25 ஜூலை, 2010

இலங்கை சென்ற நடிகை அசின் மன்னிப்பு கேட்க வேண்டும்: சத்யராஜ்-ராதாரவி ஆவேச பேச்சு

.


இலங்கை சென்ற நடிகை அசின் மன்னிப்பு கேட்க வேண்டும்: சத்யராஜ்-ராதாரவி ஆவேச பேச்சு

நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் சங்கத்தின் பொது செயலாளர் ராதாரவியும் செயற்குழு உறுப்பினர் சத்யராஜும் இலங்கை சென்ற நடிகை அசினை கடுமையாக கண்டித்து பேசினர்.

ராதாரவி பேசியதாவது:- இலங்கைக்கு நடிகர்- நடிகைகள் செல்லக்கூடாது என்று திரைப்பட சங்கங்கள் முடிவு செய்து அறிவித்துள்ளன. அதை மீறி அசின் இலங்கை சென்றிருக்கிறார். அவர் கேரளாவை சேர்ந்தவர். எல்லோருக்கும் இன உணர்வு வேண்டும். அசின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டது. ஆனால் அதை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று சங்கத்தின் தலைவர் சரத்குமார் கேட்டுக் கொண்டார்.
அதற்காக அசின் இதுவரை சரத்குமாரிடம் தொடர்பு கொண்டு ஒரு நன்றி கூட தெரிவிக்கவில்லை.

இலங்கை சென்றதற்காக அசின் நடிகர் சங்கத்தில் நேரில் ஆஜராகி வருத்தம் தெரிவித்து கடிதம் கொடுக்க வேண்டும். இனிமேல் இலங்கைக்கு நடிகர்-நடிகைகள் யார் செல்வதாக இருந்தாலும் நடிகர் சங்கத்தில் சொல்லி விட்டுத்தான் செல்ல வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

சத்யராஜ் பேசிய தாவது:- அசின் இலங்கை சென்றது மட்டுமின்றி ராஜபக்சே மனைவியுடன் சேர்ந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார். அதை பார்த்த போது ரத்தம் கொதித்தது. ரத்தக் கண்ணீர் வடிந்தது. இலங்கை என்பது ரத்த பூமி. அங்கு நடிகர்-நடிகைகள் செல்லக் கூடாது. நடிகர் கருணாஸ் இலங்கையில் முருகன் கோவிலுக்கு செல்ல முடிவு செய்திருப்பதாக கூறியுள்ளார். கருணாசை நான் கேட்டுக் கொள்கிறேன். தயவு செய்து நீங்கள் இலங்கை செல்ல வேண்டாம். அங்கு தனித்தமிழ் ஈழம் மலர்ந்த பிறகு நீங்கள் போகலாம். நானும் வருகிறேன். நான் ஒரு நாத்திகனாக இருந்தாலும் தமிழ் ஈழநாடு உருவான பிறகு அங்குள்ள கோவிலுக்கு செல்ல தயாராக இருக்கிறேன்.

இலங்கை சென்று தான் சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்க வேண்டாம் அப்படி ஒரு நிலை வந்தால் உயிரையே விடலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் இங்கே தொடர்க...

நரபலி கொடுக்கப்பட்ட குழந்தையின் தலை- உடல் தோண்டி எடுப்பு


.மதுரை அருகே உள்ள எஸ்.ஆலங்குளம் பகுதியை சேர்ந்தவர் கவுஸ் பாட்சா. இவரது மனைவி சிரின் பாத்திமா. இவர்களது மகன் காதர் யூசுப் (வயது 1 1/2) சில தினங்களுக்கு முன்பு கவுஸ்பாட்சா விபத்தில் இறந்து விட்டார்.

கணவனை இழந்த சிரின் பாத்திமா மதுரை கோரிப் பாளையத்தில் உள்ள தர்காவுக்கு குழந்தையுடன் வந்து தங்கி இருந்தார்.

அந்த தர்காவில் தூத்துக்குடி மாவட்டம் காயல் பட்டிணத்தை சேர்ந்த அப்துல் கபூர் என்ற மந்திர வாதிதனது மனைவி ரமலா பீவியுடன் தங்கி இருந்தார். அப்போது சிரின் பாத்திமாவுடன் பழக்கம் ஏற்பட்டு மந்திரவாதி அவருக்கு ஆறுதல் கூறுவது போல் நடித்தார்.

