16 அக்டோபர், 2010

பக்கவாத நோயை “ஸ்டெம் செல்” சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம்: ஆராய்ச்சியாளர்கள் தகவல்




முதுகு தண்டுவடத்தில் ஏற்பட்ட காயத்தை குணப்படுத்த மனித “ஸ்டெம் செல்” மூலம் அமெரிக்காவின் அட்லாண்டா மற்றும் ஜார்ஜியாவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சிகிச்சை உலகிலேயே இங்குதான் முதன் முதலாக சிகிச்சை அளித்து சாதனை படைக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் தற்போது உடல் முழுவதும் பல்வேறு உறுப்புகளில் ஏற்படும் நோயை குணப்படுத்த முடியும் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

குறிப்பாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களை இச்சிகிச்சையின் மூலம் குணப்படுத்தி அவர்களை மீண்டும் நடக்க வைக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஏனெனில், கலிபோர்னியாவில் உள்ள ஜெரான் கார்ப்பரேசன் ஆஸ்பத்திரியில் தண்டு வடம் பாதிக்கப்பட்ட 10 பேருக்கு “ஸ்டெம் செல்” மூலம் சிகிச்சை அளித்து குணப்படுத்தப்பட்டுள்ளது.

இது மற்ற நோய்களை தீர்க்கும் பரிசோதனைக்கு ஒரு தொடக்கமாக அமைந்துள்ளது. பக்கவாத நோய்க்கு மட்டுமின்றி இதயம், மூளை, தசைகள் போன்றவற்றில் ஏற்படும் நோய்களை குணப்படுத்த முடியும் என்று கருதுகின்றனர்

“ஸ்டெம் செல்” மூலம் நோய்களை குணப்படுத்த முடியும் என்ற தகவல் “மிகப்பெரிய செய்தி” என ஆஸ்திரேலியாவின் “ஸ்டெம் செல்” சிகிச்சை நிபுணர் ஆலன் டிரவுன்சென் தெரிவித்துள்ளார்
மேலும் இங்கே தொடர்க...

தமிழக முன்னாள் - இந்நாள் முதல்வர்களுக்கு கொலை மிரட்டல்கள்!



தமிழகத்தின் முன்னாள், இந்நாள் முதல்வர்களுக்கு கொலை மிரட்டல்கள் வந்தவண்ணமுள்ளன. இருவருக்கும் மாறிமாறி எஸ்.எம்.எஸ் அனுப்பப்படுகின்றன.

முதல்வர் கருணாநிதியை, 'வான்வழி தாக்குதல்' மூலம் கொல்லப் போவதாக வந்த எஸ்.எம்.எஸ். மிரட்டல் குறித்து சைபர் கிரைம் பொலிசார் விசாரித்து வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன், முதல்வர் கருணாநிதியை கொல்லப் போவதாகவும், அவருடன் மூவர் இதற்காகவே உள்ளனர் என்றும் முதல்வர் தனிப்பிரிவுக்கு ஈ-மெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது.

இதுகுறித்து, சென்னை மத்திய குற்றப் பிரிவு பொலிசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று அதிகாலை சென்னை போக்குவரத்து பொலிசின் கட்டுப்பாட்டு அறையில் உள்ள '90031 30103' எண்ணுக்கு ஒரு எஸ்.எம்.எஸ். வந்தது.

அதில், "முதல்வர் கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டின் மீது வான்வழியாக குண்டுவீசி தாக்குதல் நடத்துவோம்" எனவும், இறுதியில் சேலையூர், செம்பாக்கம் கோபிநாத் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுகுறித்த தகவல், பொலிசாருக்குக் கிடைத்தவுடன், முதல்வரின் வீட்டுக்குப் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. தொடர்ந்து, சைபர் கிரைம் பொலிசார், எஸ்.எம்.எஸ். அனுப்பப்பட்ட எண் குறித்து ஆய்வு செய்ததுடன், சிம் கார்ட் முகவரி குறித்து விசாரித்தனர்.

