7 டிசம்பர், 2009

கிழக்கு மாகாணத்தில் மக்கள் விடுதலை இராணுவம்(PLA) எனும் புதிய இயக்கம்!


புலிகள் அமைப்பு அழிக்கப்பட்டு 6 மாதங்கள் கழிந்துள்ள நிலையில் கிழக்கு மாகாணத்தில் மக்கள் விடுதலை இராணுவம் எனும் புதிய மாக்சிஸ்ட் தமிழ் குழு ஒன்று உருவாகியுள்ளதாக லண்டன் ரைமைஸ் செய்தி வெளியிட்டுள்ளது. பிரச்சினை இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றும் இலங்கை அரச படைகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் தொடரும் என்றும் பி.எல்.ஏ என்ற மேற்படி அமைப்பு தெரிவித்துள்ளது.

கோணேஸ் என்பவரை தளபதியாக கொண்டுள்ள மேற்படி அமைப்பில் 300 உறுப்பினர்களும், 5000 உதவியாளர்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளதுடன். இந்த அமைப்புக்கும் புலிகள் அமைப்புக்கும் எந்தவித தொடர்புகளும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளதுடன்.

புலிகளின் முன்னைநாள் உறுப்பினர்களும் இணைத்து கொள்ளப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்புக்கும் பலஸ்தீனம், கியுபா, இந்தியன் மவோயிஸ்ட் போன்ற அமைப்புக்களுடன் தொடர்புகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது நன்றி நெருப்பு
மேலும் இங்கே தொடர்க...
அரச ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டது தொடர்பான விசாரணைக்கு 3 பொலிஸ் குழுக்கள்


தேசியக் கட்சியின் மாநாட்டின் போது செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் தாககப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள மூன்று விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

இந்தக் குழுக்களில் ஜாஎல, கந்தானை மற்றும் பேலியகொட ஆகிய பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த அதிகாரிகளே நியமிக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் இந்த விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐ. எம். கருணாரட்ன தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாடு வெலிசறை - நவலோக மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதன் போது செய்தி சேகரிக்கச் சென்ற இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் மற்றும் சுயாதீன தொலைக்காட்சி சேவை ஆகிய நிறுவனங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டனர்
மேலும் இங்கே தொடர்க...
ஸ்ரீ.சு.கட்சியில் இணைகிறார் எஸ்.பி.


தேசியக் கட்சியின் முக்கியஸ்தரும் மத்திய அக்கட்சியின் மத்திய மாகாண அமைச்சருமான எஸ்.பி;. திசாநாயக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைவதாகவுமு; ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்குவதாகவும் சற்று முன்னர் அறிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியில் தான் வகித்துவந்த அனைத்து பதவிகளிலிருந்தும் விலகுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் தமது ஆதரவு குறித்த கருத்துகளை இதுவரை வெளியிடாமல் இருந்த திசாநாயக்க இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் எஸ்.பி. திசாநாக்கவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது


ஈ.பி.டி.பி,யின் நிபந்தனைகளுக்கு அரசாங்கம் இணங்கியுள்ளதா?- ஜே.வி.பி. கேள்வி;


தெளிவுபடுத்துமாறும் கோரிக்கை
அதிகாரத்தின் மேலுள்ள பேராசையினாலும் ஜனாதிபதிப் பதவிக்காகவும் பயங்கரவாதத்திற்கு எதிராக இராணுவ வீரர்கள் பெற்றுக்கொண்ட வெற்றியினை அரசாங்கம் காட்டிக்கொடுக்க முனைகின்றது என்று ஜே.வி.பி.யின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா குற்றம் சாட்டினார். எதிர்க்கட்சிக் கூட்டணியில் ஒற்றுமையில்லை எனக்கூறும் அரசாங்கத்தின் கூட்டமைப்பில் பிணக்குகளே காணப்படுகின்ன. ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்க ஈ.பி.டி.பி. விதித்துள்ள நிபந்தனைகளுக்கு அரசாங்கம் இணங்கியுள்ளதா? இது குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஜே.வி.பி.யின் விசேட செய்தியாளர் மாநாடு நேற்று ஞாயிற்றுக்கிழமை பத்தரமுல்லையில் அமைந்துள்ள கட்சியின் தலைமையலுவலகத்தில் நடைபெற்ற போதே ரில்வின் சில்வா மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது:

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியினை அரசாங்கம் தற்போதுதானாகவே முன் வந்து ஏற்றுக்கொண்டுள்ளது. எதிரணியின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் சொந்தமானவரல்லர். பல்வேறு நோக்கங்களைக் கொண்ட அரசியல் கட்சிகளின் தற்போதைய பிரச்சினையாகவும், நாட்டுக்கு சவாலாகவும் காணப்படும் நிறைவேற்று அதிகார முறைமையை ஒழித்தல் மற்றும் ஜனநாயகத்தை ஸ்தாபித்தல், நல்லாட்சியை ஏற்படுத்தல் போன்ற காரணிகளுக்காக எதிரணிக் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.

