7 மார்ச், 2010

ஈரோஸ் வேட்பாளர் ஐ.ம.சு.முவில் இணைவு இனியபாரதியை ஆதரிக்க முடிவு



பாராளுமன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் ஈரோஸ் கட்சி சார்பில் போட்டியிடும் துறைநீலாவணையைச் சேர்ந்த வேட்பாளர் தம்பிராஜா ராஜலிங்கம் ஐ. ம. சு. மு.வில் இணைந்துகொண்டார்.

காரைதீவில் இடம்பெற்ற நிகழ்வில் ஐ. ம. சு. முன்னணி தமிழ் வேட்பாளர் கு. இனிய பாரதி ஈரோஸ் வேட்பாளரை சம்பிரதாயபூர்வமாக இணைத்துக் கொண்டார்.

அங்கு கிழக்கு மாகாண விவசாய கால்நடை மீன்பிடி அமைச்சர் கலாநிதி துரையப்பா நவரட்ணராஜா, தேசிய நல்லிணக்க அமைச்சின் இணைப்பாளர் வீ. கிருஷ்ணமூர்த்தியும் ஆதரவாளர்களும் பிரசன்னமாயிருந்தனர்.
மேலும் இங்கே தொடர்க...

தற்கொலை அங்கிகள், சக்திமிக்க குண்டுகள் மீட்பு வவுனியா கந்தசாமி நகரில் சம்பவம்


வவுனியா, பூவரசங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கந்தசாமி நகரிலிருந்து அதி சக்தி வாய்ந்த குண்டுகள் மற்றும் தற்கொலை அங்கிகள் என்பன மீட்கப்பட்டிரு ப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிசாந்த ஜயக்கொடி நேற்று தெரிவித்தார்.

பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து கடந்த இரு தினங்களாக முன்னெடுத்த சோதனை நடவடிக்கைகளின் பயனாகவே இவை மீட்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

தேடுதலின் போது நான்கரை கிலோ கிராம் நிறைகொண்ட குண்டு, 06 மி கிரனேற் கைக்குண்டுகள், ஒன்றரை கிலோ கிராம் மற்றும் ஒரு கிலோவும் 200 கிராம் நிறையும் கொண்ட இருவேறு தற்கொலை அங்கிகள், 04, டெட்டனேட்டர்கள், 02 டோச்கள் உள்ளிட்ட பெருந்தொகையான வெடிப் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும் இங்கே தொடர்க...

ஏ9 வீதி: பொருட்களை ஏற்றி இறக்க அறவிடும் கட்டணம் உடன் நீக்கம்

ஏ-9 பாதையூடாக தென் பகுதியிலிருந்து யாழ். குடா நாட்டுக்குப் பொருட்களைக் கொண்டுவரும் போதும், யாழ்ப்பாண உற்பத்திப் பொருட்களைத் தென் பகுதிக்குக் கொண்டு செல்லும் போதும் பாதுகாப்பு கருதி பொருட்களை ஏற்றி - இறக்குவதற்காக அறவிடப்பட்டு வந்த கட்டணம் உடனடியாக நீக்கப் பட்டுள்ளது.

இவ்வாறு கட்டணம் அறிவிடப்படுவது தொடர்பாக ஈ. பி. டி. பி. செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கவனத்திற்குக் கொண்டு வந்ததுடன், அதனை நீக்குவதன் அவசியத்தையும் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வந்தார். இதனையடுத்து இக்கட்டண அறவீடு நீக்கப்பட்டுள்ளது.

இக்கட்டண அறவீடு நீக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாதுகாப்பு அமைச்சு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, இராணுவத்தின் வன்னி கட்டளைத் தளபதி ஆகியோருடனும் கலந்துரையாடினார். இதன் பயனாக பாதுகாப்பின் நிமித்தம் பொருட்களை ஏற்றி இறக்கவென அறவிடப்பட்ட கட்டணம் நீக்கப்பட்டுள்ளது.

ஒரு தொன் பொருட்களை ஏற்றி இறக்கவென ரூபா 4150.00 கட்டணமாக அறவிடப்பட்டது தெரிந்ததே.

