27 நவம்பர், 2010

கொரிய தீபகற்பத்தில் போர் மேகம்: வடகொரியா மீண்டும் எச்சரிக்கை



தென் கொரியாவிற்கெதிராக எந் நேரத்திலும் போர் தொடுக்க தாம் தயாராக இருப்பதாக வடகொரியா எச்சரித்துள்ளது.

மேலும் அமெரிக்கப் படைகளுடனான தென்கொரியாவின் போர் ஒத்திகைகள் நிறுத்தப்பட வேண்டுமெனவும் அது தெரிவித்துள்ளது.

75 போ‌ர் ‌விமான‌ங்க‌ள், 6000 படைவீரர்களுடன் ‌வீர‌ர்களுட‌ன் அமெ‌ரி‌க்கா‌வி‌ன் யு.எ‌‌ஸ்.எ‌ஸ் வொ‌‌ஷி‌ங்ட‌ன் எ‌ன்ற போ‌ர் க‌ப்ப‌ல் கொ‌ரிய ‌தீபக‌ற்ப‌த்‌திற்கு வருகைதந்துள்ளது.

அமெ‌‌ரி‌க்காவு‌ம், தெ‌ன் கொ‌ரியாவு‌ம் இணை‌ந்து அங்கு போ‌ர் ஒ‌த்‌திகை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில் நேற்றும் வட கொரியா 'யொங்பயொங்' தீவுகளின் மீது 2 ஆவது தடவையாகவும் ஆட்லறித்தாக்குதல்களை நடத்தியிருந்தது.

இதனைத்தொடர்ந்து வட கொ‌ரியா ‌மீது போ‌ர் தொடு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று தெ‌ன் கொ‌ரியாவில் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.

தெ‌ன் கொ‌ரியா‌‌வி‌ன் 'யொங்பயொங்' ‌தீ‌வி‌ல் வட கொ‌ரியா அண்மையில் பீரங்கித்தாக்குதல்களை நடத்தியது இ‌தி‌ல் 4 பே‌ர் உ‌யி‌ரிழ‌ந்தன‌ர்.

இத‌ற்கு ப‌‌திலடியாக தெ‌ன் கொ‌‌ரியாவு‌ம், வட கொ‌ரியா ‌மீது தா‌க்குத‌ல் நட‌த்‌தியது.

மேலும் அவ்விடத்தில் வசித்த சுமார் 1200 பேர் அங்கிருந்து வெளியேறினர்.

அங்கு தொடரும் இப்பதற்ற சூழ்நிலையால் எந்நேரமும் போர் மூளும் அபாயம் நிலவுவதாக கொரிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன

.
மேலும் இங்கே தொடர்க...

இளைஞர் பாராளுமன்ற தேர்தல் : மட்டு, மாவட்டத்தில் வாக்களிப்பு ஆரம்பம்

நாடளாவிய ரீதியில் நடைபெறுகின்ற இளைஞர் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது. 331 பேரை தெரிவு செய்ய ஆயிரத்து 638 பேர் போட்டியிடுகின்றனர். ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாலை 4 மணிக்கு வாக்களிப்பு நிறைவடையுமென கிழக்கு மாகாண புதிய இளைஞர் சேவைகள் மன்ற பணிப்பாளர் கே.தவராஜா தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலகங்களிலும் 14 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம்மாவட்டத்தில் சுமார் 20 ஆயிரம் பேர் வாக்களிக்கத்தகுதி பெற்றுள்ளனர்.

வாக்களிப்பதற்கான நேரம் முடிவடைந்தவுடன் குறித்த வாக்களிப்பு நிலையத்திலேயே வாக்குகள் எண்ணப்பட்டு இன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கடவுள்ளன.

நாடளாவிய ரீதியில் இத்தேர்தல் மூலமாக 331 பேர் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்படவுள்ளனர். தெரிவு செய்யப்படும் உறுப்பினர்கள் எதிர்வரும் ஜனவரிமாதம் 12ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

'ஈழமா? படிப்பா?" யாழ், பல்கலைக்கழகத்தில் மாணவர்களை அச்சுறுத்தும் சுவரொட்டிகள்

மாணவர்களை அச்சுறுத்தும் விதமாக 'ஈழமா? படிப்பா?" என்று வாசகமிட்ட சுவரொட்டிகள் யாழ்ப்பாண பல்கலைக்கழத்தில் ஒட்டப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்திலும் விடுதிகளிலும் மாணவர்களை அச்சுறுத்தும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

அச்சுவரொட்டிகளில் படிப்பா? ஈழமா? என்ற கேள்விக்குறியில் வீடுகள் எரிந்த நிலையிலான படங்களும், அழிவுகளின் படங்களும் காணப்பட்டன.

இறுதியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் என போடப்பட்டிருந்தது. இருந்தும் இது யாழ்ப்பாண மாணவர் ஒன்றியத்தினால் ஒட்டப்படவில்லையெனவும் இனந்தெரியாத யாரோ ஒட்டியுள்ளனர் என்றும் மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

கிளிவெட்டி நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள மக்கள் மழையால் பாதிப்பு

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கிழக்கில் இருந்து இடம்பெயர்ந்து கிளிவெட்டி உள்ளிட்ட நலன்புரி முகாம்களில் வசித்து வரும் இடம்பெயர்ந்த மக்கள் மழை காரணமாக பல்வேறு பிரச்சினைகளுக்குள்ளாகி வருகின்றனர்.

மழை காரணமாக கிளிவெட்டி, பட்டித்திடல், மணற்சேனை, கட்டைபறிச்சான் ஆகிய இடங்களில் உள்ள நலன்புரி நிலைய மக்களே இவ்வாறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

கிளிவெட்டியில் 570 குடும்பங்களும், மணற்சேனையில் 90 குடும்பங்களும், பட்டித்திடலில் 230 குடும்பங்களும், கட்டைபறிச்சானில் 372 குடும்பங்கள் தங்கியுள்ளன.

இடம்பெயர்ந்து மீள்குடியேற்றப்பட்ட மக்கள் ஒரளவு தொழில் மற்றும் முயற்சிகளில் ஈடுபடும் நிலையில் பாதிக்கப்பட்ட இம்மக்கள் தொடர்ந்து நலன் புரிநிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலக உணவுத்திட்டம் தவிர வேறு எந்த ஆதாரமும் இன்றி வாழும் இம்மக்களை மீளக் குடியமர்த்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர்கள் தெரிவித்துள்ள போதும் இதுவரை நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என இங்குள்ள மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மூதூர் கிழக்கில் உள்ள சம்பூரில் அனல் மின்னிலயம் அமைக்கும் இடம் தவிர்ந்த சம்பூர் கூனித்தீவு கிராமங்களின் பகுதிகளிலாவது மீள்குடியேற அனுமதியுங்கள் என்று மக்கள் கூறிவருகின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கையில் முதலீடு செய்துள்ள வெளிநாட்டு வர்த்தகர்களுக்கு புதிய விசாமுறை அறிமுகம்

இலங்கையில் முதலீடுகளை செய்துள்ள வெளிநாட்டு வர்த்தகர்களுக்கு விரும்பியபோது வந்து செல்வதற்கான விசா முறை அறிமுகம் செய்யப்படவுள்ளது என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நேற்று நடைபெற்ற வைபவமொன்றில் உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த விசாக்கள் வழங்கப்படவுள்ளது. இலங்கையில் முதலீடு செய்துள்ள வெளிநாட்டு வர்த்தகர்கள் இதுவரைகாலமாக சுற்றுலா விசாக்களிலேயே இலங்கைக்கு வருகின்றனர்.

எனவே விரும்பியபோது தடைகள் இன்றி இலங்கைக்கு வந்து செல்வதற்காக 'மல்டிபல்' விசா முறையொன்றை அரசாங்கம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

கொழும்பு நகரில் 83 ஆயிரத்து 237 சட்டவிரோத வீடுகள்: விமல் வீரவன்ச

கொழும்பு நகரில் 2 ஆயிரத்து 165 ஏக்கர் நிலப்பரப்பில் 83 ஆயிரத்து 237 சட்டவிரோத வீடுகள் இருப்பதாக நிர்மாணத்துறை, பொறியியல் மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சர் விமல் வீரவன்ச நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

'' கொழும்பு மாவட்டத்தில் 4 பேர்ச்சஸ் நிலத்தில் குறைந்த வசதிகளைக் கொண்ட ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 554 வீடுகள் காணப்படுகின்றன. இந்த குறைந்த வசதிகளைக் கொண்ட வீடுகளில் வசிப்பவர்களுக்காகவே 70 ஆயிரம் வீடுகளை அமைக்க வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது " எனத் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

அதிகாரத்தை பரவலாக்காது அபிவிருத்தியினால் ஏற்படும் சமாதானம் நிலைத்திருக்காது : செல்வராசா எம்.பி.

அபிவிருத்திக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பு இல்லை. யுத்தம் நிறைவடைந்துள்ள நாட்டில் அதிகாரத்தைப் பரவலாக்க வேண்டும். அதிகாரப் பரவலாக்கல் இல்லாத இடத்தில் அபிவிருத்தியினால் ஏற்படும் சமாதானம் நிலைத்திருக்காது என்று கூட்டமைப்பின் மட்டக்களப்பு எம்.பியான பொன். செல்வராசா தெரிவித்தார்.

அதிகாரம் கொண்ட ஜனாதிபதியினால் அதிகாரத்தை பரவலாக்க முடியும். அவருக்கு நாட்டில் எதிரி இல்லை. இருந்த ஒரேயொரு எதிரியும் சிறைவாசம் அனுபவிக்கின்றார் என்றும் அவர் சொன்னார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற வரவு செலவுத்திட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற நல்லிணக்க விவகாரம் எதுவுமே 2011 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடவில்லை. தமிழ் மக்களுக்கு ஏதாவது ஜனாதிபதி கூறுவார் என எதிர்பார்த்தனர். இறுதியில் ஏமாற்றமே கிடைத்தது.

