23 நவம்பர், 2009

ஏ-9 நெடுஞ்சாலையூடாக பயணிக்க த.தே.கூட்டமைப்புக்கு அனுமதி



தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏ - 9 நெடுஞ்சாலை ஊடாக யாழ்ப்பாணம் செல்வதற்கான அனுமதி பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் நேற்று யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன் கிளிநொச்சி ஊடாக தனது வாகனத்தில் யாழ்ப்பாணம் சென்றடைந்துள்ளார். மதவாச்சியிலிருந்து இவரது வாகனத்திற்கு இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டதாக அறிய முடிகின்றது.

ஏ- 9 நெடுஞ்சாலை திறக்கப்பட்ட பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரொருவர் தரைவழியாக யாழ்ப்பாணம் சென்றுள்ளமை இதுவே முதல் தடவையாகும்.

கடந்த காலங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாழ்ப்பாணத்திற்கான பயணத்தை விமான மூலமே மேற்கொண்டுவந்தனர் . மாதத்தில் 3 தடவைகள் இலங்கை விமானப் படைக்கு சொந்தமான விமானத்தில் இலவச பயண வசதிகளும் அரசாங்கத்தினால் இவர்களுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...
திர்வரும் 2010 ஆம் ஆண்டில் ஜனாதிபதி



பாராளுமன்ற தேர்தலை நடத்துவதற்கு முன்னர் எதிர்வரும் 2010 ஆம் ஆண்டில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவது என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுடன் இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் இது குறித்து அவர் தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி தேர்தலுக்கான ஆயத்தங்களை மேற்கொள்ளுமாறு கட்சி உறுப்பினர்களுக்கு அவர் பணித்துள்ளார்.எனினும் தேர்தல் நடைபெறும் தினம் குறித்து எதுவும் அறிவிக்கவில்லை.

இது தொடர்பாக தேர்தல் ஆணையாளருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளதாக உதவி தேர்தல் ஆணையாளர் டபிள்யூ.டபிள்யூ. எம் தேஷபிரிய எமது இணையத்தளத்திற்கு தெரிவித்தார்
மேலும் இங்கே தொடர்க...
தேர்தல் தொடர்பில் ஜனாதிபதியின் அறிவிப்பு இன்று வெளியிடப்படும்


தேர்தல் முதலில் நடைபெறும் என்பது தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அறிவிப்பு இன்று திங்கட்கிழமை நள்ளிரவில் வெளியாகும் என்று தெரிய வருகிறது. பெரும்பாலும் முதலில் ஜனாதிபதித் தேர்தலே நடத்தப்படும் என்றும் எதிர்வரும் ஜனவரி மாதம் 23 ஆம் திகதி தேர்தல் நடைபெறலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், தேர்தல் தொடர்பான ஜனாதிபதியின் அறிவிப்பின் பின்னர் தேர்தல் நடைபெறும் தினம் மற்றும் வேட்பு மனுத் தாக்கல் தொடர்பான விபரங்களை தேர்தல்கள் ஆணையாளர் வெளியிடுவார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

எந்தத் தேர்தல் முதலில் நடைபெறும் என்பது தொடர்பான அறிவிப்பு கடந்த 15 ஆம் திகதி நடைபெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய சம்மேளனத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டபோதும் சம்மேளனத்தில் அறிவிக்கப்படவில்லை. அதேவேளை கடந்த வாரம் ஆளும் கட்சியின் அமைச்சர்கள், எம்.பி.க்கள் மற்றும் அமைப்பாளர்களை சந்தித்து பேச்சு நடத்திய ஜனாதிபதி விரைவில் பிரதான தேர்தல் ஒன்றுக்கு தயாராகுமாறு கோரியிருந்தார். அதனையடுத்தே இன்று திங்கட்கிழமை தேர்தல் தொடர்பான அறிவிப்பு இடம்பெறும் என்று தெரிவிக்கப்படுகின்றது
மேலும் இங்கே தொடர்க...
ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்-ஜே.வி.பி. கோரிக்கை



ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு அரசாங்கம் உரிய பாதுகாப்பினை வழங்க வேண்டும். எதிர்கால அரசியலில் அரசாங்கத்துக்கு சவாலாக அமையவுள்ள சரத் பொன்சேகாவுக்கு தற்போதைய நிலையில் ஆபத்தெதுவும் ஏற்பட்டால் அதற்கான முழுப் பொறுப்பையும் அரசாங்கமே ஏற்க வேண்டும் என்று ஜே.வி.பி.யின் பிரசாரச் செயலாளரும் எம்.பி.யுமான விஜித ஹேரத் தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜெனரல் சரத் பொன்சேகாவை பொது வேட்பாளராக நியமிப்பது தொடர்பில் அவருடன் இன்னமும் இரு தினங்களில் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளோம் என்றும் அவர் கூறினார். ஜனவரி மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளருக்கு ஜே.வி.பி. ஆதரவு வழங்கவுள்ளது. இது குறித்து தெளிவுபடுத்துகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:

