27 ஜூலை, 2010

விண்வெளியில் பூமியை போன்று 140 கிரகங்கள்





விண்வெளியில் உள்ள கிரகங்கள் மற்றும் நட்சத் திரங்கள் குறித்து அமெரிக் காவின் நாசா விஞ்ஞானிகள் தீவிரமாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதிநவீன கெப்லர் விண்வெளி டெலஸ்கோப் மூலம் ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளனர். இதன் மூலம் விண்வெளியில் மறைந்து கிடக்கும் 706 புதிய கிரகங்களையும், 5 புதிய சூரிய மண்டலத்தையும் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும், தொடர்ந்து ஊடுருவி ஆராய்ச்சி செய்து பார்த்தபோது பூமியை போன்று 140 புதிய கிரகங்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது. இங்கு பூமியை போன்று பாறைகள் நிலம் மற்றும் தண்ணீர் உள்ளன.

எனவே, இங்கு உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியம் இருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர். கடந்த 6 வாரத்தில் கெப்லர் விண்வெளி டெலஸ் கோப் இந்த அதிசயங்களை படம்பிடித்து அனுப்பியுள்ளது.

இதைத் தொடர்ந்து, பூமியை போன்று உள்ள கிரகங்களில் உயிர் வாழும் சாத்தியம் உள்ளதா? என கெப்லர் விண்வெளி டெலஸ் கோப் மூலம் ஆய்வு மேற் கொள்ளப்பட உள்ளது என பேராசிரியரும், விண்வெளி ஆராய்ச்சியாளருமான டிமிதர் சசெல்லோவ் தெரிவித்துள்ளார்
மேலும் இங்கே தொடர்க...

டெஸ்ட் கிரிக்கெட்: 2வது நாள் ஆட்டம் முடிந்தது- இந்தியா முதல் இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 95 ரன்; இலங்கை 642 குவித்து டிக்ளேர்


.



இந்தியா- இலங்கை மோதும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நேற்று தொடங்கியது. “டாஸ்” வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க நாளில் இலங்கை ஆதிக்கம் செலுத்தியது. பரணவிதனா, சங்ககரா சதம் அடித்தனர். இந்தியாவின் பந்து வீச்சு மீண்டும் எடுபடவில்லை.

நேற்றைய ஆட்டத்தின் முடிவில் இலங்கை அணி 2 விக்கெ இழப்புக்கு 312 ரன் எடுத்து இருந்தது. சங்ககரா 130 ரன்னுடனும், ஜெயவர்த்தனே 13 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இன்று (செவ்வாய்க்கிழமை) 2-வது நாள் ஆட்டம் நடந்தது. இருவரும் தொடர்ந்து ஆடினார்கள்.

சங்ககராவும், ஜெயவர்த்தனேயும் இந்திய பந்து வீச்சாளர்களை விளாசி தள்ளி ரன் குவித்தனர்.

கேப்டன் சங்ககரா அபாரமாக விளையாடி இரட்டை சதம் அடித்தார். 304 பந்துகளில் 27 பவுண்டரியுடன் அவர் 200 ரன்னை தொட்டார். இது அவரது 7-வது இரட்டை சதம் ஆகும்.

இதேபோல் மறுமுனையில் இருந்து ஜெயவர்த்தனேயும் பொறுப்புடன் ஆடினார். மதிய உணவு இடைவேளை வரை இந்திய பவுலர்களால் ஒரு விக்கெட்டை கூட கைப்பற்ற முடியாமல் போனது மிகுந்த பரிதாபமே.

சங்ககரா, ஜெயவர்த்த னேவின் அதிரடியான ஆட்டத்தால் இலங்கை அணி ரன்களை குவித்து வலுவான நிலையில் இருந்தது.

