31 அக்டோபர், 2010

இலங்கை தமிழர்கள் தாய்லாந்தில் கைது


பாங்காக்: தாய்லாந்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த, இலங்கைத் தமிழர்கள் 61 பேர் கைது செய்யப்பட்டனர். இலங்கையில் புலிகள் உடனான உள்நாட்டுச் சண்டை முடிவுக்கு வந்ததை அடுத்து, அந்த நாட்டைச் சேர்ந்த பலர் வெளிநாடுகளில் அடைக்கலம் பெற முற்பட்டுள்ளனர். இந்நிலையில், தாய்லாந்தின் தெற்கு மாகாணமான சோங்க்லா பகுதியில், போலீஸ் அதிகாரிகள் நேற்று நடத்திய அதிரடி சோதனையில் இலங்கைத் தமிழர்கள் 114 பேர் பிடிபட்டனர். அவர்களில் சிலரிடம், முறையான பயண ஆவணங்கள் இருந்ததால் விடுவிக்கப்பட்டனர். விடுவிக்கப்பட்டவர்கள் போக, இலங்கைத் தமிழர்கள் 61 பேர் கைது செய்யப்பட்டனர். விசா காலத்திற்குப் பிறகும் அதிக நாட்கள் தங்கியிருந்தது, சட்டவிரோதமாக தாய்லாந்துக்குள் வந்தது போன்ற குற்றங்கள் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

அமெரிக்கா சென்ற விமானங்களில் வெடிபொருட்கள் ஒபாமா நிர்வாகம் அதிர்ச்சி: நாடு முழுவதும் உஷார்


வாஷிங்டன்: ஏமன் நாட்டிலிருந்து அமெரிக்கா சென்ற சரக்கு விமானங்களில், வெடி பொருட்கள் அடங்கிய பார்சல்கள் இருந்தது, பிரிட்டன் மற்றும் துபாய் விமான நிலையங்களில் கண்டுபிடிக்கப்பட்டது. இது அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

"இது பயங்கரவாதிகளின் சதித் திட்டம்' என, அமெரிக்க அதிபர் ஒபாமா எச்சரித்துள்ளார். இதையடுத்து, அமெரிக்காவில் உள்ள விமான நிலையங்களில் உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏமன் நாட்டிலிருந்து அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பார்சல்கள், நேற்று முன்தினம் பிரிட்டன் கிழக்கு மிட்லண்ட் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட, யுனைடெட் பார்சல் சர்வீஸ் நிறுவனத்துக்கு சொந்தமான சரக்கு விமானத்தில் ஏற்றப்பட்டன. இந்த பார்சல்கள் அனைத்தையும், பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர். அங்கிருந்த ஒரு பார்சலில் பயங்கர விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய வெடி பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அந்த வெடிபொருள் பார்சல், அங்கிருந்து அகற்றப்பட்டது. இதுகுறித்த தகவல் அமெரிக்க அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இதேபோல், துபாயிலிருந்து அமெரிக்காவுக்கு புறப்பட இருந்த "பெட்எக்ஸ்' நிறுவனத்தின் சரக்கு விமானத்திலும் அதே வகையான வெடிபொருள் பார்சல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பார்சலும் ஏமன் நாட்டிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டது தெரிந்தது. இதுகுறித்த தகவலும், அமெரிக்க அதிகாரிகளுக்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் கூறியதாவது: இந்த இரண்டு பார்சல்களுமே ஏமன் நாட்டிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரிந்துள்ளது. சிகாகோவில் உள்ள யூத வழிபாட்டு மையங்களை தகர்க்கும் நோக்கத்துடன் இவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவங்களை அடுத்து, அமெரிக்காவில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, சரக்கு விமானங்களை முழுமையாக சோதனையிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விமான நிலையங்கள் உட்பட, மற்ற முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. வெடிபொருள் பார்சலை அனுப்பிய நபர் யார் என்பதை விசாரிக்கும் பணியில் புலனாய்வுத் துறை அதிகாரிகள் முடுக்கி விடப்பட்டுள்ளனர். அல் - குவைதா அமைப்புக்கு இந்த சதித் திட்டத்தில் தொடர்பிருக்கலாம் என, சந்தேகம் எழுந்துள்ளது. கடந்தாண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று, அமெரிக்கா சென்ற பயணிகள் விமானத்தில் இதேபோல் வெடிபொருட்கள் வைத்திருந்தது, உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டு, ஆபத்து தவிர்க்கப்பட்டது. அந்த சதிச் செயலில் ஈடுபட்டவர்களுக்கு, இந்த சம்பவங்களிலும் தொடர்பிருக்கலாம் என, சந்தேகம் எழுந்துள்ளது. இவ்வாறு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெடி பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து, அமெரிக்க அதிபர் ஒபாமா நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில்,"வெடி பொருட்களை அனுப்பி வைத்தது, பயங்கரவாதிகள் தான் என, நம்புவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. யூத வழிபாட்டு மையங்களை தகர்ப்பதற்காக இவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிந்துள்ளது. இது போன்ற ஆபத்துகளில் இருந்து நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாக்க முழு நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

