23 ஜனவரி, 2011

யாழ். மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க பொலிசார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து நடவடிக்கை

யாழ். மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்ககும் நடைமுறைப்படுத்துவதற்கும் பொலிசார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து நடவடிக்கையெடுக்கவுள்ளனர்.

கடந்த இரண்டு மாத காலத்தில் யாழ் மாவட்டத்தில் பல்வேறு கொலைகள், கடத்தல்கள், காணாமல் போதல், கொள்ளைகள், கொலைகள் அதிகரித்துள்ள நிலையில் இது சம்பந்தமான கலந்துரையாடல் யாழ். மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தலைமையில் இடம் பெற்றது.

இந்த கலந்துரையாடலில் யாழ் மாவட்ட படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க வட மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் உட்பட மற்றும் பேராயர் அருட்திரு தோமஸ் சௌவுந்தர நாயகம் அடிகளார் உட்பட அரச அதிகாரிகள் மக்கள் அமைப்புக்களின் பிரதி நிதிகளும் கலந்து கொண்டார்கள்.

இந்தக் கலந்துரையாடலைத் தொடர்ந்து இராணுவத்தினர் இரவு பகல் ரோந்து நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் சோதனை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

இதே போன்று பொலிசாரும் ரோந்து நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் சோதனை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவுள்ளார்கள் .

குறிப்பிட்ட சம்பவங்களுடன் தொடர்புடையவாகள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுக் கொடுக்கப்படும் எனவும் பொது மக்கள் இத்தகைய சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் மற்றும் சம்பவங்கள் தொடர்பாக அயலில் உள்ள பொலிஸ் நிலையத்திலோ அன்ற இராணுவ முகாமிலோ தெரிவித்து நடவடிக்கையெடுக்க முன்வர வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

பெற்றோல் விலை உயர்வு யோசனையை பெற்றோலிய வள அமைச்சு நிராகரிப்பு


இலங்கை இந்திய பெற்றோலிய எண்ணெய்க் கம்பனியால் முன்வைத்த பெற்றோல் விலை உயர்வு தொடர்பான யோசனையை பெற்றோலிய வள அமைச்சு நிராகரித்துள்ளது.

இதுதொடர்பாக அமைச்சு மேலும் விபரிக்கையில் உலக சந்தையில் பெற்றோல் விலை உயர்வின் பாதிப்பு இலங்கை இந்திய பெற்றோலிய ஒயில் கம்பனிக்கு மட்டுமல்ல இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கும்தான்.

அதேநேரம் மக்களின் வாழ்க்கைச் சுமையை அதிகரிப்பை எங்களால் கட்டுப்படுத்தமுடியாது எனவும் தெரிவித்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

யாழ்ப்பாணத்தில் தனியார் கல்வி நிலையத்தில் தீ விபத்து



யாழ்ப்பாணம் கந்தர் மடத்தில் தனியார் கல்வி நிலையம் ஒன்று தீக்கிரையாகியுளள்து. யுனிவேசல் கல்வி நிலையமே நேற்று இரவு தீப்பற்றி எரிந்துள்ளது.

இதனைக் கண்ணுற்ற யாழ்ப்பாணம் மாநகர சபையின் பஸ் சாரதியொருவர் உடனே யாழ்ப்பாணம் மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினருக்கு தகவல் வழங்கியதைத் தொடர்ந்து உரிய இடத்திற்க்கு விரைந்த தீயணைப்புப் பிரிவினர் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

ஆனாலும் இரண்டு கொட்டில்கள் முழுமையாக எரிந்துள்ளதுடன் அங்கிருந்த வாங்குகள் மற்றும் உபகரணங்களும் எரிந்து நாசமாகியுள்ளன.

இத்தகையதொரு சம்பவம் கடந்த வாரத்தில் யாழ்ப்பாணம் கண்ணாதிட்டிப் பகுதியில் உள்ள தனியார் கல்வி நிலையத்திற்க்கும் ஏற்பட்டு பல லட்சம் ரூபாக்கள் நட்டமேற்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இத்தகைய சம்பவங்கள் மூலம் யாழ்ப்பாணத்தில் விசமிகளின் செயல்பாட்டிற்கு தனியார் கல்வி நிலையங்கள் உட்பட்டு வருகின்றது.

இது சம்பந்தமாக பொலிசார் உரிய விசாரணைகளை மேற்கொள்வதுடன் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

திருகோணமலையில் நில வெடிப்பு:மக்கள் பதற்றம்


திருகோணமலை, குச்சவெளி பகுதியில் இன்று அதிகாலை நிலவெடிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நிலவெடிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் புதைகுழிகள் தோன்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந் நிலவெடிப்பு குச்சவெளி கலப்பையாறு சுனாமி வீடமைப்பு திட்டத்துக்குப் பின்னால் அமைந்துள்ள சுமார் 400 மீற்றர் பரப்பளவு கொண்ட களப்பு பகுதியிலேயே இடம்பெற்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து இப்பகுதியில் இராணுவத்தினரால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் பொதுமக்கள் பிரவேசிக்வும் தடைசெய்யப்பட்டுள்ளது.

இதேநேரம் இப்பகுதியை ஆய்வுசெய்வதற்காக கொழுப்பிலிருந்து அனர்த்த முகாமைத்துவ நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் சிலர் திருகோணமலைக்கு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

விலங்குகளின் தந்திரோபாயங்கள்.



விலங்குகள் தாம் வாழும் சூழலுக்கேற்ப தம்மை இயைபாக்கிக் கொள்கின்றன. அதற்கான திறனை இயற்கை அவற்றிற்கு பரிசாக அளித்துள்ளது.

சூழலியல் மாற்றத்திற்கேற்ப எந்தவொரு ஜீவனும் தன்னை மாற்றிக்கொள்ள மறுக்குமானால் அல்லது முடியாமல் போகுமானால் அவை அழிவது நிச்சயம்.

மனிதன் முதல் விலங்குகள் வரை எதுவும் இதற்கு விதிவிலக்கல்ல.

பொதுவாக அனைத்து விலங்குகளும் தங்களை எதிரிகளிடமிருந்து பாதுகாக்கவும், இரையை பெற்றுக்கொள்வதற்கும் வெவ்வேறு வகையான தந்திரோபாயங்களை கையாளுகின்றன.

இதற்கு உதாரணமாக சில விலங்குகள் எதிரிகளின் கண்களில் மண்னைத்தூவி தம்மை எவ்வாறு தற்காத்து கொள்கின்றன என்பதற்கும் இரையை பெற்றுக்கொள்கின்றன என்பதற்கும் உதாரணமாக சில புகைப்படங்கள் சில உங்களுக்காக.
மேலும் இங்கே தொடர்க...