1 ஆகஸ்ட், 2010

ஐ.நா. நிபுணர் குழுவின் அமர்வுகள் இம்மாத முதல் இரண்டு வாரங்களில் நடைபெறும்

ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அமர்வுகள் இம்மாத முதல் இரண்டு வாரங்களில் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நிபுணர்கள் குழுவின் உத்தியோகபூர்வ அமர்வுகள் ஆகஸ்ட் மாத முதல் இரண்டு வாரங்களில் நடைபெறவுள்ளது.

2009ஆம் ஆண்டு மே மாதம் பான் கீ மூன் இலங்கைக்கு விஜயம் செய்த போது மனித உரிமை மீறல்கள் தொடர்பில் வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையின் அடிப்படையில் நிபுணர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக பொதுச் செயலாளரின் பேச்சாளர் சொன்ஹா சோய் தெரிவித்துள்ளார்.

மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளின் போது இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்பையும் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமர்வுகள் ஆரம்பிக்கப்படாத நிலையில் நிபுணர்கள் குழுவின் நடவடிக்கைகள் குறித்து விரிவாக விளக்கமளிக்க முடியாதென அவர் தெரிவித்துள்ளார்.

விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு திரட்டும் நோக்கில் இலங்கை அதிகாரிகளுடன் பல்வேறு வழிகளில் தொடர்புகள் பேணப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச ரீதியிலான நியமங்களுக்கு அமைவாக விசாரணைகள் நடத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

நிபுணர்கள் குழுவின் விசாரணை அறிக்கையை இலங்கை அரசாங்கமும் எதிர்காலத்தில் பயன்படுத்திக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

கே.பிக்கு பொது மன்னிப்பு வழங்க அரசு தீர்மானம்- டில்வின் சில்வா




அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் விடுதலைப் புலிகளின் சர்வதேச வலைப்பின்னலின் மூலமுமான கே.பிக்கு பொது மன்னிப்பு வழங்க அரசு தீர்மானம் செய்துள்ளதாக டில்வின் சில்வா தெரிவிக்கிறார்.

பத்தரமுல்லையில் உள்ள ஜே.வி.பி. யின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே சில்வா இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

கே.பி மீது குற்றங்கள் எதனையும் சுமத்தாது அவருக்கு பொதுமன்னிப்பு வழங்க தீர்மானித்துள்ளதாக குறிப்பிடும் டில்வின் சில்வா, இதன் மூலம் கே.பிக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் ஓர் இரகசிய உடன்படிக்கை உள்ளமை தெளிவாவதாகவும் கூறினார்.

கைது செய்யப்பட்டு சுமார் ஒரு வருடத்திற்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள கே.பி.யின் சொத்துக்கள் சட்டப்படி அரச உடமையாக்கப் பட்டிருக்க வேண்டும் என குறிப்பிடும் அவர், ஆனால் இதுவரையில் அவரது சொத்துக்கள் அரச உடமையாக்கப்படவில்லை எனவும் கூறினார்.

எனவே அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு அவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட வேண்டும், அப்படி ஆஜர்படுத்தப்படுவாரானால் அவரின் சொத்துக்கள் தொடர்பான உண்மையான தகவல்கள் வெளிவரும் எனவும் தெரிவித்தார்.

இலங்கை அரசாங்கம் அவருக்கு சொந்தான சொத்துக்களை கைமாற்றிக் கொண்டதன் அடிப்படையிலேயே அவர் சுதந்திரமாகவும், சகலவசதிகளுடனும் கவணிக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

பாதுகாப்பமைச்சின் அனுமதியின்றி யாழ் நோக்கி பயணித்த இந்தியப் பிரஜை கைது

பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்படும் அனுமதிப்பத்திரம் இன்றி யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த இந்திய பிரஜையொருவர் ஓமந்தை சோதனைச்சாவடியில் வைத்து படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவர் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில் குறித்த இந்திய பிரஜையை எதிர்வரும் 10ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பஸ் ஒன்றின் மூலமாகவே அந்த இந்தியப் பிரஜை யாழ் நோக்கி புறப்பட்டுள்ளார். வவுனியா பொலிசார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.pl
மேலும் இங்கே தொடர்க...

கட்டுநாயக்கவுக்கும் பலாலிக்குமிடையில் பயணிகள் விமானசேவை







இந்த வருட இறுதியில் கொழும்பு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கும் பலாலி விமான நிலையத்திற்குமிடையே பயணிகள் போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்த சேவைகளுக்காக 50 இருக்கைகளை கொண்ட விமானங்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என பிரதி பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் தயாசிறி திசேரா தெரிவித்துள்ளார். குடாநாட்டின் வாழும் தமிழ்மக்களின் வேண்டுகோளுக்கு அமையவே இச்சேவை அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தொடக்கத்தில் ஒரு சேவை மட்டுமே இடம்பெறவுள்ளது. மேலதிக சேவைகள் மக்களின் தேவைக்கமைய அதிகரிக்கப்படும் அதேவேளை, இச்சேவைக்காக சாதாரண கட்டணங்களே அறவிட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பிரதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

கிளிநொச்சியில் பெருமளவு ஆயுதங்கள் மீட்பு



கிளிநொச்சி பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது பெருமளவு ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. திருமலை பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றின் அடிப்படையிலேயே இந்த ஆயுதங்களை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இன்று அதிகாலை இவை திருமலை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட ஆயுதங்களில் கிளைமோர் குண்டுகள் 38, கைக்குண்டுகள் 45, சி4ரக வெடிமருந்து 50கிலோ, ஆர்.பி.ஜி. குண்டுகள் 90 போன்றன உள்ளடங்குகின்றன.
மேலும் இங்கே தொடர்க...

புலிகளதும் புலம்பெயர்ந்தவர்களதும் பணம் மக்களுக்கு உதவ பயன்படுத்தப்படவேண்டும்.




