15 ஆகஸ்ட், 2010

இலங்கை புகையிரத சேவைக்கு விரைவில் செய்மதி தொழில்நுட்பம்

இலங்கை புகையிரத சேவைக்கு செய்மதி தொழில்நுட்பத்தை விரைவில் அமுல்படுத்துவதற்கு புகையிரத திணைக்களம் தீர்மானம் மேற்கொண்டுள்ளது.

இதுகுறித்து புகையிரத சேவையின் வணிகப்பிரிவு அதிகாரி விஜய சமரசிங்க கருத்து தெரிவிக்கையில்,

இலங்கை தகவல் தொலைத்தொடர்பாடல் நிறுவனமும் புகையிரத திணைக்களமும் இத்திட்டத்திற்கு இணக்கம் கண்டுள்ளது. போக்குவரத்து அமைச்சர் குமார் வெல்கம மற்றும் புகையிரத நிறைவேற்று முகாமையாளர் பி.பி.விஜேசேகர ஆகியோரின் ஆலோசனையின் பேரிலேயே மேற்படி திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

முதலில் 8 வாரத்திற்குட்பட்;ட காலப்பகுதியில் 5 புகையிரதங்களைக் கொண்டு பரீட்சார்த்த ரீதியில் செய்யவுள்ளோம். அதன்பின்னர் இத்திட்டம் வெற்றியளிக்குமாயின் 80 புகையிரதங்களுக்கு இத்திட்டத்தை செயற்படுத்தவுள்ளோம்” எனத் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

திருமலை நகரசபை தலைவர் முகுந்தன் பதவியிலிருந்து இடைநிறுத்தம்திருகோணமலை நகரசபைத் தலைவர் ச. கெளரிமுகுந்தன் மூன்று மாத காலத் துக்கு பதவியிலிருந்து இடைநிறுத்தப் பட்டுள்ளார்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவ னேசதுறை சந்திரகாந்தன் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதுடன் அதற்கான கடிதம் ஒன்றையும் அனுப்பிவைத்துள்ளார்.

நகர சபைத் தலைவரின் பொறுப்புக்கள் அனைத்தும் உபதலைர் க. செல்வராசாவிடம் கையளிக்குமாறும் அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

நல்லூர் கந்தன் வருடாந்த உற்சவம்: இன்று கொடியேற்றம்
யாழ். நல்லூர் கந்தசுவாமி கோயில் வருடாந்த மகோற்சவம் இன்று காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்ப மாகி 25 நாட்கள் தொடர்ந்து நடைபெறும். செப்டெம்பர் ஏழாம் திகதி நல்லைக் கந்த னின் தேர்த்திருவிழா நடைபெறும்.

நேற்றுக்காலை கொடிச் சீலைக்கான விசேட பூஜைகள் நடைபெற்று திருவீதி எடுத்துச் செல்லப்பட்டதுடன் இரவு வைரவர் பூஜையும் நடைபெற்றது.
மேலும் இங்கே தொடர்க...

சக்வித்தி: போலி உறுதிகளுடன் காணிகள் விற்பனை செய்திருப்பது அம்பலம் பாதிக்கப்பட்டோர் அழையுங்கள்: 011-2422176
பாதிக்கப்பட்டோர்

அழையுங்கள்:

011-2422176

நிதி மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சக்வித்தி ரணசிங்க போலி உறுதிகள் தயாரித்து காணிகளை விற்பனை செய்திருப்பதும் அம்பலமாகியுள்ளது.

சந்தேக நபரிடமிருந்து காணிகளை வாங்கியவர்கள் போலி காணி உறுதியால் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும். சந்தேக நபரான சக்வித்தி ரணசிங்கவிடமிருந்து காணிகளை வாங்கியவர்கள் இருப்பின், குற்றப் புலனாய்வுப் பிரிவின் 011-2422176 என்ற இலக்கத்துக்கு உடனடியாக தொடர்புகொள்ளுமாறு பொலிஸ் தலைமையகம் கேட்டுக் கொள்கிறது.

அத்துடன் சக்வித்தி ரணசிங்கவிடமிருந்து பணம் பெற்றுக்கொள்வதற்கான காசோலையை பெற்று வங்கியில் பணமாக்க முடியாது போனவர்கள், அல்லது சக்வித்தி ரணசிங்கவிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் இன்னமும் இருப்பின், மேற்குறிப்பிட்ட தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்ட பின்னர் நேரடியாக வருகை தந்து முறைப்பாடுகளை தெரிவிக்குமாறும் பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கிறது.
மேலும் இங்கே தொடர்க...

