26 பிப்ரவரி, 2011

பான் கீ மூனிற்கும் இலங்கைக்குமிடையில் உடன்படிக்கைகள் ஏற்பட்டுள்ளனவா? இன்னர் சிற்றி பிரஸ் கேள்வி

ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் பான் கீ மூனும் ஐ.நா.வுக்கான இலங்கையின் பிரதி நிதி சவேந்திர சில்வாவும் சந்தித்துக் கொண்டமை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் செய்தியாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

பான் கீ மூன் சவேந்திர சில்வாவை சந்திக்கும் முதல் முறை இதுவா? என இன்னர் சிற்றி பிரஸ் எழுப்பிய கேள்விக்கு சபையின் பேச்சாளர் மார்ட்டின் நெசர்ஸ் கீ பதில் வழங்கவில்லை.

இந்த சந்திப்பு தொடர்பில் இலங்கைக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் இடையில் ஏதேனும் உடன் படிக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளனவா? என செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த பேச்சாளர் ஐக்கிய நாடுகளின் செயலகத்தில் இது தொடர்பிலான விளக்கமளிப்பை பான் கீ மூன் மேற்கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த மாத இறுதியுடன் பான் கீ மூனினால் இலங்கை தொடர்பில் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவின் பதவிக் காலம் நிறைவடைகிறது.

ஏற்கனவே அது தமது பதவிக் காலத்தை நீடித்துக் கொண்டிருந்த நிலையில் மீண்டும் கால நீடிப்பை மேற்கொள்ளுமா? என செய்தியாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் வழங்கிய பேச்சாளர் இது தொடர்பில் குறித்த நிபுணர் குழு தீர்மானித்த பின்னர் தமக்கு அறிவிக்கும் என பேச்சாளர் தெரிவித்தார்.

அதன் பின்னர் அதனை ஊடகங்களுக்கு வெளிப்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

ஜூலை கலவரத்தை அரசுடன் இணைந்து நடத்திய சக்திகள் இன்று மனித உரிமை குறித்து பேசுகின்றன: டலஸ்


ஜூலைக் கலவரத்தை அரச அனுசரணையுடன் நடத்தி, தமிழ் மக்களுக்கு அழிவுகளை ஏற்படுத்திய சக்திகள் இன்று தமிழர்களின் மனித உரிமை பற்றிப் பேசிக் கொண்டிருக்கின்றன என்று இளைஞர் விவகார திறன் அபிவிருத்தி அøமச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

யுத்தம் இடம்பெற்ற 30 வருட காலப்பகுதியில் நீங்கள் இழந்த உயிர்களைத்தவிர ஏனைய அனைத்தையும் பெற்றுக் கொடுப்பதற்கு மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் அர்ப்பணிப்புடனுள்ளது என்றும் அவர் கூறினார்.

யாழ். கொக்குவிலில் நிர்மாணிக்கப்பட்ட தொழில்நுட்ப கல்லூரியை திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து அமைச்சர் டலஸ் உரையாற்றுகையில், தமிழ் மக்களின் கலாசார தலைநகரான யாழ்ப்பாணத்தில் உங்கள் முன் உøயாற்றக் கிடைத்தமை எனது பாக்கியம் எனக் கருதுகிறேன். பெப்ரவரி 25 என்ற இன்றைய தினம் முக்கியமான ஒரு நாளாகும். 1974 ஆம் ஆண்டு அக்டோபர் 6ஆம் திகதி சிறிமாவோ பண்டாரநாயக்கவினால் யாழ் பல்கலைக்கழகம் திறந்துவைக்கப்பட்டது. இலங்கை வரலாற்றிலேயே அன்றைய தினத்திற்கு அடுத்தபடியாக முக்கியத்துமிக்க தினமாக இன்றைய நாள் பதிவு செய்யப்படுகின்றது.

தேசிய முகாமைத்துவ நிறுவனத்தின் கிளை நிறுவனம், இலங்கை தொழில்நுட்பக் கல்லூரி ஆகிய இரு பெரும் கல்வியகங்கள் இன்று உங்கள் மண்ணில் காலடி பதிக்கின்றன. யுத்தம் இடம்பெற்ற கடந்த 30 வருடங்களில் யாழ் மண்ணுக்கு உயர்தரம் வாய்ந்த தொழில்நுட்பமோ அல்லது நவீன தொழில்நுட்ப விடயங்களோ வரவில்லை.

அதற்குப் பதிலாக பயங்கரம், பயம், அச்சம், வேதனை, கண்ணீர், சந்தேகம், மந்தபோஷணம், பதற்றமான வாழ்வு ஆகியவையே உங்களுக்கு கிடைத்தன.

ஆனால் இந்த 30 வருட காலப்பகுதியில் நீங்கள் இழந்த உயிர்களைத்தவிர ஏனைய அனைத்தையும் பெற்றுக் கொடுப்பதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் அர்ப்பணிப்புடனுள்ளது. ஏனைய பிரதேசங்களை விட இப்பகுதி மக்கள் கல்வியை மதிப்பவர்கள்.

அதனால்தான் யுத்தத்தில் எரிந்துகொண்டிருந்த காலத்திலும் நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு கல்வியைப் பெற்றுக் கொடுத்தீர்கள்.

நாம் பெற்றுக்கொண்ட அனுபவம் தொடர்பான படிப்பினையைப் பெற்றுக் கொள்ளவே முயற்சிக்கின்றோம். அதனை நினைத்து கண்ணீர்விட்டுக் கொண்டிருக்க முடியாது. வடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்தின் கீழ், உங்களுக்கு தேசிய முகாமைத்துவ நிறுவனத்தின் கிளை நிறுவனம், இலங்கை தொழில்நுட்பக் கல்லூரி என்பவற்றை விட மேலும் தரம்வாய்ந்த கல்வி நிறுவனங்களும் இங்கு வரப்போகின்றன. பட்டங்களை வழங்கும் கல்வியகங்கள் இங்கு வரப் போகின்றன.

எமது அரசாங்கம். நடைமுறைச் சாத்தியமான அரசாங்கமாகும். வெறுமனே பேசிக் கொண்டும் கூட்டங்களை நடத்திக் கொண்டும் காலத்தை வீணடிப்பதற்கும் நாம் தயாரில்லை. மக்களின் தேவை எதுவோ அதுவே அரசாங்கத்தின் தேவை என்பதில் உறுதியாகவுள்ளோம்.

வரலாற்றில் இப்பகுதியில் பல சந்தர்ப்பங்களில் பல விடயங்களை திசை மாற்றி விட்ட சக்திகள் இன்று வேறுபல முகம்களில் பல்வேறு விடயங்கள் குறித்து பேசுகின்றன. 1983 இனக்கலவரத்தை அரச அனுசரணையுடன் நடத்தி ,தமிழ் மக்களை அழிவுக்குட்படுத்திய சக்திகள் இன்று தமிழர்களின் மனித உரிமை பற்றிப் பேசுகின்றன.

