9 ஜனவரி, 2010

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை ஆதரித்து வவுனியாவில் பொதுக்கூட்டம், புளொட் தலைவர் உரை

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச அவர்களை ஆதரிக்கும் கூட்டம் இன்றுமாலை 3மணியளவில் வவுனியா நகரசபை மைதானத்தில் நடைபெற்றது. இதில் புளொட் தலைவர். திரு.த.சித்தார்த்தன், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அமைச்சர் ரிசாத் பதியுதீன், முன்னைநாள் வன்னிப் பாராளுமன்ற சுமதிபால, வடமத்திய மாகாண முதலமைச்சர் பேர்டி பிறேம்லால், ஆகியோர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும், பத்தாயிரத்திற்கும் அதிகமான பொதுமக்களும் பங்கேற்றிருந்தனர்.


இங்கு உரையாற்றிய புளொட் தலைவர் த.சித்தார்த்தன் அவர்கள், யுத்த நடவடிக்கைகள் நிறைவுற்று மக்கள் பிரத்தியேகமாக தமிழ்மக்கள் ஒரு சமாதானத் தீர்வு வருமென எதிர்பார்த்திருந்தனர். அப்போது 3லட்சத்துக்கும் அதிகமான மக்கள் முகாம்களில் அடைக்கப்பட்டிருந்தார்கள். சர்வதேசமும் இங்கிருக்கின்ற கட்சிகளும் நாங்களும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான இந்த அரசுக்கு இம்மக்களை விரைவில் விடுவிக்க வேண்டும் மற்றும் அவர்களை மீள்குடியேற்ற வேண்டுமென்ற அழுத்தங்களைக் கொடுத்துவந்தோம். எங்களது கட்சியைப் பொறுத்தமட்டில் அழுத்தங்களைக் கொடுத்தது மாத்திரமல்லாது புலிகளால் பலவந்தமாகப் பிடிக்கப்பட்ட சிறார்களை பெற்றோரிடம் கையளிக்க வேண்டுமென்றும் அதுவே அவர்களுக்கு சரியான புனர்வாழ்வு நடவடிக்கையாக அமையுமென்றும் சுட்டிக்காட்டியிருந்தோம். அதேபோல் இப்பகுதிகளுக்கான அபிவிருத்திகள் தொடர்பிலும் தொடர்ச்சியாக கலந்துரையாடியும், வலியுறுத்தியும் வந்திருக்கிறோம். ஜனாதிபதி அவர்கள் இந்த வேலைத்திட்டங்கள் எல்லாவற்றையுமே செய்வதற்கு ஆரம்பித்து தொடர்ந்து மேற்கொண்டும் வருகின்றார்.


இடம்பெயர்ந்து முகாம்களில் இருந்த மக்களை விடுவிக்கும் நடவடிக்கை, மீள்குடியேற்றும் நடவடிக்கை, முதியவர்களை ஏற்கனவே விடுவித்தமை மற்றும் சிறார்களை பெற்றோரிடம் கையளிக்கும் பணிகள் என்பவற்றை தொடர்ந்து செய்து வருகின்றார். மக்கள் மீள்குடியேற்றப்பட்ட கிராமங்களுக்கும் நாங்கள் சென்று நிலைமைகளைப் பார்வையிட்டுள்ளோம். அங்கு உள்ள மக்களுக்கு பல தேவைகள் இருந்தபோதிலும் தமது சொந்தக் கிராமங்களுக்கு வந்து சேர்ந்த திருப்தியில் அவர்கள் வாழ்வதைக் காணக்கூடியதாக இருந்தது. அதுபோல் புலிகள் அமைப்பில் இருந்த சிறார்களும் கட்டம் கட்டமாக விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நடவடிக்கைகளையெல்லாம் குழப்பிவிடக்கூடாது என்ற காரணத்தினாலும், இந்நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும், அதேநேரத்தில் ஜனாதிபதி அவர்கள் தனது இரண்டாவது தவணையின்போது இனப்பிரச்சினைக்கு ஒரு நியாயமான தீர்வினைத் தருவதாக எங்களுக்கு உறுதியளித்திருக்கின்றார். இதுவரையில் அவர் வழங்கிய உறுதிமொழிகள் தொடர்பில் அவர் சரியாக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார். இந்நிலையில் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு உரிய தீhவொன்றினை வழங்குவார் என்று நாங்கள் நம்புகிறோம். அதேநேரத்தில் இந்த பழிவாங்கும் அரசியல் நடவடிக்கைகள் எவ்வகையிலும் நன்மையைத் தரப்போவதில்லை. கடந்த காலத்தில் தவறுகள் நடந்திருக்கின்றன. எதிரியின் எதிரி நண்பன் என்கிறதுபோல, பழிவாங்கும் அரசியலை முன்னெடுக்காது அதனைக் கைவிட வேண்டும்.


