா அடுத்த வருடத்திற்கான வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கப்படவுள்ளது. வடக்கில் ஓரளவு பாதிக்கப்பட்ட மற்றும் முழுஅளவிலும் பாதிக்கப்பட்ட உள்ளுராட்சி சபைகளை புனர்நிர்மாணப் பணிகளுக்கென 625மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். வடக்கே உருவாகவுள்ள வடமாகாண சபையின் தலைமைச்செயலகம் மாங்குளத்தில் அமையவுள்ளது
மேலும் இங்கே தொடர்க...
ஐ.நா.அமைப்பினால் முன்னெடுக்கப்படும் மனிதாபிமானப் பணிகளுக்கு பிரித்தானியா உதவி வழங்கத் தீர்மானம்-

ஐக்கிய நாடுகள் அமைப்பினால் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவரும் மனிதாபிமானப் பணிகளுக்கு பிரித்தானிய அரசாங்கம் உதவிவழங்கத் தீர்மானித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகார இணைப்புச் செயலகத்திற்கு பிரித்தானியா நிதியுதவிகளை வழங்கத் திட்டமிட்டுள்ளது. இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க பிரித்தானியா 75ஆயிரம் ஸ்ரேர்லின் பவுண்களை வழங்கவுள்ளது. அத்துடன் மனிதாபிமானப் கடமைகளை மேற்கொள்வோர்க்குத் தேவையான தகவல்களை வழங்கும் பணிகளுக்கும் பிரித்தானியா ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் உதவி வழங்கும் நாடுகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்குத் தேவையான புள்ளிவிபரங்களைப் பெற்றுக்கொள்ள பிரித்தானியாவின் சர்வதேச அபிவிருத்தித் திணைக்களம் ஒத்துழைப்பு வழங்குமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இங்கே தொடர்க...

'இலங்கை போர்க் குற்றம் குறித்து ஆராய சர்வதேச விசாரணை தேவை'- ஹியூமன் ரைட்ஸ் வாட்ச்

இலங்கை இராணுவத்தினர்
இலங்கை இராணுவத்தினர்

இலங்கை படையினர் என்று கூறப்படுபவர்களால், தடுத்து வைக்கப்பட்டிருந்த சிலர் கொல்லப்படுவதாக குற்றஞ்சாட்டி அண்மையில் வெளியாகியிருக்கின்ற வீடியோ காட்சிகள், இலங்கையில் இடம்பெற்றிருக்கக் கூடிய போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச ஆணைக்குழு ஒன்றின் விசாரணை அவசியம் என்பதை கோடி காட்டுவதாக, ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு கூறியிருக்கிறது.

கடந்த பல வருடங்களாக தொடர்ந்த இரு தரப்புக்கும் இடையிலான போரின் போது இரு தரப்பினாலும், போர் சட்டங்கள் மீறப்பட்டதாக முறைப்பாடுகள் பல வந்தாலும், அங்கு சுயாதீன கண்காணிப்பாளர்கள் எவரும் செல்ல அனுமதிக்கப்படாத நிலை காரணமாக அவை குறித்த உறுதியான தகவல்களை பெறமுடியாது இருந்து வந்துள்ளது என்றும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

ஆகவே இரத்தக்களரி மிகுந்த இலங்கை போரில் இடம்பெற்ற குற்றங்கள் குறித்து ஆராய சுயாதீனமான சர்வதேச விசாரணை ஆணையம் ஒன்று தேவை என்றும் அது வலியுறுத்தியுள்ளது.

இதற்கிடையே, ஊடகங்களில் வெளியான இந்த வீடியோ ஒளிக்கீற்று போலியானது என்று மீண்டும் மறுத்திருக்கின்ற இலங்கை அரசாங்கம், இது குறித்த செய்தியை முதலில் வெளியிட்ட ''சானல் 4'' நிறுவனத்துக்கு எதிராக பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் முறைப்பாடு செய்யப்ப்போவதாக கூறியுள்ளது.

