20 மே, 2010

அமைச்சர்கள் வெளிநாட்டுக்கு செல்ல வேண்டாம்- ஜனாதிபதி பணிப்பு

அமைச்சர்கள் எவரும் வெளிநாட்டுக்கு செல்ல வேண்டாம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது பரவலாக பெய்துவரும் அடை மழை காரணமாக நடாளாவிய ரீதியில் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் முகாம்களிலும் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளிலும் தங்கியுள்ளார்கள். எனவே ஒவ்வொரு அமைச்சரும் நாட்டில் இருந்து இவர்களுக்கான நிவாரண பணிகளை முன்னெடுக்க வேண்டும் என ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

நாட்டில் பரவலாகப் பெய்துவரும் இடிமின்னலுடன் கூடிய கடும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக இதுவரை 1 லட்சத்து 4 ஆயிரத்து 213 குடும்பங்களைச் சேர்ந்த 4 லட்சத்து 58 ஆயிரத்து 783 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 18 பேர் மரண மடைந்துள்ளமை குறிப்பிடதக்கது
மேலும் இங்கே தொடர்க...

யாழில் தமிழ்த் திரைப்பட விழா : அரசு ஏற்பாடு

யாழ்ப்பாணத்தில் தமிழ்த் திரைப்பட விழா ஒன்றை விரைவில் நடத்த அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

யாழ் மக்களின் மனநிலையில் ஒரு புத்துணர்வை ஏற்படுத்தும் நோக்கிலேயே அங்கு ஒரு வாரத்துக்கான திரைப்பட விழாவை நடத்த அரசாங்கம் ஏற்பாடு செய்கிறது.

யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கவின் பணிப்பின் பேரில் இதற்கான நடவடிக்கைகளை, அங்குள்ள பாதுகாப்புத் தலைமையகம் மேற்கொண்டு வருகின்றது.

இத்திரைப்பட விழாவில் தென்னிந்திய பழைய தமிழ் திரைப்படங்களும் வெற்றிப் படங்களும் காண்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். குடாநாட்டில் முன்னர் 16 திரையரங்குகள் இருந்தன. பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக அவை அனைத்தும் அழிக்கப்பட்டன. இதனால் பொது மக்கள் பொழுது போக்குக்காக திரையரங்குகளில் ஒன்றுகூடி படம் பார்த்து மகிழும் சந்தர்ப்பத்தை இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

ஜெனரல் சரத் பொன்சேகா கூறிய அதிரடித் தகவல்கள்..!




ஜனநாயக தேசிய முன்னணியின் விசேட செய்தியாளர் மாநாடு நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டிருந்து நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சரத் பொன்சேகா அதிரடித் தகவல்களை வெளியிட்டார்.

"போர்க் குற்றம்" ஆதாரங்களுடன் முன்வைத்தால் விசாரிக்கவேண்டிய கடப்பாடு அரசுக்கு உண்டு

சர்வதேச நெருக்கடி குழு மற்றும் செனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் முன்வைப்பது போல போர்க் குற்றங்கள் எதுவும் இடம்பெறவில்லை. அவ்வாறு இடம்பெற்றிருப்பதாக இடம், நேரம் உள்ளிட்ட ஆதாரங்கள் முன்வைக்கப்படுமாயின் அவை தொடர்பில் விசாரணை செய்யவேண்டிய கடப்பாடு அரசாங்கத்திற்கு இருக்கின்றது.

போர்க் குற்றங்கள் தொடர்பில் எனக்கு தனிப்பட்ட ரீதியில் தகவல்கள் கிடைக்குமாயின் எனக்குத் தெரிந்ததை மறைக்க மாட்டேன்.

ஒழுக்கம் நிறைந்த எமது இராணுவத்தினர் சாதாரண மக்களுக்கு குறைந்தளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் யுத்தத்தை முன்னெடுத்தனர். இதனால் மூன்று இலட்சம் மக்கள் காப்பாற்றப்பட்டதுடன் 10 ஆயிரம் புலிகள் கைது செய்யப்பட்டனர்.

நான் இராணுவ குற்றத்தை மறைக்கவில்லை என்பதுடன் அவ்வாறான குற்றங்களை செய்தவர்கள் கடந்த காலங்களில் தண்டிக்கப்பட்டனர். சர்வதேச சட்டங்களுக்கு அமைவாகவே யுத்தம் முன்னெடுக்கப்பட்டது.

இராணுவத்திற்கு வெளியே இருப்பவர்களின் கரங்களில் போர்க் குற்றம் கறை படிந்திருந்தால் அவற்றுக்கு எதிராக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும். படையினர் எனது உத்தரவின் கீழ் செயற்பட்டனர். சட்ட ரீதியற்ற அறிவுறுத்தல்களுக்கு அமைய படையினர் நடந்துக்கொள்வதற்கு நான் இடமளிக்கவில்லை.

எனினும் தனது அறிவுரைகளை படையினர் பின்பற்றினர் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஊடகங்களுக்கு தெரிவித்திருக்கின்றார்.

ஓராண்டு கழிந்த போதும் இராணுவ வெற்றி மக்களின் வெற்றியாக மாற்றப்படவில்லை

ஒரு வருடத்திற்கு முன்னர் மக்கள் அனைவரும் எதிரியின் பக்கமாக திருப்பப்பட்டமையினால் மக்கள் தங்களுடைய வாழ்க்கையில் மாற்றங்களை எதிர்ப்பார்க்காமலும் கல்வி, சுகாதாரம் மற்றும் உணவு விடயங்களில் கூட கவனத்தை செலுத்தாது இருந்தனர்.

இராணுவ வெற்றிக்கு ஓராண்டு கழிந்து விட்டபோதிலும் அந்த வெற்றி மக்களின் வெற்றியாக மாற்றப்படவில்லை.

யுத்தத்தில் உயிர்களைத் தியாகம் செய்த வீரர்கள் உடலுறுப்புகளை இழந்த வீரர்களுக்கு இத்தருணத்தில் எனது கௌரவத்தையும் மரியாதையையும் செலுத்துகின்றேன். எனினும் இராணுவ வெற்றி அர்த்தப்படுத்தப்படாமையினால் வெற்றியை கொண்டாடுவதற்கு இயற்கை கூட ஒத்துழைப்பதற்கு மறுத்து விட்டது.