இந்திய பயணத்துக்கு பாதிப்பு இல்லை: அமெரிக்கா செல்லவிருந்த சரக்கு விமானங்களில் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது குறித்து, அதிபர் ஒபாமாவின் பாதுகாப்பு அதிகாரி ஜான் பிரென்னன் கூறியதாவது: வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவங்களால், அதிபர் ஒபாமாவின் இந்திய சுற்றுப் பயணத்துக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. இந்திய பயணம் திட்டமிட்டபடி நடக்கும். அதிபர், ஒரு நாட்டுக்கு பயணம் செய்கிறார் என்றால், அது தொடர்பான அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்ட பின்தான், பயணம் இறுதி செய்யப்படும். அந்த வகையில் இந்திய பயணத்துக்கான அனைத்து ஏற்பாடுகளும் ஏற்கனவே முடிந்து விட்டன. இவ்வாறு ஜான் பிரென்னன் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கையை சேர்ந்த 61 சட்ட விரோத குடியேற்ற வாசிகள் தாய்லாந்து அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


தாய்லாந்தின் தென் மாகாணத்தில் உள் சொங்ஹாலா பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவலைப்பு நடவடிக்கையின் போது 114 பேர் .கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர். தமது வீசா காலவதியான நிலையில் இபர்கள் கைது செய்யப்பட்டதாக சொங்காலா பிராந்திய குடிவரவு பாதுகாப்புத் துறை தலைவர் தலைவர் புட்திபோங் குசிக்குள் இதனை தெரிவித்துள்ளார்.

கைது அனைவரும் மூன்றாம் நாடு ஒன்றுக்கு சட்ட விரோதமாக தப்பி செல்வதற்கு முயற்சித்து வந்தவர்கள் என சந்தேகிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இம்மாதத்தில் மட்டும் தாய்லாந்து அதிகாரிகளினால் இப்பாரு சட்ட விரோத குடியேற்ற வாசிகள் 128 பேர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கையின் இறுதி நேர யுத்த விவகாரங்களை அறிவதற்கு அமெரிக்கா காத்திருக்கிறது

இலங்கையில் போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளதாகப் பல்வேறு தரப்புகளாலும் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், அது தொடர்பான உண்மைகளைக் கண்டறிவதிலும் அனைத்துத் தரப்பினருக்குமிடையிலான முரண்பாடுகளைக் களைவது தொடர்பிலும் அரசாங்கம் முன்னுரிமை அளிக்க வேண்டுமென அமெரிக்கா எதிர்பார்ப்பதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளரும், உதவிச் செயலாளருமான பிலிப் ஜே. குரோவ்லியே தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு யுத்தம் முடிவுற்றதன் பின்னரான காலப்பகுதியில் இலங்கை அரசாங்கமானது நாட்டை முன்னேற்றப் பாதையில் நடத்திச் செல்வதற்கான அனைத்து தகுதிகளையும் கொண்டுள்ளது. அதன்போது அனைத்து இன மக்களினதும் அபிலாஷைகளைப் புரிந்து கொண்டு முன்னேற்றத்துக்கான இலக்குகளை அடைவதற்கு முன்னுரிமையளிக்கப்பட வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டார். நேற்று முன்தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் மகாநாடொன்றில் வைத்தே இந்தக் கருத்துகளை அவர் வெளியிட்டுள்ளார். அவர் மேலும் கூறியதாவது,

தேர்தல் மூலம் மாபெரும் மக்கள் பலமொன்றைப் பெற்றுக் கொண்டுள்ள அரசாங்கம் அனைத்து இன மக்களிடையேயும் இன ஒற்றுமையைக் கட்டியெழுப்பும் முயற்சிகளை முடுக்கி விட்டு, எல்லா மக்களினதும் அபிலாஷைகளைப் புரிந்து கொண்டு செயற்படும் போதுதான் சுபீட்சமான இலங்கையைக் கட்டியெழுப்பக் கூடியதாக இருக்கும். அப்பாவி மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட குற்றச்செயலகள் தொடர்பான விசாரணை குறித்த பேச்சுகள் உள்ளனவா என்று கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கத் தயங்கிய அவர், இலங்கை அரசாங்கத்தின் வெளிப்படையான திறமைகள் விசேட பொறுப்புடமையாக மாறியுள்ளது என்னறார்.

