21 ஜூலை, 2010

ஒசாமா இருக்கும் இடம் பாகிஸ்தானுக்கு தெரியும்: அமெரிக்க ஹிலாரி வெளிப்படை

undefined
இஸ்லாமாபாத்:பாகிஸ்தான் அரசில் உள்ள சில நபர்களுக்கு, அல் - குவைதா தலைவர் ஒசாமா பின்லேடன் ஒளிந்துள்ள இடம் தெரியும். ஒசாமாவை கைது செய்யும் வரை திருப்தியடையமாட்டோம் என, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஹிலாரி கிளின்டன், இது குறித்து பாக்., மண்ணில் இருந்தபடி அமெரிக்க "டிவி'க்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:அரசு சாராத ஆயுதம் ஏந்திய நபர்களை பாகிஸ்தான் மண்ணில் உலவ விடுவது குறித்து பாகிஸ்தான் கவலைப்படாமல் இருக்கலாம். ஆனால், இது தோட்டத்தில் விஷப்பாம்பை வளர்ப்பதற்கு சமமாகும். அல் - குவைதா தலைவர் ஒசாமா எங்கு ஒளிந்திருக்கிறார், என்ற விஷயம் பாகிஸ்தான் அரசில் உள்ள சில நபர்களுக்கு நன்கு தெரிந்திருக்கிறது. இருப்பினும் அவர்களை பற்றிய தகவல்களை குறிப்பிட்ட காலத்துக்குள் அளிக்கும் படிநாங்கள் நிர்பந்தப்படுத்த வில்லை.

இருப்பினும் ஒசாமாவை பிடிக்கும் வரை நாங்கள் திருப்தியடையமாட்டோம். எங்களது நடவடிக்கையால் ஒசாமாவுக்கு நெருக்கமானவர்கள்கைது செய்யப்பட்டும், கொல்லப்பட்டும் இருக்கிறார்கள். தொடர்ந்து ஒசாமாவை தேடும் பணியை மேற்கொண்டிருக்கிறோம். அத்துடன் அல்-குவைதா இயக்கத்தில் இரண்டாவது பெரிய நபரான அல்-ஜவகாரியையும் பிடிக்க வேண்டும்.இவர்களைப் பிடிப்பது குறித்து தொடர்ந்து பாகிஸ்தான் அரசுக்கு நெருக்கடி தருவோம்.

இதுவரை அமெரிக்கா எடுத்த நடவடிக்கைகளில் இவர்களின் ஆதரவாளர்கள், மற்றும் நிதி உதவி செய்தவர்கள் என்று பலர் கொல்லப்பட்டிருக்கின்றனர்.பாகிஸ்தான் அரசில் உள்ளவர்களுக்கு ஒசாமா இருக்கும் இடம் தெரிந்திருக்கும். இதை ஏற்கனவே நான் சொல்லி வருகிறேன். இதுவரை பாகிஸ்தான் அளித்துவரும் ஒத்துழைப்பு நன்றாக இருக்கிறது என்பதைக் கூறியாக வேண்டும். ஆனால், அல்-குவைதா விஷயத்தில் மேலும் மேலும் நெருக்கடி தரவேண்டும் என்ற அடிப்படையில் அதைத் தொடருகிறோம்இவ்வாறு ஹிலாரி கூறினார்.

பாகிஸ்தான் ராணுவ தளபதி அஷ்பக் பர்வேஸ் கயானியையும், ஹிலாரி சந்தித்து பேசினார். பாக்., உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,யை இயக்கி, ராணுவ பலத்தின் பின்புலமாக அரசை இயக்கும் கயானி, தற்போது அமெரிக்காவின் கருத்துக்களை நிறைவேற்றி வருகிறார். அதனால் கியானியுடன், ஹிலாரி பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
மேலும் இங்கே தொடர்க...

கடலில் “ஆசிட்” கலப்பதால் மீன்களுக்கு ஆபத்து: கடல்வாழ் ஆராய்ச்சியாளர்கள் தகவல்ரசாயன கழிவுகள், சாக்கடை, குப்பைகள் போன்றவை கடலில் கலக்கின்றன. இதனால் அதில் வாழும் மீன்கள் போன்ற கடல்வாழ் உயிரினங்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றன. ரசாயன பொருட்களில் உள்ள “ஆசிட்” கலப்பதால் மீன்களுக்கு ஆபத்தான சூழ்நிலை ஏற்படுகிறது.

இந்த தகவலை கடல்வாழ் ஆராய்ச்சியாளர்கள் தெரி வித்துள்ளனர். கடல்நீரில் ஆசிட் கலப்பதால் அதில் அசுத்தமான கார்பன்டை ஆக்சைடு அதிக அளவில் கலக்கிறது.

இதனால் அதில் வாழும் மீன்கள் நுகரும் தன்மையை இழந்து வருகின்றன. மீன்கள் குஞ்சுகளாக இருக்கும் போதே உடலில் அத்தன்மை உருவாகி வருகிறது. எனவே, அவை நுகரும் சக்தியை இழக்கின்றன.

இதன் மூலம் அவை தங்கள் உணவை தேடி பிடிக்கும் சக்தியை இழக்கின்றன. அதே வேளையில் எதிரிகளிடம் இருந்து தங்களை காப்பாற்றி கொள்ளும் மோப்ப சக்தியையும் இழக்க நேரிடுகிறது. எனவே, அவை செத்து மடியும் நிலை அதிக அளவில் ஏற்பட்டுள்ளது.

தற்போது, கடலில் அதிக அளவில் “ஆசிட்” கலந்து வருவதால் உயிர்வாழ மீன்கள் போராடி வருகின்றன. ஆகவே, கடலில் “ஆசிட்” கழிவுகள் கலப்பதை குறைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

மீனவர் பிரச்சினைக்குப் பேச்சுவார்த்தை மூலமே தீர்வு:ரணில்

undefined
தமிழக மீனவர் பிரச்சினைக்கு இந்திய, இலங்கை அரசுகளின் வெளிப்படையான பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண முடியும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டு, டில்லி செல்லும் வழியில் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு, சென்னை சென்ற ரணில், விமான நிலையத்தில் நிருபர்கள் மத்தியில் உரையாடிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"இந்திய, இலங்கை மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்கும் பிரச்சினை நீண்டகாலமாக இருந்து வருகிறது. இரு நாட்டு அரசுகளும், மீனவர் சங்கப் பிரதிநிதிகளும் வெளிப்படையாகப் பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே, இப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும்.

இலங்கை அரசு, தமிழர்களை மீள்குடியமர்த்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறுகிறது. இதுவரை 50 ஆயிரம் பேர் குடியமர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த தெளிவான தகவல்கள் வெளியிடப்படவில்லை. இப்பிரச்சினையில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து, எதிர்வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் அரசிடம் விளக்கம் கேட்க உள்ளோம்.