மதிய உணவு இடை வேளையின்போது இலங்கை அணி 2 விக்கெட் இழப்புக்கு 457 ரன் குவித்து இருந்தது. சங்ககரா 214 ரன்களிலும், ஜெயவர்த்தனே 71 ரன்னிலும் ஆட்டம் இருக்காமல் இருந்தார்.மதிய உணவு இடைவேளைக்கு பிறகு இந்த ஜோடியை ஷேவாக் பிரித்தார்.

சங்ககரா 219 ரன்னில் “அவுட்” ஆனார். அவர் 335 பந்துகளில் 29 பவுண்டரியுடன் இந்த ரன்னை எடுத்தார். 3-வது விக்கெட் ஜோடி 393 ரன் எடுத்தது.

சங்ககரா ஆட்டம் இழந்தபோது இலங்கை அணியின் ஸ்கோர் 466ஆக இருந்தது. ஜெயவர்த்தனே 80 ரன்னில் இருந்தார்.

அடுத்து ஜெயவர்த்தனேயுடன் சமரவீரா ஜோடிசேர்ந்தார். இருவரும் இந்திய பந்து வீச்சை துவசம் செய்தனர். ஜெயவர்த்தனே சிறப்பாக விளையாடி சதம் அடித்தார்.

அவரைத் தொடர்ந்து சமரவீரா அரைசதம் அடித்தார். இதனால் இலங்கை அணியில் ஸ்கோர் 600 ரன்னை நோக்கி சென்றது. சதம் அடித்த ஜெயவர்த்தனே அதிரடியாக விளையாடினார். அவரும் இரட்டை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 174 ரன்னில் ஹர்பஜன் பந்தில் அவுட் ஆனார்.

அதனைத் தொடர்ந்து இலங்கை அணியின் ஸ்கோர் 4 விக்கெட் இழப்பிற்கு 642 ரன்னுடன் முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. சமரவீரா 76 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தார்.

பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. சேவாக் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த விஜய் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினார்கள். இருவரும் ஆரம்பம் முதல் அதிரடியாக விளையாடி ரன் சேர்த்தனர்.

இதனால் இந்தியா 8 ஓவரில் 50 ரன்னை கடந்தது. சிறப்பாக விளையாடி சேவாக் அரைசதம் அடித்தார். அவர் 50 பந்து சந்தித்து 9 பவுண்டரியுடன் இந்த ரன்னை எடுத்தார்.

அப்போது இந்தியாவின் ஸ்கோர் 79 ரன்னாக இருந்தது. இந்தியாவின் ஸ்கோர் 95 ரன்னாக இருக்கும்போது 2வது நாள் ஆட்டம் முடிந்தது, ஆட்ட இறுதியில் சேவாக் 64 ரன்னுடனும், விஜய் 22 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இந்தியா நாளை தொடர்ந்து விளையாடும்.
மேலும் இங்கே தொடர்க...

பதினேழு தடவைகள் பிடியாணை; நான்கு நீதிமன்றங்களால் தேடப்பட்ட பெண் கைது!



பதினேழு முறை நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த பெண் ஒருவரை கண்டி பொலிஸார் நேற்று (26ம் திகதி) மடக்கிப் பிடித்துள்ளனர்.

இப்பெண் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி நாட்டின் பல பகுதிகளிலும் பலரிடம் பண மோசடியில் ஈடுபட்டவராவார். இவர் மீது கண்டி, பேலியாகொடை, ராகமை, புதுக்கடை ஆகிய நீதிமன்றங்களே பிடியாணை பிறப்பித்துள்ளன. இப்பெண் கைது செய்யப்பட்ட சமயம் அவரிடமிருந்து 22 போலி விசாக்கள், 15 போலி வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவரகங்களின் அனுமதிப் பத்திரப் புகைப்படப் பிரதிகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

தனியார் பஸ் உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது


தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் இன்று ஏற்பாடு செய்திருந்த வேலை நிறுத்தப் போராட்டம் தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்திற்கும் போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கமவுக்குமிடையில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து கைவிடப்பட்டது.