யாழில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தலில் வாக்குகளை கொள்ளையடித்து, மக்களுக்கு வாக்குகள் மீதிருந்த நம்பிக்கையை சிதறடித்த சக்திகள் இன்று ஜனநாயகம் பற்றி பேசுகின்றன.

திறந்த பொருளாதாரத்தைப் பயன்படுத்தி யாழ் குடாநாட்டின் விவசாயத்தை நசுக்கிய சக்திகள் இன்று யாழ் விவசாயத்துறை குறித்து இப்போது பேசிக் கொண்டிருக்கின்றன.

உலகின் தலைசிறந்த நூலகமான யாழ் நூலகத்தை எரித்த சக்திகள் இப்போது இம் மக்களின் கல்வி கலாசாரம் தொடர்பாக பேசுகின்றன.

அர்ப்பணிப்புடனும் பொறுப்புடனும் இங்கு நான் ஒரு விடயத்தை கூற விரும்புகிறேன். ஜனாபதி தலைமையிலான அரசாங்கம் மக்களின் பயம், அச்சம், சந்தேகத்தைப் போக்கி நாம் அனைவரும் ஒரே இலங்கையின் இனமாக முன்வந்து வாழ்வதற்காக செயற்படும். அதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

பொன்சேகாவின் எம்.பி. பதவி நீக்கத்திற்கு எதிரான வழக்கு விசாரணைக்கு ஏற்பு



முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவருமான சரத் பொன்சேகா தனது பாராளுமன்ற உறுப்புரிமையை நீக்கியதற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கு மே மாதம் 4 ஆம், 5 ஆம் திகதிகளில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

நீதியரசர்களான ரஞ்சித் சில்வா, ஏ.டபிள்யூ ஏ. சலாம், உபாலி அபேரட்ண ஆகியோரால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

சரத் பொன்சேகாவின் மேன்முறையீட்டு மனுவினை விசாரணைக்கு எடுக்கக்கூடாது என சட்டமா அதிபர் ஆட்சேபம் தெரிவித்த போதிலும், நீதியரசர்கள் அவரது கோரிக்கையை நிராகரித்ததுடன் வழக்கினை விசாரிப்பதற்கான திகதியினையும் அறிவித்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

புலனாய்வுத்துறையினரினால் கைது செய்யப்பட்டவர்களில் மூவர் விடுதலை

மன்னார் மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் புலனாய்வுத்துறையினரினால் கைது செய்யப்பட்ட 05 தமிழர்களில் மூவரை கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி விடுதலை செய்துள்ளார்.

விடுதலை செய்யப்பட்டவர்கள் மன்னார் பேசாலை கிராமம் 7 ஆம் வட்டாரத்தினைச்சேர்ந்த ஜெயராஜ் பெனோ பெல்டானோ,8 ஆம் வட்டாரத்தினைச் சேர்ந்தவர்களான அருள் சீலன் மெறான்டா,மற்றும் சந்தியோகு மெசனட் குருஸ் ஆகியோரவர்.
மேலும் இங்கே தொடர்க...

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் யாழ். அலுவலகத்திற்கு மூடு விழா

இருபது வருடங்களுக்கு மேலாக இயங்கிவந்த, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் யாழ்ப்பாண அலுவலகம் நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் மூடப்பட்டுள்ளது.

எவ்வாறிருந்தபோதும் மோதல் காரணமாக ஏற்பட்டுள்ள தேவைகள் தொடர்பான உதவிகளை வழங்குவதற்கு தாம் தயாராக இருப்பதாக செஞ்சிலுவைச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பாக ஐ.சி.ஆர்.சி. வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் யாழ் அலுவலகம் 21 வருட சேவையின் பின்னர் மூடப்படுகின்றது. செஞ்சிலுவைச் சங்கத்தின் சேவைகள் தொடர்பான வரலாற்றில் இதுவொரு முக்கிய கணப்பொழுதாகும்.

கடந்த 20 வருடங்களுக்கு மேலாக வலுவிழந்தோருக்கும் அங்கவீனர்களான மக்களுக்கும் உதவுகின்ற யாழ். ஜெய்ப்பூர் வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிறுவனத்துக்கான ஆதரவைத் தொடர்ந்தும் ஐ.சி.ஆர்.சி. வழங்கும்.

சர்வதேச செஞ்சிலுவை சங்கமானது, சார்பு உறுப்புகளையும், நடமாடும் உபகரணங்களையும் உற்பத்தி செய்வதற்கான பொலிப்புறொப்பலீன் போன்ற மூலப்பொருட்களையும் தொழில்நுட்ப உதவிகளையும் இந்த நிலையத்துக்கு வழங்குகின்றது.

சிறைச்சாலைகளிலும் ஏனைய இடங்களிலும் உள்ள நபர்களுக்கும் அவர்களது உறவினர்களுக்குமிடையிலான குடும்பத் தொடர்புகளைப் பேணும் நோக்குடைய செஞ்சிலுவையின் குடும்ப சந்திப்புகளுக்கு வசதியளிக்கும் திட்டமானது, இதற்கு பின்னர் கொழும்பிலுள்ள ஐ.சி.ஆர்.சி. அலுவலகத்தின் மூலமும் வவுனியாவிலுள்ள இலங்கை செஞ்சிலுவைச் சங்க கிளை மூலமும் மேற்கொள்ளப்படும்.
மேலும் இங்கே தொடர்க...

அவசரகாலச்சட்டமானது கே.பி.க்கு எதிராக ஏன் பயன்படுத்தப்படவில்லை:

புலிச் சந்தேகநபர்களுக்கு எதிராக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அவசரகாலச் சட்டமானது கே.பி. என்கின்ற குமரன் பத்மநாதனுக்கு எதிராக ஏன் பயன்படுத்தப்படவில்லை. அவசரகாலச்சட்டத்தின் கீழ் தொடர்ந்தும் சிறையிலடைத்து வைக்கப்பட்டிருக்கும் அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்காமையானது மீண்டும் ஒரு பயங்கரவாதத்துக்கான வழியாகவே அமையும் என்று ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி. டாக்டர் ஜயலத் ஜயவர்த்தன சபையில் தெரிவித்தார்.