இலங்கையின் எதிர்காலத்திற்கு அது மிக முக்கியமானது என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

இதேவேளை,ஒபாமாவின் மனித உரிமைகள் குறித்த விடயங்களில் ஏமாற்றமடைந்திருந்தாலும் தனது நிர்வாகத்தின் சிரேஷ்ட வெளிநாட்டுக் கொள்கை ஆலோசகர்களான சமந்தா பவர் மற்றும் டேவிட் பிரஸ்மன் ஆகியோரை கொழும்புக்கு அனுப்பி இலங்கையர்களுடன் ஆலோசனை நடத்தியிருப்பதற்கு அமெரிக்க வாழ் தமிழர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கும் அவர் சார்ந்த ஜனநாயக கட்சிக்கும் ஆதரவை வழங்க முன்வந்துள்ள அமெரிக்கா வாழ் தமிழர்கள் இலங்கை விவகாரங்களில் ஒபாமாவின் அடுத்த இருவருட கால பதவிக் காலத்தில் நெருங்கிய கவனம் செலுத்தப்படுவதற்கான அறிகுறி தென்படுவதாக உணர்கின்றனர் என பி.ஆர் இணையதளம் தகவல் வெளியிட்டுள்ளது.

புஷ் நிர்வாகம் தமது பக்கம் கவனம் செலுத்தாத காரணத்தால் இனியும் அத்தகைய உதவிகளை குடியரசுக் கட்சியிடம் எதிர்பார்க்க முடியாது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பில் அமெரிக்கா வாழ் தமிழர்களின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிடுகையில்,

இவ்வருடம் அமெரிக்க தமிழர்கள் ஜனநாயகக் கட்சிக்கே வாக்களிக்க வேண்டும். ஒபாமா நிர்வாகத்தை ஆதரிப்பதற்கு காரணம் உண்டு. இலங்கையில் தமிழர்களுக்கு உதவும் பொருட்டு அது நடவடிக்கைகள் மேற்கொள்ளும்.

ஒபாமா நிர்வாகத்தின் வெளிநாட்டுக் கொள்கை தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர்கள் சமீபத்தில் இலங்கை சென்று இலங்கை வெளிநாட்டுக் கொள்கை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேச்சு நடத்தியுள்ளனர். தமிழ் பிரதேசங்களுக்கும் அவர்கள் சென்று குடிமக்களுடனும் தமிழ் தலைவர்களுடனும் உரையாடியுள்ளனர். இலங்கையை நோக்கி அமெரிக்காவின் கண்கள் திருப்பப்பட்டுள்ளதற்கான சாட்சியமாக ஒபாமாவின் நிர்வாகம் முனைப்புடன் நடந்து கொண்டுள்ளதால் நாம் உற்சாகப்படுத்தப்பட்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

வெளிநாட்டுச் சக்திகளின் விசாரணைகளை ஏற்கமாட்டோம்: அமைச்சர் பீரிஸ்

வெளிநாட்டுச் சக்திகளினால் மேற்கொள்ளப் படும் எந்தவிதமான விசாரணைகளையும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என அரசாங்கம் ஏற்கெனவே திட்டவட்டமாக அறிவித்துள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ள வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல்.பீரிஸ், ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழுவின் பரிந்துரைகளை வரவேற்பதக்ஷிகவும் அவ்வாறு தெரிவிப்பதன் மூலம் சகல பரிந்துரைகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் கிடையாது எனவும் தெரிவித்துள்ளார். உள்ளுர் ஆங்கில ஊடகமொன்றுக்கு அவர் வழங்கியுள்ள பேட்டியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்தப் பேட்டியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

எந்தத் தரப்பினராலும் நல்ல யோசனைத் திட்டங்கள் முன்வைக்கப்பட்டால் அதனை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளத் தயக்கம் காட்டாது. ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவினால் நல்ல யோசனைகள் முன்வைக்கப்பட்டால் அதனை ஏற்றுக்கொள்வதில் எவ்வித சிக்கல்களும் கிடையாது. அதேவேளை, இலங்கைக்கு எதிரான விசாரணைகளுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்திய எமது நிலைப்பாட்டில் மாற்றமில்லை.

