5 செப்டம்பர், 2010

நியூசிலாந்தில் நடுவானில் விமானம் வெடித்து; 9 பேர் பலி

நியூசிலாந்தில் சவுத் ஐலேண்டு பகுதியின் பாக்ஸ் கிளேசிளர் என்ற இடம் உள்ளது. இது ஒரு சுற்றுலா தளமாகும். இங்குள்ள பனிமலைகள், மற்றும் பனிக்கட்டி ஆறுகளை குட்டி விமானத்தில் பறந்தபடி பார்த்து மகிழ இங்கு சுற்றுலா பயணிகள் குவிகின்றனர்.

இந்நிலையில் நேற்று ஒரு தனியார் நிறுவனத்துக்கு சொந்த விமானம் பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டு சென்றது. இதில் இங்கிலாந்து. அயர்லாந்து, ஆஸ்திரேலியா மற்றும் ஜெர்மனி நாட்டை சேர்ந்த 4 பயணிகளும், நியூசிலாந்தை சேர்ந்த 4 பயணிகளும் இருந்தனர்.

அந்த விமானத்தில் விமானியுடன் மொத்தம் 9 பேர் பயணம் செய்தனர். பாக்ஸ்கிளேசியரில் இருந்து விண்ணில் பாய்ந்த இந்த விமானம் மேலே சென்ற சிறிது நேரத்தில் திடீரென வெடித்து சிதறியது.

இதனால் வானத்தில் கடும் புகையுடன் தீப்பந்து போன்று எரிந்து தரையில் விழுந்து நொறுங்கியது.

இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த விமானி உள்பட 9 பேரும் உடல் கருகி பலியானார்கள். அவர்கள் யார் என பெயர் விவரங்கள் வெளியிடப்பட வில்லை. இந்த விபத்துக்கான காரணம் தெரிய வில்லை.

விமானம் புறப்பட்டு சென்ற போது வானிலை நன்றாகவே இருந்தது. பொதுவாக சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க விமானத்தை நடுவானில் குட்டி கரணம் அடிக்க வைத்து விமானிகள் சாகசம் புரிவது வழக்கம்.

இவ்வாறு செய்த போது என்ஜினில் கோளாறு ஏற்பட்டு தீப்பிடித்து இருக்கலாம் என கருதப்படுகிறது. ஆனால் இதை அந்த விமான நிறுவனம் மறுத்துள்ளது. விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த விமான விபத்து பாக்ஸ்கிளேசியர் பகுதி மக்களை துக்கத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தி உள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

விடுதலை கோரி மகஸின் தமிழ் கைதிகள் ஜனாதிபதிக்கு உருக்கமான கடிதம்
மகஸின் சிறைச்சாலையில் 5 தொடக்கம் 17 வருடங்களாகச் சந்தேகத்தின் பெயரில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளாகிய நாங்கள் எங்கள் விடுதலை தொடர்பான கோரிக்கைகள் முன்வைத்தும் இதுவரையில் அதுபற்றிய நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. ""ஐயா இத்தனை வருட காலமாக துன்பங்களையும் துயரங்களையும் மனதில் அடக்கிக் கொண்டு மன உளைச்சலுடன் வாழ்ந்து வரும் எங்களை அனைவரையும் சந்தித்து கலந்துரையாடி சென்றனர்.

மனதில் ஓரளவிற்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் ஜனாதிபதி நீங்கள் எங்களை சந்திக்கவில்லை என்ற கவலை தமிழ் அரசியல் கைதிகளாகிய எங்கள் அனைவர் மனதிலும் உண்டு. ஆனால் எதிர்வரும் சிறைச்சாலைகள் தினத்தில் சிறைச்சாலைகளுக்குச் சென்று கைதிகளை பார்வையிடப் போவதாக ஊடகங்களில் தகவல் தெரிவித்திருப்பதானது கைதிகளாகிய எங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியை தருகிறது.