யுத்தம் இல்லை, பயங்கரவாதம் இல்லை. புலிகளும் இல்லை. அப்படியானால் அவசரகால சட்டம் மட்டும் எதற்காக என்று கேள்வியெழுப்பிய அவர் அனைத்து இன மக்களும் சகோதரத்துடனும் சமாதானத்துடனும் வாழ வேண்வும் என்று அரசு கூறுவது பேச்சளவில் மட்டுமேயொழிய நடைமுறையில் இல்லை. என்றும் அவர் கூறினார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை ஜனநாயக தேசியக் கூட்டணியினால் கொண்டுவரப்பட்ட அவசரகாலச்சட்டம் தேவையற்றது என்பது தொடர்பிலான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்திலேயே ஜயலத் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், கடந்த காலங்களில் ஏற்பட்ட தவறுகள் மீண்டும் இடம்பெறக் கூடாது என்று பிரதமர் கூறுகிறார். அதில் ஐக்கிய தேசியக் கட்சியாகிய நாம் இணங்குகின்றோம்.

இங்கு சில விடயங்கள் அரசுக்கு புலப்படாதிருக்கின்றது. இதனை வெளிப்படுத்த வேண்டியது எதிர்க்கட்சியான எமது பொறுப்பாகும். இன்று அவசரகாலச் சட்டம் அவசியம் தானா என்ற கேள்வியெழுந்திருக்கின்றது. அவசரகாலச் சட்டத்தின் மூலம் ஜனநாயகம் பாதுகாக்கப்படுகின்றதா? மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றனவா? வடக்காக இருந்தாலும் தெற்காக இருந்தாலும் இந்த அவசரகாலச் சட்டத்தை மக்கள் விரும்புகின்றனரா? நாம் இதனைக் கூறுவதை அரசாங்கம் ஏன் வெறுப்புடன் நோக்க வேண்டும்.

யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் வடக்கு மக்களின் நிலைமைகள் சீர் செய்யப்பட்டுள்ளனவா?, பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளனவா? மக்களைப் பாதுகாப்பதற்கான நிலைமைகள் காணப்படுகின்றனவா? இன்று புலிப் பயங்கரவாதத்தின் அச்சுறுத்தல்கள் இல்லை.

அப்படியானால் இந்த அவசரகாலச் சட்டம் எதற்காக வேண்டும். இதனை நிறைவேற்றுவதால் அல்லது நடைமுறைப்படுத்துவதற்கு இருக்கின்ற தேவை என்ன? கே.பி. அவசரகாலச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டவர். இவர் தொடர்பில் நாம் பல்வேறு சந்தர்ப்பங்களில் பிரச்சினைகளை எழுப்பியிருக்கின்றோம்.

புலி உறுப்பினர்கள் தொடர்பில் நடைமுறைப்படுத்தப்படுகின்ற அவசரகாலச் சட்டம் ஏன் குமரன் பத்மநாதன் தொடர்பில் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என்பது தான் எமது கேள்வியாகும். ஆயுதம் மீட்கப்படுவதாகவும் தேடுதல்களை நடத்துவதற்கும் இந்த அவசரகாலச் சட்டம் தேவைப்படுவதாக அரசாங்கம் காரணம் கூறுகின்றது. மேற்போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சாதாரணசட்டம் போதுமானதாக இல்லையா? சாதாரண சட்டங்களால் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாதா என்று கேட்கிறோம்.

பிழை எங்கு இருக்கின்றது? வாக்குகள் எண்ணுகின்ற நிலையங்களில் இருந்து பாதுகாப்பு அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் விலகிக்கொள்வார்களேயானால் அங்கு சட்டம் இருக்கின்றது. கடந்த பொதுத் தேர்தலின் போது இந்த நிலைமை கம்பஹா மாவட்டத்தில் இடம்பெற்றது. அதன்போது நானும் தாக்கப்பட்டு அங்கிருந்து துரத்தப்பட்டேன். இவ்வாறான தேவைகளுக்குத்தான் அவசரகாலச் சட்டம் பாவிக்கப்படுகின்றது.

தற்போது அவசரகாலச் சட்டத்தைப் பாவித்தே மாநகர சபைகளுக்கான தேர்தல்களை அரசாங்கம் ஒத்திவைத்திருக்கின்றது. ஆனால் அவசரகாலச் சட்டத்தினூடாக மக்களின் உரிமைகள் பறிக்கப்படவில்லை என்று கூறுகின்றார். ஆனால் இந்த தேர்தல்களை ஒத்திவைத்திருப்பதன்மூலம் மக்களின் வாக்குரிமை இந்த அவசரகாலச் சட்டத்தின் மூலம் பறிக்கப்பட்டுள்ளது.

இன்று வடக்கு பகுதியில் ஐக்கிய தேசியக் கட்சி தனிக் கட்சியாக போட்டியிடுகின்றது. அங்கு எமது தேர்தல் பிரசார நடவடிக்கைகளை ஆரம்பித்தோம். ஆனால் வடக்கின் பெரும்பகுதிகளுக்கான தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

எந்தவொரு நீதிமன்ற நடவடிக்கையும் இன்றி முல்லைத்தீவில் இரண்டு பிரதேச சபைகளுக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அங்குள்ள அனைத்து மக்களும் இன்றுவரையில் முகாம்களிலேயே தங்கியுள்ளனர். இதனாலேயே இங்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் பெரிதாக கூறிய விடயம் தான் வடக்கு மக்கள் அனைவரும் மீள் குடியமர்த்தப்பட்டுவிட்டனர் என்பதாகும். ஆனால் அவ்வாறு இல்லை. இதனை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இந்த சிறிய தேர்தலினூடாக ஜனாதிபதியை மாற்ற முடியாது. அரசாங்கத்தை மாற்ற முடியாது, இது கிராமப்புறங்களை கட்டியெழுப்புவதற்கான தேர்தலாகும். இவ்வாறான தேர்தலை ஒரே தடவையில் நடத்துவதற்கு ஏன் அரசாங்கத்தினால் முடியாது இருக்கின்றது. அவசரகாலச் சட்டத்தைப் பாவித்து ஏன் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும். அரசாங்கத்துக்கு முழுமையான அதிகாரங்கள் இருக்கின்ற நிலையில் ஏன் இவ்வாறு ஒத்திவைக்க வேண்டும். ஏன் முல்லைத்தீவின் அப்பாவி மக்களின் உரிமைகளைப் பறிக்கவேண்டும் என்று கேட்க விரும்புகிறேன்.

இன்று வடக்கில் இராணுவ நிர்வாகம் தேவையில்லை. அங்கு சிவில் நிர்வாகமே தேவையாக இருக்கின்றது. அனைத்து இனங்களும் சமத்துவமாக சகோதரத்துவத்துடன் வாழ வேண்டும். அதுவே அரசாங்கத்தின் கொள்கை என்று பிரறதமர் கூறுகின்றார். இதனை நாம் முழுமையாக விரும்புகின்றோம். ஆனால் வடக்கில் இன்று ஜனநாயகம் இல்லை.

