27 பிப்ரவரி, 2011

புலம்பெயர்ந்த தமிழர்களுடன் பேச்சு நடத்தத் தயாராகிறது அரசு




புலம்பெயர்ந்த தமிழர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் இந்த பேச்சுவார்த்தையை நடத்துவதற்கு வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் ஒழுங்குபடுத்தியுள்ளதாக அரச தரப்பு பேச்சாளர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

மேற்குலக நாடுகள் இலங்கை தொடர்பாகக் கொண்டிருக்கும் எண்ணக்கருவை மாற்றுவதற்காக புலம்பெயர்ந்துள்ள தமிழர்களின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வதே இந்தப் பேச்சுவார்த்தையின் முக்கிய நோக்கமாகும் எனவும் கூறப்படுகிறது. மேலும் வடக்கு கிழக்கு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் முதலீட்டு ஒத்துழைப்புக்களையும் பெற்றுக் கொள்ளவும் எதிர்பார்த்துள்ளதாக அரச தரப்பு பேச்சாளர் கூறியுள்ளார்.

தற்போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட அரசியல் கட்சிகளுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பேச்சுவார்த்தைக்கு சமாந்திரமாக புலம்பெயர்ந்த தமிழர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்துவதுடன் படக்கு கிழக்கு பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்றை பெற்றுக்கொளவது குறித்தும் கருத்துகள் பரிமாற்றிக்கொள்ளபடவுள்ளதாக அறியவருகிறது.
மேலும் இங்கே தொடர்க...

பேச்சுவார்த்தை விபரங்களை வெளியிட அரசு-தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மறுப்பு

அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையின் போது எதைப்பற்றி பேசுகின்றோம். என்ன கோரிக்கையை வலியுறுத்துகின்றோம் என்று ஏதும் கூற முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், சந்திப்பு நடக்கும் அதுபற்றி எதுவும் கூற இயலாது என அரச தரப்பும் கூறுகின்றன.

அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நடைபெறும் பேச்சுவார்த்தை தொடர்பான விபரங்களைத் தெரிவிக்குமாறு கேசரி வார இதழின் சார்பில் கேட்டபொழுதே இரு தரப்பினரும் இவ்வாறு பதில் அளித்தனர்..

தமிழ் மக்களுடைய பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதற்காக இருதரப்பினராலும் பேசப்படவுள்ள விடயங்கள் குறித்து தமிழ் மக்களுக்கே அறிந்துகொள்ள முடியாத அளவுக்கு இந்தப் பேச்சுவார்த்தைகள் வெளிப்படையாக இல்லை என்பதே முக்கியமான விடயமாகும்..

இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பாக அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் சந்திப்புக்கள் இடம்பெற்று வருகின்றன. இந்தச் சந்திப்பானது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமையவே இடம்பெற்று வருவதுடன் அரசாங்க தரப்பில் முன்னாள் பிரதமரான ரட்ணசிறி விக்ரமநாயக்க தலைமையில் அமைச்சர்களான ஜீ.எல். பீரிஸ், மற்றும் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோர் அடங்குகின்றனர்..

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் அதன் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், சுமந்திரன் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட அரசியல் கட்சிகளுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பேச்சுவார்த்தைக்கு சமாந்திரமாக புலம்பெயர்ந்த தமிழர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்துவதுடன் வடக்கு கிழக்கு பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்றை பெற்றுக் கொள்வது குறித்தும் கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்படவுள்ளதாக அறியவருகிறது.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை மீது சர்வதேச விசாரணைக்கோரி 52 ஆயிரம் கையோப்பங்கள் சேகரிப்பு:மன்னிப்பு சபை


இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் சுயாதீன சர்வதேச விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என வலியுறுத்தி 52,000 மக்கள் கையொப்பமிட்டுள்ள தாக அனைத்துலக மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் அனைத்துலக விசாரணைகள் அவசியம் என்பதை வலியுறுத்தி அனைத்துலக மன்னிப்புச்சபை கடந்த மே மாதம் உலகளாவிய ரீதியில் பிரசாரங்களை மேற்கொண்டிருந்தது. கடந்த 26 வருடங்களாக நடைபெற்ற போரில் இரு தரப்பினரும் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அது தெரிவித்திருந்தது.

தனது கோரிக்கைக்கு வலுச்சேர்க்கும் முகமாக மக்களிடம் இருந்து கையெழுத்துக்களையும் அது சேகரித்து வந்திருந்தது. தற்போது 52,000 கையெழுத்துக்களை சேர்த்துள்ள நிலையில் அதனைக் கடந்த செவ்வாய்க்கிழமை (22) ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளது. இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் ஒரு ஆலோசனைக் குழுவை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை (22) அனைத்துலக மன்னிப்புச்சபையின் இலங்கை விவகாரங்களுக்கான பிரதிநிதி ஜேலந்தா பொஸ்ரர் மற்றும் வைத்தியர் காசிப்பிள்ளை மனோகரன் ஆகியோருடன் மேலும் சிலர் ஐ.நா அலுவலகத்திற்குச் சென்று பொதுமக்கள் கையொப்பமிட்ட ஆவணங்களை சமர்ப்பித்துள்ளனர். 2006 ஆம் ஆண்டு திருமலையில் இலங்கை விசேட அதிரடிப்படையினரால் படுகொலை செய்யப்பட்ட ஐந்து பல்கலைக்கழக மாணவர்களில் ஒருவரின் தந்தையே மனோகரன் ஆவார். தமது விண்ணப்பம் தொடர்பில் ஐ.நா விரைவான நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும் எனவும், உரிய விசாரணைக்குழு அமைக்கப்படும் வரையில் தமது நடவடிக்கை தொடரும் எனவும் அனைத்துலக மன்னிப்புச்சபையின் பிரதிநிதிகள் ஐ.நா. அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.

அனைத்துலக மன்னிப்புச்சபையின் இந்தக் கோரிக்கையில் இதுவரை அமெரிக்கா இணையவில்லை என்பதால், அவர்களிடம் கோரிக்கை விடுக்குமாறு தமிழ் மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பில் அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் கிலாரி கிளின்டனுக்கு கடிதங்களை எழுதுமாறு தமிழ் மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.இதனிடையே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் வரை தமது போராட்டம் ஓயப்போவதில்லை என வைத்தியர் மனோகரன் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...