அப்போது, அதில் அளிக்கப்பட்ட முகவரி போலியானது என்பது தெரியவந்தது.தொடர்ந்து சைபர் கிரைம் பொலிசார் விசாரித்து வருகின்றனர்.

ஜெயாவுக்கும் மிரட்டல்கள்

அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, நாளை மறுதினம் மதுரையில் நடக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளக் கூடாது எனக் கூறி, ஜெயா 'டிவி' தலைமை அலுவலகத்திற்கு ஏற்கனவே 14 கடிதங்கள் வந்துள்ளன.

இதுகுறித்து, கிண்டி பொலிசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை மதுரை, வில்லாபுரத்தில் இருந்து ஈஸ்வரன் என்பவர் பெயரிலும், தஞ்சையை சேர்ந்த சுமதி, நாகராஜன் ஆகியோர் பெயரிலும் இரண்டு கடிதங்கள் வந்துள்ளன.

இவை குறித்தும், கிண்டி பொலிசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. முதல்வர் கருணாநிதிக்கும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் தொடர்ந்து மிரட்டல் கடிதங்கள், ஈ-மெயில் மற்றும் மர்ம போன்கள், எஸ்.எம்.எஸ்.கள் மூலம் வந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

ரியாத்: சவூதி அரேபியாவில் ரயில்வே திட்ட கட்டுமானத்துறையில்

பணியாற்றிய சீன நாட்டினர் சம்பள உயர்வு கோரி ஆர்ப்பாட்டம் நடத்தியதால் அவர்களை அந்நாட்டு அரசு உடனடியாக சொந்த நாட்டிற்கு அனுப்பி வைத்தது. சவூதி ‌கெஜட் எனும் பத்திரிகையில் கூறப்பட்டிருப்பதாவது ,சவூதி அரேபியாவில் பல்வேறு ரயில்வே திட்டங்களுக்கான கட்டுமானப்பணிகள் நடைபெற்றுவருகின்றன. இதில் சீன நாட்டினர் 18 மாத ஓப்பந்த அ‌டிப்படையில் பணியில் சேர்ந்தனர். இவர்கள் கடந்த 2009-ம் ஆண்டு ஜனவரி மாதம் ‌பணியில் ‌சேர்ந்தனர். இங்கு அவர்களுக்கு சம்பள உயர்வு அளிக்காமலும், வேலைப்பளு அதிகம் தரப்படுவதாகவும் கூறி 100 சீனர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது கட்டுமான நிறுவன அலுவலகத்தினையும் தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தில் 16 சீன தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் உடனடியாக சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். எனினும் சீன வர்த்தகத்துறை அமைச்சர் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதே போன்று சவூதியில் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றும் சீனர்களுக்கு அந்நாடு குறைந்த ஊதியமே வங்கிவருகிறது. சீனர்களை ‌ ‌கொத்தடிமைகளாக்குகிறது என்று கூறியள்ளதாக அந்த பத்திரிகையில்கூறப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை தமிழர் குடியமர்வு: மன்மோகன், ராஜபட்ச ஆலோசனை







புது தில்லி, அக்.15: இலங்கை தமிழர் மறுவாழ்வு மற்றும் குடியமர்த்தும் பணியில் மிகுந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை அதிபர் ராஜபட்ச தெரிவித்தார். பிரதமர் மன்மோன் சிங்கை வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்துப் பேசியபோது அவர் இத்தகவலை தெரிவித்தார்.

தில்லியில் நடைபெற்ற 19-வது காமன்வெல்த் போட்டியின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் ராஜபட்ச. இவருக்கு வெள்ளிக்கிழமை பிற்பகல் விருந்தளித்தார் பிரதமர் மன்மோகன் சிங். அப்போது பல்வேறு விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.

இரு நாடுகளிடையிலான உறவு, பல்வேறு துறைகளில் இணைந்து செயலாற்றுவது உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் விரிவாக விவாதித்தனர்.

அதிகாரபூர்வமற்ற முறையிலான இந்த பேச்சு வார்த்தையில் பல்வேறு விஷயங்களும் இடம்பெற்றன.