புலிகளியக்கம் மூர்க்கத்தனமான பயங்கரவாத இயக்கமாக உருவெடுப்பதற்கு தேவையான ஆயுதங்களை விநியோகித்துவந்த கே பி எனப்படும் குமரன் பத்மநாதன் இவ்வார சண்டே லீடர் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் புலிகளிடம் உள்ள பணமும் புலம்பெயர் தமிழர்களது பணமும் மக்களுக்களின் வழர்ச்சிக்கு உதவ பயன்படுத்த படவேண்டும் என தெரிவித்துள்ள அவர் தான் எவ்வித சொத்துக்களையும் ராஜபக்ச குடும்பத்தினருக்கு தாரைவார்க்கவில்லை எனவும் கூறியுள்ளார். நேர்காணலின் முழுவடிவம்.

வத்சலா - அரசாங்கத்துடன் நீர் செய்து செய்து கொண்டுள்ள பரிமாற்றங்கள் எவை?
கே பி – பரிமாற்றமா அதன் அர்த்தம் என்ன? என்ன சொல்கிறீர்கள்?

வத்சலா - அரசாங்கம் உம்மை வைத்து என்ன செய்யபோகிறது. ராஜபக்சவின் குடும்ப ஆட்சியில் நீர் சிக்கியுள்ளீர். நீர் உம்மிடமிருந்த பெருந்தொகை பணத்தை ராஜபக்சவின் உறவினர்களுக்கு பரிமாற்றியுள்ளீர். இதன் காரணமாகவே உம்மை சிறையில் அடைக்காமல் சுதந்திரமாக வைத்திருக்கிறார்கள்?

கே பி - சிரிப்பு –அவ்வாறான பரிமாற்றம் எதுவும் கிடையாது. 2003 ஆம் ஆண்டுக்காலப்பகுதியிலேயே தமிழீழ விடுதலைப்புலிகளுடன் இருந்த பொறுப்புகளில் இருந்து நான் விலகிக்கொண்டேன். அதன் பின்னர் நான் பெருந்தொகை பணத்தை என்வசம் கொண்டிருக்கவில்லை. அவையாவும் வீணான பிரசாரங்களாகும். எனக்கு இந்த விடயம் தொடர்பாக எதுவும் தெரியாது.

வத்சலா - கப்பல்கள் பற்றி என்ன கூறுகிறீர்? நீர்தான் அவற்றுக்கு பொறுப்பாக இருந்தீர். கப்பல்களுக்கு என்ன நடந்தது? எந்த சகோதரருக்காக அதனை கொடுத்தீர்?

கே.பி – பல கப்பல்கள் இறுதியுத்தத்தின் போது அழிக்கப்பட்டன. அங்கு கொடுப்பதற்கு ஒன்றும் இருக்கவில்லை.

வத்சலா - கப்பல்கள் அனைத்தும் அழிக்கப்படவில்லை. உமக்கு அது பற்றி தெரிந்திருக்கும்தானே?

கே.பி - இரண்டு மூன்று கப்பல்கள் எஞ்சியிருந்தன. சில வேளைகளில் அரசாங்கம் அவற்றை கைப்பற்றியிருக்கலாம்.

வத்சலா – எங்கு வைத்து கைது செய்யப்பட்டீர்?

கே பி – மலேசியாவில்

வத்சலா - தாய்லாந்தில் என்ன நடந்தது?

கே.பி - தாய்லாந்து தொடர்பாக கூறப்பட்டவை ஊகங்களாக இருக்கலாம். ஆனால் நான் மலேசியாவிலேயே பிடிக்கப்பட்டேன்.

வத்சலா – உம்மை யார் பிடித்தது?

கே பி – மலேசிய புலனாய்வாளர்கள். என்னை விமான நிலையம் வரை அழைத்துச்சென்று அங்கு இலங்கையின் புலனாய்வாளர்களிடம் ஒப்படைத்தனர். இதன் பின்னர் விமானத்தின் வர்த்தக வகுப்பில் அமரசெய்யப்பட்டு நான் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டேன்.

வத்சலா - என்ன நிபந்தனைகளுக்கு கீழ் நீங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளீர்? தற்போது என்ன நினைக்கின்றீர்?

கே பி – வீடு ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளேன். நான் ஏனைய கைதிகள் எண்ணுவதை போலவே உணர்வுகளை கொண்டுள்ளேன். எனினும் நான் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் வீடு எங்குள்ளது என்பது எனக்கு தெரியாது.

வத்சலா – உம்மை சமாதானத்துக்கு உதவுமாறு அரசாங்கம் அழைத்ததா?

கே பி – நாங்கள் அதனை பற்றி பேசினோம். நான் எனது மக்களுக்கு உதவவேண்டும். கஸ்டப்படுகின்ற மக்களுக்கு உதவவேண்டும் என நினைக்கிறேன்.

வத்சலா - யுத்தத்தின் இறுதிக்காலத்தில் உமது பணி என்னவாக இருந்தது?

கே பி –நாங்கள் யுத்தத்தை நிறுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் உட்பட பல தரப்புகளுடனும் பேசினோம். எனினும் அது முடியவில்லை

வத்சலா - புலிகளியக்கத்தில் உமது பொறுப்புகள் எவை? ஆயுதக்கடத்தலா? அல்லது வங்கி வைப்புகளின் பொறுப்பாளரா?

கே பி – நான் சர்வதேச உறவுகளுக்கு பொறுப்பாக இருந்தேன். நான் சமாதான முயற்சியாளராக செயற்பட்டேன்.

வத்சலா - உம்மிடம் அதிகளவு பணம் இருந்தது உண்மையா?

கே பி – 2003 ஆம் ஆண்டில் 2009 ஆண்டு வரையிலான காலப்பகுதியில் உள்ள நிலைமை எனக்கு தெரியாது. நான் 2003 ஆம் ஆண்டு எனது பொறுப்பை முடித்துக்கொண்டபோது கடன்களும் இருந்தன.

வத்சலா - இலங்கைக்கு எப்போது கடைசியாக விஜயம் செய்தீர்?

கே பி – ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ சமாதான முன்னெடுப்புகளை மேற்கொண்டபோது கடைசியாக இலங்கைக்கு வந்தேன்

வத்சலா - மலேசியாவில் இருந்து இலங்கை வந்தபின்னர்மட்டக்களப்புக்கு போயிருக்கிறீரா?

