4 மே, 2010

வடக்கு மாகாண சபைத் தேர்தல் விரைவில்




வடக்கு மாகாணத்துக்கான மாகாண சபைத் தேர்தல் விரைவில் நடத்தப்படும். தேர்தல் நடத்தப்படும் திகதி இதுவரை தீர்மானிக்கப்படவில்லை. அப்பிரதேச மக்கள் பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தி இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள வெளிவிவகார அமைச்சில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். .

அவர் அங்கு மேலும் கூறுகையில், "கிழக்கு மாகாண சபை தேர்தல் நடத்தப்பட்டு அங்கு மாகாண சபை இயங்கிக்கொண்டிருக்கின்றது. இந்நிலையில் வடக்கு மாகாண சபை தேர்தலையும் நடத்தவேண்டிய தேவை உள்ளது. .

ஜனநாயக விழுமியங்களை உறுதிப்படுத்தும் ஓர் அங்கமாகவே இவற்றை மேற்கொள்கின்றோம். முக்கியமாக வடக்கு மாகாணத்தின் மக்கள் பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தி தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும். .

தேர்தலை நடத்துவதற்கான திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. எனினும் விரைவில் இது தொடர்பான தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும். இவையனைத்தையும் கட்டம் கட்டமாகவே மேற்கொள்ள முடியும்" என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

புலிகளின் சர்வதேச வலையமைப்பை தடுத்து நிறுத்துவதே இன்றைய சவால் என பிரதமர் தெரிவிப்பு





புலிகள் இயக்கத்தின் சர்வதேச வலையமைப்பை மீளக் கட்டியெழுப்புவதற்கான அதீத முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக பிரதமர் டி.எம்.ஜயரத்ன பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார். அவசரகால சட்டத்தை மேலும் ஒருமாதத்தால் நீடிப்பதற்கான பிரேரணையை சபையில் சமர்ப்பித்து உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். புலிகளின் சர்வதேச வலையமைப்பைத் தடுத்து நிறுத்துவதே இன்றுள்ள பிரதான சவாலாகும். இதற்கு அவசரகால சட்ட நீடிப்பு அவசியமாகும். அவசரகால சட்டத்தில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டாலும் அச்சட்டம் நீக்கப்பட மாட்டாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இவ்விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய .தே.கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய, 17வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டுமென்றும், அரசசேவைகள் ஆணைக்குழுவை நியமிப்பதன்மூலம் பாரபட்சமற்ற அரசசேவைகளை உருவாக்க முடியுமென்றும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவசரகாலச் சட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்ல வேண்டுமாயின் அதற்கு வேறு பெயரை சூட்ட வேண்டுமெனவும், அவசரகாலச் சட்டம் என்பது அவசர நேரத்தில் அமுல்படுத்த வேண்டியதெனவும் ஜனநாயக தேசியக் கூட்டணியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தான் ஒரு அரசியல் கைதியென்று தெரிவித்த அவர், நாட்டில் அமுலிலிருக்கும் சாதாரண சட்டத்தின்கீழ் பொதுமக்களை நடமாடுவதற்கு இடமளிக்க வேண்டுமென்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

ஜெனரல் சரத் பொன்சேகாவை விசாரணை செய்யும் இரண்டாவது இராணுவ நீதிமன்றம் நாளை கூடுகிறது-