அபிவிருத்திக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என ஜனாதிபதி கூறியுள்ளார். எனினும் யுத்தம் நிறைவடைந்த நாட்டில் அபிவிருத்திக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட மக்களின் நலன்மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என ஜேர்மனிய பிரதிநிதி கூறியுள்ளார்.

வியட்நாமில் யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் அபிவிருத்திக்கு முன்னுரிமை கொடுக்கவில்லை. மக்களின் நலனுக்கே முன்னுரிமை கொடுக்கப்பட்டது. அதனால்தான் மக்கள் அந்த அரசாங்கத்தின் மீது நம்பிக்கை கொண்டனர்.

அபிவிருத்திக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தடையில்லை. ஆனால் அதிகார பரவலாக்கல் முக்கியமானது. அவை இங்கு முன்னெடுக்கப்பட வேண்டும். அதிகார பரவலாக்கல் இல்லாத இடத்தில் அபிவிருத்தியினால் ஏற்படும் சமாதானம் நிலைத்திருக்காது. அதிகாரத்தை பரவலாக்குவதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை என்று அரசாங்கம் அன்று கூறியது. மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஜனாதிபதிக்கு இருக்கின்றது. அவருக்கு அதிகாரமும் இருக்கின்றது. இவ்வாறான நிலையில் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

படையினரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 3000 ரூபாவும், படையினரின் மூன்றாவது குடும்பத்திற்கு ஒரு இலட்சம் ரூபாவும் வழங்குவதற்கு முன் மொழியப்பட்டுள்ளது. இதனை நாங்கள் எதிர்க்கவில்லை.

போரினால் அவையவங்களை இழந்த அப்பாவி தமிழ் மக்கள், விடுவிக்கப்பட்ட புலிகளின் பழைய வீரர்கள் வாழ்க்கையை செவ்வனே நடத்த முடியாது தவிக்கின்றனர்.

இராணுவ குடும்பத்தினருக்கு வழங்குகின்ற சலுகைகளை பாதிக்கப்பட்ட தமிழ் குடும்பத்தினருக்கும் வழங்க வேண்டும். அது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என வினயமாக கேட்டுக் கொள்கின்றேன்.

வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கப்படும் என அரசாங்கம் முன்மொழிந்துள்ளது. வேலை வழங்கக் கோரி ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகின்றன. மட்டக்களப்பில் நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் நானும் மூன்று எம்.பிக்களும் பங்கேற்றோம். அதனால் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டோம். நல்லதை நல்லது என்றும் தவறை தவறு என்றுமே கூறுவோம். சகலதையும் விமர்சிக்க மாட்டோம்.

ஜனாதிபதிக்கு இன்று எதிரி என்று யாருமே இல்லை. இருந்த ஒரு எதிரியும் சிறைவாசம் அனுபவித்து வருகின்றார். இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தையும் தருணத்தையும் அரசாங்கமும் ஜனாதிபதியும் தவற விட்டு விடக் கூடாது என வலியுறுத்தி கூறுகின்றோம்.

எங்களுடைய இலட்சக்கணக்கான மக்கள் வாழ்க்கையை தொலைத்து விட்டனர். அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த அதிகாரத்தை பரவலாக்க வேண்டும்.

கிழக்கு மாகாணம் 2007 ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டது. அதற்கு பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் 150 பேரை காணவில்லை. இதற்கு யார் பொறுப்பு கூறப் போகின்றார்கள். இராணுவத்தினரா? புலிகளா? எனினும் மக்கள் இன்னும் கண்ணீரும் கம்பலையுமக்ஷிக இருக்கின்றனர்.

இதனால் இளம் மனைவியர் மற்றும் பெற்றோர்கள் தவித்து கொண்டிருக்கின்றனர். அதற்கெதிராக வடக்கு கிழக்கில் மட்டுமன்றி கொழும்பிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
மேலும் இங்கே தொடர்க...

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வந்த மக்கள் வைப்பிலிட்ட தொகையினை பட்டியலிட்ட ஜனாதிபதி



யுத்தத்தின் இறுதிக் காலகட்டத்தில் வன்னியிலிருந்து வவுனியாவுக்கு வந்த தமிழ் மக்கள் முகாம்களில் அமைக்கப்பட்ட வங்கிகளில் வைப்புச் செய்த பணம் மற்றும் நகைகளின் விபரங்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று தமிழ்க் கட்சிகளின் அரங்கத்துடனான சந்திப்பின்போது எடுத்துக்கூறியுள்ளார்.