இலங்கைப் போரினால் பாதிக்கப்பட்டு அகதிகள் முகாமில் உள்ளவர்களை மீண்டும் அவர்களது வீடுகளில் குடியமர்த்துவது பணியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை அதிபர் ராஜபட்ச, பிரதமர் மன்மோகனிடம் விரிவாக விளக்கினார். அப்போது தமிழர்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்து அளிப்பதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும் என்றார் மன்மோகன் சிங்.

முன்னதாக வியாழக்கிழமை மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவும், இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பெரிஸýம் ஆலோசனை நடத்தினர். போரினால் பாதிக்கப்பட்டு அகதிகள் முகாம்களில் 2.80 லட்சம் பேர் இருந்தனர். அரசு எடுத்த நடவடிக்கையால் இப்போது முகாம்களில் உள்ள மக்களின் எண்ணிக்கை 20 ஆயிரமாகக் குறைந்துள்ளது என்று பெரிஸ் தெரிவித்தார்.

தமிழர்களுக்கு அதிகாரம் அளிப்பது குறித்தும் அப்போது ஆலோசிக்கப்பட்டது.

இலங்கையில் அதிபர் தேர்தல் மற்றும் பிற தேர்தல்கள் சுமுகமாக நடந்துள்ளன. இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு தமிழர்களுக்கு உரிய அதிகாரம் அளிக்க வேண்டும் என்று அப்போது வலியுறுத்தியதாக, வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசுகையில் எஸ்.எம். கிருஷ்ணா குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

இன்று சரஸ்வதி பூசை





நவராத்திரி விரதத்தில் இன்று இறுதி நாளாகும். இன்றும் ஆலயங்களிலும் பாடசாலைகளி லும் சரஸ்வதி அம்பாளுக்கு விசேட பூசைகள் நடத் தப்படும். சரஸ்வதி அம்பாள் கல் விக்கு அதிபதியாக விளங்குவதால் கல்வி கற்கும் மாணவ, மாணவிகள் இன்று இவ்விரதத்தை மிகவும் பக்தி பூர்வமாக அனுஷ்டிப்பர்.
மேலும் இங்கே தொடர்க...

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு விளக்க மறியல்


இரகசிய பொலிஸாரினால் கைதுசெய்யப் பட்டுள்ள ஐ. தே. க. எம்.பி. ரஞ்சன் ராமநாயக்க கண்டி பொலிஸாரினால் நேற்று (15) நீதிமன்றில் ஆஜர் செய் யப்பட்டார். இதன்போது இவரை 18ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கும்படி கண்டி மஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார்.

நீதிமன்ற விளக்கம் முடியும் வரைக்கும் நாட்டை விட்டு செல்வதற்கு தடை விதிக்கும் முகமாக குடியகல்வு மற்றும் குடிவரவு திணைக் களத்திற்கு அறிவிக்கும் படியும் மேலும் எதிர்வரும் 27ம் திகதி வரையும் விளக்க மறியலில் வைக்கும்படி பொலிஸார் மஜிஸ்திரேட்டிடம் வேண்டினர்.

கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியை ஒருவரை திருமணம் செய்வதாக கூறி பத்து இலட்சம் வரை அவரிடமிருந்து மோசடியாக பெற்றார் எனும் குற்றச் சாட்டின் பேரில் குறித்த ஆசிரியை கட்டுகஸ்தோட்ட பொலிஸில் முறைப் பாடு செய்திருந்தார்.
மேலும் இங்கே தொடர்க...

பஸ்தரிப்பிடத்தில் இளைஞன் சுட்டுக் கொலை






திஹகொட, நாதுகல பஸ் தரிப்பிடத்தில் வைத்து இளைஞர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்றுக் காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறினர்.