நாடாளுமன்ற உறுப்பினர் ஜெனரல் சரத்பொன்சேகாமீதான குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யவென அமைக்கப்பட்டுள்ள இரண்டாவது இராணுவ நீதிமன்றம் மீண்டும் நாளை நண்பகலில் கூடவுள்ளதாக இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை கடற்படைத் தலைமையகத்தில் இன்றுபிற்பகல் இடம்பெற்ற இரண்டாவது இராணுவ நீதிமன்ற விசாரணையில் ஜெனரல் சரத்பொன்சேகா கலந்து கொள்ளவில்லையெனவும் அவர் பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்றிருந்த நிலையில் அவருக்குப் பதிலாக அவரது சட்டத்தரணிகள் இராணுவ நீதிமன்றில் ஆஜராகியிருந்ததாகவும் பிரிகேடியர் தெரிவித்துள்ளார். அத்துடன் இன்றைய நாடாளுமன்ற அமர்வுகளில் முழுமையாக பங்குகொள்ள தனக்கு அனுமதி வழங்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் ஜெனரல் சரத் பொன்சேகா சபாநாயகரிடம் கேட்டுக் கொண்டதற்கமைய அவருக்கு சபாநாயகரால் அனுமதி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

இன்ஜினில் எரிபொருள் கசிவு் இலங்கை விமானம் தப்பியது






திருச்சி்பறக்கத் தொடங்குவதற்கு முன்பு இன்ஜினில் எரிபொருள் கசிவு ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்ததால் இலங்கை விமானம் விபத்தில் இருந்து தப்பியது. இலங்கை திருச்சி இடையே மிகின் லங்கா விமானம் இயக்கப்படுகிறது. இந்த விமானம் தினமும் மதியம் 1 மணிக்கு திருச்சி வந்துஇ 2 மணிக்கு மீண்டும் இலங்கை புறப்பட்டுச் செல்லும். நேற்று 15 நிமிடம் தாமதமாக 1.15 மணிக்கு திருச்சி வந்தது. இலங்கை செல்லும் பயணிகள் 132 பேர் விமானத்தில் ஏறி அமர்ந்தனர். 2.25 மணிக்கு விமானம் புறப்பட தயாரானது. இன்ஜினை இயக்கிவிட்டுஇ புறப்பட தயாராக இருந்த நேரத்தில் எரிபொருள் வாடை வருவதை விமானி உணர்ந்தார். உடனே இன்ஜின் இயக்கத்தை நிறுத்திவிட்டு சோதனை செய்தார். ஒரு இன்ஜினில் எரிபொருள் கசிந்துகொண்டிருப்பது தெரியவந்தது. தொடர்ந்து விமானத்தை இயக்க முடியாததால் பயணிகள் அனைவரும் இறக்கப்பட்டனர். உடனடியாக சரிசெய்ய முடியாத பழுது என்பதால் விமானம் ரத்து செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விமானம் புறப்படும் முன்பு எரிபொருள் கசிவதை விமானி கண்டறிந்ததால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது.
மேலும் இங்கே தொடர்க...

பிரபாகரன் தாயாருக்கு நிபந்தனைகள்: முதல்வர்





விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளுக்கு தமிழகத்தில் சிகிச்சை தருவதற்கு பெரிய நிபந்தனைகள் ஏதும் விதிக்குமாறு தமிழகம் பரிந்துரைக்கவில்லை என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

தில்லியில் திங்கள்கிழமை மாலை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

பார்வதி அம்மாளின் பாதுகாப்பு கருதி -​ அரசின் மேற்பார்வையில் அவர் சிகிச்சை பெற வேண்டும் என்றும்,​​ சிகிச்சைக்கான ஏற்பாடுகளை அரசு செய்யும் என்றும் மத்திய உள்துறைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சொல்லப்பட்டுள்ளது.

இதைத்தான் நீதிமன்றத்தில் ஒருவர் வழக்கு தொடுத்து,​​ அரசு சார்பில் அதற்கு பதில் அளிக்கப்பட்டு,​​ தீர்ப்பு வந்ததின் தொடர்ச்சியாக பார்வதி அம்மாளின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியிருக்கிறோம்.

அவருடைய பாதுகாப்பு கருதி,​​ அரசின் அரவணைப்பில் நாங்கள் குறிப்பிடும் மருத்துவமனையில் பாதுகாப்பாக இருக்க வேண்டும்,​​ அரசு செலவில் சிகிச்சை பெற வேண்டும் என்பதுதான் நாங்கள் கூறியுள்ள நிபந்தனைகள்.

