18 மார்ச், 2011

புகுஷிமா அனர்த்தத்தின் எதிரொலி: அணுஉலை நிர்மாணத்தை இடைநிறுத்தியது சீனா

ஜப்பான் புகுஷிமா அணு உலை வெடிப்பினால் ஏற்பட்ட தாக்கம் இதனால் அணு சக்தி அபாயம் குறித்து உலகளவில் ஏற்பட்டுள்ள பீதி என்பவற்றை தொடர்ந்து புதிய அணு உலைகளை அமைக்கும் செயற்பாடுகளை சீனா இடை நிறுத்தியுள்ளது.

ஜப்பானில் அண்மையில் ஏற்பட்ட நில நடுக்கம் மற்றும் அதனைத் தொடர்ந்து வந்த சுனாமியால் அந்நாட்டின் அணு உலைகள் வெடித்து, கதிர் வீச்சு பரவி வருகிறது.

ஜப்பானில் ஏற்பட்ட இந்த ஆபத்து உலகின் பல நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அணு உலைகள் வைத்திருக்கும் அனை த்து நாடுகளுமே, தங்களது அணு உலை களின் பாதுகாப்பு குறித்து மீள் பரிசீலனை செய்து வருகின்றன. இந்நிலையில், ஜப்பான் நில நடுக்கத்திற்கு முன்னதாக சீனாவில் புதிய அணு உலைகளை நிறுவ அரசு அனுமதி அளித்திருந்தது.

ஆனால் தற்போது அந்த அனுமதியை பிரதமர் வென் ஜியாபோ தற்போது இரத்துச் செய்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

தெற்காசிய சுகாதார பராமரிப்பு உச்சி மாநாடு கொழும்பில்


தெற்காசிய சுகாதார பராமரிப்பை மேம்படுத்துவதற்கான உச்சி மாநாடு அடுத்த மாதம் 6ம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இதனை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைப்பார்.

இந்த மாநாட்டில் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த 500 பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.

உலகளாவிய ரீதியில் இப்பிரதேசத்தின் சில நாடுகள் மிகக் குறைந்தளவு சுகாதாரப் பராமரிப்பு வசதிகளைக் கொண்டுள்ளன. உதாரணமாக நேபாளத்தில் 31 சதவீதமும் இந்தியாவில் 31 சதவீதமுமான நிலையில் இலங்கையின் வசதிகள் அதி உச்சமான 91 சதவீதத்தை எட்டியுள்ளன.

இந்நாடுகளில் தீர்மானம் மேற் கொள்பவர்கள், கொழும்பிலுள்ள சினமன் கிறாண்ட் ஹோட்டலில் ஏப்பிரல் 4 தொடக்கம் 7 ஆம் திகதிவரை இந்த மாநாட்டில் ஒன்று கூடி அடிப்படை சுகாதார மேம்பாட்டை மேம்படுத்துவதற்கான வழி வகைகள் பற்றி தீர்மானம் மேற்கொள்ளுவார்கள்.

இச் சந்திப்பில் பங்கேற்கும் நாடுகளாவன: ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மாலைதீவு, நேபாளம், பாக்கிஸ்தான் மற்றும் இலங்கை ஆகும். இப்பிரதேசத்தில் சுகாதார பராமரிப்புக்குப் பொறுப்பாகவுள்ள அமைச்சர்கள், ஏப்பிரல் மாதம் 6ஆம் திகதி, அமைச்சர்கள் மட்டத்திலான உச்சி மகாநாடொன்றில் கலந்துகொள்வார்கள். இம்மாநாடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படும்.

முதலாவது சுகாதாரப் பராமரிப்பு சம்பந்தமான தெற்காசிய மாநாடு 2003 ஆம் ஆண்டில் பங்களாதேஷிலும் இரண்டாவது மாநாடு 2006 ஆம் ஆண்டில் பாகிஸ்தானிலும் மூன்றாவது மாநாடு 2008 ஆம் ஆண்டில் இந்தியாவிலும் நடைபெற்றன. இம் மாநாடு வெவ்வேறு கருத்துடையவர்களுக்கிடையே நிகழும் சொல்லாடலுக்கான தனது மேடையாகும். அத்துடன், ஐக்கிய நாடுகளில் பிரகடனப்படுத்தப்பட்ட புத்தாயிரம் அபிவிருத்தி இலக்குகள் சம்பந்தமான இப்பிராந்தியத்தின் சுகாதாரப் பராமரிப்புக் குறிக்கோள்களை எய்துவதற்கான சுகாதார மேம்பாட்டுச் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் அமைந்திருக்கும்.
மேலும் இங்கே தொடர்க...