சிறுவர்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுகின்றன. புலி சந்தேக நபர்கள் தொடர்பில் சட்டம் செயற்படுவதில்லை. குற்றம் இழைத்திருந்தால் அவர்களுக்கு தண்டனை வழங்குவதில் தவறே இல்லை. ஆனால் அவசரகாலச் சட்டத்தை பாவித்து அவர்களை சட்டத்துக்குள் நிறுத்தாது அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலைமை மீண்டும் ஒரு பயங்கரவாதத்துக்கு வழிவகுக்கும். நான் இவ்வாறு பேசுவதால் என் மீது புலி முத்திரை குத்தப்படலாம். அது பற்றி எனக்கு கவலையில்லை. ஏனெனில் மனித உரிமைகளுக்காக என்றும் குரல் கொடுப்பேன். அரசாங்கம் கூறுவதெல்லாம் பேச்சளவிலேயே இருக்கின்றன என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

வடக்கு, கிழக்கில் மக்கள் மத்தியில் பீதி அவசரகால சட்டத்தை நீக்குவது அவசியம்: அநுரகுமார திசாநாயக்க

வடக்கில் இடம்பெறும் செயற்பாடுகள் ஜேர்மனி நாசி இராணுவத்தின் செயற்பாட்டை விடவும் மோசமானவையாகும். அங்கு குடும்பத்துடன் படையினர் புகைப்படம் எடுத்து வீடுகளில் மாட்டி வைத்து படத்தில் இருப்பவர்களை விட கூடுதலாக இருப்போரை கைது செய்யும் நடைமுறை பின்பற்றப்படுகிறது. இந்த நடைமுறை அந்த மக்களை மிகமோசமான நிலைக்கு தள்ளி விடும் என்று ஜே.வி.பி. எம்.பி. அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு அதிகாரம் வழங்குவது ஆபத்தானது. அவசரகாலச்சட்டம் பாராளுமன்ற பிரதிநிதிகளின் பின்னால் வருவதற்கு முன்னர் அவற்றை நீக்குவதற்கு தீர்மானிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

அவசரகாலச் சட்டத்தை நீக்க வேண்டும் என்ற சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், யுத்தம் நிறைவடைந்து 20 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் நாட்டை சாதாரண சட்டத்தின் கீழ் நிர்வகிக்காமல் தொடர்ந்து அவசரகாலச் சட்டத்தின் கீழ் நிர்வகிக்க வேண்டிய தேவை என்ன?

இலங்கையிலும் உலகத்திலும், அரசாங்கத்திற்கு எதிரான உள்நாட்டு, வெளிநாட்டு இராணுவச் செயற்பாடு, மனிதனால் இன்றேல் இயற்கையான முறைமையில் தொற்றுகின்ற தொற்றுநோயை கட்டுப்படுத்துவதற்கு, சிவில் குழப்பங்களை கட்டுப்படுத்தல், பொருளாதார நெருக்கடி மற்றும் வேøலநிறுத்தம் ஆகியவற்றை கட்டுப்படுத்தல் ஆகிய நான்கு காரணங்களை அடிப்படையாக கொண்டே அவசரகாலச் சட்டம் நீடிக்கப்படுகிறது.

கடந்த நான்கு வருடங்களாக யுத்தத்தை காரணம் காட்டி அதனை அடிப்படையாக கொண்டு பாதுகாப்பு அமைச்சருக்காக பிரதமர் ஒவ்வொரு மாதமும் அவசரகாலச்சட்டத்தை நீடித்துக் கொள்வதற்கு சபையின் அனுமதியை கோரிநின்று அறிக்கையும் சமர்ப்பித்து இழப்பீடுகள், மீட்கப்பட்ட., கைப்பற்றப்பட்ட விபரங்களுடன் புள்ளி விபரங்களையும் சமர்ப்பிப்பார்.

1948 ஆம் ஆண்டிற்கு பின்னர் 1953 ஆம் ஆண்டில் ஹர்த்தால், 1958 இல் சிவில் குழுப்பங்கள், 1959 இல் பண்டாரநாயக்க படுகொலை, 1980 இல் ஐ.தே.க.வின் வேலைநிறுத்தம் இவற்றை அடிப்படையாக வைத்துகொண்டே அவசரகாலச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அப்போதெல்லாம் மேலே கூறப்பட்ட நான்கு காரணங்களும் முன்வைக்கப்பட்டன.

சிவில் குழப்பங்கள், அராஜகம், இயற்கை அனர்த்தங்கள் இல்லையென்றால் தொடர்ந்து அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்துவது ஏன்? நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் இந்தச் சட்டத்தை நீடிக்கின்றதா? இல்லை. மாறாக அரசாங்கம் தனது அரசியலை முன்வைக்கவும் எதிர்மறையான அரசியலில் ஈடுபடுவோரை கட்டுப்படுத்தவுமே இந்த சட்டத்தை பயன்படுத்துகின்றது. இது யோக்கியமானது அல்ல.

சாதாரண சட்டத்தின் கீழ் சாட்சி நீதிவான் நீதிமன்ற நீதிவானின் முன்னிலையிலேயே சாட்சியளிப்பார். ஆனால், அவசரசாலச் சட்டத்தின் கீழ் உதவி பொலிஸ் அத்தியட்சர் முன்னிலையிலேயே சாட்சியம் பெற்றுக்கொள்ளப்படுகின்றது. நபர்களை கைது செய்வதற்கும் அரசியல் செயற்பாட்டை முடக்குவதற்குமே இந்த சட்டம் பயன்படுத்தப்படுகின்றது.

சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்படும் ஒருவரை நீதிவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தாது 48 மணிநேரம் இந்த சட்டத்தின் கீழ் தடுத்துவைக்க முடியும். இந்த செயற்பாடு அடிப்படை உரிமையை மீறுகின்ற செயற்படாகும்.

நீதிவான் அனுமதியின்றி ஒருவரை 90 நாட்களுக்கு தடுத்து வைக்க முடியும். அதற்கான அதிகாரம் யாருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதற்கு பின்னர் நீதிவானின் முன்னிலையில் ஆஜர்படுத்தி மேலும் ஆறு மாதங்களுக்கு தடுத்துவைப்பதற்கான உத்தரவு பெற்றுக்கொள்ளப்படுகின்றது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு தடுத்து வைப்பதற்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அவர் சுயாதீனமான அரச அதிகாரி இல்லை. நேரடியாகவே அரசியல் நியமனத்தின் மூலமாக நியமிக்கப்பட்டவர்.

களனி, கொழும்பு தொகுதிகளில் அரசியல் கூட்டங்களில் உரையாற்றுகின்றார். அவரினால் தான் யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது என்று விவாதிக்கட்டும். அது தவறில்லை. ஆனால், அரசியல் கூட்டங்களில் ஏறுகின்ற அதிகாரி ஒருவருக்கு கையொப்பம் இடுவதற்கான அதிகாரத்தை கொடுப்பதா? லங்கா ஈ நியூஸ் பத்திரிகை ஆசிரியருக்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் அச்சுறுத்தல் விடுத்தார். அதன் பின்னர் எவ்விதமான குற்றச்சாட்டுகளும் இன்றி கைதுசெய்யப்பட்ட அவர் தடுத்து வைக்கும் உத்தரவின் பிரகாரம் தடுத்து வைக்கப்பட்டு எவ்விதமான வழக்குகளும் இன்றி விடுவிக்கப்பட்டார்.