இது குறித்து இராஜதந்திர ரீதியிலான முறையான கண்டனத்தை பிரித்தானிய அரசாங்கத்திடம் தெரிவிக்கவிருப்பதாக இலங்கையின் அமைச்சரவைப் பேச்சாளரான அநுர பிரிய தர்சன யாப்பா அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

முகாம்களிலிருந்து பல மதகுருமார்கள் குடும்பத்துடன் விடுவிப்பு
இலங்கையின் வடக்கே வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் இருந்த இந்து கிறிஸ்தவ மத குருக்களும், அவர்களது குடும்பத்தினருமாக 116 குடும்பங்களைச் சேர்ந்த 428 பேர் தமது சொந்த இடங்களுக்குச் செல்வதற்காக முகாம்களில் இருந்து இன்று அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றார்கள்.

இதற்கான வைபவம் வவுனியா இராணுவ தலைமையகத்தில் ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகரும் வடக்கின் வசந்தம் திட்டத்தின் பணிப்பாளருமாகிய பசில் ராஜபக்ச அவர்களின் தலைமையில் இன்று நடைபெற்றது. விடுவிக்கப்பட்டவர்கள் வவுனியா சைவப்பிரகாச மகளிர் மகாவித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தார்கள். கத்தோலிக்க மதகுருக்கள் ஐந்து பேர் மன்னார் ஆயரிடம் கையளிக்கப்பட்ட அதேவேளை, இந்து குருமார்களும், அவர்களுடைய குடும்பத்தினரும் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்கள்.முகாம்களில் இருந்து விடுதலையாகிய பலரும் இந்த விடுதலை குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்கள். ஆயினும் இன்று விடுதலையாகாமல் பலர் திரும்பவும் முகாம்களுக்கு மீண்டும் அழைத்துச் செல்லப்பட்டார்கள். இவ்வாறு கொண்டு செல்லப்பட்டவர்கள் இன்னும் ஓரிரு வாரங்களில் சொந்த இடங்களுக்குச் செல்வதற்காக அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றார்கள்.

மேலும் இங்கே தொடர்க...

26 ஆகஸ்ட், 2009

தாயககுரல் 16

26.08.2009

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு குறித்து ஆராய நியமிக்கப்பட்ட சர்வகட்சி பிரதிநிதிகள் குழு அதில் பங்குபற்றிய 13 அரசியல் கட்சிகளின் பொது இணக்கப்பாட்டுடன் தயாரிக்கப்பட்ட தீர்வு யோசனை அறிக்கையின் சாராம்சம் ஜனாதியிடம் கையளிக்கப்பட்டதாவும் அறிக்கை தொடர்பாக ஜனாதிபதியின் நிலைப்பாட்டை குழு எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும் குழுவின் தலைவரான அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் அரசால் முன்வைக்கப்பட்ட தீர்வுத்திட்டங்களில் அரசியல் கட்சிகளின் பங்களிப்பு இல்லை என்ற குற்றச்சாட்டுகள் இருந்து வந்துள்ளன. ஆனால் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக தங்கள் கருத்துக்களை எழுத்துமூலம் தெரிவிக்க பொது அமைப்புகள், அரசியல் கட்சிகள், தனிமனிதர்களுக்கு சந்தர்ப்பம் கொடுத்திருந்தது. சர்வகட்சிக்குழுவில் அங்கம் வகித்த அரசியல் கட்சிகளினால் இவை விவாதிக்கப்பட்டு பொது இணக்கப்பாடு கண்டு தயாரிக்கப்ட்ட அறிக்கையின் சாராம்சமே ஜனாதியிடம் கையளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.


அரசாங்கம் வைக்கும் தீர்வு தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுமா இல்லையா என்பதுதான் இன்று மக்கள் மனதில் உள்ள சந்தேகம்;

சர்வட்சி பிரதிநிதிகள் குழுவில் பிரதான எதிர்கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி என்;பன பங்குபற்றவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியும், தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும்; எனக் கூறினாலும் இவர்கள் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக எந்த அறிக்கையும் சமர்ப்பிக்கவில்லை. அதேவேளை இவர்கள் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதை எதிர்க்கும் இனவாத கட்சிகளுடன் இணைந்து சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவை விமர்சிப்;பதில் ஒற்றுமையாக செயல்படுகின்றனர்.

சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு தயாரித்த தீர்வுத்;திட்டத்தில் மேல்சபை (செனற்) ஒன்று அமைப்பது தொடர்பாகவும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை மாற்றுவது தொடர்பாகவும் பரிந்துரை செய்யப்பட்டிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த தீர்வுத்திட்டம்; 13வது திருத்தத்திற்கு மேலாகவே இருக்கும் என கடந்த காலங்களில் குழுவின் தலைவர் தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடவேண்டும். 13வது திருத்தத்திற்கு அப்பால் சென்று அரசியல் தீர்வை வழங்கப்போவதாக ஜனாதிபதியின் ஆலோசகரும், பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷவும் தெரிவித்துவந்தார்.