நாட்டு மக்கள் கடந்த 30 வருடங்களாக அனுபவித்த யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வந்ததன் பின்னர் நிலையான சமாதானத்தை அனுபவித்து கொண்டிருக்கின்றனர். இவ்வாறான நிலையில் நாடு, தேசியம் என்ற ரீதியில் கடந்த ஒரு வாரமாக கொண்டாடப்படுகின்றது.

நாங்கள் இராணுவ வீரர்களை மறக்கவில்லை. எனினும் இராணுவ கொண்டாட்டங்களை அனுஷ்டிப்பதற்கு கூட இயற்கை ஒத்துழைக்கவில்லை.

கொண்டாட்டம் என்று கதைக்கின்றனரே தவிர அங்கு எவ்விதமான திட்டங்களும் இல்லை என்பதுடன் இராணுவ வெற்றி மக்களின் வெற்றியாக மாற்றப்படவில்லை.

யுத்தத்திற்கு பின்னர் மக்கள் எதிர்பார்த்திருந்த மாற்றங்கள் ஏற்படவில்லை. மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கின்றனர். நிர்வாக பிரச்சினையும் இருக்கின்றது இயற்கை ஒத்துழைக்க மறுத்தமைக்காக வருந்துகின்றேன். எனினும் அதனை எம்மால் மாற்றியமைக்க முடியாது.

யுத்த வெற்றிக்கு பின்னர் மக்களின் வெற்றியாக மாற்றுவதற்காக சரியான பாதையில் செல்லாமையை கண்டிக்கின்றோம். யுத்தம் வென்றெடுக்கப்பட்டது அதனை மக்களின் வெற்றியாக மாற்றாமல் தொடர்ச்சியாக வெற்றிதொடர்பில் கதைத்துக்கொண்டிருக்க ழூடியாது. பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தி தொடர்பில் பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றுக்கு தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

அதனால் கடந்த ஒரு வருடத்தில் மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை காணவில்லை. மக்களின் நலன்புரி விடயங்கள், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட விடயங்களின் எவ்விதமான அபிவிருத்தியையும் காணழூடியவில்லை.

நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் நலன்புரி,பொருளாதாரம், அபிவிருத்தி மற்றும் ஏனைய துறைகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தவேண்டும். அவற்றை நிர்வாகம் செய்வதற்கு தவறிவிட்டது.

ஒரு வருடத்திற்குள் படையினருக்கு என்ன நடந்திருக்கின்றது? படையணிகளுக்கு என்ன நடந்திருக்கின்றன? ஜெனரல் தரத்தை சேர்ந்தவர்களில் மூவர் வீட்டு அனுப்பப்பட்டுள்ளனர். பலர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டனர். படையணிகளை சேர்ந்த பலர் சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள போதிலும் சிலரே விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

படையினரின் பிள்ளைகள் பாடசாலைக்கு செல்லமுடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. அவர்களின் குடும்பங்களை சேர்ந்தவர்கள் சாப்பிட முடியாத நிலையில் இருக்கின்றனர். இவையெல்லாம் இராணுவத்தினரை அவமானப்படுத்தும் நடவடிக்கையாகும். படையினர் மனதளவில் பாதிக்கப்படுள்ளனர். இவ்வாறானதொரு நிலைமையினை மக்கள் எதிர்பார்க்கவில்லை.

விமான நிலையத்தில் ஜனாதிபதி முழந்தாளிட்டு வணங்கும் போது யுத்தம் நிறைவடையவில்லை



ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கட்டுநாயக்க விமான நிலையத்தில் முழந்தாளிட்டு வணக்கம் செலுத்தும் போது இறுதிக்கட்ட யுத்தம் நிறைவடைந்திருக்கவில்லை.

சீனாவினால் விடுக்கப்பட்டிருந்த அழைப்பினை காலம் தாழ்த்தி, காலம் தாழ்த்தி 2009 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் திகதியே பயணமானேன். எனது பயணத்தை முடித்துக்கொண்டு 17 ஆம் திகதி இரவு 9 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தேன். நான் அங்கு தங்கியிருந்த காலத்தில் கொழும்புடன் தொடர்பினை ஏற்படுத்தி கொண்டே இருந்தேன் அதிகாரிகளும் என்னுடனேயே இருந்தனர்.

நான் நாட்டிற்கு திரும்பிய மறுநாள் 18 ஆம் திகதி அதிகாலை 2.30 மணியளவில் இறுதிக்கட்ட யுத்தம் ஆரம்பிக்கப்பட்டது. 19 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு புலிகள் 500 க்கு 500 மீற்றருக்குள் சுற்றிவளைத்து இறுதி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. அந்த தாக்குதலில் பிரபாகரன் உட்பட 600 புலிகள் பலியானார்கள்.

ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் உரையாற்றியதன் பின்னர் நான் நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே சென்றுக்கொண்டிருந்த போதே பிரபாகரனின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக எனக்கு தகவல் கிடைத்தது.

யுத்தம் 19 ஆம் திகதியே நிறைவடைந்தது ஜனாதிபதி கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 16 ஆம் திகதி முழந்தாளிடும் போதும் யுத்தம் நிறைவடைந்திருக்கவில்லை என்றார்.

பிரபாகரனுக்கு உடை மாற்றியிருக்கவில்லை

இறுதிக்கட்ட யுத்தத்தில் பலியான பிரபாகரனின் மகன் சார்ல்ஸ் அன்டனி உள்ளிட்டோரின் சடலங்களை சீருடையுடனேயே மீட்டெடுத்தோம். மரபுவழி யுத்ததில் ஈடுபடுவோரின் சடலங்களை மீட்கின்ற போது அவர்களை சீருடையுடன் காண்பிப்பதில்லை என்பதுடன் விடுதலைப்புலிகளின் பிரபாகரனுக்கு உடை மாற்றவில்லை.

