19 நவம்பர், 2009

சுவிற்சர்லாந்தில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் ஆதரவாளர்கள், பொதுமக்களுடனான கலந்துரையாடல்!


சுவிற்சர்லாந்திற்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின்(PLOTE) தலைவர் திரு. த.சித்தார்த்தன் அவர்கள். எதிர்வரும் 22.11.2009 ஞாயிற்றுக்கிழமை பி.ப 15.30 மணிக்கு.Schweighofstrasse 296, 8055 Zürich , Switzerland எனும் முகவரியில் உள்ள மண்டபத்தில் ஆதரவாளர்கள், பொது மக்களை சந்தித்து கலந்துரையாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எமது மக்களின் நிகழ்கால, எதிர்கால நிலமைகள் மற்றும் எதிர்கால அரசியல் நிலைப்பாடு தொடர்பாகவும் மேற்கொள்ளப்படவிருக்கும் கருத்துப்பரிமாறலில் ஆர்வமுள்ள அனைவரையும் கலந்து கொள்ளுமாறு தமிழீழ மக்கள் விடுதலைக் கழக சுவிஸ் கிளையினராகிய நாம் தோழமையுடன் அழைப்பு விடுக்கின்றோம்.

மேலதிக தொடர்புகட்கு:- 076 368 15 46 , 076 295 20 43 , 078 949 92 90

தகவல்: தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்(PLOTE)
சுவிஸ்கிளை

மேலும் இங்கே தொடர்க...
18 குடும்பங்கள் மீள்குடியேற்றத்திற்காக மட்டக்களப்பு அனுப்பி வைப்பு



யுத்த காலத்தில் இடம்பெயர்ந்து யாழ் மாவட்டத்திலுள்ள இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருந்த மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 18 குடும்ப உறுப்பினர்கள் 51 பேர் இன்று கிளிநொச்சி ஊடாக மீள் குடியேற்றத்தின் நிமித்தம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு சிவில் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளினால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இன்று காலை 3 பஸ் வண்டிகளில் மட்டக்களப்பை வந்தடைந்த இக்குடும்பங்கள் சிங்கள மகா வித்தியாலயத்தில் சிவில் மற்றும் பாதுகாப்பு தரப்பினரால் விபரங்கள் பதிவு செய்யப்பட்டு சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உறவினர்களிடம் கையளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதனைத் தவிர வவுனியா மெனிக் பாம் இடைத்தங்கல் முகாமிலிருந்தும் 16 குடும்பங்களைச் சேர்ந்த 46 பேர் இன்று மாலை மட்டக்களப்பிற்கு அழைத்து வரப்பட்டு மீள குடியேற்றத்தின் நிமித்தம் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்ட செயலக அதிகாரிகளின் தகவல்களின் படி வவுனியா நிவாரணக் கிரமங்களிலிருந்து இதுவரை கடந்த ஆகஸ்ட் 10 முதல் இன்று வரை 5 தொகுதிகளில் 863 குடும்பங்களைச் சேர்ந்த 2398 பேர் மீள் குடியேற்றத்திற்காக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அதே வேளை யாழ் மாவட்ட நிவாரணக் கிராமங்களிலிருந்து முதல் தடவையாக இன்று 18 குடும்பங்களைச் சேர்ந்த 51 பேர் அனுப்பி வைக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது
மேலும் இங்கே தொடர்க...
சிவநாதன் கிஷோர் எம்.பி ஜனதிபதிக்கு பிறந்த தின வாழ்த்து









தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் நேற்றைய தினம் அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேரில் சந்தித்து பிறந்த தின வாழ்த்துக்களை தெரிவித்தார்.