எவ்வாறெனினும், ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழு விசாரணை நடத்தவில்லை எனவும், தமக்கு ஆலோசனை வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்டது எனவும் பான் கீ மூன் அறிவித்துள்ளார்.

உலகின் அனைத்து நாடுகளிலும் இராஜதந்திர சேவையில் அரசியல் தலையீடு காணப்படுகின்றது., இலங்கையிலும் அவ்வாறான நிலைமைகள் காணப்படுவதனை மறுப்பதற்கில்லை.

பத்து பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சமஷ்டி ஆட்சி முறைமை குறித்து தாம் வலியுறுத்திய போதிலும் தற்போது நிலைமைகள் மாறியுள்ளது தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு விட்டனர். இதனால் பல ஆண்டுகளுக்கு முன்னர் அதே நிலைப்பாட்டை தற்போது ஒப்பு நோக்குவது பொருத்தமாகாது.

நோர்வே அரசாங்கத்துடனான உறவுகளை துண்டிக்க வேண்டிய அவசியம் கிடையாது.சமாதான முனைப்புக்களுக்கு முன்னதாகவே இலங்கைக்கும் நோர்வேக்கும் இடையில் தொடர்பு காணப்பட்டது. பொருளாதார ரீதியில் இரு நாடுகளுக்கும் இடையில் நெருங்கிய பிணைப்பு காணப்பட்டது.இலங்கையின் நிலைமைகள் குறித்து வெளிநாடுகளில் போதியளவு தெளிவுபடுத்தப்படவில்லை எதிர்காலத்தில் தூதுவராலயங்களின் ஊடாக அதிகளவு தெளிவுபடுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என் அவர் தெரிவித்தள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

நிலக்கண்ணிவெடிகளால் ஏற்படும் இழப்புகள் இலங்கையில் குறைவு விழிப்புணர்வு திட்டங்களால் நன்மை ஐ.நாஅறிக்கை

ஆசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் நிலக் கண்ணிவெடிகளால் ஏற்படும் இழப்புகள் இலங்கையில் மிகவும் குறைவாகவே உள்ளதென ஐக்கிய நாடுகள் சபையின் மனித நேய விவகார இணைப்பகம் தெரிவித்துள்ளது.

ர்வதேச மற்றும் உள்ளூர் அமைப்புகளால் முன்னெடுக்கப்படும் கண்ணிவெடி அபாய விழிப்புணர்வுத் திட்டங்களால் இழப்புகளைக் குறைக்க முடிந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

2001 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் மாதாந்தம் 172 பேர் கண்ணிவெடிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். கம்போடியாவில் 65 பேர் மாதாந்தம் நிலக் கண்ணிவெடிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இலங்கையில் கடந்த 12 மாதங்களில் சராசரியாக மூவரே கண்ணிவெடியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கண்ணிவெடிகளால் 18 சிறுவர் உட்பட 38 பேர் கடந்த 12 மாதங்களில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏனைய ஆசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் ஏற்படும் பாதிப்புகள் மிகவும் குறைவானதாகவே உள்ளதென சுட்டிக்காட்டப்படுகிறது.

கண்ணிவெடி அபாயம் தொடர்பில் இலங்கையின் வட பகுதி மக்களுக்கு சிறந்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் ஐந்து கிராமங்களில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 80 வீதமானவர்கள் கண்ணிவெடி தொடர்பான விழிப்புணர்வைக் கொண்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

யாழ். ஆஸ்பத்திரி இரத்த வங்கிக்கு படையினரே பெருமளவு பங்களிப்பு மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க

படையினர் வெறுமனே சண் டையிடுபவர்களாக மட்டும் இல்லாது நாட்டின் சமூக பொரு ளாதார செயல்பாடுகளிலும் ஈடு பட்டுள்ளார்கள். இந்த வகையில் யாழ். போதனா வைத்தியசாலைக்கு தேவையான இரத்தத்தின் பெரும் பகுதித் தேவைகளை பூர்த்தி செய்பவர்களாகவும் படையினர் இருந்து வருகின்றார்கள்.