நாங்கள் எமது மக்கள் கௌரவமாக வாழ்வதற்கும் மக்களுக்கு ஒரு நியாயமான தீர்வு கிடைப்பதற்குமே மகிந்த ராஜபக்சவை ஆதரிக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இங்கே தொடர்க...

கெவிலியாமடுவில் தொடரும் சட்டவிரோத குடியேற்றங்கள் : அரியநேத்திரன் குற்றச்சாட்டு

மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட எல்லையிலுள்ள கெவிலியாமடுவில் வெளி மாவட்டத்தவர்களின் சட்ட விரோதக் குடியேற்றங்கள் மீண்டும் தொடர்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலை பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட குறித்த கிராமத்தில் ஏற்கனவே அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த 170 சிங்கள குடும்பங்கள் சட்ட விரோதமாக அரச காணிகளில் குடியேறியிருந்தன.
இக் குடும்பங்கள் தற்போது 230 ஆக அதிகரித்துள்ளன எனக் கூறும் அரியநேத்திரன், மேற்படி குடும்பங்களில் 60 குடும்பங்களுக்கு குடியேற்ற அனுமதிப் பத்திரம் வழங்குமாறு அம்பாறை அரசாங்க அதிபர், கொக்கட்டிச்சோலை பிரதேச செயலாளரைக் கேட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இது தொடர்பாக மட்டக்களப்பு அரசாங்க அதிபரின் கவனத்திற்குத் தான் கொண்டு வந்துள்ள போதிலும் சாதகமான பதில்கள் எட்டவில்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

பிரபாகரனின் தந்தையாரின் இறுதிக்கிரியை நாளை வல்வை ஊறணி மயானத்தில்

விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் இறுதிக்கிரியைகள் நாளை ஞாயிற்றுக்கிழமை. அவரின் சொந்த ஊரான வல்வெட்டித்துறையில் நடைபெறவுள்ளன. அவரது பூதவுடல் அன்று முற்பகல் 11 மணியளவில் ஊறணி மயானத்தில் தகனஞ் செய்யப்படும். அமரர் வேலுப்பிள்ளையின் பூதவுடல் வல்வை, பூச்சிவிட்டா னில் உள்ள அவரது உறவினர்களில் ஒரு வரின் வீட்டில் வைக்கப்பட்டு கிரியைகள் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. பூச்சிவிட்டான் பகுதி தீருவில் பன்னிருவர் மயானத்திற்குச் சமீபாக உள்ளது.

அமரரின் பூதவுடல் இன்று சனிக்கிழமை நண்பகல் தொடக்கம் தீருவில் சதுக்கத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. பனாகொட இராணுவ தடுப்பு முகாமில் காலமான வேலுப்பிள்ளையின் சடலத்தை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜி லிங்கம் பொறுப்பேற்று இங்கு கொண்டுவர ஏற்பாடாகியுள்ளதாகவும் அறியவந்தது. அதே பனாங்கொட முகாமில் தடுத்து வைக் கப்பட்டிருந்த பார்வதிப்பிள்ளை வேலுப்பிள்ளை யும் யாழ்ப்பாணத்துக்கு கூட்டி வரப்படுவார் என்றும் பிந்திய தகவல்கள் தெரிவித்தன.
மேலும் இங்கே தொடர்க...