இராமநாதன் முகாமில் அமைக்கப்பட்டிருந்த வங்கியில் 400 மில்லியன் ரூபா வைப்பிலிடப்பட்டதாகவும் மனிக்பாம் முகாமில் 973 மில்லியன் ரூபா வைப்பிலிடப்பட்டதாகவும் கிளிநொச்சியில் 1.43 பில்லியன் ரூபா வைப்பிலிடப்பட்டதாகவும் முகாம்களில் அமைக்கப்பட்டிருந்த இலங்கை வங்கியில் 500 மில்லியன் ரூபா வைப்பிலிடப்பட்டதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

இதேபோல் மாங்குளத்தில் 650 பேரின் கணக்குகளில் 278 மில்லியன் ரூபா வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். இதனைவிட இராணுவம் வன்னியில் கைப்பற்றிய தங்கம் வங்கிகளில் 16 பெட்டகங்களில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அதன் பெறுமதி 400 மில்லியன் ரூபா எனவும் இராணுவத்தினர் 800 மில்லியன் ரூபா பணத்தினை கைப்பற்றி வங்கியில் வைப்பிலிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி இந்தச் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இடம்பெயர்ந்த மக்கள் மீளக் குடியேறிய நிலையில் அவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கவேண்டும் என தமிழ்க்கட்சிகளின் அரங்கத்தினர் கோரிக்கை விடுத்தபோதே ஜனாதிபதி புள்ளிவிபரங்களுடன் இவற்றைத் தெரிவித்ததாக சந்திப்பில் கலந்துகொண்ட தமிழ்க்கட்சியொன்றின் தலைவர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

அரசியல் தீர்வு தொடர்பான விடயத்தை இலங்கை அரசாங்கம் புறந்தள்ளவில்லை : பீரிஸ்

அரசியல் தீர்வு தொடர்பான விடயத்தை இலங்கை அரசாங்கம் புறந்தள்ளி வைக்கவில்லை. ஆனால், தற்போது மனிதாபிமான மற்றும் உடனடி விடயங்களுக்கு முன்னுரிமை அளித்து செயற்படுகின்றோம். அண்மையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஈ.பி.டி.பி. ஆகிய கட்சிகளுடன் பேச்சு நடத்தியிருந்தோம். இன்று ( நேற்று ) தமிழ்க் கட்சிகளின் அரங்கம் ஜனாதிபதியை சந்திக்கின்றது. 10 தினங்களுக்கு முன்னர் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்மந்தனை ஜனாதிபதி சந்தித்து பேச்சு நடத்தியிருந்தார். நாங்கள் ஆலோசனைகளை நடத்தி வருகின்றோம் என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.

வெளிவிவகார அமைச்சில் நேற்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற இலங்கை இந்திய நாடுகளுக்கு இடையிலான கூட்டு ஆணைக்குழுவின் ஏழாவது அமர்வில் கலந்துகொண்ட பின்னர் இரு நாடுகளினதும் வெளிவிவகார அமைச்சர்கள் கூட்டாக நடத்திய செய்தியாளர் மாநாட்டிலேயே பீரிஸ் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

வெளிவிவகார அமைச்சர் அங்கு மேலும் கூறியதாவது: இலங்கை இந்திய நாடுகளுக்கு இடையிலான கூட்டு ஆணைக்குழுவின் ஏழாவது அமர்வு நடைபெற்றது. அதில் பல்வேறு விடயங்கள் உள்ளடக்கப்பட்டன. பல உடன்பாடுகளுக்கு நாங்கள் வந்தோம். இந்திய இலங்கை உறவுகளின் அடிப்படை விடயங்கள் ஆராயப்பட்டன.

நாங்கள் தற்போது சிறந்ததொரு சூழலில் சமாதானத்தை அனுபவித்து வருகின்றோம். அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையில் பரஸ்பரம் புரிந்துணர்வுடன் செயற்படுவது குறித்து அர்ப்பணிப்புடன் இருக்கின்றோம்.

இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதில் இந்தியா வழங்கிவரும் உதவிகள் நிலக்கண்ணிவெடிகளை அகற்றுவதில் வழங்கப்படும் ஒத்துழைப்பு வட மாகாணத்தில் விவசாய நடவடிக்களை கட்டியெழுப்ப இந்தியாவின் உதவி ஆகியவை தொடர்பில் கலந்துரையாடினோம்.

மேலும் ரயில்வே அபிவிருத்தி திட்டம் ஒன்றை ஆரம்பித்துவைக்க எஸ்.எம். கிருஷ்ணா மதவாச்சி செல்லவுள்ளார். ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தின் ஆரம்பித்துவைக்க அவர் யாழ்ப்பாணம் செல்லவுள்ளார். இடம்பெயர்ந்த மக்களுக்கான 50 ஆயிரம் வீடுகளை அமைக்கும் வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக இது உள்ளது. பொருளாதார விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடினோம். உடன்பாட்டுக்கு வந்துள்ள விடயங்களை அமுல்படுத்துவது தொடர்பில் ஆராய்கின்றோம்.

இரு நாடுகளுக்கு இடையிலான மீனவர் விடயம் தொடர்பில் பேச்சு நடத்தினோம். அதாவது இவ்விடயம் தொடர்பில் கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்படவேண்டும் என்று உடன்பட்டோம். இது தொடர்பாக அவ்வப்போது எழுகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் பொருட்டே இந்த கட்டமைப்பு உருவாக்கப்படவேண்டும் என்று உடன்பட்டுள்ளோம். சுற்றுலாத்துறை தொடர்புத்துறை போன்றவற்றை பலப்படுத்துவது குறித்து ஆராய்ந்தோம்.