சட்டம் சாதாரண சட்டமாக இன்மையினால் மனித உரிமைகள் மீறப்படுகின்றன. அடிப்படை உரிமை அப்பட்டமாக மீறப்படுகின்றது. அதுமட்டுமின்றி எதிரணியின் அரசியலை முடக்குவதற்கும் உண்மையை எழுதும் ஊடகங்களை அடக்கி எழுதுவோரை கைதுசெய்வதற்கும் இந்த அவசரகாலச் சட்டம் பயன்படுத்தப்படுகின்றது.

நீதிமன்றத்தின் அனுமதியை பெறாமல் வீட்டிற்குள் புகுந்து தேடுதலை நடத்த முடியாது. சோதனைக்கு உட்படுத்த முடியாது. ஆனால், எவ்விதமான உத்தரவையும் பெறாமல் படையினர் வாகனங்கள், வீடுகளுக்குள் உள் நுழைந்து சோதனையிடுகின்றனர். இவ்வாறான அதிகாரம் வடக்கு, கிழக்கிலேயே உபயோகிக்கப்படுகின்றது. யுத்தம் முடிவடைந்துள்ள நிலையிலும் அங்குள்ள மக்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர். கடத்தல், அச்சுறுத்தல், கைது மற்றும் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. பயப்பீதியில் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

அங்கு சுதந்திரம் மற்றும் சாதாரண வாழ்க்கையை வேகப்படுத்த வேண்டும். நீதிமன்றத்தின் உத்தரவினை பெறாது உறுப்புரையினை மீறியே செயற்படுத்தப்படுகின்றது.

அரசியலமைபின் பிரகாரம் பேச்சு, எடுத்து உரையாற்றுதல் மற்றும் மக்களை சேர்க்கும் உரிமை இருக்கின்றது. அது அடிப்படை உரிமையாகும். எனினும் அவசரகாலச் சட்டத்தின் கீழ் சொத்துக்களை கைப்பற்ற முடியும் அரசுøடமையாக்கவும் முடியும். 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பில் பல்வேறு குறைபாடுகள் இருக்கின்றன. எனினும் அடிப்படை உரிமை அதில் பாதுகாக்கப்பட்டுள்ளது.

காணி உரிமையாளர்களிடமிருந்து காணியை சுவீகரிப்பதற்கு 72 நாள் கால அவகாசம் வழங்கப்பட வேண்டும். மேன்முறையீடுகளுக்கு பின்னர் காணி உரிமையாளரின் எதிர்ப்பின்றி காணியை சுவீகரிக்க வேண்டும். அந்த முறைமை இன்று பின்பற்றப்படுவதில்லை.

பெற்றோர், பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள் என காணி உரிமை கலாசாரம் அதுவும் அவுஸ்திரேலியா, பிரித்தானியாவில் இல்லாத காணி கலாசாரம் இங்கு மட்டுமே இருக்கின்றது. எந்தவித முன்னறிவித்தலும் இன்றி பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் கையொப்பத்தில் காணியை சுவீகரிக்க முடியுமாயின் பாராளுமன்றம் எதற்கு? வடக்கில் காணிகள் சுவீகரிக்கப்பட்டு அதில் 1202 வீடுகளில் பாதுகாப்பு படையினர் இருக்கின்றனர் என அரசாங்கமே ஒத்துக்கொண்டுவிட்டது.

அதுவும் தமிழ் மக்களின் வீடுகளை சுவீகரித்தமை சாதாரண சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட விடயமாகும். உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையிலும் அவசரகாலச் சட்டத்தின் கீழ் காணிகள் சுவீகரிக்கப்பட்டுள்ளன. சாதாரண சட்டத்தின் கீழ் நாட்டை நிர்வகிக்க முடியும். வடக்கில் சிவில் நிர்வாகம் இல்லை. யுத்தம் இடம்பெற்ற இடத்தில் சிவில் நிர்வாகத்தினை உருவாக்குவதற்கு காலம் தேவை.

ஆனால், 20 மாதங்கள் என்ன நடந்தது? யுத்தம் இராப்போசனம் இல்லை. நாம் பிரார்த்தனை செய்தாலும் இதுதான் நடைபெறும் என்று நினைத்திருந்தாலும் நினைப்பதை விடவும் கூடுதலாக இடம்பெறும். யுத்தத்தில் ஈடுபட்ட இருதரப்பு தொடர்பில் மக்கள் அச்சம் கொண்டிருப்பர்.

வடக்கில் இராணுவத்தினர் காலையில் ரோந்து செய்வது, மக்கள் பயணிக்கும் போது பல்குழல் பீரங்கிகள் பயணிப்பது, மாணவர்கள் பாடசாலைக்கு செல்கின்ற வேளையில் இராணுவ டிரக் வண்டிகள் பயணிப்பது உளவியல் ரீதியிலான பாதிப்பை ஏற்படுத்தும். இதன் மூலமாக மக்களை சாதாரண வாழ்க்கைக்கு கொண்டு வரமுடியாது. உள்ளூராட்சி மன்றங்களில் அரசாங்கத்தின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு நாங்கள் எதனையும் செய்ய முடியாது. வடக்கில் ஒடுக்கப்பட்ட மக்கள் வழமைக்கும் சாதாரண வாழ்க்கைக்கும் திரும்புகையில் குறுகிய அரசியல் நோக்கத்திற்காக அவர்களை பயன்படுத்தக் கூடாது. பல கட்சிகளுக்கும் இடமளிக்க வேண்டும். இடம்பெயர்ந்த மக்களின் வாக்குரிமையை பாதுகாக்க வேண்டும். வாக்குரிமையை பாதுகாக்கவில்லை என்றால் மக்கள் சாதாரண வாழ்க்கைக்கு எப்படி திரும்புவர்? சட்டத்தை திருத்தியிருக்கலாம். வடக்கில் தேசிய நிலைமையினை கருத்தில் கொண்டு விசேட ஏற்பாடுகளை கொண்டு வந்திருக்கலாம். வடக்கில் தேர்தலில் போட்டியிடும் ஜே.வி.பி. வேட்பாளர்கள் கைது செய்யப்படுகின்றனர்; அச்சுறுத்தப்படுகின்றனர். பழைய முறைமையிலிருந்து மீளமுடியவில்லை என்றால் வடக்கில் அல்ல, இங்கு அச்சுறுத்தவும் அங்கு சிவில் நிர்வாகத்தை உருவாக்க வழிசமைக்கவும்.