அதேவேளை சுகாதார சேவைகள் பிரதி அமைச்சர் வடிவேல் சுரேஷும் நேற்றைய தினம் ஜனாதிபதியை நேரில் சந்தித்து தெரிவித்ததுடன் மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி பிறந்ததின வாழ்த்துக்களை தெரிவித்தார்
மேலும் இங்கே தொடர்க...
பொது வேட்பாளர் தொடர்பில் ஜே.வி.பி.யுடன் இணக்கப்பாட்டினை ஏற்படுத்தி கொள்ளலாம்-ஐ.தே.க செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க




ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரை ஆதரிப்பது தொடர்பில் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் பல கட்சிகள் இணக்கம் தெரிவித்துள்ளன. பொது வேட்பாளரை ஆதரிப்பது தொடர்பில் ஜே.வி.பி.யின் நிபந்தனைகளை ஐக்கிய தேசியக் கட்சி ஏற்றுக் கொண்டுள்ளது. இதில் சில திருத்தங்களை மேற்கொண்டு, பொது வேட்பாளர் தொடர்பில் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள முடியும். இது தொடர்பில் கட்சிக் கொள்கைகளை ஒதுக்கிவிட்டு பொது இலக்கை அடைவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தயாராக உள்ளது என்று அக்கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து எதிர்க்கட்சிகளுடனும் அரசாங்கத்தை சார்ந்தவர்களுடனும் நாம் உத்தியோகபூர்வமான பேச்சுக்களை நடத்தி வருகின்றோம். எதிர்காலத்தில் ஐக்கிய தேசிய முன்னணியில் இணைவதற்கும் பொது வேட்பாளரை அறிவிப்பதற்குமான நிலைப்பாடுகள் இந்த பேச்சுவார்த்தையின் மூலம் எட்டப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

ஐக்கிய தேசிய முன்னணியில் மத்திய மாகாண சபை உறுப்பினர் எஸ். சதாசிவம் தலைமையிலான இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி இணைந்து கொண்டுள்ளது. இந்த நிகழ்வு நேற்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்த வைபவத்தின் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு திஸ்ஸ அத்தநாயக்க மேலும் தெரிவித்ததாவது:

நாட்டில் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு கட்சிக் கொள்கைகளை ஒதுக்கி வைத்துவிட்டு பொது இலக்கான ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த அனைவரும் தயாராகவுள்ளனர். எதிர்வரும் வாரங்கள் எமது நாட்டு அரசியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாட்களாகும். பொது வேட்பாளாராக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுபவர் நிறைவேற்று அதிகாரத்தை ஒழித்து 17 ஆவது திருத்தத்தை முன்னெடுத்து சுயாதீன ஆனைக்குழுக்களை நிறுவுவதோடு இடம் பெயர்ந்துள்ள மக்களை சொந்த இடங்களில் குடியேற்றுவது தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை துரிதப் படுத்துவது போன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று ஜே.வி.பி. நிபந்தனை விதித்துள்ளது.

இந்த நிபந்தனைகளை ஐக்கியதேசியக்கட்சி கற்றுக் கொள்வதுடன் இதில் சில திருத்தங்களை மேற்கொண்டு பொது வேட்பாளர் தொடர்பில் இணக்கப்பாட்டை எமக்குள் ஏற்படுத்திக் கொள்ள முடியும்.

பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் எதிர்க்கட்சிகள் பல எம்மோடு இணைய விருப்பம் தெரிவித்துள்ளதோடு, அரச தரப்பில் சிலரும் எம்மோடிருந்து வெளியேறிய பலரும் இணையவுள்ளனர். அதேவேளை, சில பிரதான எதிர்க்கட்சிகள் கொள்கைகளை ஒதுக்கி வைத்து விட்டு ஜனநாயகத்தை பாதுகாக்கும் பொது இலக்குக்காக பொது வேட்பாளரை ஆதரிக்கவும் இணக்கம் தெரிவித்துள்ளன.ஜனாதிபதித் தேர்தலை நடத்துவோமென்று சவால் விட்ட அரசாங்கத்திற்கு இன்று அதிலிருந்து மீள முடியாத நிலைமை உருவாகியுள்ளது.