மேற்கண்டவாறு யாழ். மாவட்டப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணம் நகரத்தில் அமைந் துள்ள பொது மக்கள் தொடர்பு அலுவலகத்தில் இடம்பெற்ற யாழ். மாவட்ட ஆதார வைத்தியசாலை களுக்கு படுக்கைகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய படைகளின் கட்டளைத் தளபதி;

அவுஸ்திரேலியாவில் இயங்கும் லக்சலிய அறக்கட்டளை நிதியம் என்னுடன் கொழும்பில் வைத்து கதைத்தபோது குறிப்பிட்டார்கள் நாங்கள் கொழும்பில் பல்வேறு செயல் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறோம். இந்த வகையில் யாழ். மாவட்டத்திற்கும் மருத்துவ துறைக்கும் ஏதாவது செய்ய வேண்டும் அது சம்பந்தமான அறிக்கைகளை தரும்படி கேட்டு இருந்தார்கள்.

நான் யாழ். மாவட்ட பிராந்திய சுகா தார சேவைகள் பணிப்பாளருடன் தொடர்பு கொண்ட போது அவர் இதன் தேவைகளை எனக்கு தந்ததன் அடிப்படையில் இன்று இந்த தேவைகளை நிறைவு செய்யக்கூடிய தாக உள்ளது.

படையினரைப் பொறுத்த வரையில் பல்வேறு சமூகத்தேவைகளையும் நிறைவு செய்வதில் தம்மாலான பங்களிப்பை வழங்கி வருகின்றார்கள். இந்த வகையில் மீள் குடியேற்றம் இடம் பெற்ற பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் கிணறுகளை துப்புரவு செய்தும் பாடசாலைகளில் இடி பாடுகளை அகற்றியும் கட்டடங்களை நிர்மாணித்தும் செயல்பட்டு வருகின்றார்கள்.

மக்களின் அடிப்படைத் தேவையான வீடுகளைக் கூட தம்மாலான வசதிக்கு ஏற்ப கஷ்டப்பட்ட குடும்பங்களுக்கு நிர்மாணித்துக் கொடுத்தும் வருகின்றார்கள். நான் 1980 ஆம் ஆண்டு படையில் இணைந்து 81 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத் திற்கு வந்தேன். அன்று இருந்த யாழ்ப்பாணத்தையும் இன்று இருக்கும் யாழ்ப்பாணத்தையும் மீள் நினைவுபடுத்தி பார்க்கின்றேன். யாழ்ப்பாணத்தின் கட்ட ளைத் தளபதியாக இன்று இருக்கும் நிலை யில் என்னாலான உதவிகளை செய்ய முயற்சிக்கின்றேன் எனவும் தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்தில் அமைந்துள்ள தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு 02 சத்திரசிகிச்சை படுக்கைகளும் 15 நோயாளர் படுக்கைகளும் வழங்கப்பட்டன. சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு 02 சத்திர சிகிச்சை படுக்கைகளும் 14 நோயாளர் படுக்கைகளும் வழங்கப்பட்டன.

ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலைக்கு இரண்டு சத்திர சிகிச்சைப் படுக்கைகள் வழங்கப்பட்டதுடன் பருத்தித்துறை வைத்தியசாலைக்கு ஒரு சத்திரசிகிச்சை படுக்கையும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் யாழ். மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கேதீஸ் வரன், யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலை பயிற்சி தாதிய அலுவலர்கள் உட்பட மற்றும் படைகளின் கட்டளைத்தளபதிகள் ஏனைய அலுவலர்களும் கலந்து கொண்டார்கள்
மேலும் இங்கே தொடர்க...

மரண தண்டனைக் கைதிகளின் எதிர்காலம் பற்றி ஆராய மூவர் குழு


மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் சிறைகளில் தடுத்து வைக் கப்பட்டுள்ள கைதிகளின் எதிர்காலம் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கவென உச்ச நீதிமன்ற முன்னாள் நீதியரசர் ஹெக்ரர் யாபா தலைமையில் மூவர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

மரண தண்டனைக் கைதிகளின் உறவினர்கள் சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டியூ குணசேகரவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து அவர் இந்தக் குழுவை நியமித்துள்ளார்.

மரண தண்டனை 2002 ஆம் ஆண்டில் ஆயுள்தண்டனையாக மாற்றப்பட்டதிலிருந்து பெருமளவு கைதிகள் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். எனவே, சிறைகளில் இடநெருக்கடியும் ஏற்பட்டிருக்கிறது.

இந்நிலையில் அவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதற்காக அமைச்சர் குணசேகர நேற்று முன்தினம் இந்தக் குழுவை நியமித்ததாக சிறைச்சாலைகள், புனர்வாழ்வு அமைச்சின் சிரேஷ்ட ஆலோகர் எம். எஸ். சதீஸ்குமார் வாரமஞ்சரிக்குத் தெரிவித்தார்.