நல்லூர் கோப்பாய் பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசத்தில் மாவட்ட செயலாளருக்கு தெரியாமல் படையினர் குடும்பத்துடன் புகைப்படம் எடுத்து 100 ரூபாவையும் பெற்றுக்கொண்டு அதில் ஒரு பிரதியை படைமுகாமிற்கு கொண்டுசெல்வதுடன் மற்றொன்றை வீட்டின் முன்னால் தொங்க வைத்துவிட்டு செல்கின்றனர். படையினர் தேடுதல் நடத்தும்போது புகைப்படத்தில் இருப்பவரை விட ஒருவர் கூடுதலாக இருந்தால் அவரை கைது செய்து அழைத்துச் செல்கின்றனர்.

ஜேர்மனியில் நாசிக இராணுவம் செய்ததை விடவும் இது மிக மோசமான நடவடிக்கையாகும்.இதனால் அங்குள்ள மக்கள் எவ்வாறான மன உளைச்சலுக்கு முகம்கொடுப்பர். பாதுகாப்பு படையினருக்கு அவசரகாலச் சட்டத்தின் கீழ் விசேட அதிகாரத்தை கொடுத்து சிவில் நிர்வாகத்தை இல்லாது வைத்துள்ளது. இது அத்தியாவசியமானது அல்ல.

சிரச ஊடக நிறுவனத்தின் மீது கல்லெறிந்தவர்களை ஊடகங்கள் படம்பிடித்து காண்பித்தவேளையில் அவசரகாலச் சட்டத்தின் கீழ் அவர்கள் கைது செய்யப்படவில்லை. ஆனால், அதேமுகங்களை கொண்ட சுவரொட்டிகள் களனி தொகுதியில் கை கூப்பிய நிலையில் மதில்களில் ஒட்டிவிடப்பட்டுள்ளன.

மக்கள் பிரதிநிதிகள் தாக்கப்படுகின்றனர். அவர்கள் அவசரகாலச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவில்லை. ஆனால், அச்சட்டத்தின் கீழ் எதிர்க்கட்சியினரும், ஊடகங்களும் தாக்கப்படுகின்றன.

அவசரகாலச் சட்டத்தின் கீழ் தனிநபருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்பதுடன் சட்டமா அதிபர் திணைக்களத்தின் செயற்பாடு கேள்விக்குறியாகியுள்ளது என்பதுடன் அவசரகாலச் சட்டம் (உங்களுக்கு) பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பின்னால் வருவதற்கு முன்னர் அவற்றை நீக்குவதற்கு தீர்மானிக்க வேண்டும் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

யாழ்., கிளிநொச்சி மாவட்டங்களில் உள்ளூராட்சி தேர்தலை நடத்த நீதிமன்றம் இடைக்கால தடை

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் 19 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை எதிர்வரும் 17 ஆம் திகதி நடத்தாது ஒத்திவைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த 19 சபைகளுக்கான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரும், அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று நடைபெற்ற போதே இந்த இரு மாவட்டங்களுக்கான உள்ளூராட்சி சபை தேர்தலை 17 ஆம் திகதி நடத்த வேண்டாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என்பதற்குப் பதிலாக ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு எனும் சொல் பயன்படுத்தப்பட்டமையினாலேயே 19 சபைகளுக்கான வேட்புமனுக்களும் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளினால் நிராகரிக்கப்பட்டிருந்தன.

கடந்த வாரம் அக்குரஸ்ஸை, அக்மீமனை, மொனறாகலை ஆகிய உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலையும் ஒத்திவைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் இங்கே தொடர்க...

லிபிய தூதரகத்தில் 400க்கும் அதிகமான இலங்கையர் தஞ்சம்: விமானம், கப்பலில்; அழைத்து வருவதில் அரசாங்கம் தீவிரம்

இந்தியாவின் உதவியை பெறவும் நடவடிக்கைலிபியாவின் திரிபோலி நகரிலுள்ள இலங்கை தூதரகத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கையரை நாட்டிற்கு அழைத்துவர துரித நேரடி நடவடிக்கைகளில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது என வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் டிலான் பெரேரா நேற்று தெரிவித்தார்.

இதேவேளை, லிபியாவில் சீன நிறுவனமொன்றில் தொழில் புரிந்த 36 இலங்கையர்களை சீன நிறுவனம் கிரேக்க நாட்டுக்கு கப்பல் மூலம் பாதுகாப்பாக அழைத்துச் சென்றுள்ளது. இவர்களையும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான விமான டிக்கட்டுகளை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அனுப்பவுள்ளது.

சுமார் 400 க்கும் மேற்பட் டோர் தற்போது லிபியாவின் திரிபோலி நகரிலுள்ள இலங்கை தூதரகத்துக்கு பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்களுக்கான விமான டிக்கட்டுகளை வழங்கவும் பணியகம் ஆயத்தமாக உள்ளது என தூதுவர் சுதந்த கணேகல ஆராய்ச்சி கூறினார்.

எமிரேட்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான விமானம் அல்லது கட்டார் எயார் சேவைக்கு சொந்தமான விமான மொன்று அல்லது வேறு விமானமொன் றையாவது வாடகைக்கு அமர்த்தி இலங்கையரை அழைத்துவர முடியுமா என்பது பற்றியும் ஆராய்ந்து வருகிறோம் எனக் கூறிய அமைச்சர் டிலான், திரிபோலி விமான நிலையத்தில் தரையிறக்குவது பிரச்சினையாக உள்ளது என்றும் கூறினார்.

மேலும் லிபியாவில் எகிப்தின் எல்லையில் தொழில் புரியும் இலங்கையரை எல்லையினூடாக எகிப்துக்குள் பாதுகாப்பாக அழைத்து வர முடியுமா என்பது பற்றி ஆராயுமாறு எகிப்திலுள்ள இலங்கை தூதருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன் அவசர தேவை நிமித்தம் எகிப்து தூதருக்கு 2 மில்லியன் ரூபாவும் உடனடியாக அனுப்பப்பட்டுள்ளதாகவும் பணியகத்தின் தலைவர் சட்டத்தரணி கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார்.

மேலும் லிபியாவிலுள்ள இலங்கையரை கொண்டுவர கப்பல் ஒன்றை அனுப்புவது தொடர்பாக வெளிவிவகார அமைச்சும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சும் ஆராய்ந்து வருகிறது எனக் கூறிய அமைச்சர் டிலான், இந்தியாவும் தமது நாட்டு பிரஜைகளை லிபியாவிலிருந்து பாதுகாப்பாக அழைத்து வருவதற்காக கப்பலொன்றை லிபியாவின் மோல்டா துறைமுகத்துக்கு அனுப்புகிறது. இந்தியர்களுடன் எமது இலங்கையரையும் அதே கப்பலில் அழைத்து வருவதற்கான முயற்சியிலும் நாங்கள் ஈடுபட்டுள்ளோம் என்றார்.