இலங்கையின் தற்போதைய நிலவரம் திருப்திகரமாக இல்லை. பிரதமருக்கான அதிகாரத்தை அதிகரிக்க வேண்டும். பொலிஸ், நீதி நிர்வாகம், தொழில் போன்ற பல துறைகளில் பெரும் மாற்றம் செய்ய வேண்டியது அவசியம்" என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

புதுக்குடியிருப்பில் பெருந்தொகை ஆயுதங்கள் மீட்பு

undefined
விடுதலைப் புலிகளால் பயன்படுத்தப்பட்ட பெருந்தொகை வெடிமருந்துகளும் ஆயுதங்களும் இலங்கை விமானப்படையினரால் புதுக்குடியிருப்புப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சி4 ரக வெடிமருந்துகள் 100 கிலோ கிராம் உட்பட மோட்டார் குண்டுகள், கைக்குண்டுகள் உள்ளிட்ட பல்வேறு வெடிமருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டதாக விமானப்படைத் தலைமையகத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

இந்தியாவை விட்டால் வேறு வழியில்லை: இலங்கை தமிழ் எம்.பி.க்கள்

இலங்கை இனப் பிரச்னைக்குத் தீர்வு காண இந்தியாவை விட்டால் வேறு வழியில்லை என்று இலங்கை தமிழ் எம்.பி.க்கள் மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளனர்.

இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த சம்பந்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சுமந்திரன், விநாயகமூர்த்தி ஆகிய 6 தமிழ் எம்.பி.க்கள் ஜூலை 9-ம் தேதி முதல் 5 நாள்கள் புது தில்லியில் முகாமிட்டு இந்தியத் தலைவர்களை சந்தித்துப் பேசினர்.

பிரதமர் மன்மோகன் சிங், மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, எஸ்.எம்.கிருஷ்ணா, ப.சிதம்பரம், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனன், வெளியுறவுத் துறை செயலாளர் நிருபமா ராவ் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசியச் செயலாளர் டி.ராஜா ஆகியோரை தமிழ் எம்.பி.க்கள் சந்தித்து இலங்கை நிலவரம் குறித்து விவாதித்தனர்.

புது தில்லி பயணத்தை முடித்துக் கொண்டு கொழும்பு திரும்பிய தமிழ் எம்.பி.க்கள், மீண்டும் சென்னைக்கு வந்து முதல்வர் கருணாநிதியை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினர்.

இந்தியத் தலைவர்களுடனான சந்திப்பு மற்றும் இலங்கையின் இப்போதைய நிலவரம் குறித்து சுரேஷ் பிரேமச்சந்திரன் "தினமணி'க்கு அளித்த பேட்டி:

இலங்கையில் இன்னும் சுமார் 40 ஆயிரம் தமிழர்கள் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்டவர்கள் தங்கள் சொந்த இடங்களில் குடியேற முடியாமல், ராணுவத்தின் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ளனர்.

அடியோடு இடிந்து சிதிலமான வீடுகளைப் புதுப்பித்து தர இலங்கை அரசு எந்த உதவியும் செய்யவில்லை. இந்திய அரசு அளித்த நிதியில், குடில் அமைக்கத் தேவையான 10 தகரம், 3 மூட்டை சிமெண்ட் மட்டும் தமிழ் மக்களுக்கு அளிக்கப்படுகிறது. எனவே தமிழ் மக்கள் பலரும் இப்போது வீதிகளிலும், மர நிழல்களிலும் வசிக்கும் அவல நிலை வடக்குப் பகுதியில் உள்ளது.

தமிழ் மக்களின் மறுவாழ்வுக்கு எந்த உதவியும் செய்யாத இலங்கை அரசு, தமிழர்களின் சொந்த மண்ணில் சிங்கள குடியேற்றங்களை அமைப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

இப்போது இலங்கையின் வடக்குப் பகுதியில் 1 லட்சம் சிங்கள ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்களை அங்கேயே குடும்பத்துடன் குடியமர்த்த இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 4 லட்சம் சிங்களவர்களை வடக்குப் பகுதியில் குடியமர்த்துவதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

தமிழர்களின் விவசாய நிலங்களைப் பிடுங்கி, சிங்களவர்களிடம் கொடுக்கும் அவலமும் நடைபெறுகிறது. மொத்தத்தில் இப்போது முழுமையான தமிழர் பூமியாக உள்ள இலங்கையின் வடக்குப் பகுதியை, இன்னும் பத்தாண்டுகளுக்குள் சிங்கள மக்கள் ஆதிக்கம் நிறைந்த பகுதியாக மாற்ற இலங்கை அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.

தமிழ் மக்களின் மண்ணைப் பாதுகாப்பதுதான் இப்போது அவசரத் தேவையாக உள்ளது. எனவே, போரின்போது இடம்பெயர்ந்து சென்ற தமிழ் மக்கள் அனைவரையும் அவரவர் சொந்த இடங்களில் மீண்டும் குடியமர்த்தவும், தமிழ் மக்களின் வீடு, விவசாய நிலங்களைப் பாதுகாக்கவும் இந்திய அரசு தலையிடுவது மிக அவசியமாக உள்ளது.

இலங்கைத் தமிழர்களின் பிரச்னை குறித்து பல வெளிநாட்டு தூதுவர்கள், தலைவர்களிடம் நாங்கள் முறையிட்டுள்ளோம். அவர்கள் அனைவருமே, இந்தப் பிரச்னையில் இந்திய அரசு என்ன நிலைப்பாடு கொண்டுள்ளது என்ற கேள்வியையே கேட்கின்றனர்.

இலங்கை இனப் பிரச்னைக்குத் தீர்வு காண இந்தியா மேற்கொள்ளும் முயற்சிகளை ஆதரிக்க சர்வதேச சமுதாயம் தயாராக உள்ளது.

எனவே, இலங்கையில் தமிழ் மக்கள் தங்கள் சொந்த இடங்களில் மீண்டும் சுதந்திரமாக வசிக்கவும், தமிழ் மக்கள் விரும்பக் கூடிய நிரந்தர அரசியல் தீர்வு ஏற்படவும் இந்திய அரசு மனது வைத்தால் மட்டுமே முடியும்.

இலங்கை இனப் பிரச்னை தீர இந்திய அரசை விட்டால் வேறு வழியில்லை. இந்திய அரசால் மட்டுமே இலங்கை அரசை வற்புறுத்தி ஒரு நிரந்தர அரசியல் தீர்வை ஏற்படுத்தித் தர முடியும்.

இதைத்தான் எங்கள் பயணத்தின்போது இந்தியத் தலைவர்களிடம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினோம். இலங்கை தமிழ் மக்களை இந்திய அரசு கைவிடாது என்றும், மக்களால் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த எம்.பி.க்களுடன் இணைந்து செயல்பட்டு, தமிழ் மக்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் இந்தியத் தலைவர்கள் உறுதி அளித்துள்ளனர்.