தமிழ் கட்சிகளின் அரங்கம் முதலமைச்சர் தலைமையில் மட்டக்களப்பில் கூடி ஆராய்வு உடனடி பிரச்சினைகளுக்கு அரசுடன் பேசி தீர்வு காண முடிவு


தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற முக்கிய உடனடித் தேவைகள் குறித்து ஆராய்ந்து, அவற்றை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவான தீர்வுகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்வது என தமிழ்க் கட்சிகளின் அரங்கம் நேற்று முடிவு செய்தது.

அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அரங்கத்தில் இணைந்து கொள்வதற்கு இன்னமும் கதவுகள் திறந்தே இருக்கின்றன என்பதுடன், எதிர்காலத்தில் மலையக மற்றும் முஸ்லிம் கட்சிகளையும் அரங்கத்தில் இணைத்துக்கொள்வது பற்றி கவனத்தில் கொள்வது எனவும் முடிவு செய்யப்பட்டது.

தமிழ் கட்சிகளின் அரங்கம் நேற்று 5வது தடவையாக மட்டக்களப்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் கூடியது.

இக்கூட்டத்தில் பல்வேறு விடயங்கள் பற்றி ஆராயப்பட்டதுடன், மிக முக்கியமான 12 விடயங்கள் குறித்து விரிவாக ஆராய்வதென முடிவு செய்யப்பட்டது.

குறிப்பாக கடந்த தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தில் எடுக்கப்பட்ட ஒருமித்த தீர்மானத்திற்கு அமைய தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு விடுக்கப்பட்ட அழைப்பிற்கு அவர்கள் உத்தியோகபூர்வமான முறையில் இதுவரை பதிலளிக்காமையினை இட்டு அரங்கம் தனது கவலையை வெளிப்படுத்தியது.

தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற முக்கிய உடனடித் தேவைகள் குறித்து அதிக கவனம் செலுத்தி ஆராயப்பட்டது. அவை,

1. அர்த்தமுள்ள மீள்குடியேற்றம்.

2. உட்கட்டமைப்புடன் கூடிய மீள் கட்டுமானம்.

3. உயர் பாதுகாப்பு வலயங்கள், மீள் குடியேற்றங்கள்.

4. மக்களின் வாழ்விடங்களில் அமைக்கப்பட்டு வரும் இராணுவ குடியேற்றங்கள்,

5. முழுமையான சிவில் நிருவாகத்தினை ஏற்படுத்துதல்.

6. ஆயுதப் போராட்டத்தினால் உடமைகளை, உறவுகளை, அங்கங்களை இழந்த மக்களுக்கு நட்டஈடுகளைப் பெற்றுக்கொடுத்தல்.

7. வடகிழக்கு உட்பட தமிழ் பேசும் பகுதிகளில் இனப் பரம்பலில் மாற்றத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகளைத் தடுத்து நிறுத்தல்.

8. யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் கடைப்பிடிக்கப்பட்ட பாதுகாப்பு நடைமுறைகளை தளர்த்துதல்.

9. மீள் குடியேற்றத்தினை வெளிப்படையாகச் செய்வதுடன், அதை மக்கள் பிரதிநிதிகள், சர்வதேச, உள்ளூர் தொண்டு நிறுவனங்களின் பங்களிப்பை பெற்றுக் கொள்ளல்.

10. இனப் பிரச்சினைத் தீர்வுக்கு மாகாண சபைகளுக்கென பரிந்துரை செய்யப்பட்டிருக்கின்ற அரசியல் அமைப்பில் உள்ள 13வது அரசியல் அதிகாரங்களை முழுமையாக அமுல்படுத்துதல் ஆரோக்கியமான முன் முயற்சியாக அமையும்.

11. அடுத்து வரும் கட்டங்களில் தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் முஸ்லிம், மலையக கட்சிகளை இணைப்பது குறித்து ஆராயப்படும்.

12. தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற அரசியல் கைதிகள், இறுதி யுத்த நடவடிக்கையின் போது சரணடைந்த, கைது செய்யப்பட்ட போராளிகளின் விபரங்களை வெளிப்படுத்துவதுடன், அவர்களின் விடுதலைக்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்தல் போன்ற தீர்மானங்கள் எடுக்கப்பட்டன
மேலும் இங்கே தொடர்க...