எதிரணியின் பொது வேட்பாளர், பதவிக்கு வந்தவுடன் 17ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுøறப்படுதி சுயாதீன ஆணைக்குழுக்களை அமைப்பார். பின்பு பாராளுமன்றத்தைக் கலைத்து, பொதுத்தேர்தல் ஒன்றுக்குச் செல்வார். இந்த தேர்தலில் குறிப்பாக அரச ஊடகங்கள் பக்கச் சார்பற்ற முறையில் செயற்படும். பொலிஸாரும் அவ்வாறே செயற்படுவர்.

இதன் பின்னர் ஆட்சிக்கு வரும் அரசாங்கமே நாட்டைக்கொண்டு நடத்துவதோடு, நிறைவேற்று அதிகாரம் இல்லாத ஜனாதிபதியாக எதிரணியின் பொது வேட்பாளரான ஜெனரல் சரத் பொன்சேகா பதவி வகிப்பார்.

எதிரணியின் வெற்றியை தாங்கிக்கொள்ள முடியாத அரசாங்கம் பொய்ப் பிரசாரங்களைச் செய்துவருகின்றது. எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் ஒற்றுமை இல்லை என்று கூறும் அரசாங்கத்தில் கூட்டணியமைத்துள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மற்றும் ஜாதிக ஹெல உறுமயவிற்கும் இடையில் கொள்கை ரீதியாக ஒற்றுமை உள்ளதா?

ஈ.பி.டி.பி. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு பத்து நிபந்தனைகளின் அடிப்படையில் ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளது. இதனை ஈ.பி.டி.பி.யின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

அந்த பத்து நிபந்தனைகளில் முதலாவதாக 13ஆவது திருத்தச் சட்டத்தில் ஆரம்பித்து அதற்கு அப்பால் சென்று தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும். பத்தாவதாக தமிழர்களின் பூர்வீக பிரதேசங்களில் சுயாட்சிக் கொள்கையை ஏற்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளுக்கு அரசாங்கம் இணங்கியுள்ளதா என்பதனை நாட்டுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். ஜனாதிபதிப் பதவி மீதுள்ள பேராசையினால் தேசிய பாதுகாப்பு, இன ஒற்றுøம, இறையாண்மை போன்றவற்றுக்குப் பங்கம் ஏற்படுத்தும் வகையில் அரசாங்கம் செயற்படுகின்றது


ஸ்.பி.யுடன் ஜனாதிபதி மஹிந்த சந்திப்பு ஒன்றரை மணி நேரம் விரிவான பேச்சு
தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவருமான எஸ்.பி.திஸாநாயக்கவுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

ஹங்குராங்கெத்தையிலுள்ள எஸ்.பி. திஸாநாயக்வின் வீட்டிற்கு நேற்று திடீரென ஹெலிகொப்டரில் சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவருடன் ஒன்றரை மணி நேரம் விரிவான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தப் பேச்சுவார்த்தையையடுத்து ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரிப்பதற்கான முடிவினை எஸ்.பி. திஸாநாயக்க எடுத்துள்ளதாகத் தெரியவருகிறது. இந்த முடிவு குறித்து இன்று கொழும்பில் செய்தியாளர் மாநாடு ஒன்று நடத்தி எஸ்.பி. திஸாநாயக்க அறிவிப்பாரென அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.

கண்டியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பௌத்த விகாரை வைபவமொன்றில் கலந்துகொள்வதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கு சென்றுள்ளார். இதன்போது எஸ்.பி. திஸநாயக்கவின் ஹங்குராங்கெத்திதையிலுள்ள வீட்டுக்கு அவர் சென்றுள்ளார். அங்கு இருவருக்குமிடையில் விரிவான பேச்சுவார்த்øத் இடம்பெற்றுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையின் போது சில கோரிக்கைகளை எஸ்.பி. திஸநாயக்க ஜனாதிபதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் முன்வைத்துள்ளார். இதற்கு ஜனாதிபதியும் இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்கும் முடிவினை எஸ்,பி. திஸாநாயக்க எடுத்ததாக கூறப்படுகின்றது. இன்று காலை கொழும்பு தாஜ்சமுத்திரா ஹோட்டலில் எஸ்.பி. திஸநாயக்க செய்தியாளர் மாநாடு ஒன்றினை நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

அவசரகாலச்சட்ட நீடிப்புக்கு பின்னர் சபை நடவடிக்கை இடைநிறுத்தம்
பாராளுமன்ற நடவடிக்கைகளை அரசாங்கம் ஒருமாதத்திற்கு தற்காலிகமாக இடைநிறுத்தி வைப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும் இது தொடர்பில் இன்று திங்கட்கிழமை இறுதி தீர்மானம் எட்டப்படும் என்றும் நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.

ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக பாராளுமன்ற நடவடிக்கைகளை இடைநிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகி, திகதி குறிப்பிடப்பட்டதன் பின்னர் பாராளுமன்றம் நாளை செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு கூடவிருக்கின்றது. அன்று அவசரகாலத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை மீதான விவாதம் நடத்தப்படும். அவசரகாலச்சட்டத்தை நீடித்துக்கொண்டதன் பின்னர் ஜனவரி இரண்டாம் வாரம் வரையில் பாராளுமன்ற நடவடிக்கைகளை இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் இதுதொடர்பில் இன்று நடைபெறுகின்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்திலேயே இறுதி தீர்மானத்தை எட்டுவதற்கு அரசாங்கம் முடிவெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பாராளுமன்ற நடவடிக்கைகளை ஜனாதிபதி தேர்தல் நிறைவடையும் வரையிலும் தற்காலிகமாக இடைநிறுத்திவைப்பதற்கு அரசாங்கம் கலந்தாலோசித்த போதிலும் அவசரகாலச்சட்டத்தை நீடித்துக்கொள்ளவேண்டியிருப்பதனால் அடுத்தமாதம் வரையிலும் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவிருக்கின்ற பிரதான இரு வேட்பாளர்களின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதை அடுத்து ஆளும் எதிர்க்கட்சிகள் தங்களது பிரசார நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற கட்சிகளின் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், பாராளுமன்ற, மாகாண, பிரதேச சபைகளின் உறுப்பினர்கள், அமைப்பாளர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பிரசாரத்தை தீவிரமாக முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில் அவசரகாலச்சட்டத்தை மேலும் ஒருமாதத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை மீதான விவாதம் வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்திற்கு பின்னர் ஆரம்பித்து மாலை 3.30 மணிவரை நடைபெறும். அதற்கு பின் போக்குவரத்து அமைச்சுக்கு 475 கோடிரூபாவை ஒதுக்கிக்கொள்வதற்கும், விவசாய அபிவிருத்தி அமைச்சுக்கு 5 கோடி ரூபாவை ஒதுக்கிக்கொள்வதற்குமான குறைநிரப்பு பிரேரணைகள் மீதான விவாதம் மாலை 4.30 மணிவரை நடைபெறும்
மேலும் இங்கே தொடர்க...
மூவின மக்களும் எவ்வித பேதமுமின்றி ஜனாதிபதி மஹிந்தவை ஆதரிப்பார்கள்-அரசாங்கம் நம்பிக்கை


வடக்கு, கிழக்கு உட்பட முழு நாட்டையும் அபிவிருத்தி செய்யும் நோக்கிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மக்களின் ஆணையை கோரிநிற்கின்றார். ஜனாதிபதி தேர்தலில் அவரை அனைத்து மக்களும் ஆதரிப்பார்கள் என்று மனித உரிமைகள் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது நாட்டில் நிலவிய பயங்கரவாதத்தை முடிவுக்குக்கொண்டு வந்த ஜனாதிபதி தற்போது நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக மக்களின் ஆணையை கோரி நிற்கின்றார்.

எனவே ஜனாதிபதிக்கு இந்த நாட்டின் சிங்கள தமிழ் மற்றும் முஸ்லிம் உட்பட அனைத்து மக்களும் எந்தவிதமான பேதமும் இன்றி ஆதரவு வழங்குவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது.

தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் எமது அரசாங்கத்தின் மீது பாரிய நம்பிக்கையை வைத்துள்ளனர். அøனத்து இன மக்களுக்கும் சம உரிமைகளை வழங்கவேண்டும் என்றும் அவற்றை உறுதிபடுத்தவேண்டும் என்பதும் எமது அரசாங்கத்தின் நோக்கமாகும்.

யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றப்பட்டுவருகின்றனர். யாரும் எதிர்பார்க்காத விதத்தில் அம்மக்கள் மிக விரைவாக மீள்குடியேற்றப்படுகின்றனர். அத்துடன் முகாம்களில் உள்ள மக்களுக்கு சுதந்திர நடமாட்டத்துக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் வடக்கு கிழக்குப் பகுதியை அபிவிருத்தி செய்வதிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் மிகவும் அர்ப்பணிப்புடன் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றது. முழு நாட்டையும் அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தை மேற்கொண்டுள்ளோம். இதேவேளை தேசிய நல்லிணக்க வேலைத்திட்டத்தை மேற்கொள்வதற்கும் அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது அனைத்து மக்களும் நம்பிக்கை வைத்துள்ளனர்
மேலும் இங்கே தொடர்க...