கொழும்பு மகஸின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளான எங்களை நீங்கள் ஒரு முறையாவது வந்து பார்த்து எங்கள் கஷ்ட நிலைவரங்களை கேட்டறிந்தால் அனைவரது குடும்ப நிலைவரங்கள் மட்டுமின்றி எங்கள் துயரங்களையும் மன வேதனைகளையும் அறிந்து கொள்ள முடியும். சந்தேகத்தின் பெயரில் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள நாங்கள் கண்ணீருடன் பல கடிதங்களை ஊடகங்கள் மூலம் தெரிவித்திருந்தும் எவரும் எமக்கு உதவ முன்வரவில்லை. இந்நாட்டின் பிரஜைகளாகிய நாங்கள் அனைவரும் வாழ்நாளின் அரைவாசி காலத்தினை சிறைக் கூடத்திலேயே கழித்து விட்டோம். இனியாவது வெளியுலகத்தில் வாழ வழியேற்படுத்தி தாருங்கள்.

ஐயா, எங்களை விடுதலை செய்யுமாறு கெஞ்சி கேட்கிறோம். நாங்கள் தவறு செய்திருந்தாலும் மன்னிப்பு கிடையாதா? நாங்கள் வாழ்வதற்கு அருகதையற்றவர்களா? உங்கள் ஒருவரால் தான் எங்களுக்கு விடிவைத் தேடித் தர முடியும். அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு கம்பிக் கூண்டுக்குள் இத்தனை வருடங்களாக இருக்கும் எங்களை பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யுங்கள். ஐயா, இந்நாட்டின் பிரஜைகளாகிய நாங்கள் உங்கள் பிள்ளைகள். எங்களுக்கு புது வாழ்வளிப்பீர்கள் என நம்பிக்கையுடன் எதிர்பார்த்திருக்கிறோம் என்றுள்ளது.

நன்றி
இப்படிக்கு

தமிழ் அரசியல் கைதிகள்
எ. ஏ. ஒ. பிரிவு
மேலும் இங்கே தொடர்க...

நாளை ஐ.தே.கவின் 65 ஆண்டு பூர்த்தி


ஐக்கிய தேசியக் கட்சியின் 65ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு விசேட மதவழிபாட்டு நிகழ்வுகள் நாளை புறக்கோட்டை சிறிகொத்தையில் உள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, பதில் தலைவர் கரு ஜயசூரிய, கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க மற்றும் கட்சி உறுப்பினர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

இந்திய இராணுவத் தளபதி இன்று இலங்கை விஜயம்

இந்திய இராணுவத் தளபதி வி.கே சிங் உட்பட ஐந்து பேர் அடங்கிய குழுவினர் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று இலங்கை வரவுள்ளனர்.

இவரது விஜயத்தின் போது ஜனாதிபதி பிரதமர், பாதுகாப்புச் செயலாளர், வெளிவிவகார அமைச்சர் உட்பட பல முக்கிய பிரமுகர்களை சந்தித்துப் கலந்துரையாடவுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

பாராளுமன்ற கவுன்சிலுக்கு ஐ.தே.க பிரதிநிதித்துவப்படுத்தாது - திஸ்ஸ அத்தநாயக்க

உத்தேச அரசியல் யாப்பு சீர்திருத்தத்திற்கு அரச சேவையில் உள்ள உயர் பதவிகளுக்கு ஆட்களை சேர்ப்பதற்கு அதிகாரம் கொண்ட பாராளுமன்ற கவுன்சிலுக்கு ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநித்துவப் படுத்தக்கூடிய ஒருவரை நியமிப்பது குறித்து இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என ஐ.தே.கவின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், .

‘ அரசிற்கு சட்டவிரோதமானதும் மற்றும் பலவந்தமான அரசியல்யாப்பு சீர்திருத்தத்திற்கும் பலத்தை ஏற்படுத்தும் முகமாக உள்ள பாராளுமன்ற கவுன்சிலுக்கு ஐக்கிய தேசியகட்சியை பிரதிநிதித்துவப்படுத்தக் கூடிய ஒருவரை கட்சியால் நியமிக்கப்போவதில்லை’ எனத் தெரிவித்தார்..

பாராளுமன்ற கவுன்சிலுக்கு ஐ.தே.காவை பிரதிநிதித்துவப் படுத்தக் கூடிய 2 பேர், ஜனாதிபதியால் நியமிக்கப்படுபவர் 2 பேர் மற்றும் சபாநாயகரினால் ஒருவரும் நியமிக்கப்படுவர்.
மேலும் இங்கே தொடர்க...