இதே வேளையில் 13வது திருத்தம் அமுல்படுத்தப்படாது எனவும் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் மாகாணசபைக்கு பகிர்ந்தளிக்கப்படமாட்டாது எனவும் ஜனாதிபதி உறுதியளித்ததாலேயே அரசுடன் தாங்கள் இணைந்திருப்பதாகவும் அதிகாரப் பகிர்வுகுறித்து பேசுவது நேரத்தை வீணடிப்பதாகும் எனவும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சியான தேசிய சுதந்திர முன்னணியின்(ஜே.வி.பி.யில் இருந்து பிரிந்தவர்கள்) தலைவர் விமல் வீரவம்ச தெரிவிக்கிறார்.


13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது அரசாங்கத்தின் அரசியல் நிலைப்பாடாக இருந்தாலும் அதை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் தோன்றியுள்ளதாக தெரிவிக்கும் அமைச்சர் மகிந்த சமரசிங்க, இலங்கை போன்ற சிறிய நாட்டில் பொலிஸ் அதிகாரம் மத்திய அரசிடமே இருக்கவேண்டும் என்று அரசில் அங்கம் வகிக்கும் தேசிய சுதந்திர முன்னணி, ஹெலஉருமய போன்ற கட்சிகள் கூறுவதாக தெரிவித்துள்ளார்.


குழுவின் அறிக்கை தொடர்பாக ஜனாதிபதியின் நிலைப்பாட்டை இப்போதைக்கு வெளியிடுவாரா என்பது சந்தேகமே. நவம்பரில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதி தேர்தலும், அதன் பின்னர் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் பொதுத்தேர்தல் என்பன முடியும்வரை இனப்பிரச்சினைக்கான தீர்வு எதையும் அரசிடம் இருந்து எதிர்பார்க்கமுடியாது எனஅரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.


யுத்தம் முடிந்துவிட்டதால் இப்போது அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளிடையே அடுத்து என்ன என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளதாக சுதந்திரக்கட்சி மக்கள் பிரிவுத் தலைவர் மங்கள சமரவீர எம்.பி. தெரிவிக்கிறார். கடந்த 30 வருடகாலமாக இடம்பெற்ற யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தபோதிலும் சமாதானத்தை ஏற்படுத்துவதில் அரசு தோல்வியடைந்து விட்டதாக கூறும் மங்கள சமரவீர இனப்பிரச்சினைக்கு சரியான தீர்வைக் காணவில்லை என்றாhல் ஆபத்தான விளைவுகள் ஏற்படும். என அரசை எச்சரித்திருப்பதுடன் அரசியல் தீர்வு விடயத்தில் தனது நிலைப்பாட்டை ஜனாதிபதி பகிரங்கமாக அறிவிக்கவேண்டும்; எனவும் கேட்டுள்ளார்.


1983 இனக்கலவரம் நடைபெற்று 26 ஆண்டுகளின் பின்னர் இப்போதான் அந்த இனஒழிப்பு குறித்து ஐக்கிய தேசியக் கட்சிக்கு மனதை உறுத்தி பாவமன்னிப்பு கோருகிறது. தேசத்தின் பெரும்பான்மை மக்கள் என்ற வகையில் சிங்களவர்கள் சிறுபான்மை மக்களுக்கு தவறு இழைத்துள்ளனர். 1983ல் தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள மக்கள் தவறுகளை செய்தனர் என்று ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன செனவிரத்தின தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களிலும் மாறிமாறி ஆட்சிக்கு வந்த அரசுகள் தமிழ் மக்களுக்கு இழைக்கும் அநீதிகள் குறித்து அந்த அரசுகளில் அங்கம் வகித்த சிங்களத்

தலைவர்கள் பலர் விமர்சித்;திருந்த போதிலும் அந்த அநீதிகளுக்கு எதிரான தமிழ் மக்களின் போராட்டங்களுக்கு அவர்கள் ஆதரவு வழங்கவில்லை

1989 ஒக்டோபர் மாதம் ஐக்கிய தேசியக் கட்சி அனைத்துக் கட்சி மகாநாட்டுக்கென ஜனாதிபதியிடம் பிரேரணைகள் சமர்ப்பித்தபோது கருத்து தெரிவித்த காமினி திசநாயக்கா, இலங்கை சுதந்திரம் பெற்ற பின் இலங்கைக்கு அவசியமான கலாச்சார,சமூக மறுமலர்ச்சியை ஏற்படுத்த ஐக்கிய தேசியக் கட்சி அரசு தவறியதாலேயே 1956ம் ஆண்டுக்குப்பின் இனரீதியான அமைதியின்மை தோன்றியது எனத் தெரிவித்திருந்தார்.