இதேவேளை, வழக்குகள் தொடரப் படாமலும், எதுவிதமான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படாமலும், சிறைகளில் நீண்ட காலமாகத் தடுத்து வைக்கப்பட் டிருக்கும் கைதிகள் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கவென சட்டத்தரணிகள் பத்து பேர் கொண்ட குழுவொன்றை அமைச்சர் குணசேகர நியமித்துள்ளார்.

இந்தக் குழுவின் அறிக்கை கிடைக்கப் பெற்றதும் அவர்களின் எதிர்காலம் தீர்மானிக்கப்படுமென்றும் சதீஸ்குமார் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

ஜனாதிபதி மஹிந்த சீனப் பிரதமரை சந்தித்து பேச ஏற்பாடு

சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெறும் ‘எக்ஸ்போ 2010’ இல் கலந்துகொள்ள சீனா சென்றிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சீனப் பிரதமர் வென்ஜியாவோ வுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

அம்பாந்தோட்டை துறைமுகம் உட்பட சீனாவின் உதவியுடன் இலங்கையில் முன் னெடுக்கப்படும் செயற்றிட்டங்கள் பற்றி யும், இருதரப்பு உறவுகள் பற்றியும் இந்தப் பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்படு மென ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் விமல் வீரவன்ச உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் குழுவுடன் நேற்று முன்தினம் சீனாவுக்குப் பயணமாகியிருந்தார்.

நாளைய தினம் நாடு திரும்ப முன்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நேபாள ஜனாதிபதியையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

72 தென்பகுதி மாணவர்களுக்கு யாழ். பல்கலைக்கழகத்தில் வரவேற்பு முக்கிய இடங்களுக்கும் சுற்றுப்பயணம்


யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு அனுமதி பெற்ற 72 தென்பகுதி மாணவர் களுக்கு சிரேஷ்ட மாணவர்களால் வரவேற் பளிக்கப்பட்டுள்ளது. நீண்டகாலத்தின் பின்னர் பெரும் எண்ணிக்கையான தென் பகுதி மாணவர்கள் யாழ். பல்கலைக் கழகத்துக்குத் தெரிவாகியிருப்பதாக யாழ். சிறுவர் விவகார சிரேஷ்ட இணைப்பாளர் மேஜர் லால் நாணயக்கார தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர், தென்பகுதியிலுள்ள பின்தங்கிய கிராமங்களில் இருந்தும் மாணவர்கள் தெரிவாகியுள்ளனர். இந்த மாணவர்களுக்கு சிரேஷ்ட மாணவர்கள் சிறந்த வரவேற்பளித்துள்ளனர். பகிடிவதைக்கு இவர்கள் உட்படுத்தப்படவில்லை.

விஞ்ஞான பீடம், சட்டபீடம், மருத்துவ பீடம், கலைப்பீடம், வர்த்தக மற்றும் நிதிப்பீடம் என அனைத்துப் பீடங்களுக்கும் தென்பகுதியிலிருந்து மாணவர்கள் அனுமதி பெற்றுள்ளனர். சட்டபீட சிரேஷ்ட மாணவர்கள் தென்பகுதி புதிய மாணவர்களுக்கான சுற்றுப்பயணம் ஒன்றையும் ஏற்பாடு செய்துள்ளனர்.

முஸ்லிம்களையும் உள்ளடக்கிய 72 தென்பகுதி மாணவர்கள் அனைவரும் பல்கலைக்கழக விடுதிகளில் தங்கவைக்கப் பட்டுள்ளனர் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

முல்லை மேற்கில் நாளை மீள்குடியேற்றம்; எஞ்சிய பகுதிகளில் மிதிவெடி அகற்றல் துரிதம்


முல்லைத்தீவு மேற்கு மற்றும் மடவாழ சிங்கன்குளம் பிரிவுகளில் 160 குடும்பங்களைச் சேர்ந்த 600 பேர் நாளை திங்கட்கிழமை மீளக்குடியமர்த்தப்படவுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மேலும் எஞ்சியுள்ள பகுதிகளில் மிதிவெடிகள், கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளை துரிதப் படுத்துமாறும், கமத்தொழில் காணிகளை விவசாயிகளுக்கு செய்கை பண்ணுவதற்கு உட னடியாக பெற்றுக்கொடுக்குமாறும் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

இதேவேளை புதுக்குடியிருப்பு பிரதேசத்திலுள்ள புதுக்குடியிருப்பு கிழக்கு, புதுக்குடியிருப்பு மேற்கு, சிவநகர், மந்துவில், மல்லிகைத்தீவு, ஆனந்த புரம் போன்ற ஆறு கிராம சேவகர் பிரிவுகளிளும் மிதிவெடிகள் அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இப்பணிகள் பூர்த்தியடைந்ததும் இப்பகுதிகளிலும் மக்கள் உடனடியாக மீளக்குடியமர்த்தப்படவுள்ளனர்.