இக்கட்டண அறவீடு காரணமாக யாழ். குடா நாட்டில் பொருட்களின் விலைகள் அதிகரித்துக் காணப்படுவதாகவும், நுகர்வோர் பாதிக்கப்படுவதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார். அதேநேரம் யாழ்ப்பாண உற்பத்திகளுக்கு தென் பகுதியில் போட்டியிட முடியாத நிலைமை ஏற்பட்டிருப்பதாகவும், இது விடயமாக யாழ். குடா நாட்டு விவசாய மற்றும் கடலுணவு உற்பத்தியாளர்கள் தம்மிடம் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

இக்கட்டண அறவீடு நீக்கப்பட்டதன் பலனாக யாழ். குடா நாட்டில் நியாய விலையில் சகல பொருட்களையும் கொள்வனவு செய்யக்கூடிய வசதியை நுகர்வோர் பெற்றிருப்பதாகவும் யாழ்ப்பாண உற்பத்திகளுக்குத் தென் பகுதியில் போட்டியின்றி சந்தைப்படுத்தக் கூடிய வாய்ப்பு கிடைத்திருப்பதாகவும் சமூக சேவைகள் சமூக நலத்துறை அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேநேரம் அரச மற்றும் தனியார் ஒப்பந்தக்காரர்களும் எவ்வித பாதிப்புகளுமின்றி பொருட்களைத் தாராளமாக யாழ். குடா நாட்டுக்கு எடுத்து வரக் கூடிய சூழல் ஏற்பட்டிருப்பதாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

பி. ரி. ஐ. பக்ஹரியா இறக்குமதி: குழுவின் அறிக்கையை புதன் கையளிக்க திட்டம்




டெங்கு நோயைப் பரப்பும் நுளம்புகளைக் கட்டுப்படுத்துவதற்கு பி. ரி. . பக்ஹரியாவை இறக்குமதி செய்வது தொடர்பாக ஆராயவென நியமிக்கப்பட்டி ருக்கும் துறைசார் நிபுணர்களை உள்ளடக்கிய தொழில்நுட்பக் குழுவின் அறிக்கை நாளை மறுதினம் புதன்கிழமைக்குள் கையளிக்கப்படவிருக்கின்றது.

இந்த அறிக்கை சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத்துறை அமைச்சின் செயலாளரிடம் கையளிக்கப்படுமென குழு வின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்ப குழுவின் அறிக்கை கிடைக்கப் பெற்றதும், எதிர்வரும் வெள்ளிக்கிழமை கேள்வி மனுக்கோரல் சபைக்கு அந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, பி.ரி.. பக்ஹரியாவை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சின் அதிகாரியொருவர் நேற்று தெரிவித்தார்.

டெங்கு நுளம்பு ஒழிப்பு பணியைத் துரிதப்படுத்துவதற்காக பி.ரி.. பக்ஹரியாவை உடனடியாக இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

டெங்கு ஒழிப்புக்கு பி.ரி.. பக்ஹரியாவை பயன்படுத்துவது தொடர்பாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அமைச்சரவைக்கு சமர்ப்பித்த யோசனைக்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இவ்வருடம் டெங்கு ஒழிப்புக்கென அரசாங்கம் ஐநூறு (500) மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது. இதில் 80 மில்லியன் ரூபா பி.ரி.. பக்ஹரியாவை இறக்குமதி செய்வதற்குப் பயன்படுத்தப் படவிருக்கின்றது.
மேலும் இங்கே தொடர்க...

பெண்களை கெளரவமான முறையில் மதிக்கும் சமூகத்தை மீளக்கட்டியெழுப்ப முயற்சிப்போம்




மகளிர் தினச் செய்தியில் பிரதமர்

பெளத்த சிந்தனைகள் மூலம் வளர்க்கப்பட்ட, இலங்கை சமூகத்தின் தாய்மைக்கு முக்கிய இடம் வழங்கப்பட்டுள்ளது என பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க விடுத்துள்ள மகளிர் தின செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

நாட்டின் அபிவிருத்திக்கு குடும்ப அலகினுள் காணப்படு கின்றன ஒற்றுமையா னது பாரிய பக்கபலமாகும்.