தொழில்வாய்ப்புக்காக இலங்கையரை லிபியாவுக்கு அனுப்பிய வேலைவாய்ப்பு முகவர்களையும் அமைச்சர் டிலான் அழைத்து தற்போதைய லிபிய நிலைமை பற்றியும் ஆராய்ந்ததுடன் இலங்கையரை திருப்பி அழைக்க முகவர்களின் பங்களிப்பும் தேவை என்பது பற்றியும் கூறினார்.

லிபியாவில் சுமார் 1000 க்கும் மேற்பட்ட இலங்கையர் தொழில் புரிந்து வருவதாகவும் இவர்கள் தொடர்பான கணக்கெடுப்புகள் எடுக்கப்படுவதாகவும் பணியகத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

2015ம் ஆண்டுக்குள் பால்மா இறக்குமதி முற்றாகத் தடை * மாற்றுத் திட்டங்கள் தயாரிப்பு

உள்ளூரில் தன்னிறைவு காணும் திட்டம் இறக்குமதிச் செலவு தினமும் 2 மில். டொலர்2015ம் ஆண்டிற்குள் பால் மா இறக்குமதி முற்றாகத் தடைசெய்யப்படுமென மில்கோ நிறுவனத் தலைவர் சுனில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலுக்கமைய அதற்கான மாற்றுத் திட்டங்களை நடைமுறைப்படுத்தத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்த அவர், அதற்கான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் உள்ளூர் உற்பத்தியை ஊக்குவித்து அவற்றில் தன்னிறைவு காணும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஒரு நாளைக்கு பால் மா இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டு வருகிறது. இந்நிலை மாற்றப்பட வேண்டுமென தெரிவித்த அவர், 2015ம் ஆண்டிற்குள் பால்மா இறக்குமதி முற்றாக நிறுத்தப்படுமெனவும் தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று அலரி மாளிகையில் நடைபெற்ற மெளபிம லங்கா மன்றத்தின் சூரியசிங்க சான்றிதழ் வழங்கும் வைபவத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மில்கோ நிறுவனத் தலைவர் தமதுரையில் மேலும் தெரிவிக்கையில் :

உலகில் பெருமளவிலான நாடுகள் தமது உற்பத்தியில் தன்னிறைவு கண்டுள்ளன. அவுஸ்திரேலியா போன்ற

பால் உற்பத்தி நாடுகள் தற்போது பால் மாவைத் தவிர்த்து பசும் பாலை உபயோகத்திற் கொள்வதைப் பழக்கமாக்கிக் கொண்டுள்ளன. எமது நாட்டிலும் பசும்பாலை முழுமையாக பாவனைக்குக் கொண்டுவரும் நிலை விரைவில் உருவாக்கப்படும் எனவும் அவர் மேலும்
மேலும் இங்கே தொடர்க...

வடக்கை அபிவிருத்தி செய்வதில் அரசு அர்ப்பணிப்புடன் செயற்பாடு ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் பாராட்டு

மோதல்கள் இடம்பெற்ற வடபகுதியில் உட்கட்டமைப்புக்களை அபிவிருத்தி செய்வதில் இலங்கை அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் தெற்காசியாவுக்கான ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழு தெரிவித்துள்ளது.

ஐந்து நாட்கள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்திருந்த ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழு நேற்றைய தினம் கொழும்பு சினமன்ட் கிரான்ட் ஹோட்டலில் ஊடகவியலாளர் மாநாடொன்றை நடத்தியிருந்தது. முன்னாள் மோதல் பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டு அங்குள்ள நிலைமைகளைக் கண்டறிந்ததுடன், பாதிக்கப்பட்ட மக்களையும் நேரடியாகச் சந்தித்து அவர்களின் நிலைப்பாடுகளைக் கேட்டறிந்துகொண்டதாக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஐரோப்பிய ஒன்றியக் குழுவின் தலைவர் ஜீன் லம்பெர்ட் கூறினார்.

வடபகுதியில் பாடசாலைகள், வீதிகள், நீர்விநியோகம், மின்விநியோகம், உள்ளிட்ட உட்கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

தமது இலங்கை விஜயத்தின்போது இலங்கை சபாநாயகர், வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ, எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், வடபகுதி அரசாங்க அதிபர்கள் ஆகியோரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந் ததாகவும் அவர் தெரிவித்தார். வடபகுதியில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் அபிவிருத்திப் பணிகளின் எதிர்காலத் திட்டங்களை உரிய தரப்பினரிடம் கேட்டறிந்து கொண்டதுடன், ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்பட்டிருக்கும் அபிவிருத்திப் பணிகளைப் பார்வையிட்டதாகவும் அவர் கூறினார்.

அதேநேரம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், அரசாங்கத்திற்கும் இடையில் ஆரம்பித்திருக்கும் பேச்சுவார்த்தைகளைத் தாம் வரவேற்பதாகவும், இப்பேச்சுவார்த்தைகள் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வொன்று எட்டப்படவேண்டுமென்றும் ஐரோப்பிய ஒன்றியக் குழுவின் தலைவர் ஜீன் லம்பெர்ட் மேலும் கூறினார். இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவரும் கலந்துகொண்டிருந்தார்.
மேலும் இங்கே தொடர்க...

களுத்துறை கடலில் மூழ்கி பிரான்ஸ் பிரஜை பலி






களுத்துறை கடலில் நீராடச் சென்ற பிரான்ஸ் நாட்டுப் பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி இறந்துள்ளார். வடக்கு களுத்துறை ஹோட்டலொன்றில் தங்கியிருந்த இவர், ஹோட்டலுக்கு பின்பக்கமாக உள்ள கடலில் நீராடிய போதே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 52 வயதான சார்ள்ஸ் ரொபட் என்பவரே இவ்வாறு இறந்துள்ளதோடு, பிரேத பரிசோதனையின் பின்னர் இவரின் சடலம் மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் கூறினர். இந்த சம்பவம் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்றது.