இது ஒன்றும் கடுமையானது அல்ல என்று முதல்வர் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை: ஹோட்டலில் குண்டுவைத்தவர் கைது


கொழும்புவில் உள்ள முன்னணி ஹோட்டலில் இரண்டு வருடங்களுக்கு முன்பு வெடிகுண்டு வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் வட இலங்கையில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

2008 ஜனவரி 2 அன்று நிப்பான் ஹோட்டலில் குண்டுவைத்த சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் செல்வநாயகம் என்கிற அரவிந்தனை வவுனியா போலீசார் கைது செய்ததாகத் தகவல்கள் தெரிவித்தன.

பின்னர் கொழும்பு மாவட்ட கூடுதல் நீதிபதி முன்பு அவர் ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணைக்காக பயங்கரவாதப் புலனாய்வுத் துறையினரிடம் அவரை ஒப்படைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். கைது செய்யப்பட்டபோது அவரிடமிருந்து 7 கிலோ வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்டதாகத் தகவல்கள் தெரிவித்தன.
மேலும் இங்கே தொடர்க...

140 பயங்கரவாதிகள் இந்தியா நுழைந்தனர்; இலங்கை மீனவ படகு மூலம் வந்தனரா ?





புதுடில்லி: இந்தியாவிற்குள் மேற்கு கடல் பகுதி வழியாக 140 அல்குவைதா மற்றும் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவிற்குள் நுழைந்திருப்பதாக உளவு துறையை மேற்கோள் காட்டி தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மாநிலம் வாரியாக பிரிந்து சென்று சதித்செயலில் ஈடுபடக்கூடும் என அஞ்சப்படுகிறது.



பல மாநிலங்களுக்கு குழுவாக பிரிந்து சென்றனர் : அசாம் மாநில போலீசாருக்கு கிடைத்த தகவலின்படி 140 பேர் இந்தியாவின் மேற்கு பகுதி கடல் வழியாக வந்திருக்கின்றனர் என்றும் , மகாராஷ்டிரா, குஜராத்தில் இறங்கி அங்கிருந்து பல குழுக்ககளாக அதாவது 30 பேர் ராஜாஸ்தானுக்கும், உ . பி., க்கு 14 பேரும் , 15 முதல் 20 பேர் ஆந்திர மாநிலம் ஐதராபாத்திற்கும், மகாராஷ்டிராவுக்கு 12 பேரும், டில்லி - அரியானாவுக்கு 5 பேரும், இதில் இருந்த ஏனைய 40 பேர் தென் மாநிலங்களுக்கும் பிரிந்து சென்றிருக்கின்றனர் என்று கூறப்பட்டுள்ளது. இந்த பயங்கரவாதிகள் இலங்கை மீனவ படகு மூலம் வந்திருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் நேபாளத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு தொடர்பு கொண்ட பயங்கரவாதிகளின் உரையாடல் மூலம் தெரிய வந்திருப்பதாகவும் தெரியவருகிறது.



அமெரிக்க எச்சரிக்கைக்கு காரணம் : இந்த உறுதிப்படுத்தப்படாத சந்தேக தகவல்கள் மூலம் தான் கடந்த 2 வாரங்களாக நாடு முழுவதும் உஷாராக இருக்குமாறு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது என்றும், இதனை கருத்தில் கொண்டுதான் அமெரிக்காவும் 2 முறை எச்சரிக்கை விடுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. கடந்த 20 நாட்களாக டில்லியில் கூடுதல் பாதுகாப்பிற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதற்கும், இது தான் காரணம் என பாதுகாப்பு வட்டாரம் தெரிவிக்கிறது. கடல் வழி பாதுகாப்பு போதிய அளவில் இல்லை என்ற பாதுகாப்பு துறை வட்டாரமே ஒத்துக்கொண்டுள்ளது என்பது கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். மும்பை தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் மும்பைக்கு கடல் வழியாகத்தான் நுழைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.



