20 பிப்ரவரி, 2011

ஜே.வி.பி. வேட்பாளர்கள் மீது தாக்குதல் எம்பிலிப்பிட்டிய, கண்டியில் சம்பவம்


எம்பிலிப்பிட்டிய மற்றும் கண்டியைச் சேர்ந்த ஜே.பி.பி. வேட்பாளர்கள் மீது கடும் தாக்குதல் கள் நடத்தப்பட்டுள்ளதென தெரிவிக்கப்படுகிறது.

இதுதொடர்பாக மேலும் தெரியவருவதாவது, நேற்று முன்தினம் நள்ளிரவு வேளையில் எம்பிலிப்பிட்டிய நகர சபைக்கான தேர்தல் குழுத் தலைவரும், முன்னாள் நகரசபை உறுப் பினருமான ஜீ.எஸ்.கே. வெதகொட மீது இனந் தெரியாதோர் கடும் தாக்குதல் மேற்கொண்டுள் ளதாக எம்பிலிபிட்டிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கண்டி மாவட்டத்தின் கோரளே பிரதேச சபைக்கு போட்டியிடும் ஜே.வி.பி.யின் இரு வேட்பாளர்களான கபில அபேரத்ன மீதும் சுனில் பண்டார என்பவர் மீதும் நேற்று முன்தினம் நள்ளிரவு வேளையில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவர்கள் மோட்டர் சைக்கிளில் வந்து கொண்டிருந்த வேளையிலேயே இவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிய வருகிறது. இவர்களைப் பின்தொடர்ந்து வந்த மற்றுமொரு அரசியல் கட்சியின் ஆதரவாளர் கள் இவர்கள் பயணம் செய்த மோட்டார் சைக் கிளை வழிமறித்து அவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன், இவர்களிடம் இருந்த 7500 ரூபாவினையும் பறித்துள்ளதாக தெரிவிக் கப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் பலத்த காயமடைந்த வேட்பாளரான கபில அபேரத்ன தற்போது நாவலப்பிட்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் இதுதொடர்பாக 119க்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக வும் ஜே.வி.பியின் ஊடகப் பிரிவு தெரிவிக் கின்றது.
மேலும் இங்கே தொடர்க...

வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டோர் வேறு வழிகளில் பிரசாரம் செய்ய முடியாது: தேர்தல் ஆணையாளர்

எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலுக்கு வேட்பு மனுக்கள் சமர்ப்பித்து நிராகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள், உள்ளூராட்சித் தேர்தலுக்குப் போட்டியிடும் வேறு அரசியல் கட்சிகள் சுயேட்சைக் குழுக்கள் சார்பாகத் தமது பெயர்களைப் பதிலீடு செய்து தேர்தல் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்வதாகத் தெரிய வந்துள்ளது.

இது குறித்து தமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ள தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்கா இது குறித்து நேற்று முன்தினம் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

போட்டியிடுகின்ற ஏதேனும் ஒரு அரசியல் கட்சியின் அல்லது ஒரு சுயேட்சைக் குழுவின் வேட்பாளர்கள் சார்பாக உரிய தேர்தல் சின்னம் மற்றும் வேட்பாளர்களின் இலக்கங்களின் கீழ் போட்டியிட வேறெந்தவொரு நபருக்கும் உள்ளூர் அதிகார சபைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஏற்பாடுகள் செய்யப்படவில்லையென்றும் எவரேனும் ஒரு வேட்பாளரின் பெயரைப் பதிலீடு செய்ய முடியாதெனவும் அனைத்து வேட்பாளர்களுக்கும் வாக்காளர்களுக்கும் இத்தால் அறிவிக்கப்படுகின்றது.

உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலொன்றில் வாக்கெடுப்பு முடிவடைந்ததன் பின்னர், போட்டியிட்ட அரசியல் கட்சிகள் அல்லது சுயேட்சைக் குழுக்கள் என்பவற்றினால் பெற்றுக் கொள்ளப்பட்ட வாக்குகளுக்கு விகிதாசாரமாக குறித்த கட்சி அல்லது குழு உரித்தாக்கிக் கொண்டுள்ள உறுப்புரிமைகளின் எண்ணிக்கை அதி கூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ள வேட்பாளர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும்.

எவரேனும் ஓர் உறுப்பினரின் மரணம், கேட்டு விலகல் மற்றும் வேறெனுமொரு காரணமொன்றினால் வெற்றிடம் ஏற்படுகின்ற போது அவ்வெற்றிடத்திற்குத் தகுதியான நபரொருவராக அக்கட்சியின் அல்லது அக்குழுவின் கீழ் போட்டியிட்டு கணிசமானளவு விருப்புக்களைப் பெற்றுள்ள வேட்பாளர்கள் உரிய கட்சிச் செயலாளரால் அல்லது சுயேட்சைக் குழுத் தலைவரால் குறிப்பாகப் பெயர் குறிப்பிடப்படுகின்ற வேட்பாளரே தேர்ந்தெடுக்கப்படுவார். இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை – பாகிஸ்தான் விமான சேவை நேற்று ஆரம்பம்



பாகிஸ்தான் காரச்சி மற்றும் இலங்கைக்கிடையில் இடை நிறுத்திவைக்கப்பட்ட விமானசேவை 60 வருடங்களுக்குப் பிறகு நேற்று ஆரம்பமானது.

இதன் நிகழ்வாக 190 பயணிகள், 8 பணியாளர்களை கொண்ட எ310 விமானம் பாகிஸ்தான் காராச்சியில் இருந்து இலங்கைக்கு வருகை தந்தது. இவ் விமானச் சேவை இரு வாரத்துக்கு ஒரு தடைவை இடம்பெறும்.
மேலும் இங்கே தொடர்க...

5ஆயிரம் முன்னாள் போராளிகள் 21மாதங்களாக தடுத்து வைப்பு

25 வருட கால உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து 21 மாதங்களை கடந்தநிலையிலும் 5 ஆயிரம் முன்னாள் போராளிகள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களைப் பார்வையிடுவதற்கு ஐ.நா. அதிகாரிகளுக்கோ சர்வதேச செஞ்சிலுவை குழுவுக்கோ இதுவரை அனுமதியளிக்கப்படவில்லை என்று இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் முன்னாள் வதிவிடப் பிரதிநிதி நீல் பூனே கூறியுள்ளார்.

இவர்கள் அனைவரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 2009 மே மாதம் முடிவடைந்த யுத்த வெற்றியை அடுத்து தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 5 ஆயிரம் பேரை அரசாங்கம் ஏற்கனவே விடுதலை செய்துள்ளது. எனினும் 5 ஆயிரம் பேர் வரையானோர் தொடர்ந்தும் கடந்த 21 மாதங்களாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

நிலக்கண்ணிவெடிகள் அகற்றப்படாத நிலையில் இன்னும் 18 ஆயிரம் தமிழ் மக்கள் நலன்புரி நிலையங்களில் தொடர்ந்தும் தங்கியுள்ளனர் என்றும் நில்பூனே தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

பிராபகரனின் தாயார் பார்வதி அம்மாள் காலமானார்











விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே. பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் இன்று காலை இயற்கை எய்தியுள்ளார்.

இவர் பல மாதங்களாக யாழ். வல்வெட்டித்துறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்தார்.

கடந்த சில வாரங்களாக இவரது உடல் நிலைமை கவலைக்கிடமாக இருந்த நிலையில் இன்று காலை இவர் உயிரிழந்துள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...