குழந்தை காதர் யூசுப்பை கொன்று ரத்தத்தை குடித்து விட்டால் தனது மந்திர சக்தி அதிகரிக்கும் என்று நம்பினார். காதர் யூசுப்பை கடத்தி நரபலி கொடுக்க முடிவு செய்தார்.

தர்காவில் அனை வரும் தூங்கி கொண் டிருக்கும்போது அப்துல் கபூரும், ரமலா பீவியும் குழந்தை காதர் யூசுப்பை கடத்தி சென்று விட்டனர். மறுநாள் காலையில் சிரின் பாத்திமா தனது குழந்தை காணாமல் போனது கண்டு திடுக்கிட்டார்.

இது குறித்து மதுரை தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். அப்துல் கபூர், அவரது மனைவி ரமலா பீவி ஆகியோர் மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டு இருந்தார்.

காயல்பட்டிணம் சென்ற போலீசார் அப்துல் கபூரை யும், ரமலாபீவியையும் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் குழந் தையை கொன்று நரபலி கொடுத் ததாக தெரிவித்தனர்.

குழந்தையை கொன்று ரத்தத்தை குடித்தால் மந்திர சக்தி அதிகரிக்கும் என்ற மூடநம்பிக்கையில் இந்த கொலையை செய்து விட்டதாக அப்துல்கபூர் போலீசாரிடம் தெரிவித்தார்.

குழந்தையை கடத்தி ஏரல் பகுதிக்கு சென்ற அவர்கள் குழந் தையை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்து பெரிய தூக்கு வாளியில் அடைத்து உள்ளனர்.

குழந்தையின் உடலில் இருந்து சேகரித்த ரத்தத் தையும், தலைப் பகுதியையும் குலசேகரன்பட்டிணம் செல்லும் வழியில் உள்ள கல்லாமொழி கடற்கரைக்கு கொண்டு சென்றனர். அப்துல்கபூர் அந்த குழந்தையின் ரத்தத்தை குடித்து விட்டு தலையை கல்லா மொழி கடற்கரையில் புதைத்துள்ளார்.

உடல் பாகங்களை ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள காட்டுப்பள்ளியில் கொண்டு வந்து புதைத்தார். போலீசார் குழந்தை யின் உடல் புதைக்கப்பட்ட இடத்திற்கு அப்துல் கபூரையும், ரமலா பீவியையும் அழைத்து சென்றனர். அங்கு குழந்தையின் உடல் புதைக்கப்பட்ட இடத்தை அவர் அடையாளம் காட்டினார். போலீசார் தலையை தோண்டி எடுக்கிறார்கள்.

அதன் பிறகு ஏர்வாடிக்கு வந்து உடலை தோண்டி எடுக்கிறார்கள்.

அப்துல்கபூருக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார். அவரது நட வடிக்கைகள் பிடிக்காமல் மனைவியும் குழந்தைகளும் பிரிந்து சென்று விட்டனர்.

கணவனை பிரிந்து வாழ்ந்த ரமலா பீவியுடன் அப்துல்கபூருக்கு பழக்கம் ஏற்பட்டு அவரை 2-வது மனைவியாக்கி கொண்டார். இவர்கள் தர்காவுக்கு சென்று மொட்டை போட்டு மாந்திரீக வேலைகளை செய்து வந்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

108 வயது பாட்டிக்குக் குழந்தை ஆசை!

undefined
மலேசியாவில் 23 முறை திருமணம் செய்துள்ள 108 வயது பாட்டிக்கு தற்போது 38 வயதில் இளம் கணவர் இருக்கிறார்.

இவர்கள் இருவரும் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிட்டுள்ளனர்.

வயதான ஆண்கள், இளம்பெண்களைத் திருமணம் செய்து கொள்வதைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம்.

ஆனால் மலேசியாவில் 103 வயதான பாட்டி 33 வயது இளைஞர் ஒருவரை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடித்துப் புரட்சியை ஏற்படுத்தியுள்ளார். அவரது பெயர் வூக் குந்தர். இது இவருக்கு 23ஆவது திருமணம். கணவர் முகமது நூர் சே மூசா.

இந்த விநோத தம்பதிகளுக்கு குழந்தை இல்லை. இந்த விரக்தியில் நூர், போதை மருந்துக்கு அடிமையானார்.

மறுவாழ்வு நிலையத்தில் சிகிச்சை பெற்று தற்போது குணமடைந்து திரும்பியுள்ளார். குழந்தை ஏக்கத்தில் உள்ள தம்பதியினர், ஏதாவது ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்க திட்டமிட்டுள்ளனர்.