கடந்த கால அரசியல்வாதிகள் நாட்டு மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்தாது மக்களை தவறான பாதையில் வழி நடத்தியதன் காரணமாகவே நாம் இன்று பெரும் சிக்கலில் அகப்பட்டுள்ளோம் என 1989 ஒக்டோபரில் ராஜாங்க அமைச்சராக இருந்த ரணசிங்கா தெரிவித்திருந்தார்.

இவருடைய கருத்து சிங்கள தலைவர்களுக்கு மாத்திரமல்ல தமிழ் தலைவர்களுக்கும் பொருந்தும்..
மேலும் இங்கே தொடர்க...
ரஸ்யாவிடமிருந்து இறக்குமதிகளை அதிகரிப்பது தொடர்பில் ஆராயுமாறு கோரிக்கை-

ரஸ்யாவிடமிருந்து இறக்குமதிகளை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் ஆராயுமாறு இலங்கைக்கான ரஸ்யத் தூதுவர் கிலாடிமெல் ஈ பிகாலோ கோரியுள்ளார். இலங்கை மற்றும் ரஸ்யா ஆகிய நாடுகளுக்கிடையிலான வர்த்தக நடவடிக்கைகளில் ரஸ்யா பாதகத் தன்மையை எட்டியுள்ளது. இலங்கைக்கான ஏற்றுமதி நடவடிக்கைகள் ரஸ்யாவில் மிகக் குறைவாகக் காணப்படுகின்றமையே இதற்குக் காரணமாகும். யுத்தம் நிறைவடைந்துள்ள காலப்பகுதியில் ரஸ்யாவின் முதலீட்டாளர்கள் மற்றும் இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். இலங்கைக்கும் ரஸ்யாவுக்குமிடையிலான வர்த்தக நடவடிக்கைகளில் சமநிலைமையைப் பேணுமாறும் ரஸ்யத் தூதுவர் கிலாடிமெல் ஈ பிகாலோ கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் இங்கே தொடர்க...
மாத்தறையில் இருந்து பருத்தித்துறைக்கு சமாதான பாதயாத்திரை-

மாத்தறையில் இருந்து பருத்தித்துறைக்கு சமாதான பாத யாத்திரையை மூன்று சாரணர்கள் நேற்றுக்காலை ஆரம்பித்துள்ளனர். மாத்தறை தெவேந்திரமுனையில் இருந்து இந்த யாத்திரை ஆரம்பமாகியுள்ளது. பி.எல்.ஹசன் சணங்க, காந்த குணவர்த்தனா, பிரசாத் மஞ்சுல ஆகிய மூன்று சாரணர்களே இந்தப் பாதயாத்திரையை நடத்துகின்றனர். வவுனியாவை வந்தடைந்து அங்கிருந்து ஏ9 ஊடாக பாதயாத்திரையாக யாழ்ப்பாணம் சென்று பருத்தித்துறை முனையில் யாத்திரையை அவர்கள் பூர்த்தி செய்யவுள்ளனர். இவர்கள் தமது பாத யாத்திரையின்போது இரவு நேரங்களில் வழிபாட்டுத் தலங்கள், மத நிலையங்கள் மற்றும் பொலிஸ், இராணுவ முகாம்களிலும் தங்கவுள்ளனர்.