கே பி - இல்லை. வன்னிக்கு சென்றிருந்தேன். புலம்பெயர்ந்த தமிழர்கள் சிலர் இலங்கைக்கு வந்து அரசாங்கத்துடன் இணைந்து வேலைத்திட்டங்களை மேற்கொள்ள பயணித்த போது நானும் அவர்களுடன் வன்னிக்கு சென்றேன்.

வத்சலா - உமது பழைய யுத்த களத்திற்கு சென்ற போது கவலையடைந்தீரா?

கே பி – முகாம்களுக்கு விஜயம் செய்தபோது போரின் காரணமாக பொதுமக்கள் அவலப்படுவதை கண்டு வருந்தினேன். எனக்கு அழுகை வந்தது. இந்தநிலையில் சமாதான பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கவேண்டும் என நான் எண்ணுகிறேன்.

வத்சலா - நீர் அரசாங்கத்துக்கு பணம் எதனையும் கொடுக்கவில்லையா?

கே பி – நான் சொல்வது உண்மையாகும். பணம் வழங்கியதாக கூறப்படுவது முற்றிலும் பொய்யான செய்தியாகும். புலம் பெயர் தமிழர் இவ்வாறான பிரச்சாரங்களை முன்னெடுக்கின்றனர்.

வத்சலா – உமக்கு எத்தனை வயது ? குடும்பம் பிள்ளைகள்?

கே பி – எனது மனைவி தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவள். 18 வயது மகள் இருக்கிறாள்.

வத்சலா - அவர்கள் உங்களுடன் நாளாந்தம் தொலைபேசியில் அல்லது ஸ்கைப்பில் பேசுகிறார்களா? அவர்கள் உங்களை பார்ப்பதற்கு வருகிறார்களா?

கே பி – ஒவ்வொரு நாளும் பேசுவதில்லை. வாரத்திலட இரண்டு அல்லது மூன்று நாட்கள் அவர்களுடன் கதைப்பேன். அவர்கள் என்னை பார்க்க வரலாம்.

வத்சலா - புலம்பெயர்ந்தவர்களின் குழுவுடன் நீர் எங்காவது சென்றீரா?

கே பி – வன்னிக்கு சென்றோம். அபிவிருத்தி தொடர்பாக அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து சேவையாற்றுவது குறித்து ஆராய்தோம்

வத்சலா – முடிவடைந்த யுத்தத்தைப் பற்றி என்ன உணர்கின்றீர் ?

கே பி – நாங்கள் கசப்பான அனுபவத்தை பெற்றிருக்கிறோம்.

வத்சலா – கே.பி நீர் கிளிநொச்சி பிரதேசத்திற்கு மீண்டும் விஜயம் செய்தபோது புலிகளியக்கத்தினால் மில்லியன் கணக்கான டொலர்களுக்கு ஆயுதங்களை வாங்கி மேற்கொண்ட யுத்தத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு ஏதாவது செய்ய முடிந்துள்ளதாக உணர்ந்தீரா? அழிவுகள் மற்றும் அபிவிருத்தி தொடர்பான தொடர்பான உனது உணர்வுகள் எவ்வாறிருந்தது?

கே.பி – அபிவிருத்தி முதலிலிருந்து ஆரம்பத்திலிருந்து ஆரம்பிக்கப்படவேண்டும். அதற்கு புலிகளதும் புலம்பெயர் தமிழர்களதும் பணம் இங்கு வரவேண்டும் என நான் கருதுகின்றேன்.

வத்சலா - சர்வதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பலம் என்ன?

கே பி – அவர்களில் எவருமே உண்மை பேசுகின்றார்கள் இல்லை. பலர் பிரபா இன்னும் உயிருடன் இருப்பதாகவும் இன்னும் யுத்தம் இடம்பெற்றுக்கொண்டிருப்பதாகவும் கூறுகின்றனர். இவையெல்லாம் சாத்தியமல்லாத விடயங்கள். நான் முகாம்களுக்கு சென்றபோது அங்கு உள்ள இளைஞர்களும் யுவதிகளும் தாம் இயல்பான வாழ்க்கைக்கு திரும்பவேண்டும் என கூறுகின்றனர். ஒரு சதவீதத்தினரே மீண்டும் யுத்தம் செய்யவேண்டும் என கூறுகின்றனர்

வத்சலா - தமிழீழ விடுதலைப்புலிகள் மீண்டும் இலங்கையில் தோற்றம் பெறுவார்கள் என நீங்கள் நினைக்கிறீர்களா?

கே பி – உலகம் மாறிக்கொண்டிருக்கிறது. எங்களது வாழ்நாளில் அவ்வாறு நடக்கும் என நாம் நம்பவில்லை. 35 வருட யுத்தத்தில் சிக்குண்டுண்டிருந்த நாம் இனி சமாதானத்தை ஏற்படுத்த முயற்சிக்கவேண்டும்

வத்சலா -உங்களது கைது பற்றி ஏதாவது அறிந்திருந்தீர்களா?

கே பி - இல்லை. ஆச்சரியமாக நடந்தது. ஹோட்டலுக்கு மலேசிய புலனாய்வாளர்கள் வரும் வரை எனக்கு எதுவும் தெரியாது

வத்சலா - அரசியலுக்கு வரும் நோக்கம் இருக்கிறதா?

வத்சலா - இல்லை. எனது மக்களின் பிரச்சினைகள் தீரும் வரை அவ்வாறான எண்ணம் இல்லை. நான் விடுதலையை விரும்புகிறேன். எனினும் பொறுத்திருந்து பார்ப்போம்.
மேலும் இங்கே தொடர்க...

விலைவாசி உயர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டியில் ஆர்ப்பாட்டம்

கண்டி மாவட்ட பாராளுமன்ற அங்கத்தவர் எம்.எச்.ஏ.ஹலீம் தலைமையில் கட்டுகாஸ்தோட்டை நகரில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

விலைவாசி அதிகரிப்பு மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு என்பவற்றிற்கெதிராக ஐ.தே.க. நாடளாவிய ரீதியில் நடத்தி வரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஒரு அங்கமகவே இது நடைபெற்றது.