வூக் குந்தர் பணம் படைத்தவரல்லர். வேலைக்குச் சென்று சம்பாதித்து குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய நிலைதான் முகமது நூருக்கு உள்ளது.

இந்த நிலையிலும் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க நினைக்கிறாரே? ஆனால் பாவம் 108 வயதான அவரது மனைவியால் ஒரு பிள்ளையை வளர்த்து ஆளாக்க முடியுமா?
மேலும் இங்கே தொடர்க...

. நாளை 2-வது டெஸ்ட்: இந்தியா பதிலடி கொடுக்குமா?

டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 டெஸ்ட் போட்டித் தொடரில் காலேயில் நடந்த முதல் டெஸ்டில் இலங்கை 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்தியா-இலங்கை அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி கொழும்பில் நாளை (26-ந்தேதி) தொடங்குகிறது.

முதல் டெஸ்டில் மோசமாக தோற்றதால் 2-வது டெஸ்டில் பதிலடி கொடுக்க வேண்டிய நிலைமை இந்தியாவுக்கு உள்ளது. அதோடு தொடரை சமன் செய்ய வெற்றி பெற வேண்டிய கட்டாயமும் உள்ளது.

உலகின் தலைசிறந்த பேட்டிங் வரிசையை கொண்ட இந்திய அணி “பாலோஆன்” ஆகி தோற்றது மிகவும் மோசமானது.

ஷேவாக் ஒருவர் மட்டுமே சிறப்பாக ஆடி சதம் அடித்தார். 2-வது இன்னிங்சில் தெண்டுல்கர், லட்சுமண் போராடினார்கள். டிராவிட் நிலைத்து நின்று ஆட வேண்டிய நெருக்கடியில் உள்ளார்.

ஜாகீர்கான், ஸ்ரீசந்த் இல்லாததால் இந்திய அணி பந்து வீச்சில் பலவீனமாக காணப்படுகிறது. இதேபோல முன்னணி சுழற்பந்து வீரரான ஹர்பஜன்சிங் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

பந்துவீச்சை சரிகட்ட பேட்ஸ்மேன் சிறப்பாக விளையாட வேண்டிய நெருக்கடி உள்ளது.

இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த முரளீதரன் 800 விக்கெட் கைப்பற்றியதோடு ஓய்வு பெற்றார். இதேபோல் மற்றொரு முன்னணி வேகப்பந்து வீரரான மலிங்கா காயம் காரணமாக நாளைய டெஸ்டில் ஆடவில்லை. இதை இந்திய பேட்ஸ்மேன்கள் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

அதே நேரத்தில் அஜந்தா மெண்டீஸ் சவாலாக இருப்பார். பேட்ஸ்மேன்களில் சங்ககரா, பரணவிதனா, தில்சான், ஜெயவர்த்தனே ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். இந்த டெஸ்டிலும் வெற்றி பெற இலங்கை முயற்சிக்கும்.

இந்திய நேரப்படி காலை 10 மணிக்கு தொடங்கும் இந்தப்போட்டி டென்ஸ் ஸ்போர்ட்ஸ் டெலிவிசனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இந்தியா: டோனி (கேப்டன்), ஷேவாக், காம்பீர், டிராவிட், தெண்டுல்கர், வி.வி.எஸ்.லட்சுமண், யுவராஜ்சிங், ஹர்பஜன்சிங், இஷாந்த்சர்மா, அபிமன்யூ மிதுன், ஒஜா, சுரேஷ் ரெய்னா, அமித் மிஸ்ரா, முரளிவிஜய், முனாப்பட்டேல்.

இலங்கை: சங்ககரா (கேப்டன்) தில்சான், பரண விதனா, ஜெயவர்த்தனே, மேத்யூஸ், சமரவீரா, பிரசன்னா ஜெயவர்த்தனே, மெண்டீஸ், பெர்னாண்டோ, வெலுகேந்திரா, ஹெராத், கண்டாம்பி, தமிகா பிரசாத், ரந்தீவ் திரிபானே நுவன் பிரதீப்.

34-வது முறையாக நாளை மோதல்
இரு அணிகளும் நாளை மோதுவது 34-வது டெஸ்ட் போட்டியாகும். இதுவரை நடந்த 33 டெஸ்டில் இந்தியா 12 போட்டியிலும், இலங்கை 6 போட்டியிலும் வெற்றி பெற்றன. 14 டெஸ்ட் “டிரா” ஆனது.
மேலும் இங்கே தொடர்க...