தேர்தல்கள் ஆணையாளர் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதித் தேர்தலை அறிவித்த அடுத்த வினாடியே பொது வேட்பாளர் யாரென்பதை நாம் பகிரங்கப்படுத்துவோம். அதேவேளை, நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை அரசாங்கம் நடத்த வேண்டும். இதற்காக வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை பணியில் ஈடுபத்துமாறு தேர்தல்கள் ஆணையாளரிடம் கோரியுள்ளோம். அத்தோடு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அடுத்த தேர்தலில் வேட்பாளர் என்பதால் அரச வளங்களை மற்றும் பிரசாரங்களுக்காக ஹெலிகொப்டர்களை பயன்படுத்த முடியாது. இன்று எம்மோடு இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி இணைந்துள்ளமை மேலும் முன்னணிக்கு பலம் சேர்த்துள்ளது.

எஸ். சதாசிவம்

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு இந்த அரசாங்கத்தால் அரசியல் தீர்வு கிடைக்கவில்லை. மலையக தோட்டத் தொழிலாளர்களின் வாழ்விலும் விடுதலை கிடைக்கவில்லை. எதிர்பார்த்த சம்பள உயர்வு வழங்கப்படவில்லை. எனவே, அனைத்து தொழிலாளர்களையும் பொது வேலைநிறுத்தத்திற்கு தயாராகுமாறு அழைப்பு விடுக்கின்றோம் என்று இங்கு கருத்து தெரிவித்த இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் தலைவர் எஸ். சதாசிவம் கூறினார். சிறுபான்மையின மக்களின் பிரச்சினைகளுக்கு ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சியில் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இணைந்துள்ளோம். எமது முன்னணியின் பேராளர் மாநாடு எதிர்வரும் 29ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதன்போது பல்வேறு தீர்மானங்களை எடுக்கவுள்ளோம்.

இதுவரையில் ஜனாதிபதித் தேர்தலா? பொதுத் தேர்தலா? என அரசாங்கம் உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. அதன் பின்னர் எமது தீர்மானத்தை அறிவிப்போம்.

எமது முன்னணியில் 28000 அங்கத்தினர்கள் உள்ளனர். இவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பது மட்டுமல்ல சிறுபான்மை மக்களுக்கு அரசியல் தீர்வை பெற்றுக் கொடுப்பதே எமது அபிலாஷையாகும் என்றும் அவர் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...
அகதிகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டோருக்கு அடைக்கலம் வழங்க ஆஸி. இணக்கம்

இந்தோனேஷியாவில் கடலில் தரித்து நிற்கும் 'ஓசியானிக் வைகிங்' கப்பலில் உள்ளவர்களில் அகதிகள் என ஏற்றுக் கொள்ளப்பட்டவர்களுக்கு முதலில் ஆஸ்திரேலியா அடைக்கலம் அளிக்கவுள்ளது.

ஏனையோர் குறித்து விரைவாக ஆராய்ந்து அவர்கள் அகதிகள் என உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் உடனடியாக அடைக்கலம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'ஓசியானிக் வைகிங்' கப்பலிலிருந்து இலங்கையர்கள் 78 பேரும் வெளியேறி, கரையிறங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த வெள்ளிக்கிழமை 22 பேர் கப்பலைவிட்டு இறங்கி இந்தோனேஷியக் கரையை அடைந்துள்ளனர். நேற்று புதன்கிழமை எஞ்சியிருந்த ஐந்து குழந்தைகள், ஐந்து பெண்கள் உட்பட 56 பேரும் கப்பலிலிருந்து கரை இறங்கியுள்ளனர்.

இதன் பின்னர் இவர்கள் இந்தோனேஷியாவின் 'டன்யுங் பினாங்' தடுப்பு முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

'ஓசியானிக் வைகிங்' கிலிருந்து இறங்கியவர்களில் உள்ள குழந்தைகளும் பெண்களும் தனியான இடமொன்றில் தங்க வைக்கப்படுவார்கள் என ஆஸ்திரேலியப் பிரதமர் ரூட் தெரிவித்துள்ளார். எனினும், இந்தோனேஷிய அதிகாரிகள் இதனை நிராகரித்துள்ளனர்.