மேல் மாகாண தனியார் பஸ்களிடம் இருந்து அறவிடப்படும் பதிவுக் கட்டணங் கள் அதிகரிக்கப்பட்டுள்ளதை ஆட்சேபித்து இன்று நள்ளிரவு முதல் வேலை பகிஷ்க ரிப்பில் ஈடுபட முடிவு செய்யப்பட்டிருந்தது. மாதாந்தப் பதிவுக் கட்டணத்தை ஆயிரம் ரூபாவாகவும் வருடாந்த பதிவுக் கட்டணத்தை 5 ஆயிரம் ரூபாவாகவும் அதிகரிக்க மேல் மாகாண போக்குவரத்து அதிகார சபை தீர்மானித்திருந்தது.

அமைச்சருடன் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தையையடுத்து மாதாந்த பதிவுக் கட்டணத்தை 100 ரூபாவினாலும் வருடாந் தப் பதிவுக் கட்டணத்தை 500 ரூபாவினாலும் உயர்த்த முடிவு காணப்பட்டதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் அரசியலமைப்பில் மாற்றம்



நாட்டு மக்களின் எதிர்பார்ப்பை நிறை வேற்றும் வகையிலேயே அரசியலமைப்பில் மாற்றம் ஏற்படுத்தப்படுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

நாட்டின் இறைமை, பாதுகாப்பு, மக்கள் நலனுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலேயே இம்மாற்றம் ஏற்படுத் தப்படுமென தெரிவித்த ஜனாதிபதி, எவரதும் தனிப்பட்ட விருப்பு வெறுப் புக்கேற்ப இம்மாற்றம் அமையாது எனவும் தெரிவித்தார்.

அதேவேளை அரச சார்பற்ற அமைப்புக்கள் நாட்டைத் துண்டாடுவதற்கு உடன்படிக்கை மேற்கொண்டோரின் விருப்பத் திற்கேற்ப அரசியலமைப்பில் மாற்றம் கொண்டுவர முடியாது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஹக்மன பிரதேச சபை கட்டடத் திறப்பு விழாவும் ஹக்மன நகர சபைக் கட்டடத் திற்கான அடிக்கல் நடும் வைபவமும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று நடைபெற்ற, நகர சபைக்கான அடிக்கல்லை நாட்டிவைத்து அதனை யொட்டிய பொதுக் கூட்டத்தில் உரையாற் றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர்களான ஏ.எல்.எம். அதாவுல்லா, மஹிந்த யாப்பா அபேவர்தன, பிரதியமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, தென் மாகாண முதலமைச்சர் ஷான் விஜேலால் டி சில்வா உட்பட மாகாண அமைச்சர்கள், முக் கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது :-

எமக்கு மூன்றிலிரண்டு பெரும்பான் மைக்கு ஆறு ஆசனங்களே தேவையான நிலையில் அரசியலமைப்பில் மாற்றங்களை மேற்கொள்ள போதிய அதிகாரம் எமக் குள்ளது. எனினும் பல்தரப்பு கலந்துரையாடல்களுடன் இதனை மேற்கொள்வதையே நாம் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.

இந்நாட்களில் எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நாம் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகிறோம். நிறைவேற்று ஜனாதிபதியாக தனித்திருப்பதைப் போன்று நான் உணர்கிறேன். பாராளுமன்றத்திற்கு வருகை தந்து அங்கு என்ன நடக்கின்றது என்பதைப் பார்க்கவும் நான் ஆவலாயுள்ளேன. இதற்கேற்ற விதத்திலேயே மாற்றம் இடம்பெறுவது அவசியம்.

இப்போதெல்லாம் கட்சித் தாவுதலைத் தடைசெய்ய வேண்டும் என்ற கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. கட்சிக்குள் வருவதற்கும் போவதற்குமான சந்தர்ப்பங்கள் இருக்க வேண்டுமென நான் கருதுகின்றேன். கட்சி மாறுதல் இல்லாதிருந்தால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி போன்ற கட்சிகள் உருவாகியிருக்க முடியாது என்பதை உணர வேண்டும்.