அதனை விருத்தி செய்து கொள்வதற்காக பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் இடையிலான பரஸ்பர உறவினை சிறந்த முறையில் பேணி வருவதற்கு தாயிடமிருந்து கிடைக்கப்பெறும் பங்களிப் பானது அளப்பரிய தாகும். இரக்கம், கருணை, முதி யோருக்கு பணிவிடை செய்தல் போன்ற மனி தாபிமான பண்புகளை குடும்ப அலகினுள் ஏற்படு த்துவதனை பயிற்றுவிப்ப தற்காக தாய்மார்கள் அமைதி யான முறையில் மேற்கொள்ளும்

முயற்சியினை முழு சமூகமும் பாராட்டுதல் வேண்டும். முப்பது வருட காலமாக இடம்பெற்று வந்த பங்கரவாத செயற்பாடுகள் காரணமாக எமது நாட்டின் பெண்களே அதிகம் இன்னல்களுக்கு முகம்கொடுத்தனர்.

அவ்வாறே பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக தமது பிள்ளைகளையும் கணவன்மார்களையும் இராணுவத்திற்கு அனுப்பியதும் எமது பெண் சமூகமாகும்.

தேசிய அபிலாஷையினை நிறைவேற்றிக் கொள்வதற்காக பெண்கள் சமூகம் செய்த அர்ப்பணிப்பு இல்லாத விடத்து ஒற்றையாட்சி கொண்ட அரசொன்று என்பது கனவாக மட்டுமே இருந்திருக்கும்.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் அரை பகுதிக்கும் மேலான பெண்களின் பிரதிநிதித்துவத்தினை அனைத்து விதத்திலும் பயன்மிக்க முறையில் உபயோகிக்கும் பட்சத்தில் இலங்கையின் எதிர்காலத்தை செழிப்புடையதாக மாற்றுவது அவ்வளவு கடினமான விடயமாக அமையாது.

தாய்மாருக்கு உயர்ந்த முறையில் கெளரவிக்கப் பழகியுள்ள இந்த சமூகத்தில் சில சந்தர்ப்பங்களில் கேள்விப் படக்கூடிய பெண்களுக்கு எதிரான வன்முறைகள் கவலைக்கிடமான விடயமொன்றாகும். அவற்றினை எதிர்த்தல் வேண்டும்.

பெண்களை கெளரவமான முறையில் மதிக்கும் ஒரு சமூகத் தினை மீள்கட்டியெழுப் புவதற்காக நாம் இந்த சர்வதேச மகளிர் தினத் திலிருந்தாவது முயற்சித்தல் வேண் டும்.

சர்வதேச மகளிர் தினத்தை முன் னிட்டு சிறுவர் அபிவிருத்தி மற்றும் பெண்கள் வலுவூட்டுகை அமைச் சின் தலைமையில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள பிசெளபாக்கிய மிக்க தசாப்தத்தின் பெண்களின் பங்களிப்புபீ என்ற தொனிப்பொரு ளின் கீழ் நடைபெறும் தேசிய விழா வின் பணிகள் அனைத்து வழிகளி லும் வெற்றியளிக்க வேண்டுமென பிரார்த்திக்கின்றேன்.
மேலும் இங்கே தொடர்க...

மகளிர் கெளரவமாக வாழும் சூழலை அமைத்துள்ளோம் ஜனாதிபதியின் மகளிர் தின செய்தி




எமது நாட்டின் அபிவிருத்திக்கு பிரதான தடையாக இருந்த புலிகள் பயங்கரவாதம் முற்றாக ஒழித்துக் கட்டப்பட்டதையடுத்து சுதந்திர இலங்கையில் நடைபெறும் முதலாவது மகளிர் தின தேசிய நிகழ்வுக்கு வாழ்த்துக் கூற சந்தர்ப்பம் கிடைத்ததையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அச் செய்தியில் ஜனா திபதி மேலும் கூறியுள்ள தாவது:-மகளிரின் அபிமானம், கெளரவம், பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு பயங்கரவாதம் பெரும் தடையாக இருந்தது. பயங்கரவாத பிடியில் சிக்கி பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வந்த அனைத்து மகளிரையும் அதில் இருந்து மீட்டு அபிமான மிக்க மகளிர் பரம்பரையாக இலங்கை மகளிர் வாழ்வதற்கு தேவையான சூழலை நாம் அமைத்துக் கொடுத்துள்ளோம்.