மேலும் இங்கே தொடர்க...
இடம்பெயர்ந்து அம்பாறை, ஆலையடிவேம்பு பிரதேசங்களில் உள்ள மக்களின் வாழ்வதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை-

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட திருமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலிருந்து இடம்பெயர்ந்து அம்பாறை, ஆலையடிவேம்பு பிரதேசங்களில் தங்கியிருக்கும் மக்களின் வாழ்வதாரத்தை மேம்படுத்த அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி 20யுவதிகளுக்கு ஆறு மாதகால தையல் பயிற்சியும், 20ஆயிரம் ரூபாய் பெறுமதியான தையல் உபகரணங்களும் பகிர்ந்தளிக்கப்பட்டதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அத்துடன் ஆறுமாத தையல் பயிற்சி நெறியை நிறைவுசெய்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படுவதுடன், இது தொடர்பிலான கண்காட்சிகள் நடத்தப்படவுள்ளதாகவும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.


மேலும் இங்கே தொடர்க...
புலிகளுக்கு உதவிய சந்தேகநபர் சென்னையில் கைது-

இந்திய விசேட காவல்துறையினரால் நேற்று சென்னையில் வைத்து புலிகளுக்கு உதவியவர் என்ற சந்தேகத்தின்பேரில் இலங்கையர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் தமிழகத்தில் கடந்த 1999ம் ஆண்டுமுதல் 18வருடங்களாக சந்தேகத்தின்பேரில் தேடப்பட்டு வந்த ஒருவரென்று தமிழக பொலீசார் கூறியுள்ளனர். ஜோன் பிரபாகரன் என்ற பெயரையுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவர் போலியான கடவுச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் தமிழகத்தில் வசித்து வந்ததாகவும், புலிகளுக்கும், சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு தப்பிச்செல்ல முற்படுபவர்களுக்கும் போலியான ஆவணங்களை பெற்றுக் கொடுத்திருப்பதாகவும் இவர்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மேலும் இங்கே தொடர்க...
மதகுருமார் மீள் குடிஎற்ரம்வுனியா முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள மதகுமார்களையும் அவர்களின் குடும்பத்தினரையும் சொந்த இடங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்து மதகுருமார் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் 400 பேரும் கத்தோலிக்க மதகுருமார் ஆறு பேரும் கன்னியாஸ்திரிமார் இருவரும் அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக வவுனியா அரசாங்க அதிபர் திருமதி பீ.எஸ்.எம் சார்ல்ஸ் தெரிவித்தார்.

மன்னார்,யாழ்ப்பாணம்,வவுனியா மற்றும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இந்த மதகுருமாரை அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்பிவைக்க இந்து கலாசார திணைக்கள அதிகாரிகளுடன் இணைந்து ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.


மேலும் இங்கே தொடர்க...

25 ஆகஸ்ட், 2009

கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் குற்றவியல் நீதிமன்றங்கள் நிறுவ நடவடிக்கை-
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் குற்றவியல் நீதிமன்றங்கள் நிறுவப்படவிருப்பதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த மாவட்டங்களில் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கு முன்னதாக இந்த குற்றவியல் நீதிமன்றங்களை நிறுவுவதற்கு நீதியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் மேல்நீதிமன்றம் ஒன்றும், நீதவான் நீதிமன்றம் ஒன்றும் நிறுவப்படவுள்ளதுடன், முல்லைத்தீவில் நீதவான் நீதிமன்றமொன்றும் நிறுவப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் வழக்கு விசாரணைகள் வவுனியா மாவட்ட நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.


மேலும் இங்கே தொடர்க...

யுத்தத்திலிருந்து தப்பிப்பிழைத்தோர் மழையிலிருந்து தப்புவதற்கு போராட்டம் நடத்த வேண்டிய நிலைமை-புளொட் சித்தார்த்தன்!


யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் தப்பிப்பிழைத்த தமிழ்ப் பொதுமக்கள் இப்போது கடும் மழையால் உயிர்வாழ்வதற்கு மற்றொரு போராட்டத்தை நடத்தவேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். சுமார் 3 இலட்சம் இடம்பெயர்ந்த மக்கள் அரசாங்கத்தினால் நலன்புரி கிராமங்கள் என்று அழைக்கப்படும் இடங்களில் தங்கியுள்ளனர். இவர்களை சுயாதீன பத்திரிகையாளர்கள் சந்திப்பதற்கு இன்னமும் அனுமதி வழங்கப்படவில்லை.