பிரபாகரனின் சடலம் மீட்கப்பட்டதன் பின்னர் அங்கிருந்த படையினர் மட்டுமல்ல ஊடகவியலாளர்களும் புகைப்படம் எடுத்தனர் எனினும் அவருக்கு ஆடையை மாற்றவில்லை.






























மேலும் இங்கே தொடர்க...

வடக்கை அரசு முன்னேற்றும் என்பது எமது எதிர்பார்ப்பு : ஐதேக எம்பி சுவாமிநாதன்

40 வருடகால யுத்தத்தால் தமிழ் மக்கள் பல இன்னல்களை எதிர்நோக்கி உள்ளனர். அவற்றை நிவர்த்தி செய்வது எமது கடப்பாடாகும். அரசியல் வேற்றுமைகள் இன்றி, அனைவரும் எம் மக்கள் என்ற வகையில் தமிழ்ச் சமூதாயத்தை ஒன்றிணைந்து முன்னேற்ற வேண்டும். இதனை அரசாங்கம் ஏற்று வடபகுதியை அரசு முன்னேற்றும் எனத் தாம் எதிர்பார்ப்பதாக இன்று ஐதேக அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியளாலர் மாநாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

கல்வி மேம்பாடு

"வடபகுதியில் 62,944 உள்நாட்டு இடம்பெயர் மக்கள் இருக்கின்றனர். இவர்களுக்கு அரசாங்கம் உடனடியான தீர்வினை வழங்க வேண்டும். வடபகுதியில் உள்ள கல்வி வலயங்களான கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு , வவுனியா வடக்கு, துணுக்காய் ஆகிய பகுதிகளில் 300 கல்விக் கூடங்கள் இருந்தன. தற்போது 194 கல்விக்கூடங்களே இயங்குகின்றன.

86,000 மாணவர்களில் 26,000 பேரே கல்வி கற்கின்றார்கள். ஏனையோருக்குக் கற்கும் வாய்ப்புகள் இல்லை.

புலம் பெயர்ந்தோர் உதவி

இடம்பெயர் மக்களுக்கு புலம்பெயர் தமிழர்கள் பொருளாதார ரீதியாக உதவ முன் வந்துள்ளனர். இத்தகையோரை அரசாங்கம் நம் நாட்டுக்கு அழைக்க வேண்டும்.

காணி அத்தாட்சி

போரினால் மக்கள் தமது காணி அத்தாட்சி பத்திரங்களை இழந்துள்ளனர். இதற்கு மாற்றீடான ஒருவழியை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் முன்வர வேண்டும்" என்றார்.

யுத்தத்தை நிறைவு செய்ய அரசாங்கம் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதே வேகத்தைப் பாதிக்கப்பட்ட மக்களின் அபிவிருத்தியில் காட்டவில்லை. இதனால் கடந்தகாலத்தை நோக்கி மக்களை இட்டுச் செல்வதாகவே அரசின் நடவடிக்கை அமைகிறது என்றவாறு அண்மையில் ஜேவிபி கருத்தினை முன்வைத்திருந்தது.

யுத்தம் நிறைவடைந்து ஒரு வருட காலத்தின் பின்னர் அரசாங்கத்தின் செயற்பாடு தொடர்பில் உங்களது கருத்து என்ன என்ற ஊடகவியலாளரின் கேள்விக்கு பதில் அளிக்கையில்,

"முற்போக்கான வழியில் தமிழர் பிரச்சினையைத் தீர்க்க அ ரசாங்கம் முற்படுதிறது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே அரசாங்கம் தமிழர் பிரச்சினைக்கு உடனடி தீர்வினை முன்வைக்க வேண்டும். காலந்தாழ்த்தினால், மீண்டும் பிரச்சினை உருவாக வழியேற்படும்" என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

செனல் 4 வீடியோ காட்சி : கெஹெலிய - சரத் மறுப்பு

செனல் 4 தொலைக்காட்சியில் அண்மையில் ஒளிபரப்பப்பட்ட வீடியோ காட்சி குறித்து அரசாங்கம் அலட்டிக்கொள்ளப் போவதில்லை என தகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

தகவல் திணைக்களத்தில் இன்று காலை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

செனல் - 4 புதிய தகவல் குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவென்று ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

"கடந்த வருடமும் அரசாங்கத்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் செனல் 4 தொலைக்காட்சி வீடியோ காட்சி ஒன்றை ஒளிபரப்பியது. அந்தக்காட்சி முற்றிலும் பொய்யானது என விஞ்ஞான ரீதியில், பரிசோதனை மூலம் நிரூபிக்கப்பட்டதுடன் அந்தத் தொலைக்காட்சி சேவைக்கு எதிராக அரசாங்கம் சவால் விடுத்தது.

எனினும் இதுவரை அந்தத் தொலைக்காட்சிச் சேவை எமது சவாலுக்கு எவ்வித பதிலையும் அளிக்கவில்லை. எனவே இவ்வாறான செயற்பாட்டை அந்த தொலைக்காட்சி நிலையம் ஒரு வாடிக்கையாகக் கொண்டிருப்பதாகவே அரசாங்கம் கருதுகிறது" என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

சரத் பொன்சேகா மறுப்பு

இலங்கை இராணுவம் ஒரு போதும் போர்க் குற்றங்களில் ஈடுபடவில்லை எனவும் அவ்வாறு ஈடுபட்டிருந்தால் அது குறித்து அறியத் தருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெனரல் சரத்பொன்சேகா தெரிவித்தார். நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காட்சிகள் தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ஜெனரல் சரத் பொன்சேகா இவ்வாறு தெரிவித்தார்.

பிரிட்டனிலுள்ள இலங்கைத் தூதுவர்

சனல் 4 தொலைக்காட்சி புதிதாக வெளியிட்டுள்ள போர்க் குற்றச்சாட்டுக்களை பிரிட்டனுக்கான இலங்கைத் தூதரகம் முற்றாக நிராகரித்துள்ளது. இது தொடர்பாகத் தூதரகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,

"இலங்கை அரசு மற்றும் அதன் படையினருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளைப் பிரிட்டனுக்கான இலங்கைத் தூதரகம் முழுமையாக நிராகரிக்கின்றது.