மக்கள் எம்மீது பெரும் எதிர்பார்ப்பைக் கொண்டுள்ளனர். அந்த எதிர்பார்ப்பை நாம் பொறுப்புடன் நிறைவேற்றி வருகின்றோம். தேர்தல் வாக்குறுதிகள் வெறும் வாக்குறுதிகளாக மட்டுமே இருந்த யுகம் மாற்றப்பட்டுள்ளது.

நாம் மஹிந்த சிந்தனையின் முதற் கட்டமாக மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியில் தொண்ணூறு வீதமானவற்றை நிறைவேற்றியுள்ளோம். இப்போது இரண்டாம் கட்டம் ஆரம்பிக்கப்பட்டு விட்டது. நாம் மக்களுக்குப் பொறுப்புக் கூறவேண்டியவர்கள் என்பதை உணர்ந்து அதிகாரிகள் செயற்பட வேண்டும்.

மக்கள் ஆதரவுடன் பெரும் பலத்துடன் அரசாங்கம் என்ற ரீதியிலும் கட்சி என்ற ரீதியிலும் நாம் முன்னோக்கிப் பயணிக்கின்றோம். மக்களுக்கான தேவைகளை நிறைவேற்றுவதில் ஜனாதிபதி என்ற வகையில் எம்முடன் கைகோர்த்து செயற்பட சகலரும் முன்வரவேண்டும்.

நாட்டில் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எதிர்கால பரம்பரைக்காக நாட்டை அபிவிருத்தியிலும் சுபீட்சத்திலும் கட்டியெழுப்ப அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன (பிரதியமைச்சர்) :

ஹக்மன தேர்தல் தொகுதியிலிருந்து கடந்த தேர்தலில் 70.6 வீத வாக்குகள் ஜனாதிபதிக்குப் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன.

1994ம் ஆண்டிலிருந்து மாத்தறையில் ஐ. தே. கவில் வெற்றிபெற்று சரியான சந்தர்ப்பத்தில் ஜனாதிபதிக்குப் பூரண பங்களிப்பு வழங்கினேன். அதனை ஏற்றுக்கொண்டுள்ள மக்கள் என்னை பாராளுமன்றத் தேர்தலில் முதலிடத்தில் வெற்றிபெறச் செய்தனர்.

ஆசியாவின் உன்னத நாடாக இலங்கையை உருவாக்கும் நடவடிக்கையில் ஹக்மன அபிவிருத்திக்காக 14,600 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. இன்னும் பல அபிவிருத்தித் திட்டங்கள் இப்பகுதியில் முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்த நாட்டில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை தொடர்ந்து இருக்க வேண்டியது அவசியம். இன்றேல் நிறைவேற்று பிரதமர் முறையாவது கொண்டுவரப்பட வேண்டும். மக்கள்தான் வாக்களிப்பர், அதற்காக எதிர்க்கட்சி பயப்படத் தேவையில்லை.
மேலும் இங்கே தொடர்க...

வடக்கு, கிழக்கில் கைத்தொழில் ஊக்குவிப்பு


வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில் துறையாளர்களுக்கு உயர் தொழில் நுட்ப அறிவை வழங்கும் திட்டமொன்றை தொழில்நுட்பவியல் மற்றும் ஆராய்ச்சி அமைச்சு ஆரம்பித்துள்ளது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள பிரதேச செயலக மட்டத்தில் செயற்படும் விதாதா வள நிலையங் களினூடாக கைத்தொழிலாளர்களுக்கு தொழில் நுட்ப அறிவு வழங்கப்படுகிறது.

யோகட் கைத்தொழில், பேக்கரி கைத்தொழில், மரக்கறி சார் உணவு உற்பத்தி என்பவற்றிற்காக உயர் தொழில் நுட்ப அறிவு வழங்கப்படுவதாக அமைச்சு கூறியது. இதன் காரணமாக குறித்த துறைகளில் கைத்தொழில்களை ஆரம்பிக்க கூடுதல் ஆர்வம் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்தது.