சமூக கட்டிடத்தின் அத்திவாரமான குடும்பம் எனும் அலகில் முதல் இடத்தை பெறுவது தாய் தான். தாய், தந்தை, பிள்ளைகள் என குடும்பம் நன்றாக வாழ்க்கை நடத்தும்போது அக் குடும்பத்தில் அன்பு, பாசம், கருணையுடன் சமாதானமும் ஏற்படும்.

அமைதியான குடும்பம் நாட்டின் அபிவிருத்திக்கு நல்லதோர் உந்து சக்தியாகும் என அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

வடக்கு கிழக்கில் மட்டும் 1000பேர் போட்டி ; மக்களின் ஜனநாயக ஆர்வத்தைக் காட்டுகிறது


ஜனாதிபதியைச் சந்தித்த இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ் கருத்து

எதிர்வரும் பொதுத் தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருந்து மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போட்டியிடுவது ஜனநாயக நடைமுறையின் மீது மக்கள் வைத்துள்ள ஆர்வத்தை காட்டுவதாக உள்ளது. சமாதானம் மீண்டும் உருவாக்கப்பட்டதையடுத்தே இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.

தான் சென்ற இடங்களில் எல்லாம் மிகுந்த நம்பிக்கையு டனும் எதிர்பார்ப்புடனும் கூடிய நிலையை காண முடிந்தது என்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளியுறவு செயலாளர் நிருபமாராவ் கூறியுள்ளார்.

இந்திய வெளியுறவு செயலாளர் நிருபமாராவ் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து உரையாடினார். அச்சமயமே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது அவர் மேலும் கூறியதாவது,

இடம்பெயர்ந்தவர்களை மீளக் குடியமர்த்தும் விடயத்தில் இலங்கை குறிப்பிடத்தக்க வெற்றியை கண்டுள்ளது. 70 ஆயிரத்துக்கு குறைவான இடம்பெயர்ந்தவ ர்களே தற்போது நிவாரணக் கிராமங்களில் உள்ள நிலையில் இந்த விடயம் சர்வதேச சமூகத்தின் அவதானத்திலிருந்து விடுபட்டுள்ளதாக குறிப்பிட்ட இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் இடம்பெயர்ந்தவர்களை மீளக்குடியமர்த்தும் விடயத்தில் இந்தியா தொடர்ந்து உதவுவதற்கு ஆர்வமாக இருப்பதாகவும் கூறினார்.

அத்துடன் வடக்குக்கான ரயில் பாதையை மீண்டும் முற்றாக மீளமைக்க இந்தியா உதவ விரும்புவதாகவும் அவர் மேலும் கூறினார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலில் அமோக வெற்றி யீட்டியதையிட்டு வாழ்ந்து தெரிவித்த நிருபமாராவ், தான் இந்திய தூதுவராக இங்கிருந்து திரும்பிச் சென்ற பின்னர் இலங்கைக்கு நன்மை பயக்கும் பல விடயங்கள் இங்கு நடந்துள்ளதாக குறிப்பிட்டார்.

ஜனாதிபதியின் தேர்தல் வெற்றியானது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளில் நம்பிக்கையை தோற்றுவித்துள்ளதாகவும் ஜனாதிபதி ராஜபக்ஷவின் துரித இந்திய விஜயத்தை இந்திய பிரதமர் எதிர்பார்த்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

எதிர்வரும் பொதுத் தேர்தல் பற்றி இந்திய வெளியுறவு செயலாளரிடம் கருத்து வெளியிட்ட இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொதுத் தேர்லில் வாக்களிக்க மக்கள் பெரும் ஆர்வத்துடன் இருப்பதாக குறிப்பிட்டார்.