விடுதலைப் புலிகளின் பிடியில் சிக்கியிருந்த பொதுமக்களை விடுவிப்பதற்கான மனிதாபிமான நடவடிக்கையிலேயே படையினர் ஈடுபட்டனர் என்பதை சான்றுகளுடன் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்துள்ளோம்.

இவ்வாறன மனிதாபிமான நடவடிக்கையை முன்னெடுக்கும் போது சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மரபுகள் பின்பற்றப்பட்டன.

பொதுமக்களுக்கு சிறிதளவு உயிரிழப்பு கூட ஏற்படக் கூடாது என இராணு வத்துக்கு கண்டிப்பான உத்தரவு வழங்கப் பட்டிருந்தது" எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

லண்டனிலுள்ள இலங்கைத் தூதுவர்

லண்டனில் உள்ள இலங்கைத் துணைத்தூதுவர் ஹம்சா இது குறித்துக் கூறுகையில்,

"இந்த ஒளிநாடாவைத் தங்களிடம் முன்னதாகவே பகிர்ந்து கொண்டிருந்தால் அதன் நம்பகத்தன்மையை சரி பார்த்துக் கருத்துக் கூறியிருக்க முடியும். ஆனால், அப்படியான அவகாசம் எமக்கு வழங்கப்படவில்லை.

ஆனால் இறுதிக் க்ட்ட போரின் போது, விடுதலைப் புலிகள்தான் பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தினர். அவர்களிடமிருந்து மக்களை விடுவிக்கவே அரசுப் படைகள் மனித நேய நடவடிக்கையை மேற்கொண்டன.

எனினும் இதுபோன்ற குற்றச்சாட்டுக்களையும் விசாரிப்பதற்கு ஜனாதிபதியால் ஆணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டிருக்கின்றது" என்றார்
மேலும் இங்கே தொடர்க...

வெள்ளப்பெருக்கு : 18பேர் மரணம்; சுமார் 4 லட்சம் பேர் பாதிப்பு

நாட்டில் பரவலாகப் பெய்துவரும் இடிமின்னலுடன் கூடிய கடும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக இதுவரை 1 லட்சத்து 4 ஆயிரத்து 213 குடும்பங்களைச் சேர்ந்த 4 லட்சத்து 58 ஆயிரத்து 783 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 18 பேர் மரண மடைந்துள்ளனர் என இடர் முகாமைத்துவ நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் முகாம்களிலும் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளிலும் தங்கியுள்ளார்கள். இவர்களுக்கான நிவாரண பணிகளை அமைச்சின் ஆலோசனையுடன் தீவிரமாக முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அதனடிப்படையில் நாட்டின் பல பாகங்களிலும் பாதிக்கப்பட்ட மக்களை தங்கவைப்பதற்கென முகாம்கள் பலவும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அம்மக்களுக்கு உதவி வழங்க ஐக்கிய நாடுகளின் உணவுத்திட்டத்தின் உதவியையும் பெற்றுக்கொள்வதற்கு அமைச்சு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

நக்ஸலைட்டுக்கு எதிராக நடவடிக்கை




இந்தியாவுக்கு இலங்கை ஆலோசனை
இந்தியாவில் உள்ள மாவோயிஸ்ட் இயக்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு இலங்கை ஆலோசனை வழங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்ததன் மூலம் பெற்றுக் கொண்ட அனுபவங்களை, இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ளத் தயார் எனவும் இலங்கை தெரிவித்துள்ளது.

நக்ஸலைட் தீவிரவாதிகளுக்கு எதிராக வெற்றிகரமான போராட்டத்தை முன்னெடுப்பதற்கு இந்திய துணை இராணுவக் குழுக்களுக்கு, இலங்கைப் படையினர் பயிற்சிகளை வழங்க முடியும் எனவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசம், இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனிடம் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.

நக்ஸலைட் தீவிரவாதிகள் தமது நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பிரதேசங்களிலிருந்து அவர்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது தொடர்பில் மட்டும் இலங்கை அரசாங்கம் உதவி வழங்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நக்ஸலைட் தீவிரவாதிகளைப் போன்று, பாரிய கெரில்லா நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த விடுதலைப் புலிகளைக் கடந்த வருடம் இலங்கைப் படையினர் வெற்றி கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

யாழ். குடா நாட்டில் 'லைலா' தாக்கத்தால் பலத்த சேதம்

வங்கக் கடலில் உருவான தாழமுக்கம் காரணமாக ஏற்பட்ட 'லைலா' புயலின் தாக்கம் இன்று வியாழக்கிழமை அதிகாலை வரை நீடிக்குமென யாழ்ப்பாணம் திருநெல்வேலி வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வங்கக் கடலில் ஏற்பட்ட தாழமுக்கத்தினால் நேற்று முன்தினம் இரவு சுமார் 10மணியளவில் கடும் காற்றும் இடிமின்னலுடனும் கூடிய மழை யாழ். குடாநாடு முழுவதும் பெய்தது. இதனால் யாழ்.குடாநாட்டின் பல பிரதேசங்களிலும் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன. நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தில் 44.1 மி.மீ . மழை பதிவாகியுள்ளது.

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள தாழமுக்கத்தின் நேரடியான தாக்கம் இல்லாவிடினும் அதனுடைய தாக்கம் ஓரளவு ஏற்படுவதற்கு இன்று அதிகாலை 5.30 மணிவரை வாய்ப்பு இருக்கலாமெனவும் அவ்வப்போது வேகமான காற்றுடன் மழை பெய்யலாமெனவும் தெரிவிக்கப்படுகிறது.