தொழில்நுட்பவியல் மற்றும் ஆராய்ச்சி அமைச்சுடன் தொடர்புடைய நிறுவனங்களினூடாக கண்டுபிடிக்கப்படும் புதிய தொழில் நுட்ப அறிவை விதாதாவள நிலையங்களினூடாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கைத்தொழில் மற்றும் வர்த்தகங்கள் ஆரம்பிப்பதற்காக வழங்கப்படுகிறது. இதற்காக பல திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு கூறியது.

யோகட், ஜாம், கோடியல், முறுக்கு வகை, பலகாரம், ஊதுபத்தி, மரக்கறி, பழவகை, கடதாசி உற்பத்தி, அரிசி சார் பேக்கரி கைத்தொழில், ஸ்கிரீன் பிரின்ட் தொழில் நுட்பம் என்பவற்றுக்கான அறிவு, வழிகாட்டல் என்பன தற்பொழுது சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழி லாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

வடக்கு, கிழக்கில் கைத்தொழில் ஊக்குவிப்பு


வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில் துறையாளர்களுக்கு உயர் தொழில் நுட்ப அறிவை வழங்கும் திட்டமொன்றை தொழில்நுட்பவியல் மற்றும் ஆராய்ச்சி அமைச்சு ஆரம்பித்துள்ளது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள பிரதேச செயலக மட்டத்தில் செயற்படும் விதாதா வள நிலையங் களினூடாக கைத்தொழிலாளர்களுக்கு தொழில் நுட்ப அறிவு வழங்கப்படுகிறது.

யோகட் கைத்தொழில், பேக்கரி கைத்தொழில், மரக்கறி சார் உணவு உற்பத்தி என்பவற்றிற்காக உயர் தொழில் நுட்ப அறிவு வழங்கப்படுவதாக அமைச்சு கூறியது. இதன் காரணமாக குறித்த துறைகளில் கைத்தொழில்களை ஆரம்பிக்க கூடுதல் ஆர்வம் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்தது.

தொழில்நுட்பவியல் மற்றும் ஆராய்ச்சி அமைச்சுடன் தொடர்புடைய நிறுவனங்களினூடாக கண்டுபிடிக்கப்படும் புதிய தொழில் நுட்ப அறிவை விதாதாவள நிலையங்களினூடாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கைத்தொழில் மற்றும் வர்த்தகங்கள் ஆரம்பிப்பதற்காக வழங்கப்படுகிறது. இதற்காக பல திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு கூறியது.

யோகட், ஜாம், கோடியல், முறுக்கு வகை, பலகாரம், ஊதுபத்தி, மரக்கறி, பழவகை, கடதாசி உற்பத்தி, அரிசி சார் பேக்கரி கைத்தொழில், ஸ்கிரீன் பிரின்ட் தொழில் நுட்பம் என்பவற்றுக்கான அறிவு, வழிகாட்டல் என்பன தற்பொழுது சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழி லாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

கடத்தல் மற்றும் கொள்ளை சம்பவங்களை கண்டித்து வவுனியாவில் இன்று கடையடைப்பு

வவுனியா பிரதேசத்தில் பரவலாக இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்ற கொள்ளைகள் மற்றும் ஆட்கடத்தல் சம்பவங்களைக் கண்டித்தும் அவற்றைத் தடுத்து நிறுத்தக் கோரியும் வவுனியா வர்த்தகர் சங்கம் ஒரு நாள் அடையாள கடையடைப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளது.