கண்டி மாவட்டத்தில் 60 வீதம் வாக்களிப்பு

கண்டி மாவட்டத்தில் 55 முதல் 60 சத வீதம் மக்கள் வாக்களிப்பில் கலந்துகொண்டுள்ளதாக கண்டி மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியும் மாவட்ட செயலாளருமான காமினி செனவிரட்ன தெரிவித்தார்.

கண்டி மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி சபைகளில் 16 சபைகளுக்கான உள்ளூராட்சி தேர்தல் நேற்று (17) நடைபெற்றது.

நேற்று பகல் வரையும் 25% சதவீதம் வாக்காளர்கள் தமது வாக்குகளை அளித்திருந்த போதிலும் பிற்பகல் 4.00 மணிவரையும் சராசரியாக 55%- 60% சதவீதமான வாக்காளர்கள் தமது வாக்குகளை அளித்திருந்ததாக தெரியவருவதாகக் கூறினார்.

மேலும் கண்டி மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க வகையில் எந்த வித தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளும் கிடைக்கவில்லை. மிகவும் சுமுகமான நிலையில் மக்கள் தமது வாக்குகளை அளித்திருந்தனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இருந்த போதிலும் பாதுகாப்பு பணிகள் மிகவும் தீவிரமாக இருந்தன. பொலிஸார் மற்றும் இராணுவத்தினர்கள் வாக்கெடுப்பு நிலையங்களிலும் வாக்குகள் எண்ணும் நிலையங்களிலும் தமது கடமைகளை மேற்கொண்டிருந்ததை காண முடிந்தன.

மலும் வாக்களிப்பு நிலையங்களிலிருந்து வாக்குப் பெட்டிகளையும் கடமையில் இருந்த அதிகாரிகளையும் எடுத்துச் செல்ல விசேட போக்குவரத்து சேவைகளும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தனவாகவும் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

குருநாகல் மாவட்டத்தில் 60 வீத வாக்கு பதிவு

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் 60 சதவீதமான வாக்குப் பதிவுகள் இடம்பெற்றுள்ளன. எதுவித அசம்பாவிதங்களுமின்றி மிக அமைதியான முறையில் குருநாகல் மாவட்டத்திலுள்ள வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவுகள் இடம்பெற்றன.

மாவட்டத்திலுள்ள 225 வாக்குச் சாவடிகளில் 4120 பேர் தேர்தல் கடமைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். நேற்று நண்பகல் மக்கள் சுறுசுறுப்பாக வாக்களிக்கச் சென்றதை காண முடிந்தது.

நேற்று பி. ப. 4 மணிக்கு வாக்குகளிப்பு முடிவடைந்து வாக்குப் பெட்டிகள் குருநாகல் நகரில் அமைக்கப்பட்டுள்ள மூன்று வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

இதேவேளை, குளியாப்பிட்டி பிரதேச சபை உட்பட மூன்று பிரதேச சபைகளுக்கான தேர்தல்கள் இம் மாவட்டத்தில் இடம்பெறவில்லை. நீதிமன்ற உத்தரவின் பேரில் அவை பின்போடப்பட்டுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

ஜப்பான் அணு உலை குறைபாடுகள்: பாதிப்புகள் பற்றி எச்சரித்தும் ஜப்பான் உதாசீனம்




ஜப்பானில் புகுஷிமாவில் அமைக்கப்பட்ட அணு உலையில் இருந்த குறை பாடுகள் தொடர்பாக சர்வதேச அணுசக்தி முகாமை அமைப்பு ஏற்கனவே ஜப் பானை எச்சரித்திருந்த தாகவும் அந்த எச்சரிக்கையை ஜப்பான் உதாசீனம் செய்தமையே ஜப்பானில் தற்போது அணு உலைகளில் கசிவு ஏற்பட்டமைக்கு காரணம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இங்கிலாந்திலிருந்து வெளியாகும் டெய்லி ரெலிகிராஃப்ட் என்ற பத்திரிகை விக்கிலீக்ஸை மேற்கோள்காட்டி இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அப் பத்திரிகை வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது, சர்வதேச அணுசக்தி முகாமை நிறுவனம் 2 ஆண்டுகளுக்கு முன்னர் ஜப்பான் ஏற்படும் என குறிப்பிடப்பட்டி ருந்தது.