இதில் பெறுமளவு பொது மக்கள் கலந்து கொண்டதுடன் ஆர்ப்பாட்டத்தின் போது சுலோகங்கள் ஏந்தியவர்கள் அரசின் செயற்பாடுகள் சிலவற்றைக் கண்டித்து கோஷமெழுப்பினர்.
மேலும் இங்கே தொடர்க...

அசிற் வீச்சில் பெண்ணொருவர் பலி: மீரிகமையில் சம்பவம்



வரக்காபொலையிலிருந்து மீரிகம சென்ற பஸ்ஸில் வைத்து பெண் ஒருவருக்கு எசிட் வீசி கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் அப் பெண் கொலை செய்யப்பட்டதோடு, பெண்ணுடன் பயணம் செய்த அவரின் மகள் காயமடைந்து வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

தாயின் மடியில் 1960.2.18.விதியின் பிடியில் 2010.7.31

மரண அறிவித்தல்

தாயின் மடியில் 1960.2 .18 .விதியின் பிடியில் 2010.07 .31

திரு சிவஸ்ரீ சிற்சபேசக்குருக்கள் உமாசுதசர்மா (சுதன் சர்மா)
(சுவிஸ் சங்கம இசைக்குழு பாடகர்)

அராலி யூரை பிறப்பிடமாகவும் ஜெர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட சிற்சபெச்சகுருக்கள் உமாசுதசர்மா கடந்த 31 . 07 .2010 .சனிக்கிழமை இரவு காலமானார் ,

அன்னார் காலம் சென்ற சிவசுவாமிகுருக்கள் சவுந்தரம்மா தம்பதிகளின் மூத்த பேரனும் காலம் சென்ற சிற்ச பெசகுருக்கள் இலக்சுமி அம்மா தம்பதியினரின் மூத்த புதல்வரும் ,

பாலசுப்பிரமணியசர்மா லோகநாயகி தம்பதியினரின் அன்பு மருமகனும், வத்சலா அம்மாவின் அன்பு கணவனும், இரவிச்சந்திர சர்மா (மானிப்பாய் )சசிகலா (பிரான்ஸ் )ஆகியோரின் அன்பு சகோதரும் , சிவசுந்தர குருக்கள் (பிரான்ஸ் ) சுந்தர ராஜ சர்மா( சுவிஸ் )சுகுமார் குருக்கள் (சுவிஸ் ) ரவீந்திர சர்மா (ஸ்வீடன் ) சுதாகர சர்மா (சுவிஸ் )காலம் சென்ற வாசுதேவ சர்மா சுதர்சினி(ஸ்வீடன் )ஆகியோரின் மைத்துனரும் , சுகுமார் சர்மா (கனடா ) ஜெயக்குமார் குருக்கள் (இலங்கை மருதடி )முத்து குமார சர்மா (இலங்கை இளவாலை ) பவதாரணி( இலங்கை இளவாலை )ஆகியோரின் உடன் பிறவா சகோதரனும் , ராஜவர்மன் சைநிகா சிபிஸ்டன் (பிரான்ஸ் )ஆகியோரின் தாய் மாமனும் ஆவார் . அன்னாரின் ஈமை கிரிகைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிய தரப்படும்

சி.ரவீந்திரசர்மா .இலங்கை ...............0094214922951
.சிவசுதசர்மா .பிரான்ஸ்
.................0033148378635
பா.சுந்தரராஜ சர்மா.சுவிஸ் .
..............0041793850916
பா .சுகுமார் குருக்கள் .சுவிஸ்
...........0041614015350
பா .ரவீந்திரசர்மா .சுவீடன் .
..................004655029123
பா .சுதாகரசர்மா .சுவிஸ் ....................
0041448307302
பா .சுதர்சினி .சுவீடன் ...........................
004687407696
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் மனைவிவத்சலா
அம்மா.
ஜெர்மனி..................00497623718076
மேலும் இங்கே தொடர்க...

ஜனாதிபதி இன்று தலதா மாளிகாவிற்கு விஜயம்



கண்டிக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று கண்டி தலதா மாளிகாவிற்கு சென்று வழிப்பாடுகளில் ஈடுப்பட்டுள்ளார்.

இதன் போது அஸ்கிரிய பீடத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி,மகாநாயக்க தேரர் உட்பட பலரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

மத்திய மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ,மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க,கண்டி தியவடன நிலமே நிலங்க டல பண்டார ஆகியோர் இதன் போது சமூகமளித்திருந்தனர்.(வீர)
மேலும் இங்கே தொடர்க...

போர்க் குற்றங்கள் இனப்படுகொலைகள் தொடர்பில் நீதி வழங்கப்படவேண்டும்-அமெரிக்கா



போர்க்குற்றங்கள், இனப்படுகொலைகள், மனிதத்துவத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக நீதி வழங்கப்பட வேண்டும் என்பது குறித்தும் பதிலளிக்கும் கடப்பாடு தொடர்பாக அமெரிக்கா உறுதியான நிலைப்பாட்டில் இருப்பதாகவும் ஐ.நா.வுக்கான அந்நாட்டுத் தூதுவர் சூசன்ரைஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக நியூயோர்க்கில் ஐ.நா. வைத் தளமாகக் கொண்ட இன்னர்சிற்றி பிரஸ் நேற்று முன்தினம் தெரிவித்திருப்பதாவது:

சர்வதேச குற்றவியல் நீதிமன்றமானது இனப்படுகொலைக்காக சூடானின் ஓமர் அல் பாஸிரை உத்தியோகபூர்வமாகக் குற்றஞ்சாட்டிய சில நாட்களின் பின்னர் பாஸிர் மீதான குற்றச் சாட்டானது தமது பணியை கடினமானதாக மாற்றியுள்ளதாக சூடானுக்கான ஐ.நா. தூதுவர் ஸ்கொட் கிரேஸியன் கூறியுள்ளார்.

மனித உரிமைகளுக்காகக் குரல்கொடுப்போருக்கு இந்த கருத்து விசனத்தை ஏற்படுத்தும் என்பது தொடர்பாக ஆச்சரியம் இல்லை. ஒபாமா நிர்வாகத்தின் கருத்தையா கிரேஸியன் கொண்டிருக்கிறார் என்று நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை ஐ.நா.வுக்கான அமெரிக்கத் தூதுவர் சூசன்ரைஸிடம் இன்னர்சிற்றி பிரஸ் கேட்டது.