இதைத்தான் நாங்கள் தமிழக முதல்வர் கருணாநிதியிடமும் வலியுறுத்தினோம். மத்திய அரசிடம் பேசி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அவரும் உறுதியளித்துள்ளார்.

தமிழகத்துக்கு முக்கிய பங்கு: எனினும், தமிழக அரசு மற்றும் தமிழகத்திலுள்ள அனைத்து அரசியல் கட்சிகள், தமிழக மக்கள் என தமிழ்நாட்டிலுள்ள அனைவரும் அரசியல் மாறுபாடுகளை ஒதுக்கிவிட்டு, ஒற்றுமையாக, ஒருமித்த குரலில் வலியுறுத்தினால் மட்டுமே அரசியல் தீர்வுக்கான நடவடிக்கைகளை இந்திய அரசு விரைவுபடுத்தும்.

ஆறு கோடி தமிழர்கள் ஒருமித்து குரல் கொடுத்தால், மத்திய அரசு அதைப் புறக்கணித்து விடாது.

இப்போது முதல்வர் கருணாநிதியை சந்தித்துள்ள நாங்கள், விரைவில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்பட தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்திக்க உள்ளோம் என்றார் சுரேஷ் பிரேமச்சந்திரன்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கைக்கு அளித்த நிதியை கண்காணிக்க குழு: பிரதமர் மன்மோகன் சிங்

undefined
இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வுக்காக இந்திய அரசு அளித்த நிதி முறையாகச் செலவிடப்படுகிறதா என்பதை அறிய அதிகாரிகள் குழு அங்கு பயணம் மேற்கொள்ள உள்ளது.

இந்தத் தகவலை ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் மழைக் கால கூட்டத் தொடர் திங்கள்கிழமை (ஜூலை 26) தொடங்க உள்ளது. இதையொட்டி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களுடன் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி திங்கள்கிழமை ஆலோசனை மேற்கொண்டார்.

கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங், மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம், தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் டி.ஆர்.பாலு பேசியதாவது:

இலங்கையில் இடம்பெயர்ந்து வாழும் தமிழர்களை உடனடியாக அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்தும் பணியை விரைவாக கால தாமதம் இன்றி நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கைத் தமிழர்களின் மறு குடியேற்றத்துக்காக அவர்களுக்கு வீடு கட்டித் தரவும் பல்வேறு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும் மத்திய அரசு மூலம் ரூ.500 கோடி அளித்ததுடன், 50 ஆயிரம் வீடுகள் கட்டித் தரவும் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது.

இந்திய அரசால் வழங்கப்பட்ட இந்தத் தொகை எந்த அளவுக்கு முறையாக செலவழிக்கப்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்ள முடியவில்லை.

இலங்கையில் மறுவாழ்வுப் பணிகளையும், பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள உண்மையான நிலைமையைக் கண்டறியவும் தூதரகம் மூலமாகவோ அல்லது சிறப்புத் தூதரை அனுப்புவதன் மூலமாகவோ நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்று முதல்வர் கருணாநிதி ஆலோசனை கூறியிருந்தார்.

இதை உடனடியாக செயல்படுத்த தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று டி.ஆர்.பாலு கூறியிருந்தார்.

இதற்கு பதிலளித்து பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது:

இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வுக்காக வழங்கப்பட்ட நிதி முறையாக செலவிடப்படுகிறதா என்பதை அறிந்திட, அதிகாரிகள் குழு நியமிக்கப்படும். இந்தக் குழுவை அங்கு அனுப்புவதற்கு முறைப்படியான அனுமதி பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று மன்மோகன் சிங் தெரிவித்தார்.

இலங்கையில் போர் முடிந்து ஓராண்டுக்கு மேல் ஆகியும் இன்னமும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள், அடிப்படை வசதிகள் அற்ற இடைக்கால முகாம்களிலேயே வசிப்பதாக கூறப்படுகிறது.

அத்துடன் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வடக்குப் பகுதியில் சிங்களர் குடியேற்றத்தை விரைவுபடுத்தவும் மகிந்த ராஜபட்ச அரசு திட்டமிட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழர் பகுதியில் மீன் பிடிக்கும் உரிமையையும் சீனாவுக்கு இலங்கை தாரை வார்த்துள்ளது. இலங்கைக்கு உதவி செய்கிறோம் என்ற போர்வையில் சீனா ஆழமாக காலூன்றி வருகிறது. இது எதிர்காலத்தில் இந்தியாவுக்கு பேராபத்தாக முடிய வாய்ப்புள்ளது.

இந்நிலையில், இந்த மாதத் தொடக்கத்தில் பிரதமர் மன்மோகன் சிங், முக்கியமான மத்திய அமைச்சர்களை சந்தித்த இலங்கை தமிழ் எம்.பி.க்கள் குழு இந்தியா தலையிட்டால்தான் தமிழர் பிரச்னைக்குத் தீர்வு காண முடியும் என வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை நிலவரம் திருப்தி இல்லை: ரணில் விக்ரம சிங்கே

undefined
இலங்கையில் தற்போது நிலவும் சூழ்நிலை திருப்தி அளிப்பதாக இல்லை என்று ரணில் விக்ரம சிங்கே தெரிவித்தார்.

இலங்கை முன்னாள் பிரதமர் ரணில் விக்ரம சிங்கே கொழும்பிலிருந்து விமானம் மூலம் செவ்வாய்கிழமை அதிகாலை சென்னை வந்தார்.

அப்போது செய்தியாளரிடம் அவர் கூறியதாவது:

இந்தியா, இலங்கை மீனவர்கள் பிரச்னை நீண்டகாலமாக இருந்து வருகிறது. இந்தப் பிரச்னைக்கு இந்திய அரசும், இலங்கை அரசும் மற்றும் இருநாட்டின் மீனவர் சங்க பிரதிநிதிகளும் சேர்ந்து பேச்சு நடத்தவேண்டும்.

இலங்கை அரசு தமிழர்களை மறுகுடியமர்த்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறுகிறது. ஆனால் பணிகள் எதுவும் நடக்கவில்லை. நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் இந்த பிரச்னையை எழுப்ப இருக்கிறோம்.

ஐ.நா. குழு இலங்கை வந்தது சரியா என தெரியவில்லை. அதே நேரத்தில் அந்தக் குழுவை திருப்பி அனுப்பியது சரியல்ல என்றார் ரணில்.
மேலும் இங்கே தொடர்க...

றொபர்ட் பிளேக் ஜனாதிபதியுடன் சந்திப்பு

undefined


இலங்கை வந்துள்ள அமெரிக்காவின் தெற்கு, மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி ராஜாங்கச் செயலாளர் றொபர்ட் பிளேக்குக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக சற்று முன் கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் இங்கே தொடர்க...