யாழ். குடாநாட்டின் கடலை அண்டிய பகுதிகளில் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் சேத விபரங்களை ஒவ்வொரு பிரதேச செயலகங்கள் சேகரித்து வருவதாகவும் மாவட்டச் செயலக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

இழுபறியில்" முன்னாள் போராளிகள்

BBC




போர் காலத்தில் விடுதலைப் புலிகள்
இலங்கையில் போர் முடிந்து ஒரு ஆண்டு ஆன நிலையிலும், போரின் முடிவில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிப் போராளிகள் மற்றும் விடுதலைப் புலிகளோடு தொடர்புடையவர்கள் என்று அரசால் சந்தேகிக்கப்படும் நபர்களின் நிலை இன்னமும் இழுபறியாகவே உள்ளது.

இலங்கையில் மூன்று தசாப்தங்களாக அரசை எதிர்த்து போராடிய "விடுதலைப் புலிகள் சரணடைவதை விட சாவது மேல் என்பதை தங்களின் முக்கிய கோட்பாடாக கொண்டிருந்தனர்".

எனினும் போரின் இறுதி கட்டத்தில் ஏராளமான விடுதலைப் புலிகள் அரச படையினரிடம் சரணடைந்தனர்.

மக்களோடு கலந்து அகதிகள் முகாம்களுக்கு வந்த விடுதலைப் புலிகள் பலரும் அரசால் கைது செய்யப்பட்டு பாதுகாப்பு மிக்க இடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது சுமார் 10 ஆயிரம் பேர் பாதுகாப்பு மிக்க முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருக்கும் முகாம்களுக்கு செல்ல சர்வதேச நிறுவனங்களுக்கும், மனித உரிமை அமைப்புக்களுக்கும் இலங்கை அரசு அனுமதி மறுத்து வருகிறது.


முன்னாள் போராளி ஒருவர்( பழைய படம்)
விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவர்
இப்படியாக அரசின் தடுப்பில் இருக்கும் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களை அவர்களது உறவினர்கள் வந்து சந்திக்க அரசு அனுமதியளித்துள்ள போதிலும், தம்மை சந்திக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கு தொல்லை ஏற்படக் கூடும் என்கிற கருத்தும் சிலரிடம் இருகின்றது.

ஆனால் அப்படியான தொல்லைகள் ஏதும் உறவினர்களுக்கு ஏற்படாது என்று மீள்குடியேற்றத்துறையின் துணை அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கூறுகின்றார்.

விடுதலைப் புலிகளோடு சம்மந்தப்பட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளோரின் உறவினர்கள் பலர் தற்போது அகதிகள் முகாம்களிலும் மீள் குடியேற்றம் நடைபெறும் பகுதிகளிலும் வசித்து வருகின்றனர்.

இந்த முகாம்களில் இருப்போரின் நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும், குவாண்டனமோ வளைகுடாவில் அமெரிக்கா அமைத்துள்ள சிறையில் நடந்தது போன்ற வன்கொடுமைகள் இங்கு நடப்பதாகவும், புலம் பெயர் தமிழர் அமைப்புக்கள் குற்றம்சாட்டுகின்றன.

ஆனால் இவை ஆதாரபூர்வமாக நிருபிக்கப்படவில்லை.

அதே நேரத்தில் இந்த விடயத்தில் அரசு ஒளிவுமறைவற்ற தன்மையைப் பேணவில்லை என்று குற்றம்சாட்டும் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் இவர்கள் முறையான நீதி விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று கூறிகிறது.
மேலும் இங்கே தொடர்க...

மேலிட உத்தரவின் பெயரில் அனைவரையும் சுட்டுகொன்றோம் - மீண்டும் சனல் 4

வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரின்போது இலங்கைப் படையினரால் பிடிக்கப்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் கொலை செய்யப்பட்ட காணொளியை வெளியிட்ட சனல் - 4 தொலைக்காட்சி, அவ்வாறு இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டவர்களின் புகைப்படங்கள் இலங்கை படை வீரர் ஒருவரினால் எடுக்கப்பட்டவை என்றும் தெரிவித்துள்ளது.

அத்துடன், கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிட்ட காணொளி தொடர்பாக மேலும் ஆதாரங்களை பெற்றுக்கொள்ளும் வகையில் அந்த படுகொலைகளை மேற்கொண்ட இலங்கை இராணுவ வீரர் ஒருவரினதும் போர் முனையில் கடமையிலிருந்த இராணுவ தளபதிகளில் ஒருவரினதும் கருத்தினையும் சனல் 4 தொலைக்காட்சி மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டிருக்கிறது.

"எமது தளபதி எல்லோரையும் கொலை செய்யுமாறு உத்தரவிட்டார்." என்று இராணுவ வீரர் ஒருவர் சனல் 4 தொலைக்காட்சிக்குத் தெரிவித்தார் என்றும் -

"விடுதலைப்புலிகளின் முக்கியமானவர்கள் எவரையும் வைத்துப் பாதுகாக்கும் திட்டம் எதுவும் இல்லாததால், அவர்கள் அனைவரும் படுகொலை செய்யப்பட்டார்கள். இதற்கான உத்தரவு நிச்சயமாக உயர்மட்டத்திலிருந்தே கிடைத்திருக்கவேண்டும்" - என்று இலங்கை இராணுவத்தின் மூத்த தளபதிகளில் ஒருவர் சனல் - 4 தொலைக்காட்சிக்குத் தெரிவித்தார் என்றும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

வெள்ளைக்கொடியுடன் சரணடைவதற்கு வந்த விடுதலைப்புலிகள் அமைப்பு உறுப்பினர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் என்ன நடந்தது என்று கேட்டபோது, குறிப்பிட்ட இலங்கை இராணுவ வீரர் பதிலளிக்கையில் -

"முதலில் நாங்கள் அவர்களைக் கைது செய்தோம். பின்னர் சித்திரவதை செய்தோம். பின்னர் கொலை செய்தோம். போரின் இறுதி நாட்களில் நாங்கள் எல்லோரையும் கொலை செய்தோம். பெருந்தொகையான சடலங்கள் அங்கு காணப்பட்டன. அவ்வாறு கொலை செய்யுமாறு எமது தளபதி எங்களுக்கு உத்தரவிட்டார்" - என்று கூறினார்.