இல்லை, சூடான் தொடர்பான ஒபாமா நிர்வாகத்தின் கொள்கைக்கு அமெரிக்கா மிகத் தெளிவான முறையில் ஒன்றுபட்டு ஆதரவளித் துள்ளது என்று சூசன்ரைஸ் கூறியுள்ளார். மறுபுறத்தில் சூடான் தொடர்பாக ஒபாமா நிர்வாகத்தின் கொள்கை தொடர்பாக புயல் எழுந்துள்ளதாக செயற்பாட்டாளர்கள் கூறுகின் றனர். விடுமுறையின்றி சமூகமளிக்காத போராட்டம் இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஒன்றாகக் காணப்படுகிறது.

இது தொடர்பாக ஐ.நா. விலுள்ள அமெரிக்க தூதரகத்தின் குறிப்பேடு வருமாறு:

இன்னர்சிற்றி பிரஸ்: நீங்கள் ஒரு செய்தி யைக் கூறுவதாகவும் ஸ்கொட் கிரேசியன் மற்றொரு செய்தியைத் தெரிவிப்பதாகவும் சிலர் கூறுகின்றனர். ஓமர்அல் பாசில் மீதான குற்றச்சாட்டானது அதாவது இனப்படு கொலைக்காக ஜனாதிபதி பாஸிர் குற்றஞ்சாட் டப்பட்டிருப்பது தனது பணியை மேலும் கடினமானதாக மாற்றியுள்ளதாக ஸ்கொட் கிரேசியன் அண்மையில் தெரிவித்திருந்தமை மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

விடுமுறையின்றி சமூகமளிக்காமை நடவடிக்கைக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக நான் ஊகிக்கிறேன். சூடான் தொடர்பான கொள் கையை நிர்வாகம் இழந்து வருவதை விடு முறையின்றி சமூகமளிக்காமை விடயம் வெளிப்படுத்துவதாக ஊகிக்கிறேன். இந்த விமர்சனம் தொடர்பாக என்ன நினைக்கிறீர்கள்? டார்பர் மற்றும் தென் சூடான் தொடர்பாக ஜனாதிபதி பாஸிர் மீது அழுத்தம் கொடுக்கும் விடயத்தில் ஒரேநிலைப்பாட்டில் நிர்வாகம் முன்னகர்வை மேற்கொண்டுள்ளது என்று நீங்கள் கருதுகிறீர்களா? அல்லது சிலர் கூறுவதுபோன்று இரு வேறுபட்ட செய்திகளா?

தூதுவர் ரைஸ்: இல்லை, சூடான் தொடர்பாக அமெரிக்காவானது ஜனாதிபதி ஒபாமாவின் கொள்கைக்கு உறுதியான ஆதரவாகவுள்ளது. இந்தக் கொள்கையானது வெளிவிவகார அமைச்சர் கிளின்டன்,மரான் மற்றும் கிரேஸி யன் உட்பட ஏனையோரால் வடிவமைக்கப் பட்ட பல்வேறு உள்ளடக்கங்களை கொண்ட தாகும். விரிவான சமாதான உடன்படிக்கை அமுல்படுத்தப்பட வேண்டும் என்று நாம் அழுத்தியுரைத்திருக்கிறோம். அதேவேளை, டார்பூரின் பாதுகாப்பு நிலைவரம் மோசமடை வது தொடர்பாக ஆழ்ந்த கவலையடைந் திருக்கிறோம்.

இன்னர்சிற்றி பிரஸ்: இனப்படுகொலைக் குற்றச்சாட்டு உங்கள் பணியை கடினமான தாக்குகிறதா? உங்கள் கொள்கையைப் பின்பற்றுபவர் ஒருவர் அவ்வாறு கூறியுள்ளார். உண்மையாக அவர் அவ்வாறு கூறினாரா?

சூசன்ரைஸ்: ஏனையோர் என்ன கூறியுள் ளனர் என்பது பற்றிக் கூறுவதற்கான நிலைமை யில் நான் இல்லை. சுருக்கமாகக் கூறினால் டார்பரிலும் ஏனைய இடங்களிலும் இடம் பெறும் போர்க் குற்றங்கள்,இனப்படுகொலை, மனிதத்துவத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக நீதி நிலைநாட்டப்பட வேண்டும். மற்றும் பதிலளிக்கும் கடப்பாடு என்பன தொடர்பாக அமெரிக்கா உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. (வீர)
மேலும் இங்கே தொடர்க...

மஹிந்த ரணில் மீண்டும் சந்திப்பு



ஜனாதிபதி மஹிந்தவுக்கும் ஐ.தே.க.வின் தலைவர் ரணிலுக்குமிடையிலான மேலுமொரு சந்திப்பு நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளது.

அலரி மாளிகையில் நடைபெறவுள்ள இந்தச் சந்திப்பில் இரு கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொள்ளவுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் இறுதித் தீர்மானம் ஒன்றை எட்டுவதே இந்த பேச்சுவார்த்தைத் தொடர்ச்சியின் நோக்கமாகவிருக்குமென தெரிவிக்கப்படுகிறது.(வீர)
மேலும் இங்கே தொடர்க...

இந்தியத் துணைத் தூதரகம் விரைவில் யாழ்ப்பாணத்தில்




யாழ்ப்பாணத்தில் இந்தியாவின் துணைத் தூதரகம் ஒன்று விரைவில் திறக்கப்படவுள்ளது. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் டில்லியில் கடந்த புதன்கிழமையன்று நடைபெற்ற மத்திய அமைச் சரவைக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் மூத்த அமைச்சர்களான பிரணாப் முகர்ஜி, .சிதம்பரம், .கே.அந்தோனி, எஸ்.எம்.கிருஷ்ணா, சீ.ராசா உட்பட மத்திய அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டனர்.