எனினும், இப்பகுதியிலுள்ள 6 கிராம சேவகர் பிரிவுகளும் அதிஉயர் பாதுகாப்பு வலயமாக இராணுவத்தினர் அறிவித்திருப் பதாக சில ஊடகங்கள் சுட்டிக்காட்டி யிருந்தன. இது உண்மைக்கு புறம்பானது என முல்லைத்தீவு அரச அதிபர் நா. வேதநாயகன் தெரிவித்தார்.

மீளக்குடியமர்த்தப்பட்ட பகுதி விவசாயிகள் தமக்கு விவசாய நடவடிக்கைக்காக உதவித் தொகை வழங்கப்பட வேண்டும் என பிரதியமைச்சரிடம் கேட்டுக்கொண்டனர். ஏக்கருக்கு தலா 4000 ரூபா வீதம் அவர் களுக்கு உதவித் தொகையை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முரளிதரன் உறுதியளித்தார்.

விவசாயிகளின் விளை நிலங்கள் கால்நடைகளினால் அழிக்கப்படுவதாலும், வேலி அமைக்கத் தேவையான உபகர ணங்களை பெற்றுக்கொடுக்குமாறும் விவசாயிகள் பிரதியமைச்சரிடம் வேண்டு கோள் விடுத்தனர்.

கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கும் மீளக்குடியமரும் மக்களின் வாழ்வாதார உதவிகளை பெற்றுக்கொடுக்க வும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதியமைச்சர் முரளிதரன் தெரிவித்ததுடன், மேலும் வவுனியா செட்டிக்குளம் பகுதியில் எஞ்சியுள்ள 21,000 பேரையும் விரைவாக மீளக்குடியமர்த்து வதற்கான வழிமுறைகளை கண்டறியுமாறும் பிரதியமைச்சர் முரளிதரன் அதிகாரிகளுக்கு பணித்தார்.

வவுனியா செட்டிக்குளம் நிவாரணக் கிராமம் மற்றும் கிளிநொச்சி பகுதிக்கும் பிரதியமைச்சர் முரளிதரன் விஜயம் செய்து மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
மேலும் இங்கே தொடர்க...

கொரிய மொழி எழுத்துமூலப் பரீட்சை: மோசடியில் ஈடுபட முயன்ற சிலர் மண்டபத்திலிருந்து வெளியேற்றம்


தென் கொரியாவில் வேலைவாய்ப்புக்காக நடத்தப்படும் கொரிய மொழி எழுத்து மூல பரீட்சைக்குத் தோற்றியவர்களுள் மோசடி முயற்சிகளில் ஈடுபட்டவர்கள் பரீட்சை மண்டபத்துக்கு வெளியே பொலிஸாரினால் அப்புறப்படுத்தப்பட்டனர்.

கொழும்பில் 13 இடங்களில் 493 மண்டபங்களில் கொரிய மொழி எழுத்துப் பரீட்சைகள் நேற்று நடைபெற்றன. இன்று இரண்டாவது நாளாகவும் நடைபெறுகிறது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் எட்டாவது தடவையாகவும் நடத்தும் இந்தப் பரீட்சைக்கு முதல் முறையாக 700 பொலிஸாரின் உதவி பெறப் பட்டுள்ளது. செலியூலர் தொலைபேசிகள் ஊடாக குறுந்தகவல்கள் அனுப்பி பரீட்சை எழுதுவதற்கு உதவி செய்வதாக சில குழுவினர் சிம்கார்ட்டுகளையும் சுமார் 25,000 ரூபா முதல் 40,000 ரூபா வரையில் விற்பனை செய்துள்ளனர். இதன் காரணமாக பரீட்சை மண்டபத்துக்குள் செலியூலர் தொலை பேசிகளைக் கொண்டு வரவேண்டாம் என ஏற்கனவே பணியகம் அறிவித்திருந்தது. இதனை முறியடிப் பதற்காகவே 700 பொலிஸாரின் உதவியும் பெறப்பட்டது.