'ஓசியானிக் வைகிங்' கப்பலிலிருந்து இறங்கிய 78 பேரில் அகதிகள் என ஏற்றுக் கொள்ளப்பட்டவர்களுக்கு முதலில் ஆஸ்திரேலியா அடைக்கலம் அளிக்கவுள்ளது. இது அடுத்த சில வாரங்களில் இடம்பெறலாம் எனத் தெரிகிறது.

ஏனையவர்கள் குறித்து விரைவாக ஆராய்ந்து அவர்கள் அகதிகள் என உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் உடனடியாக அடைக்கலம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...
இலஞ்சம் பெற்ற நீதிமன்றத்தின் பதிவாளர் அதிகாரிகளால் கைது- அம்பாறையில் சம்பவம்


பதிவாளர் ஒருவர் மனுதாரரொருவரிடமிருந்து இலஞ்சம் பெற்ற போது, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளிடம் கையும் மெய்யுமாகப் பிடிபட்ட சம்பவமொன்று அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள பதிவாளர் அலுவலகத்துக்குள் வைத்து குறித்த மனுதாரரிடமிருந்து மூவாயிரம் ரூபா பணத்தொகையினை இலஞ்சமாகப் பெந்றுக்கொள்ளும் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பிரதிப் பணிப்பாளரும் பொலிஸ் அத்தியட்சருமான சோமவீர லொகுகே தகவல் தருகையில் கூறியதாவது :

சீட்டுப் பணத்தை வழங்கத் தவறினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபர் ஒருவருக்கு எதிராக அம்பாறை நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கொன்று தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணையை அடுத்து குறித்த சந்தேக நபர் குற்றவாளியென தீர்ப்பு வழங்கப்பட்டதுடன் அவருடைய சொத்துக்களை ஏலத்தில் விடவும் நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் குற்றவாளியின் சொத்துக்களை ஏலத்தில் விடுவதற்காக அண்மைக்காலத் திகதியொன்றைப் பெற்றுக்கொடுக்குமாறு மனுதாரரினால் குறித்த பதிவாளருக்கு மூவாயிரம் ரூபா பணம் இலஞ்சமாக வழங்கப்பட்டுள்ளது. இந்த இலஞ்சப் பணத்தை மேற்படி பதிவாளர் பெற்றுக்கொள்ளும் தருவாயில் அவ்விடத்துக்குச் சென்ற இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் அவரைக் கையும்மெய்யுமாகக் கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் தடுத்து வைக்கப்பட்டு தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார். உரிய விசாரணைகளை அடுத்து அவருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்
மேலும் இங்கே தொடர்க...
புதிய 1,000 ரூபா நாணயத்தாள் பிரசார சுவரொட்டியாகும்- ஐ.தே.க. குற்றச்சாட்டு



மஹிந்த ராஜபக்ஷவின் புகைப்படத்துடன் வெளியிடப்பட்டுள்ள ஆயிரம் ரூபா தாள், நாணயத் தாள் அல்ல. அது ஒரு பிரசார சுவரொட்டியாகும் என்று ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. கொழும்பில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கையிலேயே ஐ.தே.கட்சியின் பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான திஸ்ஸ அத்தநாயக்க இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது,நாட்டு மக்கள் இன்று புதிய நாணயத்தாளை கோரவில்லை. வாழ்க்கைச் செலவு அதிகரிப்பிற்கேற்ப சம்பள உயர்வையும் வாழ வழியையுமே கேட்கின்றனர்.