ஆந்திராவில் ஆயுதங்களுடன் ஒருவன் கைது : இந்த தகவலையடுத்து ஆந்திராவில் கூடுதல் பாதுகாப்பிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஐதராபாத் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பவானிநகர் போலீசாருக்கு கிடைத்த தகவலின்படி பயங்கரவாதி ஒருவன் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளான். எடிபஜார் பகுதியை சேர்ந்த முகம்மது ஜியா உல் ஹக் என்பவனிடமிருந்து வெடிகுண்டுகள், கைத்துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.ஐதராபாத் நகரில் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ய திட்ட மிட்டிருந்ததும், பாகிஸ்தானில் பயங்கரவாத பயிற்சிகளையும் பெற்று வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

பொருளாதார அபிவிருத்திக்கும் சமூக மேம்பாட்டுக்கும் பேதங்களை மறந்து சகலரும் ஒத்துழைக்க வேண்டும்


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்பார்க்கும் பொருளாதார அபிவிருத்தி சமூக மேம்பாடு என்பவற்றை அடுத்துவரும் மூன்று வருடங்களுக்குள் ஏற்படுத்த முடியும் என்று பிரதமரும், புத்தசாசன மற்றும் மத விவகார அமைச்சருமான தி. மு. ஜயரத்ன தெரிவித்தார்.

நாட்டினதும், மக்களினதும் நலனை கருதி பொருளாதார அபிவிருத்தி, சமூக மேம்பாட்டுக்காக சகலரும் கட்சி அரசியல், பேதங்களுக்கு அப்பால் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

கொழும்பு – 7, விஜேராமவில் உள்ள புத்தசாசன மற்றும் மத விவகார அமைச்சுக்கு வருகை தந்த பிரதமர் தி. மு. ஜயரத்ன தனக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சு கடமைகளை நேற்று உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட பிரதமர் ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றுகையில் :

சமுதாயத்தை மாற்றியமைக்கும் பாரிய பொறுப்பு தனக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சுக்கு உள்ளது.

எமது நாட்டில் வாழும் அதிகமான மக்கள் நல்லவர்களாக இருக்கின்றனர். இருப்பினும் ஒருசிலர் செய்யும் மோசமான செயல்கள் காரணமாக சகலரது பெயரும் கெட்டுப் போகின்றது. நாட்டில் தற்பொழுது பல்வேறு வகையான குற்றச் செயல்கள் இடம்பெற்று வருகின்றன. இவற்றை சட்டங்களின் மூலம் முற்றாக இல்லாமல் செய்ய முடியாது.

ஆனால் மதங்களின் ஊடாக அதனை மாற்றியமைக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.

பெளத்த, ஹிந்து, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் மதங்களின் தலைவர்களின் ஒத்துழைப்புடன் எமது நாட்டில் சிறந்ததொரு சமுதாயத்தை கட்டியெழுப்ப முடியும்.

இதற்கு சகலரினதும் ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானதாகும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். வடமத்திய மாகாண முதலமைச்சர் பேர்டி பிரேமலால் திஸாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர், அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர், அஷ்ஷெய்க் எம். ஐ. அமீர், இந்து சமய கலாசார திணைக்கள பணிப்பாளர் சாந்தி நாவுக்கரசன், முஸ்லிம் சமய கலாசார திணைக்கள பணிப்பாளர் அஷ்ஷெய்க் வை. எல். எம். நவவி, இஹ்ஸானிய்யா அரபுக் கல்லூரியின் பணிப்பாளர் நியாஸ் மெளலவி, உட்பட முக்கியஸ்தர்கள் பலர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

நாடு கடந்த அரசமைக்கும் புலிகளின் முயற்சி முறியடிக்கப்படும்


நாடு கடந்த அரசாங்கமொன்றை அமைப்பதற்குப் புலி ஆதரவாளர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை முறியடிக்க வெளிவிவகார அமைச்சு தயாராக இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

இத்தகைய அரசொன்றை அமைப்பதற்கான தேர்தலொன்றை நடத்தவும் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. இதனை நாம் ஒரு தேர்தலாக ஏற்றுக்கொள்ளப்போவ தில்லை எனக் குறிப்பிட்ட அமைச்சர், அவ்வாறான செயற்பாடுகளுக்கு இடமளிக்க முடியாதெனவும் தெரிவித்தார்.