“இதுவொரு மனிதாபிமானமற்ற விடயம் நரகத்தில் வாழ்வது போன்றது’ என்று தமிழ் அரசியல்வாதியான தர்மலிங்கம் சித்தார்த்தன் கூறியுள்ளார். முகாம்களில் அண்மையில் ஏற்பட்ட பெரும் மழையால் கூடாரங்களில் வெள்ளம் ஏற்பட்டது குறித்தே சித்தார்த்தன் இந்தக் கருத்தைத் தெரிவித்திருக்கிறார். கடும் மழை பெய்யும் பருவ காலம் அக்டோபரில் ஆரம்பமாகும். இதனால் நிலைமைகள் மேலும் மோசமடையும் நிலைமை காணப்படுகிறது. முகாம்களைவிட்டு மக்கள் வெளியேறுவதற்கான சந்தர்ப்பத்தை அரசாங்கம் வழங்குவது அவசியமென்று சித்தார்த்தன் கூறியுள்ளார்.

இடம்பெயர்ந்த மக்களின் நிலைமை தொடர்பாக அமெரிக்கா கவலை தெரிவித்திருக்கிறது. கடந்த மேயில் முடிவடைந்த யுத்தத்தில் 7 ஆயிரம் பொதுமக்கள் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என்று ஐ.நா. கூறியுள்ளது. பருவ கால மழை ஆரம்பிக்கப்படவுள்ளதால் முகாம்களில் மோசமான நிலை ஏற்படுமென்றும் மனித உரிமைகள் அமைப்புகள் பல கவலை தெரிவித்துள்ளன. புதிய நோய்கள் பரவும் அறிகுறிகள் முகாம்களில் காணப்படுவதாக நியூயோர்க்கைத் தளமாகக் கொண்டியங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் உட்பட பல்வேறு அமைப்புகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

இதேவேளைஇ பாரிய சுகாதாரம் சம்பந்தமான பிரச்சினைகள் முகாம்களில் இல்லையென்றும் முகாம்களில் இயங்கும் சகல சுகாதார நிறுவனங்களும் வழமையான பணியை மேற்கொண்டிருப்பதாகவும் மனித உரிமைகள் விவகாரம் தொடர்பான அமைச்சர் மகிந்த சமர சிங்க தெரிவித்திருந்தார்.

மேலும் இங்கே தொடர்க...
வந்தாறுமூலை பல்கலைக்கழக பகுதியிலிருந்து குண்டுகள் மீட்பு-

மட்டக்களப்பு, வந்தாறுமூலையிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பின் புறத்திலிருந்து கண்டெடுக்கப்பட்ட மூன்று கைக்குண்டுகள் நேற்று படையினரால் வெடிக்கவைத்து செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளன. இக்குண்டுகள் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டிருக்கலாமென படையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இக்குண்டுகள் பொலித்தீன் பையொன்றினுள் போடப்பட்டு புதைக்கப்பட்டிருந்தன. சுற்றாடல் துப்புரவு செய்வதில் ஈடுபட்டிருந்த பல்கலைக்கழக ஊழியர்கள் இதுகுறித்து அறிவித்ததைத் தொடர்ந்தே குண்டுகள் மீட்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளன.

மேலும் இங்கே தொடர்க...
இந்திய, பிரித்தானிய கடற்படையினர் சிறிய போர்ப்படகுகளை இயக்குவதற்கான பயிற்சிகளை வழங்குமாறு இலங்கையிடம் கோரிக்கை-இந்தியா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளின் கடற்படையினர் சிறிய போர்ப் படகுகளை இயக்குவதற்கான பயிற்சிகளை வழங்குமாறு இலங்கையிடம் கோரியுள்ளதாக த எக்ஸ்பிரஸ் பஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. புலிகளுக்கு எதிரான நான்காம் கட்ட போரின்போது இலங்கைக் கடற்படையினர் வெற்றிகரமாக போர்ப் படகுகளைப் பயன்படுத்தியமையை அடுத்தே இந்தக் கோரிக்கைகள் எழுத்திருப்பதாக இலங்கை கடற்படை அதிகாரியைச் சுட்டிக்காட்டி அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது. இலங்கையில் அமெரிக்காவின் கடற்படைக் குழுவொன்று சிறிய போர்ப் படகுகளை பயன்படுத்தும் பயிற்சியினை கிழக்குப்புறப் பகுதியில் மேற்கொண்டு வருவதாக அவ்ஊடகம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை இதற்கு முன்னர் பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகளுக்கு ஆறு வாரகால குறுங்கால இராணுவப் பயிற்சிகளை வழங்குவதற்கு இலங்கை இணக்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
மேலும் இங்கே தொடர்க...