சமாதானம் ஏற்படுத்தப்பட்ட பின்னர் இடம்பெறும் முதலாவது நாடளாவிய தேர்தல் இதுவென்று கூறிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இத்தேர்தலில் பல புதியவர்கள் குறிப்பாக வடக்கு கிழக்கில் தெரிவு செய்யப்படுவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அவர்களுடன் செயலாற்றுவதற்கு தாம் எதிர்பார்த்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அண்மையில் கச்ச தீவில் நடைபெற்ற புனித அந்தோனியார் உற்சவத்தில் பெருமளவு இந்தியர்கள் கலந்துகொண்டமை இலங்கை- இந்திய மக்களுக்கிடையே நல்லெண்ணம் நிலவுவதை மேலும் சுட்டிக்காட்டுவதாக உள்ளதாகவும் நிருபமாராவ் குறிப்பிட்டார்.

இரு நாடுகளினதும் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், திருகோணமலையில் அமைக்கப்படவுள்ள அனல் மின் நிலையம் மற்றும் சூழல் பாதுகாப்பு தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையிலும் புரிந்துணர்வுக்கான தேவை ஆகிய இரு தரப்புக்கும் அக்கறையான விடயங்கள் பற்றி இச்சந்திப்பின்போது பேசப்பட்டன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்திய வெளியுறவு செயலாளருக்கு ஜனாதிபதி மாளிகையில் பகல் போசன விருந்தளித்தார். இந்திய வெளியுறவு செயலாளருடன் இந்திய தூதுவர் அசோக் கே. காந்தாவும் விருந்தில் கலந்துகொண்டார்.
மேலும் இங்கே தொடர்க...

எல்லா உண்மைகளையும் திறந்து வைக்கிறேன் ; வீடியோ மூலம் நித்தியானந்தா விளக்கம்



பெங்களூரு: தம் மீது வேண்டும் என்றே குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நான் எந்த தவறான செயல்களிலும் ஈடுபடவில்லை. தவறான குற்றச்சாட்டுகளை ஆணித்தரமான ஆதாரங்களை திரட்டி வருகிறேன் என்றும் இதனை நான் மக்கள் முன் திறந்து வைக்கிறேன் என்றும் செக்ஸ் புகாரில் சிக்கிய நித்தியானந்தர் சுவாமிகள் வீடியோ மூலம் செய்தி அனுப்பியுள்ளார். ரஞ்சிதாவுடன் இவர் இணைந்திருந்த காட்சிகள் டி.வி.,யில் ஒளிபரப்பான விஷயம் நாடு முழுவதும் உள்ள இவர்களது பக்தர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இவர் எங்கே இருக்கிறார் என இவர் இந்த வீடியோவில் பேசியிருப்பதாவது: நான் எந்த ஒரு தவறும் செய்யவில்லை.


நானோ எனது தியான பீடமோ எவ்வித தவறான செயல்களிலும் ஈடுபடவில்லை. எனது சோதனையான இந்த காலக்கட்டத்தில் எனது சிஷ்யர்கள், எனது நல விரும்பிகள் எனக்கு உலகம் முழுவதும் பக்கப்பலமாக இருந்து வருகின்றனர். இந்த சோதனையான காலத்தில் வெளிநாடுகளில் இருந்து எனக்கு இ மெயில் மூலம் ஆதரவு தெரிவித்துள்ளனர். இவர்களுக்கு நான் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். நான் கடந்த பல ஆண்டுகளாக உலகம் முழுவதும் நல் வித்துக்களை பரப்பியுள்ளேன். இதன் காரணமாக எனக்கு இந்த ஆதரவு இருக்கிறது. ஆணித்தரமாக சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன். நாங்கள் இது தொடர்பான செய்திகளையும், உண்மைகளையும் திரட்டி வருகி‌றேன். எல்லாவற்றையும் திரட்டி எல்லா உண்மைகளையும் நான் உங்கள் முன்பு திறந்து வைக்கிறேன்.