வெளிவிவகார அமைச்சு சர்வதேச ரீதியிலுள்ள தூதரகங்களுக்குத் தகவல்களைப் பெற்றுக்கொடுக்கவும் தேவைப்பட்டால் புலனாய்வுத்துறை அதிகாரிகளை அங்கு அனுப்பவும் உரிய நடவடிக்கைகளை மேற் கொள்ளுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

புதிய வெளிவிவகார அமைச்சரான பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் நேற்று தமது பொறுப்புக்களை உத்தியோகபூர்வமாகக் கையேற்றபின் நடாத்திய செய்தியாளர் மாநாட்டின்போதே இதனைத் தெரிவித்தார்.

அமைச்சின் செயலாளர், சட்டமா அதிபர் மற்றும் முக் கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் அவர் மேலும் தெரிவித்ததாவது-

யுத்த காலங்களின்போது வெளிவிவகார அமைச்சு வழங்கிய பங்களிப்பைப் போன்றே புலிகளுக் கெதிரான சர்வதேச சவால்களை முறியடிக் கும் நடவடிக்கையிலும் வெளிவிவகார அமைச்சுக்குப் பெரும் பங்குண்டு என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். இந்த வகை யில் அத்தகைய சவால்களை எதிர்கொள்ள வெளிவிவகார அமைச்சு தயாராகவேயுள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகளின் செயற்பாடுகள் சம்பந்தமாகக் குறிப்பிட்ட அமைச்சர், எதிர்க்கட்சி அரசாங்கத்தை அசெளகரியத் திற்குள்ளாக்கவே முயற்சிக்கிறது. இத்தகைய தருணத்தில் கட்சி அரசியலுக்கப்பால் நாட்டின் நலன் தொடர்பான முக்கிய விடயங்களில் இணைந்து செயற்பட எதிர்க்கட்சி முன்வர வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

சீன தூதரக அதிகாரிக்கு அடி-உதை






அமெரிக்காவில் ஹூஸ்டன் நகரில் உள்ள சீன தூதரகத்தில் துணைத்தூதரக அதிகாரியாக இருப்பவர் ï போரன். இவர் காரில் அலுவலகத்துக்கு வந்தார். காரில் நம்பர் பிளேட் இல்லாததால், போலீசார் அந்த காரை தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் அந்த கார் நிற்காமல் தூதரகத்துக்குள் நுழைந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த போலீசார் அந்த காரை பின்தொடர்ந்து தூதரகத்துக்குள் நுழைந்தனர். தூதரக அதிகாரி காரை விட்டு இறங்கியதும் அவரை அடித்து உதைத்தனர். அவரை கைது செய்தனர்.

தூதரகத்துக்குள் போலீசார் நுழைந்து நடவடிக்கை எடுப்பதற்கு அவர்களுக்கு அதிகாரம் கிடையாது. அதோடு தூதரக அதிகாரிகளுக்கு சட்ட பாதுகாப்பு உள்ளது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. அப்படி இருந்தும் போலீசார் அவரை கைது செய்து உள்ளனர். இதற்கு சீனா கண்டனம் தெரிவித்து உள்ளது. அதோடு இந்த சம்பவம் பற்றி விசாரித்து குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டது.

நகர மேயர் அன்னீஸ் பார்க்கர் இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டார். அதோடு சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் 3 பேருக்கும் கட்டுப்பாடுகள் விதித்தார். அவர்கள் போலீஸ் நிலையத்தை விட்டு வெளியேறக்கூடாது என்றும் எழுத்து வேலைகளை மட்டும் தான் பார்க்கவேண்டும் என்றும், உத்தரவிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...