சர்வகட்சிக் குழுவின் அறிக்கைக்கு ஆளும்கட்சி சபையில் கடும் எதிர்ப்பு

undefined
சர்வகட்சிக் குழுவின் அறிக்கையை சமர்ப்பித்து பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஐக்கிய தேசியக்கட்சி எம்.பி. ஆர். யோகராஜனுக்கு இடையூறுகளை ஏற்படுத்திய ஆளும் தரப்பினர், அவ்வறிக்கை சமர்ப்பிக்கப்படுவதற்கு கடுமையான எதிர்ப்பினையும் தெரிவித்தனர். சர்வகட்சிக்குழுவை சமர்ப்பிப்பதற்கு யோகராஜன் எம்.பி. தகுதியற்றவர் எனக் கூக்குரலிட்ட ஆளும்கட்சி அதனை ஹன்சாட்டில் இருந்து நீக்கிவடிடுமாறும் கூச்சலிட்டனர்.

இது இவ்வாறிருக்க ஆளும் எதிர்க்கட்சி எம்.பி.க்களிடையே வாதப்பிரதி வாதங்களும் ஏற்பட்டன. மேலும் தன்னால் சமர்ப்பிக்கப்படுகின்ற சர்வகட்சிக் குழுவின் அறிக்கையை ஹன்சாட்டில் இணைத்துக் கொள்ளுமாறு யோகராஜன் எம்.பி. வேண்டுகோள் விடுத்தபோதிலும் அதன்போது சபைக்குத் தலைமை தாங்கிய குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார் அதனை நிராகரித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாயக்கிழமை நடைபெற்ற விதவைகள் விதுரர்கள் மற்றும் அநாதைகளுக்கான ஓய்வூதிய திருத்தச்சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய யோகராஜன் எம்.பி. சர்வகட்சிக் குழுவின் அறிக்கையை சபையில் சமர்ப்பிப்பதாகக் கூறினார். அத்துடன், அதில் உள்ள சில விடயங்களையும் வாசித்துக்காட்டினார்.

தினேஷ் குணவர்தன

இதன்போது ஒழுங்குப் பிரச்சினையொன்றை முன்வைத்துப் பேசிய ஆளும்கட்சியின் பிரதம கொரடாவான அமைச்சர் தினேஷ் குணவர்தன, யோகராஜன் எம்.பி. சர்வகட்சிக் குழுவின் அறிக்கையை வாசிப்பதற்கு கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டார்.

சர்வகட்சிக் குழுவில் அங்கத்துவம் பெற்றுள்ள கட்சிப் பிரதிநிதிகளினது கையொப்பங்கள் இல்லாதுள்ள ஒன்றை ஆவணம் என்று கூறுவதற்கு முடியாது. எனவே, அந்த அறிக்கையை இந்த சபையில் வாசிக்கவோ அல்லது சமர்ப்பிக்கவோ முடியாது எனக்கூறினார்.

இதற்குப்பதிலளித்த யோகராஜன் எம்.பி. கூறுகையில், சர்வகட்சிக் குழுவின் அறிக்கையில் நான் கையெழுத்திட்டுள்ளேன். எனவே, இதில் நானும் ஒரு பிரதிநிதி என்றவகையில் இவ்வறிக்கையை சபையில் சமர்ப்பிக்கிறேன். “அதற்கான பொறுப்பையும் நான் ஏற்றுக்கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.

முத்து சிவலிங்கம்

இதன்போது ஒழுங்குப் பிரச்சினையொன்றை கிளப்பிய இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் பிரதியமைச்சருமான முத்து சிவலிங்கம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் சர்வகட்சிக் குழுவுக்கு அனுப்பப்பட்டவர்தான் ஆர்.யோகராஜன்.

ஆனாலும் அவர் தற்போது காங்கிஸில் இல்லை. எனவே அவர் அந்த அறிக்கையை சமர்ப்பிக்கத் தகுதியற்றவர் எனவே அவரால் முன்வைக்கப்பட்ட அனைத்து விடயங்களையும் ஹன்சாட்டிலிருந்து நீக்கிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

முருகேசு சந்திரகுமார்

இதனையடுத்து பதிலளித்த குழுக்களின் பிரதித்தலைவர் முருகேசு சந்திரகுமார் கூறுகையில்,பாராளுமன்ற நிலையியல் கட்டளைகளுக்கு முரணான அனைத்து விடயங்களும் ஹன்சாட்டிலிருந்து நீக்கப்படும் என்றார்.

இதன்போது தனது உரையைத் தொடர்ந்த யோகராஜன் எம்.பி. இறுதியில் தன்னால் சமர்ப்பிக்கப்பட்ட சர்வகட்சிக்குழுவின் அறிக்கையை ஹன்சாட்டில் இணைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டபோதிலும் அதனை பிரதித் தலைவர் நிராகரித்தார். இருப்பினும் சர்வகட்சிக்குழுவின் அறிக்கையை யோகராஜன் எம்.பி. சபாபீடத்துக்கு அனுப்பிவைத்தார்.

திஸ்ஸவிதாரண அமைதி

சர்வகட்சிக்குழுவின் அறிக்கை தொடர்பில் சபையில் வாத விவாதங்கள், கூச்சல் குழப்பங்கள் ஆகியவற்றுக்கு மத்தியில் அனைத்து சம்பவங்களையும் சர்வகட்சிக்குழுவின் தலைவரும் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தனது ஆசனத்தில் அமர்ந்தவாறே அமைதியாக அவதானித்துக் கொண்டிருந்தார். எந்தவித கருத்துக்களையும் அவர் தெரிவிக்கவில்லை.
மேலும் இங்கே தொடர்க...

ஐ.நா. ஆலோசனை குழுவின் உதவிக்கு மனித உரிமைகள் அதிகாரி தலைமையில் குழு

ஐக்கியundefined நாடுகள் செயலாளர் நாயகம் இலங்கை தொடர்பாக நியமித்த ஆலோசனைக்குழு நேற்றும் அதன் அமர்வுகளை நடத்தியுள்ளது. மூன்று உறுப்பினர்களை கொண்ட இந்த குழுவுக்கு உதவி செய்யும் உத்தியோகத்தர்கள் குழுவுக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அலுவலக அதிகாரி ரிச்சர்ட் பெனெற் தலைமை தாங்குகிறார் என்று ஐக்கிய நாடுகள் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

குழுவுடன் இணைந்து பணியாற்றும் சிறு குழுவின் சீரான இயக்கத்தை உறுதி செய்வதற்கான ஆலோசனைக் குழு தொடர்ந்து 3 நாட்களுக்கு கூடவிருக்கிறது. ஆழ்ந்த அனுபவத்தை கொண்டுள்ள சிறு குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள் அனைவரும் முழு நேரம் கடமையாற்றுபவர்களாவர் என்று செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் மார்ட்டின் நெஸிர்கி நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

உண்ணாவிரத போராட்டத்தினால் ஐ.நா. நிபுணர்குழு பலமடைந்துள்ளது:ஐ.தே.க

undefined
ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழுவுக்கு எதிராக அரசாங்கத்தில் அங்கம் வகிப்பவர்கள் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டம் காரணமாக, ஐ.நா. வுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டதுடன், குறித்த நிபுணர் குழு மேலும் பலமடைந்துள்ளது.