இந்த செய்திகள் மற்றும் படங்கள் குறித்துப் பிரிட்டனில் உள்ள இலங்கை தூதரகத்திடம் சனல் - 4 செய்தி நிறுவனம் கேட்டபோது -

"இலங்கை படையினர் மனிதாபிமான நடவடிக்கையினையே கடந்த வருடம் மேற்கொண்டிருந்தனர். அதில் பொதுமக்கள் எவருக்கும் எந்த இழப்பும் ஏற்படவில்லை. அவ்வாறு படையினர் குற்றச்செயல்களில் ஈடுபட்டார்கள் என்று வெளிவரும் செய்திகள் எதிலும் எந்த உண்மையும் இல்லை.

சனல் - 4 தொலைக்காட்சியினால் தற்போது வெளியிடப்பட்ட தகவல்கள் குறித்து தற்போது நான் எந்த பதிலும் கூறமுடியாது. இது தொடர்பான காணொளியை அனுப்புங்கள். அதன் பின்னர்தான் அது குறித்து கருத்துக் கூறமுடியும்.

இலங்கைப் படையினர் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்கு இலங்கை அரச அதிபர் குழு ஒன்றினை நியமித்துள்ளார்" என்று பிரிட்டனுக்கான இலங்கை தூதுவர் பதிலளித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

தாய்லாந்தில் போராட்டக்காரர்கள் சரண்


தாய்லாந்தில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்களை அந்நாட்டு ராணுவம் கைது செய்து கண்களைக் கட்டி அடைத்து வைத்துள்ளது.​

பாங்காக்,​​ மே 19: தாய்லாந்தின் பாங்காக்கில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது ராணுவம் மூலம் புதன்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டது.​ இதையடுத்து அவர்கள் சரணடைந்தனர்.

​ போராட்டக்காரர்கள் மீது ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இத்தாலி புகைப்பட பத்திரிகையாளர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.​ மேலும் 3 வெளிநாட்டு பத்திரிகையாளர் உள்பட 18 பேர் காயமடைந்தனர்.

​ பாங்காக்கில் அரசுக்கு எதிராக போராடிவருபவர்கள் உடனடியாக நகரைவிட்டு வெளியேற வேண்டும் என்று அந்நாட்டு அரசு செவ்வாய்க்கிழமை மாலை இறுதி எச்சரிக்கை விடுத்தது.

​ இதையடுத்து செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியில் இருந்து புதன்கிழமை காலை 6 மணி வரை பாங்காக்கில் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

​ இந்த எச்சரிக்கையையும் மீறி போராட்டக்காரர்கள் நகரில் வன்முறையில் ஈடுபட்டனர்.​ இதனால் அந்நாட்டு அரசு போராட்டக்காரர்களுக்கு எதிராக ராணுவ நடவடிக்கையை எடுத்தது.

​ போராட்டம் நடந்த இடத்துக்கு வந்த ராணுவத்தினர்,​​ போராட்டக்காரர்களை வன்முறையை கைவிட்டு நகரைவிட்டு வெளியேறுமாறு எச்சரிக்கை விடுத்தனர்.​ ஆனால் அவர்கள் இதை ஏற்க மறுத்தனர்.​ இதனால் போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக விரட்டும் செயலில் ராணுவத்தினர் ஈடுபட்டனர்.

​ இந்நிலையில் ராணுவத்தினருக்கும்,​​ போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.​ இதையடுத்து ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.​ இதில் 3 பேர் பலியாகினர்.​ ஏராளமானோர் காயமடைந்தனர்.

​ ராணுவத்தினர் சுட்டதில் அங்கு நின்றிருந்த இத்தாலி பத்திரிகையாளரின் வயிற்றில் குண்டு பாய்ந்தது.​ இதனால் அவரது வயிற்றில் ரத்தம் பீறிட்டது.​ அவரை உடனே மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றார்.​ ஆனால் அவர் வழியிலேயே உயிரிழந்தார்.

போராட்டத்தை நிறுத்திக் கொள்வதாக அறிவிப்பு:​​ ராணுவத்தினர் அதிரடி தாக்குதல் நடத்தியதும் போராட்டத்தை முடித்துக்கொள்வதாக போராட்டக்காரர்களின் தலைவர்கள் அறிவித்தனர்.​ இதையடுத்து அவர்கள் அனைவரும் சரணடைந்தனர்.

​ இதனால் கடந்த இரு மாதகாலமாக பாங்காக்கில் நிலவிய அசாதாரண சூழலும்,​​ அரசுக்கான நெருக்கடியும் முடிவுக்கு வந்துள்ளது.

​ தாய்லாந்தில் பிரதமர் அபிசித் வெஜஜிவா அரசை சட்டவிரோதமானது என்றும்,​​ அரசு பதவி விலக வேண்டும் என்றும் கடந்த இரு மாதகாலமாக தட்சிண் சினவத்ரவின் ஆதரவாளர்கள் போராடிவந்தனர்.

​ இந்த போராட்டத்தின் போது வன்முறை சம்பவங்கள் நடைபெற்றதால் பாங்காக் நகரில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

​ இந்த போராட்டத்தில் இதுவரை 50-க்கு மேற்பட்டோர் பலியாகினர்.​ 1600-க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.

​ ​ போராட்டக்காரர்கள் நகரைவிட்டு வெளியேறுமாறு அரசு தொடர்ந்து வலியுறுத்தியும் அவர்கள் அதை ஏற்கவில்லை.​ நகரைவிட்டு வெளியேற அரசு விதித்த காலக்கெடுவையும் நிராகரித்தனர் போராட்டக்காரர்கள்.

​ இதனால் அந்நாட்டு அரசு ​ போராட்டக்காரர்களுக்கு எதிராக ராணுவத்தை பயன்படுத்தியுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

முசலி மினி சூறாவளியால் 87 குடும்பங்கள் பாதிப்பு 2 பாடசாலைகள் தரைமட்டம்


மன்னார் முசலி பிரதேசத்தில் நேற்றிரவு வீசிய மினி சூறாவ ளியால் 87 தற்காலிக கூடாரங்கள் முற்றாக சேதமானதோடு, இரண்டு பாடசாலைகளின் கொட்டில்களும் தரைமட்டமாகியுள்ளன.