பஸ்தரிப்பிடத்தில் நின்றிருந்த இவரை வானொன்றில் வந்த ஆயுத குழுவொன்று சுட்டு விட்டுத் தப்பிச் சென்றுள்ளது. இறந்தவர் மாத்தறை பள்ளிமுல்லையைச் சேர்ந்த 30 வயதுடைய ஜெயவிக்ரம என அடையாளங் காணப் பட்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

மீன்பிடி படகுகளை மீட்டு செல்ல 17 தமிழக மீனவர்கள் தலைமன்னார் வருகை

இலங்கை கடற்பரப்பினுள் மூழ்கி இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்ட மீன்பிடி படகுகளை எடுத்துச் செல்வதற்காக தமிழக மீனவர்கள் 17 பேர் தலைமன்னார் வருகை தந்துள்ளனர்.

ஜுலை 22 ஆம் திகதியளவில் இலங்கை கடற் பரப்பிற்குள் மூழ்கிய தமது படகுகளை மீட்க முடியாமல் இலங்கை கடற் படையினரின் உதவியுடன் தமிழகம் திரும்பினர். ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களுடன் இணைந்து படகுகளை மீட்க முற்பட்ட போதும் மீட்க முடியாததால் ராமேஸ்வரம் மீனவர்களை அனுப்பி வைத்த இலங்கை கடற்படையினர், அடு த்த சில நாட்களில் இரண்டு படகுகளையும் மீட்டு தலைமன்னார் கடற்படை முகாமில் நிறுத்தினர்.

இலங்கை செல்ல மத்திய அரசிடம் இருந்து உத்தரவு வந்தது. இதை தொடர்ந்து மூன்று படகில் மீனவர்கள் கணேசன் பாக்கியராஜ் உட்பட 17 பேர் தலைமன்னார் வந்தனர்.

கடலோர காவல் படை கப்பலின் பாதுகாப்புடன் இந்திய கடல் எல்லை பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்ட 17 மீனவர்களும் இலங்கை கடற் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அங்கிருந்து இலங்கை கடற் படையினரின் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்ட மீனவர்கள் தலைமன்னார் கடற் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இரண்டு படகுகளையும் மீட்டு ராமேஸ்வரம் திரும்பினர். இலங்கை கடற்படையின் பேச்சாளர் கப்டன் அத்துல செனரத் இதனை உறுதி செய்தார்.
மேலும் இங்கே தொடர்க...

புனர்வாழ்வு பெற்ற 500 பேர் நேற்று உறவினர்களிடம் ஒப்படைப்பு






முகாம்களில் புனர்வாழ்வளிக்கப்பட்ட புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகள் சுமார் 500 பேர் நேற்று (15) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இது தொடர்பான நிகழ்வு வவுனியா கலாசார மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சின் செயலாளர் ஏ. திசாநாயக்க இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். விடுவிக்கப்பட்டவர்களுள் கூடுதலானோர் பெண்களாவர்.

புனர்வாழ்வு காலத்தில் இவர்கள் பெற்ற பயிற்சிகளுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டதாக அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் எம். எஸ். சதீஸ்குமார் தெரிவித்தார்.

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட 300 பெண்கள் உட்பட 500 பேர் பெற்றோர்கள், பாதுகாவலர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிகழ்வில் புனர்வாழ்வு ஆணையாளர் பிரி கேடியர் சுனந்த ரணசிங்க, வன்னி பாது காப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன, மாவட்ட அரச அதிபர் திருமதி சார்ள்ஸ் மற்றும் முக்கியஸ்தர்கள் பலரும் இந்த வைபவத்தில் கலந்து கொண்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

மக்கள் வழங்கிய பெயர்ப்பட்டியல் பயங்கரவாத தடுப்பு பிரிவிடம் கையளிப்பு

தடுப்பு முகாம்களில் உள்ளோர் பற்றிய திருப்பமான பதில் ஒருவாரத்தில் கிடைக்கும்: - நல்லிணக்க குழு தலைவர்
முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர், யுவதிகளின் விடுதலை தொடர்பில் இன்னும் ஒரு வாரத்தில் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரிடமிருந்து பதிலொன்று கிடைக்கப்பெறுமென்று கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக் குழுவின் தலைவர் சீ. ஆர்.டி. சில்வா தினகரனுக்குத் தெரிவித்தார்.

தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பாக நீண்ட பட்டியலொன்றைப் பயங்கரவாத தடுப்புப் பிரிவினருக்குக் கையளித்துள்ளதாகத் தெரிவித்த ஆணைக் குழுவின் தலைவர், அவற்றைப் பரிசீலித்து ஒரு வார காலத்தினுள் திருப்பமான பதிலொன்றை எதிர்பார்த்திருப்பதாகவும் கூறினார்.

வன்னிப் பகுதிகளில் நல்லிணக்க ஆணைக்குழு பொதுமக்களிடம் நடத்திய பகிரங்க விசாரணைகளின்போது, முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு ள்ளவர்களை விடுவித்துத் தருமாறும் காணாமற்போனவர்களைத் தேடித் தருமாறும் கோரிக்கைகள் முன்வைக் கப்பட்டன. அதன்படி, தடுத்து வைக் கப்பட்டுள்ளவர்கள் மற்றும் காணாமற்போனவர்கள் தொடர்பான விபரங்களை எழுத்து மூலம் வழங்குமாறு ஆணைக் குழுவின் தலைவர் கேட்டுக் கொண்டார். அவ்வாறானவர்களின் விபரங்களைத் தபால் மூலம் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்குமாறும் கூறினார். கிடைக்கப்பெறும் விபரங்களைக் கொண்டு பயங்கரவாத தடுப்புப் பிரிவினருடன் தனியாகக் கலந்துரையாடி பதிலொன்றைப் பெற்றுத் தருவதாக அவர் தெரிவித்திருந்தார்.

இதற்கமைய, ஆணைக்குழுவின் தலைவர் சில்வா கொழும்பு திருப்பியதும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். அதன் பின்னர் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில், ஓமந்தைத் தடுப்பு முகாமுக்குச் சென்ற ஆணைக்குழுவின் தலைவர், இளைஞர், யுவதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடினார். அவர்களின் விடுதலை தொடர்பாக பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினருடன் கலந்துரையாடிய தையும் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து தினகரனுக்குக் கருத்துத் தெரிவித்த ஆணைக்குழுவின் தலைவர், ஒருவார காலத்தில் சாதகமான பதிலொன்றை எதிர்பார்த்திருப்பதாகக் குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

2018: பொதுநலவாய போட்டிகள்;



இப்போதிருந்தே தயாராகுமாறு விளையாட்டு வீரர்களுக்கு ஜனாதிபதி பணிப்பு
2018 ஆம் ஆண்டு இலங் கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள சகல விளையாட்டு வீரர்களும் இப்போதிருந்தே ஆயத்த மாகுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பொதுநலவாய விளை யாட்டுப் போட்டியின் இறுதிநாள் நிகழ்வுக்காக புதுடில்லி சென்ற ஜனாதிபதி இலங்கை வீரர்களை சந்தித்து உரையாடியதுடன், அவர்களுக்கு தனது இதயபூர்வமான வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார்.

குத்துச் சண்டைப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மஞ்சு வன்னியாராச்சிக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இலங்கையில் வீரர்களுக்கு பயிற்சி பெறுவதற்கு தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கை பயன்படுத்த முடியும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி பெற போதுமான இட வசதிகள் இல்லை என இலங்கை வீரர்கள் ஜனாதிபதியிடம் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பொதுநலவாய போட்டிகள் நடைபெறும் இடத்துக்கு ஜனாதிபதி வருகை தந்தமை தம்மை மேலும் வலுவூட்டுவதாகவும் சிறியவர், பெரியவர் என்ற பாகுபாடு இன்றி அனைவரோடும் அன்பாக பழகும் ஒரு ஜனாதிபதி எமக்கு கிடைத்துள்ளார் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் ஜனாதிபதியின் தனிப்பட்ட வைத்தியரான ஈலியந்த வயிட் என்பவரூடாக சிகிச்சை பெறுவதற்கு வசதி செய்துதருமாறும் விளையாட்டு வீரர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை ஏற்ற ஜனாதிபதி இது தொடர்பாக நடவடிகை எடுக்குமாறு செயல ருக்கு பணிப்புரை விடுத்தார்.
மேலும் இங்கே தொடர்க...

