22 பிப்ரவரி, 2011

காலியில் ஆணைக்குழுவிடம் 24 பேர் சாட்சியமளிப்பு
காலியில் சனிக்கிழமை நடைபெற்ற கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழுவின் விசாரணை அமர்வில் பிரதேசத்தை சேர்ந்த பொதுமக்கள் 24 பேர் கலந்துகொண்டு சாட்சியமளித்ததாக ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

வெள்ளிக்கிழமை மாத்தறையில் நடைபெற்ற நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வில் அதிகளவில் அரச ஊழியர்கள் கலந்துகொண்டு சாட்சியமளித்திருந்தனர். நாட்டின் சட்டம் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்றே மாத்தறையில் சாட்சியமளித்த பல அரச ஊழியர்கள் குறிப்பிட்டிருந்தனர். கொழும்பில் நடைபெற்றுவந்த ஆணைக்குழுவின் அமர்வுகள் முடிவுக்கு வந்த நிலையில் தற்போது வெளிமாவட்ட அமர்வுகள் நடைபெற்று வருகின்றன.

மார்ச் மாத நடுப்பகுதியளவில் அம்பாறை மாவட்டத்திலும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகள் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஜனவரி மாதத்தில் நடைபெறுவதற்கு ஏற்பாடாகியிருந்த அம்பாறை மாவட்ட அமர்வுகள் அப்போது நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக பிற்போடப்பட்டுவந்தது.

இதேவேளை கொழும்பில் நடைபெறும் அமர்வுகள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டிருந்தாலும் விசேட தேவைகள் ஏற்படின் சில அமர்வுகள் நடத்தப்படலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அடங்கிய இறுதி அறிக்கை மே மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

திருமாவளவன் சென்னையில் கைது


விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சற்றுமுன் சென்னையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உறுப்பினர் ஒருவர் எமது இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

பார்வதி அம்மாளின் இறுதி கிரியைகளில் கலந்துகொள்வதற்காக திருமாவளவன் இலங்கை வந்தபோது இலங்கை விமான நிலைய அதிகாரிகளினால் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டிருந்தார்.

இதனையடுத்தே இந்தியாவில் உள்ள இலங்கை தூதரகத்துக்கு முன்னால் இவர்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனை இலங்கை விமான நிலைய அதிகாரிகள் மீண்டும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பியதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

பார்வதி அம்மாளின் இறுதிகிரியைகள் இன்று இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

யாழ். மீனவர்கள் இந்திய துணை தூதரகத்திற்கு முன்னால் அமைதிப் போராட்டம்


இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு வரும் இந்திய மீனவர்களின் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்துமாறு கோரி யாழ். மாதகல் பகுதி மீனவர்களும், குருநகர் மற்றும் பாசையூர் பகுதி மீனவர்களும் பலாலி வீதியிலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்துக்கு முன்னால் அமைதி வழியிலான போராட்டங்களை நேற்று நடத்தியிருந்தனர்.

இந்திய அரசாங்கத்துக்கு எதிரான வாசகங்களைத் தாங்கிய சுலோக அட்டைகள் சகிதம், கறுப்புத் துணிகளால் வாய்களை மூடியவாறு மாதகல் பகுதி மீனவர்கள் அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந் தப் போராட்டத்தின் இறுதியில் கடற் றொழில் தலைவர்களுடன் இணைந்து மாதகல் பங்குத்தந்தை ஆனந்தகுமார், இந்தியத் துணை தூதரகத்தின் பிரதம அதிகாரி எஸ். மகாலிங்கத்திடம் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்றையும் கையளித்திருந்தனர்.

அதேநேரம் , குருநகர் மற்றும் பாசையூர் மீனவர்கள் யாழ். ஆரியகுளச் சந்தியில் இருந்து பலாலி வீதியில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் வரை பேரணியாக வந்ததுடன், தூதரகத்துக்கு முன்னால் அமைதிப் போராட்டமொன்றையும் நடத்தியிருந்தனர்.

தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி இந்திய மீனவர்கள் அத்துமீறி இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபடுவதாகவும், இதனால் இலங்கையின் கடல்வளம் அழிக்கப்படுவ தாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மீனவர்கள் தெரிவித்தனர். நேற்றுமுன்தினமும் 60 படகுகளில் இந்திய மீனவர்கள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

இந்திய மீனவர்களின் இவ்வாறான நடவடிக்கையை தடுத்து நிறுத்தி தமக்கு நல்லதொரு முடிவைப் பெற்றுத்தர வேண்டும் என்பதற்காக யாழ். இந்தியத் துணைத் தூதரகத்துக்கு முன்னால் அமைதி வழியான போராட்டத்தில் தாம் ஈடுபட்ட தாகவும் மீனவர்கள் கூறினர்.

இதேநேரம், இந்த விடயம் தொடர்பாக, கருத்துத் தெரிவித்த வலிகாமம் தென்மேற்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமா சத் தலைவர் விநாயகமூர்த்தி சுப்பிரமணியம், 2010 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் இருந்து ஆரம்பித்த இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடித் தொழில் தொடர்ந்தும் நடைபெற்று வருவதாகக் கூறினார்.

இலங்கை கடற்பரப்புக்குள் வரும் இந்திய இழுவைப் படகுகள் இலங்கை மீனவர்களின் வலைகளை வெட்டிச் செல்வதுடன் களவாடிச் செல்வதாகவும் குறிப்பிட்டார்.

இந்திய மீனவர்களின் இவ்வாறான நடவடிக்கைகளினால் மாதகல் மீனவர்கள் 85 வீதமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், 145 படகுகளில் சென்று மீன்பிடியில் ஈடுபடும் மாதகல் மீனவர்கள் தற்போது 4 அல்லது 5 படகுகளிலேயே மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறினார். இதனால் மாதகல் மீனவர்கள் பட்டினிச்சாவை எதிர்நோக்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

அரசியல் நெருக்கடி நிலை பஹ்ரைனுக்கு தொழிலுக்கு செல்ல தற்காலிக தடைபஹ்ரைன் நாட்டுக்கு இலங்கையர் வேலைவாய்ப்பிற்காக செல்வதற்கு தற்காலிக தடைவிதித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் நேற்று கூறியது.

அந்த நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலையையடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பணியக உயரதிகாரி ஒருவர் கூறினார். பஹ்ரைன் நாட்டில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

இதனால் அங்கு குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. பஹ்ரைனில் சுமார் 40 ஆயிரம் இலங்கையர்கள் பணிபுரிகின்றனர். 2009 ஆம் ஆண்டில் மாத்திரம் 5929 பேர் தொழில் வாய்ப்பு பெற்று அங்கு சென்றனர்.

அங்கு நடைபெறும் ஆர்ப்பாட்டங்களில் இலங்கையர் எவரும் கலந்து கொள்ள வேண்டாம் என வெளிவிவகார அமைச்சு ஏற்கனவே கேட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டங்களினால் இலங்கையருக்கு எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் அமைச்சு கூறியது.
மேலும் இங்கே தொடர்க...

இந்தியாவில் எஞ்சியுள்ள 73 இலங்கை மீனவர்களை அழைத்து வர நடவடிக்கை


இந்தியாவில் எஞ்சியுள்ள 73 இலங்கை மீனவர்களையும் விரைவில் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கடற்றொழில் நீரியல் வள அமைச்சு நேற்று தெரிவித்தது.

இதற்கான பேச்சுவார்த்தைகளை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன மேற்கொண்டுள்ளதாகவும் 73 மீனவர்கள் மற்றும் 16 மீன்பிடி படகுகளையும் விரைவில் இலங்கைக்கு கொண்டு வர முடியும் எனவும் அமைச்சு நம்பிக்கை தெரிவித்தது.

இலங்கை - இந்திய மீனவர்கள் பிரச்சினை அண்மைக் காலமாக பூதாகாரமெடுத்த போதும் இரு நாடுகளுக்குமிடையில் நிலவும் புரிந்துணர்வு அடிப்படையில் அப்பிரச்சினைகளுக்குத் தீர்வு பெறப்பட்டுள்ளது. இரு நாடுகளிலும் தடுத்து வைக்கப்பட்டிருந்த மீனவர்கள் பெருமளவில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து தொடர்ச்சியாக நிலவும் இத்தகைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகை யில் இரு நாடுகளுக்குமிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று மேற்கொள்வது தொடர்பிலும் ஆராயப்பட்டு வருகிறது.

அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பெரும்பாலான மீனவர்கள் விடுவிக்கப் பட்டுள்ளனர். தற்போது எஞ்சியுள்ள 73 மீனவர்களையும் 16 மீன்பிடிப் படகு களையும் இலங்கைக்கு வரவழைப்பதற்கான நடவடிக்கைகளை அமைச்சர் மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சு மேலும் தெரிவித்தது.
மேலும் இங்கே தொடர்க...

சுதந்திர முன்னணியின் வேட்பு மனுவை நிராகரிக்கக் கோரிய ஐ. தே. கவின் மனு வாபஸ்

மஹரகம நகர சபைக்காக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தாக்கல் செய்த வேட்பு மனுவை நிராகரிக்க கோரி ஐக்கிய தேசிய கட்சி தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனு நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றில் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

மஹரகம நகர சபைத் தேர்தலை நடத்துவோம் என தேர்தல் ஆணையாளர் நாயகம் தயானந்த திஸாநாயக்க உறுதிமொழி வழங்கினால் தமது மேன்முறையீட்டு மனுவை வாபஸ் பெற தயாரென குறித்த மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றைக் கேட்டுக் கொண்டார்.

தேர்தலை உரிய நேரத்தில் நடத்த தேர்தல் ஆணையாளர் நாயகம் தயாராக உள்ளார் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சார்பில் நேற்று நீதிமன்றில் ஆஜரான அரச தரப்பு சட்டத்தரணி தெரிவித்தார். இதன்படி தமது மேன் முறையீட்டு மனுவை ஐக்கிய தேசிய கட்சி வாபஸ் பெற்றுக்கொண்டது.
மேலும் இங்கே தொடர்க...

சமூக பாதுகாப்பு கொள்கைக்கு இலங்கை முன்னுரிமை


பிராந்திய நாடுகளுக்கிடையிலான சமூக பாதுகாப்பு கொள்கைகளுக்காக இலங்கை வழங்கும் முன்னுரிமை காரணமாக நாட்டுக்கு சிறந்த பயன் கிடைத்துள்ளதாக பிரதமர் தி. மு. ஜயரட்ன கூறியுள்ளார்.

அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கும் மேலான சமூக பாதுகாப்பு கொள்கையை வகுப்பது நாட்டின் எதிர்காலத்துக்கு நன்மை பயப்பதாக அமையும் என்றும் அவர் சுட்டிக்காட்டி யுள்ளார்.

தெற்காசிய வலய நாடுகளுக்கிடையிலான சமூக பாதுகாப்புக் கொள்கை தொடர்பான அமைச்சு மட்ட மாநாடு நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் பிரதமர் தி. மு. ஜயரட்ன தலைமையில் நடைபெற்றது. இதில் உரையாற்றியபோதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இலங்கையில் சமூக பாதுகாப்பு கொள்கை எவ்வாறு செயற்படுகிறது என்பதை இந்த சந்தர்ப்பத்தில் விளக்கிக் கூற விரும்புவதாக குறிப்பிட்ட பிரதமர், இவ்வாறான சமூகப்பாதுகாப்பு கொள்கைகளில் ஒரு சில முழு நாட்டையும் இலக்காகக் கொண்டு செயற்படுவதாகக் கூறினார்.

குறிப்பாக இலங்கையில் வறியோர் மற்றும் செல்வந் தர்களுக்கிடையிலான இடைவெளியை குறைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப் படுகின்றன. உதாரணத்துக்கு கூறுவதானால் இலவச கல்வித் திட்டம் நாட்டில் அறி முகப்படுத்தப்பட்ட கடந்த 63 வருடங்களில் நாட்டில் எழுத்தறிவு பெற்றோர் விகிதம் அதிகரித்துள்ளது.

அத்துடன் குறைந்த வருமானம் பெறும் கிராமப்புற குடும்பங்களில் உள்ள பிள்ளை களின் கல்வி செயற்பாடுகளை ஊக்குவிக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இலவச பகலுணவு, சீருடை மற்றும் பாடப் புத்தகங்கள் ஆகியவற்றை குறிப்பிட்டுச் சொல்லலாம்.

சமுர்த்தி நிவாரண திட்டமும் இதில் குறிப்பிட வேண்டும். இத்திட்டத்தின் மூலம் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தவும் அவர்களுக்கு தொழில்முறை வழிகாட்டல்களை வழங்க வும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சமுர்த்தி நிவாரணத்திட்டத்தின் மூலம் 15 இலட்சம் குடும்பங்கள் நன்மை பெறுவது குறிப்பிடத்தக்கது என்று பிரத மர் அங்கு கூறினார்.