ஜப்பான் அணு மின் நிலை யம் ரிக்டர் அளவு கோலில் 7 புள்ளி கள் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நிலநடுக்கத்தை மட்டுமே தாங்கும் திறன் கொண்டது என சர்வதேச அணுசக்தி முகாமை நிலையம் அவ் எச்சரிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

பூகம்பம் ஏற்பட்டால் அதனால் ஜப்பானில் அணு மின் சக்தி உலை களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட லாம், என்று ஜப்பான் அரசை சர்வதேச அணு சக்தி முகாமை அமைப்பு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் எச்சரித்ததாக விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஆவணம் கூறுகிறது.

ஜப்பானில் நிறுவப்பட்டுள்ள அணு மின் சக்தி உலைகள் அனை த்தும் ரிக்டர் 7.0 புள்ளிகளுக்கும் குறைவான பூகம்பத்தை மட்டுமே தாங்கும் உறுதி கொண்டவை. அதற்கும் அதிகமான அளவிற்கு பூகம்பம் ஏற்பட்டால் அதனால் கடும் பாதிப்பு ஏற்படும், என்று 2008 ம் ஆண்டிலேயே சர்வதேச அணு சக்தி முகாமை நிலையம் எச்சரித்த தாகவும் குறிப்பிடப் பட்டிருக்கும் அமெரிக்கத் தூதரகத்தின் அறிக் கையை விக்கிலீக்ஸ் வெளியிட்டு ள்ளது.

ஜி 8 நாடுகளின் அணு உலை பாதுகாப்பு குறித்து குழு 2008 ம் ஆண்டு டோக்கியோவில் நடத்திய கூட்டத்தில், ஜப்பான் கடைபிடித்து வரும் அணு மின் உலை பாதுகாப்பு நெறிமுறைகள் பழமையானவை என்று சர்வதேச அணு சக்தி முகாமை அமைப்பு கருத்து தெரிவி த்ததாகவும் அந்த ஆவணத்தில் கூற ப்பட்டுள்ளது.

சர்வதேச அணு சக்தி முகா மைத்துவ அமைப்பு பூகம்பம் தொடர்பான அணு ஆயுத உலை களின் பாதுகாப்பு குறித்த வழி காட்டு நெறிமுறைகளை கடந்த 35 ஆண்டுகளில் 3 முறை திருத்தி மேம்படுத்தியுள்ளது, என்று அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

10 வகை உணவுப் பொருட்களின் விலை 30 வீதத்தால் குறையும் வர்த்தக அமைச்சு





சிங்கள- தமிழ் புது வருட பண்டிகை காலத்தில் 10 வகை அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் சுமார் 30 சதவீதத்தால் குறைவடையும் என்று வர்த்தக அமைச்சின் செயலாளர் சுனில் எஸ். சிரிவர்தன தெரிவித்துள்ளார்.

சீனி, கிழங்கு, வெங்காயம், பருப்பு, கோதுமை மா, கடலை, பயறு, நெத்தலி, ரின் மீன், அரிசி உள்ளிட்ட உணவு வகைகள் சதொச மற்றும் கூட்டுறவுச் சங்க களஞ்சியசாலைகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ளதால் எதிர்காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைவடையும் என்று அவர் கூறியுள்ளார்.

35 ஆயிரம் மெட்ரிக் தொன் உள்ளூர் கிழங்கு ஊவா பரணகம, வெலிமடை மற்றும் நுவரெலியா ஆகிய இடங்களில் இருந்து சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.

அதேவேளை, வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கிழங்கும் தற்போது சந்தையில் உள்ளது என்று அவர் மேலும் கூறினார். அதேவேளை 5 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசியும் சந்தையில் விநியோகிக்கப் பட்டுள்ளது.

இது மட்டுமன்றி இறக்குமதியாகும் உணவுப் பொருட்கள் இலங்கைக்கு விரைவில் வந்து சேரவுள்ள நிலையில் உணவுப் பொருட்கள் பலவற்றின் விலைகள் ஏற்கனவே குறைந்துள்ளன.

204 ரூபாவுக்கு விற்கப்பட்ட டின் மீன் 174 ரூபாவுக்கும், ஒரு கிலோ 97 ரூபாவுக்கு விற்கப்பட்ட சீனி 90 ரூபாவுக்கும், ஒரு கிலோ 100 ரூபாவுக்கு விற்கப்பட்ட பெரிய வெங்காயம் 70 ரூபாவுக்கும் ஒரு கிலோ 90 ரூபாவுக்கு விற்கப்பட்ட சின்ன வெங்காயம் 60 ரூபாவுக்கும் ஒரு கிலோ 220 ரூபாவுக்கு விற்கப்பட்ட பயறு 216 ரூபாவிற்கும், ஒரு கிலோ 145 ரூபாவுக்கு விற்கப்பட்ட பருப்பு 139 ரூபாவுக்கும், முட்டை ஒன்று 12 ரூபாவுக்கும் தற்போது விலை குறைந்திருப்பதாக செயலாளர் மேலும் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

வெற்றிலை ஏற்படுத்திய சர்ச்சை




மெல்லுவதற்காக கையில் வைத்திருந்த வெற்றிலையை கண்டு எதிர்க்கட்சிக்காரர்கள் மல்லுக்கு நின்ற சம்பவம் ஒன்று ரத்கமை வாக்களிப்பு நிலையம் ஒன்றில் இடம்பெற்றுள்ளது.