இலங்கை மத்திய வங்கியின் நாணயங்கள் தொடர்பான சட்டங்களை மதிக்காது இந்த நாணயத்தாள் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப வெளியிடப்பட்டுள்ளது. அத்தோடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடுகின்றார். எனவே கைகளை உயர்த்திக் கொண்டு தேர்தல் மேடைகளில் தோன்றுவதைப் போன்று நாணயத் தாள் வெளியிட்டுள்ளமையானது பிழையான அணுகுமுறையாகும். கித்சிறி மஞ்சநாயக்கமே.மா. சபை ஐ.தே. கட்சி உறுப்பினர்சர்வாதிகார ஆட்சியாளர்கள் ஆட்சி புரியும் நாடுகளிலேயே இவ்வாறான நாணயத்தாள்கள் வெளியிடப்படும். இன்று எமது நாட்டிலும் இந்த நாணயத் தாளானது ஆட்சியாளர்கள் சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கின்றனர் என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்று இங்கு கருத்து தெரிவித்த ஐ.தே.க.வின் மேல் மாகாண சபை உறுப்பினர் கித்சிறி மஞ்சநாயக்க தெரிவித்தார்.

நாணயத் தாள்களில் அரச தலைவரின் உத்தியோகபூர்வ புகைப்படத்தை அச்சிடலாம். ஆனால் கைகளை உயர்த்திய விதத்திலான புகைப்படம் தேர்தல் பிரசாரத்தையே காட்டி நிற்கின்றது.

அத்தோடு இத்தாளின் முன்புறம் நீலம், சிவப்பு கோடுகள் போடப்பட்டுள்ளமை ஆளும் கட்சியை குறிப்பிடுகின்றது. படையினருக்கு கௌரவம் அளிக்கின்றோம் என்ற பிரசாரத்தோடு தேர்தல் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. படையினரை கௌரவிக்கும் புகைப்படம் நாணயத் தாளின் பின்புறமே அச்சிடப்பட்டுள்ளது என்றும் கித்சிறி மஞ்சநாயக்க தெரிவித்தார்
மேலும் இங்கே தொடர்க...

சுவிற்சர்லாந்தில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் ஆதரவாளர்கள், பொதுமக்களுடனான கலந்துரையாடல்!


சுவிற்சர்லாந்திற்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின்(PLOTE) தலைவர் திரு. த.சித்தார்த்தன் அவர்கள். எதிர்வரும் 22.11.2009 ஞாயிற்றுக்கிழமை பி.ப 1.30 மணிக்கு.Schweighofstrasse 296, 8055 Zürich , Switzerland எனும் முகவரியில் உள்ள மண்டபத்தில் ஆதரவாளர்கள், பொது மக்களை சந்தித்து கலந்துரையாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எமது மக்களின் நிகழ்கால, எதிர்கால நிலமைகள் மற்றும் எதிர்கால அரசியல் நிலைப்பாடு தொடர்பாகவும் மேற்கொள்ளப்படவிருக்கும் கருத்துப்பரிமாறலில் ஆர்வமுள்ள அனைவரையும் கலந்து கொள்ளுமாறு தமிழீழ மக்கள் விடுதலைக் கழக சுவிஸ் கிளையினராகிய நாம் தோழமையுடன் அழைப்பு விடுக்கின்றோம்.

மேலதிக தொடர்புகட்கு:- 076 368 15 46 , 076 295 20 43 , 078 949 92 90

தகவல்: தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்(PLOTE)
சுவிஸ்கிளை

சுவிஸ் வாழ் புலம்பெயர் உறவுகளுடன் EPDP செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சந்திப்பு!">



ஈழ மக்கள் ஐனநாயககட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எதிர்வரும் சனி அல்லது ஞாயிறு தினத்தன்று சுவிஸ் வாழ் புலம் பெயர் உறவுகளை சந்தித்து மனம் திறந்த கருத்து பரிமாற்றங்களை நடத்துவதற்கான நிகழ்வு ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

சமகால, மற்றும் எதிர்கால அரசியல் நிகழ்வுகள் குறித்தும், தமிழ் பேசும் மக்களுக்கான சாத்தியமான எதிர்கால அரசியல் தீர்வு குறித்தும் புலம் பெயர் உறவுகளின் கருத்துக்களும், ஆரோக்கியமான விமர்சனங்களும் எதிர்பார்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்பு:

தோழர் திலக் 079. 393 29 25
தோழர் விந்தன் 076. 508 78 74
தோழர் தாஸ் 076. 461 63 30
தோழர் அன்ரன் 076. 364 60 61
தோழர் மனோ 079. 489 12 49
தோழர் சுரேஸ்கான் 078. 626 23 15
தோழர் றஞ்சன் 079. 815 09 44
\தோழர் மகேந்திரன் 079. 437 84 38
தோழர் கடாபி 078. 737 24 91
தோழர் ஈசன் 076. 227 58 42
தோழர் சாள்ஸ் 078. 876 70 83
தோழர் Nஐhசேப் 076. 291 35 32
தோழர் வெங்கடேஸ் 078. 306 15 47

சர்வதேச பிராந்தியங்களின் ஒன்றியம் - சுவிஸ்
ஈழ மக்கள் ஐனநாயக கட்சி. ஈ.பி.டி.பி
சுவிற்சர்லாந்தில் இடம்பெறவுள்ள கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொள்வதற்காக கிழக்கு மாகாண முதலமைச்சர்


author

சுவிற்சர்லாந்தில் இடம்பெறவுள்ள கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொள்வதற்காக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் உட்பட சிறுபான்மை தமிழ், முஸ்லீம் கட்சிகளின் தலைவர்கள் அடங்கிய குழுவொன்று அங்கு சென்றுள்ளது. பிரித்தானிய தமிழ் தகவல் நிலையத்தின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள மேற்படி சந்திப்பில் கலந்து கொள்வதற்காக.

முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம், தமிழ் தேசிய கூட்டமைப்பு பா.உ, தமிழர் விடுதலை கூட்டணி தலைவர் வீ.ஆனந்தசங்கரி, புளொட் தலைவர் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எவ்(நாபா) அணியின் பொது செயலர் ஸ்ரீதரன், சமூக சேவைகள் அமைச்சரும் ஈ.பி.டி.பி தலைவருமான டக்ளஸ் தேவானந்தா, இ.தொ.க, ம.ம.மு, மே.ம.மு போன்ற கட்சிகளின் தலைவர்கள் ஜரோப்பா பயணமாகியுள்ளனர்.

எதிர்கால செயற்பாடுகள் குறித்த கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொள்வதற்காகவே இவ் கட்சிகளின் தலைவர்களை அழைத்து பேசுவதற்கான ஏற்பாட்டினை பிரித்தானிய தகவல் நிலையம் ஏற்பாடு செய்துள்ளது.

மேலும் இங்கே தொடர்க...
18.11.2009 தாயகக்குரல் 28

கடந்த பதினைந்தாம் திகதி கொழும்பில் நடைபெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மகாநாடு உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்தபின்னர் நடைபெற்ற மகாநாடு என்பதால் பல எதிர்பார்ப்புகள் மக்கள் மத்தியில் இருந்ததில் ஆச்சரியம் இல்லை. இலங்கை அரசியல் உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் பல சலசலப்புக்களை ஏற்படுத்தி வரும் சூழ்நிலைக்கு மத்தியில் அடுத்த வருடம் ஜனவரி மாதத்திற்கும் ஏப்ரல் மாதத்திற்கும் இடையில் தேர்தல்கள் நடைபெறலாம் என்ற அமைச்சர்களின் பேச்சுக்களாலும் செய்தி ஊடகங்கள் வெளியிட்டிருந்த தேர்தல் பற்றிய ஊகங்களாலும் தேர்தல் குறித்த அறிவித்தல் மகாநாட்டில் வெளியிடப்படும் என்ற பரவலான எதிர்பார்ப்புக்கள் இருந்தன.ஆனால் தேர்தல் குறித்த எந்த அறிவிப்பும் மகாநாட்டில் அறிவிக்கப்படவில்லை.