இலங்கையில் தற்போது சூடுபிடித்துள்ள அரசியல் களத்தில் அனைவராலும் பேசப்படுபவர் ஜெனரல் சரத் பொன்சேகா ஆவார். இவர் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிர்கால அரசியலில் சவாலாக இருப்பார் என்ற அச்சத்தினால் அரசாங்கம் ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு கெடுபிடிகளை செய்து வருகின்றது.

உண்மையில் சரத் பொன்சேகா மிகவும் உயிர் அச்சுறுத்தல் உள்ள நபர் என்றப்படியால் அவருக்கு கூடிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். இவ்வாறான ஒரு சூழ்நிலையில் ஜெனரலின் பாதுகாப்பினை அரசாங்கம் குறைப்பது ஆபத்தானது. எனவே, ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு கூடிய பாதுகாப்பை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிடின் அதனால் ஏற்படக் கூடிய ஆபத்துகளுக்கு அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும்.

நாட்டில் முப்பதாண்டு கால யுத்தம் முடிவடைந்துள்ளபோதும் ஜனநாயகத்தை ஏற்படுத்தாத சூழலே காணப்படுகின்றது. எனவே, சிறந்த தலைமைத்துவம் மிக்க ஜெனரல் சரத் பொன்சேகாவை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக நிறுத்துவது தொடர்பில் எதிர்வரும் இரு நாட்களில் பேச்சுவார்த்தைகள் நடைப்பெறவுள்ளது. ஜெனரல் சரத் பொன்சேகாவின் அரசியல் பிரவேசத்தை தடுப்பதற்காக மேற்கொள்ளக்கூடிய செயற்பாடுகளை அழிந்துப்போன புலிகள் மீது சுமத்திவிட்டு மௌனம் சாதிக்க அரசாங்கம் முயற்சி செய்யக்கூடாது.
மேலும் இங்கே தொடர்க...
மாவீரர்,போராளிகளின் அர்ப்பணிப்புக்களை கொச்சைப்படுத்தாதீர்



மாவீரர்,போராளிகளின் அர்ப்பணிப்புக்களை கொச்சைப்படுத்தாதீர் என்ற தலைப்பில் கனடாவில்புளொட் துண்டுபிரசுரம்! கனடாவின் ரொறன்ரோ, மொன்றியல் மாநிலங்களில் புளொட்இயக்கத்தின் கனடா கிளையினரால் துண்டு பிரசுரம் ஒன்று வினியோகம் செய்யப்பட்டுள்ளதாகதெரியவருகின்றது. போராட்டம் என்ற பெயரில் கனடாவில் மேற்கொள்ளப்படும் வியாபாரநடவடிக்கைகளை கண்டித்தும் அதற்காக தம்முயிர்களை அர்ப்பணித்துள்ள மாவீரர்கள்,போராளிகளின் தியாகங்களை கொச்சைப்படுத்த வேண்டாம் என்றும் அவ் துண்டு பிரசுரத்தில்தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் நேற்று சனிக்கிழமை மாலைவரை10,000க்கு மேற்பட்ட பிரதிகள் வரை விநியோகம் செய்யப்பட்டதாகவும், இதனைபொதுமக்களும், வர்த்தகர்களும் ஆர்வத்துடன் வாங்கி தமது ஆதரவினை புளொட்இயக்கத்தினருக்கு வழங்கியுள்ளதுடன், கடந்த காலங்களில் போராட்டம் என்ற பெயரில்ஏமாற்றப்பட்டதையும் அவ் மக்கள் கண்ணீர் மல்க நினைவுமீட்டதுடன், போராட்டம் என்றபெயரில் பணவசூலிப்பு செய்தவர்கள் பற்றியும் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.இந்து ஆலயங்கள், தமிழ்வர்த்தக நிலையங்கள், தேவாலயங்கள் போன்ற பகுதிகளில்கணசமான புளொட் உறுப்பினர்கள் பரவலாக நின்று துண்டுபிரசுரங்களை நேரடியாகவேமக்களின் கைகளில் கொடுத்ததை காணமுடிந்தது. இவ்வாறு துண்டுபிரசுரம் வினியோகம்
செய்யப்பட்டதை கண்ட தமிழ் ஊடகவியலாளர் ஒருவர் தனது வாழ்த்துக்களை பிரசுரம்வினியோகம் செய்து கொண்டிருந்த புளொட் உறுப்பினர்களுக்கு தெரிவித்ததுடன், இவ்நடவடிக்கையானது கனேடிய மண்ணில் தமிழ் மக்கள் மத்தியில் ஜனநாயக மாற்றம்காணப்படுவதற்கு ஒர் எடுத்துக்காட்டு என்றும் தெரிவித்தார்.