ரத்கமை வாக்களிப்பு நிலையம் ஒன்றில் ஐ. ம. சு. மு வின் கட்சி முகவராக செயற்பட்ட நபர் ஒருவர் பொழுது போக்குக்கு மெல்லுவதற்காக ஒரு சில வெற்றிலைகளை கையில் வைத்திருந்துள்ளார்.

இதனைக் கண்ட பிறகட்சிகளின் முகவர்களும் ஆதரவாளர்களும் ஐ. ம. சு. மு. வின் தேர்தல் சின்னமான வெற்றிலையை வாக்களிப்பு நிலையத்தில் கட்சி முகவர் ஒருவர் வைத்திருப்பதை ஏற்க முடியாது என்றும் இது வெற்றிலைச் சின்னத்துக்கு வாக்களிக்குமாறு மக்களுக்கு கூறுவது போலமையும் எனவும் குறிப்பிட்டு ஆட்சேபனை தெரிவித்தது குறிப்பிட்ட ஐ. ம. சு. மு. தேர்தல் முகவருடன் வீண் வம்புக்குச் சென்றனர்.

எனினும், பொறுமையான பதிலளித்த ஐ. ம. சு. மு. முகவர், மெல்லுவதற்காகவே வெற்றிலையை தான் கையில் வைத்திருந்ததாக கூறியதுடன் பிற கட்சிக்காரர்களுடனான வீண் விவாதங்களை தவிர்ப்பதற்காக உடனடியாகவே அவ் வெற்றிலைகளை மென்று விழுங்கிவிட்டார்.

அதன்பின் பிறகட்சிக்காரர்களின் நியாயமற்ற குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுத்த பிரஸ்தாப தேர்தல் முகவர்; வாக்களிப்பு நிலையங்களில் கதிரையுட்பட்ட பல்வேறு பொருட்கள் பாவனையில் உள்ளன.

அவை கூட ஏதே ஒரு கட்சியின் தேர்தல் சின்னமாக இருப்பதால் அவற்றையும் உடனடியாக வாக்களிப்பு நிலையங்களில் இருந்து அகற்ற வேண்டும் என்று சுட்டிக்காட்டியதுடன் இதே தோரணையில் பிறகட்சி ஆதரவாளர்கள் தன்மீது சுமத்திய குற்றச்சாட்டுகளும் நியாயமற்றது என்று நிரூபித்துக் காட்டினார்.
மேலும் இங்கே தொடர்க...

யாழ். நகர் விக்டோரியா வீதி திறப்பு இறுதி வீதி தடையும் நீங்கியது

யாழ். நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள விக்டோரியா வீதி நேற்று முதல் பொதுமக்கள் பாவனைக் காக திறந்துவிடப் பட்டுள்ளது. யாழ். நகரின் மையத்தில் யாழ். போதனா வைத்திய சாலையின் பின்புற மாக உள்ள மேற்படி வீதி மின்சார நிலைய வீதி, மணிக்கூட்டு வீதி, பருத்தித்துறை வீதி ஆகியவற்றை இணைக்கும் பிரதானமான குறுக்கு வீதி ஆகும்.

கடந்த 15 ஆண்டுகாலமாக பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்டிருந்த இவ்வீதி நேற்று பொதுமக்கள் பாவனைக்காக திறந்து விடப்பட்டது.

இந்த வீதித் திறப்புடன் யாழ். நகரில் இருந்த இறுதி வீதித்தடைகளும் அகற்றப்பட்டு பாதுகாப்பு வலய வீதித் தடைகள் எதுவுமற்ற நகரமாக யாழ். நகரம் உருவாகியுள்ளது.