இறந்தவரின் சடலத்தை பிரான்ஸ் நாட்டுக்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வடக்கு களுத்துறை பொலிஸார் மேலதிக விசாரணை நடத்துகின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

‘‘தப்பபிப்பிராயம்’ உருவாகாது முஸ்லிம் தமிழர் நடந்துகொள்ள வேண்டும்

இலங்கை நான்கு மதம் களையும் இரண்டு மொழிகளையும் கொண்ட நாடு புத்தம் ஹிந்து முஸ்லிம் கிறிஸ்தவம் இவை மாதங்கள் ஆனால் இலங்கையில் மொழி இரண்டு இது எமது கருத்து


சிங்கள, தமிழ் மக்களைப் போலவே முஸ்லிம்களும் நாட்டுப்பற்றுள்ளவர் களாகச் செயற்பட்டு பிறந்த மண்ணுக்கு விசுவாசமாக நடக்க வேண்டும். பிறந்த நாட்டை நேசிக்குமாறு நபி (ஸல்) அவர்களும் போதித்துள்ளார்கள். விளையாட்டுத் துறையாக இருந்தாலும் நமது நாட்டுக்கே நாம் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என மேல் மாகாண ஆளுநர் அலவி மெளலானா மற்றும் பாராளுமன்ற உறுப்பினரும் கிரிக்கெட் வர்ணனையாளருமான ஏ. எச். எம். அஸ்வர் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

இலங்கை பாகிஸ்தான் அணிகளுக்கிடை யிலான கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது. இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக் கிடையில் கிரிக்கெட் போட்டி நடைபெறும் போது இந்திய முஸ்லிம்கள் இந்தியாவையே ஆதரிக்கின்றனர். பாகிஸ்தான் - பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் நடைபெறும் போட்டிகளின் போது பங்காதேஷ் நாட்டவர் பங்களாதேஷணுக்கே ஆதரவு தெரிவிக்கின்றனர்.

வேறுநாடுகளுடன் நாம் நட்புறவு வளர்க்கலாம். ஆனால், விளையாட்டுக் காகவாவது முஸ்லிம்கள் வேறு நாட்டை ஆதரிக்கக் கூடாது. இலங்கையையே ஆதரிக்க வேண்டும்.

எந்த விதத்திலும் எம்மீது ஏனையவர்கள் தப்பபிப்பிராயம் சொல்லாத வகையில் நடக்க வேண்டியது. இக்காலகட்டத்தில் மிக முக்கியமாகும். சகல முஸ்லிம்களும் இதனை கருத்திற்கொண்டு செயற்படுமாறு கோருகிறோம்.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, மற்றும் முஸ்லிம் அமைப்புகள், பள்ளிவாசல்கள் என்பனவும் இதனை தெளிவாக விளக்கியுள்ளன எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

நீதி அமைச்சர் ஹக்கீம், பிரதம நீதியரசர், பொலிஸ் மா அதிபர் நேற்று சந்திப்பு வடக்கு, கிழக்கு நீதிமன்ற செயற்பாடுகள் பற்றி ஆராய்வு



வடக்கு, கிழக்கு உட்பட நாட்டிலுள்ள அனைத்து நீதிமன்ற நடவடிக்கைகளும் விரிவுபடுத்தப்பட வுள்ளன. வடக்கு, கிழக்கு நீதிமன்றங்களில் தமிழ் மொழியில் கருமமாற்றக்கூடிய பொலிஸ் உத்தியோகத்தர்களும் நியமிக்கப்படவுள்ளனர்.

பிரதம நீதியரசர் அசோக்க டி சில்வா, நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம், பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய ஆகியோருக்கிடையிலான விசேட சந்திப்பு நேற்று உச்ச நீதிமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்ற போதே மேற்கண்ட விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.

நீதிமன்ற பணிகளை மேலும் செயற்திறன்மிக்கதாக மேற்கொள்ளுவது மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள நீதிமன்றங்களை மேம்படுத்துவதற்கான நடவடிக்கை என்பன குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டதாக நீதி அமைச்சு தெரிவிக்கிறது.

இந்த சந்திப்பு உச்சநீதிமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்றது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் புதிதாக நீதிமன்றங்கள் ஆரம்பிப்பதற்குத் தேவையான கட்டடங்களை பெறுவது தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. கிழக்கில் வாகரை, கலுவாஞ்சிக்குடி, கிண்ணியா மற்றும் ஏறாவூர் நீதிமன்றங்களை துரிதமாக மீள ஆரம்பித்தல், ஈச்சிளம்பற்று, கிளிவெட்டி ஆகிய இடங்களில் நீதிமன்றங்களை ஆரம்பிப்பதற்கான சாத்தியங்களை ஆராய்தல், கிழக்கில் நீதிபதிகளுக்கு விடுதி வசதி அளித்தல் என்பன குறித்தும் இங்கு முக்கியமாக ஆராயப் பட்டது.

புதிதாக ஆரம்பிக்கப்பட்ட மற்றும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ள நீதி மன்றங்களில் குற்றவியல் வழக்கு களை விசாரிப்பதற்கு ஏதுவாக பொலிஸ் அத்தியட்சகர்களை நீதிபதி களாக நியமிப்பது பற்றியும் விரி வாக ஆராயப்பட்டுள்ளது. இப் பகுதிகளில் நீதிமன்றங்கள் ஆரம்பி ப்பது குறித்து குறித்த பிரதேச பொலிஸ் நிலையங்களை அறிவூட்டவும் நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒலுவி லில் உள்ள பொலிஸ் சோதனைச் சாவடிக்குப் பதிலாக நிரந்தர பொலிஸ் நிலையமொன்றை அமைப் பது குறித்தும் இங்கு கவனம் செலு த்தப்பட்டது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள நீதிமன்றங்க ளில் தமிழ் மொழியில் பணியாற்ற க்கூடிய பொலிஸாரை ஈடுபடுத்துவ தற்கான வழிவகைகள் பற்றியும் கவனத்தில் எடுக்கப்பட்டது.

தமிழ் மொழியில் பணியாற்றக்கூடிய சுமார் 2 ஆயிரம் பொலிஸார் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் இங்கு தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் தமிழ் மொழியில் பணியாற்றும் பொலிஸார் மேலும் நியமிக்கப்படுவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். நியமனம் வழங்கப்பட்டு ள்ள பொலிஸாருக்கு (6) இடங்களில் பயிற்சி வழங்கப்படுகிறது என்றும் பொலிஸ் மா அதிபர் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

இத்தாலியில் ஆயுத முனையில் கொள்ளை இலங்கையர் மூவர் கைது

இத்தாலி நாட்டில் ஆயுத முனையில் கொள்ளையொன்றில் ஈடுபட்ட இலங்கையர் மூவர் அந்நாட்டுப் பொலிஸாரால் கைது செய்யப்பட் டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

நடுத்தர வயதில் இருக்கும் இலங்கையர் இருவரும், இளைஞர் ஒருவரும் சேர்ந்தே ஆயுத முனையில் கொள்ளையடிக்க முயன்று மாட்டிக் கொண்டுள்ளதாக இத்தாலியப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் நேற்று முன்தினம் நடைபெற்றுள்ளது.

மூவரும் சேர்ந்து ஆயுதங்களுடன் பார்மசி ஒன்றுக்குள் நுழைந்து அங்கிருந்த ஊழியர்களை மிரட்டிப் பெருந்தொகைப் பணத்தைக் கொள் ளையடிக்க முயன்ற போதே வசமாக மாட்டிக் கொண்டுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...