ஜனாதிபதி மஹிந்த - பிரதமர் மன்மோகன் சிங் நேற்று டில்லியில் சந்தித்துப் பேச்சு



இலங்கை-இந்திய ஒத்துழைப்பு குறித்து இருவரும் பேச்சு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு மிடையிலான சந்திப்பொன்று நேற்றுக் காலை புதுடில்லியில் இடம்பெற்றுள்ளது.

பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளின் நிறைவு விழாவில் கலந்துகொள்ள புதுடில்லி சென்றிருந்த போது இந்தச் சந்திப்பு இடம்பெற் றுள்ளது.

இந்தியப் பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பு மிகவும் சுமுகமான நிலையில் நிகழ்ந்துள்ளது.

கடந்த ஜூன் மாதத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியா சென்றிருந்த போது இரு நாடுகளுக்குமிடையில் ஏற்படுத்திக் கொண்ட உடன்படிக்கைகளை அவ்வாறே முன்னெடுத்துச் செல்வது பற்றி இரு நாட்டுத் தலைவர்களும் பேச்சு நடத்தியுள்ளனர்.

இந்திய அரசின் உதவியுடன் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் 50,000 வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியை எதிர்வரும் மார்ச் மாதமளவில் நிறைவுசெய்யக் கூடியதாக இருக்குமென இத்திட்டத்திற்குப் பொறுப்பான அதிகாரிகள் அறிவித்துள்ளதுடன், அதன் எதிர்கால திட்டங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் கவனம் செலுத்தியுள்ளனர்.

இதேவேளை, இரு நாடுக ளுக்குமிடையில் ஏற்படுத்திக் கொள் ளப்பட்டுள்ள பாதுகாப்பு விடயங்கள் தொடர்பான ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்துவது பற்றி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இலங்கையில் நிரந்தர சமாதானம் ஏற்பட்டுள்ளதோடு, நாட்டில் பாரிய அபிவிருத்தியை முன்னெடுக்க கூடியதுடன், அதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டங்களை இந்தியப் பிரதமர் பாராட்டினார்.

இதன்போது, வடக்கு, கிழக்குப் பகுதிகளில் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்தும் செயற்பாடு பற்றியும் அதில் அரசாங்கம் அடைந்திருக்கும் வெற்றிகரமான முன்னேற்றம் பற்றியும் இந்தியப் பிரதமருக்கு ஜனாதிபதி விளக்கினார்.

பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்ளுமாறு விடுவிக்கப்பட்ட அழைப்பையேற்று வருகை தந்தமையானது தமக்கும் தமது நாட்டுக்கும் கெளரவமானதென்று தெரிவித்த இந்தியப் பிரதமர் அதற்காக விசேடமான நன்றியைத் தெரிவித்தார்.

அத்துடன் இந்தியப் பிரதமர் ஜனாதிபதிக்கு விசேட பகல் போசன விருந்தளித்துக் கெளரவித்தார்.

புதுடில்லியில் நேற்று நடந்த இந்தச் சந்திப்பில் இந்திய அரசு சார்பில், உள்த்துறை அமைச்சர் ப. சிதம்பரம், வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா, வெளிவிவகார செயலர் நிருபமா ராவ், கீழ்ச் சபை எதிர்க் கட்சித் தலைவர் அனோஜ் ஜெட்லி உள்ளிட்டோரும், இலங்கை அரசின் சார்பில் அமைச்சர் ஜீ. எல். பீரிஸ், ஜனாதிபதியின் இணைப்புச் செயலர் சஜின் வாஸ்குணவர்த்தன, ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்க, வெளிவிவகாரச் செயலர் ரொமேஸ் ஜயசிங்க ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மேலும் இங்கே தொடர்க...