சன் ஸீ: இலங்கை தமிழ் அகதிகள் கனடாவில் தரையிறக்கம்; விசாரணை ஆரம்பம்


தகுந்த காரணமிருந்தால் அகதி அந்தஸ்து - கனடிய அமைச்சர்

சன்கூ கப்பல் மூலம் பிரிட்டிஷ் கொலம் பியாவை சென்றடைந்துள்ள இலங்கையர் களை விசாரணை செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இந்த தகவலை கனேடிய பொதுமக்கள் நலன் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் விக் டோவிக் தெரிவித்துள்ளார்.

சன் கூ கப்பல் வெள்ளிக்கிழமை காலை 6 மணியளவில் பிரிட்டிஷ் கொலம்பியா கடற்படைத் தளத்திற்கு கொண்டு செல் லப்பட்டது. இந்த நிலையில், அதில் பய ணித்த 490 பேரின் சுகாதார நலன் குறி த்த விடயங்கள் தற்போது முன்னெடுக் கப்படுவதாக கனேடிய செய்திகள் தெரி விக்கின்றன.

விசாரணைகளின் பின்னர் உரிய காரண ங்களை கொண்டிருப்பவர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்கப்படும். ஏனைய வர்கள் நாடு கடத்தப்படுவரென பொதுமக்கள் நலன் துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில், கப்பலில் சென்ற வர்களில் சிறு தொகையினரே நோய்களுக்கு உட் பட்டுள்ளதாகவும், அவர்களும் வைத்திய சாலைகளில் அனுமதிக்கப்பட்டு விரைவில் அங்கிருந்து முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்களென அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கனடாவின் விக்டோரியா நகரத்தை வந்தடைந்த அகதிகள் நகரத்தின் அண்மை யிலிருக்கும் கனடிய இராணுவ முகாம் ஒன்றில் தரையிறக்கப்பட்டுள்ளனர்.

உடல் நலப் பரிசோதனையைத் தொடர்ந்து 9 பேர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். வந்தவர் களில் 45 சிறுவர்களும், இரு கற்பிணிகள் உட்பட 90 பெண்களும் உள்ள னரென உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக் கின்றன. உடனடி சோதனைகள் முடிந்தபின் இன்று ஞாயிற்றுக்கிழமை அனைவரும் வெவ்வேறு தடுப்பு முகாம்களுக்குக் கொண்டு செல்லப்படுவார்களெனத் தெரிய வருகிறது. குழந்தைகள் மற்றும் பெண்கள், ஆண்களின் தடுப்பு முகாம்களில் அல்லாது தனிப்பட்ட வேறு தடுப்பு முகாம்களுக்குக் கொண்டு செல்லப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது
மேலும் இங்கே தொடர்க...

நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணை வவுனியாவில் ஆரம்பம் எட்டுப் பேர் நேற்று சாட்சியம்

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு நேற்று சனிக் கிழமை வவுனியா மாவட்ட செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் குழுவின் தலை வர் சி.ஆர்.டி. சில்வா தலைமையில் கூடியது. அனைத்து உறுப்பினர்களும் பிரசன்னமாகி யிருந்தனர்.

வவுனியா நகர சபை எதிர்க் கட்சித் தலைவர் ஜி.ரி. லிங்கநாதன், சட்டத்தரணி அன்ரன் புனித நாயகம் உட்பட எட்டுப்பேர் ஆணைக்குழுவின் முன் பகிரங்கமாக சாட்சியமளித்தனர். சிலர் இரகசியமாகவும் சாட்சியமளித்தள்ளனர்.

மாவட்ட அரச அதிபரும் இங்கு பிரசன்ன மாகியிருந்தார். இனங்களுக்கிடையில் மீண்டும் ஐக்கியத்தை ஏற்படுத்தவும் தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கு அதி கார பகிர்வே தீர்வாகும். அதனை ஏற்படுத்து வது அவசியம் எனவும் சாட்சியமளித்தவர்கள் கூறினார்கள். அத்துடன் சந்தேகத்தின் பேரில் கைதாகி சிறையில் உள்ள தமிழ் இளைஞர், யுவதிகள் மீதான விசாரணை துரிதப்படுத்த வேண்டுமென சாட்சியமளித்த சிலர் குறிப்பிட்டனர்.