இலங்கை இந்தியாவுக்கு இடையில் கப்பல் சேவையை நடத்துவது தொடர்பில் இறுதி உடன்பாட்டுக்கு வந்துவிட்டோம் என்பதனை மகிழ்ச்சியுடன் அறிவிக்கின்றோம். இரு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பிலும் பேச்சு நடத்தினோம். தகவல் தொழில் நுட்பத்தை கிராமப்புறங்களுக்கு கொண்டுசெல்லும் ஜனாதிபதியின் திட்டம் குறித்தும் யாழ். பல்கலைக்கழகத்தில் இந்தியாவின் உதவியுடன் அமைக்கப்படவுள்ள விவசாய பொறிறியல் பீடங்கள் குறித்தும் விரிவாக கலந்துரையாடினோம்.

இரு நாடுகளுக்கும் இடையிலான மாணவர் பறிமாற்றம் தொடர்பிலும் ஆராய்ந்தோம். இலங்கையில் 2600 ஆம் ஆண்டு பௌத்த விழாவில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கின்றோம். யாழ்ப்பாணத்தில் இராஜதந்திர பிரதிநிதி அலுவலகத்தை இந்திய வெளிவிவகார அமைச்சர் திறந்துவைப்பதானது பாரிய மைல் கல்லாகும்.

கேள்வி: அரசியல் தீர்வு விடயம் குறித்து பேசப்பட்டதா?

பதில்: அரசியல் தீர்வு தொடர்பான விடயத்தை இலங்கை அரசாங்கம் புறந்தள்ளி வைக்கவில்லை. ஆனால் தற்போது மனிதாபிமான மற்றும் உடனடி விடயங்களுக்கு முன்னுரிமை அளித்து செயற்படுகின்றோம். அண்மையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஈ.பி.டி.பி. ஆகிய கட்சிகளுடன் பேச்சு நடத்தியிருந்தோம். இன்று ( நேற்று ) தமிழ்க் கட்சிகளின் அரங்கம் ஜனாதிபதியை சந்திக்கின்றது. 10 தினங்களுக்கு முன்னர் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்மந்தனை ஜனாதிபதி சந்தித்து பேச்சு நடத்தியிருந்தார். நாங்கள் ஆலோசனைகளை நடத்தி வருகின்றோம். குழப்பகரமான நிலைமையில் எங்கிருந்தாவது ஒரு விடயத்தை ஆரம்பித்தாகவேண்டும்.

அதாவது மனிதாபிமான மற்றும் உடனடி விடயங்கள் போன்றவற்றுக்கே நாங்கள் முக்கியத்துவம் அளித்துள்ளோம். மீன்படி தொழில் விவசாயம் வீட்டுப் பிரச்சினை போக்குவரத்துப் பிரச்சினை நீர் விடயம் என்பன முதலில் ஆரக்ஷியப்படவேண்டும். எனவே நாங்கள் அங்கிருந்துதான் ஆரம்பிக்கவேண்டியுள்ளது. அதற்காக நீண்டகால விவகாரங்கள் புறந்தள்ளப்பட்டுள்ளதாக அர்த்தமில்லை. கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பெற்றுவருகின்றோம். எமது நிகழ்ச்சி நிரலில் அனைத்தும் விடயங்களும் உள்ளன
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை - இந்திய நட்புறவு எக்காலத்திலும் பாதிப்படையாது எஸ். எம். கிருஷ்ணா

வட பகுதியில் இடம்பெயர்ந்து இன்னமும் முகாம்களில் தங்கியிருக்கும் மக்களை விரைவில் மீளக்குடியமர்த்த இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா தெரிவித்தார்.

மீள்குடியமர்த்துவதில் சில பிரச்சினைகள் எதிர்கொள்ளப்பட்டாலும், இலங்கை அரசாங்கம் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்தும் என நம்புகிறோம். இந்த வருட இறுதிக்குள் இடம்பெயர்ந்த அனைவரையும் மீள்குடியமர்த்துவதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது என்றும் அவர் கூறினார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற கூட்டு செய்தியாளர் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கை-இந்திய கூட்டு ஆணைக்குழு ஒப்பந்தத்தில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸணும், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணாவும் கைச்சாத்திட்ட பின்னர் கூட்டுச் செய்தியாளர் மாநாட்டை நடத்தியிருந்தனர்.