கூடாரங்களில் வசித்த 87 குடும்பங்களுக்கும், பாடசாலை மாணவர்களுக்கும், வன்னி மாவட்ட எம்.பி.பாரூக் ஹுனைஸ் எடுத்துக் கொண்ட துரித முயற்சியால் மாற்று ஏற்பாடுகள் செய்து கொடுக்க ப்பட்டுள்ளன. பொற்கேணி மற்றும் வேப்பங்குளம் வித்தி யாலயங்களே மினி சூறாவளி யால் தரை மட்டமாகியுள்ளன.

முசலி பிரதேச செயலாளர் மற்றும் மன்னார் மாவட்ட உதவி அரசாங்க அதிபருடன் கலந்துரையாடி பாதிக்கப்பட்டவர்களுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஹுனைஸ் எம்.பி. செய்து கொடுத்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

கொழும்பு - நீர்கொழும்பு வீதியில் போக்குவரத்தை தவிர்த்து கொள்ளுங்கள்


கொழும்பு - நீர்கொழும்பு பிரதான வீதியை போக்குவரத்துக்காக பயன்ப டுத்துவதை தவிர்த்துக்கொள்ளுமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அத்தியாவசியப் போக்குவரத்து தேவைகளுக்கு மாத்திரம் இந்த வீதியை பயன்படுத்துமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்தார்.

தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக கொழும்பு- நீர்கொழும்பு பிரதான வீதியிலுள்ள சீதுவை மற்றும் அம்பன்முல்லை பிரதேசங்கள் முற்றாக நீரில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். கனரக வாகனங்களை தவிர இலகுரக வாகனங்கள் இந்த வீதியின் ஊடாக செல்ல முடியாத நிலை காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, கடும் மழை, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண நடவடிக்கையில் பெருமளவிலான பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

5 இலட்சம் பேர் பாதிப்பு; உயிரிழப்பு 18 ஆக அதிகரிப்பு




மேல் மாகாண ம் உட்ப ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பெய்து வரும் கடும் காற்றுடன் கூடிய மழை காரணமாகப் பாதிக்கப்பட்டோரின் தொகை சுமார் 5 இலட்சம் என இடர் முகாமைத்துவ நிலையம் கூறியது. வெள்ளம் மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளதோடு ஆறு பேர் காயமடைந்துள்ளனர். வெள்ளம் காரணமாக ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளதோடு 1734 குடும்பங்கள் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட் டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் கொடிப்பிலி தெரிவித்தார். வெள்ளத்தினால் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களே கூடுதலாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இது தவிர இரத்தினபுரி, புத்தளம், கேகாலை, குருநாகல், திருகோணமலை, மாத்தறை, அநுராதபுரம், நுவரெலியா ஆகிய மாவ ட்டங்களும் ஓரளவு பாதிக்கப்பட்டுள்ளன.

மழை தொடரும்

கடும் காற்றுடன் கூடிய மழையை தொடர்ந்து எதிர்பார்ப்பதாக காலநிலை அவதான நிலையம் கூறியது. வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ள சூறாவளி இலங்கையை தாண்டி நகர்வதால் இலங்கைக்கு சூறாவளி அபாயம் ஏற்படாது என அவதான நிலைய உயரதிகாரி ஒருவர் கூறினார். ஆனால் இந்தத் தாக்கத்தினால் எதிர்வரும் தினங்களிலும் கடும் காற்று வீசும் எனவும் இதனால், எதிர்வரும் தினங்களிலும் அதிக மழை எதிர்பார்க்கப்படுகிறது எனவும் அவர் குறிப்பிட்டார். மேல், மத்திய, தென்பகுதிகளிலும் வடக்கு, கிழக்கு கரையோரப் பகுதிகளிலும் மழை பெய்யும் எனவும் அறிவிக்கப்படுகிறது.

கடந்த தினங்களுடன் ஒப்பிடுகையில், நேற்று ஓரளவு குறைவாக மழை பெய்துள்ளது. சில பகுதிகளில் வெள்ளம் வடிந்து வருகிற போதிலும் ஜின் கங்கை மற்றும் களுகங்கை நீர் மட்டங்கள் தொடர்ந்து உயர்ந்து வருவதாக அறிவிக்கப்படுகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் வெள்ளம் மற்றும் மண் சரிவினால் 8 பேர் இறந்துள்ளனர்.

கொழும்பு

வெள்ளத்தினால் கொழும்பு மாவட்டத்தில் 93,168 குடும்பங்களைச் சேர்ந்த 1,42,238 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2094 பேர் 10 தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கொழும்பில் வெள்ள நீர் வடிந்து வருவதாகவும் போக்குவரத்துக்கு எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் இடர்முகாமைத்துவ நிலையம் கூறியது.

கம்பஹா

அதிக மழை காரணமாக 98,168 குடும்பங்களைச் சேர்ந்த 1,42,238 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக நேற்று நண்பகல் வரை அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக கம்பஹா மாவட்டத்தில் 89,557 குடும்பங்களைச் சேர்ந்த 1,64,349 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திவுலப்பிட்டியவில் மூவரும் கட்டானை பகுதியில் ஒருவரும், கம்பஹா மற்றும் மினுவாங்கொட பகுதிகளில் தலா ஒருவருமாக 7 பேர் இறந்துள்ளனர். இது தவிர 26 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதோடு 73 வீடுகள் பாதி சேதமடைந்துள்ளன. 6838 பேர் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப் பட்டுள்ளனர்.

கம்பஹா- ஜாஎல வீதியில் பல பகுதிகளில் வெள்ள நீர் நிறைந்துள்ளதால் அப்பகுதியில் போக்குவரத்து முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலைய வீதியிலும் நீர் நிறைந்துள்ளதால் பிரதான வீதியின் போக்குவரத்து முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

களுத்துறை

களுத்துறை மாவட்டத்தில் 37,805 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மில்லேனிய பகுதியில் ஒருவர் இறந்துள்ளதாகவும் வெள்ளத்தினால் 88 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது.