யாழ்ப்பாணத்தில் துணைத் தூதரகம் ஒன்றை அமைப்பதன் மூலம் இலங்கையில் யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் வட மாகாணத் தமிழர்களுக்கு நேரடியாக உதவ முடியும் என்ற அடிப்படையில் இத்தீர்மானம் நிறை வேற்றப்பட்டிருக்கிறது.(வீர)
மேலும் இங்கே தொடர்க...

மங்கள சமரவீரவின்சு.க.மக்கள் பிரிவு கலைப்பு?

நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மக்கள் பிரிவு அடுத்த வாரமளவில் கலைக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அடுத்த வாரம் நடைபெறவுள்ள கட்சியின் செயற்குழுக் கூட்டத்தின் போது மேற்கொள்ள வுள்ள தீர்மானத்தின் அடிப்படையில், இந்தக் கட்சி, கலைக்கப்படும் என அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே ஐக் கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரம சிங்க, தலைவர் ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவை தமது கட்சியுடன் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்திருந்தார்.

இதன் அடிப்படையில் கட்சி கலைக்கப்பட்டதன் பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவுடன், கட்சியின் ஏனைய உறுப்பினர்களும் ஐக்கிய தேசிய கட்சியுடன் உத்தியோகபூர்வமாக இணைந்து கொள்ளவிருப்பதாக கூறப்படுகிறது.(வீர)
மேலும் இங்கே தொடர்க...

பாகிஸ்தானுக்கு கேமரூன் எச்சரிக்கை:

பிரிட்டிஷ் பயணத்தை ரத்து செய்தார் ஐஎஸ்ஐ தலைவர் பாகிஸ்தானை பிரிட்டிஷ் பிரதமர் கண்டித்ததைத் தொடர்ந்து, தனது பிரிட்டன் பயணத்தை ஐ.எஸ்.ஐ. தலைவர் ஷுஜா பாஷா ரத்து செய்தார்.

÷பெங்களூரில் கடந்த புதன்கிழமை பேசிய பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், "இந்தியாவிலும், ஆப்கானிஸ்தானிலும் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் அமைப்புகளுடனான தொடர்பை பாகிஸ்தான் துண்டித்துக் கொள்ள வேண்டும்' என எச்சரிக்கை விடுத்திருந்தார்.

÷அவரது இந்த எச்சரிக்கையால் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ கோபம் கொண்டது. இதையடுத்து, ஆகஸ்ட் முதல் வாரத்தில் தான் மேற்கொள்ளவிருந்த பிரிட்டன் பயணத்தை ஐஎஸ்ஐ தலைவர் ஷுஜா பாஷா ரத்து செய்துள்ளார்.

÷பயங்கரவாதத்துக்கு எதிரான ஒத்துழைப்பு குறித்தே பிரிட்டனில் உயர்நிலை அதிகாரிகளுடன் ஷுஜா பாஷா பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

÷அமெரிக்கா செல்கிறார் ஷுஜா பாஷா: ஐஎஸ்ஐ-க்கும், தலிபான்களுக்கும் உள்ள தொடர்பை ஏற்க முடியாது என பிரிட்டன் போலவே அமெரிக்காவும் அறிவித்துள்ளபோதிலும், விரைவில் தான் மேற்கொள்ள உள்ள அந் நாட்டு விஜயத்தை ஷுஜா பாஷா ரத்து செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

÷பிரிட்டிஷ் செல்கிறார் ஜர்தாரி: பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் பாகிஸ்தானுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளபோதிலும், ஏற்கெனவே திட்டமிட்டபடி ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் 4 நாள்களுக்கு பிரிட்டனில் பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

÷அதிபரின் செய்தித் தொடர்பாளர் ஃபர்ஹத்துல்லா பாபர் இதை உறுதி செய்தார்.

÷வெளியுறவு அமைச்சகம் வருத்தம்: விக்கிலீக்ஸ் இணையதளத்தின் செய்தியை வைத்து டேவிட் கேமரூன் கருத்து தெரிவித்திருப்பது வருந்தத்தக்கது என வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அப்துல் பாசித் கூறினார்.

÷ஐஎஸ்ஐ-க்கு எதிராக அபாண்டமாக குற்றம்சாட்டுவதன் மூலம், பயங்கரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தான் புரிந்துள்ள சாதனைகளை மறைக்க முடியாது என்றும் அவர் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

உலகின் மிக வேகமாக செல்லும் ரயிலை சமீபத்தில் சீனா இயக்கி, சாதனை படைத்துள்ளது.





உலகின் மிக வேகமாக செல்லும் ரயிலை சமீபத்தில் சீனா இயக்கி, சாதனை படைத்துள்ளது. இந்த ரயில் தற்போது ஓடிக் கொண்டிருக்கும் புல்லட் ரயிலை விட வேகமானது. இதன் சராசரி வேகம் மணிக்கு 350 கி.மீ., இந்த ரயில் ஆயிரத்து 68 கி.மீ., தொலைவுள்ள மத்திய சீனாவில் வூஹானையும், தென்சீனாவில் குவாங் சோவையும் இணைக்கிறது. இதற்கு முன்பு இந்த இரண்டு நகரங்களை இணைக்கும் ரயிலில் பயணித்தால் 6 மணி நேரம் ஆகும். ஆனால், தற்போது இயக்கப்படும் அதிவேக ரயில் மூலம் இரண்டு மணி 45 நிமிட நேரத்தில் சென்று விடலாம்.

சீனாவில் விரைவு ரயில் போக்குவரத்து மத்திய சீனாவை இணைக்கும் வகையில் வளர்ச்சி குறைந்த பகுதிகள் மற்றும் அதிக தொழிற்சாலைகள் நிறைந்த பகுதிகள் என 20 நகரங்களை கடந்து வருகிறது. சீமென், பாம்பார்டியர் மற்றும் ஆல்ஸ்டோம் ஆகிய நிறுவனங்கள் இந்த விரைவு ரயிலை வடிவமைக்கவும், அதன் பாகங்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டன. கடந்த டிசம்பரில் இந்த ரயில் வடிவமைக்கப்பட்டு, 394 கி.மீ., வேகத்தில் இயக்கப்பட்டு, சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இந்த ரயிலின் சராசரி வேகம் 350 கி.மீ., உலகில் உள்ள மற்ற எந்த ரயிலையும் விட இது மிக வேகமாக செல்லக்கூடியது.