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இந்திய வெளிவிவகார அமைச்சர்,

இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியமர்த்துவதற்கும், அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கும் இலங்கைக்கு வரலாற்று ரீதியிலான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியமர்த்துவதற்காக இந்தியா 50,000 வீடுகளை அமைத்துக்கொடுக்கவுள்ளது. இத்திட்டத்தின் முதற்கட்டமாக 1000 வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளன.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நீண்டகாலமாக காணப்படும் உறவுகள் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது. இரு நாட்டுக்கும் இடையிலான கூட்டு ஆணைக்குழு ஒப்பந்தமானது இரு நாட்டுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் அரசியல் ரீதியான தொடர்புகளை மேலும் வலுவாக்கும். இக்கூட்டு ஆணைக்குழு ஒப்பந்தத்தின் ஊடாக மீன்பிடி வர்த்தகம், முதலீடுகள், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம், பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இலங்கைக்கு இந்தியா உதவிகளை வழங்கும். இதன் மூலம் இரு நாட்டுக்கும் இடையிலான நல்லுறவுகள் வலுப்படும்.

அது மாத்திரமன்றி யாழ்ப்பாணத்திலும், ஹம்பாந்தோட்டையிலும் அமைக்கப்படும் இந்தியத் துணைத் தூதரகங்கள் இரு நாட்டு மக்களுக்கும் இடையில் சிறந்த தளமாக அமையும். இதன் மூலம் இரு நாட்டு மக்களுக்கு இடையில் நேரடித் தொடர்பு ஏற்படும்.

இந்திய மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து நான் கலந்துரையாடியுள்ளேன். இரு நாட்டுப் பிரநிதிகளும் விரைவில் கூடி இவ்விடயம் குறித்து ஆராய இணங்கியுள்ளோம்.

இலங்கையின் அபிவிருத்தியில் இந்தியா பெரும் பங்களிப்புச் செலுத்தியுள்ளது. வீடமைப்பு, புகையிரதப் பாதை அமைப்பு, கண்ணிவெடி அகற்றல், வடக்கின் விவசாய அபிவிருத்தி, யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கின் புனர்நிர்மாணம், கே. கே. எஸ். துறைமுக அபிவிருத்தி, யாழ். பல்கலைக்கழக விவசாயப் பீடத்தின் அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்திப் பணிகளில் இந்தியா தொடர்புப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையிலான உறவானது வேறெந்தவொரு நாட்டிலும் தங்கியில்லை. ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வி யொன்றுக்குப் பதிலளித்தபோதே அவர் இந்த கருத்தை தெரிவித்தார்.

இலங்கை அரசாங்கம் எந்தெந்த நாடுகளுடன் உறவுகளைக் கொண்டுள்ளது என்பது இலங்கையைப் பொறுத்தது. இலங்கை எந்தவொரு நாட்டுடன் நட்புறவைக் கொண்டிருந்தாலும் இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான உறவில் அது தாக்கத்தை ஏற்படுத்தாது என்றும் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

சிரேஷ்ட அமைச்சர்கள் சகல அமைச்சரவை கூட்டங்களிலும் பங்குகொள்ள முடியும்

சிரேஷ்ட அமைச்சர்கள் மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை மட்டுமே அமைச்சரவைக்கு சமுகமளிக்க முடியும் என்று எதிர்க்கட்சி தெரிவிக்கும் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது. அவர்கள் சகல அமைச்சரவைக் கூட்டங்களிலும் கலந்துகொள்ள முடியும் என ஆளும் கட்சி பிரதம கொரடா அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

எதிர்க்கட்சி சார்பாக வரவு- செலவுத் திட்ட விவாதத்தில் ஆரம்பித்து உரையாற்றிய எதிர்க்கட்சி பிரதம கொரடா ஜோன் அமரதுங்க; சிரேஷ்ட அமைச்சர்கள் குறித்து கருத்து தெரிவித்தார். இதற்குப் பதிலளித்த அமைச்சர், அரசியல் யாப்பில் உள்ள நியதிகளின் அடிப்படையிலே சிரேஷ்ட அமைச்சர்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டனர். ஐ.தே.க ஆட்சியிலும் இவ்வாறான அமைச்சர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர் என்றார்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் விமல் வீரவன்ச, ஐ. தே. கட்சி யில் அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர். அரசியல் யாப்பின் எந்த சரத்தின் படி இவர்கள் நியமிக்கப்பட்டனர் என்று கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த ஜோன் அமரதுங்க எம்.பி. அதுவும் தவறான செயற்பாடுதான் என்று குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

வடக்கு ரயில் பாதை நிர்மாணம்: 416 மில். டொலர் கடன் வழங்க இந்தியா இணக்கம்




வடக்கு ரயில் பாதையை நிர்மாணிப்பதற்கு 416 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொகையினை பெற்றுக் கொடுக்க இந்திய அரசு இணக்கம் தெரிவித்துள்ளது. இதன் பிரகாரம், இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான ஒப்பந்தமொன்று ஜனாதி பதி மஹிந்த ராஜபக்ஷ, இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா ஆகியோர் முன்னிலையில் ஜனாதிபதி மாளிகையில் நேற்று (26) கைச்சாத்திடப்பட்டது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவியேற்பின் பின்னர் இந்திய வெளியுறவு அமைச்சர் முதல் முறையாக இலங்கைக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடக்கிற்கான புகையிரதப் பாதையின் புனரமைப்புப் பணிகள் மூன்று கட்டங் களாக இடம்பெறவுள்ளன. மடு முதல் தலைமன்னார் வரையும் மதவாச்சியிலி ருந்து மடு வரையும் மற்றும் ஓமந்தையில் இருந்து பலாலி வரையும் பூர்த்தி செய் யப்படவுள்ளன.

வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த வர்களுக்கான 50,000 வீடமைப்புச் செயற் திட்டத்திற்காக ஆவணங்களை நிதியமை ச்சின் செயலாளர் கலாநிதி பீ. பி. ஜயசுந்தர மற்றும் இந்திய எக்சிம்

வங்கியின் முகாமையாளர் ஆகியோர் பரிமாற்றிக் கொள்ளும் நிகழ்வும் இதன்போது இடம்பெற்றது. ஜனாதிபதிக்கும் இந்திய வெளியுறவு அமைச்சருக்கும் இடையிலான நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் மிகவும் சுமுகமாக இடம் பெற்றதுடன், இலங்கை ஜனாதிபதியின் இரண்டாவது பதவியேற்பை முன்னிட்டு இந்திய வெளியுறவு அமைச்சர் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.

தற்போது துரித முன்னேற்றம் கண்டுள்ள இடம் பெயர்ந்தவர்களை மீள் குடியேற்றும் பணி தொடர்பாகவும் ஜனாதிபதி இதன் போது இந்திய வெளியுறவு அமைச்சருக்கு தெளிவுபடுத்தினார்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் சிறந்த நட்புறவுகள் பேணப்படுவதாகவும், தற்போது காணப்படும் சூழ்நிலையானது அதனை மேலும் பலப்படுத்த உதவுமெனவும் இந்திய அமைச்சர் இதன்போது வலியுறுத்தினார்.

பயங்கரவாதம் முடிவடைந்ததன் பின்னர் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் புனரமைப்புப் பணிகள், அந்தப் பிரதேசங்களின் பொருளாதார வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி தொடர்பாக இரண்டு தரப்பினரும் திருப்தியடைந்துள்ளமை இங்கு வெளிப்படுத்தப்பட்டது.

ஹம்பாந்தோட்டை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் இந்திய கொன்சியுலர் ஜெனரல் காரியாலயங்கள் இரண்டு முறையே இன்றும் நாளையும் திறக்கப்படுவதுடன், வடக்குப் புகையிரப் பாதையின் நிர்மாணம் தொடர்பான ஞாபகார்த்த பலகை நாளை திரை நீக்கம் செய்யப்படவுள்ளது. அத்துடன் வீடமைப்புத் திட்டம் தொடர்பான நிகழ்வும் நாளை அரியாலையில் இடம்பெற உள்ளது.

இந்திய வெளியுறவு அமைச்சர் எல். எம். கிருஷ்ணா, இந்திய வெளியுறவுச் செயலர் நிரூபமா ராவ் ஆகியோர் இந்தியா சார்பிலும், வெளியுறவு அமைச்சர் ஜீ. எல். பீரிஸ், மின்சாரம் மற்றும் வலு அமைச்சர் சம்பிக்க ரணவக்க, ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்க, வெளியுறவு அமைச்சின் செயலர் ரொமேஷ் ஜயசிங்க, நிதியமைச்சின் செயலர் கலாநிதி பீ. பி. ஜயசுந்தர ஆகியோர் இலங்கை சார்பாகவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இதேவேளை, இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா நேற்று பிரதமர் டி. எம். ஜயரட்ணவையும் சந்தித்து பேச்சு நடத்தினார். இலங்கையில் வட பகுதி மக்களுக்கு 50,000 வீடுகள் கட்டிக் கொடுப்பது பற்றியும் இந்திய வெளியுறவு அமைச்சர் பிரதமரிடம் விளக்கமளித்தார்.

இச் சந்திப்பின் போது இந்திய வெளியுறவு அமைச்சின் செயலர் நிரூபமா ராவ் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

வடக்கு, கிழக்கு அபிவிருத்தி: மக்களின் வாழ்வாதாரம் ஜனாதிபதிக்கு ஒத்துழைக்க தமிழ்த் தலைவர்கள் முடிவு


வடக்கு, கிழக்கு அபிவிருத்தி மற்றும் அப்பகுதி மக்களின் நலன், வாழ்வாதாரம் தொடர்பாக ஜனாதிபதி முன்னெடுத்து வரும் வேலைத் திட்டங்களுக்கு தொடர்ந்தும் ஆதரவும், ஒத்துழைப்பும் வழங்குவதாக தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

நாட்டிலுள்ள சகல மக்களுடனும் ஒத்துழைப்புடன் செயற்படுவதுடன் நாட்டின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை போன்றதொரு திறமையான தலைவர் வேறு எங்கும் கிடையாது எனவும் தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்க் கட்சிகளின் அரங்கம் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்து பேச்சு நடத்தியபோதே தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் இந்தக் கருத்தை தெரிவித்தனர்.