இத்தகைய நல்லிணக்க ஆணைக்குழுவை நியமித்ததிற்காக சாட்சியமளித்த சிலர் பாராட்டுத் தெரிவித்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக நீர்நிரப்பு விழா இன்று * உலகின் நிலப்பகுதியில் அமைந்துள்ள முதலாவது துறைமுகம் * முதலாவது கப்பல் நவம்பரில் நங்கூரம்கடலை அண்மித்த நிலப் பகுதியில் நிர்மாணிக்கப்படும் உலகின் முதலாவது துறைமுகம் என்ற பெருமையைப் பெறும் அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்திற்கு நீர் நிரப்பும் வரலாற்று நிகழ்வு இன்று ஞாயிற்றுக் கிழமை காலை 9.30 இற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடை பெறுகிறது.

நாட்டின் அபிவிருத்தி வரலாற்றின் முதன்மையான செயற்றிட்டமாகக் கருதப் படும் இந்தத் துறைமுக அங்குரார்ப்பண நிகழ்வைக் கண்டுகளிக்க வரும் பொதுமக்கள் இன்று அதிகாலை மூன்று மணி முதல் அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்நிகழ்வையொட்டி கொழும்பிலிருந்து அம்பாந்தோட்டை வரும் வாகனங்களுக் கென விசேட போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாத்தறைக்கும் கதிர்காமத்திற்கும் இடையிலான ஏ-2 வீதியில் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய் யப்பட்டுள்ளன. இரண்டாயிரம் ஹெக்டயர் நிலப் பரப்பில் நிர்மாணிக்கப்படும் இந் தத் துறைமுகத்தில் கப்பல்கள் வந்து நங்கூர மிடுவதற்கு வசதியாக 17 மீற்றர் ஆழப் படுத்தப்பட்டுள்ளது.

இதில் இன்று முதல் நாளாந்தம் ஒரு மீற்றர் உயரம் என்ற அடிப்படையில் நீர் நிரப்பப்படவுள்ளது. துறைமுகத்தின் முதற்கட்டப் பணிகளுக்கு ஐயாயிரம் கோடி ரூபாய் செலவிடப் பட்டுள்ளது. இதன் மூலம் நேரடியாக ஆறாயிரம் வேலை வாய்ப்புகளும் மறை முகமாக 50 ஆயிரம் வேலைவாய்ப்புகளும் கிடைக்கின்றன.

முதற்கட்டப் பணியை அடுத்த ஆண்டு ஏப்ரல் 15ஆம் திகதி நிறைவுசெய்ய உத் தேசிக்கப்பட்டிருந்த போதிலும் ஒன்பது மாதங்களுக்கு முன்னதாகவே பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாவது கப்பல் வருகை தருவதுடன் உலகின் மிகப்பெரிய கப்பல் கள் கூட இங்கு வரமுடியும். நான்கு கப்பல்களுக்குத் தேவையான வசதிகள் இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளன.மேலும் இங்கே தொடர்க...

பூமியை தாக்க தயாராகிறது சூரியப் புயல்: உலகை எச்சரிக்கிறது "நாசா' அமைப்பு
சில ஆண்டுகளுக்கு முன்பு தேசிய மின் கிரிட் அதிகளவு வெப்பம் அடைந்தது; விமானங்களின் எலக்ட்ரானிக் கருவிகள் பழுதடைந்தன; செயற்கைக்கோள்கள், கப்பலில் உள்ள கருவிகள் செயல்படாமல் நின்றன. இதற்கு காரணம், சூரியன் தனது ஆழ்ந்த உறக்கத்தை கலைத்து விழித்துக் கொண்டதால் அதிகபட்ச மின்காந்த சக்தியை வெளிப்படுத்தியது தான்.

புயலாக வெளிப்பட்ட அந்த மின்காந்த சக்தி பூமியை தாக்கியது. சூரியன் அதிகபட்ச சக்தியை வெளிப்படுத்தியதால் தான் பூமியில் பல்வேறு விளைவுகள் ஏற்பட்டன என்று விண்வெளி ஆய்வு விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இதேபோன்று, சூரியனில் ஏற்படும் மின்காந்த புயலின் தாக்கம் வரும் 2013ல் அதிகமாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. "மின்காந்த சூப்பர் புயல் ஒன்று பூமியை தாக்க உள்ளது. இதனால் தொடர்ச்சியாக பேரழிவு ஏற்பட்டு பூமி பாதிக்கும் நிலை ஏற்படும். எனவே, அவசர சேவைகள் மற்றும் தேசிய பாதுகாப்புக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்' என்று மின்காந்த சூப்பர் புயல் குறித்து நாசா புதிய எச்சரிக்கை விடுத்துள்ளது.