இன்று 22ஆம் திகதி வரை இடம்பெறும் இந்த மாநாட் டில் தெற்காசிய வலய நாடுகளுக்கிடையே நிலவும் சமூக பாதுகாப்பு கொள்கை தொடர் பான தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்படு வதுடன் அனுபவங்கள் பகிர்ந்து கொள்ளப் படும். யுனெஸ்கோ அமைப்பின் சமூக மற்றும் மனித விஞ்ஞான செயற்பாடுகளுக் கான உதவிப் பணிப்பாளர் நாயகம் பிலர் அல்பர்ஸ், லேஸோ, சமூக சேவை கள் பிரதி அமைச்சர் சந்திரசிரி சூரியாரச்சி, சமூக சேவைகள் அமைச்சின் செயலாளர் யமுனா சித்ராங்கனி ஆகியோர் கலந்துகொண்டனர்
மேலும் இங்கே தொடர்க...

கல்விக் கல்லூரி பூர்த்தி செய்துள்ள 2500 பேருக்கு ஆசிரிய நியமனம்'


தேசிய கல்வியியற் கல்லூரிகளில் கல்வியைப் பூர்த்தி செய்து வெளியேறியுள்ள 2500க்கும் மேற்பட்டோருக்கு மார்ச் மாதம் ஆசிரியர் நியமனம் வழங்கப்படும் என்று கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன நேற்றுத் தெரிவித்தார்.

தேசிய கல்வியியற் கல் லூரிகளின் பரீட்சை பெறு பேறுகளை முன்னரே பெற் றுக் கொண்டதன் காரணமாக முன்னைய வருடங்களை விட துரிதமாக இம்முறை ஆசிரிய நிய மனங்களை வழங்குவதற்கான நட வடிக்கைகளை மேற்கொள்ள முடி ந்ததாக அமைச்சர் மேலும் கூறினார்.

2008, 2009 மற்றும் 2010 ம் ஆண்டு களில் இந்த ஆசிரிய நியமனங்கள் ஜூன் அல்லது ஜுலை மாதங்க ளிலேயே வழங்க முடிந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.

பத்தரமுல்லையில் உள்ள இசுறு பாயாவில் நேற்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இதனை தெரிவித்தார். அழகியற்கலை பட்டதாரிகள் 3100 க்கு மேற்பட்டோருக்கு ஆசிரிய நியமனம் வழங்க அரசாங்கம் தீர்மா னித்துள்ள அதேவேளை சித்திரம் மற்றும் நடனத்துக்கான ஆசிரியர்கள் குறைவாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த எண்ணிக்கையில் 700 பேரை தவிர்ந்த ஏனையோர் ஆரம்ப வகுப் புகளில் ஆசிரியர்களாக சேர்த்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் இவர்களுக்கு பயிற்சிக் காலத்தில் 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங் கப்படுமென்றும் அமைச்சர் தெரி வித்தார்.

நாட்டில் உள்ள 340 தேசிய பாடசாலைகளில் 105 பாடசாலை களில் அதிபர் பதவிகளுக்கான வெற் றிடம் இருப்பதாகவும், எதிர் கால த்தில் அவை நிரப்பப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

வவுனியாவில் தேசிய கல்விக் கல்லூரி 2009 ஆம் ஆண்டு வரை அகதி முகாமாக இருந்ததை நினைவு கூர்ந்த அமைச்சர், இன்று அது தமிழ் மொழி ஆசிரியர்கள் பயிற்சிபெறும் கல்லூரியாக மாற்றப் பட்டுள்ளதாகவும் இவ்வருடம் வவு னியா தேசிய கல்விக் கல்லூரியில் 140 தமிழ் ஆசிரியர்கள் பயிற்சி பெற்று வெளியேறவுள்ளதாகவும், அவர்கள் வடக்கு, கிழக்கு பாடசா லைகளில் இணைத்துக் கொள்ளப் படுவார்கள் என்றும் அவர் மேலும் கூறினார்.

அடுத்த வருடம் வவுனியா தேசிய கல்விக் கல்லூரியில் 400 தமிழ் ஆசிரி யர்களை பயிற்றுவித்து அவர்களை வடக்கு, கிழக்கு பாடசாலைக்கு நியமிக்கவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...