இந்த வீதித் திறப்பு நிகழ்வில் யாழ். மாவட்ட இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் கதுருசிங்க யாழ். நகர மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா, பாராளுமன்ற உறுப்பினர் எம். சந்திரகுமார் மற்றும் யாழ். அரச அதிபர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

யாழ். நகரின் அபிவிருத்தி மற்றும் போக்குவரத்து வசதிகளைக் கவனத்தில் கொண்டு இவ்வீதி பாவனைக்கு விடப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஐ.ம.சு.மு. முன்னணியில் எஞ்சியிருந்த ஆசனங்களையும் இழந்தது ஜே.வி.பி


234 உள்ளூராட்சி சபைகளுக்கு நேற்று நடந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கூடுத லான ஆசனங்களைப் பெற்று முன்னணியில் திகழ்கிறது.

நடந்த தேர்தலின் முதலாவது உத்தி யோகபூர்வ முடிவு நேற்று இரவு 10.40 அளவில் வெளியாகியது.

இதன்படி, மாத்தறை மாவட்டம் வெலிகம நகர சபையின் முடிவுகள் முதலில் வெளியாகின. இதில் ஐ. ம. சு. மு. 7,246 வாக்குகளைப் பெற்று 7 ஆசனங்களைக் கைப்பற்றிக் கொண்டது. ஐ. தே. க. 3,622 வாக் குக ளைப் பெற்று 3 ஆசனங்களைப் பெற்றது.

ஜே. வி. பிக்கு 164 வாக்குகள் மாத்திரமே கிடைத்தது. வெலிகம நகர சபையில் 2006 இல் ஒரு ஆசனத்தைக் கொண்டிருந்த ஜே. வி. பி. இந்தத் தேர்தலில் ஆசனம் எதனையும் பெறவில்லை.

இதே நகர சபையில் போட்டி யிட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 353 வாக்குகளை மட்டுமே பெற்றது.

அடுத்து குருநாகல் மாவட்டம் குளியாப்பிட்டிய நகர சபையை ஐ. தே. க. மீண்டும் கைப்பற்றியுள்ளது. 1745 வாக்குகளைப் பெற்று 06 ஆசனங்களைக் கைப்பற்றியது.

அதேநேரம் ஐ. ம. சு. மு. 1370 வாக்குகளைப் பெற்று 03 ஆசனங் களை தக்கவைத்துக் கொண்டுள் ளது.

கண்டி மாவட்டம், வத்தேகம நகர நகரசபை மீண்டும் ஐ. ம. சு. மு. வசமாகியுள்ளது. ஐ. ம. சு. மு. 2177 வாக்குகளைப் பெற்று 05 ஆசனங்களை பெற்றுள்ளது. ஐ.தே.க. மூன்று ஆசனங்களை பெற்றது. அதே நேரம் சுயேச்சைக் குழுவொ ன்று 479 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தை பெற்றுள்ளது.

மாத்தறை மாவட்டம், கிரிந்த புகுல்வெல்ல பிரதேச சபையை ஐ. ம. சு. மு. கைப்பற்றியுள்ளது. 8,276 வாக்குகளைப் பெற்று 05 ஆசனங் களை ஐ. ம. சு. மு. பெற்றுள்ளது. 2006 உடன் ஒப்பிடும் போது மேலதிகமாக ஒரு ஆசனத்தைப் பெற்றுள்ளது (ஐ. ம. சு. மு). ஏற்க னவே இருந்த ஒரு ஆசனத்தையும் ஜே- வி. பி. இழந்துள்ளது. 319 வாக்குகளை மாத்திரமே அது பெற் றுள்ளது.

பதுளை மாவட்டம், ஹப்புத் தளை நகர சபையையும் ஐ. ம. சு. முன்னணியே கைப்பற்றியுள்ளது. 1205 வாக்குகளைப் பெற்று 06 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. அதேநேரம் ஐ. தே. க. 703 வாக்கு களைப் பெற்று 03 ஆசனங்களைப் பெற்றுள்ளது. இந்த சபையில் 07 ஆசனங்களுடன் இருந்த ஐ. ம. சு. மு. ஒரு ஆசனத்தை இழந்துள்ளது. ஐ. தே. கட்சிக்கு ஒரு ஆசனம் கூடுதலாகக் கிடைத்துள்ளது.

நேற்று நள்ளிரவு வரை வெளி யான முடிவுகளின்படி ஐ. ம. சு. முன்னணியே கூடுதலான ஆசனங்க ளைப் பெற்றிருந்தது.

234 உள்ளூராட்சி சபைகளுக்கு நேற்று நடத்தப்பட்ட தேர்தலில் 55 வீதத்திற்கும் அதிகமானவர்கள் வாக்களித்ததாக தேர்தல் திணைக்களம் தெரிவித்தது. வாக்களிப்பு காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி பிற்பகல் 4.00 மணி வரை இடம்பெற்றது.
மேலும் இங்கே தொடர்க...