"சூரியனின் மின்காந்த புயல் வரப்போகிறது என்று தெரியும். ஆனால், அதன் விளைவுகள் எவ்வளவு மோசமாக இருக்கும் என்பது தெரியாது. இதனால் செயற்கைக்கோள்கள், கப்பல்கள், விமானங்கள் வங்கிகள், கம்ப்யூட்டர்கள் உள்ளிட்ட எலக்ட்ரானிக் கருவிகள், தொலைத்தொடர்பு கருவிகள் பாதிக்கப்பட்டு பெரிய பிரச்னை ஏற்படும். "பெரிய நகரங்களில் மின் பாதிப்பு ஏற்படும். இந்த பாதிப்பை சரிசெய்வது கடினமானதாகவும், நீண்ட நாட்களும் ஆகும். சூரிய ஒளியில் மாற்றம் ஏற்படுவதால் மின்காந்த புயல், மின்னல் தாக்குவது போல் பூமியை தாக்கும்' என்று நாசாவின் ஹீலியோ பிசிக்ஸ் பிரிவு டைரக்டர் விஞ்ஞானி டாக்டர் ரிச்சர்ட் பிஷ்ஷர் கூறுகிறார்.

"விண்வெளி வானிலை' என்ற தலைப்பில் வாஷிங்டனில் சமீபத்தில் ஒரு மாநாடு நடந்தது. இதில் நாசா விஞ்ஞானிகள், கொள்கை வகுப்பாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் சூரிய மின்காந்த புயல் குறித்து எச்சரிக்கை செய்யப்பட்டது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட விஞ்ஞானிகள் டாக்டர் பிஷ் ஷரின் எச்சரிக்கையை ஏற்றுக் கொண்டனர். டாக்டர் பிஷ்ஷர் (69) சூரிய மின்காந்த புயல் குறித்து கடந்த 20 ஆண்டுகளாக ஆய்வு செய்து வருகிறார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: 22 ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரியனில் மின் காந்த சக்தி அதிகமாக வெளிப்படுகிறது. சூரியனில் 11 ஆண்டுகளுக்கு ஒரு முறை மின்காந்த புயல் ஏற்படுகிறது. இது புள்ளிகள் அல்லது சுடரொளி போல் காணப்படுகிறது. அப்போது, சூரியனின் வெப்பம் மிக அதிகபட்சமாக, 10 ஆயிரம் டிகிரி பாரன்ஹீட் (5,500 டிகிரி செல்சியஸ்) வெப்பம் அடையும். மனிதனின் வாழ்நாளில் இதுபோல், மூன்று, நான்கு முறை சூரியனில் புயல் ஏற்படுவதை அறியலாம். வரும் 2013ம் ஆண்டில் இரண்டு நிகழ்வுகளும் ஒன்று சேர்ந்து வர உள்ளதால் சூரியனில் இருந்து அதிகளவில் கதிரியக்கம் வெளிப்படும் வாய்ப்பு உள்ளது. இதனால் வட ஐரோப்பா மற்றும் இங்கிலாந்தில் உள்ள மின்சக்தி நிலையங்கள் எளிதாக பாதிக்கப்பட்டு பல மாதங்கள் மின்சாரம் இல்லாமல் மக்கள் அவதியடையும் சூழ்நிலை ஏற்படலாம். எந்த அளவு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தாலும், பாதிப்பு எப்படி இருக்கும் என்று தெரியாததால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை இப்போதே கூற முடியாது. இவ்வாறு ரிச்சர்ட் பிஷ்ஷர் எச்சரித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

றம்புட்டான் பறிக்க முயன்ற சிறுமிகள் மின்சாரம் தாக்கி பலி இரத்தினபுரி - பத்துல்பாலயில் சம்பவம்


இரத்தினபுரி பொலிஸ் பிரிவிலுள்ள லெல்லோபிட்டிய, பத்துல்பால எனுமிடத் தில் நேற்று சனிக்கிழமை காலை 10.20 மணிக்கு மின்சாரம் தாக்கி ஸ்தலத்திலேயே இரு சிறுமிகள் உயிரிழந்ததுடன், ஒரு பிள்ளை ஆபத்தான நிலையில் இரத்தினபுரி வைத்தியசாலையில் அவசரப் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது.

வெளிமலுவ வித்தியாலயத்தில் கல்வி கற்கும் சகுனி உமேஷா (9 வயது) மதுக்கா சாரங்க (9 வயது) ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர்.

பாத்தக்கடை பெளத்த வித்தியாலயத்தில் கல்விகற்கும் பியூமி சந்திரலதா என்ற மாணவியே படுகாயமடைந்துள்ளார்.