ஜப்பானில் மணிக்கு 243 கி.மீட்டரும், ஜெர்மனியில் 232 கி.மீட்டரும், பிரான்சில் 277 கி.மீட்டர் வேகத்திலும் தான் ஓடுகின்றன. அதிவேகமாக செல்லும் இந்த ரயிலுக்கு 380ஏ என்ற பெயர் வைக்கப் பட்டுள்ளது. சாங்சுன் ரயில்வே வாகன நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த ரயில் ஒரு மணி நேரத்தில் 380 கி.மீ., நேரத்தில் செல்லக் கூடியதென்றாலும் சிறிது வேகம் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் சீனாவின் ரயில்வே துறை அமைச்சருக்கும், சாங்சுன் ரயில்வே வாகன நிறுவனத் திற்கும் இடையே ஏற்பட்ட ஓப்பந்தப்படி அதிவேக ரயில்கள் 100 தயாரிக்கப்பட உள்ளன.

புதிய இருப்புப் பாதைகள் அமைக்கப்பட்டப் பின் பீஜிங் மற்றும் ஷாங்காய் நகரங்களுக்கு இடையே அடுத்த ஆண்டு முதல் இந்த அதிவேக ரயில் ஓடத் துவங்கும். பீஜிங் - ஷாங்காய் இடையே உள்ள தூரம் ஆயிரத்து 302 கி.மீட்டர். இந்த தூரத்தை அதிவேக ரயில் 4 மணி நேரத்தில் கடந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

ஈரானில் நிலநடுக்கம்: 274 பேர் காயம்






ஈரானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக, 274 பேர் காயமடைந்தனர். ஈரான் நாட்டின் வடகிழக்கு பகுதியில், டெஹ்ரானில் இருந்து 700 கி.மீ., தொலைவில் உள்ள டோர்பட் இ ஹைதரியா நகரில் நேற்று முன்தினம் மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.7ஆக பதிவானது. வீடுகள் குலுங்கியதையடுத்து, மக்கள் அலறியடித்து தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறினர்.

நேற்று காலை தெற்கில் உள்ள கெர்மான் பகுதியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி, 274 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.
மேலும் இங்கே தொடர்க...

ஜனாதிபதியுடன் காதர் எம். பி. நேற்று கண்டியில் சந்திப்பு





கண்டி மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆர். எம். ஏ. காதர் நேற்றுக் காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கண்டியில் வைத்து சந்தித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் வைத்தே பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆர். எம். ஏ. காதர் சந்தித்துள்ளார்.

கடந்த பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் காதர் ஜனாதிபதிக்கு ஆதரவாகவே பேசி வருவதுடன் அண்மையில் பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட மற்றும் அவசரகால நீடிப்பு போன்ற வாக் கெடுப்புகளின் போது அரசாங்கத் திற்கு ஆதரவாகவே வாக்களித் திருந்தார்.

இந் நிலையில் தற்போது ஐக்கிய தேசியக் கட்சி காதருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

இவ்வாறான நிலையிலேயே தமது எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பாக நேற்றுக் காலை அவர் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியிருப்பதாக தெரிய வருகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

நாட்டாமைமார்களுக்கு சீருடை: புறக்கோட்டையில் நாளை நிகழ்வு


கொழும்பு புறக்கோட்டை புடவைக் கடைகளுடன் தொடர்புடைய நாட்டாமை மார்களுக்கு சீருடைகளும் அடையாள அட்டைகளும் வழங்கப்படவுள்ளன.

கொழும்பு புறக்கோட்டை முதலாம், இரண்டாம், மூன்றாம் குறுக்குத் தெருக்கள், மெயின் வீதி, கெய்ஸர் வீதி, குமார வீதி, மெலிபன் வீதிகளிலுள்ள புடவைக் கடைகளின் தொடர்புடன் வேலை செய்யும் நாட்டாமைமார்களை இலக்காகக் கொண்டு இந்த அடையாள அட்டைகள், சீருடைகள் புறக்கோட்டை பொலிஸாருடன் இணைந்து வழங்கப்படவுள்ளதாக புறக்கோட்டை புடவை வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் எம். வை. எச். நஜிமுதீன் தெரிவித்தார்.

குறிப்பிட்ட நாட்டாலையின் பெயர், விலாசம், தொலைபேசி இலக்கம், அவர் தொழில் புரியும் கடையின் பெயர் விபரம், தொழில்புரியும் பகுதி என்பன குறிப்பிடப்படவேண்டும். இதுவரை சுமார் 700 க்கும் மேற்பட்ட நாட்டாமைமார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். கருஞ்சிவப்பு (மெரூன்) நிறத்திலான சீருடை வழங்கப்படவுள்ளது. நாளை 2 ஆம் திகதி மாலை 3.30 மணிக்கு புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் நாட்டாமைமார்களுக்கான சீருடை, அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்வு இடம்பெறும்.

சங்கத்தின் தலைவர் எம். வை. கே. நஜிமுதீன், செயலாளர் வை. ஆர். பி. குமார பிரேசார, பொருளாளர் கிருஷ்ணசாமி கந்தராஜா உட்பட ஏனைய வர்த்தகர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

1000 பாடசாலைகளை தரமுயர்த்த 60,000 மில்லியன் ரூபா செலவீடு






வடக்கு, கிழக்கு மலையகப் பகுதிகளிலுள்ள 346 பாடசாலைகள் உட்பட நாடு முழுவதும் இனங்காணப்பட்ட 1000 பாடசாலைகள் இரண்டாம் நிலை பாடசாலைகளாக தரயமுர்த்தப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கென 60,000 மில்லியன் ரூபா செலவு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவிக்கிறது. நகர்ப்புற பாடசாலைகள் மற்றும் பிரசித்தி பெற்ற பாடசாலைகளை நாடிச் செல்லும் போட்டி மனப்பான்மை மற்றும் போக்குவரத்து, போஷாக்கு என்பவற்றுடன் நெருக்கடி நிலையை போக்குதல் போன்ற முக்கிய காரணிகளை மையமாகக் கொண்டு இந்த இரண்டாம் நிலை பாடசாலைகளை உருவாக்க திட்டமிடப் பட்டுள்ளது. குறிப்பாக கிராமிய மற்றும் கஷ்டப் பிரதேச பாடசாலைகளை இலக்காகக் கொண்டு இத்திட்டம் நடைமுறைப்படுத்தப் படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் எஸ். சிறிசேன தெரிவித்தார்.