அதாவது மூவர் கொண்ட நிபுணர் குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்க மேலதிகமாக எட்டு பேர் கொண்ட குழுவை பான் கீ. மூன் நியமித்துள்ளார் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

இந்த விடயத்தை அரசாங்கம் இராஜதந்திர ரீதியான அணுகியிருக்கலாம். இதனை அரசாங்கத்தின் அமைச்சர்களே ஏற்றுக்கொண்டுள்ளனர் என்றும் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டார். கொழும்பில் அமைந்துள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் கூறியதாவது

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் நியமித்துள்ள நிபுணர் குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சி ஒன்று ஆர்ப்பாட்டம் நடத்தியது. அமைச்சர் ஒருவர் உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டார். இறுதியில் உண்ணாவிரதப் போராட்டம் நிறுத்தப்பட்டது. அதனால் இலங்øக்கு என்ன நன்மை கிடைத்தது? ஐ.நா. வுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டதுடன் குறித்த நிபுணர் குழு மேலும் பலமடைந்துள்ளது. அதாவது மூவர் கொண்ட நிபுணர் குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்க மேலதிகமாக எட்டு பேர் கொண்ட குழுவை பான் கீ. மூன் நியமித்துள்ளார் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விடயத்தை அரசாங்கம் இராஜதந்திர ரீதியாக அணுகியிருக்கலாம். இதனை அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவரே குறிப்பிட்டிருந்தார். தற்போது மூன்று நிபுணர்களுடன் மேலும் எட்டுப் பேர் இணைந்துகொண்டுள்ளனர். ஐ.நா. முன்பிருந்தததைவிட பலமடைந்துள்ளது.

எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகின்றன

இதேவேளை அரசாங்கத்துக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சி நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றது. கடந்த வார இறுதியில் 30 ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. அடுத்தவாரம் 25 எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும். மொத்தமான நான்கு கிழமைகளில் 135 ஆர்ப்பாட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளோம்.

முக்கியமாக நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதி பதவியை நீக்கிவிட்டு பாராளுமன்றத்துக்கு பொறுப்புக்கூறும் வகையில் பிரதமர் பதவியை உருவாக்கவேண்டும் என்றும் மக்களுக்கு நிவாரணங்களை வழங்கவேண்டும் எனவும் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுக்கவேண்டும் என்று கோரியே எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தினோம். ஜெனரல் பொன்சேகாவுக்கு எதிரக்ஷிக குற்றச்சாட்டுக்கள் இருப்பின் அவரை சாதாரண நீதிமன்றத்தில் விசாரிக்கவேண்டும்.

கிளிநொச்சியில் அமைச்சரவை கூட்டம்

அரசாங்கம் கிளிநொச்சி பகுதிக்கு விஜயம் செய்து அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தியதன் மூலம் அப்பகுதி மக்களுக்கு என்ன நன்மை கிடைத்தது? அமைச்சர்கள் அனைவரும் கிளிநொச்சிக்கு விஜயம் செய்தமையினால் அதிகம் செலவுகளே ஏற்பட்டுள்ளன. நிதி வீண் விரயம் செய்யப்பட்டுள்ளது. இதனை விடுத்து அப்பகுதி மக்களுக்கு நன்மைகள் ஏற்படும் வகையில் அரசாங்கம் நடவடிக்கையை எடுக்கவேண்டும். முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச வடக்கு பகுதியில் ஒருகாலத்தில் நடமாடும் சேவைகளை நடத்தினார். அதனால் அப்பகுதி மக்களுக்கு நன்மைகள் கிடைத்தன.

இதேவேளை ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு வழங்கிய ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை நாங்கள் தற்போது இழந்துள்ளோம். ஆனால் இது தொடர்பில் அரசாங்கத்தின் மாற்று நடவடிக்கை என்ன என்று இதுவரை தெரியவில்லை. ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை நாங்கள் இழப்பதனால் 3 இலட்சத்து 34 ஆயிரத்து 604 பேர் பாதிக்கப்படுகின்றனர். அவர்களின் தொழில் கேள்விக்குறியாகியுள்ளது. ஐரோப்பிய நாடுகளுக்கு ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையின் அடிப்படையில் 7200 பொருட்களை ஏற்றுமதி செய்கின்றோம். அதனை ஈடுசெய்ய அரசாங்கம் என்ன செய்யப்போகின்றது?
மேலும் இங்கே தொடர்க...

முதற்தடவையாக ஐ.நா.வின் நிபுணர்குழு நியூயோர்க்கில் கூடியது

ஐக்கிய நாundefinedடுகள் நிபுணர் குழு நேற்று முன்தினம் நியூயோர்க்கில் முதல் தடவையாக கூடியது.

கற்றுக் கொண்ட பாடங்கள் தொடர்பாக இலங்கை நியமித்த விசாரணைக்குழுவுக்கு யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை சர்வதேச தரத்திற்கமைய விசாரணை செய்யும் செயலாற்றல் இருக்கிறதா என்பத பற்றியேனும் அறிக்கை சமர்ப்பிப்பதற்கு ஐக்கியநாடுகள் குழுவுக்கு ஒதுக்கப்பட்ட 4 மாதகாலம் இந்தத் திகதியிலிருந்து ஆரம்பமாகிறது என்று இன்னர் சிற்றி பிறெஸ் தெரிவித்துள்ளது.

குழுவின் உறுப்பினர்களான மர்சூகி தருஸ்மன், யஸ்மின் சூகா, ஸ்வேன் றட்னர் ஆகியோர் ஐக்கியநாடுகள் வடபுல கட்டிடத்தில் கடந்த திங்கட்கிழமை பிற்பகல் 1.30க்கு அமர்வை ஆரம்பபித்தார்கள். இந்த தருணத்தில் குழுவுக்கு ஒதுக்கப்பட்ட 4 மாதகால அவகாசம் ஆரம்பிக்கிறது என்று பிறெஸ் தெரிவித்தள்ளது.