மேலும் இங்கே தொடர்க...
ஆராய்ச்சி மற்றும் மேற்பாட்டு கழக வட்டாரங்கள் தெரிவித்தன.General India news in detail

பாலாசூர் : அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறனுடன் வடிவமைக்கப்பட்டுள்ள அக்னி-2 ஏவுகணைச் சோதனையை முதல் முறையாக இரவு நேரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம் பாட்டு கழக வட்டாரங்கள் கூறியதாவது: அணு ஆயுதங்களை ஏந்திச் சென்று இலக்கை தாக்கக் கூடிய வகையிலான அக்னி-2 ஏவுகணை வடிவமைக்கபட்டுள்ளது.



இதற்கான அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ளன. இது குறித்த சோதனை நடத்துவதற்கான இறுதிக் கட்ட பணிகள் நடந்து வருகின்றன. இந்த ஏவுகணை, 2,000 கி.மீ., தொலைவில் உள்ள இலக்கை தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு டன் எடையுள்ள வெடி பொருட்களை தாங்கிச் செல்லும் திறன் உடையது. இந்த ஏவுகணைச் சோதனை முதல் முறையாக இரவு நேரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேற்பாட்டு கழக வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும் இங்கே தொடர்க...

பாதுகாப்பு வீரர்களுக்கான ‘ரணஜயபுர’
நேற்று ஜனாதிபதியால் அங்குரார்ப்பணம்

1500 வீடுகளுடன் சகல வசதிகளும் உள்ளடக்கம்

அநுராதபுர இப்பலோகமவில் அரசாங்கத்தால் பாதுகாப்புப் படை வீரர்களுக்கென அமைக்கப்பட்டுள்ள ‘ரணஜயபுர’ வீடமைப்புத் திட்டத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைத்து படையினர்களிடம் கையளித்தார்.

180 ஏக்கர் விஷ்தீரணமுள்ள காணியில் சகல வசதிகளையும் கொண்ட 1509 வீடுகள் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

புதிய வீடுகளுடன் மருத்துவ நிலையம், சிறுவர் பாடசாலை, வங்கி வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் அழகிய அமைதி சூழ்ந்த பிரதேசத்தில் இவ்வீடுகள் அமையப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நேற்று முற்பகல் மேற்படி ‘ரண ஜயபுர’ வுக்கு வருகை தந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ படை வீரர்களின் பிள்ளைகளால் வரவேற்கப்பட்டார்.

முப்படைத் தளபதிகள் மற்றும் படை உயரதிகாரிகளுடன் உள்நாட்டு வெளிநாட்டு இராஜதந்திரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

அமைச்சர்கள் நிமல் சிறிபால டி சில்வா, கெஹெலிய ரம்புக்வெல்ல, பந்துல குணவர்தன, அநுர பிரிய தர்ஷன யாப்பா, சுசில் பிரேம ஜயந்த, மிலிந்தமொரகொட ரஞ்சித் சியம்பலாபிடிய, உட்பட அமைச்சர்கள், ஜனாதிபதியின் பாரியார் திருமதி ஷிரந்தி ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க பாதுகாப்பமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

படைவீரர்களுக்கான இவ்வீடமைப்புப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ரணஜயபுர பாடசாலையைக் கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த உத்தியோகபூர்வமாகத் திறந்துவைத்தார்.

இலங்கை வங்கிக் கிளையை அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடியவும் சுகாதார மத்திய நிலையத்தை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவும், கார்கில்ஸ் பூட்சிட்டி நிறுவனத்தை வட மத்திய மாகாண முதலமைச்சர் பேர்டி பிரேமலால் திசாநாயக்கவும், சிறுவர் பாடசாலையை ஜனாதிபதியின் பாரியார் திருமதி ஷிரந்தி ராஜபக்ஷவும் அங்குரார்ப்பணம் செய்து வைத்தனர்.

மேலும் இங்கே தொடர்க...