எதிர்வரும் ஜனவரி மாதம் ஜனாதிபதி தேர்தலும் ஏப்பரல் மாதம் பொது தேர்தலும் நடைபெறலாம் என்றும் எதிர்கட்சிகள் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை நியமிக்கும் எனவும் அண்மைக்காலங்களில் செய்திகள் வெளி வந்துகொண்டிருந்தன. ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக முன்னாள் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா போட்டியிடலாம் என்ற கருத்துக்களும் வெளிவந்திருந்தன. இந்த நிலையில்தான் முதலில் நடைபெறுவது ஜனாதிபதி தேர்தலா அல்லது பொது தேர்தலா என்ற கேள்விக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மகாநாட்டில் விடை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பதவி ஏற்று நான்கு வருடகாலம் 19.11.2009 ல் முடிவடைகிறது. அவடைய பதவிக்காலம் முடிவடைய இன்னும் இரண்டு வருடங்கள் இருக்கும் நிலையில் ஜனாதிபதி தேர்தலை முன்கூட்டியே நடத்தலாம் என அரசாங்கத்தில் பெரும்பாலான அமைச்சர்கள் கருதுகின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மகாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி எந்த தேர்தலை முதலில் நடத்துவது என மக்கள் அபிப்பிராயத்தை கேட்டுள்ளார். மக்கள் அனைவரும் ஜனாதிபதி தேர்தலையே முதலில் நடத்தவேண்டும் என கையை உயர்த்தி தங்கள் அபிப்பிராயத்தை தெரிவித்திருந்தனர். மக்கள் விருப்பத்தை கட்சியின் செயற்குழுவில் சமர்ப்பித்து கட்சி எடுக்கும் முடிவு உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

பெரும்பாலும் எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் எந்த நேரத்திலும் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்படலாம் என ஊடகத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். எந்த நேரமும் தேர்தலுக்கு தயாராக இருக்கும்படி கட்சி உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அறிவித்துள்ளார்.ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி எதிர்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளரை நியமிப்பது குறித்தும்; பொது வேட்பாளராக சரத் பொன்சேகாவை நியமிப்பது குறித்தும் ஆராய்ந்துள்ளது.

சரத் பொன்சேகாவை வேட்பாளராக நியமிப்பது குறித்து கடந்த வாரம் கருத்து தெரிவித்திருந்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கா சரத் பொன்சேகா தேர்தலில் போட்டியிட அவர் விருப்பம் தெரிவிக்கவேண்டும் எனவும் அவர் தமது பதவியிலிருந்து விலகவேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். ; சரத் பொன்சேகா தனது பதவியில்pருந்து ஓய்வு பெற ஜனாதிபதி அனுமதியளிக்கமாட்டார் என்ற கருத்து நிலவிய நிலையில் சரத் பொன்சேகா பதவியிலிருந்து ஓய்வு பெற ஜனாதிபதி அனுமதியளித்து விடையும் கொடுத்துவிட்டார். தனது ராணுவ உடையை கழற்றி இரண்டு நாட்களில் தான் அரசியலில் ஈடுபடுவது தொடர்பான முடிவை அறிவிப்பேன் என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

சரத் பொன்சேகாவை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு ஜே.வி.பி. உத்தியோகபூர்வமாக அழைப்பு விடவுள்ளதாகவும் அதற்கு ஐக்கிய தேசிய முன்னணி ஆதரவு வழங்கும் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன. சரத் பொன்சேகாவை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட எதிர்கட்சிகள் எடுக்கும் முடிவு குறித்து இந்தியா கவலை தெரிவித்துள்ளது.கடந்தவாரம் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்ட எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கா இலங்கை அரசியல் நிலை குறித்து இந்தியத் தலைவர்களுடன் ஆராய்ந்துள்ளார். அப்போது சரத் பொன்சேகாவை பொது வேட்பாளராக நியமிப்பது குறித்து இந்தியத் தலைவர்கள் ரணிலிடம் தமது சந்தேகங்களையும் கவலையையும் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவைப் பொறுத்தவரை மகிந்த ராஜபக்ஷாவுக்கு அரசியல் ரீதியாக சவால் விடக்கூடிய ஒரு வேட்பாளர் வருவதை அவர்கள் வரவேற்பார்;கள். ஆனால் முன்னாள் இராணுவத் தளபதி ஒருவர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இலங்கையில் வருவதால் ஏற்படும் விபரீதங்கள் குறித்து இந்தியா உட்பட பிராந்திய நாடுகள் ஆராய்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சதிக்குப் பயந்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷாவின் வேண்டுகோளுக்கிணங்க இந்திய இராணுவம் உஷார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததாக சரத் பொன்சேகா தெரிவித்திருந்தார். இது தொடர்பாக இந்தியா வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் சஷி தரூர் கருத்து தெரிவிக்கையில் பொன்சேகாவின் கூற்று எவ்விதமான அடிப்படையும் அற்றது. இப்படியான வதந்தி பரப்பப்படுவது குறித்து தாங்கள்; வேதனை அடைந்துள்ளோம் என்று தெரிவித்திருக்கிறார்.கடந்த 14ம் திகதி இந்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கைக்கு திடீர் விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு திரும்பியுள்ளார். நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களின் மீள்குடியேற்றம் பற்றி ஆராய்ந்ததாக கூறப்படுகிறது.