எந்த ஹோட்டலில் அவர்கள் அமர்ந்திருக்கிறார்கள், இரவு போசனத்தை எங்கே வைத்துக் கொள்ளலாம் போன்ற சம்பிரதாயபூர்வமான பேச்சுக்களுடன் ஆரம்பித்த இந்த அமர்வின் போது, இலங்கைக்கு விஜயம் செய்வதா என்ற முடிவு குழுவினரை பொறுத்தது என்று ஐக்கியநாடுகள் பேச்சாளர் மார்ட்டின் நெஸிர்கி தெரித்துள்ளதால் அதற்கான அனுமதியை தாங்கள் ஐக்கியநாடுகள் ஸ்தாபனத்திடமிருந்து பெறவேண்டியதில்லை என்று றட்னர் தெரிவத்தார்.

ராஜபக்ஷ அரசாங்கம் குழுவினருக்கு விசா வழங்க மறுத்தமையும் அவரது அந்த முடிவு துர்ப்பாக்கியமானது என்று தருஸ்மன் தெரிவித்திருந்தமையும் இங்கு நினைவுகூரத்தக்கது. இன்னர் சிற்றி பிறெஸ் ஏற்கெனவே அறிவித்தும் தற்போது அதனை உறதிப்படுத்தியதும் போல, தருஸ்மன் முன்னர் இலங்கை விசாரணைக் குழுவில் இடம்பெற்று, அக்குழு கலைக்கப்பட்ட போது தமது கொடுப்பனவு தொடர்பாக பிரச்சினை எழுப்பினார் என்று இலங்கை அரசாங்க வட்டாரங்கள் பழைய கதையை மீட்டுக் கொண்டிருக்கின்றன என்றும் பிறெஸ் குறிப்பிட்டுள்ளது.

ஐக்கியநாடுகள் அரசியல் விவகாரங்களுக்கான பிரதிநிதி லின் பஸ்கோவை சந்தித்தகுழுவினர் தொடர்ந்து நிக்கலஸ் பிங்க் ஹேசமையும் சந்திக்க இருந்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

இராணுவத் தளபதி சிறப்புரிமைக் குழுவின் முன் விசாரிக்கப்பட வேண்டும்

இராணுவத் தளபundefinedதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரியை பாராளுமன்றிற்கு அழைத்து சிறப்புரிமைக் குழுவின் முன் விசாரிக்க வேண்டுமென ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத் தெரிவுக்குழு கூட்டங்களில் பங்கேற்பதற்கு இராணுவத் தளபதி தடை ஏற்படுத்தியதாகவும், இது பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் சிறப்புரிமையை மீறும் செயலாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தெரிவுக் குழுக் கூட்டங்களில் பங்கேற்பதற்கு தடை ஏற்படுத்தியமையினால் தமது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் ஜெனரல் சரத் பொன்சேகாவிடம் உறுதியளித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

5 தூதுவர்கள், 2 உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதியிடம் நியமன கடிதம் கையளிப்பு


இலங்கைக்கென புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஐந்து தூதுவர்களும், இரண்டு உயர்ஸ்தானிகர்களும் தங்களது நியமனக் கடிதங்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் நேற்று கையளித்தனர்.

ஈராக், அல் ஜீரியா, பூட்டான், மஸடோனியா, ஆர்மேனியா ஆகிய ஐந்து நாடுகளும் இலங்கைக்கென புதிய தூதுவர்களையும், சுவாசிலாந்தும் புரூணையும் இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகர்களையும் நியமித்து அனுப்பி வைத்துள்ளது.

ஈராக் தூதுவராக கஹ்தான் தாஹா கஸாப் காலி, சுவாசிலாந்து உயர்ஸ்தானிகராக புமெலோ ஜோசப் லோபே, பூட்டான் தூதுவராக தாசோ பிப்கேஸாங்க், புரூணை உயர்ஸ்தானிகராக சிடக் அலி, ஆர்மேனிய தூதுவராக அராக்கோப்யான், மஸடோனியா தூதுவராக பீட்டர் கவனோஸ்கி, அல்-ஜீரிய தூவராக முஹம்மத் ஹஸனே ஆகிய ஏழுபேருமே தங்களது நியமனக் கடிதங்களை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து கையளித்தனர்
மேலும் இங்கே தொடர்க...

விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் 12 பேரும் இன்று கொழும்பு வருகை


இந்திய நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட 12 இலங்கை மீனவர் களும் இன்று கொழும்பு வருவதாக மீன்பிடி மற்றும் நீர் வள அபிவி ருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த பெப்ரவரி 23ம் திகதி தெவிநுவரயில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ரோஹன புதா என்ற மீன்பிடி படகில் மீனவர்களும் கல்பிட்டியவில் இருந்து சென்ற ஹிரான் புதா என்ற படகில் 5 மீனவர்களும் கடந்த மார்ச் 3ம் திகதி திருகோணமலையில் இருந்து சென்ற சமிந்து புதா படகில் 5 மீன வர்களும் இருந்துள்ளனர். மேற்படி 12 மீனவர்களையும் இலங்கைக்கு அழைத்துவர அமைச்சு 5 இலட்ச ரூபா வரை செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்ததன் காரணமாக விசாக பட்டணம் மற்றும் தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 12 மீனவ படகு கள் இலங்கை மீனவ தொழில் நுட்பவியலாளர்கள் 20 பேரும் தற்போது இந்திய நீதிமன்றங்களில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்: உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக முன்னெடுக்க அரசு நடவடிக்கை


டெங்கு நுளம்பு ஒழிப்பு தொடர் பான வேலைத் திட்டங்களை உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக விரிவான அடிப்படையில் துரித மாக முன்னெடுப்பதற்கு அரசாங் கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதனடிப்படையில் உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லா டெங்கு நுளம்பு ஒழிப்பு வேலைத் திட்டங்கள் அடங்கிய வரைவின் பிரதிகளை சகல உள்ளூராட்சி ஆணையாளர்களுக்கும் நேற்று வழங்கினார்.

இந்த வரைவை ஒவ்வொரு உள் ளூராட்சி மன்றத்திலும் நிறை வேற்றி அதனடிப்படையில் டெங்கு நுளம்பு ஒழிப்புப் பணிகளைத் துரித மாக மேற்கொள்ளுமாறு அமைச்சர் அதாவுல்லா உள்ளூராட்சி மன்றத் தலைவர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

தேசிய உள்ளூராட்சி வாரம் நேற்று ஆரம்பமானது. இதன் நிமித்தம் பத்தரமுல்லையிலுள்ள ஜனகலா கேந்திரவில் நேற்று ஆரம்பமான உள்ளூராட்சி மாநாட்டின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பி ட்டார். இதேநேரம் இம்மாநாட் டின் இரண்டாவது நாளான இன்று சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன விசேட அதிதியாகக் கலந்து கொண்டு டெங்கு நுளம்பு ஒழிப்பு தொடர்பாக விசேட உரை யாற்றுவார்.

மாநாடு அமைச்சர் அதாவுல்லா தலைமையில் நடைபெறும்.
மேலும் இங்கே தொடர்க...