வடக்கு, கிழக்கு பகுதிகளில் மக்கள் மீள்குடியேற்றத்தின் செயற்பாடுகள் குறித்தும் இந்தப் பேச்சுவார்த்தையின்போது ஆராயப்பட்டது. அத்துடன் வடக்கு, கிழக்கு அபிவிருத்தி மற்றும் நலன்புரி விடயங்கள் குறித்தும் பேசப்பட்டது.

மீள்குடியேற்ற நடவடிக்கைகள் தற்போது பெரும்பாலும் முடிவடையும் தருவாயிலேயே உள்ளன.

ஒரு வருடத்துக்குள் இந்த மக்களை மீளக்குடியமர்த்துவதற்கு கிடைத்தமை எமக்கு கிடைத்த பாரிய வெற்றி என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ்க் கட்சிகளின் அரங்கத்திடம் தெரிவித்தார்.

மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாத சந்தர்ப்பங்களில் எந்தவொரு நபரையும் மீளக்குடியமர்த்த அரசு நடவடிக்கை எடுக்காது என சுட்டிக் காட்டிய ஜனாதிபதி, நிலக்கண்ணிவெடிகள், மிதிவெடிகள் அகற்றிய பின்னர் ஒழுங்கான முறையில் மக்கள் அவர்களின் இடங்களில் மீளக்குடியமர்த்தப்படுவார்கள் என்றார்.

வடக்கு, கிழக்கு பகுதிகளில் உட்கட்டமைப்புகளை அபிவிருத்தி செய்வதுடன் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கு அரசாங்கம் தொடர்ந்தும் நடவடிக்கை எடுத்து வருவதுடன் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்குரிய வேலைத் திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தல் வெற்றியுடனும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை என்ற வெற்றியுடனும் எதிர் காலத்தில் மிகப் பெரிய சேவையை செய்வதற்கு ஜனாதிபதிக்கு இன்று சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என்பதையும் தமிழ்க் கட்சிகளின் அரங்கம் ஜனாதிபதிக்கு சுட்டிக்காட்டியது.

இச்சந்திப்பின்போது,

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, முருகேசு சந்திரகுமார் எம்.பி., வீ. ஆனந்த சங்கரி, ரி. சித்தார்த்தன், எஸ். சதானந்தம், ரி. ஸ்ரீதரன், பி. குமார், கே. சிவாஜிலிங்கம், சீ. சந்திரஹாசன், எஸ். பேரின்பநாயகம், கே. சுரேந்திரன், என். குமரகுருபரன், ஏ. ராஜமாணிக்கம், கே. தயாலினி, ஜீ. ராஜ்குமார் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

தமிழ்க் கட்சிகளின் அரங்கம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சந்திப்பு-

26.11.2010.
கட்சிகளின் அரங்கம் இன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இந்த சந்திப்பு ஏறக்குறைய இரண்டரை மணிநேரங்கள் இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில் ஜனாதிபதியுடன், அவரது செயலாளர் லலித் வீரதுங்க, அமைச்சர் நிமால் சிறிபால டிசில்வா ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். தமிழ்க் கட்சி அரங்கத்தின் சார்பில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார், ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகத்தின் தலைவர் செ.சந்திரகாசன், புளொட் தலைவர் த.சித்தார்த்தன், செயலாளர் சு.சதானந்தம், தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலர் எம்.கே.சிவாஜிலிங்கம், சிறீரெலோ தலைவர் உதயராஜா, சுரேந்திரன், பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலர் ரி.சிறிதரன், குமார், ஜனநாயக மக்கள் முன்னணியின் செயலாளர் குமரகுருபரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது இனப்பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வு, நாளாந்தப் பிரச்சினைகளான இடம்பெயர்ந்த மக்களின் மறுவாழ்வு, தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்களின் விடுதலை என்பன தொடர்பில் தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் எடுத்துக் கூறினர். சிலவற்றுக்கு ஜனாதிபதி சாதகமான பதிலை வழங்கியபோதிலும், பலவற்றுக்கு அப்பிரச்சினைகளைப் கவனிப்பதற்காக தமிழ்க் கட்சிகளின் அங்கத்தவர்களைக் கொண்ட குழுவொன்றை தான் அமைக்கவுள்ளதாகவும், அந்தக் குழுவானது மேற்படி விடயங்களை ஆராய்ந்து தீர்வுகளை அளிக்குமென்றும் தெரிவித்துள்ளார். இதன்போது தமிழ் மக்களுக்கான தீர்வு உள்ளிட்ட விடயங்கள் அடங்கிய மகஜர் ஒன்றும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டு அதில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டது. இதேவேளை தமிழ்க் கட்சிகளின் அரங்கின் இச்சந்திப்பு முதலாவது சந்திப்பு என்ற ரீதியில் ஒரு நல்ல ஆரம்பமாக பார்க்கப்படுகிறது என்று அரங்கின் பேச்சாளர் கூறியுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...