சகல பரீட்சை நிலையங்களிலும் பொலிஸார் தீவிர சோதனையில் ஈடு பட்டதன் காரணமாக உள்ளாடைகளுக் குள்ளும், முதுகிலும், காலணிகளுக் குள்ளும் கையடக்கத் தொலைபேசிகள், காகிதத் துண்டுகள் மறைத்து வைத்து எடுத்து வந்தமையும் கண்டு பிடிக்கப்பட்டது. இவர்கள் பரீட்சை மண்டபத்தினுள் அனுமதிக்கப் படவில்லை. மிகவும் பாதுகாப்பாக பரீட்சை மண்டபத்தினுள் சகலரும் பரீட்சைக்குத் தோற்றும் விதத்தில் பரீட்சையை திறம்பட நடத்தியுள்ளதன் மூலம் தென் கொரியாவில் இலங்கையர்களுக்கான வேலைவாய்ப்புகளை மேலும் அதிகரித்து வழங்கும் வாய்ப்பு இருக்கிறது என தென் கொரிய மனிதவள மேம்பாட்டுப் பிரிவு பணிப்பாளர் நாயகம் ஸ்டெஜுன்க் இல் சுங்க் தெரிவித்தார்.

குளறுபடிகள், மோசடிகள் இன்றி சகலரும் பங்குபற்றக் கூடிய விதத்தில் பரீட்சையை ஒழுங்கு செய்த பணியகத்துக்கும் தென் கொரிய தூதரகத்துக்கும், பரீட்சைத் திணைக்கள அதிகாரிகளுக்கும் விசேடமாக பொலிஸாருக்கும் பரீட்சார்த்திகள் நன்றிகளை தெரிவித்தனர்.

இன்றும் கொரிய மொழி எழுத்து மூலப் பரீட்சைகள் நடைபெறுகின்றன.
மேலும் இங்கே தொடர்க...

பல்கலைக்கழகங்களில்;: சட்டத்துக்கு மாறாக செயற்பட்டால் கடும் நடவடிக்கை

பல்கலைக்கழக விடுதிகளை சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தும் வெளியாருக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க எச்சரித்துள்ளார்.

களனிப் பல்கலைக்கழகத்தின் பெண்களின் விடுதி கடந்த இரண்டு வருடங்களாக ஆண் மாணவர்களால் பலவந்தமாகப் பயன் படுத்தப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர், ஜே.வி.பி. மாணவர் களின் தலையீட்டைத் தொடர்ந்து பல் கலைக்கழக நிர்வாகமும் விடுதியை ஆண் மாணவர்களுக்கு வழங்கிவிட்டது. அவர்களை வெளியேற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் பின்னர் ஏற்பட்ட நிலைமைகளைக் கண்காணிப்பதற்கு ஜே.வி.பி. வெளி மாணவர்களை பல்கலைக்கழகத்துக்கு அனுப்பிவைத்தது.

அவ்வாறு அனுப்பப் பட்ட வெளி மாணவர்க ளில் சிலர் பல்கலைக் கழகத்தை முடித்து வெளியேறியவர்கள், சிலர் பல்கலைக்கழகத் துக்குத் தகுதி பெறாதவர்கள் இவர்களாலேயே பல்கலைக்கழகம் நெறிப்படுத்தப்பட்டது. இந்த சக்திகளை நாம் அடையாளம் கண்டு நீக்கிவிட்டோம். தற்பொழுது பல்கலைக் கழகம் 90 வீதம் சரியான முறையில் செயற்படுகிறது.

இதுவரை காலமும் சட்டவிரோதமான செயற்பாடுகளில் ஈடுபட்ட மாணவர்கள் பல்கலைக்கழகங்களிலிருந்து இடைநிறுத்தப் படுகின்ற போது, அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப் படுவதில்லை. இனிமேல் அவ்வாறில்லை சட்டத்துக்கு விரோதமாகச் செயற்படும் மாணவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

நாட்டின் உயர் கல்வித் துறையில் அரசாங்கம் பாரிய மாற்றத்தைக் கொண்டு வரும். பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் சுதந்திரமாக கல்வியைத் தொடரும் சூழலை ஏற்படுத்துவோம்.

தேவையற்ற விடயங்களில் ஈடுபட்டு மாணவர்கள் தங்கள் எதிர்காலத்தை வீணடித்துவிடக்கூடாதென அமைச்சர் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...