சர்வகட்சி குழுவின் அறிக்கையென்று ஐ.தே.க எம்.பிக்கள் வெளியிட்ட அறிக்க முழுமைப்படுத்தப்பட்ட இறுதி ஆவணம் அல்லசர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் அறிக்கையென்று ஐக்கிய தேசிய கட்சியின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளியிட்ட அறிக்கை, முழுமைப்படுத்தப் பட்ட இறுதி ஆவணம் அல்லவென்று குழுவின் தலைவரான அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண ‘தினகரனுக்கு’த் தெரிவித்தார்.

அதேநேரம், முழுமைப்படுத்த ப்படாத அறிக்கை வெளியானதால், சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் எதிர்காலப் பணிகளுக்கு எந்தப் பாதிப்பும் கிடையாதென்றும் அமைச்சர் கூறினார். சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவில் இடம்பெற்ற கட்சிப் பிரதி நிதிகளுக்கிடையே இணக்கம் காணப்பட்ட விடயங்கள் அறி க்கையாகத் தயாரிக்கப்பட்டு அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டது.

அந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டு, அவரது ஆலோசனைகளையும் பெற்றுக் கொண்டு முழுமையான இறுதி ஆவண த்தைத் தயாரிப்பதெனவும் அதன் பின்னர் கட்சிப் பிரதிநிதிகள் கையொப்பமிட்டு வெளியிடுவதற்கே உடன்பாடு காணப்பட் டிருந்ததாகவும் தெரிவித்த அமைச்சர், அந்த உடன்பாட்டுக்குப் புறம்பாக முழுமைபெறாத ஆவணத்தை வெளியிட்டிருக்கிறார்களென்றும் அமைச்சர் கூறினார்.

எனினும், ஜனாதிபதியிடம் ஆலோசனை பெற்று அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்று அவர் குறிப் பிட்டார். ‘முன்பு புலிகளின் அழுத்தம் இருந்ததால், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுக் கூட்டங்களில் பங்கேற்கவில்லை. ஜனாதிபதியின் ஆலோசனையின்படி கூட்டமைப்பு தலைவர் இரா. சம்பந்தனைச் சந்தித்துப் பேசியபோது அவர் கூட்டத்திற்கு வர சம்மதிக்கவில்லை.

அவர் இணங்கியிருந்தால், அப்போது ஜனாதிபதி பேச்சுக்கு அழைப்பு விடுத்திருப்பார்’ என்று சுட்டிக்காட்டிய அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண, தற்போது அரசியல் செல்வழியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால், அரசியல் தீர்வு தொடர் பில் புதிய ஆலோசனைகளையும் பெற்றுக் கொண்டு முன்செல்ல முடியும் என்று கூறி னார். வட அயர்லாந்து அரசியல் முறை மையை போன்று இலங்கைக்குப் பொரு த்தமான தீர்வு வரை வொன்றைத் தயாரி த்து வருவதாக அமைச்சர் விதாரண முன்பு சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

கூடுதலான சலுகைகள் ஓய்வூதியச் சட்டங்களில் திருத்தம்


அரசாங்க ஊழியர்கள் இறக்கும் பட்சத்தில் அவரில் தங்கி இருந்த மனைவி, பிள்ளைகள் தற்போது அனுபவிக்கும் சலுகைகளை விடவும் கூடுதலான சலுகைகளை அனுபவிக்கக் கூடிய வகையில் நடைமுறையிலுள்ள ஓய்வூதியச் சட்டங்களில் திருத்தம் செய்யப்பட்டுள்ளன.

இச்சட்டங்களின் திருத்தத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சியும், தமிழ் தேசியக் கூட்டமைப்பும் நேற்று பாராளுமன்றத்தில் ஆதரவு தெரிவித்தன.

பாராளுமன்றம் சபாநாயகர் தலைமையில் நேற்று பிற்பகல் 1.00 மணிக்குக் கூடியது. சபை அமர்வின் வழமையான தொடக்க நிகழ்வைத் தொடர்ந்து பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் டி. டப்ளியு. ஜோன் செனவிரட்ன, விதவைகள், அநாதைகள் ஓய்வூதிய நிதியாக (திருத்தம்) சட்ட மூலம் விதுரர்கள், அநாதைகள் ஓய்வூதிய திருத்தம் சட்டமூலம் என்பவற்றை சபையில் சமர்ப்பித்து உரையாற்றினார்.

அமைச்சர் தனதுரையில், அரசாங்க உத்தியோகத்தர் ஒருவர் இறந்தால் அவரது கணவர் அல்லது மனைவி மற்றும் பிள்ளைகள் தற்போது அனுபவிக்கும் சலுகைகளை விடவும் கூடுதல் சலுகைகளை அனுபவிக்கக் கூடியவகையில் விதவைகள், அநாதைகள் ஓய்வூதியச் சட்டம், விதுரர்கள், அநாதைகள் ஓய்வூதியச் சட்டம் என்பவற்றில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதேநேரம் பயங்கரவாதம், இயற்கை அனர்த்தம் என்பவற்றினால் உயிரிழந்த அரசாங்க ஊழியர்கள், படை வீரர்கள் ஆகியோரின் குடும்பத்தவர்களுக்கு தற்போது வழங்கப்படும் ஓய்வூதிய கொடுப்பனவும் அதிகரிக்கப்படும்.

தற்போதைய சட்ட ஏற்பாடுகளின் படி உயிரிழந்த அரசாங்க ஊழியர்களின் பிள்ளைகளுக்கு 21 வயது வரையே ஓய்வூதியம் வழங்கப்படுகின்றது. புதிய திருத்தத்தின் கீழ் இவ்வயதெல்லை 26 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

தற்போது நடைமுறையிலிருக்கும் ஏற்பாடுகளின் கீழ் தற்காலிக மற்றும் சமயா சமய அரச ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுவதில்லை. புதிய திருத்தத்தின் கீழ் குறித்த அரசாங்க ஊழியர் பத்து வருடங்கள் சேவையாற்றி மரணித்திருந்தால் அவரது கணவருக்கோ அல்லது மனை விக்கோ பிள்ளைகளுக்கோ ஓய்வூதியம் வழங்கப்படும்.

தற்போதைய ஏற்பாடுகளின் கீழ் அரசாங்க நிறுவனங்கள் மூடப்படுவதன் காரணமாகவோ அல்லது வேறு காரணங்களினாலோ அரச ஊழியர் ஒருவர் தொழிலை இழந்தால் அவரது குடும்பத்தினருக்கு ஓய்வூதியம் வழங்கப்படுவதில்லை. புதிய ஏற்பாட்டின் கீழ் 55 வயது நிறைவடைந்ததும் அவரது குடும்பத்தினருக்கு ஓய்வூதியம் கிடைக்கப்பெறும்.