களுகங்கை குடாகங்கை நீர்மட்டம் உயர்ந்துள்ளது. கீகியன கந்த பகுதியில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதால் 27 குடும்பங்களும் தொடங்கொட பகுதியில் ஏற்பட்டுள்ள மண்சரிவு அபாயத்தினால் 16 குடும்பங்களும் வேறு இடங்களுக்கு அகற்றப்பட்டன.

காலி மாவட்டத்தில் 19,610 குடும்பங் களைச் சேர்ந்த 94,971 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். நேற்று முன்தினம் இருவர் இறந்துள்ளனர். வெள்ளம் பார்க்கச் சென்ற ஒருவர் பத்தேகம பகுதியில் நீரில் அடித்துச் செல்லப்பட்டு இறந்துள்ளதோடு மரமொன்று முறிந்து விழுந்ததில் தியாகம பகுதியில் ஒருவர் இறந்துள்ளார். காலி மாவட்டத்தில் 291 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது. அம்பலாங்கொட, பலப்பிடிய, பத்தேகம, ஹிக்கடுவ ஆகிய பகுதிகளில் நீர் வடிந்து வருவதாகவும் அறிவிக்கப்படுகிறது.

இரத்தினபுரி மாவட்டமும் வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை 230 பேரே பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள போதும் இந்தத் தொகை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெள்ளம் மற்றும் மண்சரிவினால் நேற்று முன்தினம் மூவர் கொல்லப்பட்டனர். இது வரை 4 பேர் இரத்தினபுரி மாவட்டத்தில் இறந்துள்ளனர்.

புத்தளம் மாவட்டத்தில் 1310 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு இருவர் இறந்துமுள்ளனர். மாத்தறை மாவட்டத்தில் 533 பேர் பாதிப்படைந்துள்ளதோடு 63 வீடுகள் சேதமடைந்துள்ளன.

திருகோணமலை மாவட்டத்தில் 837 பேரும் நுவரெலியா மாவட்டத்தில் 82 பேரும் கேகாலை மாவட்டத்தில் மூவரும் குருநாகல் மாவட்டத்தில் 135 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அநுராதபுரத்தில் 2 பேர் இறந்துள்ளதோடு 4 பேர் காயமடைந்துள்ள அதேவேளை, 144 வீடுகள் பாதி சேதமடைந்துள்ளன. திருகோணமலையில் சுமார் 200 வீடுகள் சேதமடைந்துள்ளதோடு நுவரெலியாவில் இரு வீடுகள் சேதமடைந்துள்ளன. அம்பகமுவ அத்கொட் வாவியின் நீர்மட்டம் உயர்ந்ததால் 25 குடும்பங்கள் அங்கிருந்து அகற்றப்பட்டன.

ரயில் சேவை பாதிப்பு

இதேவேளை வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக பிரதான வீதிகளில் நேற்றும் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. ராகம, ஹுணுப்பிட்டிய, வல்பொல ரயில் பாதைகளில் நீர் நிறைந்திருந்ததால் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. பாணந்துறை பகுதியில் ரயில் பாதையில் நீர் நிறைந்திருந்ததால் சமிக்ஞை விளக்குகள் செயலிழந்திருந்தன. பாரிய மண் திட்டு விழுந்ததால் காலி- மாத்தறை இடையிலான ரயில் சேவை நேற்றும் இடைநிறுத்தப்பட்டிருந்தது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் மற்றும் நிவாரணங்கள் வழங்க சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தன. சில பகுதிகளில் 4-5 அடி உயரத்திற்கு வெள்ளம் காணப்படுவதால் உலர் உணவு விநியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பாதுகாப்புப்படையினரும் பொலிஸாரும் சிவில் அமைப்புகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
மேலும் இங்கே தொடர்க...

மருந்துத் தட்டுப்பாட்டுக்கு பத்து நாட்களுக்குள் தீர்வு




இந்திய உயர் ஸ்தானிகருடன் பேச்சு; இரு தினங்களில் மேலும் மருந்துகள் இறக்குமதிநாட்டில் நிலவும் மருந்துத் தட்டுப்பாடுகளுக்கு இன்னும் பத்து நாட்களுக்குள் முழுமையான தீர்வு காணப்படுமென சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன நேற்றுப் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இது தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகருடன் பேச்சு நடத்தியுள்ளதுடன் மேலும் மருந்துகளை இறக்குமதி செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இன்னும் இரண்டு நாட்களுக்குள் மேலும் ஒரு தொகை அத்தியாவசிய மருந்துகள் இறக்குமதி செய்யப்படுமெனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் நேற்று ஜே.வி.பி. பாராளுமன்றக் குழுத் தலைவர் அநுர குமார திசாநாயக்க எம்.பி. முன்வைத்த விசேட அறிக்கைக்குப் பதிலளித்து உரையாற்றும் போதே அமைச்சர் மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது,

டெங்கு நோயைக் கட்டுப்படுத்து வதற்காக அமைக்கப்பட்டுள்ள விசேட ஜனாதிபதி செயலணி எதிர்வரும் 25ம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கூடவுள்ளது. இதன்போது சுகாதாரத்துறையில் நிலவும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பாகவும் ஆராயப்படவுள்ளன.

இந்தியாவிலிருந்து இனிமேல் இறக்குமதி செய்யப்படும் மருந்துகள் இந்திய அரசாங்கத்தின் அங்கீகாரத் துடனான நிறுவனங்களிலிருந்து மட்டுமே கொள்வனவு செய்யப்படும்.

மருந்தகக் கூட்டுத்தாபனம் மற்றும் மருந்து உற்பத்திக் கூட்டுத்தாபனத்தையும் ஒன்றாக இணைத்துள்ளோம். தற்போது நிலவும் மருந்துத் தட்டுப்பாடுகளை நிவர்த்திக்க கடந்த மூன்று தினங்களுக்கு முன் விமான மூலம் ஒரு தொகை மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதுடன் கப்பல் மூலமும் மருந்துகள் தருவிக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் தட்டுப்பாடுகள் 90 வீதம் நிவர்த்திக்கப்பட்டு ள்ளன.
மேலும் இங்கே தொடர்க...