மகிந்த ராஜபக்ஷாவுக்கு எதிராக ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை நியமித்து இருமுனைப் போட்டி ஏற்படுத்துவதன்மூலம் வெற்றியை நிச்சயிக்கமுடியாது என்றும் எதிர்கட்சி கூட்டணி சார்பில் இரு வேட்பாளர்களை அதாவது சரத் பொன்சேகா, ரணில் விக்கிரமசிங்கா ஆகியோரை நிறுத்துவதன் மூலம் மும்முனைப் போட்டியில் சிங்கள வாக்குகளை மூன்றாக பிரிப்பது எதிர்கட்சிக்கு சாதகமான நிலமையை தோற்றுவிக்கலாம் என்ற கருத்தும் எதிர்கட்சிக் கூட்டணிக்குள் நிலவுகிறது.

கடந்த ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் நடைபெற்ற வடமாகாணம் தவிர்ந்த எட்டு மாகாண சபைத் தேர்தல்களிலும் 44 இலட்சத்து 65 ஆயிரம் வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிக்கத் தகுதியிருந்தும் வாக்களிக்காமல் இருந்துள்ளனர். இந்த 44 இலட்சத்து 65ஆயிரம்; வாக்காளர்களும் ஐக்கிய தேசியக் கட்சி, மற்றும் பொதுசன ஐக்கிய முன்னணி ஆகிய இரண்டு கட்சிகளிலும்; நம்பிக்கை இழந்ததாலே இவர்கள் வாக்களிக்கவில்லை எனக் கருதலாம். இவர்களில் ஒரு பகுதியினராவது நடைபெறவிருக்கும் தேர்தலில் மூம்முனைப் போட்டி ஏற்படுமிடத்து புதிய வேட்பாளருக்கு வாக்களிக்கலாம். அப்படி வாக்களி;க்கப்பட்டால் வாக்களிக்கப்பட்ட மொத்த வாக்குவீதம் அதிகரிக்கும் இதில் 50.1 வீதம் வாக்குகளை மகிந்த ராஜபக்ஷ பெறமுடியாமல் போகலாம் என்று எதிர்கட்சிகள் கருதலாம்.

எப்படி இருந்த போதிலும் இப்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் பெரிய மாற்றம் எதுவும் ஏற்படுவதற்கான அறிகுறிகள் காணப்படவில்லை. பொதுசன ஐக்கிய முன்னணியின் வாக்கு வங்கியி;ல் இருந்து ஒரு பகுதியையாவது எதிர்க்கட்சி கூட்டணி எடுத்தாலன்றி மகிந்த ராஜபக்ஷாவின் வெற்றியை தடுக்கமுடியாது.
ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணி மகிந்தாவுக்கு பலத்த போட்டியை ஏற்படுத்தினால் தமிழ் மக்கள் வாக்குகள் ஜனாதிபதியை தீர்மானிக்கும் சக்தியாக மாறலாம். ஆனால் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் நேரம் அரசியல் சூழ்நிலை எப்படி மாறுமோ யார் கண்டார்?.
மேலும் இங்கே தொடர்க...