அரசாங்க ஊழியரொருவர் செய்த குற்றத்திற்காக வேலை நீக்கம் செய்யப்படுவாராயின் அவரது குடும்பத்திற்கு தற்போது ஓய்வூதியம் வழங்கப்படு வதில்லை. ஆனால் புதிய திருத்தத்தின் கீழ் அரச ஊழியர் செய்த தவறின் பலாபலன்களை அவரது மனைவியோ, குடும்பத்தினரோ அனுபவிக்கக் கூடாது என்பதற்காக குறித்த அரச ஊழியர் பத்துவருடம் சேவையாற்றி இருந்தால் அவரது குடும்பத்திற்கும் ஓய்வூதியம் வழங்கப்படும்.

மேலும் யுத்தம் காரணமாக உயிரிழந்த படைவீரரின் இளம் வயது மனைவிக்கு தற்போதைய சட்ட ஏற்பாடுகளின் கீழ் ஓய்வூதியம் வழங்கப்படுகின்றது.

அவர் மறு மணம் புரிந்தால் அந்த ஓய்வூதியம் முழுமையாக நிறுத்தப்பட்டுவிடு கின்றது. ஆனால் புதிய ஏற்பாட்டின் கீழ் உயிரிழந்த படை வீரரின் மனைவி மறுமணம் செய்தால் ஓய்வூதியத்தில் அரைவாசித் தொகை கிடைக்கப்பெறும். பயங்கரவாதம், இயற்கை அனர்த்தம் காரணமாக அரச ஊழியர் ஒருவர் இறந்தால் 55 வயது வரை அவரின் மனைவிக்கு சம்பளம் வழங்கப்படுகிறது.

55 வயதின் பின்னர் சம்பளம் நிறுத்தப்பட்டு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இதனால் அந்தக் குடும்பம் பாதிக்கப்படுகிறது. எனவே அவரின் குடும்பத்துக்கு வழங்கும் ஓய்வூதியத்தை அதிகரிக்க உள்ளோம்.

ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், சபாநாயகர், எதிர்க் கட்சித் தலைவர், பிரதி அமைச்சர்கள் ஆகியோரின் அந்தரங்க செயலாளர்கள், இணைப்புச் செயலாளர்கள், மக்கள் தொடர்பு அதிகாரி ஆகியோருக்கு 5 வருடங்களின் பின்னர் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.

ஆனால் அவர்களின் மறைவின் பின் அவர்களது குடும்பத்தவர்களுக்கு ஓய்வூதியம் கிடைப்பதில்லை. இந்தக் குறையை தீர்க்கும் வகையிலும் திருத்தம் செய்யப் பட்டுள்ளது. ஓய்வூதிய சட்டத்தில் காணப்படும் சகல நிர்வாக சிக்கல்களும் தீர்க்க இதனூடாக நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

விமானம், கப்பலை வெளிநாடுகள் சோதிப்பதை எதிர்த்து ஈரான் நாடாளுமன்றத்தில் மசோதா

தங்களது நாட்டு விமானங்கள், கப்பல்களை வெளிநாடுகள் சோதிப்பதை எதிர்த்து ஈரான் நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஈரானுக்கு எதிராக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சமீபத்தில் புதிதாக பொருளாதாரத் தடை உத்தரவை பிறப்பித்தது. அதேபோல, தங்களது நாட்டுக்கு வரும் ஈரானுக்கு சொந்தமான விமானங்கள், கப்பல்களை உலக நாடுகள் சோதிக்க அனுமதி அளித்தும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவால் ஈரான் அதிருப்தி அடைந்துள்ளது. இதை தடுக்கும் விதத்தில் தற்போது தங்களது நாட்டு நாடாளுமன்றத்தில் மசோதாவை தாக்கல் செய்துள்ளது. இந்த மசோதா ஈரான் நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்பட்டதை அந்நாட்டு அரசு வானொலி ஒலிபரப்பியது.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை, மாலத்தீவுக்கு அமெரிக்க வெளியுறவுக் குழு பயணம்


இலங்கை மற்றும் மாலத்தீவுடன் இருதரப்பு உறவை வலுப்படுத்த அமெரிக்கா முடிவெடுத்துள்ளது.

இதற்காக இரு நாடுகளுக்கும் தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான தங்களது வெளியுறவு துணை அமைச்சர் ராபர்ட் பிளேக் தலைமையில் ஒரு குழுவை அமெரிக்கா அனுப்பி வைக்கவுள்ளது. ராபர்ட் பிளேக் தலைமையிலான அமெரிக்க வெளியுறவுக் குழு, இலங்கைக்கு புதன்கிழமை (ஜூலை 21) வருகை தரவுள்ளது.

இக்குழு, அந்நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், அரசு உயர் அதிகாரிகள் ஆகியோருடன் விரிவான ஆலோசனை நடத்தி இருதரப்பு உறவை வலுப்படுத்த வழிவகையை ஏற்படுத்தும். இதைத்தொடர்ந்து, மாலத்தீவுக்கு ஜூலை 22-ம் தேதி செல்லும் அமெரிக்க வெளியுறவுக் குழுவினர், அந்நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி இரு தரப்பு உறவை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கும்.

அமெரிக்க வெளியுறவுக் குழுவின் வருகை இலங்கை, மாலத்தீவு ஆகிய இரு நாடுகள் தரப்பில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை, மாலத்தீவின் அமெரிக்கத் தூதராக ராபர்ட் பிளேக் முன்பு பதவி வகித்தார். அமெரிக்காவின் வெளியுறவுத் துணை அமைச்சராகப் பதவியேற்ற பின்னர் இந்த இருநாடுகளுக்கும் இப்போதுதான் முதல் தடவையாக வருகை தரவுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

ராஜீவ் காந்தி கொலை வழக்கு : தடா நீதிமன்ற நீதிபதி ஓய்வு

ராஜீவ் காந்தி undefinedகொலை வழக்கில், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் தொடர்பான வழக்கை விசாரித்து வந்த சென்னை தடா நீதிமன்ற நீதிபதி பி.ராமலிங்கம் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.

சென்னை தடா நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் பி.ராமலிங்கம். ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து பிரபாகரன், பொட்டு அம்மான் ஆகிய இருவர் மட்டும் பிரிக்கப்பட்டு தனியாக வழக்கு நடந்து வந்தது. இந்த வழக்கை நீதிபதி ராமலிங்கம்தான் விசாரித்து வந்தார்.

ஈழப் போரில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் இறந்ததாக இலங்கை அரசு அறிவித்தது. இதையடுத்து இந்த வழக்கை முடிக்க வேண்டும் என்பதற்காக பிரபாகரன் இறந்திருந்தால் அவரது இறப்புச் சான்றிதழை சமர்ப்பிக்குமாறு அவர் உத்தரவிட்டிருந்தார். இருப்பினும் இதுவரை சான்றிதழை இந்திய அரசு தாக்கல் செய்யவில்லை.

இந்த நிலையில் ராமலிங்கம் பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...