சில தினங்களுக்கு முன்னர் வர்த்தகர் ஒருவர் வெள்ளை வானில் வந்தவர்களினால் கடத்திச் செல்லப்பட்டதாகவும் அவர் பின்னர் கப்பமாகப் பணம் பெற்றுக் கொண்டதன் பின்னர் விடுதலை செய்யப்பட்டதாகவும் வர்த்தக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்தச் சம்பவம் வவுனியா நகரப் பகுதியில் பரபரப்பையும் வர்த்தகர்கள் மத்தியில் அச்சத்துடன் கூடிய பதட்டத்தையும் ஏற்படுத்தியிருந்தது. இந்தச் சூழலிலேயே வவுனியா வர்த்தகர் சங்கம் கடையடைப்பிற்கான அழைப்பை விடுத்துள்ளது.

இது தொடர்பாக வவுனியா வர்த்தகர் சங்கம் வெளியிட்டுள்ள துண்டுப் பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நீண்ட காலமாக நடைபெற்ற யுத்தம் முடிவடைந்து நாட்டில் அமைதியான சுதந்திரமான சுமுகமான நிலைமை ஏற்பட்டுக் கொண்டிருக்கும் இந்த வேளையில் மீண்டும் அமைதியைக் குலைத்து அசாதாரண சூழ்நிலை ஏற்படும் வகையில் ஒரு வருடத்திற்குப் பின்னர் கடந்த 23.07.2010 வெள்ளிக்கிழமை இரவு எமது வர்த்தகர்களில் ஒருவர் கப்பம் கோரி இனந்தெரியாதவர்களினால் வெள்ளை வானில் கடத்தப்பட்டார். யுத்தம் முடிவடைந்த நிலையில் நீண்ட காலத்தின் பின் நடைபெற்ற இந்தச் சம்பவத்தை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

இதைவிட நகருக்கு வெளியே பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் பல களவு கொள்ளைச் சம்பவங்கள் நடைபெறுகின்றன. இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாமல் வர்த்தகர்களும் பொது மக்களும் அச்சமின்றி பாதுகாப்பாக வாழ வழியேற்படுத்துவதோடு இப்படியான செயல்களில் ஈடுபடும் தீய சக்திகளை இனங்கண்டு அவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி பாதுகாப்பு தரப்பினரை வேண்டி நிற்கின்றோம்.

இவ்வாறான சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் இருக்க நாம் ஒரு எதிர்ப்பு நடவடிக்கையை நடத்த தீர்மானித்துள்ளோம். அதனடிப்படையில் இன்று செவ்வாய்க்கிழமை பூரணமான கடையடைப்பு செய்து அனைத்து வர்த்தக உரிமையாளர்களும், ஊழியர்களும் எமது வர்த்தகர் சங்க அலுவலகத்தின் முன்பாக கூடி காலை 9 மணியில் இருந்து 11 மணி வரையில் அமைதியான முறையில் இரண்டு மணித்தியாலங்களை எமது எதிர்ப்பைத் தெரிவிக்க முடிவு செய்துள்ளோம். இதற்கு வர்த்தகர்களும், வர்த்தக ஊழியர்களும், அரச, அரச சார்பற்ற நிறுவனங்களும் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் இங்கே தொடர்க...

ஸ்ரீகொத்தா முன் தீக்குளித்தமுதியவர் உயிரிழப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவின் முன்பாக தீக்குளித்த முதியவர் இன்று காலை உயிரிழந்துள்ளார்.

ஐ.தே.க தலைமையகமான ஸ்ரீகொத்தாவின் முன்பாக நேற்று திங்கட்கிழமை மாலை தீக்குளித்த காலி வெலிகமவைச் சேர்ந்த அறுபது வயது மதிக்கத்தக்க ரியன்ஸி அல்கம என்வர் எரிகாயங்களுடன் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

ஐ.தே.கவின் மறுசீரமைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தே அவர் தீக்குளித்துக் கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற பொலிஸார் அவரது உறவினர்களைக் கண்டறிந்ததன் பின்னரே அவர் தனக்குத் தானே தீ மூட்டிக் கொண்ட விடயம் தொடர்பில் சரியான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...