ஆரம்பப் பிரிவு பாடசாலை வலையமைப்பிற்கான இரண்டாம் நிலைப் பாடசாலை என அறிமுகப் படுத்தப்படும் இப்பாடசாலை ஒவ் வொன்றும் ஒவ்வோர் மூன்று ஆரம்ப பிரிவு பாடசாலைகளுக்கும் ஒரு இரண்டாம் நிலை பாடசாலையாக தரமுயர்த் தப்படும்.

வகுப்பறையினுள் போதிய இடவசதி, க. பொ. த. சா/த மற்றும் உ/த ஆய்வுகூட வசதி, இணைய வசதிகளுடன் கூடிய கணனி ஆய்வு கூடம், நூலகம், மனையியல், விவசாய கல்வி ஆய்வுகூடம், மாணவர் விடுதி, ஆசிரியர்களுக்கான விடுதி, நீர், மின், தொலைபேசி வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் என்பன உள்ளடங்கியதாக இந்த இரண்டாம் நிலை பாடசாலைகள் அமையவுள்ளன.

நான்கு வருட திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்படவுள்ள இரண்டாம் நிலை பாடசாலைகள் மேல் மாகாணத்தில் 123 அமையவுள்ளன.

மத்திய மாகாணத்தில் 153, தென் மாகாணத்தில் 110, வட மாகாணத்தில் 90, கிழக்கில் 103, வடமேல் 127, வட மத்தியில் 82, ஊவா மாகாணம் 83, சப்ரகமுவ 113 என நாடு முழுவதிலும் 1000 பாடசாலைகள் அமையவுள்ளன.

தற்போது ‘இசுறு’ பாடசாலைகள் என தரயமுர்த்தப்பட்டுள்ள பாடசாலைகளும் இத்திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படவுள்ளன
மேலும் இங்கே தொடர்க...

சன் சீ’ கப்பலை இடை மறிக்க கனடிய அரசு முன் ஏற்பாடு கனடா பாதுகாப்பு அமைச்சு தகவல்


சுமார் 200 இலங்கையர்கள் இருப்பதாகக் கூறப்படும் எம். வி. சன்சீ கப்பலை இடை மறிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு ள்ளதாக கனடாவின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தக் கப்பல் அடுத்த வாரமளவில் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா துறைமுகத்தை வந்தடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச கடற் பரப்பில் பயணிப்பதை தமது கடற் படையினர் அவதானித்துள்ளதாக கனேடிய பாதுகாப்பு அமைச்சர் பீட்டர் மெக்கே தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த கப்பல் கனேடிய கடற் பரப்புக்குள் பிரவேசிக்கும் போது அதனை தடுத்து நிறுத்த தமது கப்பல்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கப்பலில் பயணிப்போரின் உடல் நிலையை கவனிப்பதற்கான ஒழுங்குகளையும் தமது அரசாங்கம் செய்திருப்பதாக மெக்கே தெரிவித்துள்ளார். கனடாவுக்கு கிடைத்துள்ள தகவல்களின்படி, இந்தக் கப்பலில் இலங்கையின் பெண்களும் சிறுவர்களும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடிவரவுத்துறை சட்டத்தரணி டக் கெனொன், இந்தக் கப்பல் பயணிகள் தொடர்பில் தகவல் தெரிவிக்கும் போது கப்பலில் பயணிப்போர் அடைக்கலம் கோரும் அகதிகளாகவே இருப்பர் என எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளார். கெனொன் கடந்த ஒக்டோபர் மாதம் கனடாவுக்கு ஓசியன் லேடி கப்பலில் வந்த இலங்கையர்களுக்காக ஆஜரானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

பெருந்தோட்ட பிரதேச பாடசாலைகள்: மாணவர் இடைவிலகல்; குறித்து ஆராய்வதற்கு ஜனாதிபதி பணிப்பு


தோட்டப் பகுதிகளில் கல்வி கற்கும் மாணவர்கள் முழுமையாக கற்காமல் இடைவிலகிச் செல்வது தொடர்பாக உடனடியாக ஆராயுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இவ்வாறானவர்களை இனங்கண்டு அவர்களை தெளிவுபடுத்துமாறும் அதற்கான வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு ஆலோசணை வழங்கினார்.

நாட்டில் வாழுகின்ற அனைவருக்கும் சம அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, எந்த இனமாகவும் இருக்கலாம், எந்த மதமாகவும் இருக்கலாம், அனைத்து மக்களும் சகல வசதிகளுடனும் சந்தோசமாக வாழ வழிவகைகளை நாம் செய்து கொடுக்க வேண்டும்.

நாட்டிலுள்ள அனைத்து குழந்தைகளினதும் கல்விக்கு மிக முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருவதுடன் கல்வியையும் சுகாதாரத்துறை யையும் மேம்படுத்துவது தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்றார்.

தோட்டப்புற பாடசாலைகளில் கல்வியை தொடராமல் இடைநடுவில் பாடசாலையை விட்டு மாணவர்கள் அதிகளவில் விலகிச் செல்கின்றனர். இதற்கான காரணத்தை கண்டறியவும், ஆய்வினை மேற்கொள்ளவும் வேண்டும் என்றும் ஜனாதிபதி இங்கு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

அத்துடன் தோட்டப்புற மக்களுக்கான வீடமைப்புத் திட்டம் நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவும் அதிகாரிகளுடன் ஜனாதிபதி ஆலோசணை நடத்தினார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் அதிகாரிகளுடன் நடத்திய சந்திப்பொன்றின் போதே மேற்படி விடயங்கள் ஆராயப்பட்டன.
மேலும் இங்கே தொடர்க...