வீட்டருகிலுள்ள பாரிய றம்புட்டான் மரத்தில் ஏறி றம்புட்டான் பறிக்க முடியாத நிலையில், அருகிலுள்ள தேசிக்காய் மரத்தில் மூவரும் ஏறி இரும்புக் கம்பியின் (என்டானா பைப்) உதவியுடன் றம்புட்டான் பறித்துள்ளனர்.

பாரிய முயற்சி செய்தும் றம்புட்டான் பறிக்க முடியாத நிலையில், மூவரும் ஒன்றாக (எழுமிச்சை மரத்திலிருந்தவாறே) இரும்புக் கம்பியின் உதவியுடன் றம்புட் டானைப் பறித்துள்ளனர்.

இவ்வாறு பறிக்கும் போது இரும்புக் கம்பி தவறி அருகிலுள்ள அதியுயர் மின்னழுத்த கம்பியில் பட்டதும் அதனூடாக மின்சாரம் பாய்ந்து மேற்படி மூவரும் ஒருவர் பின் ஒருவராக கீழே விழுந்துள்ளனர். இவ்வேளையில் தேசிக்காய் மரமும் தீப்பற்றி எறிந்துள்ளது.

இதனை கேள்வியுற்ற வீட்டிலுள்ளவர்கள் வெளியில் வந்து பார்த்தவுடன் அதிர்ச்சியடைந்து, இவர்களை காப்பாற்ற முயற்சி செய்த போது அவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்து சிறுகாயத்துக்குள்ளாகியுள்ளனர்.

இதன் பின் அக்மனையில் வீதியில் சென்றுகொண்டிருந்த மின்சார ஊழியர்கள் பெரும்முயற்சி செய்து இம்மூவரையும் மின்சாரத்திலிருந்து மீட்டுள்ளனர்.

இதன்போது, இருவரும் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்தவர் இரத்தினபுரி வைத்தியசாலையில் சிச்சை பெற்று வருகின்றார்.

மேலும் இங்கே தொடர்க...

பொன்சேகாவுக்கு எதிரான தீர்ப்பு: ஜனாதிபதியினால் அங்கீகாரம்

முன்னாள் ஜெனரல் சரத் பொன்சேகா வுக்கு எதிராக முதலாவது இராணுவ நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கீகரித்துள்ளார்.

இராணுவ சேவையிலிருந்துகொண்டு அரசியலில் ஈடுபட்டாரென்ற குற்றச்சாட்டு தொடர்பில் முதலாவது இராணுவ நீதி மன்றம் விசாரணை செய்தது. இதில் சரத் பொன்சேகா குற்றவாளியென நீதிமன்றம் தீர்ப்பளித்ததுடன் அவரின் இராணுவ தர நிலை ஜனாதிபதியின் அங்கீகாரத்துடன் வாபஸ்பெறப்பட வேண்டுமென்றும் அறிவித்திருந்தது. இந்நிலையில் பொன்சேகா வுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பினை ஜனாதிபதி நேற்று அங்கீகரித்ததாக இராணுவப் பேச் சாளர் கேர்ணல் துமிந்த கமகே தெரிவித்தார்.

இதன்படி சரத் பொன்சேகா இராணுவ சேவையில் இருந்த போது வழங்கப்பட்ட தரநிலை மற்றும் கெளரவ விருதுகள் அனைத்தையும் இழந்தவராகின்றார்.

சரத் பொன்சேகாவுக்கு எதிரான குற் றச்சாட்டுகளை விசாரணை செய்யவென இராணுவத் தளபதி லெப்டினன்ற் ஜெனரல் ஜகத் ஜயசூரியவின் பரிந்துரைக்கமைவாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த 2010 மார்ச் மாதம் 11ஆம் திகதி முதலா வது இராணுவ நீதிமன்றத்தை நியமித்தார். அதன் முதலாவது அமர்வு மார்ச் 16ஆம் திகதி ஆரம்பமானது.

சரத் பொன்சேகா அரசியலில் ஈடுபட் டமை தொடர்பான இராணுவ நீதிமன்ற விசாரணையின் போது அமைச்சர் ஜொன்ஸ்ரன் பெர்னாண்டோ, காமினி அபேரட்ன, லக்ஷ்மன் செனவிரட்ன, மேஜர் ஜெனரல் ஏ.டபிள்யூ.கே.சீ.டி. சில்வா ஆகியோர் சாட்சியமளித்தனர்.
மேலும் இங்கே தொடர்க...