நான் சட்ட ரீதியான எவ்வித தவறும் செய்யவில்லை. எனது மீதான குற்றச்சாட்டுகள், வதந்திகள் ஆகிய எல்லாவற்றுக்கும் எனது ஆதாரங்கள் திரட்டி வருகிறேன். திரட்டிய பின்னர் நான் உங்கள் முன்பு திறந்து வைக்கிறேன் இவ்வாறு கூறியுள்ளார். மீண்டும் அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்த வீடியோ சி.டி.,க்கள் தியான பீடத்தின் மூலமாக பல செய்தி நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இங்கே தொடர்க...

ஜெனரல் சரத் பொன்சேகா சாகும் வரை உண்ணாவிரத போராட்டம்:அனோமா




தமது பிள்ளைகளுடன் தொலைபேசி ஊடாக உரையாட அனுமதி தருமாறு கோரி ஜெனரல் சரத் பொன்சேகா சாகும் வரை உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளதாக அவரது பாரியார் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

தற்போது வெளிநாட்டில் தங்கியுள்ள தமது மகள்மாருடன் உரையாடுவதற்கான உரிமை மறுக்கப்பட்டுள்ளது.எனவே இக்கோரிக்கை நிறைவேறும் வரை சாகும் வரை உண்ணாவிரதத்தினை ஜெனரல் சரத் பொன்சேகா தொடரவுள்ளதாக அவரது பாரியார் அனோமா பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார்
மேலும் இங்கே தொடர்க...

ஊனமுற்ற முன்னாள் போராளிகளை உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை



வவுனியா புனர்வாழ்வு நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஊனமுற் முன்னாள் போராளிகளில் 500 பேர் எதிர்வரும் தினங்களில் உறவினர்களிடம் ஒப்படைக்க இருப்பதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வன்னி மாவட்ட இணைப்பாளர் கீதாஞ்சலி தெரிவித்தார்.

இவர்கள் அனைவரும் வவுனியா அரசாங்க அதிபர், உதவி அரசாங்க அதிபர் ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் தற்போது இருப்பவர்கள் என்றும், இவர்கள் அனைவரும் இன்னும் சில தினங்களில் ஒப்படைக்கப்பட இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கையர் ஒருவர் நாடு கடத்தல்







அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கையர் ஒருவர் நாடு கடத்தப்பட்டமை தொடர்பில் அந்நாட்டு மருத்துவர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். 69 வயதான எட்வர்ட் ஜோசப் எனும் இலங்கையரே கடந்த வெள்ளிக்கிழமை இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.

92 வயதான அவரது தாயாரை கவனித்துக் கொள்வதற்கு ஜோசப்பிற்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டுமென மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என அவுஸ்திரேலியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

எட்வர்ட் ஜோசப் புகலிடம் கோரி விண்ணப்பித்த பல கோரிக்கைகளை அவுஸ்திரேலிய குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் நிராகரித்துள்ளது. அவுஸ்திரேலியாவில் தங்கியிருப் பதற்கு ஜோசப்பிற்கு எவ்வித சட்ட அந்தஸ்தும் கிடையாது என அந்நாட்டு அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். இதன்படி, ஜோசப் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெவிக்கப்படுகிறது.

எனினும், நோயுற்றிருக்கும் 92 வயதான அயன் ஜோசப் என்ற அவரது தாயாரை கவனித்துக் கொள்வதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

திடீரென தனது மகனது கவனிப்பை இழந்தால் அயன் ஜோசப் உடல் மற்றும் உளநிலை பாதிக்கப்படக் கூடுமென அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மனிதாபிமான அடிப்படையில் ஜோசப்பிற்கு புகலிடம் வழங்கியிருக்க வேண்டுமென அவுஸ்திரேலிய மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 1996 ஆம் ஆண்டு முதல் எட்வர்ட் ஜோசப் புகலிடம் கோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எனினும், ஜோசப்பின் ஏனைய பிள்ளைகள் அவுஸ்திரேலியாவில் வசித்து வருவதாகவும், அவர்களினால் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள முடியும எனவும் அவுஸ்திரேலிய அரசாங்க அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...